22/6/2025 மற்றும் 23/6/2025... இவ் இரு
நாட்களில் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்திய பெருமான்
திருவருளால்... மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீலோபாமுத்திரை தாயார்
சமேத அகத்திய பெருமான் சன்னதியில் சத்சங்கம் நடந்தது.
அகத்திய
ஜீவநாடி சுவடி ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சுவடியில் வாக்குகள்
படித்து குருநாதர் பொதுமக்களுக்கு வாக்குகள் நல்கினார்
குருநாதர்
கூறிய வாக்குகளில் மக்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் மக்கள்
என்ன செய்ய வேண்டும்? என்பதை அவசர உத்தரவாக அனைவருக்கும் தெரியப்படுத்த
சில முக்கிய விஷயங்களை கூறினார்.
அதற்கு முன்பாக குருநாதர் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அவசர உத்தரவாக தெரியப்படுத்துகின்றோம்.
உலகம் அப்பனே அழிவு நிலைக்குத் தான் சென்று கொண்டிருக்கின்றது அப்பனே
அவ் அழிவு நிலையில் இருந்து உங்களால் காப்பாற்ற முடியும் அப்பா
நவ
கோள்களின் விசையும் புவியின் விசையும் சமமாக இருக்க வேண்டும். அப்படி
சமமாக இல்லை என்றால் பலமாக வேகத்தில் வந்து கிரகங்களிலிருந்து ஒலிகள்
வேகமாக வந்து பூமியின் மீது மோதும் போது அழிவுகள் திடீர் திடீரென்று வரும்
பல மனிதர்களும் இறந்து விடுகின்றார்கள்.
ராகு கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது
இதனால் நிச்சயம் அழிவுகள்.. அது மட்டும் இல்லாமல் சண்டைகள் அது மட்டும் இல்லாமல் மனது தீயவழியில் செல்லும்..
அதை எவ்வாறு நிறுத்த வேண்டும்????
நீங்கள் எல்லாம் நரகத்தில் இருக்கிறீர்கள் உங்களை எல்லாம் மீட்டெடுக்கத்தான் சித்தர்கள் நாங்கள் வந்திருக்கின்றோம்.
ராகு
கிரகம் பூமியை நெருங்கி விட்டால் அதில் இருந்து ஒரு விசை நிச்சயம் வரும்
அவ் விசையானது புகை வடிவில் இருந்து பின்... அது அனைவரின் கண்களுக்கு
தெரியாது நிச்சயம் மனிதனை அவ்விசை நெருங்க மனிதன் பின் உடனடியாக இறந்து
விடுவான்.
அதிலிருந்து உங்களை நாங்கள் காக்க வேண்டும்.
இன்னும்
அழிவுகள் தான் அதிகம் என்பேன் அப்பனே இதனால் அனைவரும் சேர்ந்து நிச்சயம்
கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் சிவபுராணத்தை பாடுதல் வேண்டும்.
நவகிரக
தீபம் நவ கிரக காயத்ரி மந்திரம் ஓதி வழிபாடு மற்றவர்களுக்காக இந்த உலகம்
நன்மை பெற வேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டி வணங்கி சுயநலமாக
இல்லாமல் பிரார்த்தனை செய்தல் வேண்டும்.
கோளாறு பதிகம் தேவாரம் திருவாசகம் படிக்க வேண்டும்.
மக்கள் அனைவரும் 50 100 200 500 1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இதனால்தான்
நவ கிரக தீபத்தை மற்றவர்களுக்காக ஏற்ற சொன்னேன் அப்பனே அதை ஏற்றி வர
வேண்டும் அப்பனே இதனால் அழிவுகளில் இருந்து மற்றவர்களை காக்க முடியும்.
நவகிரக
நவதானிய தீபங்கள் ஏற்றும் முறை குறித்து குருநாதர் கூறிய வாக்கு அன்புடன்
அகத்தியர் சித்தன் அருள் 1726.. பெங்களூரு சத்சங்கத்தில் குருநாதர்
விளக்கமாக கூறியிருக்கின்றார் மீண்டும் அதை படித்து நவகிரக தீபம் ஏற்றுவது
எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வரும் ஆறு
ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள் ஆயிரக்கணக்கான மக்கள்
இறப்பார்கள்.. இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அழிவை
தடுத்து நிறுத்த வேண்டும்.
பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி
இவ் சிவபுராணம் பாடல் என்பேன் அப்பனே.
இப்
பாடலை அனைவரும் ஒன்று சேர்ந்து இறைவனை வேண்டி பாடும் பொழுது உங்கள்
உடம்பில் பல துகள்கள் நுண்ணிய துகள்கள் பதிக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக
மக்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்யும் பொழுது
சிவபுராணம் பாடும் பொழுது உங்கள் வாய் வழியாக மேல் நோக்கி சென்று.. உங்கள்
எண்ணங்கள் இந்த நேர்மையாக இருந்து இந்த பாடலை பாடும் பொழுது இந்த பாடலின்
அலைவரிசை மேல் நோக்கி சென்று கிரகங்களில் விசையோடு மோதி சில கிரகங்களின்
தாக்கும் சக்தியை கட்டுப்படுத்தும்.
அனைவரும்
ஒன்றாக நிச்சயமாக இப்படி தியானங்கள் செய்ய வேண்டும் நிச்சயம் அனைவரும்
உடம்பில் இருக்கும் ஒளி மேல் நோக்கி சென்று கிரகங்களின் காந்த அலைகள்
கீழ்நோக்கி வருகின்ற பொழுது உங்கள் தியானத்தின் ஒளி அவை கீழே வரவிடாமல்
அப்படியே தடுத்து நிறுத்தி விடும்.
ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விசை உண்டு...
பாவத்தை
நசுக்கும் பாபநாசத்தில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை
சிவபுராணம் பாடினால் தியானங்கள் செய்தால் மக்களுக்கு நடக்கும் அழிவுகள்
குறைக்கப்படும்.
அடுத்து திருவண்ணாமலையில் செய்ய வேண்டும்.
கடல்
அலைகள் நிச்சயம் ராகுவானவன் பூமியை நெருங்குகின்ற பொழுது நிச்சயம்..
ராகுவானவன் எவ்வளவு வேகத்தில் பூமியை நெருங்குகின்றானோ அவ்வளவு வேகத்தில்
கடல் நீரும் ஊருக்குள் நுழைந்து விடும்.இதை தடுக்க உண்மையான நதிகள்
இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம்
பாடிக்கொண்டே இருங்கள்.
நீரால் ஏற்படும் அழிவை
இப்படி தடுக்க வேண்டும்!!... நதிக்கரையோரம் இருப்பவர்கள் கடலோரம்
இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து சிவபுராணம்
படித்து வரவேண்டும்.
உங்களுக்காக நான் போராடுகின்றேன் மற்றவர்களுக்காக நீங்கள் போராடுங்கள் என்பேன் அவ்வளவுதான் அப்பனே.
அனைவரும்
ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்கு சென்று அபிராமி அந்தாதி
அம்பாளின் பாடல்களை பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும்.
இதன் பலன் என்னவென்று யார் பிறகு தெரிவிப்பேன். நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் இதை செய்து வர வேண்டும்.
ஆனி ஆடி மாதத்தில் அபிராமி அந்தாதி ஓதுபவர்கள் சிறப்பு மிக்கவர்கள் புண்ணிய சாலிகள் என்பேன்.
அனுதினமும்
இரவில் உறக்கத்திற்கு முன்பு குடிநீரில் ஒரு பாத்திரத்தில் துளசி இலைகள்
வேப்பிலைகள் அருகம்புல் வில்வ இலை சிறிதளவு சுத்தமான பசுஞ்சாணம் மற்றும்
ருத்ராட்சம் இவற்றையெல்லாம் இந்த ஆறு பொருளையும் குடிக்கும் நீரில்
போட்டுவைத்து இரவு முழுவதும் ஊற விட்டு அதிகாலையில் வெறும் வயிற்றில்
அனைவரும் குடித்து வருதல் வேண்டும்.
நிச்சயம்
இதை செய்வதன் மூலம் இறை ஆற்றல்கள் கிடைக்கும். அனைவருக்கும் ஆற்றலை தர
வேண்டும் இந்த ஆற்றலை தந்தால் தான் உங்களுக்கெல்லாம் புத்துணர்ச்சி
தோன்றும் இறைவனுடைய ஆற்றலோடு இவை சமமாகின்ற பொழுது உங்களுக்கு வெற்றிகள்
கிடைக்கும்.. இதை அனைவரும் நிச்சயம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
சில
மக்களுக்கு ஒன்றுமே நடப்பதில்லை எவ்வளவு பிரார்த்தனைகள் செய்தாலும்
ஏனென்றால் இறைவனுடைய ஆற்றல் மிகப்பெரியது இறைவனுடைய ஆற்றல் சிறிதளவாவது
உங்களிடம் இருந்தால் தான் உங்களுக்கு அனைத்தும் நடக்கும் இறைவனுடைய ஆற்றலை
பெறுவதற்கு குருநாதர் கூறிய இந்த வழிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
அதிகாலையில் கணபதியை நினைத்து ஓம் கங் கணபதியே நம!!
என விளக்கேற்றி வழிபாடு செய்து வைத்து அருகம்புல்லை உண்டு வருதல் வேண்டும். அருகம்புல் சாறு ஆகவும் குடிக்கலாம்
ராகுவானவன்
ராகு கிரகம் அதாவது பூமியை ஒரு பக்கம் நெருங்கும் போது இன்னொரு பக்கம்
கேது பகவானும் நெருங்குகின்றது.. இதனால் அனைவருக்கும் மனக்குழப்பங்கள்
அதிகமாகும்.. இதனால் இறை நம்பிக்கை குறைவாகும்...
ராகு கேது பூமியை விட மிகப்பெரிய கிரகங்கள் இவை பூமியை நெருங்கும் போது அப்படியே நின்று விடும்.
சித்திரை
மாதத்தில் இருந்து ராகு கிரகம் வேகம் எடுத்து பூமியை நோக்கி வந்து
கொண்டிருக்கிறது.. சூரிய வட்டத்தில் இருந்து மற்ற கிரகங்களும் கூட
சுழல்கின்ற பொழுது ராகுவும் கேதுவும் வேகமாக வருகின்ற பொழுது கிரகங்கள்
சுழற்சியில் ஏதாவது ஒன்றில் உராய்ந்து விட்டால் அதாவது மோதி விட்டால் கடும்
விளைவுகள் ஏற்படும்.
ஒரு பக்கத்தில் இருந்து
ராகுவும் மற்றொரு பக்கத்திலிருந்து கேதுவும் பூமியை தாக்க வேகமாக.. இவை
இரண்டும் இரண்டு பக்கத்தில் இருந்து தாக்கினால் என்னவாகும்?
இதனால் உலகத்தை காக்க வேண்டும்... உங்களுடைய சிறு சிறு பிரச்சனைகளை விட இவை பெரியது...
கிரகங்கள்
மாறுபட்டு அவை இதன் சுழற்சி வட்டத்தில் சரியாக சுழலாமல் இடித்துக் கொண்டு
இடித்துக் கொண்டு.. இப்படி எடுத்துக் கொண்டு செல்கின்ற பொழுது மிகப்பெரிய
ஒரு சக்தி அதி வேகமாக பூமியை அதாவது மனிதர்கள் எங்கு எங்கு கூட்டமாக
இருக்கின்றார்களோ அங்கு வந்து தாக்கி விடும் அப்பா அவ் சக்தி.
இதனால் கும்பல் கும்பலாகவே மக்கள் இறப்பார்கள். இதை ஏற்கனவே தெரிவித்து விட்டேன் முன்பே.
கிரகங்களின்
கதிர்வீச்சுக்கள் வேறு அப்பா உங்கள்... அதாவது மாமிசம் உண்ணும் அனைவரையும்
அவ்வொளியானது வந்து எளிதில் தாக்கும் அப்பா கும்பல் கும்பலாகவே இறந்து
விடுவார்கள். இதனால்தான் அப்பனே மாமிசத்தை உண்ணாதீர்கள் உண்ணாதீர்கள்
என்றெல்லாம் ஜீவகாருண்யத்தை கடைப்பிடியுங்கள் என்றெல்லாம் வாக்குகளில்
தெரிவித்துக் கொண்டு வருகின்றேன்.
தேவலோகத்தில்
இருந்து புவிக்கு குள்ளர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள்.. பூமி அழியப்
போகின்றது காப்பாற்றுவோம் என்று மறைமுகமாகவே வந்து கொண்டிருக்கின்றார்கள்..
அவர்களும் உங்களை தானாகவே காப்பாற்றுவார்கள். அவர்களெல்லாம் தேவதூதர்கள்.
சித்திரக்குள்ளர்கள் வேற்று கிரக மனிதர்கள் இவர்களைப் பற்றி ஏற்கனவே குருநாதர் அம்பாஜி ஆலய வாக்கில் தெரிவித்திருக்கின்றார்
இவை என் பக்தர்களுக்கு இவை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பேன் அப்பனே.
உங்களைக் காப்பாற்ற தேவ தூதர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள்
ஏன் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால்... உலகம் அழிவு நிலைக்கு சென்று
கொண்டிருக்கின்றது அழிவில் இருந்து காப்பாற்ற அவர்கள் குள்ளர்கள்
வருவார்கள் கவலைகள் இல்லை.
உங்களுக்காக சுயநலமாக வாழ கூடாது மற்றவர்களுக்காக வாழ வேண்டும்.
தேவதூதர்கள் வந்து கொண்டிருக்க பின் நிச்சயம் கவலையை மாற்றுவார்கள்.
கிரகங்களை
தடுத்து நிறுத்த அவர்களால் முடியும். அழிவுகளை நிறுத்த அவர்கள் வருவார்கள்
கோடிக்கணக்கான அளவில் குள்ளர்கள் தேவ தூதர்கள் வருவார்கள் அழிவை
நிறுத்த... அப்பொழுதுதான் நிச்சயம் அழிவிலிருந்து காப்பாற்றுவார்கள்.
கிரகங்கள்
வருகின்ற வேகத்திற்கு இவர்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து ராகு கேதுவின்
மற்றும் கிரகங்களின் தாக்கங்களை தள்ளிக் கொண்டு தள்ளிக் கொண்டு... இதனால்
சில மாதங்களில் கிரகங்களின் வேகத்தை நிறுத்தி மீண்டும் அவற்றின் சுற்றுவட்ட
பாதைக்கு அனுப்பி விடுவார்கள்.
நீங்கள் கேட்டுக் கொண்டு அவர்கள் வரவில்லை அவர்கள் உங்களை காப்பாற்ற வருகின்றார்கள்.
இறைவன்
படைத்த உயிர்களைக் கொன்று தின்கின்றார்களே என்று அவர்கள்
வருத்தப்பட்டாலும் உங்களுக்காக அவர்கள் இறங்கி வருகின்றார்கள்
காப்பாற்றுவதற்கு.
அனைவரும் மாமிசம் உண்ணுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் அப்படி நிறுத்தாவிட்டால் பல அழிவுகள் காத்திருக்கின்றன.
No comments:
Post a Comment