அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தளத்தில் அவ்வப்போது சித்தர்கள் பற்றியும், சித்தர்களின் குரு பூஜை பற்றியும் பேசி வருகின்றோம்.சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது.சித்தர்களை நாம் குருவாகவும் சிந்தித்து வருகின்றோம். அருள்மிகு வீரராகவ சுவாமிகள், கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள், போகர், ஸ்ரீ ரோம மகரிஷி , ஸ்ரீ சதானந்த சுவாமிகள், ஸ்ரீ சுப்பையா சுவாமிகள், மண் உண்ட மகான் ஸ்ரீ மல்லையா சுவாமிகள், ஸ்ரீ காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள், ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள், கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், யோகி ராம் சூரத் குமார், ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தர் என தொட்டுக்காட்டி வருகின்றோம். சித்தர்கள் மார்க்கத்தில் நாம் இப்போது தான் விரல் பிடித்து அடி மேல் அடி வைத்து நடந்து வருகின்றோம்.
வள்ளலாரின்
புகழைப் பாடியபடியே, நடந்தே திருக்கழுக்குன்றம் வந்தவர், அங்கிருந்த
வேதகிரீஸ்வரர் மலையில் உள்ள குகையின் உள்ளே அமர்ந்தார். ஒன்பது
வருடங்களுக்கு அந்த இடத்தை விட்டு அவர் எழவே இல்லை. யாருடனும் பேசமாட்டார்.
அவர் முன்பு வைக்கப்பட்ட விபூதியை தன்னை காண வரும் பக்தர்களுக்குக்
கொடுத்து ஆசீர்வதிக்கத் தொடங்கினார். நாத்திக வாதம் பரவத் தொடங்கிய
காலத்தில் 30 இளைஞர்கள் அவரைத் தொந்தரவு செய்யும் நோக்கத்துடன் இளநீர்
வெட்டிவெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். சுவாமியும் அதை வாங்கிக்
குடித்தார். சித்தர் எப்படியும் சிறுநீர் கழிப்பதற்குக் குகையை விட்டு
வெளியே வரவேண்டும் என்று இளநீர் கொடுத்தவர்கள் நினைத்தார்கள்? ஆனால் பாவம்,
சுவாமிக்கு இளநீர் கொடுத்தவர்களே, அதை சிறுநீராக வெளியேற்றிக்
கொண்டிருந்தார்கள். அப்போதுதான் சுவாமியின் சக்தி மற்றவர்களுக்குப் புலப்பட
ஆரம்பித்தது. இவர் கடைசிகாலத்தில் 6-ம் திருமுறை நூலை எப்போதும் கையில்
வைத்திருந்தார்.
'எனது
ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் எனது உடலை குழியில் இட்டு ஒரு கல்லை
போட்டு மூடி வையுங்கள். 40 நாள் கழித்து அந்த உடலைத் திறந்து பாருங்கள்.
எனது உடல் சாய்ந்தாலோ, சரிந்தாலோ, பிணவாடை அடித்தாலோ மண்ணையிட்டு
நிரப்புங்கள். வைத்த நிலையிலேயே எனது உடல் இருந்தால் 10 மாதம் கழித்து ஒரு
முறை திறந்து பாருங்கள். அப்படியே இருந்தால் மேலே ஒரு கல்லை எடுத்து
மூடிவிடுங்கள்' என்று சமாதி ஆவதற்குச் சில தினங்களுக்கு முன்பே சொல்லி
வைத்தார்.
1960
ஜனவரி முதல் தேதி இரவு ஸித்தியடைந்தார். அவர் சொன்னது போலவே உடல் அடக்கம்
செய்யப்பட்டது. 40 நாள் கழித்து சப் கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர்
ராஜேஸ்வரி வேதாசலம் முன்னிலையில் அவரின் உடல் திறந்து பார்க்கப்பட்டது.
என்ன ஆச்சர்யம்!? அவரின் உடல் வைத்த நிலையில் அப்படியே இருந்தது. தலைமுடி
மேல் நோக்கி நின்றது. யோகிகளுக்கு உச்சி வழியாக உயிர் போகும். இதனை
காயஸித்தி என்கிறார்கள். இந்த நிகழ்வினை உச்சி பார்த்தல் என்பார்கள். The
body was impact என்று சப்கலெக்டர் தனது கெசட்டிலேயே பதிவு
செய்டிருக்கிறார்.
சுப்பையா
சுவாமிகள் நினைவாக திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகிலேயே சிறிய
அளவில் ஒரு கோயில் கட்டினார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவரின்
திருஉருவச் சிலையை வணங்கிச் செல்கிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக தினமும்
காலையில் 100 பேருக்கு உணவு, மதியம் 150 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.
மார்கழி சதய நட்சத்திரத்தில் வருடந்தோறும் குருபூஜை நடந்து வருகின்றது. இந்த வருட 61 ஆவது குரு பூஜை 20.12.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடை பெற உள்ளது.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம். அழைப்பிதழை கீழே இணைத்துள்ளோம்.
ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html
No comments:
Post a Comment