இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து சித்தன் அருள் - 1612 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் என்பதற்கிணங்க , இந்த வாக்கினை குறைந்தது மூன்று முறை படித்து, நாம் ஆரோக்கிய இருப்பதற்கான வழிகளை பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகின்றோம் . இன்றைய பதிவில் சித்தர்களின் மூலிகை குடிநீர் ரகசியம் பற்றி குருநாதர் அகத்தியர் பெருமான் நமக்கு உணர்த்தியுள்ளார் . வழக்கம் போல் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கு நன்றி கூறி , பதிவினில் செல்வோம் .
சூரத் சத்சங்கம் பாகம் 5
ஐயனே!!!!!! நாங்கள் இன்றைய காலகட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று குடித்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் அந்த நீரில் சத்துக்கள் என்று எதுவும் இல்லை !!!! உடலுக்கு தேவையான சக்திகளை குடிநீரில் இருந்து நாங்கள் எப்படி பெற வேண்டும் வழிகாட்டுங்கள்!!!
எப்பொழுதும் அப்பனே நீரில் எதை என்றும் அறிய அறிய சில மூலிகைகள் இருக்கின்றது என்பேன்
(வில்வ இலை துளசி இலை அருகம்புல்) குருநாதர் ஏற்கனவே இவ் மூலிகைகளை நீரில் இட்டு பயன்படுத்தி வர கூறியிருந்தார்.
அப்பனே அதை பயன்படுத்திக் கொண்டு தான் வருகின்றார்கள் என்பேன் அப்பனே அதை பற்றி யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!
(காசியில் சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1155 பதிவில் நீரில் மூலிகைகள் பற்றி குருநாதர் கூறியிருக்கின்றார்)
இதனால் அப்பனே பின் அதாவது எதை என்றும் அறிய அறிய சில சில மூலிகைகள் அப்பனே எவை என்று அறிய அறிய நீரில் இட்டு வை எப்பொழுதும் கூட !!!
அப்பனே நன்னாரி வேர் நெல்லிக்கனி அப்பனே பின் எலுமிச்சை எதை என்றும் அறிய அறிய இதை எப்பொழுதும் நீரில் இட்டு வர நன்று என்பேன் அப்பனே அதனால் அப்பனே சில நன் முறைகளாகவே இன்னும் இன்னும் அப்பனே இருக்கின்றது என்பேன் அப்பனே அதை உணவிலே அனுதினமும் சேர்த்துக் கொண்டுதான் வருகின்றார்கள் அப்பனே
(மிளகு சீரகம் சுக்கு அதிமதுரம் கொத்தமல்லி புதினா)
அவையெல்லாம் கூட அப்பனே இட்டு இட்டு அப்பனே எதை என்று அறிய அறிய அருந்தி வந்தாலே போதுமானது அப்பா நிச்சயம் மாற்றம் அடைந்து விடும் அப்பனே பின் உடம்பில் ஒரு குறையும் வராதப்பா சொல்லிவிட்டேன்!!!
ஐயனே எலுமிச்சை நெல்லிக்காய் துண்டாக அரிந்து நீரில் விடலாமா???
அப்பனே எதை என்று அறிய அறிய நீரில் அப்படியே விட்டுவிடுங்கள் ஊறட்டும்!!! எலுமிச்சையையும் நெல்லிக்கனியையும் முழுமையாக இட்டு நீரில் அப்படியே ஊறட்டும் அப்பனே
நீரில் நல்முறையாக அப்படியே ஊறிக் கொண்டே இருக்கட்டும் நீரை மட்டும் நீங்கள் அருந்தி வாருங்கள் அப்பனே!!! உடலுக்கு சக்தியைக் கூட்டும் அப்பனே!! நன் முறைகளாகவே அப்பனே!!!!!
(நாம் அனுதினமும் குடிக்கும் நேரில் எலுமிச்சை நெல்லிக்காய் நன்னாரி வேர் இவற்றை ஊற வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நெல்லிக்காயையும் எலுமிச்சம் பழத்தையும் நன்னாரி வேரையும் மாற்றி விட்டு புதிதாக இட்டு மீண்டும் ஊறவைத்து பருகி வரலாம்)
சித்தன் அருள் -1810 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1810.html
குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html
சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html
தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html
திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html
சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html
சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html
சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html
சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html
சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html
அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html
மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html
No comments:
Post a Comment