இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அண்மையில் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் அருளிய கேள்வி பதில் தொகுப்பை சித்தன் அருள் வலைதளத்தில் இருந்து இங்கே பகிர்கின்றோம் . வழக்கம் போல் இவை அனைத்தும் அடியார் பெருமக்கள் குருநாதரிடம் கேட்ட அருள் மொழிகள் . இவை அனைவருக்கும் பொருந்தும் . ஒருமுறை இவற்றை படித்தால் மேலோட்டமாக தான் நமக்கு விளங்கும். ஒவ்வொரு கேள்வி பதிலையும் குறைந்தது மூன்று முறை படியுங்கள் . அப்பொழுது தான் குருநாதர் நமக்கு நடத்தி வரும் பாடங்கள் நன்கு புரியும் . இங்கே குருநாதர் நமக்கு ஞானக் கல்வியை வழங்கி வருகின்றார்கள். இந்த ஞானத்தை நாம் கற்றுக் கொண்டு , வாழ்வில் கடைபிடிப்பதே நம் வாழ்வின் நோக்கமாக கொள்ள வேண்டும் .
51. கோவிலுக்கு செல்வதில் கூட குழப்பம் வருகிறது! அதனால் தான் கேட்டேன்!
அப்பனே! திருத்தலம் செல்லலாம் அப்பனே! அகத்தியன் சொல்வது நடக்கவில்லையே என்று ஏங்குகின்றார்கள். ஆனாலும் திருத்தலத்துக்கு எப்படி செல்ல வேண்டும், எங்கு நிற்க வேண்டும், எங்கு அமர்ந்து தியானங்கள் செய்ய வேண்டும், எங்கு தீபங்கள் ஏற்றினால் நல்லது என்பவைகளை அங்கு இருந்து அவன் உள்ளத்திற்குள் பிரதிபலித்து மாறும் என்பதை எல்லாம் அறிவோம் அப்பனே. யார் வேண்டுமானாலும் சொல்லட்டும், ஆனால் கடைசியில் யான் தான் சொல்லப் போகிறேன். அப்போது அப்பனே! உண்மைகளை அவரவர் தெரிந்து கொண்டால் தான் நன்று. இப்பொழுது என்ன சொன்னாலும், இந்த சுவடியை ஓதுபவன் மீதும் குற்றம் வந்துவிடும், அன்பு மகனே.
52. எளிய பிராணயமம் மூச்சு பயிற்சியை சொல்லித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அப்பனே! முதலில் எளிமையாக தெரிந்ததை செய்து வரச்சொல். பின்பு உரைக்கின்றேன்.
53. ஐயா சூரிய நமஸ்காரத்தைப் பற்றி கூறவும் ஐயா!
அப்பனே! அவன் எதிரில் சும்மா நின்றாலே போதுமப்பா. உடலால் ஆசனங்கள் செய்து, அங்கப்பிரதக்ஷிணமும் செய்தாலே போதுமப்பா.
54. ஐயனே அகத்தியப் பெருமானே அடியேன் உலக மக்கள் நலம் பெற கோளாறு பதிக்கத்தையும், சிவபுராணத்தையும் நூலாக அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றேன் இந்நூலிற்கு தங்களின் அருள் ஆசியும் சித்த பெருமக்களின் அருளாசியும் சிவபெருமானின் அருள் ஆசியும் கிடைக்க வேண்டும் ஐயனே.... ஓம் அகத்தீசாய நம..
அப்பனே! எம்முடைய ஆசிகள் இருந்ததினால் தான் இதை வெளியிட்டிருக்கின்றான் அப்பனே! என்னப்பா கேள்வி, இது?
55. ஒருவன் அல்லது ஒருவள் ஆன்மீகத்தில் சரியான பாதையில் செல்கிறீர்களா என்று தெரிந்து கொள்வது எப்படி? அவர் தம்மை மாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
அப்பனே! அமைதியாக திருத்தலத்தை நாடி, இறைவன் திருத்தலத்தில் அமர்ந்து கொண்டாலே போதுமானதப்பா. மீதியெல்லாம் யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே!
56.ஐயா செயற்கை கருத்தரிப்பு முறையில் உருவாக்கப்படும் பசுக்கள் மற்றும் மனித இனங்களுக்கும் ஆன்மபதிவுகள் உண்டா என்றும் அந்த வகையான விலங்கினங்களுக்கு கொடுக்கப்படும் அகத்திக் கீரைபோன்ற செயல்பாடுகள் எவ்விடத்தில் பதியப்படும்???
அப்பனே! இவை எல்லாம் ஒரு கேள்விகளா அப்பா! இவற்றை பற்றி இப்பொழுது, தேவை இல்லை. பின்பு உரைப்பேன் இதை பற்றி அப்பனே!
அப்பனே! உங்களையே, யான் பொம்மைகள் என்று சொன்னேன்! அப்பனே! அப்படித்தான் இயக்குகின்றன என்று சொன்னேன். அப்பனே! மனிதன், மனிதனையே இயக்குவானப்பா. இன்னும் ரகசியத்தை எல்லாம் சொல்லுகின்றேன். இதனைப்பற்றி இப்பொழுது விவரமாக குறிப்பிட்டாலும், தேவை இல்லை அப்பனே. நன் முறைகளாக ஒரு பசுவையும், கன்றையும் இல்லத்தில் வளர்க்கச்சொல், பின்பு உரைக்கின்றேன்!
57. ஐயா வணக்கம் உத்திராக்ஷம் ஒரு முகம் ஐந்து முகம் எல்லாம் ஒரு சக்தி வாய்ந்ததா கன்னி பெண்கள் மற்றும் திருமண ஆன பெண்கள் அணியலாமா?
அப்பனே! ஈசன் என்றாலே சக்தி மிகுந்தவன் தான் அப்பனே. ஈசன் என்றாலே பின் ருத்திராக்ஷம் என்பேன் அப்பனே. ஈசனை, ருத்திராக்ஷ ரூபத்தில் பார்த்தாலே போதுமானதப்பா!
58. விஷ்ணு அவதாரங்கள் ,,--- கிருஷ்ணர்,ராமசந்திரமூர்த்தி. போல முருகன் வந்தாரா ? ஞானசம்பந்தரின் 3 வயதில் உமையம்மை ஞானபால் குடுத்தாங்க அவர் தமிழ் வளர்க்க வந்ததாரா?
அப்பனே, இவை எல்லாம் ஒவ்வொரு திருத்தலத்தில் சொன்னால் தான் புரியுமப்பா. முருகன் ஒவ்வொரு திருத்தலத்தில் என்னென்ன செப்பினான் என்றும், ஒவ்வொரு குடும்பத்தை எப்படி காப்பாற்றினான் என்பதும் விவரமாக தெரிவிக்கின்றேன், பொறுத்திருக்க.
59. இறையருளால் தங்களை வணங்கி எனது கேள்வி அனுப்புகிறேன். சென்ற முறை கேள்வி -பதிலில் மரம் நடுதல் பற்றி கேட்டேன். அதற்கு ஆதி முதல்வர் அகத்தியர் பத்தாயிரம் மரம் நட உத்தரவு இட்டார். என்னால் இப்போது வரை ஒரு மரம்தான் நட முடிந்தது. என்னுடைய இயலாமையால் தான் நடைபெறவில்லை. தயவு கூர்ந்து அகத்தியர் அருகில் இருந்து நடத்தி தர வேண்டும். என்னை நல்வழி படுத்த வேண்டுகிறேன். அகத்தியர் அருள் வேண்டுகிறேன். ஆசீர்வாதம் வேண்டுகிறோம்.
அப்பனே! நடத்தி வைக்கின்றேன் அப்பனே!
60. குருநாதருக்கு அடியனின் பணிவான நமஸ்காரத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சில நட்சத்திர ராசிக்காரர்கள் சில கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யக்கூடாது என்கிறார்கள் உதாரணமாக தனுசு ராசிக்காரர்கள் திருப்பதி வெங்கடாஜலபதி தரிசனம் செய்ய கூடாது தரிசித்தால் பிரச்சனைகள் அதிகமாகும் என்கிறார்கள். இதைப் பற்றி குருநாதர் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
அப்பனே! அப்படியே வைத்துக்கொள்வோம் அப்பனே! தனுசு, வில் அம்பை குறிக்கும். அதாவது ராமனை குறிக்கும் என்பேன் அப்பனே. அவன் அவதாரம் தான் நாராயணன் என்பேன் அப்பனே. அவன் மிக கருணை உள்ளவனப்பா. அவனை போய் வணங்க மனிதனுக்கு தகுதிகள் வேண்டுமப்பா. அதாவது, மனிதன் தான் இங்கு தெய்வமாகினான் என உணரவேண்டும். மனிதனை, அதை செய்யக் கூடாது இதை செய்யக் கூடாது என்று கூறி நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார்கள், அப்பனே! இதனால் நிச்சயம் எச்சரிக்கிறேன். அங்கு செல்லக்கூடாது இங்கு செல்லக்கூடாது என்று கூற மனிதனுக்கு ஏத்தகுதியும் இல்லை அப்பனே. சொல்லிவிட்டேன், அப்பனே!
61. பம்பை உடுக்கை அடித்து சாமி கும்பிடும் போது பெண்கள் சாமி வந்து ஆடுவது அருள் வாக்கு சொல்வது பற்றிய உண்மை தன்மை சித்தர்கள் வாயிலாக அறிய வேண்டும்?
அப்பனே! இது பற்றி பொருத்தாகத்தான் வேண்டும் அப்பனே!
62. அனைவரும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் ஏதேனும் புதிய பெரிய பொருள் வாங்கினால் அதில் வரும் பிளாஸ்டிக் அனைத்தும் அப்படியே அப்படியே ரோட்டில் வீட்டு செல்கிறார்கள் இதில் சிறிய மற்றும் பெரிய தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் கூட மக்கள் ஏளனமாக ரோட்டில் வீசி சென்று விடுகிறார்கள். இதை எவ்வாறு முழுவதுமாக தடுப்பது பிளாஸ்டிக் அனைத்தும் மறுசுழ்சி அல்லது வேறு எதேனும் வழிகள் உள்ளனவா. இதனால் மற்ற ஜீவராசிகள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகி வருவது மிக மிக வருத்தமாக உள்ளது. இதை நமது குருநாதர் தக்க வழிகாட்டி அருள் செய்யவேண்டும். பூமித்தாயே முடிந்த அளவு இந்த பிளாஸ்டிக் ல இருந்து காக்க எனது மனம் ஆனது துடிக்கிறது.
அப்பனே! இதை பார்த்தும் தனியாக பைகளில் எடுத்து வைக்கிறான் அவன் புண்ணியவான், இதை கண்டும் ஒன்றும் செய்யாமல் சென்றுவிடுகின்றானே அவன் பாவப்பட்டவன். இவை எல்லாம் எடுத்து ஓரிடத்தில் வைக்கச்சொல், பின்பு பார்ப்போம் அப்பனே.
அண்ணாமலைக்கு செல்லச்சொல், அங்கு இருப்பதை பொருக்கச்சொல், புண்ணியங்கள், பின்பு உரைக்கின்றேன். இவந்தானுக்கு புண்ணியங்கள், பின்பு ஈசனும், பார்வதியும் ஆசீர்வதித்து விட்டார்கள். இவன்தன் உயர்ந்து நிற்பான்.
63. ரோட்டில் வாகனங்கள் மூலம் அடிபட்டு இறந்து கிடக்கும் ஜீவராசிகளின் உடலை (பூனை, ஒணான், நாய், பறவைகள். மற்ற இது போல) பக்கத்திலேயே மண்ணில் தோண்டி அதன் உடல்களை அடக்கம் செய்யலாமா அவ்வாறு செய்யும் போது என்ன நினைத்து கொண்டு நாம் செய்ய வேண்டும். இதையும் நம் குருநாதர் நம் அறிவுக்கு எட்டும் படி அருள் செய்ய வேண்டும்.
புண்ணிய செயலே. அனைத்தும் இறைவன் படைக்கின்றான், இறைவன் எப்பொழுது எடுக்க நினைக்கின்றான் என்பதே. அதனால், நிச்சயம் செய்ய நன்றே. அனைத்து உயிர்களும், அந்த உயிரும் சாந்தி அடையட்டும், அனைத்தையும் நீயே பார்த்துக் கொள்வாய் என்று.
64. தற்காலத்தில் மனித ரூபத்தில் வாழும் சித்தர்களை காட்டி அருள வேண்டும்.
நிச்சயம் அறிந்தும் கூட. முதலில் அண்ணாமலையை வலம்வரச்சொல். பின்பு செப்புவேன்.
65. அகத்தியர் அப்பா பாதமே போற்றி லோபா முத்ரா அன்னை பாதமே போற்றி அப்பா இன்றைய காலகட்டத்தில் நிறைய குடும்பங்களின் வாழ்க்கை மது போதையினால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அப்பா அதற்கு ஒரு நிரந்தர தீர்வு கூறுங்கள் அப்பா இதில் என் கணவரும் மதுவுக்கு அடிமையாக உள்ளார் அப்பா ஒரு நல்வழி காட்டுங்கள் அப்பா!
அறிந்தும் கூட, இதற்கு நிரந்திர தீர்வும் உண்டு. இதையே யான் மாற்றுவேன், பொருத்திருந்தால் கூட. (ஒரு முயற்சி செய்து பாருங்கள். வில்வ இலை சாறெடுத்து, அதிகாலையில் மூன்று நாட்கள் அருந்த கொடுத்துப் பாருங்கள்)
அறிவை இறைவன் தந்திருக்கிறான். சாக்கடை என்று தெரிந்தும் அதில்தான் விழுவேன் என்று மனிதன் நினைத்தால் என்ன செய்ய? இங்கே வா, சாக்கடை இருக்கின்றது என்றதும், அறிவுள்ள மனிதன் செல்லுகின்றானே இது யாருடைய தவறு? ஆனாலும், இதை பற்றி கூறினால், சில ஆண்டுகளில் யான் நிச்சயம் மாற்றுவேன்!
66. கருங்காலியின் பயன்பாடு யாது ? தகுந்த கருங்காலி எங்கு கிடைக்கும்?
ஒரு சிறு கம்பை எடுத்து, இறைவா சக்தி தா என்றால், இறைவன் சக்தி தரத்தான் போகின்றான். அப்பனே! நம்பிக்கை இருக்க வேண்டுமப்பா. இதை வைத்து பல நன்மைகள் செய்ய வேண்டும். இதை வைத்துக்கொண்டு மாமிசத்தை உட்கொள்ளக் கூடாது என்பேன். உட்கொண்டால், அனைத்தும் வீணப்பா. அப்பனே! கருங்காலி, கரு நாகமப்பா. காப்பதற்கும் தெரியும், அழிப்பதற்கும் தெரியும்.
67. நமது உடலில் உள்ள 7சக்ரம் சரியான முறையில் செயல்படுத்தவது எப்படி.
அப்பனே! இவற்றுக்கெல்லாம், பல ஆலயங்கள் சென்று வரவேண்டும் அப்பனே. ஒரு சிறிய வாகனத்தை இயக்குவதிலிருந்து, இன்னொரு பெரிய வாகனத்தை இயக்க வேண்டும் என்றால், கஷ்டப்பட்டால் தான் முடியும்! மனசாட்ச்சி என்று ஒன்று இருக்கிறதப்பா. முதலில் பல ஆலயங்களுக்கு, குறைந்தது 15 ஆலயங்களுக்கு சென்று வரச் சொல், நிச்சயம் செப்புகின்றேன்.
68. வாசி யோககலைபற்றி செய்வது எப்படி சரியான முறையில் வழிகாட்டுங்கள் ஐயா
அறிந்தும் கூட, இன்னும் செப்புகின்றேன், பொறுத்து இருந்தால்.
69. வணக்கம் அன்பு குருதேவா (கயிலாய மலை) மீது செல்ல முடியுமா அப்படி செல்வதற்கு நிபந்தனைகள் என்னவென்று கூற வேண்டுகிறேன்.
அறிந்தும் கூட. முதலில் அண்ணாமலைக்கு சென்று கொண்டே இருக்கச்சொல். ஈசன் மனது வைத்தால் கைலாசம் செல்ல முடியும்.
70. அய்யா சிரம் தாழ்ந்த வணக்கம்... நம் அடியவர்களுக்கு தாங்கள் பல மந்திர உபதேசங்கள் கொடுத்து உள்ளீர்கள்... மந்திரங்களை சத்தமாக வெளியில் நாம செபம் செய்யும் பொழுது மனம் இரட்டை நிலை அடைவதாக தோன்றுகிறது... உள்ளிருந்து இரட்டைகள், எதிர் வினை ஏற்ப்படுகிறது.. மனதின் உள்ளயே மௌனமாக உச்சரிக்கும் போது நன்கு மனம் அடங்குவதாக தோன்றுகிறது... அவ்வாரே செபம் செய்வதால் பலன் உண்டா... அதையே கடைபிடிக்கலாமா....?
அனைத்திற்கும் காரணம் மனம் தான். நல் மனதோடு இறைவா, அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கூறச்சொல். மந்திரங்களை அதிகாலை வேளையில் எழுந்து சொன்னால் தான் நிச்சயம் செயல்படும். அதன் பின்னே சொன்னால் லாபமில்லை. சத்தமில்லாமல், அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கடல் அருகில் இருந்தாலும் மதிப்பு. இன்னும் சொல்லுகின்றேன், சிறிது சிறிதாகத்தான் யான் செப்புவேன்.
81. பீஜ மந்திரங்கள் நம் உடலில் மனதில் எம்மாதிரி மாற்றங்கள் ஏற்படுத்துகிறது என்பதை விஞ்ஞான வாயிலாக விளக்குங்கள் .
இப்பொழுது இதை செப்புவதற்கு இல்லை அப்பா!
82. திருமணம் ஆக இருக்கும் ஒரு பெண்ணின் பொறுப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்?
முதலில் வேண்டியது, அனைத்திலும் அடக்கம். அது இருந்தாலே போதுமானதப்பா. கோபம் கொள்ளாமை, கொள்ளாமை, அனுதினமும் இல்லத்தை பெருக்கி கூட்டி நாள் விதமாக பின் இறைவன் நாமத்தை இல்லத்தில் துதித்து ஒலிக்கச்செய்தல், அது மட்டுமில்லாமல் அனுதினமும் தோலை தூரம் சென்று நீரை எடுத்து சுத்தம் செய்தல், இன்னும் பலவகையாக, சூரிய/சந்திர நமஸ்காரம் செய்து அப்பனே, நல்லவிதமாக திருத்தலங்களுக்கு சென்று வந்தாலே, யார் ஒருவர் வந்த உடனே, இதோ தண்ணீரை எடுத்து வருகிறேன் என்று எடுத்து வைத்தாலே, அப்பனே, போதுமானதப்பா.
83. மனைவியாக அவளுடைய பொறுப்பு மற்றும் கடமை என்ன?
முதலில் ஏழுமலையானை நாடச்சொல், பின்பு உரைப்பேன் யான்.
84. மருமகளாக அவளுக்கு என்ன பொறுப்பு மற்றும் கடமை?
பின் வெறுப்பாக இருந்தாலும், பொறுப்பாக இருந்தாலும், அனைத்திற்கும் காரணம் இறைவனே, (என்று உணர்க!)
85. ஒரு தாயாக அவளுடைய பொறுப்பு மற்றும் கடமை என்ன?
நிச்சயம், இங்கு அன்புதான்.
86. ஏன் நம் இந்தியாவில் பல மொழிகள் உள்ளன? தமிழ் மொழிக்குப் பிறகு மற்ற மொழிகள் ஏன் மற்றும் எப்படி பிறந்தன ?
அனைத்து மொழிகளும், தமிழில் இருந்து தான் பிறந்தது. ஆனாலும், இதைப்பற்றிய ரகசியத்தை எடுத்துரைப்பேன் வரும் காலங்களில். முறையாக எடுத்துரைத்தால்தான் அதன் அருமை பெருமை தெரியும். ஏதோ ஒன்றை சொல்லிவிட்டால் குழப்பங்கள்தான் ஏற்படும். அதனால் தான் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என வர வேண்டும் என என் பக்தர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கின்றேன். அதை நிச்சயம் தெரிவிப்பேன், என்னுடைய ஆசிகள், ஆசிகள்!
87. பகவானுக்கு நமஸ்காரங்கள். ஐயனே மூளை சாவு ஏற்பட்டவர்களை குணப்படுத்த இயலுமா?
அதற்கான மருத்துவ முறை/ மருத்துவர்கள் விபரங்கள் அறிவுறுத்த தயை கூர்ந்து வேண்டுகிறோம்.
நிச்சயம் உண்டு! ஆனால், இதன் ரகசியத்தை இப்பொழுது சொன்னாலும், மதிப்பிருக்காது. பின் எங்கு, எப்பொழுது தெரிவிக்க வேண்டுமோ, அப்பொழுது, ஏற்படுத்தி, அதன் மூலமாகத்தான் உண்மையை புரிய வைக்க முடியும். இப்பொழுது சொன்னாலும், அதை பொய் என்று சொல்லிவிடுவார்கள். முற்றும், யாங்கள் அறிந்ததே. இக்காலத்தில் ஏத்தி கொண்டு வரவேண்டும் என்பதை எல்லாம் யாமே தீர்மானிப்போம்.
88. இந்த உலகத்தில் உயிரோடு இருக்கும் வரை எந்த அளவுக்கு புண்ணியம் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு புண்ணியம் செய்ய வேண்டும் என்று மனது நினைக்கிறது ஆனால் அதை நடைமுறைக்கு கொண்டு வர முடியவில்லை...உங்கள் ஆசீர்வாதத்தோட நடைமுறைப்படுத்த முடியுமா ஐயா!
இறைவனிடம், நான் புண்ணியங்கள் செய்ய வேண்டும், நற்பண்புகள், நல் எண்ணங்கள் கொடு என்று வேண்டி நின்றாலே போதுமானது. நிச்சயம், அதன் மூலமாக இறைவன் புண்ணியத்தை செய்ய தூண்டுவான். நன்மைகளாகவே முடியும், ஆசிகள்.
89. அகத்தியர் ஐயா..சித்தன் அருளில் நீங்கள் கூறிய புண்ணியஸ்தலங்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் எங்கோ ஒரு மூலையில் வெளிநாட்டில் வாழ்கிறோம், புண்ணியஸ்தலங்களுக்கு செல்ல எங்களுக்கு ஆசீர்வாதம் கொடுங்கள் ஐயா!
நினைத்தாலே முக்தி தரும்! செல்ல முடியவில்லையே என்று ஏங்கினாலே, நிச்சயம், என்னுடைய ஆசீர்வாதம் உண்டு. லோபாமுத்திரையின் ஆசீர்வாதம் உண்டு. அதனால் தான் நிச்சயம் ஐயோ பாபங்கள் இவை என்று, புண்ணியங்கள் செய்ய முடியவில்லையே என்று ஏங்கினால், யான் காத்துக் கொள்கின்றேன், நன் முறைகளாகவே.
90. இவ்வுலகில் நடப்பவை எல்லாம் ஏற்கனவே இறைவனால் விதிக்கப்பட்டு, அவர் விருப்பப்படி நடக்கின்றது. இதற்கு, மனிதன் ஏன் தன் நேரத்தை, பொருளை தானம் செய்து, தர்மம் செய்து வாழ வேண்டும்?
இதுவரை புரியாததை புரிய வைக்கின்றேன். இன்னும் சொல்லப்போனால், வாக்குகள் கூட, செப்பி, இதை செப்பினால்தான் புரியும் என்பேன். அதனால் பொறுத்திருக்கச்சொல்.
91. ஆலயங்களில் இருப்பது இறைவன் அமர்ந்த சிலையா? அல்லது கற்சிலையா? எத்தனையோ வருடங்களாக பூசை செய்த இறைவன் திருஉருவ சிலைகள் உடைக்கப்படுகிறது, கோவில்கள் இடிக்கப் படுகிறது. அவ்வாறு செய்பவர்களை, மற்றவர்கள் கண் முன் இறைவன் தண்டிப்பதே இல்லை. அவர்கள் மேலும் மேலும் பலம் பெற்று, நிறைய தவறுகளை செய்து செல்வச் செழிப்போடு வாழ்கிறார்களே!, இப்படி அழிக்கப்படும்போது நீங்கள் சித்தர்கள், மனிதர்களை திருத்தி வாழ வைக்க வந்த இறை தூதர்கள், எங்கே போய்விட்டீர்கள்?
அனைத்தும் இறைவனுக்குரிய சொந்தங்களே, இதனால், இறைவனே அமைதி காத்திருக்கும் பொழுது, நிச்சயம் இதற்கெல்லாம் மாற்று வரும். ஏன், எதற்கு என்றெல்லாம் இப்பொழுது கேட்டாலும், அவை எல்லாம் வெளியே தெரியாமல் போகும். பின் நடப்பதெல்லாம், நன்மைக்கே என்று உணரவேண்டும். நிச்சயம், இறைவன், அனைத்தும் பார்த்துக்கொண்டே, ரசித்துக்கொண்டே இருக்கின்றான். ஏன், எதற்க்காக என்பவை எல்லாம். இவை எல்லாம் செய்யும் பொழுது, அழிவுகளே மிஞ்சும் என்பது மனிதனுக்கு தெரியாதா என்ன? நிச்சயம் இறைவன் தீண்டினால் (சீறினால்) யாரும் தாங்க மாட்டார்கள். ஏதேனும் கூறிவிட்டாள், இப்படி கூறிவிட்டான் அகத்தியன் என்று கூறுவீர்கள். முதலிலிருந்து சொல்லவேண்டும், சொல்வேன், அப்பொழுது நீங்களே ஒத்துக்கொள்வீர்கள். திருத்தலங்கள் அழிகிறது என்றால், மனிதனும் அழிவான் என்று அர்த்தம். ஆனால் மனிதன் வாழ்வதற்கு முயற்சிகள் எடுக்கவில்லையே, மனிதன் அழிவான் என்றுதான் அர்த்தம். இதனைப்பற்றி இப்பொழுது வேண்டாம், சொல்லிவிட்டேன்.இன்னும் நான் சொல்கின்றேன்.
யாங்கள் அமைத்த ஆலயங்களை யாராவது கையை வைக்கச்சொல். ஆனால் மனிதனோ, ஏதோ ஒரு தீய சக்தியை வசியப்படுத்தி கொண்டு வந்து கீழே வைத்து, அனைவரும் வரவேண்டும் என்று வைத்தால், ஒழுங்காக பார்க்கவும் தெரியாது அவந்தனுக்கு. இப்படித்தான் கலியுகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வேளை உணவு உட்கொள்ளக்கூட முடியாத அளவுக்கு உள்ளது பல திருத்தலங்கள். விளக்கு எரிவதற்கு கூட காசுகள் இல்லை. அத்திருத்தலங்கள் எல்லாம் அழியட்டும், பின் புது திருத்தலங்கள் எல்லாம் கட்டட்டும் என்று நீங்களே யோசிக்கின்றீர்களா?
92. அடியேன் கேட்பது என்னவென்றால், நூறு வருடங்களுக்கு மேல் பூஜை புனஸ்காரம் நடந்த ஒரு கோவில். நரசிம்மரும், ஆஞ்சநேயரும் அமர்ந்த கோவில், அத்தனை சக்தி வாய்ந்தது. இருவரும் வாயை மூடிக் கொண்டு இருக்க, மொத்தமாக இடித்து கீழே போட்டார்கள்!
இவை எல்லாம் அழிவுக்கு, கலியுகம் எல்லை மீறி, முற்றிக்கொண்டே வருகிறது என்று அர்த்தம்.
93. நரசிம்மன் என்றால், இப்படித்தான் அவதாரம் எடுப்பார், தப்பு பண்ணினால் தண்டிப்பார் என்பதெல்லாம், எங்க போச்சு?
அனைவருக்கும் இப்படிப்பட்ட அழிவினால், கோபம் தான் வருகிறது. அதனால் தான், அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது. இங்கே அழிவுகள் காத்துக் கொண்டு இருக்கின்றது. எதோ ஒரு காரணத்தால் தடுத்துக் கொண்டு இருக்கின்றோம். இந்நேரமே அவ் நகரம் அழிந்திருக்க வேண்டியதுதான். ஏதோ ஒரு காரணத்துக்காக இறைவன் அமைதியாக இருக்கின்றான். யாங்களும் தடுத்துக் கொண்டு இருக்கின்றோம்.
94. இங்கு அதர்மம் தான் வளர்கிறது, எப்படி உழைத்தாலும் தர்மத்தை காணவே இல்லை.
கலியுகம், இதை அதர்மம் என்று தான் கூற வேண்டும். நிச்சயம் எங்கள் பேச்சை கேட்டால், தர்மத்தை நிலை நாட்டுவோம். கலியுகத்தில் அதர்ம வழியிலே செல்ல வேண்டும் என்பதே விதி. கலியுகத்தில், பின் பாவப்பட்டவர்கள் தான் பிறப்பார்கள். புண்ணியப்பட்டவர்கள், சிறிதளவே. அதனால் தான், புண்ணியங்களை நாங்கள் அழைத்து, அவர்கள் வழி நன்மைகளை உரைத்து, பல பாபங்களை போக்கிக்கொண்டு இருக்கின்றோம். இருப்பினும், கலியுகத்தில், பாப்பம் செய்பவர்கள்தான் அதிகம். என்னை நினைத்துக்கொண்டே இருப்பவர்களின் பாபத்தை போக்கி, நிச்சயம் நன்மைகளை செய்வேன். மெதுவாக செய்தாலும், நீங்கள் கேட்டதற்கு உண்டு, நிச்சயம் தருவேன், அன்பு மகன்களே! அன்பு மகள்களே!
95. உங்கள் கூற்றின்படி கொஞ்சம் நல்லது செய்பவன் கூட நடக்கிற விஷயங்களை பார்த்து, இறைவன், சித்தர்களின் அமைதியை பார்த்து, மனம் வெறுத்து தான் போகிறான். உயர்ந்த கருத்துக்களை நாடியில் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆயினும் நடைமுறைக்கு அது ஒருபோதும் ஒத்துப் போவதில்லையே!
அதனால் தான், அழிவுகள் என்று ஈசன் வைத்திருக்கின்றான். போகப்போக புரியும், பின்பு கேட்கச்சொல். ஆறு மாதங்கள் செல்லட்டும். அப்பொழுது கேட்டால், புத்திகள் வரும், இதற்கு பதில்கள் வரும்.
96. மூளை தொடர்பான நோய்கள் தீர என்ன செய்ய வேண்டும் ? மூலம் எனும் குறைபாடு சரியாக என்ன செய்ய வேண்டும்?
அப்பப்பா ! முன்னே பொய் சொன்னால், பின்னே. அதாவது, என்னென்ன தேவையானது மட்டும் உட்கொள்ள வேண்டும். தேவை இல்லாததை உட்க்கொண்டாள், அப்பப்பா! முன்னே, பின்னே. தவறு என்று தெரிந்தும் செய்வான், பின் காண்பித்து விடும்.
97. கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? அதை சரி செய்வதற்கான நடைமுறை என்ன?
அப்பாப்பா! இருந்தும், அதை சரி செய்யவே முடியாது. ஆனால், தானாகவே, 30 வயதுக்கு மேல் அதுவாகவே கழியும். பின் அதற்கான உபாயங்களையும் கூட நிச்சயம் யான் எடுத்துரைப்பேன். ஏன் என்றால், பலங்கள் அதிகம், ராகு, கேதுவுக்கு. நிச்சயம் மறு வாக்கில் சொல்லுகின்றேன்.
98. மாயையிலிருந்து விடுபடுவது எப்படி? அதற்கு ஏதேனும் மந்திரம் உள்ளதா?
நிச்சயம் யாங்களே, அதற்க்கு வழி தெரிவிக்கின்றோம், வரும் காலத்தில்.
99. சோழபுரம் சிவன் கோவிலில் சமாதி அடைந்த சித்தர் யார்.( ராஜபாளையம் அருகில்)
சித்தர் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகளை கூறமுடியுமா?
அறிந்தும் கூட பக்கத்தில் நிறைய மரணங்கள் நடந்துள்ளது. ஆகவே, அத்திருத்தலத்தில் வந்து யாம் செப்புவோம்.
100. நீரிழிவு நோயைத் தடுக்க சிறந்த வழி எது? எளிய முறையில் கிடைக்கும் மருந்துகளை கொடுங்கள்.
வெற்றிலை, பாக்கும் நிச்சயம் உண்டு வர உண்டு வர, அது மட்டும் இல்லாமல், பின்னர் மணத்தக்காளி என்ற மூலிகையை உண்டு வர, உண்டு வர, அது மட்டுமல்லாமல், நிச்சயம் ஓடுதல், பின்னர், அதிகாலை, மதியம், பின்னர் இரவில், இந்த மூலிகைகளை தண்ணீரில் சூடாக்கி பின்னர் குடித்தாலே போதுமானது. அனைத்தும் நல்கும். அது மட்டுமல்லாமல், சரியான தேனை எடுத்து, வெறும் வயிற்றில் உட்கொண்டாலே போதுமானது. அதுமட்டுமல்லாமல், உமிழ்நீரை அப்படியே உள்ளுக்குள் அனுப்பிக் கொண்டிருக்க பின் நன்று, ஆசிகள். அதாவது, ஒரு சில கர்மா வினைகளையும் போக்க வேண்டும். வரும் காலத்தில் அதை செப்புவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
சித்தன் அருள் - பாகம் 1 முதல் 5 வரை - கேள்வி-பதில்! - https://tut-temples.blogspot.com/2024/10/1-5.html
வாழ்க்கையில் மாற்றங்கள் உயர்வுகள் ஏற்பட குடும்பத்துடன் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_16.html
சித்தன் அருள் - 1602 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/10/1602.html
அன்புடன் அகத்தியர் பெருமான் அருளிய வாக்கு - கோவிந்தா.! கோவிந்தா..!! கோவிந்தா...!!! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_13.htmlபெருமாளே.! பெருமானே...!! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_8.html
அகத்தியர் பெருமானின் உத்தரவு! - நவராத்திரி வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post.html
சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி - https://tut-temples.blogspot.com/2024/09/1642.html
சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1551.html
பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html
மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html
புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html
சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html
சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html
சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html
புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html
சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html
ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html
பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5) - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html
முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html
முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html
குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html
அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html
முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html
முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html
கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html
TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html
நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html
குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html
கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html
ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html
அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html
No comments:
Post a Comment