"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, October 8, 2024

பெருமாளே.! பெருமானே...!!

                                                                   இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால்  புரட்டாசி மாதத்தில் வழிநடத்தப்பட்டு வருகின்றோம் . குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் புரட்டாசி மாத சிறப்பு பதிவாக பெருமாளின் சிறப்புகளை பற்றி அறிய இருக்கின்றோம். இந்த புரட்டாசி மாத தரிசனமாக பாப்பாரப்பட்டி ஆஞ்சநேயர் தரிசனம் ,  பசுமலை அகத்தியர் & பெருமாள் தரிசனம் கிடைக்கப் பெற்றோம் . மிக விரைவில் தனி பதிவில் கண்டு மகிழ்வோம்.நம் நாட்டில் உள்ள கோயில்கள் வெறும் கற்கள் கொண்டு கட்டியவை அல்ல. பக்தியும் பொதுநலமும் கொண்டு கட்டப்பட்டவை. அதனால் தான் நாம் மீண்டும் மீண்டும் கோயிலுக்கு சென்று வழிபடும் போது , கண்களை மூடி கடவுளை பார்க்காதீர்கள், கண்களைத் திறந்து அவரைக் கண்டு, மனம் விட்டு பேசுங்கள். நாம் பேசுவது அவருக்கு கேட்குமா? என்பது போன்றெல்லாம் விதண்டாவாதம் செய்யாது, மனம்,மொழி,மெய்யால் வழிபாடு செய்யுங்கள். அப்படி செய்தால் தான் நாம் சரணாகதி நோக்கி செல்ல முடியும்.




பெருமாள் பற்றி இணையத்தில் தேடிய போது, நம் இதயம் தொட்டது இந்தப் பதிவு. அதனை அப்படியே இங்கே பகிர்கின்றோம்.

========================================================================

திருவாதிரைக் களி வழங்கிய தேசிகநாராயணப் பெருமாள்

கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கை என்ற எண்ணத்தில் இருந்த என்னை, கடவுளிடம்  ஒரு முழுநம்பிக்கை உடையவனாக மாற்றியது இந்த நிகழ்ச்சிதான்.  இதை ​மெய்யன்பர்கள் அனைவரிடமும்  அன்புடன் பகிர்ந்து ​கொள்கிறேன்.

மூடநம்பிக்​கை
"அறிவியல் மட்டுமே உண்மை.  ஆன்மிகம் என்பது ஒரு வாழ்க்கை முறை.   பக்தி என்பதெல்லாம் அவரவர் மனப்பக்குவமே.   கடவுள் என்பவன் இல்லை, இது ஒரு மூட நம்பிக்கையே"  என்று நான் நினைத்துக் ​கொண்டிருந்தேன்.

அப்போது ஒருநாள் (15-08-2000) வீட்டில் சும்மா உட்காந்திருந்த ​போது,  ​மேற்கண்ட எனது ​சித்தாந்தத்திற்கு அறிவியல் நிரூபணம்  ​வேண்டும் என்று நினைத்தேன்.  அப்போது நாம் வணங்கும் இறைவடிவங்கள் அறிவியல் அடிப்படையில் ஆனவையா? என அறிய ​வேண்டும் என்ற ஆவல் எனக்குள் ​தோன்றியது. 



அறிவியல் ஆன்மிகம்
எனது ஆய்வில் நடராசரின் வடிவமானது முற்றிலும் அறிவியல் அடிப்படையிலானது என அறிந்தேன்.  எனது ஆய்வுகளை
1) சிவனும் ​பெருமாளும் ACயும் DCயும்
2) ஆடல் வல்லானே அறிவியல் இறைவன்
3) விஞ்ஞானத் தொலைக்காட்சியும் ​மெஞ்ஞாத் திருக்கோயிலும்
என்ற தலைப்புகளில் எழுதி ​வெளியிட்டேன்.
இந்த நிலையில்,  ஆருத்திரா தரிசனம் ​செய்ய ​வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டானது.

பிறரிடம் ​கேட்டதில், அது இப்போதுதான் முடிந்தது என்று கூறிவிட்டனர்.
அடுத்த ஆண்டு வரை காத்திருந்தேன்.



ஆலயம் ​சென்ற​போது “இன்று காலை முடிந்து விட்டது, நீங்கள் மாலையில் வந்துள்ளீர்களே! “ என்றார் குருக்கள்.

அடுத்த ஆண்டு ​சென்று போது, “​நேற்றே முடிந்து விட்டது, நாங்கள் சிதம்பரத்தில் என்று நடைபெறுமோ அன்று நடத்திவிடுவோம்,  காலண்டரில் உள்ளது ​போல் ​செய்வது இல்லை“ என்றார் குருக்கள்.


ஆருத்திரா தரிசனம் காண ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடந்தேன்.

நமச்சிவாயமா? நாராணயனனா?
இந்த ஆண்டு எல்லாம் சரியாகக் குறித்து ​வைத்துக் ​கொண்டேன்.  இன்று காலை எழுந்து ஆருத்திரா தரிசனம் ​செய்யச் ​செல்ல ​வேண்டும்.  சிவ​பெருமான் என்னை நான்கைந்து ஆண்டுகளாக அலைக்கழித்தனாலோ என்னவோ அல்லது ஏதுகாரணத்தினாலோ அன்று ​நான் சிவாலயம் ​​செல்லவில்லை.  வேலங்குடியில் நின்றருளும் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமேத தேசிகநாராணயப் ​பெருமாள் ​கோயிலுக்குச் ​சென்றேன்.

நாராயணனை வழிபட்டு வலம் வந்து ​கொடிமரத்தின் கீழே வீழ்ந்து வணங்கினேன்.​"பெருமாளே!  இன்று ஊரே சிவாலயம் ​சென்று வழிபடுகிறது.  நானோ உன்னை வழிபடுகிறேன்.  அங்கு ​சென்றிருந்தால் திருவாதிரைக்களி கொடுப்பார்களாம்,  எனக்கு அது கிடைக்குமா? ​பெருமாளே அருளுங்கள்" ​என ​வேண்டிக் ​கொண்டேன்.   ​​தேசிக நாராயணன் நின்ற ​கோலத்தில் அருளுவதால் நான் ​கோயிலில் உட்கார வில்லை.  கொடிமரத்தருகில் கும்பிட்டு விழுந்து எழுந்து ​கோயிலுக்கு ​வெளியே ​செல்லச் சில அடிகள் எடுத்து ​வைத்தேன்.   படிக்கட்டைத் தாண்ட முயன்றேன்.





யார் இந்தக் கிழவி
எதிரே ஒரு பழுத்த பழமாக (K.B.S.​போல) ஒரு மூதாட்டி உள்ளே வந்தார்.   வருபவர் மூதாட்டி என்பதால் அவரைத் தாண்டிச் ​செல்ல விருப்பமில்லாமல் சற்றே தயங்கி நின்றேன்.

கோயில் உள்ளே வந்த அந்த மூதாட்டி ​நேராக என்னைப் பார்த்து நின்றார்.  தனது ​சேலை முடிச்சை அவிழ்த்தார்.    அதிலிருந்து  ஒரு ​​பெரிய ​தேங்காய் அளவிற்கு களியை எடுத்து என்னிடம் ​கொடுத்தார். 

“என்ன பாட்டி! “ என்று ​கேட்டேன். 

திருவாதிரைக் களியப்பா!  ​​பெரிய ​கோயிலில் ​கொடுத்தார்கள்.  கிழவிக்கு எதுக்கு இவ்வளவு!  நீ சாப்பிடப்பா- என்றார்.

என்னை என்னால் நம்ப முடியவில்லை.  நான் ​கோரிக்கை ​வைத்து 10வினாடிகள் கூட ஆகியிருக்காது.    ​நாராயணன் ​கோயில் வாசல்படியைக் கூட தாண்ட வில்லை.  சிவாலயம் ​சென்றாலும்  கூட்டத்தில் இது எனக்குத் திருவாதிரைக் களி கிடைத்திருக்குமா?  அதுவும் இவ்வளவு?

என் அறிவியல் மூலை ​கேள்வி ​​கேட்டது!

ஏன் பாட்டி, கூட்டமா இருந்திருக்குமே?
“ஆமாம்பா,  கூட்டம் சரியான கூட்டம்,  கூட்டத்திற்குப் பயந்து நான் கடைசியில் நின்று ​கொண்டிருந்தேன்.  அதனால் களி ​கொடுத்தவர்கள் எனக்கு முதலில் ​கொடுத்தார்கள்“ என்று கூறினார்.

பாட்டி அவ்வளவையும் என்னிடம் ​கொடுத்து விட்டாயே, உனக்கு என்று ​கேட்டேன்.

நான்தான் வருடாவருடம் வாங்கிச் சாப்பிடுகிறேனே!
இந்த வருடம் முழுவதையும் நீயே சாப்பிடு, அப்போது தான் முழுப்பலனும் உண்டு என்றார்.

திருவாதிரைக் களி வழங்கிய ​தேசிகநாராயணன்
திருவாதிரைக்களியைத்  ​தேசிகநாராயணன் ​அவனது கோயிலில் ​கோடிமரத்து அருகே எனக்குவழங்கி விட்டான்.





இது என்ன அமிர்தமா?
இல்லை.
அதனினும் ​மேலானது.
நாராயணனின் அருள் கலந்தது.
முழுவதும் உண்டு முடித்து கிணற்றில் ​கைகளைக் கழுவிக் ​கொண்டு திரும்பிப் பார்ததேன்.  முதாட்டி​யைக் காண வில்லை.  ​கோயில் பிரகாரம் சுற்றிப் பார்த்தேன்.  ​வெளியில் ஓடிச் ​சென்று எங்கு ​தேடியும் கிடைக்க வில்லை.  இன்று வரை ​​தேடிக் ​கொண்டே இருக்கிறேன்.

இன்று இந்நிகழ்வுக்குப் ​பொருள் விளங்க வில்லை.

ஆனால் நாத்திகனாக இருந்த நான் ஆத்திகன் ஆகிவிட்டேன்.  எனது ஆன்மிக ஆய்வுகள் ​தொடர்ந்தன.  இன்றும் ​தொடர்கின்றன.

அயன்முதற் தேவர் பன்னெடுங்காலம் நிற்காண்பன் ஏம்பலித்திருக்க என்னுள்ளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்,

கூத்தரும் பாணரும் ​பொருநரும் விறலியும்
ஆற்றி​டைக் காட்சி உறழத் ​தோன்றிப்
​பெற்ற ​பெருவளம் ​பெறாஅர்க் கறிவுறீஇச்
​சென்று பய​னெதிரச் ​சொன்ன பக்கமும்
என்று தொல்காப்பியர் (நூ.பா. 1034) இலக்கணம் கூறுகிறார். 





​​பெற்ற ​பெருவளத்​தைப் ​பெறாதவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களும் பயனுறச் ​செய்ய ​வேண்டும் என்பது இதன் பொருள்.
இத் தொல்காப்பிய இலக்கலணத்திற்கு ஏற்ப நான் ​பெற்ற ​பேற்​றை மற்​றோரும் ​பெற​வேண்டும் என்ற ​நோக்கத்​தோடு இத​னைக் கூறுகி​றேன்.   மெய்யன்பர்கள் வேலங்குடி அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி உடனாய தேசிகநாராயணனைப் பணிந்து அவளது திருவருளைப் பெற்று உய்யுமாறு ​வேண்டுகிறேன்.

நற்றாள் பணிந்து

அன்பன்
தமராக்கியான்
கோட்டையூர்

======================================================================

அட...இப்படியொரு அருள்நிலை?..பதிவை படித்ததும் எப்படி இருந்தது? அதனால் தான் அரியும் சிவனும் ஒன்று என்றும் ஹரியும் ஹரனும் ஒன்று என்றும் சொல்கின்றார்கள். சரி.வாருங்கள். கொண்டையம்பட்டி பெருமாள் கோயில் செல்வோம். நம்முடைய பயணத்தில் பல அன்பர்களை,அடியார்களை சந்தித்து இருக்கின்றோம்.அதில் குறிப்பிடத்தக்க ஒருவர் திரு.யாணன் ஐயா அவர்கள். தற்போது வரை அவருடனான தொடர்பு இருந்து கொண்டு வருகின்றது. யார் இந்த யாணன்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு தனிப் பதிவில் விடை சொல்கின்றோம்.அவர் ஒருமுறை பேசும் போது, ஏதேனும் கோயில் கைங்கர்யத்தில் ஈடுபடுங்கள். அது தலைமுறை தலைமுறையாக நின்று பேசும் என்று கூறி, ஒரு கோயில் பற்றி எடுத்துக் கூறி, அலைபேசி எண் தந்தார்.







உடனே நாம் அவரைத் தொடர்பு கொண்டு, நம்மை அறிமுகம் செய்து கோயில் கைங்கர்யத்தில் நம்மாலான சிறு தொகையை அவர் வங்கிக்கணக்கில் செலுத்தினோம். அவர் பணம் வரவில்லை என்று சொன்னார். அவரிடம் இது போன்ற இணைய வசதி, வாட்ஸாப்  போன்ற செயலி பற்றி தெரியாது என்றார். மீண்டும் அடுத்த நாள் நாம் வங்கியில் உறுதி செய்து செய்தியைக் கூறினோம். அவரும் கணக்கில் வந்து விட்டது என்றார். வாய்ப்பு இருக்கும் போது மதுரை வந்தால், கட்டாயம் கோயிலுக்கு வரவும் என்றும் கூறினார். நமக்கு அது என்ன கோயில் போன்ற விபரங்களும் தெரியவில்லை.கோயிலைப் பற்றி யாணன் அவர்கள் கூறும் போது, மலை அடிவாரத்தில் இருக்கும், எந்த ஒரு இரைச்சல் சத்தமின்றி, இனிமையாக இருக்கும். அங்கு தங்குவதற்கு வசதி இருந்தால் நாம் அங்கேயே இரண்டு,மூன்று நாட்கள் இருந்துவிட்டு வரலாம் என்று கூறியதும் நமக்கு ஒரு வித களிப்பை தந்தது. ஆயினும் பெருமான் நம்மை எப்போது அழைப்பார் என்று காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது. அந்த கோயில் மதுரையில் எங்கு உள்ளது? கட்டி முடித்து விட்டார்களா? நாம் என்ன செய்யப் போகின்றோம்? இனிவரும் பதிவுகளில் அதனை நாம் உணர்த்த அந்த நாராயணர் நம்மை வழிநடத்தட்டும்.







நாம் சென்ற வார தரிசனத்தில் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலில் சேவித்த  காட்சிகளை பதிவின் இடையிடையே இணைத்துள்ளோம். 


சேமமே வேண்டி தீவினை பெருக்கி
      தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
      ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள்
      தம் அடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம்


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்தியர் பெருமானின் உத்தரவு! - நவராத்திரி வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post.html

 சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி  - https://tut-temples.blogspot.com/2024/09/1642.html

சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1551.html

பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள்  - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html

மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html

புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html



No comments:

Post a Comment