இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருநாதர் அகத்தியர் பெருமான் ஆசியால், 27.07.2025 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்தில் மருதுபாண்டியர் திருமண மண்டபத்தில் மாபெரும் சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை சிறப்பாக நடைபெற்றது . சுமார் 1000 அடியார்களுக்கு மேலாக நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் ஒவ்வொரு நொடியும் சிறப்பாக அமைந்தது. கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வில் வரவேற்பு முதல் மண்டபம், மூன்று வேளை உணவு , பாராயண புத்தகம் , வருகைப் பதிவு , தேநீர் மற்றும் சமையல் , நவகிரக தீப வழிபாடு என ஒவ்வொன்றிலும் நிறைவாக உணர்ந்தோம் . கலந்து கொண்ட அனைவருக்கும் , சேவையில் இணைந்து தொண்டாற்றிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி கூறி மகிழ்கின்றோம் .
ஓம் அகத்தீசாய நமக
அன்பால் இணைந்தோம் அகத்தியரால் இணைந்தோம்
ஒற்றுமையே பலம் !!
கூட்டுப் பிரார்த்தனையின் முக்கியத்துவம்
கூட்டுப் பிரார்த்தனையின் மூலம் என்னென்னவெல்லாம்.. சாதிக்கலாம்... அனைத்து ஆத்ம சக்திகள் ஒன்றிணைந்தால் எப்படிப்பட்ட பேரிடரையும் இறைவன் அருளால் தடுத்து விட முடியும்.
அனைவரும் ஒன்று கூடி ஒரே மனதோடு பிரார்த்தனை செய்தால் இறைவன் இறங்கி வருவான் என்று குருநாதர் வாக்கின்படி
மாநிலத்தின் எங்கெங்கோ இருந்தெல்லாம்.... வெவ்வேறு தூரமான இடங்களில் இருந்தெல்லாம்
அகத்தியர் என்ற ஒரு சொல்லுக்கு
அகத்தியர் அழைக்கின்றார் என்ற அழைப்பிற்கு
செவி சாய்த்து ஓடோடி வந்து உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்த அகத்தியர் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
எண்ணம் செயல் சிந்தனை அனைத்திலும் அகத்தியர் ஆழப் பதிந்து மேலோங்கி நிற்பதால் இதை சாதிக்க முடிந்தது.
முத்தாய்ப்பாக சித்தர் பெருமக்களும் ஈரேழு 14 உலகத்தின் அதிபதி அழகன் முருகன் வந்து வாக்குரைத்து ஆசீர்வாதம் செய்தது... அற்புதம் அதிசயம்.
பிள்ளைகள் பேச்சை கேட்கும் பொழுது பெற்றோருக்கு மகிழ்ச்சி.. அதுபோல அகத்தியன் பிள்ளைகள் அகத்தியர் பேச்சை கேட்கும் பொழுது அவருக்கும் மகிழ்ச்சி !!
அன்பு ஒன்றை காட்டினால்.. அதுவே போதும் எங்களுக்கு என்று மன நிறைவோடு... வாக்குகள் தந்து கருணையோடு வழிநடத்தும் தாயுமானவர் வாழவைக்கும் தெய்வம் குருநாதர் அப்பன் அகத்திய பெருமானுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.
பாபநாசத்தில் இருந்து கொண்டு உலகை ஆளும் உலகம்மை உலகநாதன் அம்மையப்பன் பொற்பாதங்கள் போற்றி போற்றி.
குருநாதர் வைத்த புள்ளியை... கோலமாக ஆக்குவதற்கு அப்பன் பேச்சைக் கேட்டு அப்படியே நடந்து கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி.
குழு தொடங்கி மாறுபட்ட கருத்துக்கள் ஆயிரம் இருப்பினும் அதற்கு மேலாக அகத்தியன் என்ற ஒரு சொல் அனைவரையும் ஒரே புள்ளியில் சுழல வைத்தது.
வேகமாக அதிவேகமாக ஏற்பாடுகள் நடந்தது...
அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா... அவர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் குருநாதர் கலந்து கொள்ளச் செய்து அனைவருக்கும் சித்தர்களின் வாக்குகள் கிடைக்க செய்த அதிசயம்.
ஒருங்கிணைந்து விளக்கேற்றி துவங்கியவர்கள்.
வருக வருக என வரவேற்றவர்கள்.
கலந்துகொண்டு மனதோடு பிரார்த்தனை செய்தவர்கள்.
சிவனடியார்கள் ஓதுவார்கள்.
களமாடி களப்பணி செய்த அடியவர்கள் தன்னார்வல தொண்டர்கள் படை...
அமுது படைத்தவர்கள்.. அவர்களுக்கு உதவியவர்கள். அதை பரிமாறியவர்கள்.
தாக சாந்தி செய்தவர்கள்.
அறிவிப்பு பலகைகளையும் விளம்பரங்களையும் தேடித்தேடி செய்தவர்கள்.
குறித்த நேரத்தில் அனைத்து சாதனங்களையும் பொருள்களையும் கொண்டு சேர்த்தவர்கள்.
அதைக் காத்தவர்கள். கச்சிதமான முறையில் பணிபுரிந்தவர்கள்.
ஒளி & ஒலி சரி முறை அமைத்தவர்கள்.
வாகன ஓட்டிகள். போக்குவரத்து உதவியாளர்கள். காவல்துறை பணியாளர்கள். துப்புரவு பணியாளர்கள். மண்டப அலுவலர்கள்.
அடியவர்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்தவர்கள். அதை ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள் அதை சுத்தம் செய்தவர்கள்.
முன்கள பணியாளர்கள்.
பின் களப் பணியாளர்கள்.
மறைமுக பணியாளர்கள்.
நேரில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் நேரலையில் பார்த்து வணங்கியவர்கள்.
அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.
இது முடிவல்ல.. இதுதான் தொடக்கம்.
அகத்தியர் பக்தர்கள் இனி வரும் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்பதற்கு ஒரு முன்னுரையாக இந்த நிகழ்வு..
இனி என் பக்தர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று... குருநாதர் தன்னுடைய.. பாணியை விசையை... மாற்றி நம்மை முடுக்கி உள்ளார்.
குருநாதருடைய வேகத்திற்கு அனைவரும் இணைந்து பணிபுரிய வேண்டும்.
நிறைகுறைகள் இருப்பினும் கருத்துவேறுபாடுகள் இருப்பினும் அதையெல்லாம் களைந்து நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை குருநாதர் நமக்குள் விதைத்து விட்டார்.
குருநாதர் வைத்த பரிட்சையில் அனைவரும் கலந்து கொண்டு எழுதி இருக்கின்றோம்.. மதிப்பெண் எப்படி என்பதை சித்தர்களின் வருகை வாக்குகள் மூலமே குறைந்தபட்சம் அதாவது பரீட்சை எழுதும் தகுதியை யாவது நாம் பெற்று இருக்கின்றோம் என்ற ஒரு இடம் நமக்கு.. கிடைத்துள்ளது.
குருநாதர் மீது பக்தி காட்டிக்கொண்டு இருப்பது ஒரு படி என்றால் அவர் சொல்லுவதை
அப்படியே கேட்டு நடப்பது அதில் இருந்து அடுத்த படி ஏறுவதற்கு சமம்.
இத்தனை நாட்கள் நாம் அனைவரும் அகத்தியருடைய பக்தர்கள் என்ற ஒரு படியில் இருந்தும் இனி அவர் சொல்வதை அனைவரும் ஒன்றாக இணைந்து செய்வோம் என்ற இரண்டாவது படிக்கு ஏறிக் கொண்டிருக்கின்றோம்... இன்னும் படிகள் காத்திருக்கின்றன ஏறுவோம் ஏறிகொண்டே இருப்போம்.. அனைவரும் இணைந்து!
அனைவரின் உழைப்பாலும் ஆண்டவன் ஆசீர்வாதத்தாலும்.. குறைகள் இல்லாமல்... வயலில் விளைந்து நிற்கும் நெற்கதிர்கள் போல... நிறைந்து.. நிறைகுடமாய்... இறைவனை சித்தர்களின் பரிபூரண ஆசிர்வாதத்தோடு... நிறைவாக நடந்தது.
தனித்தனியாக நன்றி நவிழ்தலும் அன்பு பாராட்டுதலும்... முடியவில்லை என்றாலும் ஒட்டு மொத்தமாக... அனைவருக்கும் ஆழ்மனதிலிருந்து அன்போடு நன்றிகள்! நன்றிகள்! நன்றிகள்!
உலகின் உச்சப் பகுதியான உலகின் முதல் சொர்க்கமான
நவகிரகங்கள் எல்லாம் அமைதியாக அடங்கி நிற்கும் இடமான... அருட்பெரும் ஜோதியான... அண்ணாமலையில் அடுத்த கூட்டுப் பிரார்த்தனை நிறைவாக முன்னெடுப்போம்
ஒற்றுமையே பலம்!!
அன்பே நமது பலம்.
அன்பே அகத்தியம்.
சித்தன் அருள் - 1899 - அன்புடன் அகத்தியர் - பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2025/07/1899.html
அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_12.html
அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025.html
குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html
குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html
குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html
சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html
தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html
திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html
சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html
சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html
சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html
சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html
சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html
அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html
மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html
No comments:
Post a Comment