இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து இன்றைய பதிவில் சந்திக்கின்றோம் . வழக்கம் போல் நம் தளத்தின் சேவைகள் மருத்துவ உதவி , தீப எண்ணெய் சேவை , அன்னசேவை , கூடுவாஞ்சேரி அகத்தியர் வழிபாடு என தொடர்ந்து வருகின்றோம் . இம்மாதம் சிவராத்திரி வழிபாடாக நம் குருநாதர் கூறிய வழியில் சித்தன் அருள் - 1181 - அன்புடன் அகத்தியர் - சப்தரிஷி கோவில்கள்! யாத்திரை அமைந்தது . இந்த வழிபாட்டில் வில்வம், இலுப்பெண்ணெய் கொடுக்க பணிக்கப்பட்டோம். வழக்கம் போல் பொருளுதவி , அருளுதவி செய்து வரும் அனைவரின் பொற்பாதத்தை தொட்டு வணங்கி , நன்றி கூறி மகிழ்கின்றோம்.ஒவ்வொரு நாளும் நம் குருநாதர் நம்மை வழிநடத்தி வருவதில் மகிழ்ச்சி அடைகின்றோம் .
நம் குருநாதர் கூறி வரும் வாக்கினை நம் தளத்தில் பகிர்ந்து வருகின்றோம் . பல்வேறு வாக்குகளில் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் நமக்கு பல்வேறு விதமாக வழிநடத்தி வருகின்றார் . குருநாதர் அகத்தியர் பெருமானின் வேகத்திற்கு நம்மால் செயலாற்ற இயலவில்லை என்பதே உண்மை . பெங்களூரு சத்சங்கத்தில் நவகிரக தீப வழிபாடு , கோவை சத்சங்கத்தில் சிவபுராணம், கோளறு பதிகம் பாராயணம் என கூறியுள்ளார் , இது மட்டுமின்றி தினசரி சேவையாக ஜீவராசிகளுக்கு உணவு என நம் சேவைகள் தொடங்க வேண்டும் . இது மட்டுமின்றி நம் குருநாதர் கூறிய ஆலய தரிசனங்களாக சப்தரிஷி கோவில்கள்!, வன்னிவேடு அகத்தியர் கோயில் , கோவை மருதமலை அகத்தியர் கோயில் , மதுரை பசுமலை அகத்தியர் கோயில் என சொல்லலாம் . இவை அனைத்தும் நாம் இங்கே தொட்டுக்காட்ட விரும்புகின்றோம் .
இவ்வாறான பயணத்தில் நாம் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் உள்ளிட்ட சித்தர் பெருமக்கள் கூறி வரும் வாக்குகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் . மேம்போக்காக படித்து நாம் பரிகாரம் என்ற நிலையில் வாக்கினை படிக்க கூடாது . குருவின் வாக்கினை வேதமாக கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு திருக்குறளை எடுத்துக் கொள்ளுங்கள் . உலகப் பொதுமறையாக திருக்குறள் அன்றும் , இன்றும் , என்றும் விளங்குகின்றது. திருவள்ளுவரின் குருவாக நம் அகத்தியர் பெருமான் இருக்கின்றார்கள். அப்படியாயின் சீடனாக உள்ள திருவள்ளுவர் பெருந்தகைக்கு இவ்வளவு பெருமை என்றால் நம் குருவின் பெருமையை நாம் வியந்து ,கொண்டாடி போற்ற வேண்டும் அல்லவா! ஆனால் குருநாதர் அகத்தியர் கூறிய வண்ணம் , சுவடிகள் அனைத்தும் நாடு கடத்தப்பட்டு , அழிக்கப்பட்டு விட்டது . தற்போது தான் இவை அனைத்தும் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது . இதனால் நாம் நம் குருநாதர் அகத்தியர் பெருமானின் வாக்கினை நம் வாழ்க்கையாக கொள்ள வேண்டும் .
இதற்கு நாம் வாக்கினை நன்கு உள்வாங்க வேண்டும் . அப்பொழுது தான் நாம் நம் செயல்களை திருத்திக்கொள்ள முடியும் . இதற்கு குருநாதரின் வாக்கினை குறைந்தது மூன்று முறை படிக்க வேண்டும் . படித்ததை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும் . இப்படி சிந்திக்கும் போது தான் நம்மால் குருவின் வாக்கினை நன்கு உள்வாங்க முடியும். அப்பொழுது தான் நம் குருநாதரின் அருளை உணர முடியும் . இதனை நன்கு உணர கீழ்க்கண்ட வாக்கினை காண்போம் .
அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 11 இல் குருநாதர் அகத்தியர் பெருமான் அகத்தியர் அடியார் கேட்ட கேள்விக்கு உரைத்த பதிலே இன்றைய பதிவின் சாரம் ஆகும் .அன்றைய 04.09.2023 வாக்கிலிருந்து குருநாதர் அகத்தியன் என்று உரைக்க சொல்லி உள்ளார்கள் . அதனை அனைவரும் புரிந்து கொள்ளும்படி வேண்டி பணிகின்றோம் . தற்போது நடைபெற்ற பெங்களூர் சத்சங்கத்திலும் அகத்தியன் என்று சொன்னாலே போதும் என்று நம் குருநாதர் உரைத்துள்ளார்கள் .
இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம்
ஓம் குரு மொழியே வேதம் வேதம்
ஓம் குரு விழியே தீபம் தீபம்
ஓம் குரு பதமே காப்பு காப்பு
அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 11
கந்தவடிவேலன், முருகப்பெருமான் 9/7/2024 அன்று உரைத்த வாக்கில் உள்ள பொது வாக்கு:-
(கந்த வடிவேலன் :-) இன்னும் நிச்சயம் அகத்தியன் தன் பெயரை எங்கெங்கு அழைத்துச் செல்ல எப்படி எங்கெல்லாம் பின் எங்கெல்லாம் அகத்தியன் அதாவது
“”””””””வருங்காலத்தில் அகத்தியன் என்ற பின் சொன்னாலே பாவம் போகும் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அதனையும் ஏற்படுத்துவான் அகத்தியன்.””””””
நிச்சயம் பின் அன்பு , கருணை இவ்வுலகத்தில் நிச்சயம் தடுமாறும் பொழுது நிச்சயம்
“”””””அகத்தியனுக்குப் பெயர் பின் கருணை வடிவானவனே.””””””
( நம் பூமி சுற்றல் வேகம் குறைந்துள்ளது - அதன் விஞ்ஞான ரகசியங்கள், விளைவுகள் )
அறிந்தும் உண்மைதனைக்கூட ஏன் எதற்கு இவ்வுலகம் நிச்சயம் அழிவு நிலை. அறிந்தும் அறிந்தும் இன்னும் சுற்றுகின்றது. யானும் சிறிதளவு இங்கு அகத்தியன் சொல்கின்றான் என்று யானும் சொல்கின்றேன்.
பொறாமை இல்லாமை காமம் இல்லாமை பின் யான் பெரியவன் அவன் சிறியவன் என்றெல்லாம் நிச்சயம் வந்தால் அப்பா இப்பொழுது சொல்கிறேன். அடியோடு அடிவாரத்துக்கே போய் விடுவாய் அப்பா இதை யான் சொல்லவில்லை.அப்பா பின் அகத்தியனை அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய!!!!
அகத்தியன் என்று சொன்னாலே சக்தி கிடைக்குமப்பா அறிந்தும் அறிந்தும் கூட. !!!
அவ் சக்தியை அப்பனே தவறாக தவறான பாதைக்கு பின் அழைத்துச் செல்வதற்கு அப்பனே அவ் சக்தி அப்பனே இன்னும் அமுக்கும் அப்பா கீழே!!!
1.நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் கலியுகத்தில் உலகத்தையும் மனிதர்களையும் காக்க வந்த அதி ரகசியம்
2. சபரிமலை சுவாமி ஐயப்பன் ஜீவசமாதி ரகசியம்
11.கலியுகத்தை வெல்லும் ரகசியம்
இந்த வாக்கினை சித்தன் அருள் வலைத்தளத்தில் காணலாம் . ஆனால் பொதுவாக படித்தால் நமக்கு ஒன்றும் புரியாது . குறைந்தது மூன்று முறை படிக்கும் போது , நாம் மேலே சொன்னது போன்று வாக்கினை பிரித்து உணர்ந்து , வாக்கின் சாராம்சம் உணரலாம் . மேலே சொன்ன வாக்கு எது என்று சொல்லும் அடியார்களுக்கும் சிறப்பு பரிசு உண்டு . ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்..விரைவில் படித்து உணர , குருவிடம் வேண்டி பணிகின்றோம் .
குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html
சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html
தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html
திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html
சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html
சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html
சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html
சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html
சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html
அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html
மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html
No comments:
Post a Comment