இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அண்மையில் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் அருளிய கேள்வி பதில் தொகுப்பை சித்தன் அருள் வலைதளத்தில் இருந்து இங்கே பகிர்கின்றோம் . வழக்கம் போல் இவை அனைத்தும் அடியார் பெருமக்கள் குருநாதரிடம் கேட்ட அருள் மொழிகள் . இவை அனைவருக்கும் பொருந்தும் . ஒருமுறை இவற்றை படித்தால் மேலோட்டமாக தான் நமக்கு விளங்கும். ஒவ்வொரு கேள்வி பதிலையும் குறைந்தது மூன்று முறை படியுங்கள் . அப்பொழுது தான் குருநாதர் நமக்கு நடத்தி வரும் பாடங்கள் நன்கு புரியும் . இங்கே குருநாதர் நமக்கு ஞானக் கல்வியை வழங்கி வருகின்றார்கள். இந்த ஞானத்தை நாம் கற்றுக் கொண்டு , வாழ்வில் கடைபிடிப்பதே நம் வாழ்வின் நோக்கமாக கொள்ள வேண்டும் .
10, வட்டியை பிரதானமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் அது சார்ந்த துறையில் பணி செய்து பெறும் ஊதியம் பாவமா இல்லையா ?
அப்பனே! அவனை, ஒவ்வொரு வீடாக செல்லச்சொல். வங்கியில் வேலை செய்பவர்கள் குடும்பம் எப்படி வாழ்கிறது என்று பார்க்கச் சொல். பிறகு இவந்தனுக்கு தெரிவிக்கின்றேன். இவன்தனும் இருந்தாலும், தண்டனை, தண்டனை தான்.
11. அத்தகைய பணம் கொண்டு தர்மங்கள் செய்வதால் வரும் பாவமோ புண்ணியமோ யாருக்கு ?
அந்த கதிர்கள் (நல்லதோ/கெட்டதோ) யாரையெல்லாம் தாக்குமோ, அவர்களுக்கு! அதனால்தான் பெரியவர்கள் கையை தொட்டு பேசுவதை விரும்பவில்லை.
12. அப்படியென்றால் அனைத்து தொழிலுக்கும் இது பொருந்துமே. பின்னர் எப்படி சம்பாத்தித்து வாழ்வது?
அதனால் தான் உழைத்துப் பிழைக்கச் சொல்கின்றோம், அப்பனே! உடம்பை எடுத்தாலே கஷ்டங்கள் என்பதால் தான், எதுவும் வேண்டாம் என செல் என்கிறோம். அதனால்தான் மனிதர்கள் பாவம் என்று உணர்ந்து, சித்தர்கள் யங்கள், ஏதாவது அவனுக்கு செய்து கொண்டிருக்கிறோம். பாவம் மனிதனென்று, மலைகளையும், காடுகளையும் ஏறி, தவம் செய்து, பாபத்தில் விழுந்து விட்டாலும், மனிதன் திருடனோ, வல்லவனோ அவனை தூக்கிவிட தயாராக இருக்கின்றோம். ஆனால் மனிதன் உணர்வதே இல்லை. படுகுழியில் விழுவோம் என்று....
13. அரசாங்கம் வட்டிக்கு கடன் வாங்குவது பாவமா ? புண்ணியமா ?
அப்பனே! உன்னிடத்தில் புண்ணியங்கள் இருந்தால், இறைவன் ஒருவனை அனுப்பி வாங்கிச்செல்லுகின்றான். அதுவே பாவங்கள் இருந்தால் பிடுங்கிச் செல்லுகின்றான். இதை மாற்றி, மாற்றி யோசி, உனக்கு புரியும்!
14. அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல், பொய் கணக்கு எழுதியோ அல்லது மறைத்தோ சேர்க்கும் பணம் அல்லது சொத்து பாவமா ?
அப்பனே, அனைத்தும் ஒரு நாள் எங்கு செல்கின்றது எனக் கூறு! அப்பனே! எங்கிருந்து வந்ததோ, அந்த இடத்துக்குத்தான் செல்லும் ஒருநாள். அதனால், பொய் கணக்கு எழுதினாலும், உண்மை கணக்கு எழுதினாலும், எல்லாம் செல்லப்போவது ஒரே இடத்துக்குத்தான். நதிகள் எங்கு சென்றாலும், கடலில்தான் கலக்கப் போகின்றது.
15. ஜீவகாருண்யம் கடைப்பிடிக்கும் ஒருவர் கசாப்பு கடையில் வேலை செய்தால் பாவமோ புண்ணியமோ யாருக்கு ?
அப்பனே! ஜீவகாருண்யம் கடைபிடிப்பவன், கசாப்பு கடையில் வேலை பார்க்க மாட்டானப்பா! மனசாட்ச்சி ஒன்று இருக்கின்றது, நீயே கூறு! அப்பனே! ஜீவகாருண்யத்தை பயன்படுத்தினால், கடுகளவும் கஷ்டங்கள் வராதப்பா!
16.ஜீவசமாதி அடைகின்ற சித்தர்களின் திருமேனிகள் மண்ணிற்குள் எவ்வித மாற்றம் அடைகின்றன?
அப்பனே! ஜீவசமாதியில் ஒருவன் இருக்கின்றான் என்றால், அங்கு சென்று தியானங்கள் செய்தாலே உன் உடம்பு ஆடுமப்பா.
17. மனிதனது மனமானது எப்பொழுதும் நல்லவனவற்றையே சிந்திக்க குருநாதர் ஒரு உபாயம் நல்கிட வேண்டும்
அப்பனே! நிச்சயம் திருவாசகத்தை ஒதச்சொல் அப்பா! ஆனால் படிப்பதற்கும் சற்று கடினமாகத்தான் இருக்கும் அப்பனே! போகப்போக புரிந்து கொண்டு ஒரு தெளிவு வந்துவிடும் அப்பனே!
18. அண்ட சராசரத்தையும் ஆளும் அகத்திய பெருமான் பொற்பாத கமலங்கள் போற்றி .. வணக்கம் ஐயா ஒருவனுக்கு எந்த விடயம் எடுத்தாலும் எல்லாவற்றிலுமே தோல்வி ஏற்படும் போது வாழ்க்கை மீதே ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடுகிறது .. நாம் வாழ்ந்து மட்டும் என்ன நடந்து விடப்போகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது .. இதிலிருந்து எப்படி ஐயா மீண்டு வருவது ..
அப்பனே! பெரியவர்கள் சொன்னார்கள். எதை எடுத்தாலும், தோல்வி, தோல்வி, தோல்வி என்றால் ஒரு நாள் வெற்றி. எதை எடுத்தாலும் வெற்றி, வெற்றி, வெற்றி என்றால் ஒரு நாள் தோல்வி. எனவே தோல்வி என்பது ஒவ்வொரு படி போல. என்னுடைய அருளும், ஆசிகளும் கூட.
19 : ஐயா என்ன செய்வதென்றே தெரியாத திக்கற்ற நிலையில் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வை நகர்த்தி செல்வது? மனிதன் பூமிக்கு எந்த நோக்கமாக வந்தான் என எப்படி தெரிந்து கொள்வது ..?
அப்பனே! திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. எமது ஆசிகளும் கூட, கடை நாள் வரை யாம் இருப்போம் துணை.
20. ஐயா யாரும் கண்டு கொள்ளாத பாழடைந்த பழைய சிவாலயத்தில் பூசை செய்து வரும் வாய்ப்பு யாருக்கு ஐயா கிடைக்கும் ..???
அப்பனே! நிச்சயம், உண்டு, உண்டு என்பேன், ஈசன் எந்த நேரத்தில் என்ன தீர்மானிக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. ஈசன் மனம் மாறிக்கொண்டே இருப்பான். ஆகவே, அனைத்தும் ஈசன் செயல் என்றிருக்க, எக்கோவில் யாரால் கட்டப்பட்டது, அவனையே மறுபடியும் பிறப்பெடுக்க வைத்து அது நிறைவேற்றப்படும்.
21. ஐயா தருமம் அல்லது தானம் செய்யும் போது உண்மையாகவே ஒருவருக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை எப்படி அறிவது... உதாரணமாக நாம் செய்யும் ஒரு தர்மம் அல்லது தானம் தவறான ஒரு நபருக்கு சென்று விட்டால் அந்த கர்மம் தருமம் சென்றவரை சாருமா ஐயா!
அப்பனே! தர்மமோ/தானமோ செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிற பொழுது, எதையும் நினைக்க கூடாது! கொடுத்துவிட வேண்டும், அவ்வளவுதான் அப்பனே! நீ முன் காலத்தில் ஒருவனுக்கு கொடுக்கின்றேன் என்று சொல்லியிருந்திருப்பாய், கொடுக்காமல் மடிந்திருப்பாய், இப்பொழுது கொடுக்கின்றாய், அவ்வளவுதான் அப்பனே!
23. காஞ்சியில் வாழ்ந்த ஸ்ரீ காஞ்சி மகாபெரியவர் என்று அழைக்கப்படும் அந்த மகானை குறித்து எங்களுக்கு கூற முடியுமா?
அப்பனே! அறிந்து கூட, கூறுகின்றேன் அப்பனே. அவ்விடத்திலே இதை கூறுகின்றேன், பொறுத்திருந்தால், அப்பனே! நன் முறைகளாகவே, அப்பனே, அனைத்து விஷயங்களும் அவனுக்கு தெரியுமப்பா!
24. குருவே உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்!
எங்கள் ஆசிகள் எப்பொழுதும் உண்டு! ஆசிகள்!
25. அகத்திய பெருமான் பல நோய்களுக்கு மருந்து முறை கூறியுள்ளார் , ஆண்களுக்கு இருக்கும் ஆண்குறைபாடு (ஆண்மலடுத்தன்மை ) சரி செய்ய, அகத்திய பெருமான் மருத்துவ குறிப்பு சொன்னால் இது பலரை சென்றடையும். ஓம் அகத்தீசாய நமக!
அப்பனே, ஓரிதழ் தாமரை, பூமிச்சக்கரை, ஜாதிக்காய், அரச இலை, ஆலமர விதை, முருங்கை இலையும் கூட, இன்னும் நிறைய மூலிகைகள் இருந்தாலும், அவைகள் பலனளித்திட ஓரிரு மந்திரங்கள், தேவை படுகிறது. இதனால், பழனி தனை சென்றிட்டு, போகன் அப்பனை பார்த்திட்டு, வரச்சொல் அப்பனே! மந்திரத்தை அழகாகவே, விவரிக்கிறேன் அப்பனே!
26. கந்தர் ஷஷ்டி கவச்சத்தில் உள்ள ரைமிங் சொற்களின் (செககனா, மோகமோக, திகுகுண, டங்கு, டிங்குகு, முதலியன) அடிப்படை அர்த்தம், முக்கியத்துவத்தை விளக்கவும்.
இதிலுள்ள வாக்குகள், செப்ப செப்ப, அவை, சிலரின் உடலில், மனதில் உள்ள பாதிப்பை, அகற்றிவிடும். சந்தோஷங்கள் அடையுமப்பா. இவை தன்னை சொல்லிக் கொண்டிருந்தாலே, எவ் நோயும் அண்டத்தப்பா!
27. ஒரு நாளைக்கு எத்தனை முறை இதை கூற வேண்டும்?
அப்பனே! உன்னால் முடிந்த வரை. ஒருநாள் எத்தனை முறை உண்ண வேண்டும் என்று கூறு.
27. சிவ கீதை, சௌந்தர்ய லஹிரி, வராஹ கவசம் மற்றும் வேல் மாறல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அப்பனே! நிச்சயம், இதை ஓதி வந்தாலே போதுமானது! இதன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள், யானே உணரவைப்பேன்.
28. தியானம் மற்றும் பிரார்த்தனைகளில் ஸ்ரீசக்கரத்தின் முக்கியத்துவத்தை விளக்குங்கள். ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்யலாமா? (சங்கரன் கோவிலில் கோமதி அம்மன் சந்நிதி எதிரில்)
அப்பனே, ஒருவன் ஸ்ரீசக்கரத்தை முன்னே வைத்து த்யானம் செய்து கொண்டிருந்தாலே, ஸ்ரீ சக்ரம் அனைத்தும் கொடுக்குமப்பா. கலியுகத்தில், இது மிக மிக அவசியம். சில தீய சக்திகளை அழிப்பதற்கும், இது பயன்படுகின்றது. அப்பனே, இவனை, ஐந்து பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்று வரச் சொல், பிறகு உரைக்கின்றேன், இது பற்றி கூட.
29. மேருவை பார்த்தேன்! வாங்கலாமா? எது உண்மையானது என்று எப்படி உணர்வது?
மேருவை பார்த்துவிட்டாய் அல்லவா. வாங்கிக்கொள். அவை, இவை என்றெல்லாம் யோசிக்க கூடாது. நீ உண்மையாக பூசை செய்! அது போதும்.
29. அய்யா தெரியாமல் கார் ஓட்டிய பொழுதுஒரு குட்டி நாயை அடித்து விட்டேன். அது முதல் மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என கூற முடியுமா?.
அப்பனே! பைரவரை வீட்டில் வளர்க்க. அல்லது பைரவர்களுக்கு தினமும் உண்ண உணவு கொடு.
30. அய்யா! இவரது அக்கா மகள் 18 வயதாகிறது. இரவில் தினமும், உறக்கத்திலிருந்து அலறி அடித்துக்கொண்டு எழுகிறாள், ஏன் என்று தெரிய வில்லை. இதற்கு ஏதேனும் கூற முடியுமா?
உடனே, குற்றாலத்துக்கு போகச் சொல். அருவி நீர் தலையில் விழ குளிக்கச்சொல். புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். இதை அடிக்கடி செய்யவேண்டும்.
40.பிறவிக்கடன் என்ன என்பதை ஒவ்வொருவரும் எப்படி அறிந்து கொள்வது? ஆன்மீகம்(ஆசைகள் அற்ற ஒன்று), குடும்ப வாழ்வு (செல்வம் தேவை உள்ளது) எவ்வாறு இணைப்பாக கொண்டு செல்வது?
அப்பனே! இதை நான் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றேன். ஏதன் மீது நாட்டம் செல்லுகின்றதோ, அதன் மீது சென்று கொண்டுதான் இருக்கும் என்பேன். இதை பின் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நாட்டம் இருந்தால் யானே தெரிவிப்பேன் அதை. என்னுடைய ஆசிகள்.
41. வாசி யோகம் பற்றி முழுமையான முறை மற்றும் அதன் நிலைகள் மற்றும் இக வாழ்க்கை கடமைகள் ஆற்றும் மனிதர்கள் அதை எம்முறையில் பயிற்சி கொள்ள வேண்டும் என்பதை அகத்தியர் அருள் செய்ய வேண்டுகிறேன்? அதை பயிற்சி கொள்ளும்போது வரும் உடல் சூடு போன்றவற்றை எவ்வாறு கையாள வேண்டும்? ஏற்கனவே இருக்கும் பதிவில் மூச்சு பயிற்சி பற்றி உள்ளது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு?
அப்பனே! இதை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவன், அடிக்கடி அண்ணாமலைக்கு செல்ல வேண்டும் அப்பனே! இதை பற்றிய ரகசியங்கள், இன்னும் விவரமாக வரும் என்பேன். எங்கெங்கு நின்று காற்றை உள்ளிழுக்க வேண்டும் என்பதை நிச்சயம் தெரிவிப்பேன். இப்பொழுது வேண்டாம் என்பேன் அப்பனே.
42. பிறரிடம் அசைவம் உண்ண கூடாது என்று கூறினால்(அகத்தியர் கூறிய உடல் கிளர்ச்சி அறிவியல் ரீதியாகவோ, பிற உயிரை கொன்றால்/ துன்புறுத்தினால் அதன் வேதனை நமக்கு தோஷத்தை சேர்க்கும் ) சைவம் உணவகங்கள் (கீரை, காய்கறி) உயிர் தானே என்று வாதாடுகிரார்கள். என்ன விளக்கம் கூறினாலும் அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.
அப்பனே! இவ்வுலகத்தில் மனிதன் அழிய வேண்டும் என்பதுதான். பின்னர் மனிதன், தன்னைத்தானே அழித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். பின்னால் தான் மூளை! அறிவை பலமாகத்தான் கொடுத்திருக்கிறான் அப்பனே! அதைக்கூட சரியாக உபயோகிக்கத் தெரியாத, தன்னையும் கெடுத்து, தன் பிள்ளைகளையும் கெடுத்து, இப்பொழுது தெரியாதப்பா. தவறு செய்தவன் ஒருநாள் உணர்வான். ஓரிடத்தில் கைகட்டி பதில் சொல்ல வேண்டும். இவை எல்லாம் இப்பொழுது சுகமாகத்தான் இருக்குமப்பா. கடைசியில் பார்த்தால், எது ஒரு மனிதனுக்கு கடினமாக இருக்கிறதோ, அது பிற பகுதியில் சந்தோஷத்தை கொடுக்கும், எது ஒன்று இன்று சந்தோஷமாக இருக்கின்றதோ, அதை உட்கொண்டால் சந்தோஷமாக இருந்தால், வரப்போகும் நோய்க்கும் தயாராக இருக்க வேண்டும்.
43. திருச்செந்தூர், தூத்துக்குடி போன்ற ஊர்களில் அகத்தியப்பெருமானின் ஆசி வாக்கு என நாடி வாசிக்கிறார்களே, அது உண்மையா என நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது?
அப்பனே! போகப்போக இதை யார் ஒருவன் கேட்டானோ அவனுக்கே, தெரிய வைக்கிறேன் அப்பனே!
44. அய்யனே, பல இடங்களிலும், நீங்கள்தான் நாடியில் வந்து வாக்கு உரைக்கிறீர்கள் என கூறி நாடியை வைத்து பணம் சம்பாதிக்கும் மனிதர்களை வளரவிட்டு, நீங்கள் மௌனமாக இருப்பது ஏனோ?
அப்பனே! திருடனுக்கு கூட இறங்குவான் என்பேன், இவ் அகத்தியன்.
45. அய்யா வணக்கம் என் கூடப்பிறந்த அண்ணன் மகள் பெயர் நந்தினி வயது 22 நெஞ்சு பகுதியில் கட்டி உள்ளது அதை அறுவை சிகிச்சை செய்து சோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகிறார்கள் அய்யா , குடும்பத்தினர் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர் மகளுக்கு மருத்துவராக குரு நாதர் அகத்திய பெருமான் இருக்க வேண்டும்.
அப்பனே, அறிந்தும் கூட மருத்துவராக யானே வருகின்றேன் அப்பனே.
46. குரு தேவருக்கு அடியேனின் வணக்கம் ஐயா.தினமும் வீட்டில் செய்ய கூடிய பிராத்தனை குறைந்தபட்சம் ஒரு 100 பேரையாவது ஆபத்தில் இருந்து காக்க வேண்டும். இதை சாத்தியப்படுத்த எவ்வாறு இறைவனை தொழுவது ஐயா.நன்றி!
நினைத்தாலே முக்தி தருவது திரு அண்ணாமலை. நினைத்தாலே இவ் பிள்ளைக்கு யான் தருவது அன்பு பரிசு! நிச்சயம் யான் பார்த்துக் கொள்ளுகின்றேன், நினைக்கச்சொல். சந்தோஷமே.
47. " இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் புத்தகங்கள்,செவி வழி செய்திகள் மூலமாக பல்வேறு கோயில்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்ற நிலையில், அதில் சிலவற்றை தேர்ந்து எடுத்து,ஸ்தல பயணம் மேற்கொண்டு தரிசனம் செய்கிறோம். இந்த ஆன்ம தேர்வு, ஒவ்வொரு ஆன்மாவிற்கும்,அதனின் தேவைக்கு ஏற்ப,ஈசனின் கட்டளை என்று சொல்வது சரியாக இருக்குமா?"
அப்பனே! இன்னும் பல ரகசியங்களை தெரிவிக்கின்றேன். இவ் திருத்தலத்திற்கு சென்றால், இறைவனை வணங்கினால், ஒளிக்கதிர்கள் ஒருவனுக்கு கிடைக்கும் என்பதை, நிச்சயம் அட்டவணைப்படுத்தி யான் சொல்கின்றேன், அப்பனே! பக்தர்களில் கோடியில் ஒருவனுக்கு இது தெரியுமப்பா. ஆகவே என் பக்தர்களுக்கும் வாய்ப்பளித்து, திருடனுக்கு ஒரு வாய்ப்பளித்து கொடுப்பேன், அனைத்தும் தெரிவிக்கின்றேன், அன்பு மகன்களே!
48. "உடல் நிலை,மன நிலை, வாழ்க்கை நிலை பாதிப்பு ஏற்பட்டால் தான் இறை அருள் கிடைக்குமா? இயற்கையையும் குருவையும் சார்ந்து இருக்கும் போது இவைகள் ஏற்படக்கூடாது, இல்லையா?"
அப்பனே! துன்பப்பட்டால் தான் இறைவன் அருகிலே இருப்பான். அதனால், அப்பனே! செதுக்க செதுக்க செதுக்க, புரிந்து கொள்ளப்பா. யான் ஒன்றும் சொல்வதற்கில்லை அப்பா!
49. (நால்வர் பெயர் சொல்லி) அத்தனை பேர் நாடியிலும் வந்து வாக்குரைத்தது, வாக்குரைப்பது நீங்கள் தானா?
அப்பனே! இதை பற்றி இப்பொழுது சொன்னாலும் வேண்டாமப்பா! பின் உணர்த்துகின்றேன் அப்பனே! கவலையை விடு அப்பனே!
50. ஏன் என்றால், ஒரே விஷயத்தைப்பற்றி, இந்த நாலு பேர் நாடியிலும் நாலு விதமாக நீங்கள் சொல்கிறீர்கள். அப்பொழுது, எதை தொடர்ந்து போவது என்பதில் மிகுந்த குழப்பம் வருகிறது!
அப்பனே! இவ்விவாதம் இப்பொழுது வேண்டாமப்பா. போகப்போக உனக்கு புரியும். தற்பொழுது, உனக்கே புரிந்திருக்கும், அப்பனே! இப்பொழுது வேண்டாமப்பா!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
வாழ்க்கையில் மாற்றங்கள் உயர்வுகள் ஏற்பட குடும்பத்துடன் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_16.html
சித்தன் அருள் - 1602 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/10/1602.html
அன்புடன் அகத்தியர் பெருமான் அருளிய வாக்கு - கோவிந்தா.! கோவிந்தா..!! கோவிந்தா...!!! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_13.htmlபெருமாளே.! பெருமானே...!! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_8.html
அகத்தியர் பெருமானின் உத்தரவு! - நவராத்திரி வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post.html
சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி - https://tut-temples.blogspot.com/2024/09/1642.html
சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1551.html
பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html
மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html
புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html
சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html
சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html
சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html
புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html
சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html
ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html
பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5) - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html
முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html
முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html
குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html
அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html
முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html
முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html
கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html
TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html
நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html
குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html
கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html
ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html
அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html
No comments:
Post a Comment