அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இதோ மார்கழி மாதம் நிறைவு பெற்று, இன்று தை மாதம் பிறந்து உள்ளது. ஆங்கில
மாத பிறப்பை நாம் கவனிப்பதை விட தற்போது நாம் தமிழ் மாத பிறப்பை கவனிக்கும்
போது நம்முள் ஒரு உற்சாகம் பிறக்கின்றது. அதனுடன் பண்டிகை காலமும்
சேர்ந்து விட்டால் ..சொல்லவே வேண்டாம். ஆட்டம்..பாட்டம். கொண்டாட்டம் தான்.
நம் முன்னோர்களும் இப்படித் தான் தமிழ் மாத பிறப்பை கொண்டாடி இருப்பார்கள்
என்று நமக்கு தோன்றுகின்றது.
தமிழர் திருநாள் தைத்திருநாள் இறைவனை வணங்கி தொழிலை சிறப்புடன் தொடங்கும்
திருநாள். யுகம் யுகமாக மாசில்லா ஒளியுடன் கருணை மழை பொழியும் சூரிய
பகவானையும் எதிர்பார்ப்பில்லாத கடமையாற்றும் நம் கோமாதாக்களையும் வணங்கி,
இறைவன் எதிர்பார்க்கும் அதே தூய்மையான மன(தை) இறைக்கு அர்ப்பணம் செய்து
தைத் திருநாளை வரவேற்போம். அனைவரும் நலமாக வாழ நம் தேடல் உள்ள தேனீக்களாய்
(TUT) குழு சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.
நம் தள அன்பர்களுக்கும், நம்மோடு சேவையில் தொடர்ந்து இணைந்துள்ள அருளாளர்களுக்கும் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். பொருளுதவி, அருளுதவி செய்கின்ற அனைவருக்கும் நம் நன்றிகளையும் இங்கே தெரிவித்து மகிழ்கின்றோம்.
விநாயகப் பெருமானை வணங்கி, இன்றைய நாளை ஆதவனை வரவேற்று தொடங்கிடுவோம்.
ஓம் ஸ்ரீ பஞ்ச பூத நமச்சிவாயத்திற்கு நன்றி
ஓம் ஸ்ரீ பூமியின் வாழ்வியலை சாத்தியப்படுத்திய நவ கோள்களுக்கும் நன்றி.
ஓம் ஸ்ரீ சூரியனார்க்கு நன்றி
ஓம் ஸ்ரீ சந்திரனார்க்கு நன்றி
ஓம் ஸ்ரீ வியாழனார்க்கு நன்றி
ஓம் ஸ்ரீ சுக்கிரனார்க்கு நன்றி
ஓம் ஸ்ரீ புதனார்க்கு நன்றி
ஓம் ஸ்ரீ அங்காரகனார்க்கு நன்றி
ஓம் ஸ்ரீ சனீஸ்வரனார்க்கு நன்றி
ஓம் ஸ்ரீ இராகு தேவர்க்கு நன்றி
ஓம் ஸ்ரீ கேது தேவர்க்கு நன்றி
ஓம் ஸ்ரீ இந்திராணி சமேத இந்திர தேவோ நமோ நமஹா
ஓம் ஸ்ரீ உலகோர்க்கு உணவளிக்க இயற்கை விவசாயம் செழிக்க மெய்ப்பாடுபடும் உழவர்க்கு நன்றி.
ஓம் ஸ்ரீ அத்துனை சித்த ரிஷி சிரஞ்சீவி குருமார்களுக்கும் நன்றி நன்றி.
ஓம் ஸ்ரீ இயற்கைத் தாயே நன்றி நன்றி நன்றி.
வழக்கம் போல் நம் தளம் சார்பில் குருநாள் சேவை நேற்று குருவருளால் நடைபெற்றது. பசுக்களுக்கு வாழைப்பழம், பைரவருக்கு பிஸ்கட், திருச்செந்தூர் யானைக்கு உணவு, காகங்களுக்கு உணவு, சின்னாளபட்டியில் 18 அன்பர்களுக்கு உணவு என கொடுத்துள்ளோம். இவை அனைத்தும் அன்பர்களின் அன்பினாலே சாத்தியம்.நம்மால் இங்கு ஒன்றும் ஆவது இல்லை. வழிநடத்தும் குருமார்களின் பதம் பணிகின்றோம்.
சில அன்பர்களுக்கு பொங்கல் பரிசாக இறை பிரசாதம் அனுப்பி வைத்துள்ளோம். இதில் கோடகநல்லூர் மஞ்சள் பிரசாதம், பொதிகை விபூதி பிரசாதம், உத்தரகோசமங்கை சந்தன பிரசாதம் என குருவருளால் 24 அன்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இவை அனைத்தும் குருவருளால் தான் எனும் போது அகமகிழ்கின்றோம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நம் சேவைகள் குருவருளால் உயர்ந்து வருகின்றது. இன்றைய தைத்திருநாளில் தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு ஓராண்டுக்கான அன்னசேவையாக ( தினம் ஒரு அன்பருக்கு உணவாக ரூ.10 வீதம் ) சிறு தொகை கொடுத்துள்ளோம். இது அடுத்த பொங்கல் அன்று வருடம் தோறும் தொடரும். இது தான் குருவருள் நம்மை விரல் பிடித்து நடத்தி வரும் அருள்நிலை என்பது.
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை இங்கே கூறி மகிழ்கின்றோம்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது கீழே உள்ள வாசகம் தான் மனதில் தோன்றுகின்றது.
ஆம்...அனைத்தும் நன்மைக்கே....அனைத்திற்கும் நன்றி
இதோ. தை மாதம் பிறந்து விட்டது.தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள். அனைவருக்கும் வழி பிறக்க பிரார்த்திக்கின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment