சர்வம் சிவார்ப்பணம்...
வணக்கம் அடியவர்களே!!!
சமீபத்தில்
குருநாதர் அகத்தியர் பெருமான் மதுரை கூட்டுப்பிரார்த்தனையில்
முன்னோர்களுடைய நம்மளுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் முன்னோர்களுடைய
ஆத்மா அணு துகள்களை எப்படி பிரிப்பது என்பதை குறித்து குருநாதர் ஒரு எளிய
பரிகாரத்தை கூறியிருக்கின்றார்.
இதற்கு
முன்பாக புரட்டாசி அமாவாசை அன்று ஆறுகளிலும் கடல்களிலும் அணு துகள்களாக
பிரிந்து இருக்கும் முன்னோர்களுடைய ஆத்மாக்களை பித்ரு தர்ப்பணம் செய்வதன்
மூலம் சாந்தப்படுத்தி... அவர்கள் மகிழ்வுடன் தேவியை நவராத்திரியின் போது
அழைத்து வருவார்கள் ஆசிர்வாதம் செய்வார்கள் அதன் பிறகு சொந்த பந்தங்களின்
பாசத்தை பார்த்து வீட்டிலேயே தங்கிவிட நினைப்பார்கள் அவர்களை பட்டாசு
வெடித்து திருப்பி அனுப்ப வேண்டும் அதன் பிறகு நமது உடலில் ஒட்டி இருக்கும்
முன்னோர்களின் அணு துகள்களை ஐப்பசி மாதம் துலாஸ்நானம் அதாவது ஆறுகளுக்கு
சென்று பச்சைக் கற்பூரம் இட்டு நீராட வேண்டும் அந்த அணுக்கள் திரும்பிச்
செல்லும் என்று ஏற்கனவே பல வாக்குகளில் குருநாதர் இதனை பற்றி விளக்கமாக
வாக்குகளில் உரைத்திருந்தார்.
குருநாதரின்
இந்த வழிகாட்டுதலுக்கு அடுத்த கட்டமாக மேலும் நமது உடலில் ஒட்டி இருக்கும்
அணுக்களை ஒரே கட்டமாக அனுப்ப முடியாது... ஆனால் அவற்றையெல்லாம் முழுமையாக
நீக்க வேண்டும் என்பதற்கிணங்க கூட்டுப் பிரார்த்தனையில் ஒரு பரிகாரத்தை
கூறி இருக்கின்றார் இதை அனைவரும் ஒவ்வொரு அமாவாசையிலும் செய்ய வேண்டும்.
அடுத்து கைலாய வாத்தியம் வாசிப்பது குறித்தான ரகசியத்தையும் குருநாதர் இந்த வாக்கில் கூறியிருக்கின்றார்.
முழு கூட்டு பிரார்த்தனை வாக்குகளும் விரைவில் வெளிவரும்.
குருநாதர் உரைத்த அமாவாசை வழிமுறைகள்.
அப்பனே!!!இக்கைலாய வாத்தியம் எதை என்று புரிய யாருக்காவது தெரியுமா?
ஆனாலும் பின் எதையோ வாசிக்கின்றார்கள், அதை கேட்கின்றோம் என்றுதான் தெரிகின்றது. இதுதான் முட்டாள் என்பது.
அறிந்தும்
நிச்சயம் அதாவது சொல்கின்றேன். அறிந்தும் இவ்வாறாக இத் தேசத்தில் பல கோடி
நிச்சயம் சிவனடியார்கள் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய, எவை என்று
புரிய ஈசனையே நினைத்து நினைத்து, கடைசியில் கைலாயம் செல்லலாம் என்று எண்ணி,
அனைவரும் அறிந்தும் புரிந்தும் ஓரிடத்தில் இருந்து பின் நடந்தே பயணம்
செய்தார்கள்
. ஆனால் நிச்சயம்
தன்னில் கூட பின் சில மைல் தொலைவில், நிச்சயம் தன்னில் கூட ஈசன்
இருக்கின்றான். கைலாய மலையும் பின் வந்துவிட்டது, ஆனால் கடக்க முடியவில்லை.
எதை என்று புரிய, ஆனாலும் எது எதுவோ வந்து தடுத்தது. நிச்சயம் மழையும்
இன்னும் எதை என்று கூட நெருப்பு மழையும் இன்னும் இன்னும் கூட.
ஆனால்
அக்கோடி எதை என்று புரிய சிவனடியார்கள் இத்தனை தவங்கள், இத்தனை
தியானங்கள், இத்தனை ஈசனை நினைத்துக் கொண்டிருந்தோமே. பின் ஈசனை
காணவில்லையே, காணவில்லையே.
ஆனாலும் அறிந்தும் கூட காணவும் கூடமுடியவில்லையே. ஏன் தடுக்கின்றது???? என்றெல்லாம்
நிச்சயம். ஆனாலும் ஈசனோ !?!?! எதை என்று புரிய கைலாயத்தில் அழகாக நிச்சயம் பார்த்து தான் கொண்டிருந்தான்!!
பின்
பார்வதி தேவியும். பின் இத்தனை உன்னைத்தானே நிச்சயம் நமச்சிவாய!!!,
நமச்சிவாய!!!! என்றெல்லாம் சொல்லி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அறிந்தும்
புரிந்தும் கூட
. ஆனால் இப்படி எதை என்று கூட இப்படி தடுக்கின்றதே என்று.
ஆனால் பின் ஈசன் எதை என்று கூட அழகாக சொன்னான்.
நிச்சயம்
தாயே எதை என்று புரிய. ஆனாலும் இவர்கள் அனைவரிடத்திலும் எதை என்று புரிய.
நிச்சயம் இவர்கள் என்னைத்தான் நிச்சயம் வேண்டிக்கொண்டார்கள். !!!
சரியே!!!!
ஆனாலும் தன் கடமையை
செய்ய மறந்துவிட்டார்கள். எதை என்று புரிய. அவையும் இல்லாமல்
இவர்களிடத்தில் நிச்சயம் ஆன்மாக்களுக்கும் சொந்த பந்தங்களும் எவற்றுக்குமே
பின் செய்யவில்லை.
(சிவனடியார்கள் சிவனை மட்டும்
நினைத்துக் கொண்டிருந்தார்கள் அவரவர்களுடைய கடமையை அவர் அவர்கள்
செய்யவில்லை அதுவும் ஒரு பாவமாகிவிட்டது ஈசனை கைலாயத்தை காண முடியாமல்
செய்துவிட்டது)
என்னையே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
இதனால்
அவ் பாவ நிச்சயம் தன்னில் எது என்று புரிய. அவ் பாவ சில சில நிச்சயம்
துகள்களாக இவ் வுலகத்தில் பதிந்துள்ளது. நிச்சயம் எதை என்று புரிய.
இதனால்
எவை என்று அறிய !!! மேலிருந்து ஒரு இடி இடிக்கட்டும். அனைத்தும் விலகிப்
போகும். எது என்று புரிய அனைத்தும் பின் எம்மிடத்தில், அதாவது நம்மிடத்தில்
வந்து விடுவார்கள் என்று!! ஈசன்!!!
எதை
என்று புரிய. ஆனாலும் இதை தெரியாமல் நிச்சயம் எவை என்று அறிய, இதனால்தான்
தெரிந்து கொண்டு நிச்சயம் இறைவனை வணங்குங்கள் என்றெல்லாம் சித்தர்கள்
யாங்கள் தான் உங்களுக்கு வழிகாட்ட வேண்டும். உங்களுக்கு வழிகாட்டிவிட்டால்,
உங்கள் சந்ததிக்கு நீங்கள் வழிகாட்டுகின்ற பொழுது நிச்சயம் சந்தோஷமாக
வாழும்!!
எதை எவை என்று புரிய!!!
, நிச்சயம் இவைதன் அறிந்தும் கூட.
இதனால் எவை என்று அறிந்தும், அறிந்தும் கூட.
இதனால் எவை என்றும் இன்னும் இன்னும் உரைப்புகளோடு இறைவனை பின் ஏன் வணங்குகின்றோம்,????
ஏன் வணங்க வேண்டும்?????
என்பதை எல்லாம் சித்தர்கள் யாங்கள் சொல்லிக் கொடுக்கின்றோம்.
ஏனென்றால்
கலியுகத்தில் நிச்சயம் இறைவனிடத்தில் பின் எதை என்று கூட நேராக சென்று
வணங்கிவிட்டால், அனைத்தும் கிடைக்கும் என்று மனிதன் நினைத்துக்
கொண்டிருக்கின்றான்.
இது பொய்யே!!!!
அறிந்தும், அதாவது இக் கைலாய வாத்தியத்தை நிச்சயம் பின் இவ்வாறு (வாத்தியங்கள்) கத்துகின்ற பொழுது,!!!!
நிச்சயம்
அதிகளவு முன்னோர்களின் சாபம் இருந்தால், நிச்சயம் அவர்களுக்கு எதை என்று
கூட பின் முடிவெடுக்கும். நிச்சயம் எங்கேயாவது ஓடிவிடலாமா? பின் எதை என்று
புரிய, பின் அப்படியே பின் தலைவலி எடுக்கும். நிச்சயம் ஐயயோ என்று
கத்துவார்கள்.
அம்மையே!!!, அப்பனே!!, அனைவருக்கும் எதை என்று புரிய, நிச்சயம்
ஒட்டிக்கொண்டிருக்கும் ஆன்மாக்களை நிச்சயம் முழுமையாக எதை என்று அறிய, பின்
ஆற்று தன்னில் (ஆற்றில் )விட வேண்டும்.
அறிந்தும்
இதையென்று நிச்சயம் இவை தன் விலக்க, அறிந்தும் கூட அமாவாசையிலும் கூட
நிச்சயம் உடம்பிலிருந்து எதை என்று அறிய, எவை என்று புரிய, சிறிது பின்
இளகி இருக்கும்.
அவ் நேரத்தில் நிச்சயம் நதிகளுக்கும் சென்று எதை என்று புரிய.
இன்னும் அதாவது கடல் நீர் அருகில் பின் சென்றும் நிச்சயம் அறிந்தும் எவை என்று அறிய, பின் பல தூப எண்ணெயைகளில் கூட
(சாம்பிராணி தைலம் உள்பட )
கூட அறிந்தும் கூட பல பல வித்தியாசமான பழங்களை நிச்சயம் எவ்வாறாக கீறி, அதாவது எதை என்று புரிய.
அப்படியே
குழுவி போல் எதை என்று அறிந்து கூட, அதில் பின் எண்ணெயை இட்டு, நிச்சயம்
தீபத்தை ஏற்றி, சில சில வழிகளில் மூலிகைகளை இட்டு, அதை அப்படியே நிச்சயம்
தன்னில் கூட எவை என்று கூட அனுப்ப வேண்டும்.
(உதாரணத்திற்கு
எலுமிச்சம் பழத்தில் தீபம் போடுவது போல பல வித்தியாசமான பழங்களில் அதாவது
ஆப்பிள் ஆரஞ்சு இன்னும் பல்வேறு பழங்களில் பழத்தை இரண்டாக வெட்டி பழங்களின்
நடுவே குழியாக்கி அதில் எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும் அதை அப்படியே
ஆற்றில் அல்லது கடலில் விட வேண்டும்)
இதற்கு மந்திரமும் யான் சொல்வேன்.
நிச்சயம் இதற்கு தகுந்தார் போல் பின் அனைத்தும் ஈர்க்கும் திறன், ஈர்க்கும் திறன், பூசணி தன்னில் கூட உள்ளது.
(வெள்ளை பூசணி.. ஏற்கனவே வெள்ளை பூசணியில் காலபைரவருக்கு தீபம் ஏற்றுவதை அனைவரும் அறிந்திருக்கலாம்)
அவை
தன் அனைத்தும் எதை என்று அறிய அறிய எடுத்து, அதில் எண்ணெய் இட்டு,
நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. பின் அப்படியே பின் எவை என்று கூட
அறிந்தும் கூட.
அறிந்தும் புரிந்தும், அப்படி நிச்சயம் தன்னில் கூட பிடுங்கிச் செல்லும் என்பேன். ஒவ்வொன்றாக
ஈர்ப்பு விசையினாக.
அறிந்தும் இவை தொடர்ந்து செய்ய வேண்டும். ஏனென்றால் ஒரே நேரத்தில் அனைத்தும் விலக எதை என்று புரிய.
(ஒருமுறை
மட்டும் செய்யக்கூடாது அதாவது ஒரு அமாவாசை மட்டும் செய்யக்கூடாது
தொடர்ந்து செய்ய வேண்டும் ஏனென்றால் ஒரே அடியாக ஒரே நேரத்தில்
முன்னோர்களின் ஆத்மாக்களை அணுக்களை விலக வைக்க முடியாது அதனால் இதைத்
தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும்)
அறிந்தும்
அனைவரும் சொல்லுங்கள், இவை தன் ஒருவருக்கு தெரிவித்தால் எதை என்று அறிய,
நீங்களும் பின் அதாவது இறைவன் கூட சுயநலவாதி ஆகிவிட்டான் என்று
சொல்வீர்கள்.
(இந்த வழிமுறையை தனிப்பட்ட நபர்களுக்கு சொன்னால் அவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள்!!
இதனால்
இறைவன் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டும் சொல்வதால் இறைவனுக்கு இங்கு
சுயநலவாதி என்ற பெயர் ஏற்பட்டுவிடும் அனைவருக்கும் தெரிவித்தால் அனைவரும்
செய்வார்கள் அனைவரும் பயன்பெறுவார்கள்)
அனைவருக்கும் இதனால் அனைவருக்கும் தெரிவித்து விட்டால்!!!
(இந்த வாக்கினை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் அனைவரும் இதனால் பயன்பெறுவார்கள்)
. அப்பனே, அறிந்தும் கூட இதை தடுப்பதற்கும் பல ஆட்கள் எதை என்று அறிய, எவை என்று அறிய, அறிய புரியாதவர்கள்.
ஏனென்றால் நல்லது செய்தால், நிச்சயம் தடுப்பவர்கள்.!!
ஏனென்றால் இக்கலியுகத்தில் தீயவை தான் நடக்க வேண்டும் என்று விதி.
அறிந்தும் எவை என்று அறிய, பின் அதாவது !!!
ஈசன் மிக மிக கருணை படைத்தவன்.
பின்
இக்கலியவனுக்கும் எதை என்று அறிய!!!, ஈசனை வேண்டிக்கொண்டே, ஈசனை
வேண்டிக்கொண்டு பல நூறு கோடி, எதை என்று அறிய, எவை என்று அறிய, ஈசனையே
நமச்சிவாய, நமச்சிவாய என்று.!!
மதுரை கூட்டு பிரார்த்தனையில் குருநாதர் உரைத்த வாக்குகள் முழுமையாக விரைவில் வெளிவரும்.
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment