இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய நாள் ஓதிமலையின் அற்புத தரிசனம் பெற வேண்டிய நாள் . சென்ற ஆண்டில் இதே நாளில் நாம் ஓதிமலை சென்று ஓதியப்பர் தரிசனம் பெற்று வந்தோம் . நம்மைப் பொருத்தவரையில் இன்றைய நாளை அந்த நாள் இந்த வருடம் தொகுப்பில் தான் கருதுகின்றோம் . குருவருளால் சென்ற ஆண்டில் அந்த நாள் இந்த வருடம் ஓதிமலை யாத்திரை மிக மிக சிறப்பாக அமையப் பெற்றது. இதற்காக எத்தனை நாட்கள் திட்டமிடல், உடல் உழைப்பு, பொருளுதவி, அருளுதவி என்று நினைத்து பார்க்கும் போது குருவின் அருளாலே குருவின் தாள் என்றென்றும் பணிந்து போற்றுகின்றோம்.
1. நேற்று காலை சின்னாளபட்டியில் இனிப்புடன் கூடிய அன்னசேவை - பொங்கல் காலை உணவாக
2. நேற்றைய அன்னசேவையில் மதுரை காஞ்சனா அம்மா நம்முடன் இணைந்தார்கள்
3. வள்ளலார் ஆசிரமத்திற்கு 25 கிலோ அரிசி சிப்பம் வழங்கினார்கள்
இறைவா அனைத்தும் நீயே!
இன்று ஓதிமலை உச்சியில் தெய்வங்களான முருகர், விநாயகர், ஐயப்பன் என மூவரும் விளையாடும் அற்புத தெய்வீக நிகழ்வு (06/12/2024 - வெள்ளி) :
அகத்திய மாமுனிவர் (குருநாதர்) ஜீவநாடியில் உரைத்த வாக்குப்படி, வருகிற 06/12/2024 (வெள்ளி) அன்று கார்த்திகை மாதம் கடைசி சஷ்டியில், தெய்வங்களான முருகர், விநாயகர், ஐயப்பன் என மூவரும் விளையாடும் அற்புத தெய்வீக நிகழ்வு ஓதிமலையில் நிகழ இருக்கின்றது.
ஓதிமலையின் சூட்சுமத்தை பற்றி அகத்தியர் ஜீவநாடி பாெதுவாக்கு :
ஓதிமலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன். நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன். கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன். அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள். அப்பனே! அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட.
அப்பனே! இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால், பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.
இவ்வாறு அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு உரைத்துள்ளார்.
முருகர், விநாயகர், ஐயப்பன் இணைந்து சந்தாேசமாக விளையாடக்கூடிய இடம் ஓதிமலை உச்சியில்.
இடம் : ஓதிமலை உச்சியில் ஆலய சுற்றுபிரகாரத்தில்.
நாள் : கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சஷ்டி நாள்
குறிப்பு : இவ்வருடத்தில் கார்த்திகை மாதத்தில் கடைசி சஷ்டி நாள் வருகிற 06/12/2024 (வெள்ளி) அன்று வருகிறது.
ஆலயம் : அருள்மிகு ஓதிமலை முருகன் காேவில்
ஊர் : ஓதிமலை (இரும்பறையில் இருந்து 04 கி.மீ தாெலைவு)
வட்டம் : அன்னூர்
மாவட்டம் : காேயம்புத்தூர்
ஓதிமலை ஆலயத் தாெடர்புக்கு : 98429 67081, 8903947083
ஓதிமலை சென்று இறை அருள் பெறுக!
சென்ற ஆண்டின் சில காட்சிப்படங்களை கீழே இணைக்கின்றோம்.
இவ்வாறு நேற்றைய ஓதிமலை யாத்திரை மிக மிக சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment