"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, December 12, 2024

சித்தன் அருள் - 1057- திருஅண்ணாமலை கார்த்திகை தீப ரகசியங்கள்

 

 இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                   இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அன்பர்கள், தள வாசகர்கள் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் நம் TUT தளம்  சார்பில் கூறி  நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். எங்கெங்கு காணினும் சிவமாய் தெரிகிறதே.அன்பே சிவமாய் கொள்ளும் போது, தற்போது நடைபெற்று வரும் திருக்கார்த்திகை விழாவும் நம்மோடு சேர்ந்து துள்ளலை கொடுத்துக் கொண்டு வருகின்றது. இன்றைய பதிவில் திருஅண்ணாமலை கார்த்திகை தீப ரகசியங்கள் குறித்து குருநாதர் அகத்தியர் மாமுனிவர் அருளிய வாக்கினை கண்டு உணர்வோம் . 




20/11/2021 கார்த்திகை தீப இரண்டாம் நாள் அன்று குருநாதர் அகத்தியர் /பிருகு மகரிஷி உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம். திருவண்ணாமலை 

ஆதி பரம் பொருளை மனதில் எண்ணி துதித்து பாடிட்டு உரைக்கின்றேன் அகத்தியன்.

நலன்கள் நலன்கள் மென்மேலும் உயர்வுகள் உண்டு உண்டு  என்பேன் அனைவருக்கும்.

அனைவருக்கும் தரிசனங்கள் கொடுப்பாயினும் இதனன்றியும் அறியாத மக்கள் இன்னும் சிலர் தவித்துக் கொண்டிருக்கின்றனர் இப்புவியுலகில்.

ஆனாலும் ஈசனை கருணையோடு பின்பு கண்டு கண்டு தரிசித்தால் பல வினைகள் தீர்ந்து போகும் என்பேன்.

தீர்ந்து போகும் என்பேன் ஆனாலும் மனிதர்களோ பின் எவை எவை தன் சுயநலத்திற்காக வேண்டுகிறார்கள்.


அப்படி வேண்டுபவர்களுக்கு நிச்சயமாய் நமச்சிவாயனே அருள மாட்டான் என்பதுதான் மெய்.

அனைத்தும் நீயே என்று இரு போதுமானது.

அனைத்தும் ஈசன் கருணையோடு ஈசன் செய்வான்.

இவ்வுலகத்தில் மிக்க கருணை உள்ளவன் ஈசன்.

ஆனாலும் அதை யாரும் புரிந்து கொள்வதற்கு தயாராக இல்லை என்பேன் இவ்வுலகத்தில்.

இவ்வுலகத்தில் இன்னும் அழிவுகள் ஏற்படப் போகின்றது என்பது திண்ணம்.

ஏனென்றால் ஈசன் கருணையோடு மக்களை காத்து கொண்டே வந்தான்.

ஆனாலும் மனிதர்களின் செயல்கள் இன்னும்கூட கலியுகத்தில் பறந்து கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றது.

இதனால் நிச்சயம் ஈசன் கருணையோடே இருக்கின்றான் இன்னும்.

ஆனால் கோபம் வந்ததோ அனைத்தும் அழித்து விடுவான் இதுதான் நிச்சயம்.

புவிஉலகில் மனிதர்களுக்கு புத்திகள் இல்லை வரும் காலங்களில் கலியுகத்தில்.

அப்பனே எதனால் இவ்வுலகத்தில் அனைத்தும் அழியக் கூடியது

இறைவனே பின் அழிக்கக்கூடியவனாகவே இருக்கின்றான்.

அதனால் அப்பனே அழியாதவன் இறைவன் 

அவற்றைப் பின்பற்றி விட்டால் மற்றவையெல்லாம் அழியக்கூடியது தானாகவே வந்துவிடும்.

அப்பனே நலமாகவே உண்டு கொண்டு இன்னும் ஏற்றங்கள் என்பேன். என்னுடைய அருளால்.

அப்பனே எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை ஏனென்றால் அப்பனே சொல்கின்றேன் ஒரு சூட்சுமத்தை.

அப்பனே சிவனுக்கு தகுதியான சக்திகள் எந்தனுக்கும் இருக்கின்றது என்பேன்.

அப்பனே அதனால் என்றும் எப்பொழுதும் கவலைப்பட அவசியமில்லை என்பேன்.

ஏனென்றால் அப்பனே சிறுபிள்ளைத்தனமாக நீங்கள் கேட்பதை நான் இது நல்லவையா? கெட்டவையா? என்பதை யோசித்து தான் கொடுக்க வேண்டும்.

பெற்றவளுக்கு தெரியும் பின் பிள்ளைக்கு என்னென்ன தரவேண்டும் என்று.

ஆனாலும் அப்பனே அதன்மூலம் கர்மா வரக்கூடாது என்பேன். 

ஆனாலும் அப்பனே கர்மத்தை அனுபவிக்காமல் அனைத்தும் கொடுத்து விட்டால் அனைத்தும் வீணாகிவிடும்.

அதனால்தான் அப்பனே கர்மத்தை அனுபவித்தோடு அப்பனே நலன்கள் உண்டு என்பேன்.

ஆனாலும் அப்பனே இன்னும் ஒரு சூட்சுமத்தை சொல்லுகின்றேன் இவ் கர்மாக்களை அழிக்க எவராலும் முடியாது என்றேன்.

ஈசனால் மட்டும் என்னால் மட்டுமே முடியும் என்பேன். 

ஆனாலும் மற்றவையெல்லாம் பரிகாரம் பரிகாரம் என்று தேடிக் கொண்டு சென்றாலும் அப்பனே கர்மாவை அழிக்க முடியுமா???

இவையன்றி கூற

அப்பனே தரிசனங்கள் பலப்பல பார்த்துள்ளீர்கள் ஈசனை.

ஆனாலும் ஈசன் மனது வைத்தால் தான் கர்மம் நீக்க முடியும் என்பேன்.

இவ்வுலகத்தில் இன்னொரு சூட்சுமத்தையும் சொல்லுகின்றேன்.

கர்மா நீக்கவேண்டும் என்றால் ஈசனே முடிவெடுக்க வேண்டும் என்பேன்.

அப்பனே இவ்வுலகத்தில் "மன்னன்"  ஈசனே! என்பேன்.

அப்பனே

காத்தல்

அழித்தல் 

படைத்தல் இவ் மூன்றும் ஈசனுக்குத்தான் சொந்தம் என்பேன்.

இதனை அவன் ஆக்கியும் கொள்ளலாம் அழித்தும் கொள்ளலாம். படைத்தும் கொள்ளலாம் அப்பனே.

அப்பனே இவையன்றி கூற அதனால்தான் அப்பனே

 ஈசனை வணங்குவதற்கும்  "பயம்" வேண்டும் என்பேன் .

பயத்தோடு வணங்கினால் மட்டுமே அப்பனே அதுமட்டுமில்லாமல் அன்போடு வணங்கினால் மட்டுமே ஈசன் கருணை உள்ளவன்.

அதனை விட்டுவிட்டு அனைத்தும் செய்துவிட்டு இதனை (அண்ணாமலையே)  வணங்கினால் ஈசனே அழித்து விடுவான்.

இது யாருக்கும் தெரிவதில்லை மனிதர்களுக்குகூட. 

அப்பனே இவை என்று கூற

இன்னும் பல மனிதர்கள் இருக்கின்றனர் ஆனாலும் அப்பனே ஒவ்வொரு வாக்கிலும் அப்பனே 

இனிமேலும் வரும் காலங்களில் அப்பனே ஈசனே வந்து இவ்வுலகத்திற்கு உரைப்பான் என்பேன்.

அப்படி கேட்காவிடிலும் அழித்து விடுவான் ஈசன் இதுதான் மெய்யப்பா.

அப்பனே இவையன்றி கூற ஒவ்வொருவருக்கும் வினை. ஆனாலும் அப்பனே யானும் கூட ஈசனும் கூட அப்பனே கருணையோடு அப்பனே மக்களுக்கு தீவினைகள் வேண்டாம் வேண்டாம் என்று கூட கருணையோடு பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.

ஆனால் மனிதனோ அப்பனே செய்யும் செயல்கள் அப்பனே பாவம் அதனைவிட பாவம் என்கின்றது அப்பனே.

அப்பனே இக்கலியுகத்தில் இனிமேலும் மனிதன் ஒழுங்காக வாழப் போவதில்லை என்பது உறுதியாக கூறுகின்றேன்.

அப்பனே அநியாயங்கள் அக்கிரமங்கள் அப்பனே ஓங்கும் என்பேன்.

ஆனாலும் ஈசன் நிச்சயமாய் தடுப்பான் என்பேன் தண்டனையும் கொடுப்பான் என்பேன்.

அதனால் ஈசனே தண்டனைகள் கொடுக்கும் பொழுது திரும்பவும் ஈசனே

ஈசனிடமே இறைவா இறைவா என்றெல்லாம் வருவார்கள் மனிதர்கள் இதில்தான் அடங்கியுள்ளது சூட்சமங்கள் பல.

அப்பனே நலமாக என்றென்றும் அமைதியாக இருந்தால் மட்டுமே இவ்வுலகத்தில் போதுமானது .

ஈசனே கருணையோடு வந்து உதவிடுவான் அப்பனே.

அப்பனே எவை என்று கூற அப்பனே இன்னொரு விஷயத்தையும் கூறுகின்றேன்.

அப்பனே ஏழையான மனதையே இறைவன் விரும்புகின்றான். அப்பனே.

இவையே இருந்தால் போதுமே அப்பனே இறைவன் தன்னுடனேயே இருப்பான் கடை நாள் வரையிலும் அப்பனே.

அப்பனே இவையன்றி கூற அப்பனே ஆடம்பரத்தையும் மனிதனே ஏற்படுத்தியவன் என்பேன்.

ஈசன் அவ்வாறு கேட்டதில்லை ஒரு பொழுதும் கூட.

அப்பனே நலமாகவே இன்னும் இவ்வுலகத்தில் அப்பனே எவ்வாறு நடக்கப்போகின்றது என்பதையும் கூட கலியவனையும் (கலிபுருஷனை) எதிர்த்துப் போராடுவான் ஈசன் என்பேன். 

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட கலியவன் இன்னும் கூட மனிதர்களை திருத்தி திருத்தி கெட்ட வழிகளில் தான் எடுத்துச் செல்வான் என்பேன்.

ஆனாலும் இனிமேலும் ஈசன் கொடுப்பதாக பின் கொடுத்து ஈர்ப்பான் என்பேன் கலியவனிடமே சண்டைகள் இட்டு. 

அப்பனே எவை எவை என்று கூற ஈசனிடம் கலிபுருஷனை எவ்வாறு என்பதையும் கூட என் மக்கள் என் மக்கள் யான் இவையன்றி கூட தவறான வழிகளில் எடுத்துச் சென்றுதான் அழிப்பேன் என்று கூட ஈசனிடமே சபதமிட்டு சபதமிட்டு ஏற்கனவே விட்டுவிட்டான்.

 இதனால் ஆனாலும் முடிந்தளவு சித்தர்கள் யாங்களும் ரிஷிகளும் பல ஞானியர் களும் மனிதர்களை திருத்தத் தான் பார்ப்போம். இனிமேலும்.

அப்பனே அப்பொழுதும் கூட ஈசன்

சிறிது பொறுத்திருக கலியவனே என்று கூறி பின் மக்களை இனிமேலும் சோதனைகளுக்கு உட்படுத்தி திருத்திக் கொண்டிருக்கின்றான்.

கலியவனும் ஈசனிடத்திலே கூறிவிட்டான் .

எதை?

இறைவா! ஆனாலும் உன் மீது பற்று உள்ள பக்தர்களையும் யான் நிச்சயம் கெடுதல் வழிகளுக்கே எடுத்துச் செல்வேன் என்று கூட.

ஆனாலும் மக்களே திருந்திக்கொள்ளுங்கள்.

ஈசனிடமே கைகோர்த்து இருந்து விடுங்கள் போதுமானது.

கஷ்டங்கள் வந்தாலும் ஈசனே பார்த்துக் கொள்வான்.

அதனால் தான் சொல்கின்றேன் இவ் நாட்டு மக்களுக்கும் என்னை பின் அகத்தியன் அகத்தியன் என்று சொல்லியெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

யான் தான் பெரியவன் அனைத்தும் தெரியும் என்று அவை எல்லாம் விட்டு விடுங்கள்.

ஆனால் இவையெல்லாம் செய்துகொண்டிருந்தாள் ஈசனே தண்டித்து விடுவான்.

ஆனாலும் இதனையும் கூட கலியவன் அறிந்து இன்னும் பல சூட்சுமங்களை சொல்கின்றேன்.

அகத்தியன் பக்தனா? இவன் ! இவந்தனைத்தான் முதலில் பிடிக்க வேண்டுமென்றே எண்ணிக் கொண்டு இருக்கின்றான்.

அதனால் தான் என்ற அகம்பாவம் வந்துவிடக்கூடாது என்பது நிச்சயமான உண்மை.

அதனால் அப்பனே பொய்யானவர்கள் பொய்யான பக்தியைக் காண்பிப்பவர்களுக்கு நிச்சயம் கலியவனே அப்பனே அழித்துவிடுவான்.

இதனால் அப்பனே கலியுகத்தில் நோய்கள் எவை எவை என்று கூற அழிய வைக்க கூடியவை ஆகவே இருக்கின்றது.

அதனால் அப்பனே ஈசன் மீது அன்பாக இருங்கள் போதுமானது.

அப்பனே இவையன்றி கூற யானும் தேடிக் கொண்டுதான் இருக்கின்றேன் நல்லோர்கள் இவ்வுலகில் இருக்கின்றார்களா? என்று!

ஆனாலும் இறைவன் மீது அப்பனே பக்தி கொண்டு ஏமாற்றிப் பிழைப்பவர்கள் தான் அதிகம்.

அப்பனே எந்தனுக்கே சோகம் தான் வருகின்றது. கவலைக்கிடமே அப்பனே.

அப்பனே ஒன்று சொல்கின்றேன் அப்பனே சீடன் குருவை தேட அவசியமில்லை என்பேன்.

குருவே சீடனை தேடுவான் இனிமேலும்.

அப்பனே நலமாகவே நலமாகவே ஆனாலும் என்னை நம்பியோரை எப்பொழுதும் யான் கைவிட்டதாக சரித்திரமே இல்லை.

பிருகு மகரிஷி உரைத்த வாக்கு. 

அகத்தியன் வாக்கும் அப்பனே தெரியும் உந்தனுக்கு!

அகத்தியன் ஒரு வாக்கை கொடுத்துவிட்டால் அப்பனே அதை காப்பாற்றியே தீருவான் அப்பனே. 

ஆனாலும் கர்மா நிலை இருந்தாலும் அப்பனே சோதனைகள் இருந்தாலும்.         அவந்தன் மனநிலையை எப்படி என்று ஆராய்ந்து ஆராய்ந்து பிரம்மாவிடமே சண்டையிடுவான் மனிதர்களுக்காக.

ஆனாலும் பிரம்மாவோ ஒரு சில நேரத்தில்,

அகத்தியனே பார்!!!!

நீயே பார்!!!!!

இவன் இவையெல்லாம் செய்திருக்கின்றான்.

இவையெல்லாம் பொய் பித்தலாட்டம் இவையெல்லாம் எவை என்று கூறும் அளவிற்கும் கூட இவன் தரித்திரம் இவையன்றி

 இவனை நீ காப்பாற்றுகின்றாயா??!!! 

என்று கூட அவனிடத்திலே வாதாடுகிறான்.

நல்லவர்களை மட்டும் உந்தனுக்கு காப்பாற்றி தருகின்றேன்.

மீதி எல்லாம் யான் ஏற்றுக்கொள்கின்றேன் என்பதுக்கூட பிரம்மாவின் சரித்திரமாக உள்ளது.

இதனால் நிச்சயம் நல்லோர்க்காக அகத்தியன் என்பதைக்கூட சொல்லிக் கொண்டு இருக்கின்றேன் பிருகுவன். (பிருகு மகரிஷி ).

நல் விதமாகவே எண்ணங்கள் ஈடேறும் அகத்தியன் உரைக்கின்றேன்.

இவையன்றி கூற யானும் இப்புவியுலகில் ஈசனிடமே சொல்லிவிட்டு வந்து இருக்கின்றேன்.

இப்புவி உலகத்திலேயே தான் அலைந்துகொண்டிருக்கிறேன்.

நல்லோர்களை நிலைநிறுத்த இனிமேலும் பூலோகத்திலே இருப்பேன் யான்.

இவையன்றி கூற அதனால் தான் சொல்கின்றேன் 

ஏமாற்றிப் பிழைக்காதீர்கள் எப்போதும் கூட.

இதை மனிதர்களுக்கே உரைக்கின்றேன்.

யானும் கூட பல தடவை சொல்லிவிட்டேன்.

 அகத்தியன் அகத்தியன் என்றெல்லாம் என்னை அழைக்கின்றனர்.

 ஆனால் !!!!!!

அங்கு போய் பார்த்தால்????!!

 எல்லாமே பொய்.

அன்பே இல்லை !!!

அதைத்  தா!! இதைத் தா!! 

என்றெல்லாம் என்னிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் அதை தரவில்லை என்றாலும் என்னையே திட்டுகின்றார்கள்.

பாழாய் போன மனிதர்கள்!!!!. 

அதனால்தான் எவை என்று கூற

 யானும் பல மனிதர்களை பார்த்து விட்டேன்.

அகத்தியா!!! எந்தனுக்கு கொடு!! கொடு என்று.

ஆனாலும் கொடுக்க தயாராக இருக்கும் பொழுது ஆனால் என்னை நம்பவில்லை.

பல சக்திகளை இழிவான சக்திகளை நம்பி !!!

கடைசியில் யானும் சோதனை கொடுப்பேன்.

ஆனாலும் அச்சோதனையில் யாரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

அப்பனே இவையன்றி கூற மனிதர்கள் இனிமேலும் பின் தவறான வழிக்கே செல்வார்கள் .

ஆனால் பின் எவை என்று கூற இதனையும் அறிந்து

இயேசுவும் நபிகள் நாயகனும் நிச்சயமாய் பலமான அடிகளை அனைவருக்கும் கொடுப்பார்கள்.

எவை எவை என்று கூற இனிமேலும் பார்ப்பீர்கள் நீங்கள்.

உண்மையான இறைவனையே.

அனைவரும், மக்கள் திருந்துவார்கள் என்று எண்ணிக் கொண்டு போய்க் கொண்டே இருந்தார்கள்.

ஆனாலும் திருந்த போவதில்லை என்று அனைவருக்கும் தெரிந்து விட்டது.

இதனால் நிச்சயம் கஷ்டங்கள் தான் இனி மேலும்.

அப்பனே நேற்றைய (கார்த்திகை தீபம் ஏற்றிய தினம்) பொழுதில் யாங்கள் சித்தர்கள் அனைவரும் ரிஷிமார்கள் அனைவரும் இங்கு வந்திருந்தோம் என்பது அப்பனே இவை மட்டுமில்லாமல் பல ஞானியர்களும் அருவமாக வந்து இவ் சூட்சுமத்தை காண பின்

இவ் மலையிலே (திருவண்ணாமலை) தங்கியிருந்தனர் என்பேன்.

இவையன்றி கூற ஈசனும் பின் பார்வதி தேவியும் இங்கு நடனம் ஆடுகிறார்கள் என்பது மெய்யானது.


அப்பனே இவையன்றி கூற ஒரு நாள் மட்டும் இக்கூத்து இங்கு நடக்கும் என்பேன்.

ஈசனும் பார்வதியும் எவ்வாறு என்பதைக்கூட

எங்கு?  அமர்ந்து பின்.

அவன் விளையாட்டை தரிசிக்கலாம் என்று பின் அடுத்த வாக்கில் கூறுகின்றேன்.

எதனையும் நின்று நின்று பின் இவையன்றி கூற இதனையும் என்று நிரூபிக்க.

ஈசனும் பார்வதி தேவியும் இக் கார்த்திகை என்பதைப் போல்

 இத் தீபத்திலே  (தீப திருவிழா அன்று) 

 ஒரு மணி நேரம் இங்கு நடனமிடுவார்கள் என்பது உண்மை.

ஆனாலும் சூட்சுமமானவர்களுக்கு மட்டுமே இதை புரிந்து கொள்வார்கள் என்பேன். 

அப்பனே இவையன்றி கூற

தீபம் ஏற்றும் பொழுது அவன் இங்கு நடனமிடுவான். 

ஓர் மணி நேரம் வரை. 

அவ்விடத்திலும் எவ்வாறு என்பதைக்கூட பின் 

 இப்பொழுது கூட லிங்கமாக கூட

மூல இடத்திலே (அண்ணாமலையார் கருவறை மூலஸ்தானம்) காட்சியளிக்கின்றானே!!! 

அங்கிருந்து ஓர் 20 மீட்டரிலே என்பது நிச்சயமான உண்மை.(கருவறைக்கு எதிரே அமைந்திருக்கும் மண்டபம்) 


இவையன்றி கூற இதனையும் 

ஆருத்ரா தரிசனம் என்கிறார்களே அப்பொழுது கூட அங்கு ஐந்து நிமிடம் நிச்சயமாய் உட்காருவான் என்பேன்.


அப்பனே இவையன்றி நகைத்தே !!!!  கூறு கின்றேன்.

இங்கு உட்காரும்போது அப்பனே ஈசனை தரிசித்து மக்கள் சென்று விடுகிறார்கள்.

இதுதான் அப்பனே மனிதன்.

மனிதனே எப்படி இருக்கின்றான் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

அப்பனே அனைவருக்கும் கஷ்டங்கள் இருக்கின்றது நிச்சயமாய் யான் நீக்குவேன். கவலைப்பட அவசியமில்லை.

அப்பனே கஷ்டம் இல்லாமல் வாழ்ந்து விட்டாலும்.

 அப்பனே ஈசன் வந்து உங்கள் அருகில் இருந்தாலும் நீயா?? ஈசன் !!!

என்று நீங்கள் நிச்சயமாய் சொல்வீர்கள். அதனால்தான் கஷ்டங்கள் தவறில்லை.

அப்பனே நல் முறைகள் ஆகவே இன்னும் பல சூட்சமங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றது. இப்புவி உலகில்.

அப்பனே இவைதன் இங்கு சுற்றியும் வைர தங்க நகைகள் ஜொலித்து கொண்டு தான் இருக்கின்றது.

அது  ஈசனுடைய சொத்துக்கள்.

அவையெல்லாம் பின் ராகு கேதுக்களே பாதுகாத்து கொண்டிருக்கின்றது. 

ஆனால் ராகு கேதுக்களும் நல் முறை விதமாகவே 

ஈசனை இங்கு மனிதர்கள் வந்து வணங்கினால் ராகு கேதுக்களே தோஷத்தையும் அழிக்கும் என்பேன்.

அதனால் ராகு கேதுக்களும் தோஷத்திற்கு சிறந்த தலம் இத்திருத்தலம் என்பேன்.

ஆனாலும் மனிதர்கள் உணர்வதாக தெரியவில்லை.

அதனால்தான் அப்பனே இங்கு சக்திகள் ராகு கேதுக்களுக்கு அதிகம் என்பேன்.

அதனால்தான்

 "நினைத்தாலே முக்தி தரும்"

 என்பதைக்கூட இவ் அண்ணாமலையை அழைக்கின்றனர்.

எதனால் என்பதைக்கூட கேதுவானவனே  சிறந்த தலைவனாக முக்திக்கு அதிபதி ஆவான்.

அக் கேதுவே இங்கு பாதுகாக்க அதனால் தான் இவனை எவ்வாறு நின்று தொழுது பின் ஞானம் கிடைத்தாலே முக்தி தரும் என்பதை கூட ராகு கேதுக்களே சிறந்தவை என்பேன். 

இதனால் பின் எவை என்று கூற சில மனிதர்கள் பொய்யான மனிதர்கள் 

"ராகு கேது" தோஷங்கள் இருந்தால் இதை தரித்திரம் என்று கூறுகின்றனர்.

ஆனால் ராகு கேது தோஷங்கள் இருந்தால்தான்

ஈசனையும் காணலாம் என்பேன்.

அனைத்தும் முக்தியும்  தரலாம் என்பேன்.

இவை மனிதனுக்கு உரைத்திடுக. 

அதனால் இத்தலத்தில் கேதுவுக்கு பலம் அதிகம் என்பேன்.

இதனால் அதனால் என்பதை கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட இவனை பின்(அண்ணாமலையாரை)  பின்பற்றிவிட்டால் கேதுவானவனே முக்திக்கு அழைத்துச் சென்று விடுவான்.

அதனால் "திருவண்ணாமலை"

 'நினைத்தாலே முக்தி தரும்'

 என்று கூறிட்டேன்.

அப்பனே இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கின்றேன்.

ராகு கேதுக்கள் அருள் இல்லாமல் யாரும் ஈசனை நெருங்கக் கூட முடியாது என்பேன்.

அதனால் சிறந்தவை அழைத்துச் செல்வதற்கு பூலோகத்தில் இருந்து மேலோகத்திற்கு அழைத்து செல்லும் இவ்விரண்டு கிரகங்களே
ராகுவும் கேதுவும். 

இவ் கிரகங்கள் தவறான வழிகளில் ஜாதகத்தில் இருந்தால் அவர்கள் நிச்சயம் இறைவன் அருளைப் பெற்று கடைசியில் ஈசனையே பார்ப்பார்கள் என்பேன்.

ஆனால் மனிதர்கள் இதைத்தான் யாங்கள் சொல்லிச் சொல்லித் திருத்துகின்றோம்.

ஆனால் யாரும் திருந்துவதாக இல்லை.

மெய்யான கிரகங்களை விட்டுவிட்டு ஆனாலும் பின் சுகத்திற்காக அலையும் கிரகங்களை சுற்றி சுற்றி திரிகின்றனர்.

ஆனாலும் இவையன்றி கூற இடைக்காடன்(இடைக்காடர் சித்தர்)  அருளும் பிடிக்கப்பட்டு இடைக்காடன் கிரகங்கள் எவ்வாறு? செயல்படுகிறது? என்று அடுத்த வாக்கில் உரைப்பான் கவலைகள் இல்லை.

இவையன்றி கூற நிச்சயமாய் அடுத்த வாக்கில் இடைக்காடனே வருவான். கவலைகள் இல்லை அப்பனே என்னுடைய ஆசிகள் அனைவருக்கும் அப்பனே உண்டு என்பேன் கவலைகள் இல்லை.

நாளைய பொழுதும் அப்பனே உங்களுக்கு நல் முறைகளாக ஈசனின் அருள்கள் பலமாக உள்ளது.

யானும் நாளைய(தீபம் ஏற்றி மூன்றாவது நாள்) பொழுதிலே வலம் வருவேன் என்பேன் அப்பனே. தீபம் ஏற்றிய பின் மூன்றாவது நாள் ஐந்தாவது நாள் ஏழாவது நாள் ஒன்பதாவது நாள் அனைத்து சித்தர்களும் பின் ஞானியர்களும் வலம் வருவார்கள்  அவ் நேரத்திலே மாலை நேரத்திலே நீங்களும் வலம் வருவது சிறப்பு என்பேன்.


அப்பனே இவ்விடத்திலிருந்து அனைவருக்கும் நல்லாசிகள் மீண்டும் வாக்குகள் செப்புகிறேன் விரிவாகவே.




ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக : -

 ஓதிமலையின் சூட்சும தரிசனம் இன்று - 06.12.2024 - https://tut-temples.blogspot.com/2024/12/06122024.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் வாக்கு - புண்ணியக் கிடங்கு! - https://tut-temples.blogspot.com/2024/12/blog-post.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_27.html

தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html

 சித்தன் அருள் - 1726 - அன்புடன் அகத்தியர் - பெங்களூரு சத்சங்க உத்தரவு!  - https://tut-temples.blogspot.com/2024/11/1726.html

அந்த நாள் >> இந்த வருடம் 2024 - கோடகநல்லூர்! - 13.11.2024 - https://tut-temples.blogspot.com/2024/11/2024-13112024_11.html

சித்தன் அருள் - 1028 - எந்த ஆலயத்தில் தியானங்கள் செய்தால் நீங்கள் நினைத்ததை எளிதில் நிறைவேற்றலாம்?  - https://tut-temples.blogspot.com/2024/11/1028.html

அகத்தியர் மாமுனிவர் வாக்கு - விதியை மாற்றக் கூடிய மகத்தான பாடல்..! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_29.html

சித்தன் அருள் - பாகம் 1 முதல் 5 வரை - கேள்வி-பதில்!  -https://tut-temples.blogspot.com/2024/10/1-5.html

வாழ்க்கையில் மாற்றங்கள் உயர்வுகள் ஏற்பட குடும்பத்துடன் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_16.html

சித்தன் அருள் - 1602 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/10/1602.html

அன்புடன் அகத்தியர் பெருமான் அருளிய வாக்கு - கோவிந்தா.! கோவிந்தா..!! கோவிந்தா...!!! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_13.html

பெருமாளே.! பெருமானே...!!  - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_8.html

அகத்தியர் பெருமானின் உத்தரவு! - நவராத்திரி வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post.html

சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி  - https://tut-temples.blogspot.com/2024/09/1642.html

சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1551.html

பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள்  - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html

மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html

புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html






No comments:

Post a Comment