இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025:-
https://siththanarul.blogspot.com/2025/06/1884.html
வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள்(July 2025 - Jan 2026) :-
ராகு கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனால் நிச்சயம் அழிவுகள். அது மட்டும் இல்லாமல் சண்டைகள், அது மட்டும் இல்லாமல் மனது தீயவழியில் செல்லும். ராகு கிரகம் பூமியை நெருங்கி விட்டால் அதில் இருந்து ஒரு விசை நிச்சயம் வரும். அவ் விசையானது புகை வடிவில் இருந்து பின் அது அனைவரின் கண்களுக்கு தெரியாது. நிச்சயம் மனிதனை அவ்விசை நெருங்க மனிதன் பின் உடனடியாக இறந்து விடுவான். இன்னும் அழிவுகள் தான் அதிகம் என்பேன்.
வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.
ராகுவானவன் ராகு கிரகம் அதாவது பூமியை ஒரு பக்கம் நெருங்கும் போது இன்னொரு பக்கம் கேது பகவானும் நெருங்குகின்றது. இதனால் அனைவருக்கும் மனக்குழப்பங்கள் அதிகமாகும். இதனால் இறை நம்பிக்கை குறைவாகும். ராகு கேது பூமியை விட மிகப்பெரிய கிரகங்கள் இவை பூமியை நெருங்கும் போது அப்படியே நின்று விடும்.
சித்திரை மாதத்தில் இருந்து ராகு கிரகம் வேகம் எடுத்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. சூரிய வட்டத்தில் இருந்து மற்ற கிரகங்களும் கூட சுழல்கின்ற பொழுது ராகுவும் கேதுவும் வேகமாக வருகின்ற பொழுது கிரகங்கள் சுழற்சியில் ஏதாவது ஒன்றில் உராய்ந்து விட்டால் அதாவது மோதி விட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்.
கிரகங்கள் மாறுபட்டு அவை இதன் சுழற்சி வட்டத்தில் சரியாக சுழலாமல் இடித்துக் கொண்டு இடித்துக் கொண்டு , இப்படி எடுத்துக் கொண்டு செல்கின்ற பொழுது மிகப்பெரிய ஒரு சக்தி அதி வேகமாக பூமியை அதாவது மனிதர்கள் எங்கு எங்கு கூட்டமாக இருக்கின்றார்களோ, அங்கு வந்து தாக்கி விடும் அப்பா அவ் சக்தி. இதனால் கும்பல் கும்பலாகவே மக்கள் இறப்பார்கள்.
இதை ஏற்கனவே தெரிவித்து விட்டேன் முன்பே. கிரகங்கள் இவ்வாறு வேகமாக ஈர்த்து கொண்டு வருகின்ற பொழுது நட்சத்திரங்களும் பலமிழந்து விழுந்து பூமியை தாக்கும் இதனால் பூமியில் வெடி வெடிக்கும் அதாவது எரி கற்கள் தீ பிழம்புகள் பூமியை தாக்கும்.
ஒரு பக்கத்தில் இருந்து ராகுவும், மற்றொரு பக்கத்திலிருந்து கேதுவும் பூமியை தாக்க வேகமாக, இவை இரண்டும் இரண்டு பக்கத்தில் இருந்து தாக்கினால் என்னவாகும்?
இதனால் உலகத்தை காக்க வேண்டும்.உங்களுடைய சிறு சிறு பிரச்சனைகளை விட இவை பெரியது.
அதை எவ்வாறு நிறுத்த வேண்டும்?
இதனால்தான் நவ கிரக தீபத்தை மற்றவர்களுக்காக ஏற்ற சொன்னேன் அப்பனே. (இடை விடாமல் என் பக்தர்கள் அனைவரும் ) அதை ஏற்றி வர வேண்டும். அப்பனே இதனால் அழிவுகளில் இருந்து மற்றவர்களை காக்க முடியும்.
1) அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவபுராணத்தை பாடுதல் வேண்டும்.மக்கள் அனைவரும் 50 /100 / 200 / 500 /1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும்.பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி இவ் சிவபுராணம் பாடல் என்பேன் அப்பனே. கோளாறு பதிகம், தேவாரம், திருவாசகம், விநாயகர் அகவல் படிக்க வேண்டும்.
2) நவகிரக தீபம் நவ கிரக காயத்ரி மந்திரம் ஓதி வழிபாடு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டி, வணங்கி, சுயநலமாக இல்லாமல் பிரார்த்தனை செய்தல் வேண்டும்.
3) ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விசை உண்டு. பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால் தியானங்கள் செய்தால் மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும். அடுத்து திருவண்ணாமலையில் ( ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடி தியானங்கள்) செய்ய வேண்டும்.
4) கடல் அலைகள் நிச்சயம் ராகுவானவன் பூமியை நெருங்குகின்ற பொழுது, நிச்சயம் ராகுவானவன் எவ்வளவு வேகத்தில் பூமியை நெருங்குகின்றானோ, அவ்வளவு வேகத்தில் கடல் நீரும் ஊருக்குள் நுழைந்து விடும். இதை தடுக்க உண்மையான நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம் பாடிக்கொண்டே இருங்கள். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!. நதிக்கரையோரம் இருப்பவர்கள், கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து, சிவபுராணம் படித்து வரவேண்டும்.
5)அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்கு சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களை பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும். இதன் பலன் என்னவென்று யான் பிறகு தெரிவிப்பேன். நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் இதை செய்து வர வேண்டும். ஆனி ஆடி மாதத்தில் அபிராமி அந்தாதி ஓதுபவர்கள் சிறப்பு மிக்கவர்கள் புண்ணிய சாலிகள் என்பேன்.
உங்களுக்காக நான் போராடுகின்றேன் மற்றவர்களுக்காக நீங்கள் போராடுங்கள் என்பேன் அவ்வளவுதான் அப்பனே.
உங்களுக்காக சுயநலமாக வாழ கூடாது மற்றவர்களுக்காக வாழ வேண்டும்.
நாங்கள் சொல்வதை பயன்படுத்தினால் நீங்கள் எங்கள் பிள்ளைகள்.
அதை விட்டுவிட்டு சுயநலமாக வாழ்ந்தால் நாங்கள் உங்களுக்கு ஒன்றுமே செய்ய மாட்டோம்.
வாக்குகளை மக்களுக்கு அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவை என் பக்தர்களுக்கு இவை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அனைவருக்கும் ஆசிகள்!!!!
அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025.html
குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html
குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html
குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html
சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html
தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html
திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html
சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html
சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html
சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html
சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html
சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html
அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html
மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html
No comments:
Post a Comment