அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய போகி திருநாளில் நம் மனதுள் உள்ள தீய எண்ணங்களை எரித்து, அன்பால் தீபமேற்றி அகத்தில் உள்ள ஈசனை அகத்தியம் கொண்டு அருள்பெற செய்ய குருவிடம் வேண்டுகின்றோம். இன்றைய குரு நாளில் அண்மையில் நம் குருநாதர் வழங்கிய ஜீவ வாக்கை இங்கே பகிர உள்ளோம். மதுரை சக்தி மாரியம்மன் கோவிலில் நம் குருவின் அருளை வாக்காக பெற்றோம். குருநாதர் கூறியது போல் குருவின் வாக்கை கேட்பவர்கள் ஒரு சிலர். அதனை கடைபிடிப்பவர்கள் வெகு சிலர். அது போன்று தான் இங்கே குருநாதர் கூறிய வாக்கை நாம் கேட்டு, அதனை அவரின் அருளாலே வழிபாடு செய்ய நமக்கு அருளினார் என்று பார்த்தால் குருவின் கருணைக்கு எல்லையேது! குருவின் தாள் என்றும் பணிகின்றோம். இன்றைய வைகுண்ட ஏகாதசி நன்னாளில் அன்றைய தினம் நாம் பெற்ற பெருமாள் தரிசனம் குருவருளால் இங்கே பகிர்கின்றோம்.
வாக்குரைத்த ஸ்தலம். அகத்தியர் சன்னதி மாரியம்மன் கோயில் . பசுமலை. மதுரை.
ஆதி ஈசனின் பொற் பாதத்தை தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்.
நலன்களே என் அருள்களால் நலன்களே மிஞ்சும் என்பேன்.
மிஞ்சும் என்பேன் யான் வாரத்திற்கு ஒருமுறை இங்கு தங்கி தங்கி செல்கின்றேன் .
பின் அவ் நாளும் நல் பின் முறைகளாக உரைக்கின்றேன்.
பின்
குருவாரம்(வியாழக்கிழமை) என்கிறார்களே . அவ் வாரத்தில்(கிழமையில்) யான்
நல் முறைகள் ஆகவே தங்கித் தங்கி சென்றிருக்கையில் பின் அப்பொழுது கூட
அனைவரும் நல் முறைகளாக வந்தார்கள் பல. பல என்பேன் அதனால் பல பல
பேர்களுக்கும் நல் முறைகளாக ஆசிகள் தந்து கொண்டேதான் இருக்கின்றேன்.
மேன்மைகள் பெறும்.
ஆனாலும்
சில கஷ்டங்கள் வந்து வாட்டுவதற்கும் எவ்வாறு என்ற புரிதல் நிலைக்கு
ஏற்றவாறு அன்றைய தினத்தில் நல் முறைகளாக இங்கு அமர்ந்து வந்து துயிலெழுந்து
சென்றுவிட்டால் ஆனாலும் சென்று விட்டு நல் முறையாய் பின் ஒரு மாதத்திற்கு
இயலாதவர்களுக்கு அன்னம் அளித்து வந்தால் என்னுடைய அருளாசிகள் பலம்.
கர்மங்கள் அனைத்தும் விலகிப் போகும்.
ஆனாலும்
இவையன்றி இப்படியே செய்ய பின் மதுரையில் நல் முறைகளாக வாழும் மீனாட்சி
தாயும் பின் அதனுள்ளே(கோயில்) ஒரு மாதம் அங்கும் தங்கி இருக்க நல் முறைகள்
ஆகவே திருப்பரங்குன்றம் நல் முறைகள் ஆகவே அங்கும் ஓர் மண்டலம் தரிசிக்க
பின் பழமுதிர்ச் சோலையும் தரிசிக்க இவை அனைத்தும் ஒவ்வொன்றும் நீங்கி நல்
முறைகளாக நினைத்ததை நிச்சயமாய் நடைபெறும் என்பேன்.
யான் சொல்வதை சரி முறையாக கேட்க ஒரு துன்பமும் இல்லை என்பேன்.
துன்பம்
இல்லை என்பேன் இவ்வாலயத்தின் சிறப்பு கூட இது எவ்வாறு என்பதையும் கூட
மிஞ்சி பார்க்கும் அளவிற்கு வரும் காலங்களில் யான் வந்து கொண்டேதான்
இருப்பேன் இங்கு.
ஏனென்றால்
நல் முறைகளாக என்னுடைய பக்தர்கள் எவ்வாறு என்பதையும் கூட என் மீது அன்பு
காட்டி நல் முறைகளாகவே உருவாக்கினார்கள் என்பது மெய்.
அதனால் நல் முறைகளாக அவர்களுக்கும் என்னுடைய ஆசிகள் பல. பல பல என்பேன். சித்தர்களின் அனுக்கிரகமும் பலகோடி என்பேன்.
இதனால் நல் முறைகள் ஆகவே திருமூலனும் நல் முறைகள் ஆகவே அருணகிரியும் வந்து வந்து செல்கின்றனர் என்பேன்.
என்பேன் எதனால் என்பதை விட யான் இருக்கும் இடத்தில் அனைத்து சித்தர்களும் வருவார்கள் என்பது மெய்.
அதனால் யான் சொன்னேன். பின் நல் முறைகளாக அன்போடு ஏற்படுத்தியது இத் தலம் .
அவ்வாறு
ஏற்படுத்தினால் நிச்சயமாக அன்போடு நல் முறைகள் ஆகவே எவை வேண்டும் என்று
மனதில் எண்ணிக் கொண்டே என்னை வணங்கினால் போதும். யான் கொடுப்பேன்
அனைத்தையும்.
இதனையன்றி அது வேண்டும் இது வேண்டும் இவை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் நிச்சயம் அதனை யான் ஏற்க மாட்டேன் இத் தலத்தில்.
அதனால்தான் அன்போடு வாருங்கள் .
ஏனென்றால் என்னை அன்போடே உருவாக்கியவர்கள். நல் முறைகளாக என் பக்தர்கள் அதனால் அன்போடு தான் வணங்க வேண்டும் நல் முறைகளாகவே.
இன்னும் பல சூட்சமங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன்.
நல்
முறைகள் ஆகவே எவ்வாறு என்பதும் கூட இங்கு நிச்சயமாய் வரும் தைப்பூசம்
அன்று வெகு சிறப்பாக நடைபெற வேண்டும் முருகன் பாடல்களை பாடி நல் முறைகளாக
மூன்று தினங்களாக நல் முறைகள் ஆகவே.
முருகனும் வந்து வலம் வருவான். இன்னும் இத்தலம் சிறப்பு பெறும் என்பேன்.
நல்
முறையாக ஏற்றங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன். நல் முறைகள் ஆகவே இவை
அன்றியும் கூற இன்னும் சில சில மனிதர்களுக்கும் எவை வேண்ட வேண்டும் என்று
நினைக்காமல் வந்து வணங்குகின்றனர் ஆனாலும் அவர்களுக்கும் யான் நல்லாசி
கொடுத்துக்கொண்டு தான் வந்து இருக்கின்றேன்.
அனைவருக்கும் இங்கு வருபவர்களுக்கும் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் நிச்சயம் கிட்டும்.
ஆனாலும் அதனை உணர்வதற்காக யான் கஷ்டங்கள் ஏற்படுத்துவேன் சில.
அதையும் தாண்டி வர நல் முறையாக ஆசிகள் என்பேன்.
ஆசிகள் என்பேன் ஏனென்றால் இதனையும் சமநிலைப் படுத்த பின் ஒன்றும் தெரியாமலே வருகின்றனர் அதனால் தான் சிறிது கஷ்டங்கள்.
அவ்
அனுபவத்தின் மூலம் இறைவனை நிலையான பொருளை நிச்சயம் அவர்கள் கண்டுபிடித்து
நல் முறையாக மனமாற்றங்கள் அடைய யான் சில சில சோதனைகளை செய்வேன்.
அதனினும் மீண்டு நல் முறைகளாக வந்துவிட்டால் அப்பனே அற்புதங்கள் அப்பனே.
இவ்வுலகில் எதுவும் பெரிதில்லையப்பா.
இறையருளே மிகப் பெரியது.
இறையருளை
பெற்று விட்டால் அனைத்தும் இறைவன் தருவான் என்பேன் அதனால் எதையும் கேட்கத்
பட தேவையில்லை என்பேன் அன்பை மட்டும் செலுத்துங்கள் அன்பை மட்டும்
செலுத்துங்கள் இதுவே போதுமானது
எதையும் எவை என்றும் எதனையென்றும் மனிதனால் பெறமுடியாது என்பேன் இறைவன் நினைத்தால் தான் அனைவருக்கும் அனைத்தும் நடக்கும் என்பேன்.
அதனால்
தான் சொல்கின்றேன் எதுவும் பின் நல் முறைகள் ஆகவே அன்போடு அகத்தியா!!!
நல்முறையாக முருகா!!! பின் ஈசா!!! என்றெல்லாம் வணங்கி வந்தாலே அவந்தனை
பெயர் வைத்து அழைத்தாலே பின் ஓடோடி வந்து விடுவான்.
ஆனால் அதற்கு தகுந்தார்போல் மனிதர்கள் ஒழுக்க சீலராக வாழ வேண்டும் என்பேன்.
ஒழுக்கம் நல் முறைகள் ஆகவே பிறந்த விட்டால் அவந்தனை தேடி பின் அனைத்தும் வந்துவிடும்.
ஒழுக்கம் இல்லை என்றால் அப்பனே எது வந்தாலும் நிற்காது என்பேன்.
அப்பனே இதனால்தான் எவ்வாறு என்பதும்கூட வள்ளுவன் கூட ஒழுக்கத்தைப் பற்றி சிறப்பாக கூறி இருக்கின்றான் அப்பனே.
இக்காலத்திலும் ஒழுக்க சீலராக அப்பனே இருப்பவர்கள் கூட அழிந்து போவார்கள் எதனை என்று கூறும் அளவிற்கு கூட.
ஆனாலும் ஒழுக்கம் நல் முறைகளாக இருந்து விட்டால் அவனிடம் நற்பண்புகள் பெருகும் பெருகும் அவனிடத்தில் ஆசைகள் இருக்காது என்பேன்.
இதனால் அப்பனே அன்புடன் இறைவனை வணங்குவான். அனைத்தும் இறைவன் கொடுப்பான் என்பேன்.
அப்பனே
தன் பிள்ளைகள் தன் இல்லங்கள் தன் சொந்த பந்தங்கள் எல்லாம் நன்றாக இருக்க
வேண்டும் என்பதை எல்லாம் பின் கேட்கக் கூடாது என்பேன்.
அவ்வாறு கேட்டாலும் இறைவன் செய்யமாட்டான் அப்பனே.
இறைவனே நீ என்று நீ என்று கூட இறைவனே அனைத்தும் உந்தனுக்கே தெரியும் என்று பின் நல் முறைகளாக கேட்டுவிட்டால் அனைத்தும் தருவான்.
ஆனாலும் அறியாத முட்டாள்கள் எதை எதையோ கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இவை என்று கூற இன்னும் நல் முறைகளாக மாற்றங்கள் உண்டு என்பேன்.
நிச்சயம் நல் முறைகளாக மீனாட்சி தாயே இங்கு வருவாள் என்பேன்.
இவையன்றி கூற நல் முறைகள் ஆகவே இன்னும் பல உரைக்கின்றேன் ஆனாலும் இதையும் செய்ய மிக்க நன்று என்பேன்.
வரும்
எல்லா கன்னி திங்களில்(புரட்டாசி மாதம்) நல் முறைகளாக பின் ஒவ்வொரு
சனியும்(சனிக்கிழமை) நல் முறைகளாக அன்னத்தை(அன்னதானம்) மேற்கொள்ள மீண்டும்
நல் முறைகளாக மாற்றங்கள் உண்டு.
இதனை நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன்.
அம்மையே எவ்வாறு என்பதையும் கூட இதனையும் யான் சொல்லி வைத்தேன்.
நிச்சயம் சனி தோறும் இங்கு நிச்சயமாய் பெருமாள் வந்து பின் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் தந்து விட்டுத்தான் செல்வான் என்பேன்.
அப்பனே எவ்வாறு என்பதை கூட நிலை நிறுத்தும் பொழுது அப்பனே நல் முறைகள் ஆகவே நல் முறைகள் ஆகவே ஒன்று சொல்கின்றேன் கேட்டதற்கு.
எவ்வாறு
என்பதை உண்மை நிலை புரிய அன்னதானம் நல் முறைகளாக நடக்கும்பொழுது அவந்தனும்
அனைவரிடத்தில் உட்கார்ந்து அவந்தனும் அன்னதானத்தை உண்டு செல்வான் என்பேன்.
அப்பனே நல் முறைகள் ஆகவே யான் சொல்லியும் விட்டேன் .
நிச்சயமாய்
யான் சொல்லியபடி அனைத்தும் நீங்கள் நல் முறைகள் ஆகவே அன்று நல் முறைகள்
ஆகவே அருளாசிகள் பெற்று அனைவருக்கும் அடுத்த வாக்கும் கூறுகின்றேன்.
அம்மையே எவ்வாறு என்பதையும் கூட நிலை நிறுத்தும் பொழுது எந்தன் அருள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்பேன்.
அதனால் அனைவருமே என்னுடைய அருள் பெற்றவர்களே.
தேர்ந்தெடுங்கள் எவ்வாறு என்பதையும் கூட நல் முறைகளாக.
இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்.
பின் ஆடி கிருத்திகை என்கின்றார்களே அப்பொழுதும் கூட இங்கு முருகப்பெருமான் வந்துதான் சென்றான் என்பேன்.
நல்
முறைகள் ஆகவே இன்னும் பல மாற்றங்கள் உண்டு என்பேன் இன்னும் பல மாற்றங்கள்
உண்டு என்பதற்கிணங்க இன்னுமொரு சூட்சுமத்தையும் நல்முறைகளாக உரைக்கின்றேன்
உரைக்கின்றேன் நல் முறைகள் ஆக மாற்றத்தை யான் ஏற்படுத்தியே தீருவேன் நல் முறைகளாகவே.
சிலசில வினைகளால் மனிதர்கள் எங்கு சென்றாலும் விமோசனம் இல்லாமல் போய்க் கொண்டே தான் இருக்கின்றது.
இக்கலியுகத்தில்
கூட எவை என்று எதை நம்புவது என்று கூட தெரியாமல் மக்கள் அலைந்து மோதி
திரிந்து கடைசியில் ஒன்றும் தெரியாமல் மடிந்து விடுகின்றனர்.
ஆனாலும்
இனிமேலும் ஒவ்வொருவரும் எவ்வாறு என்பதையும் கூட நிலை நிறுத்தும் பொழுது
அம்மையே இங்கு(பசுமலை) வருபவர்கள் நல் முறைகள் ஆகவே அரை மணி நேரம் நல்
முறைகள் ஆக தவத்தை மேற்கொண்டு அவரவர் விருப்பப்படி பின் நல் முறைகளாகவே
தெய்வங்களை எண்ணினால் நிச்சயம் கைகொடுப்பான் என்பேன்.
அனைத்து தெய்வங்களும் இங்கு வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது என்பேன்.
சிறப்பின் ரகசியம் எவ்வாறு என்பதையும் கூட இனிமேலும் நல் முறைகள் ஆகவே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்.
நினைத்த
காரியத்தை நினைத்த படியே நல் முறைகளாக சொல்கின்றேன் இப்பொழுது பக்கத்தில்
உள்ள ஒரு மரம் இருக்கின்றதே அம் மரத்தை 108 முறைகள் சுற்றி நல் முறைகள்
ஆகவே அன்னத்தை நல் முறைகள் ஆகவே இவையன்றி கூற பின்பு அரை(24+12=36)
இதிலும் பாதிகூட்ட நல் முறைகளாக முப்பானாறு பேர்களுக்கு(36 நபர்களுக்கு)
நல் முறைகளாக அன்னதானம் இவை இட்டு வந்தாலே தன் கர்மங்களும் கழியும்
என்பேன்.
அப்பனே எவ்வாறு என்பதை கூட நாள் கிழமை கள் எதுவாயினும் சரி.
அப்பனே எவ்வாறு என்பதை கூட அப்பனே யான் இருக்கும் பொழுது நாள் கிழமை பின் எதுவும் தேவை இல்லை அப்பனே.
அம்மையே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே எவ்வாறு என்பதையும் கூட ஆனாலும் நல் முறைகளாக புரிந்து கொள்ளுங்கள்
ஆனாலும் ஒரு நாள் சுற்றி விட்டு பலன்கள் நடைபெறவில்லையே என்று எண்ண கூடாது என்பேன்.
அம்மையே
அப்பனே நல் முறைகளாக இன்னும் மாற்றங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன் நல்
முறைகள் ஆகவே சக்தி வாய்ந்த நல் முறைகளால் இத்தலம் எவ்வாறு என்பதைக் கூட
இன்னும் பல கோடி மர்மங்கள் இம் மதுரையிலே ஒளிந்திருக்கிறது என்பேன்.
இவையன்றி
கூற எதனை என்று கூற நினைப்பதற்கும் கூட இங்கு எவ்வாறு என்பதை கூட கோள்கள்
எவ்வாறு என்பதையும் கூட கோள்களுக்கு தகுந்த மாதிரி கோவலன் எவ்வாறு
என்பதையும் கூட பாண்டிய நாட்டின் அரசன் பல மர்மங்களையும் இப்புவியில்
எவ்வாறு என்பதையும் கூட இவ் மதுரை மாநகரிலே புதைத்து வைத்து
சென்றிருக்கின்றான்.
ஆனாலும் அதை எடுக்கும் காலம் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன்.
இப்புவியில்
நல் முறைகளாகவே ஆனாலும் சில மனிதர்கள் எவ்வாறு என்பதையும் கூட நினைத்து
பார்க்காத அளவிற்கு ஆனாலும் இவையெல்லாம் இருந்தால் மனிதர்கள் பிழைத்துக்
கொள்வார்களே என்று அடியோடு அழித்துவிட்டார்கள் அதனையும் மர்மங்களாக. அவை
இருந்தால் எப்பொழுதும் மனிதனுக்கு நிலையானதாக அனைத்தும் கிட்டும் என்பேன்.
ஆனாலும் இறைவன் கூட இதில் சூட்சுமமாக நடந்துதான் உள்ளான் என்பேன்.
அனைத்தும் பின் மனிதனுக்கு கிடைத்து விட்டால் இறைவனை பின் இறைவனையே கண்டுகொள்ள மாட்டான் என்பேன்.
இறைவனே நேரடியாக வந்தாலும் இறைவனா என்று கேள்விகள் கேட்பான் மனிதன்.
அதனால் தான் இதிலும் சூட்சமங்கள் உள்ளது.
பின் வாக்குகளில் அனைத்தும் சொல்கின்றேன் இதனைப் பற்றி விரிவாகவே.
நல்
முறைகள் ஆகவே நல் முறைகள் ஆகவே இனிமேலும் எவ்வாறு என்பதையும் கூட நிலை
நின்று பார்க்கும் பொழுது அனைத்தும் பொய் என்று தான் யான் சொல்வேன்.
நிலையானது எவை என்றால் இறைவனே!!! அதனால்தான்
இறைவனைப் பற்றிப் பற்றி பற்றிக் கொண்டே இருந்தால் நீ இறைவனைப்பற்றி பற்றற்று இருந்தால் அனைவரும் நன்றாகவே வாழ்ந்து விடுவார்கள்.
அதனை மீறி உங்கள் சுயநல விருப்பப்படி பற்று வைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
நிலையானது
நிலையற்றது இவ்வுலகில் எவ்வாறு என்பதையும் கூட அனைத்தும் ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு விதமான உள்ளதென்பது நிலையானது இறைவன் அருளே!!!
மற்றவையெல்லாம் நிலையற்றது.
ஆனால் முட்டாள் மனிதன் நிலையற்றதையே தேடிக் கொண்டிருக்கிறான்.
ஆனாலும் இவை என்று கூற பின் நிலையில்லாததை பின் தேடிச் சென்றால் பின் அவ் நிலையில்லாததால் மோசம் போய் விடுவான்.
ஆனாலும் நல் முறைகளாக அனைத்தும் நீயே என்று கூறிவிடு.
அதுவும் நன் முறையாகவே நடக்கும்.
அப்பனே
நல் முறைகள் ஆகவே அனைத்தும் எந்தனது இல்லை இறைவா உன்னிடத்திலேயே
ஒப்படைத்து விடுகின்றேன் என்ற ஒரு நிலையில் யோசித்தால் பின் இறைவன்
பார்த்துக்கொள்வான்.
ஆனாலும் ஒருவன் கூட அதை போல் நினைப்பதும் இல்லை .
இதுவரை ""யான்"" பார்த்ததும்!!! இல்லை....
நல் முறைகள் ஆகவே """பிறருக்காகவே வாழ வேண்டும்!!!என்ற கொள்கையை பிடித்தால் உந்தனுக்காக!!! இறைவன் வாழ்வான்.
அதை விட்டுவிட்டு தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் ??
நிச்சயம் இது முடியாது என்பேன்.
இன்னும் மேன்மையான பலன்கள் உண்டு என்பேன்.
மேன்மையான
பலன்கள் உண்டு என்பேன் அடுத்த சூட்சுமத்தையும் நல் முறைகளாக இத்தலத்திலே
இன்னும் இரு மாதங்கள் கழித்து உரைக்கின்றேன் அதி சிறப்பாக அதி சிறப்பாக நல்
முறைகளாகவே
இதை இயக்குபவர்களும் நல் முறைகள் ஆகவே வாழ்வார்கள் என்பேன்.
வாழ்வார்கள்
என்பேன் சீரும் சிறப்புடன் என்னுடைய அருளும் பரிசுத்தமாக எங்கிருந்தாலும்
அவர்களுக்கு நல் முறையில் ஆகவே யான் காட்சி தந்து கொண்டே இருப்பேன் நல்
முறைகள் ஆகவே.
எதைப்பற்றியும் கவலைப்பட அவசியமில்லை எவை எவை மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அவை எல்லாம் நிச்சயம் ஏற்படுத்தும் என்பேன்.
ஏற்படுத்தும் என்பேன் என்பதற்கிணங்க யானே முன்னின்று அனைத்தும் ஏற்படுத்துவேன் நல்முறைகள் ஆகவே.
என்மீது
நல் முறைகளாக பாசம் கொண்டு பாசம் கொண்டு அவ் பாசத்திற்காக நிச்சயமாய்
யானும் பல மடங்கு காண்பிப்பேன் இதனால் தொந்தரவுகள் இல்லை அனைவருக்கும்
நலமே.
ஆனாலும்
ஒன்றைச் சொல்கின்றேன் சிறு பிரச்சினைகள் எவ்வாறு என்பதையும் கூட விதியில்
கூட ஒவ்வொருவருக்கும் இப்பொழுது கூட நல் முறைகள் ஆகவே சில வினைகள் தோன்றி
தோன்றி வந்து கொண்டே இருக்கின்றது.
அதையும் யான் மாற்றுவேன்.
எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் விதியையே என்னால் மாற்ற முடியும் அளவிற்கு கூட தகுதிகள் இருக்கின்றது.
அதனால் நல் முறைகள் ஆகவே அவ் விதியை ஆனால் யான் தகுதியானவர்களுக்கே வழங்குவேன் என்பேன்.
எதனால்?? அவ் தகுதி நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புண்ணியங்கள் பல புண்ணியங்கள் பல தர்ம காரியங்கள் செய்து வந்தால் பின் மாற்றுவேன் யான் பிரம்மனிடத்தில் முறையிட்டு கூட.
நல் முறைகளாக விளக்கங்கள் தந்து விட்டேன் அனைத்தும் நல்படியாகவே அனைவருக்கும் நிறைவேறும் என்பேன்.
மீண்டும் இரு மண்டலம் அல்லது இரு மாதம் கழித்து நிச்சயமாய்
இத்தலத்திலிருந்து சொல்கின்றேன் வாக்குகளாக.
அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.
இனி புரட்டாசி மாத தரிசனம் இங்கே நாம் பெற இருக்கின்றோம். புரட்டாசி ஆயில்யம் நமக்கு பல அருள்நிலைகளை அள்ளித் தந்துள்ளது.
வழக்கம் போல் கூடுவாஞ்சேரியில் புரட்டாசி ஆயில்யம் பூஜை மிக சிறப்பாக
நடைபெற்றது. அன்றைய தினம் பூஜையில் துளசி சாற்றி குருநாதருக்கு வழிபாடு
செய்யப்பட்டது. நாமும் நம் குருநாதர் வாக்கிற்கிணங்க புரட்டாசி சனிக்கிழமை
பெருமாள் வழிபாடும், ஆயில்ய வழிபாடும் ஒரு சேர மதுரை பசுமலை ஸ்ரீ சக்தி
மாரியம்மன் கோயிலில் தரிசனம் பெற்றோம்.
இந்த மூன்று தரிசனத்தையும் இணைத்துப் பாருங்கள். இதோ..கீழே தருகின்றோம்.
1. தேடல் உள்ள தேனீக்கள் குழு சார்பில் புரட்டாசி 5 சனிக்கிழமை இனிப்பு தருதல்
2. மூன்றாம் சனிக்கிழமை நம் தளம் சார்பில் குருவருளால் அன்னதானம்
3. அன்றைய தினம் புரட்டாசி ஆயில்ய வழிபாடு. பெருமாள் ஆசியாக உணர்த்தப்பட்டோம்
4. குருநாதர் அருளிய வாக்கை மேற்கொண்டோம். ஆலயத்தில் 30 நிமிட தியானம்
5. ஆலய தல விருட்சம் 108 முறை சுற்றுனோம்
6. ஆயில்ய வழிபாடாக ஶ்ரீ அகத்தியர் வழிபாடு, சனிக்கிழமை பெருமாள் வழிபாடு. துவாதசி அன்னதானமாக அமைந்தது.
7. மிக நீண்ட மாதங்கள் கழித்து, ஆயில்ய வழிபாட்டில் , சித்தர்கள் போற்றி படித்து வழிபாடு
8. மதுரை பரமசிவன் ஐயாவுடன் சந்திப்பு, அவரிடமிருந்து நம் தளத்திற்கு பொருளுதவி பெற்றோம்.
9. இந்தக் கோயில் திருப்பணி முதல் தொலைபேசியில் அகத்தியம் ஊட்டும் வடிவு அம்மாவை முதன்முதலாக அன்று நேரில் சந்தித்தோம்
10.
நம் தளம் சிறப்பான தரிசனம், பூசை, அன்னதானம், தீப எண்ணெய் தானம், ஆலய
திருப்பணி அன்பர்கள் மரியாதை என அனைத்தும் குருவருளால் மிகச்சிறப்பாக
அமைந்தது
இது போல் ஏராளமான சிறப்புகளை, ஆசிகளை நம் குழு அன்று பெற்றது.
அன்றைய நாள் இனியதொரு அனுபவமும், பரவசமும். கண் நிறைய அபிஷேகமும், மனம் நிறைய குருநாதரின் அருளும் பெற்றோம். இன்னும் சில அருள்காட்சிகளை இங்கே இணைக்கின்றோம்.
குருநாதர் வாக்கில் கூறிய மரம் இது தான். இங்கே நாம் 108 முறை வலம் வந்தோம்.
முதலில் அன்று பெருமாள் தரிசனம் பெற்று , அடுத்து ஒவ்வொரு சந்நிதியிலும் இறை தரிசனம் பெற்று வந்தோம். அடுத்து 108 முறை இந்த மரத்தை வலம் வந்தோம். அடுத்து குருநாதரின் ஆயில்ய தரிசனம் காண இருக்கின்றோம்.
பழங்கள், வஸ்திரம், பூ மாலை , தீப எண்ணெய் அனைத்தும் சேர்பித்தாயிற்று. அடுத்து அர்ச்சனை ஆரம்பம்.
அர்ச்சனை முடிந்து, அகத்தியர் போற்றி பாடி, மகா தீப ஆராதனை காட்சி
அனைவரும் தீப தரிசனம் பெற்றுக் கொண்டோம். அன்றைய தினம் நமக்கு கிடைத்த அருள் பிரசாதம்.
அடுத்து நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பெருமாள் தரிசனம் இங்கே தருகின்றோம்.
எம் பெருமாள் தரிசனம் காண காண கண்கள் பணித்தது. இதற்குத் தானே பெருமாளே..எங்கள் பெருமானே ... நாங்கள் விரும்புகின்றோம். திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியை நம் மனதால் தியானிப்போம்.
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (1)
ஆவியே அமுதே என நினைந்து உருகி
அவர் அவர் பணை முலை துணையாப்
பாவியேன் உணராது எத்தனை பகலும்
பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (2)
சேமமே வேண்டி தீவினை பெருக்கி
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள்
தம் அடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (3)
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி
வேல்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்
என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட
பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (4)
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்
கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்
சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்
உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்
- நாராயணா என்னும் நாமம் (5)
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை
மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (6)
இல்-பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்
இன்னது ஓர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்
கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்
- நாராயணா என்னும் நாமம் (7)
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்
செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்
- நாராயணா என்னும் நாமம் (8)
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (9)
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்
மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை
இவை கொண்டு சிக்கென தொண்டீர்
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்
துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்
நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு
- நாராயணா என்னும் நாமம் (10)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 -
https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்! - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 29.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/29102021.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html
அருள்மிகு உலோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய சற்குரு ஆலய வருஷாபிஷேக அழைப்பிதழ் - 26,27.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/2627022021.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்! - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 29.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/29102021.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html
அருள்மிகு உலோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய சற்குரு ஆலய வருஷாபிஷேக அழைப்பிதழ் - 26,27.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/2627022021.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html
No comments:
Post a Comment