இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தீபாவளி கொண்டாட்டங்கள்
நிறைவு பெற்று, இன்று கந்த சஷ்டி வழிபாட்டிற்கு அனைவரும் தயாராகி
இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். தீபாவளி சேவையில் கூடுவாஞ்சேரியில்
நடைபெற்ற சேவையாக வஸ்திரமும், அரிசியும் வழங்கப்பட்டது. இதற்கு
சிரமேற்கொண்டு ஏற்பாடுகள் செய்த திரு.சத்யராஜ் அவர்களுக்கு நம் தளம்
சார்பில் நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கின்றோம். ஏனென்றால் ஒவ்வொரு
நிகழ்விற்கு முதலில் பொருள் தயார் செய்ய வேண்டும். அடுத்து அதற்கேற்ப நாம்
சேவையை தீர்மானிக்க வேண்டும். இவற்றை நாம் தான் செய்கின்றோம் என்றால்
நம்மால் ஒன்றுமே செய்ய இயலாது. குருவின் அருளால் அந்த பரம்பொருள் நமக்கு
கொடுப்பதை நாம் மற்றவருக்கு கொடுக்க பணிக்கப்பட்டுள்ளதாக எண்ணும் போது தான்
சேவைகளை தொடர்ந்து செய்ய இயலும்.
முருகா!
எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே!
அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய்.
இன்னும் செய்து தா!
என்று வேண்டுவது ஒன்று தான் நம் கையில் இருக்கின்றது.
இது
ஒருபுறமிருக்க, இன்றைய கந்த சஷ்டி வழிபாடு நம் தளம் சார்பில் கூட்டுப்
பிரார்த்தனையில் முருக வழிபாடாக இன்று முதல் ஆறு நாட்களாக நடைபெற உள்ளது.
இதற்கு நம் குழு சார்பில் அனைவரையும் மாலை 7 மணி அளவில் டெலிக்ராம்
செயலியில் இனணயும்படி வேண்டுகின்றோம்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
உருவாக, உருவமில்லாததாக, உள்ளதாக, இல்லாததாக, நறுமணமாக, மலராக, மணியாக,
உலகின் மூலப்பொருளாக, உயிருக்கு உயிராக, வீடுபேறை அடைகின்ற விழியாக
விளங்கும், என் முருகா, வந்து அருள் புரிவாய்!
கந்தபுராணம் கூறும் ஸ்கந்தஷஷ்டி - விரதமுறை
ஸ்ரீ முருகப்பெருமானின் முக்கிய விரதங்களில் ஓன்று ஸ்கந்த_ஷஷ்டி விரதம்.இந்த விரதத்தை எவ்வாறு அனுசரிக்கவேண்டும் என்ற முறையினை
ஸ்ரீ கச்சியப்பசிவாச்சாரியர் கந்தபுராணத்தில் பாடியுள்ளார்..
1) ஷஷ்டி விரதம் எப்பொழுது மேற்கொள்ளவேண்டும்.. ?
"வெற்பொடும் அவுணன் தன்னை வீட்டிய தனிவேல் செங்கை
அற்புதன் தன்னைப் போற்றி அமரரும் முனிவர் யாரும்
சொற்படு துலையின் திங்கள் சுக்கில பக்கம் தன்னில்
முற்பகல் ஆதி யாக மூவிரு வைகல் நோற்றார். "
கிரவுஞ்சமலையுடன்
தாரகனை அழித்து ஒப்பற்ற வேலினை தம் திருகரத்தில் கொண்டுள்ள முருகனை வேண்டி
விரதமிருந்து திருவருட்பலனை உடனே பெற்றிட, ஐப்பசிமாதம் வளற்பிறையில்
பிரதமை முதல் ஷஷ்டி வரை உள்ள ஆறுநாட்கள் விரதம் மேற்க்கொள்ளவேண்டும்..
2) ஷஷ்டி விரதம் எவ்வாறு கடைப்பிடிக்கவேண்டும்?
"முந்திய வைகல் ஆதி மூவிரு நாளும் காலை ,
அந்தமில் புனலின் மூழ்கி ஆடை ஓர் இரண்டும் தாங்கி,
சந்தியில் கடன்கள் செய்து தம்ப பிம்ப கும்பத்தில் ,
கந்தனை முறையே பூசை புரிந்தனர் கங்குல் போதில்."
விரதத்துக்குரிய
ஆறுநாட்களும் காலை மாலை குளிர்ந்த நீரில் நீராடி இரண்டு ஆடைகளை
உடுத்திக்கொண்டு ( ஒற்றை துணி கூடாது) ,,அன்றாடம் செய்துவரும் அனுஷ்டானம்
ஜெப தபங்களை முடித்துக்கொண்டு,
முருகனை
விசேஷமாக கும்பத்தில் / அக்னியில் / உருவத்தில் ( சிலை அல்லது படம்)
ஆவாஹனம் செய்து முறையாக பூஜித்து ஆறுநாட்களும் வழிபட்டு கடைப்பிடித்து
வரவேண்டும்..
(தம்பம் - அக்னி / கும்பம் - கலசம் / பிம்பம் - உருவச்சிலை அல்லது வேல் அல்லது முருகனது படம் )
3 ) விரத நாட்களில் கந்தனை எவ்வாறு வழிபடவேண்டும் ?
" நிறைதரு கட்டி கூட்டி நெய்யினால் சமைக்கப்பட்ட
குறைதவிர் மோதகத்தைக் #குமரநாயகர்க்கு அருத்திப்
பிறவுள விதியும் செய்து பிரான் திருப்புகழ் வினாவி,
உறுபுனல் சிறிது மாந்தி உபவசித்து இருந்தார் மாதோ"
ஷஷ்டி
விரதம் ஆறுநாட்களிலும் இனிப்போடு கூடிய மோதகம் (தேன் திணை /
சக்கரைப்பொங்கல் ) போன்ற இனிப்பு பலகாரங்களை நிவேதனம் செய்து, மற்றுமுள்ள
வழிபாட்டு முறைகளை ( குரு வாக்கியப்படி ) கடைப்பிடித்து ,
முருகனது
புகழினை பாடும் கந்தபுராணம் / திருப்புகழ் / கந்தர்கலிவெண்பா / கந்தர்
அலங்காரம் கந்தர் அனுபூதி ,சஷ்டி கவசம் போன்ற பாடல்களை பரராயணம் செய்தும்
கந்தபுராணத்தை பாராயணம் செய்தும் கேட்டும், சிறிதளவு நீரைப் பருகி உபவாசம்
இருக்கவேண்டும்.
(உபவாசம் - உணவின்றி பட்டினியாக விரதம் இருத்தல். இது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப கடைப்பிடிக்கவேண்டும்) சரீர தர்மம் முக்கியம் ...
4) ஷஷ்டி விரத்தால் ஏற்படும் பலன் யாது?
"ஆரண முனிவர் வானோர் அங்கதன் மற்றை வைகல்
சீரணி முருக வேட்குச் சிறப்பொடு பூசை ஆற்றிப்
பாரணம் விதியில் செய்தார் பயிற்றும் இவ் விரதம் தன்னால்
தாரணி அவுணர் கொண்ட தம்பதத் தலைமை பெற்றார்."
இவ்வாறு இந்த ஸ்கந்த ஷஷ்டி விரதத்தை ,வேதங்களை கற்ற முனிவர், தேவர்கள் என அனைவரும் ஆறுநாட்களும் ஷஷ்டி விரதம் இருந்து,
ஏழாம் நாள் ஸப்தமி அன்று முருகனுக்கு விசேஷபூஜை செய்து, அதன்பின் உணவு
உட்கொண்டனர். இவ்வாறு ஷஷ்டி விரதம் கொண்டதால் ,அசுரர்கள் கவர்ந்துகொண்ட
தம்தம் உலகபதவிகளை தலைமையை மீண்டும் பெற்றனர்.
#பாரணம் - விரதம் பூர்த்தி செய்தபின் உண்ணுதல்.
(ஷஷ்டி விரத பலனால் குழந்தை பேறும் / வெற்றியும் / மேலான பதவியும் கிட்டும் என்பதாம்)
5) ஷஷ்டி விதர பலனை பெற்றவர்கள் யாவர்?
ஸ்ரீ முசுகுந்தமன்னன் இவ்விரதம் மேற்கொண்டு பலன் பெற்றார்.
6) முசுகுந்த மன்னனுக்கு முருகப்பெருமான் எத்தகைய பலனை அருளினார்?
" என்ற காலையில் முசுமுகம் உடையவன் எந்தாய்,
நன்று பாரெலாம் எனது செங்கோலிடை நடப்பான்... "
என்றபடி
இவ்வுலகத்தையே ஆளும் வரத்தை முருகப்பெருமான் அளித்தார். அதோடு தமது
இலட்சத்து ஒன்பது வீரர்களையும் முசுகுந்த மன்னனுக்கு படைத்துணையாக
தந்தருளினார்.
எனவே
ஷஷ்டி விரதம் மேலான பதவி / வேண்டிய பலன்களை தருவதோடு தக்க நேரத்தில்
தகுந்தவர் துணையையும் தந்து வேலும் மயிலும் நம்மை காத்தருளும் என்பதாம்.
முருகன்
அருள் முன்னிற்க, கந்த சஷ்டி வழிபாட்டில் பாட நாம் பாராயணம் செய்ய
தேடிக்கொண்டு இருந்த போது , கந்த புராண ஞான சபை. மூலம் கலி தோஷம் போக்கும் கந்த புராணம் பாராயணம் நூல் கிடைத்தது . நாளை முதல் முருகன் அருளால் முதல்
முறையாக பாராயணம்
செய்ய உள்ளோம். வருகின்ற ஸ்கந்த ஷஷ்டி விரத காலங்களில் கந்தபுராணத்தை பாராயணம் செய்வது கைமேல் பலன் அளிக்கவல்லது .கந்தபுராண பாராயணம் இந்திர செல்வத்தை அளிப்பதோடு,மனதில் எண்ணிய காரியங்களும் வெற்றிபெறும், மேலும் நிறைவில் சிவமுக்தியும் அளிக்கவல்லது.இகபர சுகம் என்ற இருவித பலன்களையும் தந்தருள்வது கந்தபுராண பாராயணம்.
ஸ்ரீ முருகப்பெருமானின் முக்கிய வழிபாடுகளில் ஒன்று ஐப்பசி மாதம் வரக்கூடிய ஸ்கந்தஷஷ்டி விரதமாகும் ...
கந்த ஷஷ்டி விரதம் ஆறு நாட்களும் கந்தபுராணம் நூலை பாராயணம் செய்வது மரபு ,.இதனை கந்தபுராண படனம் என்று அழைப்பார்கள் ...
முருகப்பெருமான் திருஅவதாரம், சூரனோடு நடத்த போர், சூரசம்ஹாரம், தெய்வயானை ,வள்ளிநாயகி திருமணம் என ஆறுநாட்களும் கந்தகடவுளின் திருவரலாற்றினை எடுத்துக்கூறும் கந்தபுராணத்தை பாராயணம் செய்வது கைமேல் பலன் அளிக்கவல்லது ....
கந்தபுராணம் முழுமையும் பாராயணம் செய்யவேண்டும் ...
அவ்வாறு முழுமையாக பாரயாணம் செய்திட முடியாதவர்களும் ,
கந்தபுராண பாராயணப் பலனை பெற்றிடும் வகையிலும் , கந்தபுராண பாராயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும்,
கந்தபுராணம் ஆறுகாண்டங்களில் , ஒவ்வொரு காண்டத்தில் இருந்தும் 51 பாடல்கள் தொகுத்து, கலிதோஷம்_போக்கும்_கந்தபுராணம் என்ற இந்நூல் வெளிவந்துள்ளது.
இந்நூலினை பாராயணம் செய்யும் முறை பற்றிய அட்டவணை தரப்பட்டுள்ளது. ஒருநாளில் 51 பாடல்கள் பாராயணம் செய்வது எளிமையானது ..
எனவே ,இந்நூலினை ஷஷ்டி விரதம் இருக்கக்கூடியவர்கள் அல்லது பொதுவான முருகர் வழிபாடு செய்பவர்கள் என அனைவரும் இந்நூலை பக்தியோடு பாராயணம் செய்திடலாம் ...
ஒரு குழுவாக அமர்ந்தும் இந்நூலை பாராயணம் செய்திடலாம் ...
கந்தபுராணப் பாராயணம் என்பது இகபர சுகம் என்ற இருவித பலன்களையும், மனதில் வேண்டிய பிரார்த்தனையும் நிறைவேற்றித் தரக்கூடியது ..
அவ்வகையில் விரும்புவோர் இந்நூல் பெற்றிட ,
(நூல் தொகை ரூ - 100.+ தபால் அல்லது கூரியர் செலவு தனியாக சேர்த்து)
GPAY & Whatsapp - 9751848933
மேற்கண்ட எண்ணில் தொகை செலுத்தி, தங்கள் முழுமுகவரி அனுப்பவேண்டும் ..
நூலினை பெற்று, வழக்கம் போல் குருவிடம் ஆசி பெற்ற அருள்நிலையை கீழே காணலாம் . அதுவும் சரியாக ஐப்பசி ஆயில்யம் அன்று குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமானிடம் நாம் பேசி பெற்றுள்ளோம் என்றால் குருவின் கருணைக்கு எல்லையேது! முருகப்பெருமானின் அன்பிற்கு எல்லையேது!!
அழைப்பிதழ் PDF வடிவில் இங்கே காணலாம்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
உருவாக, உருவமில்லாததாக, உள்ளதாக, இல்லாததாக, நறுமணமாக, மலராக, மணியாக,
உலகின் மூலப்பொருளாக, உயிருக்கு உயிராக, வீடுபேறை அடைகின்ற விழியாக
விளங்கும், என் முருகா, வந்து அருள் புரிவாய்!
என்று கந்தப் பெருமானிடம் வேண்டி,நம்மை வழிநடத்தும் அனைத்து
குருமார்களுக்கும் நன்றி கூறி பதிவை முழுமை செய்வோம். வாய்ப்புள்ள
அன்பர்கள் கந்த சஷ்டி வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.
வாழ்த்து:
"ஆறிருதடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம்."
சர்வம் குஹார்ப்பணம்.
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
- மீண்டும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment