"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, October 4, 2024

சித்தன் அருள் - 1683 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி!

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால்  புரட்டாசி மாதத்தில் வழிநடத்தப்பட்டு வருகின்றோம் . குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் புரட்டாசி மாத சிறப்பு பதிவாக சித்தன் அருள் - 1683- அன்புடன் அகத்தியர் - திருப்பதி!  வாக்கினையும் ,  வாக்கினில் இருந்து புரட்டாசி சனிக்கிழமை  தொடர்புடைய ஒரு உயர் பக்தி கதையை   காண உள்ளோம். இம்மாதம் நாம் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு பற்றி இதற்கு முன்னர் பதிவு செய்திருந்தோம். புரட்டாசி மாதம் முழுதும் பெருமாள் வழிபாடு மேற்கொள்ள நம் குருநாதர் கூறி இருந்தார்கள். எனவே இந்த மாதம் முழுதும் பெருமாள் வழிபாட்டு மேற்கொள்வோம். இதன் பொருட்டும் இம்மாதம் முழுதும் பெருமாளை பற்றி சிந்திக்கும் வண்ணம் நம் தளத்தில் பதிவுகள் பகிர குருவருள் நம்மை வழிநடத்திட வேண்டி பணிவோமாக!







21/9/2024 புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி. 

"புரட்டாதி மாதத்தில் இயலாதவர்களுக்கு அன்னத்தை அளியுங்கள்!!!!!! குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளிலும் அன்னத்தை இயலாதவர்களுக்கு அளியுங்கள்!!! நாராயணனே வந்து வாங்கி உட்கொள்வான்!!!!!!"

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே நலன்கள் ஆசிகள்!!!

அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் இன்னும் வாக்குகள் அப்பனே பின் செப்பும் பொழுது அப்பனே  மனிதன்  தெளிவடைவான் என்பேன் அப்பனே!!!!

இவ்வாறு பின் தெளிவடைந்து அப்பனே அவந்தனுக்கே அதாவது தெளிவுகள் வந்து விட்டால் அப்பனே தெளிவடைந்து விட்டால் அப்பனே அவந்தனுக்கே நிச்சயமாய் யான் அதாவது யாங்கள் அறிந்தும் எதை என்றும் கூற... யாம் அவந்தனுக்கு கூட கொடுத்தல்....!!!!

அப்பனே சக்திகள் பின் கொடுத்து அப்பனே...அவந்தனையே பின் அனைத்தும் காக்க!!!! அதாவது தன் குடும்பத்தையும் காக்க அப்பனே பின் குடும்பத்திற்கு என்னென்ன வேண்டும்??? என்றெல்லாம் அப்பனே அவனே செய்து கொள்வான் என்பேன் அப்பனே. 

அதனால்தானப்பா!!!!.... அப்பனே யான் சொல்லியதெல்லாம் சரிமுறையாகவே யார்? ஒருவன்? அப்பனே பின் கடைபிடிக்கின்றானோ!!!!... அவந்தனுக்கு அப்பனே நிச்சயமாய் சக்திகள் கொடுத்து அவந்தன் குடும்பத்தையும் அவந்தன் சுற்று வட்டாரத்தையும் கூட பின் அவனே பாதுகாத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே இப்போது உள்ள நிலைமைகளில் எல்லாம் அப்பனே நிச்சயம் தெரியாமல் அதாவது கலியுகத்தில் அப்பனே பின் தெரியாமல் பின் எதை எதையோ செய்திட்டு அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பின் ஒன்றும் எதை என்று கூட நடக்காமல் அப்பனே!!........ பின் இறைவனே பொய் என்று அப்பனே பின் நிச்சயம் கலியுகத்தில் சொல்வானப்பா!!!! 

இறைவனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள்... அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எதை எதையோ செய்து விட்டு அப்பனே ஒன்றுமே நடக்கவில்லையே என்று!!!

ஆனாலும் அப்பனே இறைவன் கொடுக்க தயாராகவே!!!

ஆனாலும் அப்பனே அதை தன் எப்படி? வாங்குவது?? என்று கூட மனிதனுக்கு தெரியவில்லையே!!! அப்பனே !!!!

ஆனாலும் இறைவன் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றான் அப்பனே!!!

 அதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்..

அதற்காகத்தான் அப்பனே இவை!!!....(வாக்குகள்)


 இவை அறிந்தும் எதை என்றும் அறிந்தும் இதை என்றும் இவைதன் கூட புரிந்து இதனால்தான் அப்பனே பின் அதனைக் கூட பெற்றுக் கொண்டாலே போதுமானதப்பா !!!!!

அப்பனே அனைத்தும் அதாவது பின் அனைத்தும் தெரிய வேண்டும் அப்பனே...


 அனைத்தும் தெரிந்தால் தான் அப்பனே அதாவது அப்பனே பின் அனைத்தும் தெரிந்தவன் தான் அப்பனே பின் கல்விக் கூடங்களில் கூட அப்பனே பின் தேர்ச்சி பெற்று உயர் பதவி கூட வகிக்கின்றான் அப்பனே.

அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் இறை பலம் அதாவது பின் பக்தி என்பது என்ன???? என்பதை கூட தெரிந்து விட்டால் அப்பனே அனைத்திலும் தேர்ச்சி பெற்று முதல் வகுப்பினில் (முதலிடத்தில்) உட்கார்ந்து அப்பனே பின் அனைத்தும் செய்வானப்பா !!!

யாராலும் ஒன்றும் செய்ய முடியாதப்பா!! நிச்சயமாய் அப்பனே! 

ஆனால் அப்பனே பின் ஏதோ ஒன்றைக் கூட பின் தெரிந்து கொண்டு அப்பனே பின்  அதன் பின்னே திரிந்து வந்தால் நிச்சயம் அப்பனே அதுவே அவந்தனுக்கு அப்பனே குற்றமாக போய்விடும் என்பேன் அப்பனே.

மீண்டும் அப்பனே பின் சிக்கிக் கொண்டால்... அவந்தனுக்கு எப்படி?? வெளியே வருவது??? என்பதை கூட தெரியாமல் போய்விடும் என்பேன் அப்பனே. 

இதனால் தான் அப்பனே பின் சித்தர்கள் அப்பனே..... யாங்கள் வந்து வாக்குகள் உரைத்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே நலன்களாகவே!!!!





ஆனாலும் சித்தர்கள் எங்களை வைத்து எதையெதையோ செய்து கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள் என்பேன்  அப்பனே !!!!

ஆனாலும் யாங்கள் நினைத்தால்!?!?!?!?!?!?!?!?

 பின் அவர்கள் பாவம் என்றே!!!! அப்பனே!!!!

 அவனவன் பின் எதை என்று அறிய அறிய அப்பனே... இதனால் அப்பனே அவனவன் பின் செய்த தீமைகள் பின் நன்மைகள் அப்பனே அதாவது பின் எதை என்றும் கூட அப்பனே நிச்சயமாய் அப்பனே பின் கடைசியில் அடிக்கத்தான் போகின்றது. 

ஆனாலும் அப்பனே அவை அடிக்காமல் இருக்க அப்பனே இப்போதிருந்தே யான் நிச்சயம் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் வாழ்க்கை அப்பனே அதாவது எல்லையில்லா அழிவுகளும் உண்டு அப்பனே மனிதனுக்கு எல்லையில்லா வெற்றிகளும் உண்டு அப்பனே !!!!

ஆனாலும் அதை எப்படி நிச்சயம் பின் பெற்றுக் கொள்ள வேண்டும்?? என்பதையெல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைக்கும் பொழுது அப்பனே நிச்சயம் புரியுமப்பா...

 அப்பனே பின் அறிந்தும் செயல்பட்டால் போதுமானதப்பா !!!
அப்பா!!!... நீடூழி அப்பனே வாழ்ந்திடலாம் அப்பனே.. இன்னும் இன்னும் அப்பனே!!!


 எதற்காக ??? 70 வயதிலும் கூட பின் 80 வயதிலும் கூட பின் அறிந்தும் கூட அப்பனே இவ்வாறெல்லாம் அப்பனே மனிதருக்கு ஆயுள் அப்பனே பின் முடிகின்றது. 

இதனால் அப்பனே இதையெல்லாம் யான் சொல்வேன் வரும் காலத்தில் என் பக்தர்களுக்கு அப்பனே!!!

 தெளிவாக இருங்கள் என்பேன் அப்பனே. 

ஒவ்வொன்றையும் கூட சரியாக பயன்படுத்தி கொண்டு வாழுங்கள் என்பேன். அப்பனே!!!

இதனால் அப்பனே அனைத்தையும் சொல்வேன் அப்பனே!!! பின் அதாவது அப்பனே அறிவியல் பின் வேதியல் அப்பனே பின் கணக்கியல் அப்பனே இன்னும் எதை எவை என்று அறியாமல் நீங்கள் இருந்தாலும் அனைத்தையும் யான் ஒவ்வொன்றாக சொல்லி வருவேன் அப்பனே... அனைத்திலும் அதாவது நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும். 

பக்தி அப்பனே அதாவது பக்தி என்னவென்றே அப்பனே பின் தெரியாமல் இறைவனை வணங்குதல் தவறு என்பேன் அப்பனே...

அதுவே ஒரு பாவச் செயல் என்பேன் அப்பனே. 

ஆனால் அப்பனே தெரிந்து வணங்கினால் அப்பனே பின் உண்மை நிலை புரிந்து அப்பனே அதுவே ஒரு புண்ணியமப்பா!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!! அப்பனே தெரியாமல் வணங்கினாலும் அதுவும் பாவமப்பா!!!

 தெரிந்து வணங்கினால் அது புண்ணியமப்பா !!!

அப்பனே இதை நன்கு அறிந்தாலே போதுமானதப்பா!!!


அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் எதை என்று இவையென்று கூற இதனால் அப்பனே நன்முறையாகவே அப்பனே பெருமாள்... பின் ஆசிகள் தந்து கொண்டே இருந்தான் இங்கு..(திருமலை திருப்பதி). வரும் ஒவ்வொருவருக்கெல்லாம் அப்பனே... வருவோருக்கெல்லாம் அப்பனே ஆசிகள் தந்து!!! தந்து!! அப்பனே மாற்றங்கள் பின் ஏற்பாடுகள் செய்து கொண்டே இருந்தான் அப்பனே. 

இவ்வாறு பின் பெருமான்!!!...... பெருமானை காண பின் ஓடோடி வருவார்கள்... அப்பனே !!!!!

 வந்து அவந்தனுக்கு அனைத்தும் கிடைத்துவிட்டால் அப்பனே அவந்தன் இன்னும் அப்பனே பாவச் செயல்களில் ஈடுபட்டு அப்பனே பாவத்தை பெற்றுக் கொண்டு... அவன் மட்டும் அப்பனே பாவத்தை அறிந்தும் கூட பெற்றுக் கொண்டும் மற்றவர்களுக்கும் பெறச் செய்வான். 

இதனால் அப்பனே பின் மௌனமுற்றான் பெருமான்... இனி யாருக்கும் ஆசிகள் தரக்கூடாது என்று...


ஆனாலும் மௌனத்தை அறிந்தும் கூட!!! இதனால் மீண்டும் ஒரு யோசனை வந்தது... பின்பு !!  பார்ப்போம்!!!!!! அறிந்தும் இன்னும் ஆசிகள் கொடுப்போம் என்னென்ன வேண்டும்? என்று!!

மீண்டும் மனிதன் திருந்துகின்றானா??? என்று பார்ப்போம்!! என்று !!

ஆனாலும் வருவோருக்கெல்லாம் என்னென்ன தேவையோ?? அனைத்தையும் கொடுத்தான் பின் நாராயணன். 

பின் ஆனாலும் சில காலங்கள் ஆனாலும் இப்படியே பயன்படுத்தினார்கள் மனிதர்கள். 

 பின் அவர்களுக்கு அனைத்தும் நடந்தது!!!

 பின் ஆனாலும் மீண்டும் பின் பாவத்தில் தான் நுழைந்தார்கள்..

ஆனாலும் புண்ணியம் யாருமே செய்யவில்லை... அப்பனே இது கலியுகத்தில் நடந்தது தான்... அப்பனே இவ்வாறு புண்ணியங்கள் யாருமே செய்யவும் கூட முன்வரவில்லை...

ஆனாலும் பின் அதாவது மனம் நொந்தான் நாராயணன். 

ஆனாலும் பின் அறிந்தும் எதை என்றும் கூறும் கூறுகின்றபொழுது... இப்படி செய்கின்றார்களே!!!!..... மனிதர்கள் !!!


எவ்வாறு?? நியாயம்??

அதாவது தர்மத்தை நிலை நாட்ட வேண்டும்!!!

 நிச்சயம் பின் அதாவது நல்லோர்கள் பின் காக்க வேண்டும் அதாவது ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.... 


ஆனாலும் இவற்றுக்காக தான் அதாவது நன்றாக வாழ வேண்டும் மனிதர்கள்... இவ்வாறு இதற்காகத்தான் தான் அனைத்தும் யான் பின் நிச்சயம் கொடுத்து கொடுத்து அருள்கள் கொடுத்து கொடுத்து கொண்டே இருந்தேன். 

ஆனால் மனிதனோ!? அதை பயன்படுத்திக் கொண்டு தவறான வழிகளில் எடுத்துச் சென்று... அவனும் அழிந்து பின் அவன் குடும்பத்தையும் இன்னும் சுற்றோர் இன்னும் இன்னும் அவனை சார்ந்தோரை எல்லாம் அழித்துக் கொண்டு இருக்க!!!.....

 நிச்சயம் எவ்வாறு நியாயம்?? என்று மனதிலே அதாவது நாராயணன் மனதிலே!!!

 எப்படி வரங்கள்???
 பின் வரங்களை தருவதை நிறுத்துவதா?! என்றெல்லாம்???

ஆனாலும் சரி பின் பெருமானுக்கு யோசனைகள் வந்தது....

ஆனாலும் அதாவது பின் என்னையே அழைத்தான் நாராயணன்! 

மாமுனிவரே!!! அகத்தியரே!!! என்றெல்லாம்! 

யானும் வந்துவிட்டேன் ஓடோடி!!

பின் நாராயணன் கூட!!!! பின் மாமுனிவரே!!!!! அனைத்தும் உணர்ந்தவர் நீர்!!!

ஆனாலும் யான் அனைத்தும் செய்கின்றேன் அனைத்து மனிதர்களுக்கும் என்னென்ன தேவை என்று உணர்ந்து!!

அதாவது கேட்டாலும் பின் கேட்காவிடிலும் பின் அறிந்தும் கூட என்னிடத்தில் வந்து விட்டால் அனைத்தும் யான் கொடுக்கின்றேன். 

ஆனாலும் அவர்கள் பின் வரங்களை வாங்கி சென்று சென்று பின் என்னென்னவோ செய்து செய்து பாவத்தை சம்பாதித்து மீண்டும் அறிந்தும் கூட அப்படியே பின் நோய்கள் இன்னும் நொடிகள் அதாவது அறிந்தும் இதை என்றும் கூட 
இன்னும் அனைத்தும் பின் பெற்றுக் கொள்கின்றார்கள்.

 ஆனால் எப்படி நியாயம்??இது??

 ஆனாலும் இப்படி மீண்டும் பின் அவ்வாறு கொடுத்திருந்தாலும் அவனவன் செய்த பாவத்தால் மீண்டும் அவந்தன் பழைய நிலைமைக்கு வந்து..!!!


 பின் நாராயணனிடம் சென்றேனே!!!!!!! பின் அனைத்தும் கொடுத்தான் ஆனால்... இப்பொழுது ஒன்றும் கொடுக்கவில்லை யான் என்ன செய்வேன்?? என்றெல்லாம்..
பின் நாராயணன் கூட...


 ஆனாலும் பின் யானும் சொன்னேன்!!!

நாராயணரே!!!!.... பின் சென்று பார்ப்போம்!!!! நிச்சயம் இங்கே இருந்தால் ஒன்றும்!!!.......

 நிச்சயம் பின் அதாவது உன் பக்தர்களுக்கு என்னென்ன கொடுத்தாய்??? என்பதையெல்லாம் பின் சென்று பார்ப்போம் என்று!!

ஆனாலும் ஒவ்வொரு இல்லத்திற்கும் கூட...
ஆனாலும் அறிந்தும் கூட

ஆனால் ஒரு கட்டளை.. அதாவது நீயும் தர்மம் ஏந்துபவனாக இருக்க வேண்டும் யானும் தர்மம் ஏந்துபவனாக இருக்க வேண்டும் (பிச்சைக்காரர் ரூபத்தில்)... அதாவது நீ  அனைவருக்கும் அனைத்தையும் கொடுத்து அனுப்பினாய். 

இன்னும் உன்னால் பல பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்... அவர்களை சென்று பார்ப்போம் என்று..

அதனால் நிச்சயம் பின் அதாவது முதலிலே அப்பனே... யாங்கள் இருவருமே பின் தர்மம் ஏந்துபவன் வேடத்தில் வந்தோம். 

அதாவது பின் யாரெல்லாம் பின் நாராயணனிடம் வந்து வரங்கள் வாங்கி பின் பல மாற்றங்கள் ஏற்பட்டு பின் உயரத்திற்கு சென்று விட்டார்களோ!!!!! அவர்கள் இல்லத்திற்கெல்லாம் சென்றோம். 

பின் அதாவது அம்மையே!!! தந்தையே!!!...

ஏதாவது இருந்தால் கொடுங்கள்!!!

அதாவது உணவையாவது கொடுங்கள்... என்றெல்லாம் கேட்டோம்...

ஆனால் அவர்களோ... யாசகம் கேட்பவர்கள் வந்துவிட்டார்கள் இவர்களுக்கு வேறு வேலை இல்லை.... அதாவது உழைத்து!!! பின் எதை என்று.... 

(உழைத்து பிழைக்க வேண்டியது தானே என்று)

எங்களை பார்த்து நாங்கள் 
 உழைத்து தான் யாங்கள் முன்னேறி வந்தோம்.... அதேபோல் பின் நீங்களும் அதாவது பின் வெளியே சென்று நீங்களும் உழைத்து வாழுங்கள் என்று!!!


ஆனாலும் அவர்கள் எங்களை பார்த்து அதாவது ஏதாவது வேலை கொடுத்தால் வேலை செய்கின்றீர்களா??? என்று !!!!

சரி  என்று யானும் சொன்னேன்!!!!!

 நாராயணனே.... நிச்சயம் பார்த்தாயா... இவர்களுக்கு அனைத்தும் கொடுத்து!!!........


ஆனாலும் இருக்கின்றது!!! இவர்களிடம் அனைத்தும் இருக்கின்றது !!!

ஆனால் கொடுக்க மனம் இல்லையே இவர்களுக்கு!! என்று!! 

சரி... வேலை கொடுக்கின்றார்கள் அல்லவா!!!

 பின் வேலையும் செய்கின்றோம் என்று 

ஆனாலும் அவ் இல்லத்தில் யாங்கள்... வேலைகளும் பார்த்தோம்.... ஆனாலும் ஒரு வேளை தான் உணவு... அறிந்தும் கூட. 

ஆனாலும் யான் சொன்னேன் அறிந்தும் கூட !!!

நாராயணனே!!!! பார்த்தீர்களா.... எவ்வளவு? கொடுத்தீர்கள்!!! இவர்களுக்கு!!!

ஆனால் மனதில்லையே.... ஆனால் இவர்கள் இவ்வாறு மனதை வைத்துக் கொண்டு!!!

 எவ்வாறு தான்... நீயும் கொடுத்தாய்!!!

அதனால் இங்கு உன் தவறு தான் என்று நாராயணனை பார்த்து யான் சொன்னேன்.

நாராயணன் 
பின்  மாமுனிவரே!!!! அறிந்தும் கூட என்னிடத்தில் வந்து விட்டால்.... அறிந்தும் கூட அனைத்து வரங்களையும் யான் தந்து விடுவேன்....

ஆனால் இப்படியா?? மனிதர்கள் என்று. 

அனைத்தும் ஆனாலும் பின் நாராயணனுக்கு வேலையே!!..... பின் வரம் கொடுப்பதுதான்... எதையுமே யோசிப்பதில்லை.. பின் நன்று எது? தீது (தீமை) எது? எதை என்று அறிந்தும் கூட. 

 அதாவது மீண்டும் அதாவது நாராயணன் நாம் சென்று விடலாம் இவ்வாறு பின்... மனம் படைத்தவர்களிடம்  நிச்சயம் வேண்டாம் என்றெல்லாம். 

பின் ஆனாலும் யான் நாராயணனை பார்த்து 

பொறுத்திரு!!!

நாராயணனே !!!மீண்டும் ஆத்திரம் பின் அடையாதே பொறுத்திரு!! என்று...

மீண்டும் அங்கே வேலைகள் செய்தோம்...

ஆனாலும் பின் ஒரு பெண் அதாவது அவ்வாறு அவ் இல்லத்தின் இல்லத்தரசி.

அவளிடம் நிச்சயம் தாயே!!!!

தண்ணீர் கொடு!!!

இவ்வாறு வேலைகள் செய்தோம் .... தாகம்.. என்று தாயே !! தண்ணீர் கொடு ! என்று. 

அவ் இல்லத்தரசி... தண்ணீர் எல்லாம் இல்லை... உங்கள் வேலையை மட்டும் செய்யுங்கள் பின் உங்களுக்கு தண்ணீர் வேண்டுமென்றால்  கூட வெளியே தான் நிச்சயம் நீங்கள் அருந்த வேண்டும் என்றெல்லாம். 

ஆனாலும் நிச்சயம் பின் ஆனாலும் யானும் ஒரு கேள்வியை கேட்டேன்..அவ் இல்லத்தரசியிடம்.


தாயே!! ஒரு! இல்லத்தரசி இப்படி  இருக்கக் கூடாது!!! இப்படி இருந்தால் தரித்திரம் தான் உண்டு என்று. 

ஆனாலும் அவள் என்னை அடிப்பதற்கு கையை ஓங்கி!!!!...... யார் நீ???????????

அதாவது பிச்சைக்காரன் நீ!!!!!!!

நீ சொல்வதையா? நான் கேட்க வேண்டும்????????
என்றெல்லாம் என்னையும் கூட.!!!....


அதாவது நாராயணனும் கூட பின் அகத்திய மாமுனிவரே!!!... என் தவறு தான்!!!
 இங்கு வந்து விடுங்கள் யான் செய்த தவறுக்கு நிச்சயமாய் நீங்களா!!!!.............

இவ்வாறெல்லாம் பெண்கள் இருக்கின்றார்களா??? இவ்வுலகத்தில் !?!?!?!?!?!?!?!?!?!?!
என்றெல்லாம். 


ஆனாலும் யான் எதையுமே யோசிப்பதில்லை.... பின் வந்தவருக்கெல்லாம் ஆசிகள் தந்து அனுப்புகின்றேன் ஆனாலும் இப்படியா? இப்படியெல்லாம் மனம் படைத்தவர்களெல்லாம்!!!!!


ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட ஆனாலும்... யானும் மௌனத்தையே காத்திருந்தேன். அதாவது அமைதியாக இருந்தேன். 

தாயே சரி !!!! யாங்கள் வெளியில் சென்றே!!!.......(நீரை குடித்துக் கொள்கின்றோம்) நிச்சயம் அறிந்தும் கூட!!!


ஆனாலும்... இனிமேல் இங்கு யாங்கள் வேலை செய்யப் போவதில்லை!!!!


அப்பெண்மணி 

நீங்கள் வேலை இங்கு செய்தவதால் தானா??? நாங்கள் பிழைக்கின்றோம்!?!?!?!? என்றெல்லாம்.


ஆனாலும் உண்மைதானப்பா இப்படித்தான் பின் உலகம் இயங்கிக் கொண்டே இருக்கின்றது.


ஆனாலும் அப்பனே... பார்த்தோம்!! பார்த்தோம்!! ஆனாலும் அப்பனே பல மனிதர்களையும் பார்த்து விட்டோம்... அதனால்தான் அப்பனே மனிதனை எவ்வாறெல்லாம்?? திருத்த வேண்டும்?? என்பதையெல்லாம் அப்பனே யோசனைகள் அப்பனே!!

ஆனாலும் நாராயணனும் யானும் வெளியே வந்து விட்டோம்... பின் நாராயணனும் கூட அறிந்தும் கூட... பின் அறிந்தும் எவை என்றும்.. கூற இன்னும்.... பார்த்தாயா??!!!.. என்று!!!

ஆனாலும் பின் நாராயணன் ஒருவன் பக்தன் இருந்தான். அதாவது இன்னும் சில சில மைல் தூரத்தில் கூட. 

அவ் பக்தன் அதாவது பெருமானுக்கும் ஞாபகம் இருக்கின்றது!!! நாராயணன் நாராயணன் என்றே என் மீதே அதிகம் பக்தி கொண்டிருக்கின்றான் . அதனால் அவன் இல்லத்திற்கு செல்வோம் என்று. நாராயணன். 

ஆனாலும் அறிந்தும் எதை என்று கூட அதாவது அப்பனே இவையெல்லாம் இப் புரட்டாதி மாதத்தில் தான் நடந்தது என்பேன் அப்பனே. 

அதாவது அப்பனே அனைத்தும் கூட....

அதாவது நாராயணன் சொன்னான் நிச்சயம்... அவன் எனை எப்பொழுதும் நாராயணா நாராயணா கோவிந்தா கோவிந்தா என்றெல்லாம் அவ் பக்தன் அழைத்துக் கொண்டே இருப்பான் என்று.

ஆனாலும் அறிந்தும் இவை என்றும் அறிந்தும் கூட அவன் இல்லத்திற்கு செல்வோம்.... ஏதாவது செய்வானா? என்று பார்ப்போம் !!என்று நாராயணன் கூட. 

அதேபோல் பின் சரி!!! அவன் இல்லத்திற்கு போகலாமே என்று!!! பின் யானும் சென்றேன் அறிந்தும்.


ஆனாலும் பின் அவனிடத்திற்கு சென்று பின் தர்மம் ஏந்தினோம்!!!

பின் ஐயா!!!!! யாராவது இருக்கிறீர்களா என்று யானும் கேட்டேன். 


அவ் பக்தன்.

நிச்சயம் பின் வந்து விட்டீர்களா!!! பின் அறிந்தும் கூட அனைத்தும் செய்து இருக்கின்றேன் அதாவது உணவு பலமாக இருக்கின்றது.
ஆனால் முதலில் நாங்கள் பெரிய மனிதர்களுக்கு கொடுத்துத்தான் நிச்சயம் உங்களுக்கு கொடுப்பேன்... அதனால் பின் வெளியிலேயே உட்காருங்கள் என்று.


ஆனாலும் எதை என்றும் அறிந்தும் கூட அந்நேரத்தில் நிச்சயம் நாராயணன் மறைந்து அதாவது பின் மறைந்து விட்டான்... அதாவது மனிதர்கள் தான் பெரியது என்று!!!

(பெரிய மனிதர்களுக்கு தான் முதலில் உணவு வழங்குவோம் என்று சொன்னதை கேட்டு நாராயணன் இங்கு பெரிய மனிதர்களுக்கு தான் இடம் அதனால் மறைந்து விடுவோம் என்று தன் ரூபத்துடன் மறைந்து விட்டார்)


அப்பனே பார்த்தீர்களா!!! அப்பனே!!!

இப்படித்தான் புத்திகள் இருக்கின்றது... இன்னும் அப்பனே பின் கலியுகத்தில் இப்படித்தான் புத்திகள் போகும் என்பேன் அப்பனே 

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் பின் அறிந்தும் கூட உணவை உண்ண அனைவரும் சென்றனர் அப்பனே... அதாவது பின் பணம் படைத்தவர்கள் அறிந்தும் கூட... பின் அனைவருக்குமே இடம் கிடைத்தது..

ஆனாலும் யாங்களும் மீண்டும் சென்று உட்காருந்தோம்.(உணவு பரிமாறும் இடத்தில்) 

நீங்கள் யார்??? எழுந்து நில்லுங்கள் என்று!!!

ஆனாலும் யாங்கள் சொன்னோம்!!!... யாங்கள் தான் பெருமாளுடைய பக்தர்கள்.... அதனால் எங்கிருந்தோ வந்தோம் எங்களுக்கு நிச்சயம் உணவு கொடுங்கள் என்று யானே கூறினேன்.


ஆனாலும் அவன் பெருமாளும் எந்தனுக்கு தெரியும்!!!
அதாவது நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்!!! என்று பின் எழுந்து நில்லுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

அப்பனே இப்படித்தானப்பா புத்திகள் இருக்கின்றது அப்பனே மனிதருக்கு அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. 

அதாவது அனைத்தும் சரியாகிவிட்டால் அப்பனே இறைவனையே மறந்து விடுவார்களப்பா!!! நன்றி கெட்ட மனிதனப்பா!!!

அதனால்தான் அப்பனே ஈசனே பின் அறிந்தும் கூட அழிவுகள் ஏற்படுத்துகின்றான் அப்பனே.

ஈசனே அப்பனே மனிதர்களுக்கு கஷ்டங்கள் கொடுக்கின்றான் என்பேன் அப்பனே...அவ் கஷ்டத்திற்கு அப்பனே மீண்டும் பின் இறைவனிடத்திலே சரணாகதி அடைந்தால்.... அப்பனே எப்படியப்பா??????
அது மட்டும் இல்லாமல் அப்பனே..... 



மீண்டும் சரி!!!! உங்கள் உணவு வேண்டாம் என்று யாங்கள் பின் சென்று!!!... அதாவது தெரிவித்தோம் அவர்களிடத்தில்!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய... உங்களுக்கு உணவு வேண்டாமா????? நீங்கள் சென்று விடுங்கள்!!!

எவ்வளவு திமிர் ???அறிந்தும் கூட உங்களுக்கு எவ்வளவு திமிர்??? நீங்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள்!!!.... என்று அதாவது செருப்பை எடுத்து வீசினானப்பா!!!!


அப்பனே இது தானா? பக்தி???????????

அப்பனே இவ்வுலகத்தில் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது அப்பனே. 

இதனால் தான் அப்பனே பக்திகள் பொய்களாக அப்பனே...

இதனால்தான் அப்பனே பக்திக்குள் இருந்தே அப்பனே ஏமாற்று வேலைகள் என்பேன் அப்பனே. 

இன்னும் இன்னும் அப்பனே பின் சித்தன் பேசினான் இன்னும் இறைவன் பேசினான் என்றெல்லாம் அப்பனே பொய்கள் கூறி பொய்கள் கூறி அப்பனே இன்னும் அனைத்தும் பின் அழிப்பானப்பா...

 அதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே... ஆனாலும் பின் ஒன்றும் நடக்காமல் அப்பனே மீண்டும் இறைவனைத் தான் குற்றம் குறை கூறிக் கொண்டிருப்பான் அப்பனே 

ஆனால் அது பெரிய தவறு என்பேன் அப்பனே.... இவ்வாறுதான் இவ்வுலகம் என்பேன் அப்பனே. 

அதாவது பக்திக்குள்ளே நுழைந்து யான் தான் பெரியவன் அவன் சிறியவன் அவனுக்கு என்ன தெரியும்???? எந்தனுக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என்றெல்லாம் அப்பனே!.. பின் சுற்றி உலாவிக் கொண்டிருப்பான் என்பேன் அப்பனே. 

ஆனால் உண்மையுள்ள ஞானி அப்பனே அனைத்தும் இறைவன் செயலே என்று விட்டுவிடுவான் என்பேன் அப்பனே... 


அதுபோல் இக்கலி யுகத்தில் இருக்கின்றானா??????? என்பது அப்பனே நிச்சயம் இல்லை என்பேன் அப்பனே...

அறிந்தும் கூட அப்பனே.... அதாவது அப்பனே ஒருவனுக்கு ஒருவன் சண்டைகள் அப்பனே அதாவது பக்தனுக்குள்ளே பக்தன் சண்டைகளப்பா!!! போட்டி பொறாமைகள் அப்பா... இவை நீக்குங்கள்!! இவை நீக்குங்கள்!!! என்றெல்லாம் அப்பனே யான் நிச்சயம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் என்பேன் அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எதையெதையோ சொல்லி சொல்லி அப்பனே மனதை மாற்றி அப்பனே பணங்களை பறித்து அப்பனே 

ஆனாலும் அப்பனே ஒன்றும் பிரயோஜனமில்லை...

ஆனாலும் பின் அவ்வாறு சாமியார் வேடம் இட்டுக்கொண்டு பின் அனைத்தும் சொன்னானே... ஒன்றுமே நடக்கவில்லையே!!!!!!!

அப்பொழுது இறைவன் இங்கு பொய்தான் என்று!!!

இதனால்தான் அப்பனே இறைவனுக்கே கோபம் வந்து விடுகின்றது என்பேன் அப்பனே 

அறிந்தும் அறிந்தும் கூட. 

இதனால் அப்பனே அதாவது அப்பனே மீண்டும் சென்றோம் அப்பனே. 

அதாவது மீண்டும் நாராயணன் சொன்னான்... ஒருவன் இருக்கின்றான் அதாவது பின் அவந்தன் ஊனமுற்றவன்... அதாவது அவந்தன் என்னிடத்தில் வந்து கொண்டே இருப்பான்.... அவனிடத்திலாவது செல்வோமா???? என்று !!!


பின் நிச்சயம் செல்வோம் என்று யானும்!!!!கூட..

பின் சென்றோம்... அவனிடத்தில்... அறிந்தும் கூட 

ஆனாலும் வரவழைத்தான் (வரவேற்பு) அறிந்தும் கூட... பின் என்ன வேண்டும்?? என்று!! அவன் எங்களிடத்தில் கேட்டான்! 

நிச்சயம் யாங்கள் பிச்சைக்காரர்கள் தான்... எங்களுக்கு ஏதாவது உணவு இருக்கின்றதா?? என்று!!!

நிச்சயம் இருக்கின்றது... நிச்சயம் அதாவது பின் அறிந்தும் கூட யான் பெருமாள் பக்தன் தான்... அதனால் நிச்சயம் யான் ஊனமுற்றவன் என்று என்னை யாருமே கவனிக்கவில்லை... அதாவது யான் பாவம் செய்து விட்டேனா???? என்ன!!!

நிச்சயம் ஆனாலும் பின் நல்விதமாகவே இப்பிறப்பில் நாராயணா நாராயணா என்று நினைத்துக் கொண்டிருக்கின்றேன்... ஆனாலும் பின் என்னை அனைவருமே... இவந்தன் நிச்சயம் பின் அதாவது பாவம் செய்து விட்டான் என்று ஒதுக்கி விட்டார்கள். 

நீங்கள் இருவராவது பின் வந்தீர்களே என்று அழகாகவே அதாவது அப்பனே அனைத்தும் உபசரித்தான் என்பேன் அப்பனே...

அழகாக யாங்கள் உட்கொண்டோம் அப்பனே..

பின் அறிந்தும் கூட அதாவது யாங்கள் கேட்டோம் அவனிடத்தில்!!!!..... பின்  உந்தனுக்கு என்ன தேவை??? என்று!!!

பின் அப்பனே அறிந்தும் எதை என்றும் அறிய அறிய சொல்!!!
உந்தனுக்கு என்ன தேவை என்று???

பின் அதாவது எந்தனுக்கு ஒன்றும் தேவையில்லை.. பின் யான் அதாவது ஒருவனே தான் அதாவது ஊனமுற்றவன் என்று பின் எனை ஒதுக்கி விட்டார்கள்.... உற்றவர்கள் எல்லாம்... இன்னும் எந்தனுக்கு திருமணம் கூட நடக்கவில்லை... அதாவது பின் யான் ஒருவனே உணவு சமைத்து உட்கொண்டிருக்கின்றேன் அதாவது....இவ் புரட்டாதி மாதத்தில் அதாவது நாராயணா!!! நாராயணா!!! என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பேன். அதாவது புரட்டாதி மாதத்தில் சனி தோறும் யான் நிச்சயம் பின் அன்னத்தை படைப்பேன். 

அதாவது ஒரு நாளாவது பின் பெருமானும் என் இல்லத்திற்கு வருவான் என்று காத்திருப்பேன்... அது மட்டும் போதும் என்று எண்ணிக் கொண்டு பின் சனி தோறும் அதாவது பின் எப்பொழுதெல்லாம்... பின் புரட்டாதி திங்கள் அதாவது பின் சனிக்கிழமை எதையென்று அறிய அறிய யானும் அதாவது பின் யானே உணவை சமைத்து பின் அதாவது வைத்திடுவேன்... அதாவது நிச்சயம் இவை அறிந்தும் கூட ஆனால் இதுவரை யாருமே என்னிடத்தில் வரவில்லை..

அதாவது அவ் உணவையும் கூட பின் யாருக்காவது கொடுப்பேன்... ஆனால் யாரும் பின் வாங்க மாட்டார்கள்..

ஆனாலும் அறிந்தும் கூட இப்பொழுது நீங்கள் இருவருமே வந்திருக்கிறீர்கள். 

எந்தனுக்கு அதுவே போதும் எந்தனுக்கு பெரிய சந்தோஷம் பின் ஆசீர்வதியுங்கள் என்று நிச்சயம் பின்  கால்களில் கெட்டியாக பிடித்து நிச்சயம் அதாவது நீங்களும் கூட பிச்சைக்காரர்களே!!!!.... ஆனாலும் இவ் இல்லம் தான் எங்களுக்கு சொந்தம்... அதாவது உங்களிடத்திலே யான் வருகின்றேன் என்றெல்லாம் அவந்தனும் கூட.!!!


அப்பப்பா!!!!!!...... அப்படி வேண்டாம்!!!!... யாங்கள் பிச்சை அதாவது அறிந்தும் கூட...

ஆனாலும் அப்பனே நீங்களும் கேட்கலாம் அப்பனே ஆனாலும் பிச்சை பலபேர் எடுக்கின்றார்கள் என்பேன் அப்பனே...

ஆனாலும் அதில் கூட அறிந்தும் கூட பின் இறைவன் எப்படி வருவான்??? என்பதெல்லாம் அப்பனே... பின் வந்தாலே அதாவது பக்தி சரியாகவே இருந்தாலே அப்பனே உங்களுக்கே தெரிந்து விடும் என்பேன் அப்பனே. 

அப்படி நீங்கள் பக்தியாக இல்லை என்றால் அப்பனே பின் ஏமாற்று வேலைதான் அங்கு நடைபெறும் என்பேன் அப்பனே... இவையெல்லாம் நிச்சயம் அப்பனே. 


(உண்மையான பக்தியை கடைப்பிடித்து... தராதரம் பார்க்காமல் மன மகிழ்ந்து முழு மனதோடு அன்னம் ஆயினும் சரி வேறு எந்தவித தான தர்மங்கள் ஆயினும் சரி செய்யும் பொழுது இறைவன் எந்த ரூபத்தில் வந்தாலும் சூட்சுமமாக உணர்ந்து கொள்ள முடியும்....

பக்தி இல்லாமல் கடமைக்கு ஆடம்பரத்திற்கு விளம்பரத்திற்காக தான தர்மங்கள் செய்யும் பொழுது அங்கு ஏமாற்று வேலைகள் தான் நடக்கின்றது.உண்மை பக்தியோடு தான தர்மங்கள் செய்யும் பொழுது இறைவனே வந்து அதை பெற்றுக் கொள்கின்றார். 

போலி பக்தியோடு தான தர்மங்கள் செய்யும் பொழுது போலியான ஏமாற்றுக்காரர்கள் வந்து ஏமாற்றி செல்கின்றார்கள் அவ்வளவுதான்)


அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே அதாவது பின் யாங்கள் இருவரும் இங்கு இருக்கலாமா??? என்று யானும் பின் அதாவது நாராயணனும் கேட்டோம் அவனிடத்தில். 

அவன்

தாராளமாக நீங்கள் இருவரும் இங்கு இருந்து விடலாமே... இங்கேயே யானே சமைத்து தருகின்றேன் உங்களுக்கு.. எந்தனுக்கு யாரும் அதாவது உறவுகள் இல்லை. நீங்கள் இருவராவது நிச்சயம் இங்கு இருக்கின்றோம் என்று சொல்கின்றீர்களே.... ஊரெல்லாம் சென்று யான் சொல்லுகின்றேன்... பின் அதாவது என் இல்லத்திற்கு இருவர் வந்திருக்கின்றார்கள் பின் அதாவது என்றெல்லாம் பின் அதாவது இப்பொழுதே யான் பின் ஊரெல்லாம் சென்று முழக்கம் இடுகின்றேன் என்றெல்லாம்.

பின் அவன் ஊருக்குள் சென்று யார்... என்னை அனாதை என்கின்றீர்களே... அதாவது என்னை ஒதுக்கி விட்டீர்களே... யான் எந்தனுக்கு அதாவது சொந்தக்காரர்கள் இருவர் என் இல்லத்திற்கு வந்திருக்கின்றார்கள் என்றெல்லாம் பின் ஊர் ஊராக சென்று பின் அதாவது பின் எதை என்றும் அறிந்தும் கூட. 


இதனால் பின் அனைவருமே இவன் பைத்தியக்காரன் பின் அதாவது இவனுக்கு யார் சொந்தக்காரர்கள்??? என்றெல்லாம்!!

இதனால் நிச்சயம் அறிந்தும் கூட... எதை என்று அறிய அறிய அதாவது பின் மீண்டும் கலக்கமடைந்தான். பின் அவன் திரும்பி இல்லத்திற்கே ஓடோடி வந்து....



எங்களிடம் நிச்சயம் யான் ஊரில் உள்ள அனைவரிடமும் சொன்னேன்... ஆனாலும் பின் யாரும் கேட்கவில்லை. 


இதே போலத்தான் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே பக்தியாக இருந்து அப்பனே பின் அதாவது பக்தியாக இருந்து விட்டால் அப்பனே உண்மை நிலை தெரிந்து விடும்... வந்தவன் யார்? என்று நிச்சயம் பின் அதாவது அவர்களுக்கு தெரிந்து விடுமப்பா!!!!


அப்பனே தெரியவில்லையே????
ஏன்???

அப்பனே ஆனால் உண்மையான பக்திகள் இல்லையப்பா!!!

உண்மையான பக்திகள் அதாவது பொய் பொறாமை அனைவரிடமும் அப்பனே ஒன்று கூடி அப்பனே பின் எதை என்றும் கூட அப்பனே பின் அதாவது பக்தனுக்குள்ளே பக்தனுக்கு சண்டைகள் குறை கூறுவது... அதாவது இப்பொழுதெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. 

ஆனாலும் அதனைக் கூட பக்தன் கேட்டுக்கொண்டு அமைதியாகத்தான் இருக்கின்றான் என்பேன் அப்பனே




இதனால் அப்பனே எதை என்று அறிய அப்பனே இதனால் பின் யாருமே கேட்கவில்லையே என்று அவந்தன்.


ஆனாலும் இவர்கள் அதாவது அவ்வூரில் உள்ள மனிதர்கள் நிச்சயம் அன்னத்தை ஏற்படுத்தினார்கள் அதாவது அறிந்தும் கூட பல மனிதர்கள் அப்பனே... அவ்வூரில் கூட அப்பனே அதாவது இவ் புரட்டாதி சனி தன்னில் கூட 

(புரட்டாதி மாத சனிக்கிழமை அன்னதானங்கள்) 

ஆனாலும் நிச்சயம்  பின் வந்து விட்டான் .. அவந்தனும் கூட ...
எதை என்று அறிய அறிய பின் உண்மையாக இருந்தால் யாருமே நம்ப மாட்டார்கள் என்றெல்லாம் !!!!

 இதனால் நிச்சயம் அதாவது எதை என்று அறிய அறிய பின் இவை தன் கூட நிச்சயம் நாமும் அன்னத்தை சமைப்போம் இன்னும் சமைப்போம்... அதாவது எதை என்று கூட பின் இன்னும் நேரங்கள் இருக்கின்றது இன்னும் சமைப்போம் என்று யாங்களே உந்தனுக்கு அதாவது உதவிகள் செய்கின்றோம் என்று... 

அவந்தனுக்கும் கூட.. நிச்சயம் உண்மைதனை கூட 
 அனைத்தும் எடுத்து வந்து அதாவது... அவந்தனை யாங்கள் மாயையால் மறைத்து!!! பின் அதாவது மதி மயக்கி நிச்சயம் யாங்களே பின் அனைத்தும் செய்து விட்டோம்... அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட. 

அப்பனே இதனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய மீண்டும்... அவந்தனுக்கு.... மதி மயக்கம் மாறி... நினைவு திரும்பி....... எங்களைப் பார்த்து எவ்வாறு? இதையெல்லாம் நீங்கள் செய்தீர்கள்? இதையெல்லாம்....

நிச்சயம் உடனே யான்!!!
இவையெல்லாம் வேகமாக செய்தது அப்பனே!!!!

 இவற்றிற்கெல்லாம் அப்பனே சிறிதளவே நேரங்கள் எடுத்துக்கொண்டோம் அறிந்தும் கூட....
பின் எங்களால் அனைத்தும் செய்ய முடியும் என்று..

(நாராயணனும் அகத்திய பெருமானும் பல்வேறு விதமான உணவுகளை சிறிது நேரத்தில் சமைத்து விட்டார்கள்)



இதனால் இவந்தனுக்கும் சந்தோசம்!!!........ 

பின் இவ்வளவு உணவா????????? இவ்வளவு உணவை எல்லாம் உண்ண யார் வருவார்கள்?????... என்றெல்லாம் அவந்தனுக்கு யோசனை!!!!

அவரவர் (ஊர்க்காரர்கள்) இல்லத்தில் நிச்சயம் உணவு இன்னும் சாப்பிட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள் என்றெல்லாம். இங்கே யார் வருவார்கள்??? என்றெல்லாம்...


நிச்சயம் வருவார்கள் என்று!!! யாங்கள்!!
ஆனாலும் நீ அனைவரையும் அழை!! என்று யாங்கள் கூறினோம்!!!

இதனால் எதை என்றும் புரிய புரிய புரிய பின் அனைவரையும் அழைத்தான்...

அதாவது என் இல்லத்தில் இருவர் வந்திருக்கின்றார்கள் சொந்தக்காரர்கள்  அனைவருக்கும் உணவு உண்டு !!!

அனைவரும் வந்து உண்ண வாருங்கள்... நிச்சயம் பிரம்மாண்டமான பின் சமையல் இருக்கின்றது... என்றெல்லாம். 

ஆனாலும் யாருமே வரவில்லை!!!

பின் நாராயணன் யோசித்தான்... நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய எதை என்றும் அறிந்தும் கூட பின்..... இவந்தனும் கூட ஓடோடி வந்து விட்டான்....

நிச்சயம் பின் அதாவது உணவை உண்ணுவதற்கு யாரும் வரவில்லை... இவ்வளவு உணவு சமைத்தும் அதாவது இவ்வளவு வீண் தான் என்று கூட..

அதாவது மனிதனை நம்பினால் இப்படித்தான் என்றெல்லாம்!!!

ஆனாலும். நீ அமைதியாக உட்காரு!!! என்று யாங்கள் சொன்னோம். 

 சரி !!! என்று அமைதியாக உட்கார்ந்து விட்டான் அவந்தனும் கூட!!!

இதனால் நிச்சயம் பின் அதாவது தேவாதி தேவர்களையும் கூட இன்னும் முனிவர்கள் ரிஷிகளையும் கூட பின் அதாவது யாங்கள் அழைத்தோம்....

மனித ரூபத்தில் அனைவரும் வந்து உட்கொண்டார்கள். 

ஆனாலும்...அவனோ!? பார்த்துக்கொண்டே!!!!!!!!
திகைத்து கொண்டே!!!!!!

அதாவது கண்கள் விரித்து பார்த்துக் கொண்டு இப்படியா!!!!!!!?!?!!!?!.....யார் இவர்கள்??? இவர்கள் எல்லாம் ஊரிலே இல்லாதவர்கள் என்று பார்த்துக் கொண்டே இருந்தான். 
அறிந்தும் கூட 

 ஆனாலும்... அனைத்து ஆசிகளும் கூட அவனுக்கு அதாவது அனைத்து ரிஷிகள் முனிவர்கள் தேவாதி தேவர்களுமே வந்து அவனை ஆசிர்வதித்து விட்டனர். 

அமைதியாக உட்கார்ந்தான்.


அப்பனே இதுதான் பக்தி அப்பா....

அப்பனே உன்னால் எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அப்பனே


 அன்பால் அதாவது மனது தூய்மையாக இருந்தாலே!!! அப்பனே பின் எப்பொழுது???
 எப்படி ஆசிகள்???
 பின் யார் மூலம் ???
பின் எத் தெய்வத்தின் மூலம்??? ஆசிகள்!!!! தர முடியுமோ!!! அப்படி யாங்கள் தந்து விடுவோம் அப்பனே!!!!

அதனால்  அவன் அமைதியாக தான் இருந்தான்... இதனால் அப்பனே தேவர்கள் அனைவரும் வந்து விட்டார்கள்  அப்பனே ஆனாலும் பின் ஊரே அப்பனே மிதந்தது!!!!... பின் அனைவருக்கும் உணவுகள் யாங்களே... எதை என்று அறிய அறிய பரிமாறி பரிமாறி... இதனால் தேவாதி தேவர்களும் வந்து விட்டார்கள்... அப்பனே 

ஆனாலும் பின் அவந்தனுக்கும் கூட மிக்க மகிழ்ச்சி... இவ்வாறா???? என்றெல்லாம்!!

ஆனாலும் ஊரார் எல்லாம் வந்து பார்த்து விட்டார்கள்!!! அவந்தனும் அவர்களை பார்த்தான் பாருங்கள் நன்றாக பாருங்கள் என்றெல்லாம்...


 நிச்சயம்... பின் யார் இவர்கள்??? என்றெல்லாம் பின் ஊர்க்காரர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்!!

ஆனாலும் பின் அவர்கள் எல்லாம் பின் அதாவது பின் ஒரு ஊனமுற்றவனுக்கு இவ்வாறு கொழுப்பா????????

அதாவது எதை என்று அறிய அறிய இவன் திமிர் பிடித்தவன் எதை என்று கூற எங்கேயோ இருந்து அழைத்து வந்து விட்டான் என்றெல்லாம். 

ஆனால் வந்தவர்கள் அப்பனே யார்? என்று தெரியவில்லையே!!!!!!!

ஆனால் அவர்களும் அதாவது ஊராரும் பக்தி காட்டினார்களப்பா... இவையெல்லாம் பக்திகளா???? அப்பா!!?? அறிந்தும் கூட 

தெரிந்து கொள்ளுங்கள் என்பேன். அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே


அப்பனே நிச்சயம் ஒவ்வொரு பக்தனும் நன்றாக.. இவ். புரட்டாசி சனி தோறும் உணவை சமைத்து அப்பனே நிச்சயம் எவை என்று அறிய பின் இயலாதவர்களுக்கும் கொடுங்கள் என்பேன் அப்பனே....

நிச்சயம் அழகாகவே பெருமான் வாங்கி உட்கொள்வான் என்பேன் அப்பனே...

இவைதன் அப்பனே செய்யுங்கள்!!!

ஏன் எதற்கு என்று இன்னும் அப்பனே ரகசியங்கள் எல்லாம் சொல்கின்றேன் அப்பனே... இல்லத்திற்கு பின் அதாவது இறைவன் வருவதற்கு தயாராகத்தான் இருக்கின்றான் அப்பா... ஆனால் நீங்கள் சரியில்லை என்பேன் அப்பனே 

ஏன்? எதற்கு ?என்றால் அப்பனே!!! நிச்சயம் எதை என்று அறிய அறிய ஒன்றை நம்புங்கள் அப்பனே போதுமானது என்பேன் அப்பனே 

பின் அதாவது மனிதனை நம்பினால் பின் பள்ளம் தான் என்பேன் அப்பனே பள்ளத்தில் தான் விழ வேண்டும் என்பேன் அப்பனே.

பின் இறைவனை நம்புங்கள் எவ் கஷ்டங்கள் வந்தாலும் இறைவனை நிச்சயம் பிடித்துக் கொள்ளுங்கள்...

இறைவனே வருவானப்பா!!!
அப்பனே உங்கள் இல்லத்திற்கு இதை யான்.. அதாவது யானே அழைத்து வருவேன் அப்பனே...

என் பக்தர்கள் பின் உண்மையாக இருந்தால் யானே அழைத்து வருவேன் அப்பா... பின் ஆனாலும் மனிதனை நம்பிவிட்டால் அப்பனே பின் நிச்சயம் இங்கு வேலையே இல்லையப்பா சொல்லிவிட்டேன் அப்பனே அறிந்தும் கூட 

அதனால் அப்பனே அவந்தன் ஓடோடி வந்து பின் கடைசியில் எங்கள் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு நீங்கள் வந்தீர்கள்.... ஆனாலும் எவ்வளவு பேர் வந்து விட்டார்கள்!!! உணவை உட்கொண்டு விட்டார்கள்...

அதனால் நிச்சயம் நீங்கள் என்னை விட்டு பிரியாதீர்கள் என்றெல்லாம். 

நிச்சயம் அப்பா... அறிந்தும் கூட அதாவது நிச்சயம்... எங்களின் சுய ரூபத்தை காண்பித்தோம்.... யான் தான் அகத்தியன் என்று இவன் தான் நாராயணன் என்று...

பின் எங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு இனிமேல் பிறவி வேண்டாம்... போதும்!! போதும்!!! என்றெல்லாம் 
நிச்சயம் எதை என்று அறிந்தறிந்து...
 இவை என்று புரிய ஆனாலும்... அவந்தனும் கூட!!

 நிச்சயம் அதாவது பின்  உந்தனுக்கு இப்பொழுதே யான் சரி படுத்துகின்றேன் என்று... அப்பனே பின் அதாவது அவந்தனுக்கும் கால் ஊனம் சரியாகிவிட்டது என்பேன் அப்பனே 

அதனால் அப்பனே பின் எவ்வகையான தோற்றங்கள் (உடல் குறைபாடுகளோடு) பிறப்பு பிறந்தாலும் அவற்றையெல்லாம் அப்பனே பின் உண்மையான பக்தி அப்பனே உண்மையான மனது இருந்தால் அப்பனே உடனடியாக அப்பனே எவ் விதத்திலாவது.... யாங்கள் வந்து அவர்களை மாற்றி விடுவோம் அப்பனே... அவை மட்டும் இல்லாமல் அப்பனே பல உதவிகளும் கூட!!!

யானே மருத்துவமனையில் பல பல குழந்தைகளுக்கும் கூட இப் பிறப்பிலே அப்பனே..... அதாவது அறிந்தும் கூட பல உயிர்களையும் பிறப்பித்துள்ளேன் என்பேன் அப்பனே..

யான் மனித வடிவமாக வந்து  அப்பனே நிச்சயம் பின் அவர்களை கூட அப்பனே அழகாகவே காத்து அருளக்கூடியவன் அப்பனே 
இவ்வாறாக. 

ஆனாலும் உங்கள் மனது சரி இல்லையே அப்பனே!!!  அவ் மனது சரியில்லை என்றால் அப்பனே பின் எவ்வாறப்பா?? நியாயங்கள்???

அப்பனே கூறுங்கள்!!!

அதாவது அப்பனே அவந்தனும் கூட அப்பனே நன் முறைகளாக அப்பனே பின் எவை என்று அறிய அறிய அதாவது பின் பெரிய அன்னச் சாலையைக் கட்டி அப்பனே இப் பிறப்பிலே இன்னும் பின் பன்மடங்கு அப்பனே நன் முறைகளாகவே அப்பனே பல மனிதர்களுக்கு உணவை அப்பனே பின் தந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே...

அதாவது எதை என்றும் அறிந்தும் கூட இப்பிறப்பிலும் பிறந்துள்ளானப்பா உயர் பதவியில் வகித்து அப்பனே வருவோருக்கெல்லாம் அன்னத்தை அள்ளித் தந்து கொண்டே இருக்கின்றானப்பா

இதனால் அப்பனே பின் பாவம் புண்ணியம்... அப்பனே புண்ணியம் செய்து இருந்தாலும் சிலவற்றில் பாவங்கள் இருக்கின்றது...அவ் பாவங்கள் அப்பனே எங்களாலே மட்டுமே போக்க முடியுமப்பா!!!!

அதற்கு மனம் அப்பனே பின் எதை என்று கூட பின் பெரிதாக இருக்க வேண்டுமப்பா 

ஆனால் மனது பெரிதாக இருக்கவில்லையே... பின் பெரிதாக  பின் இல்லை அப்பனே!!!!

   மீண்டும் இறைவனை வணங்கினால் என்ன லாபம்?????

நிச்சயம் அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே இப் புரட்டாதி திங்களில் அப்பனே நன்முறைகளாக அப்பனே இயலாதவர்களுக்கு உணவளியுங்கள்... அப்பனே 

நிச்சயம் அப்பனே உணவில் தான் அப்பனே அதாவது இதற்கும் கூட.... இப்பொழுது இங்கு யான் சொல்லவில்லை!!!

(புரட்டாசி மாதம் அன்னதானம் செய்வது ஏன் என்ற ரகசியங்கள்)


ஏனென்றால் நாராயணனை பற்றி பின் இங்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

அதனால் இன்னும் அப்பனே பின் அதாவது அறிவியல் வழியாகவும் இதைப்பற்றி ஏன் கொடுக்கச் சொன்னேன்???? (அன்னதானம்) என்றெல்லாம் தெளிவுபடுத்துவேன் என்பேன் அப்பனே. 


அதனால் மனம் விரிந்து பின் எவை என்று கூட பெரிதாக அப்பனே காணப்பட வேண்டும் என்பேன் அப்பனே. 

அவ் மனது பெரிதாக இருந்தால் யாங்கள் வந்து அங்கு உட்காருவோம் என்போம் அப்பனே 

ஆனால் யாருக்கும் அவை இல்லையப்பா

அப்பனே அதை முதலில்!!!.....(.மனது பெரிதாக இருக்க வேண்டும்) 


 அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது நாராயணன் கொடுக்க அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது கை கீழே!!!


(திருப்பதி ஏழுமலையான் கைகளை கவனியுங்கள் கொடுக்கும் கரம் .வரஹஸ்தம்)

அப்பனே கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே....


ஆனால் வாங்குவதற்கான கைகள் உங்களிடத்தில் இல்லை...!!!

வாங்குவதற்கான தகுதிகளும் உங்களிடத்தில் இல்லையப்பா அவ்வளவுதான் என்பேன் அப்பனே 

அதை வாங்குவதற்கான தகுதிகள் அதாவது குணம் தானப்பா!!!

 நல்குணம் இருந்து விட்டால் அப்பனே அதை நீங்கள் பெற்றுக் கொண்டு உயர்ந்து விடுவீர்கள் என்பேன் அப்பனே சரியான வழியில் அப்பனே 

அதனால் தான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே வாக்குகள் அப்பனே பின் தெரிவிப்போம் அப்பனே 

இவ்வுலகத்தை மாற்றுவதற்காகவே அப்பனே மாற்றங்களை ஏற்படுத்தி பொய்யான பக்தர்களை எல்லாம் அழித்து அப்பனே!!!


 ஏனென்றால் என்னையும் நம்பி!!!!!.......(உண்மையான பக்தர்கள்)

அப்பனே அகத்தியன் என்று சொல்லிவிட்டால் ஓடோடி வந்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே!!

 இவர்களை அவர்கள்(போலியானவர்கள்) பின் பயன்படுத்தி கொள்கின்றார்கள் என்பேன் அப்பனே காசுகள் காசுகள் என்று அப்பனே!!!

(அதாவது இப்பொழுது எங்கு பார்த்தாலும் அகத்தியர் அகத்தியர் என்றெல்லாம் போலியான மனிதர்கள் போலியானதை உருவாக்கி அகத்தியர் ஜோதிடம் அகத்தியர் வைத்தியம் அகத்தியர் நாடி நிலையம் அகத்தியர் வர்மக்கலை அகத்தியர் மாந்திரீகம் என மனிதர்கள் அகத்தியர் பெயரை பயன்படுத்திக்கொண்டு எதையெதையோ செய்து வருகின்றார்கள். 

அகத்தியர் மீது அன்பும் பக்தியும் வைத்திருக்கும் நபர்கள் அகத்தியர் பெயரை வைத்திருக்கும் காரணத்தினால் அங்கு எதார்த்தமாக சென்று அகத்தியர் தான் வழிகாட்டுகின்றார் என்று நம்பி சிக்கிக் கொள்கின்றார்கள்... ஆனால் அங்கு நடப்பதெல்லாம் ஏமாற்று வேலை காசுகள் பறிப்பது.... அகத்தியருக்கு பூஜை செய்ய வேண்டும் இந்த பரிகாரம் செய்ய வேண்டும் அந்த பரிகாரம் செய்ய வேண்டும் இதற்கு இவ்வளவு செலவாகும் என்றெல்லாம் பணத்தை பிடுங்கி ஏமாற்றுகின்றார்கள்...)


நிச்சயம் சித்தர்களுக்கு காசுகள் எதற்கு?????? காசுகள் ஏது?????? எதை என்று அறிய அறிய நிச்சயம் பின் சித்தர்களுக்கு உணவு தேவையில்லை... எதையென்றும் அறிய அறிய எதுவுமே சித்தர்களுக்கு தேவையில்லை.. எதை என்று அறிய அறிய 

பின் எங்களுக்கு எவையுமே தேவையில்லாத பொழுது நிச்சயம் பின் எதை என்று புரிந்து புரிந்து மனிதனுக்கு பின்.... அனைத்தும் வேண்டும் என்று எங்களை பயன்படுத்துகின்றான் அவ்வளவுதான். 

அப்பனே வேண்டாமப்பா!!!

இன்னும் அப்பனே ஆசிகள்!!!


இக்கலியுகத்தில் அப்பனே அழியும் நிலைக்கே சென்று கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே 

அவை தன் நிச்சயம் அப்பனே யான் காப்பாற்ற அப்பனே பின் இவ்வுலகத்தையே அப்பனே வலம் வந்து கொண்டே இருக்கிறேன்.. அப்பனே 

எப்படியெல்லாம்?? மாற்ற வேண்டும்? மனதை மாற்ற வேண்டும்?  என்பதை எல்லாம்!!! 

அதனால் உங்களையும் அப்பனே எளிதில் மாற்றி விடுவேன் அப்பனே 

ஆனால் நிச்சயம் கஷ்டங்கள் பட்டால் தான் அப்பனே நிச்சயம் தெளிவு பெறும். 

அப்பொழுதுதான் புரியும்!!! அறிவும் வரும் என்பேன் அப்பனே 

அதனால்தான் அப்பனே சில மனிதர்களை யான் விட்டு விடுகின்றேன் என்பேன் அப்பனே. 

இதனால் அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் இங்கிருந்தே!!!! நாராயணனின் ஆசிகளும் கூட இன்று அப்பனே யாரெல்லாம் வணங்குகிறார்களோ அப்பனே... ஆனாலும் எதை என்று அறிய அறிய யாரெல்லாம் அன்னத்தை இன்று எவை என்று அறிய அறிய அப்பனே பின் இல்லத்தில் சமர்ப்பிக்கின்றார்களோ... அப்பனே அவர்கள் இல்லத்தில் பின் நாராயணன் நிச்சயம் வருவானப்பா!!!!




















































ஆசிகள்!! ஆசிகள் !! ஆசிகளப்பா!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி  - https://tut-temples.blogspot.com/2024/09/1642.html

சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1551.html

பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள்  - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html

மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html

புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

No comments:

Post a Comment