"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, October 29, 2024

அகத்தியர் மாமுனிவர் வாக்கு - விதியை மாற்றக் கூடிய மகத்தான பாடல்..!

                                                                      இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவாக நம் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி கோவையில் உரைத்த வாக்கை காண உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. பெரிதினும் பெரிது கேள் என்று சொல்ல கேட்டிருப்போம். ஆம். நம் குருநாதர் நமக்கு உரைக்கும் வார்த்தைகள் மிக மிக பெரியது.இவற்றை வெறும் வார்த்தைகளாக கொள்கின்றோமா? இல்லை. வாழ்க்கையாக கொள்கின்றோமா? என்பதில் தான் அர்த்தம் உள்ளது. மதுரைக்கு முன்பாக கோயம்பத்தூரில் குருநாதர் வாக்குகள் அருளியுள்ளார். இதில் யாருமே கூறாத தான, தருமம் பற்றி உரைத்துள்ளார். இவற்றையெல்லாம் நாம் கேட்டு, வாழ்வில் பின்பற்ற வேண்டும்.  குருநாதரின் வாக்கிற்கு அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டிய நிகழ்வை இன்று காண இருக்கின்றோம். குருநாதரின் உபதேசம் எப்படி எல்லாம் இருக்கும் என்று யார் அறிவார்?ஆனால் நாம் தான் எதையெதையோ தேடிக்கொண்டு இருக்கின்றோம். குருவை இறுக இரு கை கொண்டு சிக்கென பிடித்தாலே போதும். நமக்கு வேண்டியது கிடைக்கும். வாழ்வு சிறக்கும்.

இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம்  


குருநாதர்:- அப்பனே புண்ணியம் என்றால் என்ன?

அடியவர் 7:- புண்ணியம் என்றால் அன்னதானம் செய்வது….

குருநாதர்:- அப்பனே எப்பொழுதும் சாப்பாட்டுப் பிரியனாக இருக்காதே அப்பனே.

(அன்னதானம் ஒன்று மட்டுமே புண்ணியம் அல்ல)

அடியவர்:- ஐயா பிறருக்கு நன்மை செய்து அதனால் வரக்கூடிய நல்ல சக்தி…..

குருநாதர்:- அப்பனே பின்பு உந்தனுக்கே ஒருவன் கற்றுக்கொடுக்கிறான் அப்பனே. நீ கற்று என்ன மற்றவனைக் கூறு?

( புண்ணியம் என்ன என்பதை பிற அடியவர்கள் , 7ஆம் அடியவருக்கு கற்றுக்கொடுத்தனர். இதனை இந்த அடியவரை பிறருக்கு எடுத்துக் கூற உரைத்தார்கள்.)

அடியவர் 7:- புண்ணியம் என்றால் படிக்க முடியாதவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்வது, உடல்நலம் இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவி செய்வது போன்றவை எல்லாம் புண்ணியம்.

குருநாதர்:- அப்பனே இன்னும் அப்பனே.

அடியவர் 7:- பாழடைந்த கோவிலுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் இதர பொருட்கள் வாங்கிக்கொடுத்தல்…

குருநாதர்:- அப்பனே இன்னும் சொல்..

அடியவர் 7 :- பசித்தவர்களுக்கு சாப்பாடு இடுதல்,  வீடு இல்லாதவர்களுக்கு  வீடு கட்ட கொஞ்சம் கொஞ்சம் பணம் கொடுத்து உதவி செய்தல்…..

குருநாதர்:- அப்பனே இன்னும் சொல்

அடியவர் 7:- ……..(சிந்தனையில்)

குருநாதர்:- அப்பனே இவை எல்லாம் அப்பனே தன்னைப் பற்றி எண்ணாமல் பிறருக்காக வேண்டுபவனே அப்பனே எது என்று அறிய அறிய , பின் முதல் தரத்தில் செல்லும் அப்பா புண்ணியம்.

நாடி அருளாளர்:- தனக்காக வேண்டக்கூடாது. கேட்கக்கூடாது. பிறருக்காக இறைவனை வேண்ட வேண்டும். அதுவே முதல் தர புண்ணியம்.

குருநாதர்:- அப்பனே இப்பொழுது சொல். புண்ணியம் செய்திருக்கின்றாயா என்ன நீ?

அடியவர் 7:- (அமைதி)

குருநாதர்:- அப்படியே அனைவரையுமே கேள் அப்பனே. யாரும் செய்தது இல்லை என்பேன் அப்பனே.

அப்பனே இறைவன் இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்பதைக் கூட மனிதனுக்குத் தெரியாமல் வழங்குகின்றான் என்பேன் அப்பனே. அதனால் இறைவனே சிரித்துக் கொள்கின்றான்.  பின் உந்தனுக்கு கொடுத்தாலும் வீண்தானடா, போய் விடு அப்படியே என்று. இப்படி இருக்க பின் எத்தனை திருத்தலங்களுக்குச் சென்றாலும் எப்படியப்பா கூறு?

அடியவர்கள் :- ( அனைவரும் அமைதி )

குருநாதர்:- அப்பனே நாராயணனைப் பற்றி அப்பனே கீழ் இருக்கிறானே இவனைக் கேள்?

அடியவர் 7:- நாராயணனைப் பற்றி சொல்லுங்கள் ஐயா.

அடியவர்-பித்தன்:- நாராயணன்…பெயரின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?  நாரன் என்றால் மனித உயிர் என்று ஒரு பொருள் உண்டு. அயணம் என்றால் மனித உயிர்கள் அவனிடத்தில் சரண்டைகின்றன. நாராயணன் செல்வத்துக்கு அதிபதி. செல்வத்துக்கு அதிபதி என்றால் செல்வத்தைப் பாதுகாப்பவர். இப்பிறவியில் நாம் செய்யக்கூடிய அல்லது முற்பிறவியில் நாம் செய்த தான தர்மங்களை, அவர் பாதுகாத்து அதனை அவர்களுக்கு அடுத்த பிறவியில் அவர்களுக்குக் கொடுப்பது அவருடைய …


குருநாதர்:- அப்பனே எதை என்று அறிய அறிய “ஓம் நமோ நாராயணா , நாராயணா” என்று சொன்னாலே என்னை ஏற்றுக்கொள்ளப்பா என்னை ஏற்றுக்கொள்ளப்பா என்று அர்த்தம். ஆனால் இவ் மந்திரத்தைச் சொன்னால் (பொருள்) அனைத்தும் வந்துவிடுமாம் அப்பனே. இதனால்தான் இறைவனே சிரிக்கின்றான். அப்பனே முட்டாளாகவே இருக்கிறான் என்று.  எப்படி அப்பா கொடுப்பான் அவன்?

(இந்த முக்தி மந்திரத்தின் பொருள் என்ன தெரியாமலேயே பலர் இந்த  மந்திரத்தை சொல்லி பொருள் வேண்டினால் , எப்படி இறைவன் நாராயணன் அவர்களுக்கு,  அவர்கள் கேட்டதைக் கொடுப்பார்? !!!! )

குருநாதர்:- அப்பனே பின் நிச்சயம் நாராயணன் எதற்கு? 

அடியவர் 7:- ஐயா நாராயணன் எதற்கு?

அடியவர்-பித்தன்:-  மனித உயிர்கள் எல்லாம் அவனிடத்தில் சரணம். அப்படி இருக்கும் பொழுது, நாராயணா என்று  கூப்பிடும் பொழுது நான் உன்னிடத்தில் சரணடைந்தேன் என்பதே இதன் அர்த்தம் ….( சொல்லி முடிக்கும் முன்னர்)

குருநாதர்:- அப்பனே நாறும் உடல் இது. அப்பனே உன்னிட த்தில் எடுத்துக் கொள் என்பதுதான் அதற்கு அர்த்தம். ஆனால் அப்பனே .”ஓம் நமோ நாராயணா” என்றால் அனைத்தும் வந்துவிடுமாம் அப்பனே!!! ஆனாலும் இவ் மந்திரத்தின் ரகசியத்தை  எல்லாம் வருங்காலத்தில் விவரமாக எடுத்து உரைக்கின்றேன் அப்பனே. இதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று கூட.  அப்படிச் சொன்னால் தான் அப்பனே அனைத்தும் கிட்டும் என்பேன் அப்பனே.

அதனால் மந்திரத்திற்குக் கூட அப்பனே தத்துவங்கள் உண்டு. அதனால் அப்பனே நாறும் உடல், அவ்வளவுதான். இவ் நாறும் உடலை பின் ( நாராயணா நீ) சரி செய். (நாராயணா நீயே) எடுத்துக்கொள்.

இன்னும் பின் சொல்ல வேண்டும்.

அடியவர் 7:- நாராயணன் என்று சொன்னால் மோட்சம்.

குருநாதர்:- அப்பனே, இது தவறப்பா.

அடியவர்-பித்தன்:- தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நாராயணன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று.

அடியவர் 7:- நாராயணா என்றால் உங்களுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ அதனைச் சொல்லுங்கள்.

அடியவர் 8:- ஐயா, பரம்பொருள் ஆன அப்பன் ஈசனும் , அகஸ்தியர் லோபாமுத்ரா ரூபமே “ஓம் நமோ நாராயணாய” என்ற பொருள்.

( அடியவர்கள் இங்கு காக்கும் கடவுள் அகத்தீசரின் இறை வல்லமையை உணருங்கள். )

குருநாதர்:- அப்படியே தெரிந்ததால் கூறிவிட்டாய். அதனால் பின் தெரியாத கூட பின் கூறுங்கள்?

(இந்ந 8ஆம் அடியவர் உரைத்தது உண்மை என்று உறுதிசெய்தார் குருநாதர்)

 அடியவர் 7:- நீங்களே சொல்லுங்கள் சாமி

குருநாதர்:- அப்பனே இப்பொழுது தெரிந்து கொண்டாயா? அனைத்தும் பின் கேட்டாலும் இறைவன் கொடுப்பானா என்ன?

அப்பனே இறைவா நீயே கொடுத்து விடு என்று சொன்னால்,  கொடுத்து விடப் போகின்றான் அவ்வளவுதான் அப்பனே.  அனைவருக்கும் இவை உணர்க.

அடியவர் 8:- தெரியவில்லை என்று சொல்லி இறைவனை சரண்டைய வேண்டும்.

குருநாதர்:- அப்பனே பின் அனைவருமே இங்கு அனைவருக்குமே ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கின்றேன் அப்பனே. அனைவருமே கேளுங்கள் அப்பனே.

( மீண்டும் கேள்வி பதில் ஆரம்பமானது )

அடியவர் 7:- யார் யாருக்கு என்ன வேண்டுமோ கேட்கலாம்.

அடியவர்கள்:- (அமைதி)

அடியவர் 7:- எல்லாருக்கும் என்ன தேவையோ அதை சாமியே கொடுக்கட்டும்.

குருநாதர்:- அப்பனே இது சரியா? அப்பனே அனைவருமே கருமத்தை (பொருள்/பணம்) கேட்கின்றார்கள். யான் கொடுக்கட்டுமா என்ன?

அடியவர்-பித்தன்:- இந்த அடியவரை (அடியவர் 7) வைத்து அனைவருக்கும் பாடம் எடுக்கின்றார் குருநாதர்.

அடியவர் 7:- எல்லோரும் அற நெறியில் செல்ல வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். இதற்கு சாமி அருள் வேண்டும்.

குருநாதர்:- அப்பனே இது சரியானதா?

அடியவர் 7:- யார் யாருக்கு என்ன தேவை என்று சாமிக்குத் தெரியும். அதைப் பார்த்து நல்லதைச் செய்யச் சொல்லுங்கள்.

குருநாதர்:- அப்பனே அதுபோல் அப்பனே பின் அனைவரையும் சொல்லச் சொல்.

அடியவர் 7:- யார் யாருக்கு என்ன தேவை என்று சாமி பார்த்துச் செய்வார்கள்.

அடியவர் 8:- அகத்தீஸ்வரா, நீங்களே பார்த்து ஏதாவது செய்யுங்கள்.

குருநாதர்:- அப்பனே ஒருவர் வாயில் கூட வரவில்லை அப்பா. அப்போது அனைவருமே கர்மாவைத்தான் கேட்கிறார்கள் அப்பனே. அப்போது எப்படி அப்பா நன்றாக இருக்க முடியும் ? கூறு மகனே.

அடியவர் 7:- சாமி எல்லாருடைய மனசையும் மாற்றி, எல்லாரும் நல்லா இருக்கவேண்டும். அதுக்கு நீங்கள்தான் செய்யனும் சாமி.

குருநாதர்:- அதனால்தான் அப்பனே துன்பத்தை ஒன்றை இறைவன் கொடுக்கின்றான் அப்பனே. இது தவறா? எந்தனுக்குத் துன்பம் வந்துவிட்டதே என்று ஏங்குகிறான் அப்பனே.  பின் துன்பம் வந்தால் தான் அனைத்தும் கொடுக்க முடியும். அதனால் துன்பம் வருவது நல்லதா கெட்டதா? அனைவரிடத்திலும் இதனைக் கேள்?

அடியவர் 7:- துன்பம் வருவது நல்லதுதான். (அங்கு பல அடியவர்கள் இருந்த போதும் இந்த பதிலை இந்த 7ஆம் அடியவர் மட்டும் உரைத்தார். அதனால் ….)

குருநாதர்:- அப்பனே அப்பொழுது கூட  அனைவரும் சொன்னார்களா? அப்பனே துன்பப்பட்டவர்கள் மட்டும் தான் துன்பம் வருவது நன்று என்று சொல்கிறார்கள் அப்பனே.

அடியவர்-பித்தன்:- துன்பம் வரட்டும்.

அடியவர் 8:- துன்பம் வரட்டும்

குருநாதர்:- அப்பனே இன்பம் வேண்டுமா என்று கேள்?

அடியவர் 7:-  இன்பம் வேண்டுமா?
( அடியவர்களிடையே சல சலப்பு. ஆனால் யாரிடம் இருந்தும் பதில் வரவில்லை)

குருநாதர்:- அப்பனே இதற்கும்
 பதில் அளிக்க மாட்டார்கள் என்பேன். யான் கொடுக்கப் போகிறேன். அப்பனே யாருமே கேட்க வில்லையே?

அடியவர்# 9:- எல்லாருக்குமே நல்லது செய்யட்டும்.

அடியவர்# 7:- எப்படி இருந்தாலும் சாமி எல்லோருக்கும் நல்லது செய்யப்போகின்றார்…

குருநாதர்:- அப்போது யாருமே கேள்விகள் கேட்கக் கூடாது அப்பனே.

அடியவர் 10:- குருநாதா இறைவனை நினைக்கக் கூடிய இன்பம் வேண்டும். இறைவனை உணரக்கூடிய இன்பம் வேண்டும்.

குருநாதர்:- அம்மையே அவை எல்லாம் நிச்சயம் கொடுக்க முடியாது.

அடியவர் 10:- அதுக்காகத் தான் உங்களிடம் வரமாக கேட்கிறோம்.

குருநாதர்:- அம்மையே அனைத்தும் நீ பெற்று வாங்கக்கூடாது. யாங்கள் தான் கொடுக்க வேண்டும். இதற்குப் பதிலடி.

அடியவர் 7:- கொடுங்கள் சாமி. காசு, பணமா கேட்கின்றோம்? எந்நேரம் உங்களை நினைப்பதையே கேட்கின்றோம். இதில் ஒன்றும் தப்பு இல்லையே?

(அடியவர்களே, இந்த அடியவருக்கு கருணைக்கடல் பொருள் பலத்தை இந்த வாக்கின் முன்பு அளித்ததை நினைவு கொள்க.)

குருநாதர்:- அப்பனே வாங்கிக் கொண்டாய் அல்லவா காசு, பணம்? அப்பனே ஆனால் வைத்துக்கொண்டே இது நியாயமா?

( அடியவர்கள் பலத்த சிரிப்பு, இந்த நேரத்தில் அடியவர்களிடையே பல பலத்த உரையாடல்கள். இந்த அடியவரை அவர் வைத்திருந்த பணத்தை - ரூபாய் 2980 - அங்கு அம்பாள் பாதத்தின் அடியில் முன்னர் வைக்கச் சொன்னார்கள் மற்ற அடியவர்கள்) .

அடியவர் 7:- சாமி வைத்து விட்டேன்.

குருநாதர்:- அப்பனே  உன் கையில் அதை எடு.

(அடியவர் 7 - மீண்டும் இந்த பணத்தை எடுத்தார்கள் )

அடியவர் 7:- சாமி, எடுத்துக்கொண்டேன்.

குருநாதர்:- அப்பனே இப்பொழுது கேள்.

அடியவர் 7:- எங்கள் சிந்தனை , எங்களிடம் ஐயாவுடைய எண்ணங்கள் எல்லாம் நல்லபடியா இருக்க ஆசி தாருங்கள்.

குருநாதர்:- அப்பனே கேட்கச்சொல்.
(இங்கு உள்ள) அனைவருக்கும் என்ன என்ன வேண்டும் என்று நீ கேட்டு என்னிடம் சொல்.

அடியவர் 7:- (அங்கு உள்ள அடியவர்களைப் பார்த்து ) என்ன வேண்டும்?

அடியவர் 11:- புண்ணியங்கள் செய்யக்கூடிய ஒரு கருவியாக நாங்கள் இருக்க வேண்டும்.

குருநாதர்:- அப்பனே எங்களால் புண்ணியம் செய்ய முடியாதா? முடியுமா?

அடியவர் 7:- கருவியாக இருக்கவேண்டும் என்று சொல்லுகின்றோம்.

குருநாதர்:- அப்படியே கருவியாக இருந்துவிட்டாலும்  கூட அப்பனே ஏதாவது கஷ்டம் வந்துவிட்டால்,  அய்யய்யோ கஷ்டம். யான் புண்ணியம் செய்து விட்டேனே என்று ஏங்குகின்றார்கள். அப்பனே இது நியாயமா?

அடியவர் 7:- ( நாடி அருளாளரை பாரத்து) சாமி எப்படி இருக்கிறது என்று கேட்டு சொல்லுங்க சாமி.

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு அலை )

குருநாதர்:- அப்பனே ஒன்றுமில்லாமல் இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்ன?

அடியவர் 7:- மனதில் எதுவும் நினைச்சுக்கக் கூடாது

குருநாதர்:- அப்பனே ஆனால் அப்படியே நிச்சயம் நீ கேட்பாய் என்பேன்.

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு அலை )

குருநாதர்:- அப்பனே அதனால் எதை கொடுக்க வேண்டும்? எதைக் கொடுக்கக் கூடாது என்று அப்பனே யான் மெதுவாகச் சொல்கின்றேன். பின் உங்களுக்கு என்ன தேவை, என்ன தேவை இல்லாது என்று அனைவரிடத்தில்  நீயே கேள் அப்பனே.  அப்பனே ஏன் சொல்கிறேன் என்றால் அப்பனே சில கர்மாக்கள் இருக்கிறது உந்தனுக்கு.  நிச்சயம் இது கூட  கலைந்துவிடும். சொல்.

( அடியவர்கள் உணர்க. இதுவரை இந்த 7ஆம் அடியவர் குருநாதருக்கும் அங்கு உள்ள அடியவர்களுக்கும் இடையில் ஒரு இனைப்பாகச் செயல் பட்டு உள்ளார். இனிமேல் வரும் வாக்கிலும் அப்படியே. இந்த செயல்,  அவர் கர்மாவை கரைப்பதற்கு கருணைக்கடல் செய்த அருள் ஆசியே. நன்கு கவனிக்கவும். அந்த 7ஆம் அடியவருக்கு சித்தர்கள் வழியில் எளிய பரிகாரம் இந்த நிகழ்வில் நடந்து கொண்டு உள்ளது.)

அடியவர் 7:- (அடியவர்களைப் பார்த்து) எல்லாருக்கும் என்ன வேண்டும்? என்ன வேண்டாம் என்று நீங்களே சொல்லுங்கள்?

அடியவர் 12:- ஐயா இறை அருள் வேண்டும். மீண்டும் இவ்வுலகில் பிறவாத நிலை வேண்டும்.

அடியவர்-பித்தன்:- ஐயா திருவருட்பாவில் பாடி உள்ளார்களே..
( என்று பின் வரும் பாடலை பாட ஆரம்பித்தார். அந்த முழுப் பாடலையும் இங்கு அடியவர்கள் அறியத் தருகின்றோம். வள்ளலார் இயற்றிய திரு அருட்பா  https://www.thiruarutpa.org  என்ற மகத்தான நூலில் 6 திரு முறைகள் உள்ளன. அதில் உள்ள ஐந்தாம் திருமுறை அதனில் 83 பாடல்கள் உள்ளன. அதில் 52ஆம் உள்ள பாடல் தொகுப்பின் பெயர் “தெய்வ மணி மாலை”. அதனுள் வரும் 8ஆம் பாடலே இந்த அடியவர்-பித்தன் பாடிய பின் வரும் பாடல். )

ஓம் இராமலிங்க அடிகளார் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும்

பொய்மை பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும்

மதமான பேய் பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்

உனை மறவா திருக்க வேண்டும்

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்

நோயற்ற வாழ்வுனான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையிற்

கந்தகோட்டத்துள் வளர்

தலமோங்கு கந்த வேளே

தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வ மணியே.

பாடல் விளக்கம்:-

ஒவ்வொரு சமயமும் கடவுளை வேறு வேறு தேவைகளுக்காக நினைக்கிறோம்.
நமக்கோ, நமக்கு வேண்டியவர்களின் உடல் நலம் வேண்டி, பணம் வேண்டி, பிரச்சனை தீர வேண்டி, பிள்ளைகளுக்கு நல்ல வேலை வேண்டி, நல்ல வரன் வேண்டி இப்படி பலப் பல காரணங்களுக்காக இறைவனை நினைகின்றோம்.

அது பக்தி அல்ல. 'ஒருமையுடன்' ஒரே சிந்தனையுடன் அவனது மலரடி நினைப்பவர் உறவு வேண்டும்.

வாயொன்று சொல்லும், மனம் ஒன்று நினைக்கும் மனிதர்கள் தான் இங்கு அதிகம்.  உள்ளும் புறமும் வேறாய் இருக்கும் வஞ்சகர்கள் அவர்களாக வந்து நம்மோடு கலந்து விடுவார்கள். நாம் அவர்களை தேடி போவது இல்லை.நாம் அறியாமல் நடப்பது. எனவே, வள்ளலார், அது போன்ற மனிதர்களின் உறவு கலவாமை வேண்டும் என்று வேண்டுகிறார்.

இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே கொள்ளை அடிப்போர் உண்டு. எனவே, உன் புகழையும் பேசவேண்டும், பொய் பேசாமல் இருக்க வேண்டும் என்று இரண்டையும் வேண்டுகிறார்.

மனிதனுக்கு மதம் பிடிக்காமல் இருக்க வேண்டும். இறைவனின் பெயரால், மதத்தின் பெயரால், எத்தனை போர்கள், எத்தனை உயிர் பலி...அதை கண்டு வருந்தி "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்று வேண்டுகிறார்

கட்டி அணைக்கும் பெண் ஆசையை மறக்க வேண்டும் என்கிறார். ஞாபகம் இருந்தால் மீண்டும் வேண்டும் என்று தோன்றும். மறந்து விட வேண்டும். எப்போதும் இறைவனை மறவாது இருக்க வேண்டும்.

நல்ல புத்தி வேண்டும். நல்ல புத்தி இருந்தாலும் அது தவறான வழியில் செல்லாமல் இருக்க இறைவனின் அருள் வேண்டும். நோயற்ற வாழ்வு வேண்டும்.

சென்னையில் உறையும் கந்தவேளே !
குளிர்ந்த (தண்) முகத்தை உடைய, தூய்மையான மணிகளில் சிறந்த மணியான சைவ மணியே, சண்முகத் தெய்வ மணியே எனக்கு நீ இதை எல்லாம் அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.

- வள்ளலார்.

(அடியவர்களே, வாருங்கள் மீண்டும் வாக்கின் உள் செல்வோம் )

குருநாதர்:- (இந்த பாடல் 4 வரிகள் ஆரம்பித்த உடனே ) அப்பனே ஒன்றைச் சொல்கிறேன். இப்பொழுதே  உன் விதியை மாற்றி அமைக்கிறேன். இவன் (அடியவர்-பித்தன்) என்ன பாடினான். அதை நீ பாட வேண்டும்.

( அடியவர்களே, இங்குதான் அந்த அதிசயம் நடக்க ஆரம்பித்தது. பாடலை பாடிய உடனே விதியையே உடனே மாற்றுகின்றேன் என்று கருணைக்கடல் உரைத்தார்கள் எனில் இந்தப் பாடலின் மகிமையை மனிதர்களால் உரைக்க இயலாத தெய்வீகப்பாடல் என்று இதயத்தில் இருத்துக.  “அருட்பெருஞ்சோதி  அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி” என்ற மந்திரத்தை உலகோருக்கு உபதேசம் புரிந்த வள்ளலார் இராமலிங்க அடிகளார் இயற்றிய இந்த மகத்தான பாடலின் மகத்துவம் என்ன என்று நன்கு உள்வாங்கி இந்த பாடலை அதன் விளக்கத்தையும் நன்கு பொருள் உணர்ந்து ஓர் முறை படித்து மகிழுங்கள். விதியை மாற்றக்கூடிய மகத்தான பாடல் என்று உணர்க. )

அடியவர் 7:- உத்தமர் மனம் வேண்டும், பிறவா நிலை வேண்டும், நல்ல மனம் வேண்டும்

குருநாதர்:- அப்பனே இது சரியா என்று அவனைக் கேள்?

அப்பனே இன்னொரு முறை பாடலை பாடு.

அடியவர்-பித்தன்:- ஒருமை யுடன் நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.
பெருமை நினது புகழ் பேச வேண்டும்.
நரம்பு பெண்ணாசை மறக்க வேண்டும்.
மதி வேண்டும் நின் கருணை வேண்டும்.
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்.

குருநாதர்:- அப்பனே பாடு.

அடியவர் 7:- எழுதிக் கொடுத்தால் தான் சாமி பாட முடியும்.

குருநாதர்:- அப்பனை மீண்டும் அப்படியே பாடு.

அடியவர்-பித்தன்:- ( இந்த பாடலை நிதானித்துப் பாட, அதை 7ஆம் அடியவர் உடன் பாடினார்கள். இந்த மகிமை புகழ் பாடலின் மகத்தான மகத்துவத்தை உணர்ந்து அந்த உரையாடலை அப்படியே கீழே அடியவர்கள் அறியத் தருகின்றோம்.)

அடியவர்-பித்தன்:- ஒருமையுடன்
அடியவர் 7:- ஒருமையுடன்

அடியவர்-பித்தன்:- நினது திரு மலரடி
அடியவர் 7:- நினது திரு மலரடி

அடியவர்-பித்தன்:- நினைக்கின்ற
அடியவர் 7:- நினைக்கின்ற

அடியவர்-பித்தன்:- உத்தமர் தம்
அடியவர் 7:- உத்தமர் தம்

அடியவர்-பித்தன்:- உறவு வேண்டும்
அடியவர் 7:- உறவு வேண்டும்

அடியவர்-பித்தன்:- உள்ளொன்று வைத்துப்
அடியவர் 7:- உள்ளொன்று வைத்துப்

அடியவர்-பித்தன்:- புறமொன்று பேசுவார்
அடியவர் 7:- புறமொன்று பேசுவார்

அடியவர்-பித்தன்:- உறவு கலவாமை வேண்டும்.
அடியவர் 7:- உறவு கலவாமை வேண்டும்.

அடியவர்-பித்தன்:- பெருமை நினது புகழ் பேச வேண்டும்.
அடியவர் 7:- பெருமை நினது புகழ் பேச வேண்டும்.

அடியவர்-பித்தன்:- நரம்பு பெண்ணாசை மறக்க வேண்டும்.
அடியவர் 7:- நரம்பு பெண்ணாசை மறக்க வேண்டும்.

அடியவர்-பித்தன்:-மதி வேண்டும்
அடியவர் 7:- மதி வேண்டும்

அடியவர்-பித்தன்:-நின் கருணை வேண்டும்.
அடியவர் 7:- நின் கருணை வேண்டும்.

அடியவர்-பித்தன்:-நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்.
அடியவர் 7:- நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்.

குருநாதர்:- அப்பனே முதல் வகுப்பிலே இருக்கின்றாய் அப்பனே. எப்படியப்பா? அதனால் அனுதினமும் சென்று அப்பனே இதை  நிச்சயம் ஈசன் முன்னே பாடிட்டு வா அப்பனே. நிச்சயம் அனைத்தும் செய்து விடுவான்.
(இந்த அடியவருக்கு இது போல அங்கேயே பல புதையல்களை வாரி வழங்கினார்கள் கருணைக்கடல். )

குருநாதர்:- அப்பனே இன்னும் தெரியாமல் இருப்பது, தெரியாமலே அப்பனே வாழ்க்கை பற்றி இருக்கிறார்கள் அப்பனே.  அவர்களுக்குக் கொடுத்தால், அவர்கள் அதை சரியாகப் பயன்படுத்த மாட்டார்கள் அப்பனே. இப்பொழுது என்ன கூறுகிறாய் பதில்?

அடியவர் 7:- நீங்கள் சொன்னால் சரி தான் சாமி.

குருநாதர்:- அப்பனே இது போலத்தான் சொல்கின்றாய். சொன்னால் சரி , சொன்னால் சரி என்று. அப்போது சேவை இனி எது என்று அறிய அறிய இனி உணவை இனிமேல் உட்கொள்ளாதே என்று யான் சொல்லிவிடுகின்றேன். (அகத்தியன்) நீ சொல்வது சரி என்று சொல்லி விடுவாயா என்ன? அப்பனே சந்தர்ப்பங்கள் அப்பனே எங்கெங்கு எப்படி பேசுதல் , அதனால்தான் அப்பனே ஆராய்ந்து ஆராய்ந்து பேச வேண்டும். பேசு?

( இந்த மகத்தான சந்தர்ப்பத்தில் கருணைக்கடல் இந்த அடியவருக்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றார் என்று உணராமல் பேசிக்கொண்டு இருந்தார். கருணைக்கடல் அதனை எடுத்து உரைத்து மீண்டும் ஒரு சந்தர்ப்பம் அளித்தார்கள்.)

அடியவர்-பித்தன்:- இடம் பொருள் ஏவல் அறிந்து பேச வேண்டும்.

நாடி அருளாளர்:- ஐயா ( அடியவர் 7) கேளுங்கள் ஐயா.

குருநாதர்:- அப்பனே ஓடோடி வந்தாய் அப்பனே. எப்பொழுது, எப்பொழுது வாக்குகள் கிட்டும் என்றெல்லாம் ஏங்கிக்கொண்டிருக்கின்றாய் அப்பனே. இனிமேல் அப்பனே (நாடி வாக்கு கேட்க) வருவாயா வரமாட்டாயா?

அடியவர்கள்:- ( பலத்த சிரிப்புக்கள்)

அடியவர் 7:- வருவேன் சாமி.

குருநாதர்:- அதனால்தான் அப்பனே எதற்காக வருவாய்?

அடியவர் 7:- நல்லபடியாக இருப்பதற்கு.

குருநாதர்:- அப்பனே இது தவறு.

அடியவர் 7:- வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வேன் சாமி.

குருநாதர்:- அப்பனே ஏன் தரிசனம்?

அடியவர் 7:- நல்ல புத்தியுடன் இருக்க வேண்டும்……


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்.

மீள்பதிவாக:-

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 29 - https://tut-temples.blogspot.com/2024/09/04092023-29.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 28 - https://tut-temples.blogspot.com/2024/09/04092023-28.html

சிவவாக்கியர் சித்தர் அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 27 - https://tut-temples.blogspot.com/2024/09/04092023-27_10.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 27 - https://tut-temples.blogspot.com/2024/09/04092023-27.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 26 - https://tut-temples.blogspot.com/2024/09/04092023-26.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 25 - https://tut-temples.blogspot.com/2024/09/04092023-25.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 24 - https://tut-temples.blogspot.com/2024/08/04092023-24.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 23 - https://tut-temples.blogspot.com/2024/08/04092023-23.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 22 - https://tut-temples.blogspot.com/2024/08/04092023-22.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 21 - https://tut-temples.blogspot.com/2024/08/04092023-21.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 20 - https://tut-temples.blogspot.com/2024/07/04092023-20.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 19 = https://tut-temples.blogspot.com/2024/07/04092023-19.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 18  - https://tut-temples.blogspot.com/2024/06/04092023-18.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 17 - https://tut-temples.blogspot.com/2024/06/04092023-17.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 16 - https://tut-temples.blogspot.com/2024/06/04092023-16.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 15 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-15.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 14 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-14.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 13 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-13.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 12 - https://tut-temples.blogspot.com/2024/04/04092023-12.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2024/04/04092023-1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 11 - https://tut-temples.blogspot.com/2024/03/04092023-11.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 10 - https://tut-temples.blogspot.com/2024/03/04092023-10.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 9 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-9.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 8 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-8.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

2 comments:

  1. Om agathisaya nama

    ReplyDelete
    Replies
    1. இறைவா..அனைத்தும் நீ! நமச்சிவாய அனைத்தும் நீ!! சர்வம் சிவார்ப்பணம்..!!

      Delete