இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அகத்தியர்!
அன்பின் ஆழம் மூலம் நமக்கு கருணை மழை பொழிந்து வரும் சித்தர். அகத்தியரை வழிபட நாம்
எத்தனை பிறவிகள் எடுத்து வந்தோம் என்று நமக்குத் தெரியாது, புல்லாகி பூடாகி புழுவாகி மரமாய்
இதோ
இந்த மனித பிறவியில் நுழைந்திருக்கும் நாம் குரு வழிபாடு, சித்தர்கள் பூஜை
என்று செய்து வருகின்றோம். குருவருளால் நம் தேடல் உள்ள தேனீக்கள் குழு
மூலமாக கடந்த ஏழு ஆண்டுகளாக மாதந்தோறும் ஆயில்ய ஆராதனை
கூடுவாஞ்சேரியில் உள்ள அகத்தியர் மகரிஷிக்கு செய்து வருகின்றோம். இதற்கு
அருளுதவி,பொருளுதவி செய்து வரும் அனைத்து அன்பர்களுக்கும் இங்கே நன்றி கூறி
மகிழ்கின்றோம்.
நம் குருநாதர் அகத்தியப்பெருமானின்
திருநட்சத்திரம், மார்கழி மாத ஆயில்யம், இன்று (டிசம்பர்) 19ம் தேதி,
வியாழக்கிழமை வருகின்றது.
ஆகவே, இறை அடியவர்கள், உங்கள் வீட்டின் அருகிலுள்ள ஏதேனும் அகத்தியர்
கோவிலிலோ, அல்லது அவரின் தனி சன்னதியிலோ நடக்கும் அபிஷேக பூஜைகளில் கலந்து
கொண்டு அவரின், அன்னையின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளும்படி
கேட்டுக்கொள்கிறேன். உங்களால் இயன்ற உழவார பணிகளை செய்து, நிறைவாக
அகத்தியர் லோபாமுத்திரை தாய்க்கு ஒரு பிடி "கொழுந்தை" வாங்கிக்
கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இயன்றவர்கள், தை மாதம் பிறக்கும்
வரையிலும் கொடுக்கலாம். அதனால், சிவராத்திரி வரை, மனிதனை தாக்கப்போகும்
வியாதிக்கு தகுந்த பரிகாரமாக இருக்கும், என அகத்தியர் உத்தரவு.
கிடைத்த
தகவல் படி பசுமலை மாரியம்மன் கோவில் மதுரையில் 19/12/2024 அன்று மாலை 5
மணியிலிருந்து 7 மணிக்குள் குருநாதருக்கும், லோபாமுத்திரை தாய்க்கும்
அபிஷேக ஆராதனைகள் செய்வதாய் அடியவர்கள் தீர்மானித்து ஏற்பாடு
செய்துள்ளார்கள். இயன்றவர்கள் அங்கும் சென்று பங்கு பெறுக, அவர் அருள்
பெறுக!
இன்று 19.12.2024 ஆயில்யம் மகா குருபூஜை.இந்த குரு பூஜையை ஒட்டி, உலகெங்கும் உள்ள
அகத்தியர் ஆலயங்களில் வழிபாடு, பூஜை என நடைபெற உள்ளது. நமக்குக் கிடைத்த
தகவல்களை இங்கே தொகுத்து ஒருங்கே தர முயற்சிக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள்
அருகே நடைபெறும் அகத்தியர் பூசையில் கலந்து கொண்டு சித்தர் பெருமக்களின்
அருள் பெற வேண்டுகின்றோம்.இந்த ஒரே பதிவில் வருகின்ற மார்கழி ஆயில்ய பூசை
தகவல்களை இங்கே தருகின்றோம். இவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு வசதியான நேரம் கிடைக்கும் போது அப்படியே தரிசனம் செய்து கொள்ள
ஏதுவாக இந்தப் பதிவு உங்களுக்கு பயன்படும் என்று நாம் நம்புகின்றோம்.
என்னென்னெ கோயில்கள் என்று ஒரு பட்டியல் தருகின்றோம், நமக்கு கிடைத்த சில அழைப்பிதழ்களை இங்கே பகிர்கின்றோம் .
நமக்கு
கிடைத்த தகவல்களை ஒருங்கே இங்கே தொகுத்து தந்திருக்கின்றோம்.
வாய்ப்புள்ளவர்கள் அருகில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொண்டு
சித்தர்களின் அருள் பெறவும். கலந்து கொள்ள இயலாதவர்கள் அன்று காலை மாலை
நிகழ்த்தும் தினசரி வழிபாட்டில்
ஓம் ஸ்ரீம் லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடி சரணம்
என்று மனதில் நீங்கள் நினைக்கும் எண்ணிக்கையில் போற்றி செய்து, மனதார தியானிக்கவும்.
இந்தப் பதிவிற்காக பல்வேறு வழிகளில் அலைபேசி, சமூக ஊடகங்கள் வழியாக
(facebook,whatsapp ) தகவல்களை திரட்டித் தந்து உதவிய அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
நிங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
No comments:
Post a Comment