அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நாளை சனிக்கிழமை 26.01.2022 காலை 8 மணி முதல் 27.01.2022 வரை தை மாத விசாகம் நட்சத்திரம் உள்ளது. இன்றைய நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை கூறி மகிழ்கின்றோம்.மேலும் இந்த நன்னாளில் இரு குருமார்களின் குருபூஜை கொண்டாட உள்ளோம். அதில் ஒருவர் பராபரக் கண்ணி தந்து , எங்களுக்கு தாயும் ஆன பரமே போற்றி என போற்றப்படும் ஸ்ரீ தாயுமான சுவாமி ஆவார். இவர் போன்ற மகான்களின் வரலாற்றை நாம் படித்தும், கேட்டும் வருவது நாம் செய்த புண்ணியமே. இனி ஸ்ரீ தாயுமான சுவாமி தரிசனம் பெற்று, அவரது புண்ணிய சரிதம் அறிய உள்ளோம்.
தாயுமானவர்
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று
அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார்:கேடிலியப்ப
பிள்ளை, தாயார்: கெஜவல்லி அம்மாள். இவர்வடமொழி, தமிழ் மொழி ஆகிய
இருமொழிகளிலும் புலமை பெற்றவர். தாயுமானவர் திருச்சிராப்பள்ளியை
ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் அரச கணக்கராகப்
பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால்
கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம்
செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு
பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில்,
அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள்
தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச்
சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற,
தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.
தம்
எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர்
தாயுமானவர்; வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர்
முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு.பின்னர் அப்பதவியைத்
துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு
என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.
தாயுமானவர் செய்த ஆக்கங்கள்
தாயுமான
சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1452
பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள்
வெண்பாக்களாகவும் உள்ளன. இவருடைய "பராபரக் கண்ணி" மிகவும் புகழுடையது.
பராபரக்கண்ணியில்,
"அண்டகோடி புகழ்காவை வாழும் அகிலாண்ட நாயகி என் அம்மையே!"
என்று
தாயுமானவர் அம்பாளைப் பாடியுள்ளார். 1736-ஆம் ஆண்டு துறவு பூண்ட
தாயுமானவரை ஒரு சித்தர் என்பார்கள். அவர் சமரச சன்மார்க்க நெறியைப்
பரப்பினார். இவர் பாடல்கள் "தாயுமானவ சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு" என
வழங்கப்படுகிறது. தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படும் இதில் 56
பிரிவுகளில் 1452 பாடல்கள் உள்ளன. மேலும், இவரின் பாடல்களில் உவமைகளும்
பழமொழிகளும் மிகுந்துள்ளன.
"சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனம் அடங்கக் கல்லார்க்கு "வாயேன்" பராபரமே"
(இருபொருள்: வாய்க்க மாட்டேன், வாய் ஏன்)
"எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே"
என்னும் இவருடைய வரிகள் புகழ் பெற்றவை.
தாயுமானவரின் பணி
கேடிலியப்ப
பிள்ளை திருச்சிராப்பள்ளியை ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கர் என்ற
அரசரிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார்.அவர் மறைவுக்குப் பின்னர்த்
தாயுமானவர் அப்பணியை ஏற்றார். விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியிலும்,அவர்
மனைவி இராணி மீனாட்சி ஆட்சியிலும் கணக்கராகப் பணியாற்றினார்.
துறவு வாழ்க்கை
மட்டுவார்குழலி
என்னும் மங்கையை மணந்து வாழ்ந்தார்.பின்னர்த் துறவு வாழ்கையில்
நாட்டங்கொண்டு துறவு பூண்டார்.திருமூலர் மரபில் வந்த மௌனகுரு என்பாரின்
அருளும் ஆசியும் பெற்றுச் சிறந்து விளங்கினார்.அவர் முக்தி பெற்ற இடம்
இராமநாதபுரத்தின் ஒரு பகுதியுள்ள இலட்சுமிபுரமாகும் .
சரி. இனி நாம் நேரே இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் சென்று தாயுமான சுவாமிகள் தரிசனம் பெற இருக்கின்றோம்.
இதோ ஸ்ரீ தாயுமான சுவாமி தபோவனம் வந்து விட்டோம்.
உள்ளே செல்ல இருக்கின்றோம்.
உள்ளே சென்றதும் ஸ்ரீ தாயுமானசுவாமி பற்றிய செய்தி இருந்தது. உங்கள் அனைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.
இளஞ்சிவப்பு
நிறத்தில் இந்த ஜீவ ஆலயம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை உணர முடிகின்றது.
இதோ. உள்ளே ஒவ்வொருவராக சென்று கொண்டு இருக்கின்றார்கள்.
இதோ.
நாமும் உள்ளே சென்று விட்டோம். மாயையின் பிடியில் இருந்து தப்பித்து உள்ளே
சென்றது போன்ற உணர்வு. வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தின் மரபில் சில
மகான்களை கண்டோம். நீங்களும் கண்டு உணருங்கள்.
இந்த தரிசனத்தை தனித்தனியே தந்திருக்கலாம் என்று தற்போது நினைக்கின்றோம்.
இதோ.
அடுத்து தாயாய் விளங்கும் பரமான தாயுமான சுவாமி தரிசனம் பெற
இருக்கின்றோம். நம் மனதில் பல கூச்சல், சப்தம், ஆட்டம், ஓட்டம் என
இருந்தது. வெற்று ஆரவாரம் எதுவும் இங்கில்லை. பேரமைதி இருந்தது. இது நம்மை
ஈர்த்தது. நம் ஊன் எப்போது உருகும் என்று காத்திருந்தோம்.
உள்ளொளி
பெருக்கும் தரிசனம். அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பதிவின் இந்த
இடத்தில் நமக்கு மூலத்தின் ஆதாரத்தில் சிறிய உணர்வாக அழுத்தம் பெற
முடிகின்றது. இங்கேயே இப்படி ஒரு அனுபவம் என்றால் நேரில் சென்று மீண்டும்
மனதில் தரித்து பரத்தில் சிக்க , தரிசிக்க மனம் விரும்புகின்றது.
தாயுமானவரே போற்றி
தந்தையுமானவரே போற்றி
எந்தையே போற்றி
பரமே போற்றி
சிவமே போற்றி
‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!”
நெஞ்சகமே கோயில் ; நினைவே சுகந்தம்; அன்பே
மஞ்சனநீர் பூசை கொள்ள வாராய் ! பராபரமே!
அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிவிட்டு விட்டால்
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே !
தாயுமானப் பெம்மான் தன்அடியை ஏத்துதற்குக்
காயும் வினைஅகலும் காண்.
என்று மீண்டும் மீண்டும் பாடி தாயுமானவர் பதம் போற்றுவோம்.
அன்பைப் பெருக்கி ஆருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!
கன்றினுக்குச் சேதா கனிந்து இரங்கல் போல் எனக்கு
என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே !
சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கு
அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே !
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே !
சீர் ஆரும் தெய்வத் திரு அருள்ஆம் பூமிமுதல்
பார் ஆதி ஆண்ட பதியே பராபரமே !
வித்து இன்றி யாதும் விளைவது உண்டோ?
நின்அருளாம்
சித்து அன்றி யாங்கள் உண்டோ? செப்பாய் பராபரமே!
சின்மயானந்த குருவே !
அங்கை கொடுமலர் தூவி அங்கமது புளகிப்ப
அன்பினால் உருகி விழிநீர்
ஆறாக, ஆராத முக்தியினது ஆவேச
ஆசைக் கடற்குள் மூழ்கிச்
சங்கர ! சுயம்புவே ! சம்புவே ! எனவும் மொழி
தழுதழுத்திட வணங்கும்
சன்மார்க்க நெறி இலாத் துன்மார்க்கனேனையும்
தண் அருள் கொடுத்து ஆள்வையோ?
துங்கமிகு பக்குவச் சனகன் முதல் முனிவோர்கள்
தொழுது அருகில் வீற்றிருப்பச்
சொல்லரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே
சொரூப அநுபூதி காட்டிச்
செங்கமல பீடம் மேல் கல்ஆல் அடிக்குள் வளர்
சித்தாந்த முக்தி முதலே !
சிரகிரி விளங்கவரு தட்சிணாமூர்த்தியே !
சின்மயானந்த குருவே !
நாளை நடைபெற உள்ள குருபூஜை அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம்.
வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும்,திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment