இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அடியவர் 4 :- ( யோசித்தபடி) ஐயா அதை எப்படிக் கேட்பது? ( என்று தெரியவில்லை )
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ( இந்த அடியவர் சிந்தனை ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, அடியவர் சார்பில் அழகாகத் தொகுத்துப் பின்வருமாறு கேட்டார்கள் நம் குருநாதரிடம் )
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ஐயா என்ன கேட்க வருகின்றார் என்றால், எனக்கு எல்லாமே புரிகின்றது. என் முன் ஜென்ம வினைப்படி நான் சுக துக்கங்களை அனுபவித்து வந்து கொண்டிருக்கின்றேன். இனி எப்போது அடுத்த வளர்ச்சி என்பது அவர் கேள்வி ஐயா.
குருநாதர் :- அப்பனே மலர்ச்சியும் கொடுத்து விட்டேன் அப்பனே. இல்லையென்றால் அப்பனே இவன்தன் இங்கேயே இருந்திட வேண்டும் என்பேன் அப்பனே. அப்பனே …( தனி வாக்குகள்). அப்படிச் செய்யவில்லை இவ் அகத்தியன்.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ஐயா (உங்களை, உங்கள் குடும்பத்தை ) அவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து (நம் அன்பு குருநாதர்) காப்பாற்றியுள்ளார்.
குருநாதர் :- அப்பனே கேள் இன்னும்.
அடியவர் 4 :- நமக்காக எந்த பிரார்த்தனையும் செய்ததில்லை. இப்பொழுது அல்ல. எப்போதுமே செய்ததில்லை.
குருநாதர் :- அப்பனே இப்பொழுதுதான் கேட்டாய் அப்பனே. இவையெல்லாம் நியாயமா என்று கூறு?
அடியவர்கள் :- ( சிரிப்பு அலைகள் )
குருநாதர் :- அப்பனே நிச்சயம் அடுத்தவர்களுக்காகப் பாடு பட்டவர்கள் , நிச்சயம் ஓர் நாள் அப்பனே சுகம் அப்பனே உண்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தவர்களுக்காக நாம் வேண்டிக்கொண்டால் , அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று, அவர்களுக்கு உதவி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாகச் சுகம் உண்டு என்று (அகத்திய மாமுனிவர்) சொல்கின்றார் ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- கேளுங்கள் ஐயா. ஐயா இதுதான் ஜீவ நாடி என்பது. இதுவரைக்கும் நேரில் நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கின்றேன். உங்களை cross question ( குறுக்கு விசாரனை நம் குருநாதர்) அவர் கேட்பார்கள் ஐயா.
அடியவர் 4:- ( தனி கேள்விகள் , வாக்குகள் )
குருநாதர் :- அப்பனே ஆனாலும் ( தனி வாக்குகள் விதி ரகசியங்கள்) அதாவது ஒரு தந்தையும் கூட ___ எவ்வாறு என்பதையும் கூட அப்பனே அனைத்தும் நல்லவைதான் செய்யவேண்டும் என்றெல்லாம் மனம் உருகியதையெல்லாம் அதாவது யுகம் யுகங்களாகப் பார்த்துக்கொண்டே வருகின்றேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே எனை நம்பியவர்கள் எதை என்றும் புரியப் புரிய ஆனால் அப்பனே விதியில் என்ன உள்ளது (என்பது) எந்தனுக்கு மட்டுமே புரியும் அப்பனே. அதனால்தான் என் பக்தர்களை பக்குவப் படுத்தி கடைசியில் நல்லதைச் செய்வேன். கவலையை விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள். விதியில் உள்ள துன்பங்களை எல்லாம் கழித்த பின்பு , குருநாதரே அனைத்தையும் நடத்தி அருளுவார்கள் என்று எடுத்து உரைத்தார்கள்.)
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ஐயா ( அப்படிச் செய்யும் போது) எந்த ஒரு தடங்கல்களும் வராது.
அடியவர் 4 :- ஐயா கால நிர்ணயம் ஏதும் உண்டா? இல்லை நான் ரொம்ப நாள் wait பன்னனுங்களா?
குருநாதர் :- ( தனிப்பட்ட வாக்குகள். அதில் ஒரு முக்கிய வாக்கு ..) அப்பனே காலங்கள் நேரங்கள் அனைத்தும் என்னிடத்தில். (தனி வாக்குகள்) பொறுத்திரு அப்பனே. யானே முடித்து வைக்கின்றேன். அப்பனே ஆனாலும் உன் கடமையைச் செய்ய வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மேலும் வாக்குகளைக் கேட்க உற்சாகப் படுத்தினார்கள். அதனுடன் குருநாதர், அவர்கள் அழைத்ததால் தான் அங்கு இவ் அடியவர்கள் வர முடிந்தது என்று உரைத்தார்கள். )
அடியவர் 6 :- (காலம் சென்ற முன்னோர்கள் வழிபாடு குறித்து கேள்வி ஒன்று கேட்டார்கள். அதாவது முன்னோர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்களா என்று கேள்வி கேட்டார்கள். ஒரு முறை இவர்கள் முன்னோர் கனவில் வந்துள்ளார்.)
குருநாதர் :- இதே போல் அனுதினமும் நீ நிச்சயம் செய்திருந்தால் நிச்சயம் உன் சொப்பனத்திலே வந்து சொல்லிருப்பான்.
சுவடி ஓதும் மைந்தன் :- (விளக்கங்கள்)
குருநாதர் :- அப்பனே (உங்களுக்கு) பக்குவங்கள் இல்லாமல் யான் எதைச் செய்தாலும் வீணாகப் போய்விடும் அப்பனே.
( பல முக்கிய தனி வாக்குகள் )
குருநாதர் :- ( ஒரு அடியவருக்கு முரண்பாடாக கடுமையாக விதியில் உள்ளது. இப்படிப்பட்ட விதியை மாற்றுவதற்குக் குருநாதர் போராடித்தான் நடத்த வேண்டும் என்றும், இவ்விதியின் ரகசியங்கள் யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை என்றும் மனிதர்களிடத்தில் (விதி தெரியாமல் ஜோதிடர்கள்) இடத்தில் சென்றால் குழப்பி விடுவார்கள் என்றும், இப்படிப்பட்ட விதி மாற்றங்களைச் செய்ய குருநாதர், சித்தர்கள் உதவி மனிதர்களுக்கு அவசியம் தேவை என்றும் , விதியில் உள்ளதை சித்தர்களைத்தவிர யாரும் எடுத்துரைக்க இயலாது என்றும், அப்படி எடுத்துரைத்தாலும் தோல்வியில் போய் முடிந்து விடும் என்றும் எடுத்து உரைத்தார்கள் நம் அன்பு கருணைக் கடல்.)
(ஜீவ நாடி மர்மங்கள்)
குருநாதர் :- தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று அனைவரும், தந்தை நினைக்கின்றார்கள் அப்பனே. அதே போலத்தான் அப்பனே. (உங்களின் அன்புத் தந்தையாக) யான் அனைத்தும் (உங்களுக்கு வாக்குகளாக) சொல்வேன் அப்பனே. ஆனால் சில பாவங்கள் கூட சுவடியைக்கூட அதாவது எதை என்று அறிய அறிய யான் சொல்லி விடுகின்றேன் அப்பனே. அதாவது அதைப் படித்தாலும் அப்படித்தான் அப்பனே. பாவத்தை நெருங்க விடமாட்டேன் (எனது இவ் சுவடியை ஓதும் என் மைந்தனான ஜானகிராமன்) இவந்தனையும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- புரிகின்றதா ஐயா. ஐயா (எதிர்காலத்தில் விதியில் கடுமையாக நடக்க உள்ளதை) சில ரகசியங்கள் சொல்லிவிட்டால் , (நம் குருநாதரால் எளிதாக) easyஆகச் சொல்லிவிடுவார். (சுவடி ஓதும்) என்னையும் அதாவது இவனையும் பாவத்தில் சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றார்.
குருநாதர் :- அப்பனே கேட்கின்றாயா?
சுவடி ஓதும் மைந்தன் :- ஏதாவது கேளுங்கள்.
அடியவர் 4 :- (தெளிவு நிலை)
குருநாதர் :- அப்பனே புரிகின்றதா? எதற்காக என்னைத் தேடி வந்தாய் என்பதை? அப்பனே இதுதானப்பா புண்ணியம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா தெரிகின்றதா? நீங்கள் அப்படி இல்லையென்றால் நீங்க பல இடங்களுக்கு (விளக்கங்கள் தேடி) போய்க் கொண்டே இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது (உண்மை நிலை) தெரிகின்றதா? இந்த விசயங்களை யாரும் சொல்ல மாட்டார்கள் என்று சொல்கின்றார் ஐயா. விதியில் உள்ளதை யாரும் சொல்ல மாட்டார்கள். (சித்தர்களால் மட்டுமே சொல்ல இயலும்.)
அடியவர் 4 :- இவங்க தினப்படி என்ன செய்ய வேண்டும்?
குருநாதர் :- அப்பனே யான் மாற்றுகின்றேன் என்று சொல்லி விட்டேன் அப்பனே? மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் அப்பனே? இதைத்தான் கூறுகின்றாய்.
அடியவர் 4 :- அது சரிங்க ஐயா. Surrender ஆகின்றேன் ஐயா. ( உங்கள் முன் பணிகின்றேன்.) தினமும் routine என்ன செய்ய வேண்டும்.
( ####### விநாயகர் அகவல் பாடல் ரகசியங்கள் ####### )
குருநாதர் :- அப்பனே விநாயகனின் சீதக்களப என்னும் பாடலை அப்பனே விநாயகப் பெருமானின் அருகில் தீபம் ஏற்றிப் பாடச்சொல் அப்பனே. பின் போதுமானது. அதுமட்டும் இல்லாமல் அனுதினமும் விநாயகப் பெருமானுக்கு
ஏதாவது புஷ்பத்தைச் சாற்றி, அப்பனே பின் வணங்கி வரச்சொல் அப்பனே. நிச்சயம் நவ முறை சுற்றச்சொல் அப்பனே. நிச்சயம் பிள்ளையோனும் மகிழ்ந்து அனைத்தும் செய்வான் அப்பனே. ஞானத்தை அள்ளித் தருவான் என்பேன் அப்பனே. இன்னும் சிறப்பான வாழ்க்கை உண்டு.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அளித்த வாக்கு - சித்தன் அருள் 1668 - காசி மீர்காட் கங்கை கரை. விநாயகர் அகவல் பாடலில் உள்ள முழு அதி ரகசியம் அதனைத் தெரிந்து கொள்ள இந்த பதிவினை படியுங்கள்.
அடியவர்களுக்காக இட்ட விநாயகர் அகவல் பாடல் கானொளி ( YouTube link ) :-
https://youtu.be/tOvBaBg6Ih4
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
சித்தன் அருள் - 1764 - திதியில் செய்ய வேண்டியவை!
(# சங்கடஹர சதுர்த்தி ரகசியம் #) :-
“சங்கடஹர சதுர்த்தி அன்று அப்பனே பின் பிள்ளையோனுக்கு, நல்முறையாக 9 குடங்களில் நீர் நிரப்பி, அவனை குளிப்பாட்டினால் யோகங்கள் வரும் அப்பா.”
சங்கடஹர சதுர்த்தி அன்று ஆலயத்தில் அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையாருக்கு ஒன்பது குடங்கள் அல்லது ஒன்பது தீர்த்த சொம்புகளில் நீர் நிரப்பி 9 முறை விநாயகருக்கு அபிஷேகம் செய்து வர வேண்டும்... ஆலயங்களுக்குச் சென்று செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருக்கும் கணபதி சிலைக்குச் செய்து வரலாம். விநாயகப் பெருமானை இவ்வாறு அபிஷேகம் செய்தால் யோகங்கள் உங்களுக்கு வரும் என்று குருநாதர் வாக்கு.
அடியவர்கள் பயன்படுத்திக் கொள்க.
வாருங்கள் மீண்டும் வாக்கின் உள் செல்வோம். )
அடியவர் 4 :- ஐயா ஒரு கேள்வி கேட்கலாமா?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா கேளுங்க ஐயா. அவர் அருமையாக வந்து நிற்கின்றார் (நம் குருநாதர்).
அடியவர் 4 :- நான் ஏதாவது தவறு செய்கின்றேனா? ஏதும் திருத்திக் கொள்ள வேண்டுமா? அதனால் time waste ஆகுதுங்களா?
குருநாதர் :- அப்பனே எழுந்து எழுந்து உட்கார். பார்ப்போம்.
அடியவர் :- ( குரு நாதர் உரைத்தவாறு உடனே செயல்பட ஆரம்பித்தார்)
மற்றொரு அடியவர் :- ( சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்)
சுவடி ஓதும் மைந்தன் :- அவருக்கு வாக்கு போய்க் கொண்டிருக்கும் போது நீங்கள் கேட்கக் கூடாது அம்மா. உங்களுக்கும் குருநாதர் வாக்கு உரைப்பார்கள். (சற்று பொறுங்கள் தாயே!).
( சில மணித்துளிகள் அடியவர் #4 எழுந்து எழுந்து உட்கார்ந்து கொண்டே இருந்தார்கள். அதன் பின் இறைவன், குருநாதர் வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள்.)
குருநாதர் :- அப்பனே இப்பொழுது என்ன ஞாபகம் வருகின்றது?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இப்போது எழுந்து எழுந்து உட்கார்ந்தீர்களே, (அப்போது அந்த நேரத்தில்) என்ன ஞாபகம் வந்துள்ளது என்று கேட்கின்றார் ஐயா.
அடியவர் 4 :- சொல்லத் தெரியவில்லைங்க. இப்பதான் (எழுந்து எழுந்து உட்கார்ந்து ) முடித்தேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- எழுந்து எழுந்து உட்கார்ந்த அந்த நேரத்தில் என்ன ஞாபகம் வந்தது என்று சொல்லுங்கள் ஐயா.
அடியவர் 4 :- நீங்க சொன்னவற்றை follow பன்னேன்ங்க. ( எழுந்து எழுந்து உட்கார்ந்ததை).
குருநாதர் :- அப்பனே அதனால் பின் சொல்லியதைச் செய். மீதி எல்லாம் பார்த்துக்கொள்கின்றேன் யான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி உட்கார்ந்து எழுந்த போது ஏதாவது நினைத்தீர்கள் என்றால் நீங்க இங்க கேட்கலாம். அதேபோல் (நீங்கள்) போய்க்கொண்டே இருங்கள் என்று சொல்கின்றார் ஐயா. (உங்களை) நான் பார்த்துக்கொள்வேன் என்று கூறுகின்றார். அடுத்த கேள்வி ஐயா?
அடியவர் 4 :- தினமும் ஒரு நாளை எப்படி (கடக்க) pass பன்னவேண்டும் என்று தெரிந்தால் இந்த (மாதிரி) சிக்கல் வராது ஐயா.
குருநாதர் :- அப்பனே அதனால்தான் (இறை வழங்கும் கஷ்டங்கள், சோதனைகள் என்ற) அலைக்கழிப்புக்கள். இப்பொழுதே இவ்வாறு இருக்கின்றாய். மீண்டும் கொடுத்தால் தாங்க மாட்டாய் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா? ( அங்குள்ள மற்றொரு அடியவரைப் பார்த்து) ஐயா கொஞ்சம் explain பன்னுங்கய்யா.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- நான் சொல்வதை மட்டும் கேட்டு இதையே followபன்னுங்க என்று சொல்கின்றார் ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- (இன்னும்) கேளுங்கள் ஐயா.
அடியவர் 4:- ஒவ்வொருத்தரும் வளர்கின்ற குழந்தைகள் இருக்கின்றார்கள். இப்போ parents வந்து எல்லாமே தெரியிரதில்லை. இல்லைங்களா? அப்போ அவங்க இடத்தில் இருந்து guide பன்னுவது எப்படி?
குருநாதர் :- அப்பனே ஒரு குழந்தை எழுந்து நிற்கின்றது அப்பனே. நீதான் அப்பனே எழுந்து நிற்கச்சொன்னாயா என்ன?
அடியவர் 4 :- இல்லைங்க ஐயா.
குருநாதர் :- அப்பனே அடிபட்டு , வீழ்ந்து எழுந்து நின்றால்தான் அனைத்தும் தெரியும் அப்பனே. அதுபோலத்தான் அப்பனே. சில மனிதர்களை யாங்கள் விட்டுவிடுவோம் அப்பனே. பின் அடித்து , மனக்குழப்பம் எவ்வாறு என்பதையெல்லாம் அப்பனே, கடைசியில் வந்து நிற்பானப்பா எங்களிடத்தில் அப்பனே. ( உலகில் அனைத்தும் பட்டுத் தெரிந்து சித்தர்களிடம் வருவார்கள்.)
( சித்தர்களே, இறைவனே மனிதர்களின் அன்னை , தந்தை என்ற ரகசியம்)
அப்பொழுது தீவிரமாக தன் தாயவளைக் கூட பிடித்துக் கொண்டால் சிறிது சிறிதாகத் தூக்கி விடுவாள். அதே போலத்தான் யாங்களும்.
அதனால் கெட்டியாகப் பிடித்துக்கொள். ( அகத்தியன் ) என்னைப் பிடிக்க வில்லையென்றாலும், இறைவனைப் பிடித்துக்கொள்.
அப்பனே வாகனத்தை ஓட்டு. அப்பனே அவனை யான் கேட்கவில்லை.
அடியவர் 4 :- ( நான் வெளிப்படையாக என்ன வேண்டும் எனக்கு என்று கேட்டுவிட்டேன். ஆனால்) அவர் மனதில் பிரார்த்தனை செய்திருப்பார். வெளியில் சொன்னால்தானே தெரியும். இல்லையென்றால் அவர் மனதில் உள்ளதை நீங்கதான் புரிந்து கொள்ள முடியும்.
குருநாதர் :- அப்பனே அவன் பாடும் பாடு எந்தனுக்கு மட்டுமே புரியும் அப்பா. உந்தனுக்கு கூட புரியாதப்பா. அப்பனே உன்னைவிட பலமடங்கு ( அவன் தன் குழந்தைகளைப் பற்றி யோசிக்கின்றான்).
அடியவர் 4 :- அது நியாயமானது தானே ஐயா.
குருநாதர் வாக்கை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் :- உங்களுக்கு தேவை நடக்கவில்லை என்ற குறையை , நீங்கள் சொல்லிவிட்டீர்கள். ஆனால் அவர் உங்களைவிட அதிக பாசம் ( தன் குழந்தைகள் மேல் ) வைத்திருக்கின்றார். ஆனால் வெளியே சொல்ல முடியாத ஒரு கடுமையான மனநிலையில் இருக்கின்றார். அப்படி இருந்தும் (அகத்தியன்) என்னிடத்தில் கேட்கவில்லை என்று சொல்கின்றார் ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- சரியாக சொன்னீர்கள். இப்ப சொல்லுங்க ஐயா? ஏன் நீங்கள் கேட்டீர்கள்?
அடியவர் 4 :- ஐயா ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு நடைமுறை இருக்கும். நம்ம பழக்க வழக்கம்…
குருநாதர் :- அப்பனே அதேபோல்தான் அப்பனே. ஒரே மாதிரியாகத்தான் சாதம் இடுகின்றார்கள் இப்பொழுது.
அடியவர் 4 :- அது நம் கண்முன் தெரிவதுதானே. தினமும் செய்வதுதானே.
குருநாதர் :- அப்பனே இதே போலத்தான் அப்பனே. தினசரி பாவம் , புண்ணியம் செய்து கொண்டிருக்கின்றான் மனிதன்.
அடியவர் 4 :- சரிங்க.
குருநாதர் :- அப்பனே நீ கேட்டுவிட்டாய். அவந்தன் ஏன் கேட்கவில்லை கூறு?
(இப்போது அந்த அடியவர் தன் மனநிலையை எடுத்துரைக்க ஆரம்பித்தார்கள்)
அடியவர் 5 :- என்னால் ஒன்றும் இல்லை. என்னால் ஒன்றும் செய்ய இயலாது.
குருநாதர் :- அப்பனே (அடியவர்# 4) புரிகின்றதா?
சுவடி ஓதும் மைந்தன் :- நம்மால் ஒன்றும் செய்ய இயலாது ஐயா. ஆனாலும் உங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.
குருநாதர் :- அப்பனே ஆனாலும் அவன் கடமையைச் செய்கின்றான். ஆனால் (அவனால்) முடியவில்லையே. அப்பனே இன்னும் வளர்ந்தால் பிள்ளைகள் என்ன ஆகும் என்றெல்லாம் யோசிக்கின்றான் அவன்.
அடியவர் 4 :- ஆமாங்க ஐயா. நாள் மட மடன்னு போய்விடும். அந்த யோசனை இருந்தால்தான் அந்த இடத்துக்குப் போக முடியும்.
குருநாதர் :- அப்பனே இதுதான் அப்பனே? ஏன் யோசனை செய்கின்றான்? கூறு.
அடியவர் 4 :- அந்த காலத்துக்கு அது வேண்டும்.
குருநாதர் :- அப்பனே இங்கு இதை (காலத்தைப் பற்றி) கேட்க வில்லை யான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் ஐயா?
அடியவர் 4 :- ( அமைதி )
அடியவர் 5 :- அந்த வாகனத்தை ஒட்டுவதுதான் நம்ம வேலை. அது எங்க போகனும்? யார் எப்போ ஏறனும்? அதை அவங்க பாத்துக்குவாங்க. அந்த வாகனத்தை ஓட்டுவது மட்டும்தான் என் வேலை. அந்த வாகனத்துக்கு சொந்தக்காரன் நான் இல்லை. வாகனத்தில் உட்கார்ந்து இருக்கின்றவர்களுக்கு நான் ஒரு இடத்திற்கு ஓட்டிக்கொண்டு போக வேண்டும். அவ்வளவுதான். அனைத்தும் அகஸ்தியப் பெருமான் (பார்த்துக்கொள்வார்)
குருநாதர் :- அப்பனே ஆன்மா வேறு வேறு அப்பா. இதனால் அவ் ஆன்மா என்னென்ன தவறுகள் செய்திருக்கின்றது என்பதை எல்லாம், அப்பனே அதை பயன்படுத்தி , (வாகன) உடம்பைப் பெற்று அப்பனே தீர்த்துக்கொள்ளும் அப்பா.
அவ்வளவுதான். சொந்த பந்தங்கள் யார் என்று சொல்?
அடியவர் 4 :- சொந்த பந்தம் ஒன்னும் இல்லைங்க.
குருநாதர் :- அப்பனே அனைவருமே சொந்தம் அப்பனே. இதனால்தான் தான் பாசம் அதை யாங்கள் எதிர்கின்றோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )
அடியவர் :- புரியுது ஐயா. நம்ம சோசனை செய்யனும். செய்ய வேண்டியதைச் செய்யனும்.
குருநாதர் :- அப்பனே ஆனால் அவ்ஆன்மா என்ன செய்தது என்று உந்தனுக்குத் தெரியுமா அப்பா?
அடியவர் 4 :- தெரியாதுங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- தெரியாது. இதில்தான் பிரச்சினையே.
குருநாதர் :- அப்பனே அதனால்தான் அவன் சொன்னானே, அதோடு விட்டு விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் சொன்னார் பாருங்க. வாகனத்தை ஓட்டுவது நம்ம கடமை. உங்க பிள்ளைகளுக்கு இது போல் செய்யனும் என்று செல்லனும். வாகனத்தை ஒட்ட என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். பிரேக் பிடிக்க வேண்டிய இடத்தில் பிரேக் பிடிக்கனும். (வேகமூட்டும் கருவி) Accelerator என்றால் அதை இயக்க வேண்டும். Stearing பிடிக்க வேண்டும். ஓட்டும் போது Left , right பார்கனும். அதனால நீங்க நல்ல செய்திகளை அந்த ஆன்மாவுக்கு சொல்ல வேண்டும். ஐயா (குருநாதர்) அருமையாக explain செய்து உள்ளார். ஐயா புரியுதுங்களா? Superஆக வேற level எடுத்து வந்து விட்டார் அகத்தியர். இது மாதிரி சொல்லிக்கொடுக்கனும்.
குருநாதர் :- அப்பனே இப்படிச் சொல்லிக் கொடுத்தும், பின் வாகனத்தை இயக்கத் தெரியாததால் அப்பனே என்ன ஆகும்?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அந்த ஆன்மாவுக்கு (இந்த உடம்பு என்ற வாழ்க்கை) வாகனத்தை இயக்கச் சொல்லிக் கொடுத்து விடுகின்றோம். ஐயா புரியுதுங்களா? அப்படி சொல்லிக் கொடுத்தும், வாகனத்தைச் சரியாக இயக்கவில்லை என்றால் என்ன ஆகும்? என்று கேட்கின்றார்.
அடியவர் 4 :- இது அவங்க புரிஞ்சிக்கனும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ போய் சேர்ந்துவிடும்.
அடியவர் 4 :- (நாம் எடுத்துச் சொல்லி) அவங்க நடைமுறைப் படுத்தாத போது என்ன செய்வது?
குருநாதர் :- அப்பனே இதைச் சொல்லிவிட்டேன் அப்பனே. மீண்டும் சரி செய்து, அப்பனே நொறுக்கி, அப்பனே தூள் தூள் தூளாகி மீண்டும் (இறைவனிடம்) வந்துவிடும் என்பேன் வண்டி.
அப்பனே உன்னையும் இவ்வாறு இயக்க வைத்து அப்பனே நீயும் எதை என்று அறிய அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களை இவ்வாறு பேச இயக்கி வைத்தது கேள்வி கேட்க வைத்ததே நான்தான் என்று அகத்தியர் சொல்கின்றார் ஐயா.
அடியவர் :- நன்றாகச் சொல்லிக்கொடுத்தும் இடிக்கின்றது என்றால் என்ன அர்த்தம்?
குருநாதர் :- ஒழுங்காகக் கற்றுக்கொடுக்கவில்லை என்று அர்த்தம்.
அடியவர் :- அதை கவனக்குறைவு என்று எடுத்துக்கொள்வதா?
குருநாதர் :- அப்பனே மனிதன் மதுவும் அருந்துகின்றான். ஆனாலும் அவ்மதுவிலே எழுதுகின்றார்கள் மனிதர்கள். அதைக் கடைப் பிடிக்கின்றார்களா என்ன?
அடியவர்கள் :- மது வீட்டுக்கு கேடு.
குருநாதர் :- அப்பனே யாங்கள் சொல்லியும் நடந்து கொள்ளவில்லை என்றால் அப்பனே, மீண்டும் கல்லீரல் இன்னும் எதை எதையோ இழந்து மீண்டும் கடைசியில் எங்களிடத்திலேயே வருகின்றான் அப்பனே.
அடியவர் :- குழந்தைகளுக்கு (வாகனத்தை ஓட்டுவது எப்படி என்று activate) ஆக்டிவேட் செய்து ஆசி வழங்கி ஆக்டிவேட் செய்தால் நன்றாக இருக்கும்.
குருநாதர் :- அப்பனே ஆசிகள் பல கோடியப்பா. ஆனாலும் உபயோகிப்பதும் , உபயோகம் இல்லாததும் அவர்களிடத்திலே.
அப்பனே உன் பக்கத்தில் உள்ளவன் சரியாக உபயோகப்படுத்தி விட்டான் அப்பனே.
அடியவர் 4 :- நான் கேட்பது என்னவென்றால் அந்த மாதிரி மன நிலையில் இருக்கின்றார்கள். அப்படி மன நிலைக்குப் போகாமல் இருக்க (அகத்தியர்) அப்பாவுடைய அருள் ஆசியைக் கேட்கின்றேன். அதை பிரார்த்தனையாக கேட்கின்றேன்.
குருநாதர் :- அப்பனே இவ்வளவு நேரம் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களுக்கு அருமையாகச் சொல்கின்றார் அகத்தியர். இது மாதிரி (live) லைவில் எப்படி எல்லாம் சூப்பராக சொல்கின்றார் பாருங்கள்.
குருநாதர் :- அப்பனே அறிவிருந்தும் அறிவில்லையே அப்பனே.
அப்பனே அறிவில்லாமலும் அறிவிருந்தும். இதற்கு பதில் கூறும்?
சுவடி ஓதும் மைந்தன்:- இதற்கு யாராவது பதில் கூறுங்கள்.
அடியவர் 7:- அறிவு இருக்கு. ஆனால் அறிவில்லாமல் இருக்கின்றதற்கு காரணம் மாயையில் சிக்குவது.
அடியவர் :- புண்ணியம் இல்லாமல் இருப்பது.
சுவடி ஓதும் மைந்தன் :- (சுவடியை வாசித்து ..எதை என்று..) இது பதில் இல்லை.
அடியவர் 5:- இறைவன் படைப்பில் மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எதுவுமே , அறிவு இல்லை என்று மனிதன் சொல்லலாம். ஆனால் அது எதுவுமே அதன் பாதையிலிருந்து மாறுவதே கிடையாது.
குருநாதர் :- ஆனால் இதில்தான் பாவம் சேருகின்றது. புரிந்து கொண்டீர்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- (மனிதன்) தன் பாதையிலிருந்து மாறிவிட்டால்தான் பாவம் சேர்கின்றது.
குருநாதர் :- அப்பனே குரங்கு புத்தியைப் பார். ஆனால் குரங்கு என்று சொல்லக்கூடாது. அனுமான் என்றே சொல்ல வேண்டும். காகத்தின் அப்பனே காகம் என்று சொல்லக்கூடாது. புசண்டனே என்றே சொல்ல வேண்டும். அதன் வேலையைக் கூட சரியாக செய்கின்றது என்பேன் அப்பனே. ஆனால் மனிதன் செய்யவில்லையே!
தவறவிடாதீர்கள் - இன்னும் 10 நாட்களே உள்ளன - பாபநாசத்தில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை! - 27.07.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/10-27072025.html
அனைவருக்கும் பகிருங்கள் - பாபநாசத்தில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை! - 27.07.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/27072025_18.html
சித்தன் அருள் - 1899 - அன்புடன் அகத்தியர் - பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2025/07/1899.html
அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_12.html
அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025.html
குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html
குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html
குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html
சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html
தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html
திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html
சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html
சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html
சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html
சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html
சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html
அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html
மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html
No comments:
Post a Comment