அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தன் அருள் அருளிய பாலராமபுரம் ஸ்ரீ அகத்தியர் லோபாமுத்திரா கோவில் அபிஷேக பூஜை தொகுப்பை இங்கே அனைவரும் அறிய தருகின்றோம் டிசம்பர் மாதம் 23ம் தேதி, இவ்வருடத்தின் (2021) இரண்டாவது "உலக சித்தர்கள் தினம்" உலகெங்கும், அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை தாய்க்கு அபிஷேக பூஜை, அன்னதானத்துடன், மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது! ஆம் அன்றைய தினம் நம் குருநாதரின் திரு நட்சத்திரம் என மனதுள் வரித்து பல இடங்களிலும் ஹோமம், கும்ப அபிஷேகத்துடன் நடைபெற்றது. பல அடியவர்களும் பகிர்ந்து கொண்ட படங்களை தொகுப்பு 1059இல் காணலாம். அனைவருக்கும் அடியேனின் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
கோடகநல்லூர் பூஜை முழுமை பெற்ற பின்னர் குருவருளால் ஒரு சிறு தொகையை பாலராமபுரம் ஸ்ரீ அகத்தியர் கோயிலுக்கு கொடுத்து லோக ஷேமத்திற்காக பிரார்த்தனை செய்யும் படி வேண்டினோம். இந்த ஆண்டு பூஜை முடிந்து, குருவருளால் நமக்கு பிரசாதம் அருளப்பட்டது. இதனை மேலே தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
பாலராமபுரம் அகத்தியர் கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொள்கிற வாய்ப்பை அடியேனுக்கு அருளினார், நம் குருநாதர். நடந்த விஷயங்களை சுருக்கமாக உரைக்கிறேன்.
குருநாதரின்
திருநட்சத்திர விழாவில் கலந்து கொண்டு, அல்லது பங்குபெற விருப்பமுள்ள
அகத்தியர் அடியவர்களுக்காக சித்தன் அருள் தொகுப்பு 1053இல் வழிகாட்டப்
பட்டிருந்தது. நிறைய அகத்தியர் அடியவர்கள், கோவில் நிர்வாகத்தினரை தொடர்பு
கொண்டு தங்கள் பங்களிப்பை செலுத்தினர். ஒரு சில அகத்தியர் அடியவர்கள்
வந்திருந்து உழவாரப்பணி செய்து பூஜையை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.
மாலை 5 மணிக்குத்தான் பூஜை என்றாலும், காலை முதலே பம்பரமாக சுழன்று, அகத்தியர் அடியவர்கள் ஒவ்வொரு பணியையும், சிறப்பாக செய்தனர்.
அனைத்தும்
அமைந்து அபிஷேகம் தொடங்க 5.45 நிமிடமாகிவிட்டது. முதலில் எண்ணெய் காப்பு
இருவருக்கும் செய்து, அகத்தியர் உத்தரவால், அவரது வலது கரத்திலிருந்து
வழிந்த அந்த எண்ணையை, வந்திருந்த அனைத்து அடியவர்களுக்கும், நெற்றிக்கு
இட்டுக்கொள்ள கொடுக்கப்பட்டது.
பின்னர்
பலவிதமான அபிஷேகங்கள்: அவரை குளிரவைக்க வெட்டிவேர் தீர்த்தம்,
பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் பொடி,
அரிசி மாவு, மூலிகை பொடி, குங்கும தீர்த்தம், பன்னீர், வாசனாதி
திரவியங்கள், காவேரி தீர்த்தம், விபூதி, கடைசியில் பச்சை கற்பூர
அபிஷேகத்துடன் நிறைவு பெற்றது. அகத்தியர் அடியவர்களுக்கு ஏதேனும் ஒரு
அபிஷேக பொருளை தங்கள் கரங்களால் பூஜாரியிடம் எடுத்துக் கொடுக்கிற
பாக்கியமும் கிடைத்தது.
இவை
அனைத்தும், அவரே தருவித்துக் கொண்ட, அவர் திருநட்சத்திரத்தன்று மட்டும்
வெளியில் எடுத்து அபிஷேக பூஜை செய்கிற மரகதலிங்கத்துக்கும் செய்யப்பட்டது.
அபிஷேகம் நிறைவு பெற்ற உடனேயே, அகத்தியப்பெருமானின் உத்தரவால், அவருக்கு நிவேதனம் அளிக்கப்பட்டது.
அதன்
பின் புஷ்பஅபிஷேகம் (பூக்களால் அபிஷேகம்) தொடங்கியது. இதில் அகத்தியர்
அடியவர்களுக்கு தங்கள் கைகளால் பூவை எடுத்து தட்டில் வைத்து
பிரார்த்தனையுடன், கொடுப்பதற்கான ஒரு பாக்கியம் உருவானது. வித விதமான
பூக்கள் உபயோகப் படுத்தப்பட்டது.
புஷ்ப
அபிஷேகம் நிறைவு பெற்றதும் உள்ளே எட்டிப் பார்த்தவுடன் அடியேன் அசந்து
போனேன். அவர் பூக்களுக்குள் மூழ்கி எழுந்து மிக ஆனந்தமாக இருந்த நிலை.
இருவர் முகத்திலும் புன்னகை. பூவிலிருந்து வெளியே தோன்றிய வலதுகரம், அருளை
பொழிந்தது. இது போதும் என அடியேனின் மனம் உரைத்தது. ஆம் குருநாதர்
மகிழ்ந்துவிட்டால், இவ்வுலகில் எது வேண்டும். அனைத்தும் அனைவருக்கும் அவர்
அருளிடுவார். அதுவே அன்று நடந்தது.
அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும், வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது. தீபாராதனைக்காக நடை சார்த்தப்பட்டது.
தீபாராதனைக்காக
சந்நிதான நடை திறக்கப்பட்டதும், அப்படி ஒரு மணமும் தேஜஸும் அனைவரையும்
தாக்கியது. மிக அற்புதமான தரிசனம். தன்னையே, மெய் மறந்த அடியவர்கள், அனைவர்
மனதிலும், ஓர் அமைதி, ஆனந்தம் என வித விதமான அருளை வாரி வழங்கி
குருநாதரும், தாயும் நின்றிருந்தனர்.
ஒரு அகத்தியர் அடியவர் தன் கையினால் வரைந்த அகத்தியப்பெருமானின் ஓவியத்தை அன்றைய தினம் கோவிலுக்கு சமர்ப்பித்தார்.
அகத்தியப்பெருமான் அருளுடன் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அன்று
அங்கு வந்திருந்த அவரின் அடியவர்கள் அனைவருக்கும், பூசையில் அவர்
பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கீழ் காணும் விஷயங்கள் அருளப்பட்டது.
- அகத்தியப் பெருமானின் படம் பதித்த ஒரு ரூபாய் நாணயம்.
- ஒரு பத்து ரூபாய் (786/108/354) குருநாதரின் பரிசாக வழங்கப்பட்டது.
- அகத்தியப்பெருமான் லோபாமுத்திரையுடன் அருளும் ஒரு படம்.
- அபிஷேக பிரசாதம்.
- மிக சிறந்த முறையில், கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த அன்னம், அனைவருக்கும்.
இனி
இப்படி ஒரு விழாவை குருநாதருக்கு செய்ய, ஒரு வருடத்துக்கு மேல்
காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த பொழுது, மனம் ஏனோ அமைதியாகிவிட்டது.
(09/01/2023). சரி! குருநாதரின் உத்தரவுக்காக காத்திருப்போம், என
தோன்றியது.
பின்னர்
அன்றைய தினம் உலகெங்கும் நடந்த பூஜையை பற்றி நாடியில் வந்து அருள் வாக்கு
உரைத்த குருநாதர், "மிகுந்த அன்புடன் எம் சேய்கள் செய்த அபிஷேக, பூஜை,
யாகங்களை யாம் ஏற்றுக்கொண்டோம். அன்று பூஜைக்கு வந்தவர்களுக்கும், பங்கு
பெற்றவர்களுக்கும், வர வேண்டும் என நினைத்தவர்களுக்கும் யாம்
ஆசிர்வதித்துள்ளோம்" என உரைத்தார். அடுத்து அன்றைய தினம் அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம்.
அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் அடியேனின் வணக்கங்கள். பாலராமபுரம் ஸ்ரீ அகத்தியர் லோபாமுத்திரா தரிசனம் நேரில் காண இங்கே பிரார்த்தனை செய்கின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html
பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html
No comments:
Post a Comment