அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்...
பொதுவாக
நாம் பார்க்கும் போது, இன்று கர்மா என்ற சொல் மிக சர்வ சாதாரணமாக
புழக்கத்தில் இருந்து வருகின்றது. நம்மில் அன்றாடம் உறவாடும் நபர்களிடம்
இது பற்றி பேசினால், கர்மாவா? என்று கேலி பேசுவது உண்டு. தலைவலியும் திருகு
வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும். அது போல் தான் இந்த கர்மா. கர்மா
என்ற ஒன்று உண்டு என்றால் எப்படி நாம் அதிலிருந்து எப்படி
வெளிவருவது..என்பது போன்றெல்லாம் நாம் சிந்திப்பதுண்டு. பொதுவாக கர்மா
என்பது வினை..நாம் செய்யும் செயல். அவ்வளவே..
நாம்
செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு. அது நல் விளைவாக இருந்தால்
நம் கர்மா நல்ல கர்மா என்றும் தீய செயலாயின் தீய கர்மா என்றும் பொருள்
கொள்ளலாம். அடுத்தவன் எக்கேடு கேட்டால் நமக்கென்ன என்று நினைப்பது கூட தீய
கர்மா என்றே கொள்ளப்படும். நாம் சேமித்து வைத்திருந்த காட்சிப்படங்களை
பார்த்துக் கொண்டிருந்த போது, சட்டென்று நம் கண்ணில் நல்வினையாற்ற 19
வழிகள் என்ற தொகுப்பு கிடைத்தது. அதனை அப்படியே இங்கே பகிர்கின்றோம்.
இதில் ஏதேனும் ஒரு கருத்தையாவது கைக்கொள்ள ஆசைப்படுங்கள். ஆசையே நம்மை
நல்வினையாற்ற வைக்கும்.
சரி. பதிவின் உள் செல்வோமா?
முதல்
முத்தே..அருமையான ஒன்று. வாழ்தல் என்றால் என்ன ? கொடுப்பது தான் வாழ்க்கை.
ஆனால் நாம் தினமும் பெறுவதற்கு தானே துடியாய்த் துடித்துக் கொண்டு
இருக்கின்றோம். கொடுத்துப் பார். வாழ்வியல் புரியும் .கொடுக்க வேண்டும்
என்ற உடன் பொருளாதார ரீதியில் நம்மிடம் ஒன்றும் இல்லையே என்று நினைக்க
வேண்டாம். உங்கள் எண்ணத்தால் கூட கொடுக்கலாம்.
வாரத்தின்
ஏழு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் நம் எதிர்பார்ப்பை தவிர்க்கலாம். அன்றைய
தினம் நீங்கள் விரதம் இருப்பது கூட இன்னும் உங்களை கடவுளிடம் கொண்டு
சேர்க்கும்.
எதிர்பார்த்தல்
ஏமாற்றமே தரும். இன்று குடும்பங்களில் நடைபெறும் பல குழப்பங்கள்,
சண்டைகள்,சச்சரவுகள் என அனைத்திற்கும் காரணம் எதிர்பார்ப்பே ஆகும். அதுவும்
கணவனுக்கும், மனைவிக்கும் இடையே இந்த எதிர்பார்ப்பினால் வரும் ஏமாற்றம்
இருக்கின்றதே..அப்பப்பா..வார்த்தையால் இதனை சொல்ல இயலாது.
சற்று
ஆழமாக சிந்தித்து பார்த்தால் இந்த எதிர்பார்ப்பு, ஆசையில் இருந்து
தோன்றுகிறதா? இல்லை பேராசையில் இருந்து தோன்றுகிறதா? என்று சரியாக சொல்ல
முடியாது.இந்த எதிர்பார்ப்பை தவிர்த்தாலே பல பிரச்சினைகள் சரியாகி
விடும்.எப்படி தவிர்ப்பது? இங்கே ஒரு நாள் முழுக்க எதிர்பார்ப்பை தவிர்
என்று சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் எடுத்த உடனேயே இது சாத்தியமல்ல.
முதலில் சிறு சிறு நிகழ்வுகளில் இந்த எதிர்பார்ப்பை தவிர்க்க வேண்டும்.
இப்படி தவிர்க்க பழகினால் தான் ஒரு நாள் முழுக்க இதனை கடைபிடிக்க முடியும்.
இந்த வரிசையில் இன்று நாம் காண இருப்பது தானம் செய்யப் பழகு என்பதாம்.
என்னப்பா?
இதெல்லாம் ஒரு குறிப்பா? என்று ஏளனமாக நினைக்காதீர். இன்றைய சூழலில் நாம்
ஒவ்வொருவரும் தேவையைத் தாண்டி தான் பொருட்கள் வைத்திருக்கின்றோம். அலைபேசி
வந்த புதிதில் அனைவரிடமும் ஒன்றே ஒன்று இருந்தது. "ஜியோ" வந்த பின்பு
அனைவரிடமும் இரண்டு,மூன்று அலைபேசிகள் ( நம்மையும் சேர்த்து தான் )..ஆனால்
ஒரு அலைபேசியை நாம் உபயோகித்தால் போதுமானது. இது போல் தான் ஆடைகள். அனைத்து
உபயோகமற்ற ஆடைகளை எடுத்து மூட்டையாக கட்டி வைத்திருப்போம். அவற்றை தானமாக
கொடுக்க ஒரு நல்ல நாள் பார்த்துக் கொண்டே இருப்போம். எல்லா நாளும் நல்ல
நாளே.
இங்கே அணியாத ஆடைகளை தானமளி என்று சொல்லி இருக்கின்றார்கள். இதனை நாம் செய்ய செய்ய அடுத்து நாம் மற்ற தானங்களையும் செய்ய பழகுவோம்.
நம்
சுற்றுப்புற குப்பையகற்று. இது புறத்தில் நிகழ, நாம் முதலில் அகக்
குப்பையகற்ற வேண்டும். அகமும்,புறமும் வேறு வேறு அல்ல என்று நாம் உணர
வேண்டும். முதலில் புறக் குப்பை அகற்றுவதில் இருந்து தொடங்குவோம்.
சுற்றுப்புற குப்பையகற்று என்று நாம் பார்க்கும் போது , நம்மால் தான் சுற்றுப்புறம் சீர்கெட்டு வருகின்றது. நாம் தானே குப்பைகளை போட்டு வருகின்றோம். தினமும் குப்பைகளை அள்ள சேவைப்பணியாளர்கள் வந்து நம்மிடம் பெற்று செல்கின்றனர். இத்தோடு நம் செயல் முடிந்து விடுகின்றது.ஆனால் ஒவ்வொரு நாளும் சேரும் குப்பைகள் இருக்கின்றதே? சொல்லி மாளாது. அவ்வளவு குப்பைகளை நாம் சேர்த்து வருகின்றோம்.
இயற்கைச் சீற்றம், இயற்கைச் சீற்றம் என்கிறோமே அதைச் சீண்டுவது யார்? நாம் தானே... அண்டங்களையெல்லாம் மாசுபடுத்திவிட்டு, ஐயோ அம்மா என்று அலறினால்… எப்படி?விஞ்ஞான வெளிச்சத்தில் இருக்கும் நாம் சுற்றுச் சூழல் விஷயத்தில் கொஞ்சம் சரிந்து தான் இருக்கிறோம். ஆம் காடுகளை அழித்தோம் கேடு வந்தது. மரங்களை வெட்டிச் சாய்த்தோம் மழை நின்றது. இன்று கிணற்றுக்குள் வாளியை விட்டால் தண்ணீர் வருவதில்லை. கண்ணீர் தான் வருகிறது.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்து நம் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குகிறது. மழை நீர் சேகரிப்பே இதற்கு மாற்றுவழி. அணுமின் கழிவு தொழிற்சாலைக் கழிவுமனிதக் கழிவு. இவைகளெல்லாம் நல்ல சுற்றுச் சூழலுக்கு எதிரானவைகள், எதிரணிகள்.
இன்று நாம் அனுபவித்து வரும் அனைத்திற்கும் நாமே காரணம். தேவை என்ற நிலையில் இருந்து ஆடம்பரம் என்ற நிலைக்கு நாம் நகர்ந்து விட்டோம். இதனால் நாம் நுகரும் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இதன் மூலமாக குப்பைகளும் அதிகமாகி வருகின்றது. இந்த குப்பைகளை நாம் நிலத்தில் வீசி, தினமும் சேவையாளரிடம் ஒப்படைத்தால் போதும் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் இதனால் என்ன பயன் என்று நாம் சிந்தித்ததுண்டா? குப்பைகளை அகற்றுவதை நாம் குப்பைகளை உருவாக்குவதை குறைப்பதின் மூலம் பயன் அடைய முடியும்.
சுற்றுச்சூழல் மாசடைவுகளை நாம் தடுக்க வேண்டுமாயின் தனி மனிதர்கள்
ஒவ்வொருவரும் தமது சுற்றுசூலை சுத்தமாக வைத்திருக்க முன்வரவேண்டும்.கழிவுகளை குப்பை கூடைகளில் கொட்டி உரியமுறையில் அகற்றுதல் வேண்டும்
வாரத்துக்கு ஒரு தடைவயேனும் தமது சுற்றுசூழலை சுத்தமாக வைக்க சிரமதானங்களை
மேற்கொள்ளல்.வாழிடங்களை துப்பரவாக கூட்டி கழுவி கிருமி அகற்றி வைத்திருத்தல், பொது
இடங்களையும் சுத்தமாக வைத்திருத்தல். இவை போன்ற நடவடிக்கைகளால் சுற்றுப்புற
மாசடைவுகளை தடுக்க முடியும்.
இது ஒருபுறமிருக்க, எலக்ட்ரானிக் குப்பை ஒன்றும் சேர்ந்து வருகின்றது. இதனை ஈ - குப்பை என்றும் சொல்லலாம். இந்த ஈ - குப்பையில் செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டி.வி, ஏசி, மின்னணு உதிரி பாகங்கள் போன்றவை அடங்கும். இவற்றை பிளாஸ்டிக்குகள் போல மறு சுழற்சி செய்ய முடியாது என்பதால் பழைய பொருள்கள் வேன்குபவர்கள் யாரும் வாங்க முன் வருவது கிடையாது. இத்தகைய நிலையில் இவை பொது குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு மக்கவும் முடியாமல், மறுபடியும் பயன்படாமல் உள்ளன. இதிலுள்ள லெட், கேட்மியம், மெர்குரி போன்ற இரசாயனங்கள் 60 முதல் 100 சதவீதம் வரை இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், தீங்கு உண்டாக்குவதுடன் மண்ணை அதிக அளவில் விஷமாக்கி சுற்றுச்சூழலுக்கு மாபெரும் ஆபத்தாய் மாறிவருகின்றன. வரும் காலங்களில் புவி வெப்பமயமாவதையும், கடலில் நீர்மட்டம் உயர்வதையும் தடுக்க இதனால் முடியாது என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்..
இதனை எப்படி அகற்றுவது என்று பார்க்கும் போது நாம் ஆடம்பரம் என்ற நிலையில் இருந்து தேவை என்ற நிலைக்கு கண்டிப்பாக மாற வேண்டும். அப்போது தான் நாம் இவற்றை குறைக்க முடியும். தற்போது நிலவி வரும் பருவ கால மாற்றத்திற்கு இந்த குப்பைகளும் ஒரு காரணம் ஆகும். தற்போது வெயில் காலம் குறைந்து இருக்கும் வேண்டும். ஆனால் சித்திரை மாத வெயிலை விட அதிக வெயிலை அனுபவித்து வருகின்றோம். இதே போன்று பருவம் பொய்த்து மழை பெய்து, மழை நீரை நாம் பெற முடியாமல் வீணாக்குகின்றோம். இவை அனைத்தும் சுற்றுப்புற குப்பையால் தானே?
இன்னும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கும் போது சுற்றுப்புறம் என்றால் நிலம் மட்டுமல்ல . நிலம், நீர் ,காற்று ,ஆகாயம் என அனைத்தும் அடங்கியது. இவை அனைத்தும் ம்,மாசுடன் தான் இருக்கின்றது. இவை அனைத்தும் தூய்மை பெற நாம் குப்பைகள் போடுவதை குறைக்க வேண்டும்.இதற்கு முதலில் நம் அகம் சுத்தம் பெற வேண்டும். அக சுத்தம் பற்றி பின்பு பேசுவோம்.
குருவருளால் 1000 ஆம் பதிவை நெருங்க இருக்கின்றோம். இதற்கு முந்தைய நல்வினையாற்ற 19 வழிகள் தொகுப்பில் எதையாவது புதிதாய்ப் படை என்ற தலைப்பில் புது வலைத்தளம் உருவாக்கினோம். ஆனால் பதிவுகள் எதுவும் அளிக்க இயலவில்லை. 1000 ஆம் பதிவிலும் எதையாவது புதிதாய்ப் படைக்க வேண்டி குருவிடம் பணிந்து வேண்டி நிற்கின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment