"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, December 18, 2024

சித்தன் அருள் - 1726 - பெங்களூரு சத்சங்க உத்தரவு! - நவகிரக தீபம் எப்படி ஏற்றுவது ? என்ற விளக்க பதிவு

  இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் 12/11/2024.அன்று பெங்களூரு சத்சங்கத்தில்... பக்தர்களுக்கு குருநாதர் அகத்தியர் பெருமான் கொடுத்த உத்தரவு!!! பற்றி காண உள்ளோம் .  இதனை நம் குருநாதர் அகத்தியர் பெருமான் நமக்கு தேர்வு என்றே கொடுத்து உள்ளார்கள் .  தேர்வு என்றால் நாம் எப்படி தயாராக வேண்டும்? எத்தனை சிரத்தையாக நாம் தேர்வு எழுத வேண்டும் .  அதுவும் வாழ்க்கை கல்வியில் நாம் பல தேர்வுகள் எழுதி இருப்போம் .  அதற்காக நாம் எப்படி எல்லாம் இரவு கண் விழித்து ,  பல புத்தகங்களை படித்து ,  புரிந்து கொண்டு, தேர்வு அறையிலும் எண்ண ஓட்டத்தை சீர் செய்து ,  தேர்வு நேரத்தை தாண்டி எல்லாம் நாம் எழுதுகின்றோம் .  அது போன்று இன்றைய பதிவில் உள்ள தேர்வை நாம் எழுத வேண்டும் .  இது குருநாதர் நம்மை சோதிக்கும் இறைக்கல்வி .  

நவகிரக தீபம் எப்படி ஏற்றுவது ? என்ற விளக்க பதிவு. அனைத்து அடியவர்களுக்கும் பகிரவும். சந்தேகங்கள் கமெண்ட் செய்யவும்.

நம்  தந்தை,  அன்பு குருநாதர்,  கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளிய நவகிரக தீபம் தொடர்பான சித்தன் அருள் வலைதளத்தின் வெளிவந்த  மூல  வாக்குகள்


  1. சித்தன் அருள் - 1726 - பெங்களூரு சத்சங்க உத்தரவு!

https://siththanarul.blogspot.com/2024/11/1726.html


  1. சித்தன் அருள் - 1728 - பெங்களூரு சத்சங்கம் - சந்தேகங்கள்-பதில்கள்!

https://siththanarul.blogspot.com/2024/11/1728.html


  1. சித்தன் அருள் - 1748 - அன்புடன் அகத்தியர் - அருணாச்சல தாண்டவம்!!

https://siththanarul.blogspot.com/2024/12/1748.html



12/11/2024.அன்று பெங்களூரு சத்சங்கத்தில்... பக்தர்களுக்கு குருநாதர் அகத்தியர் பெருமான் கொடுத்த உத்தரவு - நவகிரக தீபம்!!! பக்தர்கள் அனைவரும் இதை கடைப்பிடித்து வர வேண்டும் என்று உத்தரவு தந்துள்ளார் குருநாதர் அகத்தியர் பெருமான். 

=======================================================================


அகத்திய மாமுனிவர் உரைத்த நவகிரக தீபம் ஏற்ற தேவையான பொருட்கள் :


  1. பட்டுத் துணி

  2. தூய மஞ்சள் பொடி

  3. தண்ணீர் 

  4. பட்டு துணியை நனைக்க ஒரு பாத்திரம் 

  5. 18 வெற்றிலைகள் ( நீரில் நன்றாக அலசி சுத்தம் செய்துகொள்ளுங்கள் )

  6. 18 பாக்குகள் 

  7. நவதானியங்கள்

    1. கோதுமை - சூரிய பகவானின் தானியம் ஆகும்

    2. நெல் / அரிசி - இது சந்திர பகவானின் தானியம் ஆகும்

    3. துவரை - இது செவ்வாய் பகவானின் தானியம் ஆகும்

    4. பச்சைப்பயறு  - இது புதன் பகவானின் தானியம் ஆகும்.

    5. கொண்டைக்கடலை- இது குரு பகவானின் தானியம் ஆகும்.

    6. மொச்சை- இது சுக்கிர பகவானின் தானியம் ஆகும்.

    7. கருப்பு எள்- இது சனி பகவானுக்கு உரிய தானியம் ஆகும்.

    8. உளுந்து - இது ராகு பகவானின் தானியம் ஆகும்.

    9. கொள்ளு - இது கேது பகவானின் தானியம் ஆகும்.

  8. ஒன்பது மண் அகல் விளக்குகள் - 9 

  9. இலுப்பை எண்ணெய், அல்லது பசு நெய், அல்லது நல்லெண்ணெய் - இவற்றில் எதாவது ஒன்று வேண்டும் 

  10. 18 திரிகள் 

  11.  கிராம்பு ,பச்சை கற்பூரம் . ஏலக்காய் -  இவை மூன்றையும் பொடித்து மாவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் 

  12. நவகிரக காயத்திரி மந்திரங்கள் அடங்கிய புத்தகம் அல்லது பிரிண்ட் அல்லது உங்கள் அலைப்பேசியில் வைத்துக்கொள்ளுங்கள்.



அகத்திய மாமுனிவர் உரைத்த நவகிரக தீபம் செய்முறை 


  1. ஒரு பட்டு துணியை  நல்விதமாகவே  தூய மஞ்சளில் இட்டு பின் நனையுங்கள் நீரினாலே. அதை கீழே வையுங்கள்.

  2. பட்டு துணியின் மேல் 9 இடங்களில் இரண்டு இரண்டு வெற்றிலையாக வையுங்கள். எந்த வரிசையில் வைக்கவேண்டும் என்பது உங்கள் விருப்பமே.

  3. அந்த  9 இடங்களில் உள்ள வெற்றிலையின் மேல்  குறைந்தபட்சம் 2 பாக்குகள் வையுங்கள்.

  4. இப்போது நவதானியங்களை ஒவ்வொன்றாக,  ஒவொரு வெற்றிலையின் மீதும் பரப்புங்கள். 

  5. அதன் மீதி 9 மண் அகல் விளக்குகளை வையுங்கள்.

  6. அதில் 2 திரிகளை இட்டு இலுப்பை எண்ணெய், அல்லது பசு நெய், அல்லது நல்லெண்ணை - இவற்றில் எதாவது ஒன்று அதில் ஊற்றுங்கள்.  குருநாதர் கோயிலிலும் சரி வீட்டிலும் சரி இலுப்பை எண்ணையை பயன்படுத்துவது சக்தியை தரும் இலுப்பை எண்ணெய்க்கு சக்திகள் அதிகம் என்று கூறியிருக்கின்றார். அதை நினைவில் கொள்க.

  7. கிராம்பையும் , பச்சை கற்பூரத்தையும்,  ஏலக்காயையும்  இடித்து மாவாக வைத்துகொள்ள பொடியை விளக்கின் உள் இடுங்கள். 

  8. இப்போது 9 விளக்குகளில் ஜோதியை ஏற்றுங்கள். சந்திரனுக்கும் குருவானவனுக்கும் ராகுவானவனுக்கும் கேதுவானவனுக்கும் இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தீபமாக நவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

  9. இப்போது பின் வரும் நவகிரக தீபம் நீங்கள் வழிபாடு செய்ய தயாராக உள்ளது.

    1. சூரிய தீபம்

    2. சந்திர தீபம்

    3. செவ்வாய் தீபம்

    4. புதன்  தீபம்

    5. குரு தீபம்

    6. சுக்கிர தீபம்

    7. சனி தீபம்

    8. ராகு தீபம்

    9. கேது தீபம்


  1. இந்த நேரத்தில் வேறு எந்த ஞாபகம் இருக்கக் கூடாது. அதாவது விளக்கை ஏற்றி காயத்ரி மந்திரத்தை செப்பும் பொழுது வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. 

  2. உங்கள் இல்லத்தில் உள்ள அனைவரிடம் சொல்லி அமைதியாக இருக்கச்சொல்லுங்கள். குடும்பத்துடன் இணைந்து  இவ் வழிபாடு செய்தல் மிக நன்று. இல்லையனில் நீங்கள் மட்டும் செய்யலாம்.

  3. இப்போது ஒன்பது நவகிரகங்களுக்கும் 108 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அதாவது 9 x 108 =  972 முறை காயத்ரி மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும். 

  4. நவகிரக காயத்திரி மந்திரம் - இப்போது வரிசையாக , ஒவ்வொரு நவகிரகங்களுக்கும்   நீங்கள் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். பின் வரும் அட்டவணையில் உள்ள அனைத்து நவகிரக மந்திரங்களும் , ஒவோன்றும் 108 முறை சொல்ல வேண்டும்.




சூரிய தீபம்

கோதுமை பரப்பியுள்ள தீபம் அதனை நீங்கள் சூரியனாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்வரும் சூரிய காயத்திரி மந்திரத்தை 108 முறை நீங்கள் செப்பவேண்டும்.

சூரிய பகவானின்  காயத்ரி மந்திரம் :-


ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்.


சந்திர தீபம்

நெல் / அரிசி  பரப்பியுள்ள தீபம் அதனை நீங்கள் சந்திரனாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்வரும் சந்திர காயத்திரி மந்திரத்தை 108 முறை நீங்கள் செப்பவேண்டும்.

சந்திர பகவானின்  காயத்ரி மந்திரம் :


ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி

தந்நோ சந்திர ப்ரசோதயாத்.


செவ்வாய் தீபம்

துவரை பரப்பியுள்ள தீபம் அதனை நீங்கள் செய்வாயாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்வரும் செவ்வாய் காயத்திரி மந்திரத்தை 108 முறை நீங்கள் செப்பவேண்டும்.

செவ்வாய் (அங்காரக) பகவானின்  காயத்ரி மந்திரம் :


ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி

தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்.


புதன்  தீபம்

பச்சைப்பயறு பரப்பியுள்ள தீபம் அதனை நீங்கள் புதனாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்வரும் புதன் காயத்திரி மந்திரத்தை 108 முறை நீங்கள் செப்பவேண்டும்.

புதன் பகவானின்  காயத்ரி மந்திரம் :


ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி

தந்நோ புதப் ப்ரசோதயாத்.


குரு தீபம்

கொண்டைக்கடலை பரப்பியுள்ள தீபம் அதனை நீங்கள் குருவாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்வரும் குரு காயத்திரி மந்திரத்தை 108 முறை நீங்கள் செப்பவேண்டும்.

வியாழன். குரு பகவானின்  காயத்ரி மந்திரம் :


ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்நோ குருப் ப்ரசோதயாத்.


சுக்கிர தீபம்

மொச்சை பரப்பியுள்ள தீபம் அதனை நீங்கள் சுக்கிரனாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்வரும் சுக்கிர காயத்திரி மந்திரத்தை 108 முறை நீங்கள் செப்பவேண்டும்.


வெள்ளி பகவானின்  சுக்ர காயத்ரி மந்திரம் :


ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி

தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்.

சனி தீபம்

கருப்பு எள் பரப்பியுள்ள தீபம் அதனை நீங்கள்  சனியாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்வரும் சனி காயத்திரி மந்திரத்தை 108 முறை நீங்கள் செப்பவேண்டும்.

சனி பகவானின்  காயத்ரி மந்திரம் :


ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ சனிப் ப்ரசோதயாத்.


ராகு தீபம்

உளுந்து பரப்பியுள்ள தீபம் அதனை நீங்கள்  ராகுவாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்வரும் ராகு காயத்திரி மந்திரத்தை 108 முறை நீங்கள் செப்பவேண்டும்.

ராகு பகவானின்  காயத்ரி மந்திரம் :


ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்நோ ராகு ப்ரசோதயாத்.


கேது தீபம்

கொள்ளு பரப்பியுள்ள தீபம் அதனை நீங்கள்  கேதுவாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்வரும் கேது காயத்திரி மந்திரத்தை 108 முறை நீங்கள் செப்பவேண்டும்.

கேது பகவானின்  காயத்ரி மந்திரம் :


ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ கேதுப் ப்ரசோதயாத்.










நம் அடியவர்கள் ஏற்றிய சில புகைப்படங்களை இங்கு உங்கள் பார்வைக்கு அளிக்கின்றோம் 


நவகிரக தீபம் ஏற்றும் முன்னர் :- 



நவகிரக தீபம் ஏற்றிய பின்னர் 



========================================================================


இது குறித்த குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய வாக்குகள்

  1. இப்படியே அனுதினமும் செய்ய வேண்டும்.
  2. இதெல்லாம் உங்கள் அனைவருக்கும் யான் வைக்கும் தேர்வு!!!
  3. இதை நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும்.
  4. அப்பனே அம்மையே இதனை நிச்சயம் செய்து கொண்டே வாருங்கள் தை! மாசி! மாதங்கள் வரை!!!(இந்த மாதத்தில் இருந்து தொடங்கி அதாவது ஐப்பசி நடந்து கொண்டிருக்கின்றது கார்த்திகை மார்கழி தை மாசி மாதம் வரை ஆங்கில மாதம் மார்ச் வரை செய்து வர வேண்டும்)
  5. அப்பனே நிச்சயம் அப்பனே ஒவ்வொரு நாளுக்கும் இதே போல தினமும் செய்து வர வேண்டும்!!!
  6. இதனால் என்ன பலன்? என்று கேட்கக் கூடாது
  7. நவகிரகத்திற்கு என ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு நிறத்தில் துணிகள் இருக்கின்றது அதை பயன்படுத்தலாமா என்று குருநாதரிடம் கேட்டதற்கு - பட்டுத்துணியை மஞ்சளில் நனைத்து பயன்படுத்துங்கள் கிரகங்கள் சம்பந்தப்பட்ட நிறத்துணியை உங்கள் விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குருநாதர் கூறினார்
  8. அதேபோல் ஏற்றும் விளக்கில் இரட்டை திரியை ஒன்றாக திரித்து இணைத்து ஒரே தீபமாக ஏற்ற வேண்டும்.
  9. இதற்கு மண் அகல் விளக்கை தான் பயன்படுத்த வேண்டும் என்று குருநாதர் கூறினார்.
  10. எந்த நேரத்தில் விளக்கை ஏற்ற வேண்டும் என்று குருநாதரிடம் கேட்டதற்கு... சித்தர்களுக்கு நாள் ஏது? கோள் ஏது? இரவு ஏது? பகல் ஏது? எங்களுக்கு அனைத்தும் ஒன்றுதான் அன்பிற்காக நினைத்து நீங்கள் செய்யுங்கள் என்று குருநாதர் கூறினார். அதனால் காலை அல்லது மாலை என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கை ஏற்றி இந்த வழிபாடு செய்யலாம்.
  11. பெண்கள் எல்லா நாளும் விளக்கு ஏற்ற முடியாத சூழ்நிலையும் இருக்கின்றது என்று கேட்டதற்கு - வீட்டில் உள்ள யாராவது ஒருவரை அந்த நாட்களில் விளக்கேற்ற சொல்லுங்கள் என்று குருநாதர் கூறியிருக்கின்றார்.
  12. தானியங்களை அனுதினமும் மாற்றி விட வேண்டுமா என்று கேட்டதற்கு - இதுவும் உங்கள் இஷ்டமே என்று குருநாதர் கூறினார்.
  13. ஒன்பது நவகிரகங்களுக்கும் 108 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று சொன்னால் கிட்டத்தட்ட 972 முறை காயத்ரி மந்திர உச்சாடனம் செய்ய வேண்டுமா என்று கேட்டதற்கு - நிச்சயம் இப்படியே செய்ய வேண்டும் என்று குருநாதர் கூறினார்.
  14. அப்பனே அம்மையே இதனைப் பற்றி உங்களுக்கு போக போக புரியும் ஆனால் பின் அதாவது இதன் மூலம் பலன்களை எதிர்பார்க்கக் கூடாது.
  15. இந்த நேரத்தில் வேறு எந்த ஞாபகம் இருக்கக் கூடாது அதாவது விளக்கை ஏற்றி காயத்ரி மந்திரத்தை செப்பும் பொழுது வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது.
  16. இதெல்லாம் எதற்கு என்பதையெல்லாம் யான் வருங்காலத்தில் விவரிப்பேன்
  17. மீண்டும் மீண்டும் பின் நிச்சயம் இதற்கான பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாது.
  18. அப்பனே அம்மையே போகப்போக புரிந்து கொள்ளுவீர்கள் நீங்களே இதனை பற்றி.
  19. அம்மையே அப்பன்களே இதை யாரும் பரிகாரமாக எண்ண கூடாது. தேர்வு என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.
  20. இது ஏன் எதற்கு என்பதை ஒரு சதவீதத்தை மட்டும் யான் சொல்கின்றேன் - யான் உங்கள் இல்லத்திற்கு வருவேன்!!!
  21. ஏன் எதற்கு என்ற இரண்டாவது சதவீதத்தையும் யான் சொல்கின்றேன். - நிச்சயம் பின் நீங்கள் சோம்பேறிகளா இல்லையா என்று யான் பார்ப்பேன்!!
  22. அறிந்தும் கூட அப்பனே 100 சதவீதத்தையும் இதனைப் பற்றி சொல்லி விடுகின்றேன்- அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட ஒரு ஆசிரியன் தன் மாணவரிடம் ஒன்றை செய்து வரச் சொன்னால் அதை செய்து விட்டு வந்தால் அந்த ஆசிரியன் சந்தோஷப்படுவான்.
  23. ஏன் எதற்கு என்று மூன்றாவது சதவீதத்தையும் சொல்லி விடுகின்றேன் - நிச்சயம் கிரகங்கள் தன் சுற்று வட்டப்பாதையில் இருந்து மாறப்போகின்றது... இதனால் பல மக்களுக்கும் கூட தொல்லைகள் வரப் போகின்றது. பின் நிச்சயம் அதாவது வளிமண்டலத்தில் பின் நேர்கோட்டில் தான் கிரகங்கள் செல்ல வேண்டும் அப்பொழுதுதான் அனைத்தும் நன்றாக நடக்கும். ஆனால் அதிலிருந்து கிரகங்கள் நேர்பாதையிலிருந்து பிரியப் போகின்றது..
  24. ஆனாலும் இதனால் என்ன பயன்? என்று நீங்கள் கேட்கக் கூடாது!!பின் உரைப்பேன் இதனைப் பற்றி!!!
  25. அறிந்தும் கூட இது உங்களுக்காக மட்டுமல்ல. சூரியனின் ஈர்க்கும் சக்தி நிச்சயம் இத் தீபத்திற்கும் பல பல சக்திகளும் உண்டு. ஆனால் யாரும் இதை அறிவதே இல்லை... தீபத்தை யாரும் ஏதோ ஏற்றுகின்றோம் என்று சாதாரணமாக நினைத்து ஏற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
  26. தீபத்தை நல் முறையாக எதைப் பற்றியும் நினைக்காமல் ஏற்றுங்கள்.
  27. இதனால் உங்களுக்கும் புண்ணியங்கள்.
  28. இன்னும் இன்னும் நிச்சயம் அம்மையே அப்பனே நிச்சயம் பின் அதாவது இவ்வுலகத்தையே யாங்கள் காக்க வேண்டும்.
  29. ஆனாலும் இன்னும் நிச்சயம் எங்களுக்கு வாக்குகள் இல்லையே பின் எதை என்று புரிய புரிய ஆனாலும் இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு மட்டும் வாக்குகள் இல்லை. அங்கு மட்டும் வாக்குகள் படிக்கின்றார்கள் என்றெல்லாம். பின் ஏன் எதற்கு என்றால் அத்தகுதிகள் அவர்களிடத்தில் இல்லை!!... செய்யவும் மாட்டார்கள்.
  30. அறிந்தும் கூட நிச்சயம் பின் இதை பின்பற்றுவார்கள் நிச்சயம் யானே பின்பற்ற வைக்கின்றேன் பல மக்களை.
  31. அம்மையே அப்பனே நிச்சயம் முன்னோர்கள் எல்லாம் நிச்சயம் பின் இப்படி எல்லாம் தீபத்தில் பின் எவை என்று எரிய விட்டு நன்றாக வாழ்ந்தார்கள்.
  32. ஆனால் இன்று மின்சாரம் வந்தது!! இப்போது என்ன வாழ்ந்தார்கள் ? மின்சார விளக்குகள் எரியும் அல்லவா அதில் கூட நிச்சயம் வேதியல் தன்மை இருக்கின்றது.. அதுவும் கூட நிச்சயம் மனிதனின் யோகத்தை நிச்சயம் ஈர்த்துக் கொள்கின்றது.
  33. ஆனால் விளக்கு தீபம் இருக்கின்றதல்லவா அது மனிதனின் யோகத்தை ஈர்த்துக் கொள்வதில்லை.மாறாக தீபம் சக்திகளை ஈர்த்து மனிதர்களுக்கு யோகத்தை கொடுக்கும். இதனால் தான் அறிந்தும் கூட இறைவனும் தெரியாமல் இருக்கின்றான் மின்சாரமும் தெரியாமல் இருக்கின்றது.
  34. இதனால் தான் அப்பனே என் பக்தர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றே உங்களை அழைத்தேன் யான்.
  35. அம்மையே அப்பனே எதை என்று அறிய அறிய என் வாக்குகளை கேட்டாலே நிச்சயம் பின் பாவங்கள் போகும் பறந்து என்று வாக்குகள் கூறியிருக்கின்றார் அனைவரும் கடைப்பிடித்து வர வேண்டும்

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே

அனுதினமும் காலையில் எழுந்து பட்டு துணியில் ..... தினமும் புதிதாக பட்டுத் துணியை பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வி வரும் .

நான்கு ஐந்து பட்டு துணிகளை  மஞ்சளில் நனைத்து மாற்றி மாற்றி.... வைத்துக் கொள்ளலாம் ஆலயத்தில் இறைவன் இறைவி திருவுருவ சிலையில் துணிகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவது போல பட்டு துணிகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம் ஒவ்வொரு முறை பயன்படுத்தபொழுதும் மஞ்சளில் நனைத்து பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு விளக்கு இருக்கும் தனித்தனி பட்டு துணிகளை பயன்படுத்த வேண்டுமா என்று கேட்டால்...

ஒரு அரை மீட்டர் அதாவது ரவிக்கை துணியில் பாதி அளவு பட்டு துணியை இது போன்ற நான்கு ஐந்து துணிகளை வாங்கி மஞ்சளில் அனுதினமும் நனைத்து தினமும் ஒரு துணியை பெரிதாக விரித்து அதன் மேல் வெற்றிலை பாக்கு வைத்து நவதானியங்களை தனித்தனியாக வைத்து அதன் மேல் விளக்கை இரட்டை திரி கொண்டு ஏற்ற வேண்டும். 

அதாவது 9 தீபம் வெற்றிலை பாக்கு நவதானியங்கள் பரப்பி வைக்கும் அளவிற்கு துணி நீளம் அகலம் இருந்தால் நல்லது. 

அப்படி இல்லை என்றாலும் தனித்தனியாக சிறு சிறு துணிகளாக ஒன்பது பட்டுத்துணிகளாகவும் பயன்படுத்தலாம் விருப்பம் போல் செய்யலாம்.

பட்டு துணியை வைத்து அதன் மேல் வெற்றிலை பாக்கு வைத்து அந்த வெற்றிலையிலேயே  ஒன்பது நவகிரகங்களின் வரிசைப்படி.... அதாவது சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது என நவகிரகங்களுக்கு உரிய தானியங்களை வைத்து அதன் மேல் தீபத்தை ஏற்றி 

அந்த ஒன்பது விளக்கு ஜோதியை ஒவ்வொரு கிரகங்களாக நினைத்துக் கொள்ள வேண்டும்!

அந்த தீபத்தில் ஏலக்காய் பச்சை கற்பூரம் கிராம்பு இவற்றை மிக்ஸியில் அரைத்து பொடித்து வைத்துக்கொண்டு.... உதாரணத்திற்கு மேற்கூறிய மூன்று பொருள்களையும் 100 கிராம் அல்லது அவரவர் இஷ்டத்திற்கு ஏற்ப அரைத்து வைத்துக்கொண்டு ஒரு டப்பாவில் பூஜை அறையில் வைத்துக்கொண்டு எரியும் விளக்கில் உள்ளே அதாவது எரியும் விளக்கின் எண்ணெயில் போட்டு விட வேண்டும். 

பட்டுத்துணியை மஞ்சள் குழைத்த நீரினில் நனைத்து   அதன் மேல் நவ தானியங்களை தனித்தனியாக வெற்றிலை பாக்கை வைத்து தினமும் மாற்றி விட்டு புதிதாக ஒவ்வொரு நாளும் வெற்றிலை பாக்கு அந்தந்த கிரகங்களுக்குரிய தானியங்களை புதிதாக வைத்து விளக்கை ஏற்றி அதில் மேற்கூறிய பொடித்து வைக்கப்பட்ட பொடியை இட்டு ஒவ்வொரு கிரகத்திற்குரிய நவ கிரக காயத்ரி மந்திரங்களை 108 முறை ஜெபம் செய்து வணங்கி வருதல் வேண்டும்!

தானியங்களை அனுதினமும் மாற்றுகின்றவர்கள் விருப்பம் போல செய்யலாம். அல்லது அப்படியே நான்கு இந்த நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம் 

தானியங்களை சேகரித்து வைத்துக் கொண்டு புதிதாகவும் நவ தானியங்களை வைக்கலாம்.

தீபத்திற்கு நெய்யை அல்லது நல்லெண்ணையை பயன்படுத்தி வருகின்றார்கள். குருநாதர் கோயிலிலும் சரி வீட்டிலும் சரி இலுப்பை எண்ணையை பயன்படுத்துவது சக்தியை தரும் இலுப்பை எண்ணெய்க்கு சக்திகள் அதிகம் என்று கூறியிருக்கின்றார். 

நெய்யை பொறுத்தவரை பால் தயிர் மோர் இதிலிருந்து வெண்ணை அதன் பிறகு நெய்யாக்குவது தான் உண்மையான நெய் ஆனால் தற்போது பாலில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் நெய் உண்மையான நெய் அல்ல என்று கூறி இருக்கின்றார்.

(அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் முன்பெல்லாம் பசுவின் நெய்யை எதை என்று அறிய அறிய பால் பின் எதை என்று கூட மோர் என்கின்றார்களே பின் நெய் இப்படி எடுக்க வேண்டும் அப்பனே ஆனால் இன்றைய காலத்தில் மனிதர்கள் எதை எதையோ செய்து செய்கின்றார்கள் அப்பனே இதனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!!!

(இன்றைய காலகட்டத்தில் பாலில் இருந்து நேரடியாக கிரீம் எடுத்து நெய் ஆக்கி அதை விற்பனை செய்து வருகின்றார்கள் ஆனால் அது தவறான செய்முறை

பால் பாலில் இருந்து தயிர் தயிரில் இருந்து மோர் மோரில் இருந்து வெண்ணெய் வெண்ணையை காய்ச்சி முற்காலத்தில் எப்படி நெய்யை எடுப்பார்களோ அதன்படி எடுத்து அந்த நெய் பயன்படுத்தினால் தான் முழு பலன் என்று குருநாதர் கூறியிருக்கின்றார் அதுபோன்று எங்கு மோரை கடைந்து வெண்ணை எடுத்து நெய் தயாரிக்கின்றார்களோ அந்த நெய்யை அடியவர்கள் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் 

==============================================

இதனைப் பற்றி முழுமையான வாக்கு சூரத் சத்சங்கம் பாகம் 6 ல் சித்தன் அருள் - 1616 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு வெளிவந்துள்ளது)

அதேபோல் தற்போது கற்பூரத்தில் மெழுகு அதிகம் சேர்த்து கலப்படம் மிகுந்த கற்பூரம் தான் கிடைக்கின்றது சுத்தமான உண்மையான பச்சை கற்பூரம் குறித்து குருநாதரிடம் கேட்டு குருநாதர் சூட்சுமமாக வாக்குகள் தந்து குருநாதர் தேடச் சொல்லி அதன் பிறகு மகாராஷ்டிரா மாநிலம் திரயம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம் ஆலயத்திற்கு அருகில் வசித்து வரும் ஒரு பெரியவர் சுத்தமான பச்சை கற்பூரம் அனைவருக்கும் விற்பனை செய்து வருகின்றார் என்ற விவரம் அறிந்து அதனைப் பற்றி நமது சித்தன் அருள் வலைத்தளத்தில் 


சித்தன் அருள் - 1231 - பச்சை கற்பூரம்!

தனிப்பதிவாக வந்துள்ளது 

அதர்வா ஜோஷி 

திரயம்பகேஷ்வரர். 

நாசிக். 

தொடர்பு எண் மற்றும் கூகள் பே எண். 

8975743784.

இவரிடம் அடியவர்கள் சுத்தமான பச்சை கற்பூரத்தை பெற்றுக் கொள்ளலாம் மேலும் பச்சைக் கற்பூரம் குறித்து பதிவை மீண்டும் படித்து முழு விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

அப்படி உண்மையான நெய் முறைப்படி எடுப்பவர்கள் தீபத்திற்கு நெய்யை பயன்படுத்தலாம் அல்லது சுத்தமான நல்லெண்ணையை பயன்படுத்தலாம். குருநாதரிடம் பூஜைக்கு வழிபாட்டிற்கு  எந்த எண்ணெயை பயன்படுத்துவது என்று கேட்டதற்கு இலுப்பை எண்ணையை பயன்படுத்துங்கள் என்று ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார் நினைவில் கொள்ளவும்.

========================================================================


நெல், கோதுமை, துவரை, எள், உளுந்து, பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, மொச்சை பயிறு, கொள்ளு போன்ற ஒன்பது தானியங்களைத்தான் வகை நவதானியங்கள் தானியங்கள் என்பர். இவையே கிரகங்களுக்கு உரிய தானியங்கள் ஆகும். 

கோதுமை சூரிய பகவானின் தானியம் ஆகும்

நெல்: இது சந்திர பகவானின் தானியம் ஆகும்

துவரை : 'துவரை' இது செவ்வாய் பகவானின் தானியம் ஆகும்

பச்சைப்பயறு 'பச்சைப்பயறு' இது புதனின் தானியம் ஆகும்

' கொண்டைக்கடலை இது குரு பகவானின் தானியம் ஆகும்.

மொச்சை இது சுக்கிர பகவானின் தானியம் ஆகும்.

கருப்பு எள் இது சனி பகவானுக்கு உரிய தானியம் ஆகும்.

உளுந்து : இது ராகு பகவானின் தானியம் ஆகும்.

கொள்ளு இது கேது பகவானின் நவ தானியம் ஆகும்.

இவை ஒவ்வொரு நாளும் செய்து வருதல் வேண்டும். இது குருநாதர் அகத்திய பெருமான் அனைவருக்கும் யான் வைக்கும் பரீட்சை என்று சொல்லி இருக்கின்றார் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் குருநாதர் உத்தரவாக கூறியிருக்கின்றார் அதனால் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

சித்தன் அருள் - 1728 - பெங்களூரு சத்சங்கம் - சந்தேகங்கள்-பதில்கள்!

https://siththanarul.blogspot.com/2024/11/1728.html

குருநாதர் அகத்தியர் பெருமான்... பெங்களூரு சத்சங்கத்தில் நவ தீபங்களை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று பக்தர்களுக்கு எல்லாம் ஒரு பரிட்சையை வைத்திருக்கின்றார். 

வாக்குகளில் தெளிவாக விஷயங்களை கொடுத்திருந்தாலும் சிலருக்கு சந்தேகம் இருக்கின்றது.  பூஜை செய்யும் இடத்தில் பட்டுத்துணியை மஞ்சளில் நனைத்து விரித்து வைத்து அதன் மேலே வெற்றிலை பாக்குகள் வைத்து அதாவது 9 விளக்குகளுக்கு 9 செட் வெற்றிலை பாக்கு வைத்து அதன் மேலே நவகிரகங்களுக்கு உரிய தானியங்களை வைத்து அதன் மேலே ஒன்பது விளக்கு வைத்து இரட்டை திரி இட்டு விளக்கை ஏற்றி.... அந்த விளக்கில் பச்சைக் கற்பூரம் ஏலக்காய் லவங்கம் கலந்த பொடியினை இட்டு நவகிரகங்களுக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை 108 முறை ஜெபம் செய்து வர வேண்டும்.

சிலர் பூஜை முடிந்த பிறகு அன்றாடம் வெற்றிலையையும் நவதானியங்களையும் என்ன செய்வது என்று கேட்டிருக்கின்றார்கள் 

வெற்றிலையை நாம் தெய்வத்திற்கு பூக்களை பயன்படுத்த பிறகு எப்படி ஆற்றில் கொண்டு போய் இடுகின்றோமோ அதே போல் ஆற்றில் தூய்மையான முறையில் விட்டு விடுவது நலம்... மாற்றி மாற்றி பூஜைகள் செய்யும் பொழுது எடுத்து வைக்கும் நவதானியங்களை வாயில்லா ஜீவராசிகளுக்கு பறவைகளுக்கு விலங்குகளுக்கு அல்லது ஆற்றில் விட்டுவிடலாம்....

இதனைக் குறித்து குருநாதரிடம் கேட்ட பொழுது

குருநாதர் முதலில் இதை செய்து கொண்டே வாருங்கள் உங்களுக்கே போகப் போக புரியும் உங்களுக்கு தெரியும் என்று கூறி இருக்கின்றார் இதை முழு மனதோடு செய்யும்பொழுது அவரவர் மனதில் தோன்றுவதை செய்து கொள்ளலாம்

இதற்கான உதாரணமாக புகைப்படங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!

=============================================

சித்தன் அருள் - 1748 - அன்புடன் அகத்தியர் - அருணாச்சல தாண்டவம்!!

https://siththanarul.blogspot.com/2024/12/1748.html

அப்பனே நவதானியங்களை வைத்து ஏன் தீபங்களை ஏற்ற சொன்னேன் என்றால் அப்பனே....

அப்பனே ஈசன் மறுத்துவிட்டானப்பா...இவ் கார்த்திகை தீபம் தனை ஏற்றக்கூடாது.. எந்தனுக்கு. மனிதர்களின் செயல்கள் கண்டு ஈசன் தீபம் தனை நடத்தி விடக்கூடாது  என்று அப்பனே முடிவெடுத்து விட்டான் என்பேன் அப்பனே..

ஆனால் பொறுத்திருக!!! ஈசனே பொறுத்திருக என்றெல்லாம் யாங்கள் போராடிய அப்பனே அழிவில் இருந்து காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே....

ஈசன் கருணை உள்ளவன் தான் அப்பனே ஆனால்... ஒரு நிலை வரை நான் பார்ப்பான் என்பேன் அப்பனே அடித்து நொறுக்கிக் கொண்டு போய்க் கொண்டே இருப்பான் என்பேன் அப்பனே...அவந்தனுடைய ஆலயத்தையும் கூட மண்ணை கொண்டு நிரப்பி விடுவான் அப்பனே யாரும் இங்கு வர முடியாமல் செய்து விடுவான் என்பேன் அப்பனே!!!

ஈசன் ஒரு சிறிய எச்சரிக்கை மட்டும் தற்பொழுது காட்டி உள்ளான் அப்பனே !!!

என் பக்தர்களை ஏன் தீபம் ஏற்றச் சொன்னேன் என்றால் யாரெல்லாம் யான் கூறியபடி விளக்கேற்றி வழிபட்டார்களோ அவர்களுக்கு பரிபூரண ஆசிகள் உண்டாப்பா!!!... பேரழிவுகள் ஏற்பட்டு இன்னும் பல பேர் காணாமல் போய் இருக்க வேண்டியது என்பேன் அப்பனே..... நீங்கள் ஏற்றிய விளக்கு அவர்களுடைய ஆத்மாவை சாந்தி படுத்தவே என்பேன் அப்பனே!!!! உயிரிழந்த ஆன்மாக்கள் மகிழ்ச்சி அடைந்து மீண்டும் இவ் தலத்திலேயே பிறப்பெடுத்து உயர்வாக வாழ்வார்கள் என்பேன் அப்பனே...இவ் ஆன்மாக்களை சாந்திப்படுத்த யாரெல்லாம் தீபங்களை ஏற்று வழிபட்டார்களோ அவர்களுக்கெல்லாம் அவ் புண்ணியங்கள் கிட்டும் என்பேன் அப்பனே!!!! தீபம் ஏற்றி வழிபாடு செய்தவர்கள் குடும்பமே செழித்து வாழும் என்பேன் அப்பனே பிள்ளைகள் பரம்பரை என அப்பனே நீடூழி வாழ்வார்களப்பா!!

நவகிரகங்களின் சக்தியானது மொத்தமாக அண்ணாமலையிலே படிகின்றது என்பேன் அப்பனே!!..... 

==========================================================================




ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக : -

 அன்புடன் அகத்தியர் மாமுனிவர் அனைவருக்கும் வைக்கும் தேர்வு - https://tut-temples.blogspot.com/2024/11/blog-post_26.html

 சித்தன் அருள் - 1726 - அன்புடன் அகத்தியர் - பெங்களூரு சத்சங்க உத்தரவு!  - https://tut-temples.blogspot.com/2024/11/1726.html

அந்த நாள் >> இந்த வருடம் 2024 - கோடகநல்லூர்! - 13.11.2024 - https://tut-temples.blogspot.com/2024/11/2024-13112024_11.html

சித்தன் அருள் - 1028 - எந்த ஆலயத்தில் தியானங்கள் செய்தால் நீங்கள் நினைத்ததை எளிதில் நிறைவேற்றலாம்?  - https://tut-temples.blogspot.com/2024/11/1028.html

அகத்தியர் மாமுனிவர் வாக்கு - விதியை மாற்றக் கூடிய மகத்தான பாடல்..! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_29.html

சித்தன் அருள் - பாகம் 1 முதல் 5 வரை - கேள்வி-பதில்!  -https://tut-temples.blogspot.com/2024/10/1-5.html

வாழ்க்கையில் மாற்றங்கள் உயர்வுகள் ஏற்பட குடும்பத்துடன் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_16.html

சித்தன் அருள் - 1602 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/10/1602.html

அன்புடன் அகத்தியர் பெருமான் அருளிய வாக்கு - கோவிந்தா.! கோவிந்தா..!! கோவிந்தா...!!! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_13.html

பெருமாளே.! பெருமானே...!!  - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_8.html

அகத்தியர் பெருமானின் உத்தரவு! - நவராத்திரி வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post.html

சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி  - https://tut-temples.blogspot.com/2024/09/1642.html

சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1551.html

பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள்  - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html

மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html

புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

No comments:

Post a Comment