"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, January 3, 2022

திருக்கழுகுன்றத்தில் ஸ்ரீ அகத்தியர் தலைமையில் சித்தர்களின் அபூர்வ கிரிவலம் - 08.01.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இறையருளை நாம் பெறுவதற்கு ஒரு சிறந்த வழி கிரிவலம் ஆகும். பார்ப்பதற்கும் எளிய சொல்லாக இருக்கும். ஆனால் பக்தியின் ஆழம் உணர்த்தும் சொல். நம்மை சற்று கிரிவலம் செம்மைப்படுத்தியது. பக்தியை நாம் கிரிவலம் மூலம் உணர்த்திருக்கின்றோம். பொதுவாக கிரிவலம் என்றாலே அது திருஅண்ணாமலை கிரிவலம் என்று கேட்டிருப்போம்.ஆனால் தற்போது திருப்பரங்குன்றம், பழநி, வள்ளிமலை என கிரிவலம் செய்து வருகின்றோம். கிரிவலத்தின் போது நாம் என்ன செய்ய வேண்டும். உடல் மட்டும் தான் வலம் வருவதாக நினையாதீர். இங்கே உடலோடு சேர்ந்த மனமும் மலை வலம் செய்ய வேண்டும். அப்போது தான் நம் மனா குப்பைகள் அந்த பரம்பொருளின் தீக்கிரையாகி மலை வலத்தில் மன வளம் பெற்று நாம் வாழ்வில் உயர முடியும். இல்லையேல் நாமும் வழக்கம் போல் கிரிவலம் மட்டுமே சென்று கொண்டிருப்போம். இதோ பகவான் ரமண மகரிஷி கூறும் கதை ஒன்றை தருகின்றோம்.


கிரிவலத்தைப் பற்றி ரமண மகரிஷி கூறிய கதை...

ராஜா ஒருவர் குதிரையில் அமர்ந்து காட்டுப் பூனையைத் துரத்தியிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாகக் காட்டுப்பூனை, குதிரை, ராஜா ஆகியோர் இறந்து போனார்கள். மூவரும் ஒரே நேரத்தில் இறந்துபோனாலும் குதிரையும், காட்டுப் பூனையும் மோட்சம் அடைந்துவிட்டன. ஆனால், ராஜாவுக்கு மட்டும் மோட்சம் கிடைக்கவில்லை.

ராஜாவிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனைதான் காட்டுப் பூனைக்கு இருந்தது. ராஜாவின் ஆணையைக் கேட்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் குதிரைக்கு இருந்தது. ஒரே சிந்தனையுடன் ஓடியதால் குதிரைக்கும், பூனைக்கும் மோட்சம் கிடைத்துவிட்டது. ஆனால், பல சிந்தனைகளுடன் காட்டுப் பூனையைத் துரத்தியதால் ராஜாவுக்கு மட்டும் மோட்சம் கிடைக்க வில்லை.


இதேபோன்றதுதான் கிரிவலமும். மனதில் எந்தவிதச் சிந்தனையும் இல்லாமல் `அண்ணா மலையான்’ ஒருவனை மட்டுமே நினைத்துக்கொண்டு கிரிவலம் மேற்கொண்டால் இறைவனின் அருளைப் பரிபூரணமாகப் பெற முடியும்.

சரி..இனி திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் பற்றி இந்தப் பதிவில் காண இருக்கின்றோம்.




திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் பற்றி நம் குருநாதரின்  அருள்வாக்கை கேட்போம்


மறைவணங்கும் இறைவணங்கி உரைக்கிறேன் அகத்தியன் யான் இத்தருணத்திலே...

சகல சக்திகளுக்கும் ஆதாரமாய் விளங்குகின்ற இறைவனவன். அந்த சக்தியானது புவி முழுவதும் பரவியிருக்கின்ற சக்தி ஓர் ஆலயத்தில் நிலைபெற்று இருக்கின்ற பொழுது, அந்த ஆலயத்தில் மிக மிக அற்புதங்களைக் கொண்ட கதிர்வீச்சு சக்தியானது எப்போது மிக அதீத சக்தியோடு வெளிப்படுகிறதோ அந்த நேரத்தில் சித்தர்கள் நாங்கள் அந்த இறையை தொழுக கூடுவோம். 

இந்த தேசத்தில் உள்ள அணைத்து ஆலயங்களிலும் இந்த நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தாலும், கழுகு தொழுகின்ற, ஈசனவன் வீற்றிருக்கின்ற வேதகிரீஸ்வரர் பெருமானுடைய மலையில், பல ஆயிரக்கணக்கான சித்தர் சமாதிகள் இருந்தாலும், அத்தனையும் விழிப்படைகின்ற அற்புதமான நாளாகிய மார்கழி மாதம் நன்னாளில், இந்த திவ்யமான இறையை தரிசனம் செய்ய சித்தகணங்கள் ஆகிய நாங்கள் இத்தலத்திற்கு வருகின்றோம். வருகின்ற நன்னாளில் யாங்கள் கிரிவலம் வருகின்ற பாதையில் எவரொருவர் நின்று தரிசனம் செய்கின்றார்களோ அவர்களுடைய கர்மவினைகள் யாவும் அறும் என்பது அகத்தியன் வாக்கடா கருணையே. 

கருணையே ஆதியோடு அங்கமாக இருக்கின்ற பல லட்சக்கணக்கான சித்தகணங்கள் வருகின்ற நேரத்தை யாங்கள் உங்களோடு பகிர்கின்றோம் அப்பா. நள்ளிரவு நான்கென்று அழைக்கப்படுகின்ற நாளில் துல்லியமான வேளையத்தனில் யாங்கள் இத்தலத்திற்கு கிரிவலம் செய்கின்றோம்.

மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்ற மாந்தரும் சரி, உடல் நலம் குன்றிய மாந்தரும் சரி, தடத்தின் போது கிரிவலம் செய்தால் இறைசக்தியின் மூலம் அன்னவன் ஆன்மபலம் பெற்று நிலைபெறுவான் என்பது அருள்வாக்கடா மைந்தனே. 

ஆசிகள் சுபம்!





திருக்கழுகுன்றத்தில் ஸ்ரீ அகத்தியர் தலைமையில் சித்தர்களின் அபூர்வ கிரிவலம் - 2022

ஸ்ரீ மஹாகுரு அகத்திய பெருமானின் கருணை ஜீவ நாடியில், செங்கல்பட்டு மாவட்டம் பஷீதீர்த்தம் என்றழைக்கப்படும் திருக்கழுகுன்றத்தில் அமைந்துள்ள வேதகிரிஸ்வரர் திருமலையில் சித்தர்கள் கிரிவலம் வரும் காலம் உலக நன்மைக்காக அருளப்படுகிறது.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய மலைகளாக இருக்கப் பெற்றதான வேத மலையில் உள்ள வேதகிரீஸ்வரர் பெருமானை சித்த மஹா புருஷர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வணங்கி செல்லும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

அபூர்வ சித்தர்கள் கிரிவலம் குறித்து உலக நலனுக்காக அகத்திய பெருமான் காட்டிய வழியில் செல்பவரும், பல ஆயிரக்கணக்கான லிங்கங்களை பிரதிஷ்டை செய்தும், உலக நன்மைக்காக அருளிய அகத்திய மஹா யாகங்களையும், தீமைகள் அறுதல் பொருட்டு ருத்ர சண்டி பைரவ யாகங்களை நிகழ்த்தியும், கும்பமுனி வாக்கிற்கு இணங்க ஈசன் பணிக்காக தன் வாழ்வினை அர்பணித்தவரும் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாளின் வாக்கினை ஒத்த பல நூற்றாண்டுகளாக புதையுண்டு பூசை அற்று கிடக்கும் ஈசனின் திருமேனிகளுக்கு (சிவலிங்கம்) புனருத்தாரணம் செய்து வருபவரும், பல லட்சக்கணக்காண மக்களுக்கு அன்ன தானமும் வஸ்திர தானமும் செய்து உலக நன்மைக்காக பணியாற்றும் திருக்கழுகுன்றம் அகத்திய ஸ்ரீ அன்புச் செழியன் ஐயா அவர்கள் சித்தர்கள் கிரிவலம் வரும் நாளை உலகிற்கு உரைத்து இருக்கிறார்கள்.

அபூர்வ நிகழ்வு வருகின்ற மார்கழி மாதம் 24ம் நாள் 08.01.2022 சனிக்கிழமை நள்ளிரவு 2.36 மணிக்கு துவங்கி 3.05 வரை (விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை) பாவங்களை போக்கும் சித்தர் கிரிவலம் நடக்க உள்ளது.

சித்தர்களின் அருகாமையை எவ்வாறு உணர்வது?

பல பிறவிகளில் வினைகளை அனுபவித்த பிறகே சித்தர்கள் பற்றிய எண்ணம் உண்டாகிறது. சூட்சம கிரிவலம் வரும் போது அவரவர்கள் கர்ம வினைகள் முன்வைத்து சித்தர்களின் அருளால் விழி நீர் மல்குதல், மனம் ஒன்றி செயலற்று போதல், ரோமம் சிலிர்த்தல், தோல் இசைக் கருவிகளின் ஓசை, சங்கின் ஓசை, மணியின் ஓசை, சிலம்பொலி, வண்டின் ரீங்கார ஓசை, ஓங்கார ஒலிகள் போன்றவை நிகழும்.

இந்த நிகழ்வின் பொருட்டு அகத்திய ஸ்ரீ அன்புச் செழியன் ஐயா அவர்கள் தலைமையில் சனிக்கிழமை இரவு 2.00 மணிக்கு வேதகிரீஸ்வரர் திருமலை அடிவாரத்தில் வேத கோஷங்கள் முழங்க சித்தர்களுக்கு ஆரத்தி நடைபெற்று அதனைத் தொடர்ந்து மௌன கிரிவலம் நிகழ உள்ளது.

மௌனமாக கிரிவலம் வருதலும் ஆண்கள் மேலாடை இன்றி கிரிவலம் வருதலும் உத்தமம்.

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் நலமடைய சித்தர்களின் கருணையால் நடக்கும் இந்த சித்தர்கள் கிரிவலத்தில் பங்கு கொண்டு அருள் பெறுவோம்.

இவன்
அகத்திய ஸ்ரீ அன்புச் செழியன்
(FB)அகத்திய கிருபா, திருக்கழுகுன்றம்
97895 60249 / 90431 49096 / 99521 84583 / 94439 68005

இனி சென்ற 2020ஆண்டில் நடைபெற்ற கிரிவலக் காட்சிகளை இங்கே நாம் தருகின்றோம்.












2020 ஆம் ஆண்டு கிரிவலத்தில் நம் குழு அன்பர்களுடன் சேர்ந்து கிரிவலம் செய்தோம். நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதனை நினைத்து கிரிவலம் செய்த அந்த அனுபவம் இன்னும் நம் மனதுள் உயிர்ப்பாக இருக்கின்றது. அதிகாலை வேளையில் எழுந்து, திருக்கழுக்குன்றம் கோயிலுக்கு சென்று, மலைப்படியின் கீழே, அந்த பரம்பொருளை வேண்டி, கிரிவலம் சென்றோம். அருமையான அனுபவமாக இருந்தது. கிரிவலத்தின் பயனையும் தற்போது நாம் அவ்வப்போது பெற்று வருகின்றோம். அதன் பயனாக தான் தற்போது நமக்கு திருக்கச்சூர் மலைவலம் கிடைத்துள்ளது. திருஅண்ணாமலை சென்று பௌர்ணமி கிரிவலம் செல்ல இயலாத சூழலில் நாம் திருக்கச்சூர் செல்லலாம். திருக்கச்சூர் கிரிவலம் கிடைக்க, திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் தான் காரணம் என்று இந்த கார்த்திகை ஆயில்ய திருநாளில் நாம் உணர்த்தப்பட்டோம். இன்னும் பல சூட்சுமங்கள் கிடைக்கப்பெறும் என்பது உறுதி. எனவே வாய்ப்புள்ள அன்பர்கள் திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலத்தில் இணைந்து ஆன்ம பலம் பெற்று குருவருளும் திருவருளும் பெறும்படி வேண்டி நிற்கின்றோம்.

தற்போது நாம் சின்னாளபட்டியில் இருந்து சேவை செய்து வருகின்றோம். இந்த கிரிவலம் என்ற இறை தரிசனத்தை நாம் விட்டுவிட்டோம் என்று நினைக்கின்றோம். சென்னையில் இருக்கும் போது எப்படியாவது திருஅண்ணாமலை கிரிவலம் செய்து விடுவோம். திருஅண்ணாமலை கிரிவலத்திற்கு மாற்றாக திருக்கச்சூர் கிரிவலம் கிடைத்தது. தற்போது இந்த கிரிவலம் எங்கே செல்வது என்று இருந்த நிலையில் குருவருள் நம்மை வழிகாட்டியுள்ளது கண்டு மகிழ்கின்றோம். விரைவில் அந்த கிரிவலம் பற்றி பேசுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2019/12/14.html


No comments:

Post a Comment