அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று ஜனவரி 12 ஆம் தேதி. இன்றைய நாள் சுவாமி விவேகாநந்தரின் பிறந்த நாள். இன்றைய நாளை 1985 ஆம் ஆண்டு முதல் தேசிய இளைஞர் தினம் என்று நாம் கொண்டாடி வருகின்றோம். தூய்மை,பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு வழிகளாகும் என்று போதித்த மகானின் பிறந்த நாள். இன்றைய நாளில் சுவாமியின் கருத்துக்களை இங்கே பதிக்க விரும்புகின்றோம்.
இன்றைய பதிவில் நாம் விவேகானந்தரின் வருகையைப் பற்றி சில துளிகள் காண இருக்கின்றோம். நூறு இளைஞர்கள் இப்போது தயார். ஆனால் விவேகானந்தர் போல் ஒரு தலைவருக்காக நாம் காத்திருக்கின்றோம் .இந்த பதிவு காட்சிப் பதிவாகவும் இருக்கும் என்று நம்புகின்றோம்.யானையின் பலம் யானைக்கே தெரியாது என்பர். நாமும் பல நேரங்களில் அவ்வாறே. இந்த உலகம் உய்ய நம் முன்னோர்கள்/சித்தர்கள்/மகான்கள் பலர் நம் கற்பனை கூட செய்யாத பல பொக்கிஷங்களை விட்டுச் சென்றுள்ளனர். அது அறியாமல் வாழ்க்கை என்னும் சக்கரத்துடன் இனைந்து நாமும் சுற்றிக் கொண்டுள்ளோம். அப்படிப் பல பொக்கிஷங்களை விவேகானந்தர் நமக்கு அளித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் - ஒரு மகான், இந்திய திருநாட்டின் பெயரை உலகெங்கும் ஓங்கி ஒலிக்க செய்த வள்ளல், இவரை வெறும் துறவி என்று பார்த்தல் அது நம் ஊனக் கண் செய்யும் தவறே. அவர் வாழ்வியலை போதிக்க வந்த ஆசான்.இன்னும் இன்னும் என சொல்லிக் கொண்டே போகலாம்.அவர் ஆன்மிகத்தை மற்றும் போதிக்கவில்லை என்பது அவரது வரலாற்றைப் படித்தால் புரியும்.
சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.
இனி சுவாமி விவேகானந்தர் அருளிய முத்துக்களை இங்கே காட்சிப் பதிவாக தருகின்றோம்.
No comments:
Post a Comment