"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, December 30, 2024

சப்தரிஷி கோவில்:- ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், வன்னிவேடு

                   இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் ஒவ்வொரு நாளும் வழிநடத்தப்பட்டு வருகின்றோம் .  இதில் ஒவ்வொரு திருத்தல தரிசனமும் குருவருளால் மட்டுமே நடைபெற்று வருகின்றது .  நாம் எதுவும் தீர்மானிப்பதில்லை .  குருநாதர் நமக்கு உரைத்த தாரக மந்திரமான இறைவா . .அனைத்தும் நீ!! சர்வம் சிவார்ப்பணம் என்ற வாக்கியங்களை நாம் நம் மனதில் நிலைபெற செய்ய வேண்டும். நம்மால் என்ன செய்துவிட முடியும் ?  ஒன்றுமே செய்ய இயலாது .  இப்போது நாம் அதை செய்தோம் ,  இதை செய்தோம் என்று பேசலாம் .  ஆனால் வாழ்வின் பின்பகுதியில் அனைத்தும் உணர்ந்த பின்னர் இறைவா . .சர்வம் நீயே! என அடங்கிவிடுவோம். சரி .விசயத்திற்கு வருவோம் .  வெகுநாட்களாக வன்னிவேடு அகத்தியர் தரிசனம் எப்போது என்று ஏங்கிய நிலையில், இந்த ஆண்டு , நவராத்திரி வெள்ளிக்கிழமை அன்று நமக்கு வன்னிவேடு அகத்தியர் தரிசனம் கிடைத்தது . 

இந்த பதிவில் அனைவரும் வன்னிவேடு அகத்தியர் பற்றி அறிவோம். குருவருளால் இங்கே குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய வாக்கினையும் , அன்றைய தினம் நாம் பெற்ற அருள்நிலைகளையும் அடுத்த பதிவில் கண்டு உணர்வோம் . 



கோயில் உள்ளே செல்லும் முன்னர் .  கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகின்றது . 




முதலில் விநாயகர் தரிசனம் பெற்றோம் . 






 இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று என்றும் , திருநாவுக்கரசு சுவாமிகள் அகஸ்தீஸ்வரரின் சிவனைப் போற்றும் பாடல்களைப் பாடியதாகவும் நம்பப்படுகிறது .  

நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்   
        சுரநாகேச் சுரநாக ளேச்சுரநன் கான   
கோடீச் சுரங் கொண்டீச் சுரந்திண் டீச் சுரங்     
        குக்குடேச் சுரம கத்தீச் சுரங் கூறுங்கால்  
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய நீச்சுர   
        மத்தீக்சுரஞ் சித்தீக்சுர மந்தண் கானல்   
ஈடுதிரை யிரமேசசுர மென்றேன் றேத்தி   
        யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே.   
….. திருநாவுக்கரசு சுவாமிகள் ( 6-71-8 ) 
மூலவர்   : ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்
துணைவி  : ஸ்ரீ புவனேஸ்வரி   

இந்த கோவிலின் சில முக்கிய அம்சங்கள்...

5 அடுக்கு ராஜகோபுரத்துடன் (இன்னும் முடிக்கப்படவில்லை) மற்றும் மேற்குப் பக்கத்திலிருந்து நுழைவாயிலுடன் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. மேற்குப் பக்க நுழைவாயிலின் உச்சியில் சிவன் மற்றும் பார்வதியின் ஸ்டக்கோ படம் உள்ளது. மேற்குப் பக்க வாயிலில் விநாயகர் சந்நிதி உள்ளது.  அர்த்த மண்டபத்தின் நுழைவாயில் தென்புறத்தில் இருந்து மண்டபத்துடன் உள்ளது. அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறமும் விநாயகர் மற்றும் முருகனை வழிபடும் பக்தர்களின் (கணவன் & மனைவி) அடிப்படைச் சின்னங்கள் உள்ளன. பலிபீடம், த்வஜஸ்தம்பம், ரிஷபம் ஆகியவை ராஜகோபுரத்திற்குப் பிறகு கிழக்குப் பகுதியில் உள்ளன. கருவறையின் நுழைவாயிலில் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் உள்ள மூலவர் சுற்று ஆவுடையார் மீது சிறியவர். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை.  





புராணங்கள்

அகஸ்தியரால் வழிபட்ட ஆற்காட்டைச் சுற்றியுள்ள ஸ்தல விருட்சமாக வன்னி மரத்துடன் கூடிய ஷதாரண்ய க்ஷேத்திரங்களில் (சமீவனம்) இந்தக் கோயில் கருதப்படுகிறது. அத்திரி மகரிஷி வழிபட்ட குடிமல்லூர், காசிபரால் வழிபட்ட அவரகரை, கௌதமர் வழிபட்ட காரை, வேப்பூர், வசிஷ்ட மகரிஷி வழிபட்ட மேல்விஷாரம், வால்மீகி மகரிஷி வழிபட்ட மேல்விஷாரம், பரத்வாஜ மகரிஷி வழிபட்ட பாடி, புதுப்பாடி ஆகியவை மற்ற க்ஷேத்திரங்கள். மகா சிவராத்திரி தினங்களில் ஏழு கோவில்களையும் வழிபட்டால் கைலாச மலையில் உள்ள கைலாசநாதரை வழிபடுவதற்கு சமம் என்று நம்பப்படுகிறது.




பொது தகவல்:
கோயில் பிரகாரத்தில் அஷ்டதிக் பாலகர்கள் தங்களுக்குரிய திசையில் தனித்தனி சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். இவர்களில் வடக்கு திசையில் குபேரரும், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சுப்பிரமணியர், சரபேஸ்வரர், காலபைரவர் ஆகியோருக்கும் சந்நிதி இருக்கிறது.


பிரார்த்தனை

செவ்வாய் தோஷ நிவர்த்திக்கும், சனியின் தாக்கத்தைக் குறைத்து, இனிமையாய் வாழ இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:
சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து எள் தீபமேற்றி வழிபட்டும், முருகனுக்கு பீட்ரூட் சாதம் படைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.



பாலாற்றின் வடகரையில் அமைந்த கோயில் இது. அகத்தியர் ஸ்தாபித்த லிங்கம் பாணத்தில் கை ரேகைகள் தெரிகின்றன. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் திங்களன்று சந்திரஹோரை நேரத்தில், சிவனுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்கிறார்கள். சிவன் சந்நிதி எதிரில் அகத்தியர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். சதயம் நட்சத்திர நாட்களில் இவருக்கு பூஜை நடக்கிறது. ஆவணி வளர்பிறை பஞ்சமியன்று இவருக்கு ரிஷி பூஜை நடத்தப்படும்.


ஆவுடை அம்பிகை:
அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் (பீடம்) மீது நின்று தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். நவராத்திரியின் போது இவளுக்கு ஹோமத்துடன் பூஜை நடக்கும். பவுர்ணமியன்று சப்தரிஷிகளான அகத்தியர், அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகியோர் இவளை பூஜிப்பதாக ஐதீகம். இதற்காக அன்றிரவில் அம்பாள் சந்நிதி முன்பு, லகுசண்டி ஹோமம் நடத்துகின்றனர். சப்தரிஷிகளே இதை நடத்துவதாக ஐதீகம். இந்த பூஜை நடக்கும்போது 7 இலைகளில் ரிஷிகளுக்கு நைவேத்யம் படைப்பர்.


அஷ்டதிக்பாலகர்:
கோயில் பிரகாரத்தில் அஷ்டதிக் பாலகர்கள் தங்களுக்குரிய திசையில் தனித்தனி சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். இவர்களில் வடக்கு திசைக்குரிய குபேரருக்கு, செல்வ விருத்திக்காக வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவர். வடமேற்கு திசைக்குரிய அக்னி பகவானுக்கு திருமணத்தடை நீங்க சிவப்பு வஸ்திரத்துடன் தக்காளி சாதம் படைப்பர். தெற்கு திசைக்குரிய எமனுக்கு விபத்தை தவிர்க்க பாலபிஷேகம் செய்வர்.


பாகற்காய் மாலை:
ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகர், சனீஸ்வரர் இருவரும் அடுத்தடுத்து உள்ளனர். வீடு, கட்டடம் கட்டும் பணியைத் துவக்குவோர் அது தடங்கலின்றி நடக்கவும், வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களில் மூழ்கியிருப்போர் அது நீங்கவும் இவர்களுக்கு பூஜை செய்வர். சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து எள் தீபமேற்றி வழிபட்டால் கசப்பை சனீஸ்வரர் ஏற்று நமக்கு விடுதலையளிப்பார் என்பது நம்பிக்கை.


முருகனுக்கு பீட்ரூட்:

செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு இங்கு உள்ள முருகனுக்கு பீட்ரூட் சாதம் படைக்கிறார்கள். இதனால் திருமணத்தடை நீங்கி சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என நம்புகிறார்கள். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சுப்பிரமணியர், சரபேஸ்வரர், காலபைரவர் ஆகியோருக்கும் சந்நிதி இருக்கிறது. பள்ளி திறக்கும் இந்த நேரத்தில் இங்குள்ள ஹயக்ரீவரை வழிபடுவது நல்லது. அகத்தியர் சிவபூஜை செய்யும் சுதை சிற்பமும் உள்ளது. வன்னிமர வனமாக இருந்ததால், வன்னிக்காடு என அழைக்கப்பெற்ற இத்தலம், பிற்காலத்தில் வன்னிவேடு என மருவியது.


தல வரலாறு:
ஒருமுறை அகத்தியர் வன்னி மரங்கள் நிறைந்த இத்தலத்தில் தங்கினார். மணலால் லிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். தன்னை பூஜித்த அகத்தியரின் பெயரால் சிவன், அகத்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார்.








 உள் பிரகாரத்தில் சரபேஸ்வரர், சூரியன், மாணிக்கவாசகர், மூவர், நாயன்மார்கள், விநாயகர், விசாலாட்சியுடன் காசி விஸ்வநாதர், நடராஜர்.

மூலவரின் இடது புறத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதி போன்ற தனிக் கோயிலில் அம்பாள் இருக்கிறாள். அம்பாள் அபய வரத ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். அம்மன் சந்நிதிக்கு எதிரே சிம்மமும் பலிபீடமும் உள்ளன.

வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரர், ஆகர்ஷண பைரவர், பைரவர், நினைவுக் கல் (கொடையாளர்களாக இருக்கலாம்), விநாயகர், வீரபத்ரர், சனிஸ்வரன், நவகிரகங்கள், சிவன் மற்றும் அன்னபூரணியின் ஸ்டக்கோ படம், ஐயப்பன், ஆஞ்சநேயர், வாராஹி, சரஸ்வதி, வன்னித் தலங்களில் அஷ்டாதிபதிகள் மற்றும் நாகர்கள் .






வாலாஜா : வாலாஜா அகத்தீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதியில் எண்ணெய் ஊற்றியதும் தூங்கா விளக்கு தானாக எரிந்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வன்னிவேட்டில் புவனேஸ்வரியம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. க்ஷடாரண்ய ஷேத்திரங்களில் ஒன்றான இக்கோயில் அர்ச்சகர்களாக மனோஜ், கிருஷ்ணசாமி உள்ளனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை அர்ச்சகர் கோயிலை திறந்து சுவாமி மூலவர் சன்னதியில் உள்ள தூங்கா விளக்கை ஏற்றியுள்ளார். தொடர்ந்து, அம்மன் சன்னதி தூங்கா விளக்கிற்கு எண்ணெய் ஊற்றிய அர்ச்சகர் விளக்கை ஏற்ற திரியையும், தீப்பெட்டியையும் கொண்டுவர மூலவர் சன்னதிக்கு சென்றாராம்.

அங்கு திரி கிடைக்காமல் மீண்டும் அம்மன் சன்னதிக்குள் திரும்பியபோது, எண்ணெய் ஊற்றப்பட்ட விளக்கில் தானாக வழக்கத்துக்கு மாறாக கிழக்கு முகமாக தீபம் சுடர்விட்டு எரிந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். இதையறிந்து அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு விளக்கை அணைக்காமல் கோயிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் சென்றார். நேற்று காலை மீண்டும் அம்மன் சன்னதியை திறந்தபோது விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்ததுடன் அதில் ஊற்றப்பட்ட எண்ணெயின் அளவு குறையாமல் இருந்ததாம்.
இதையறிந்த வாலாஜா, வன்னிவேடு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

இந்த கோயிலில் ஏற்கனவே 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அதிசயம் நடந்தது. இந்த கோயிலின் அறங்காவல் குழு தலைவராக இருந்தவரும், கைலாய யாத்திரை சென்று திரும்பியவருமான சாம்ராஜ்யலட்சுமியும், அவரது தோழியான கங்கம்மாவும் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி இரவு 7 மணியளவில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முதலில் புவனேஸ்வரியம்மன் சன்னதிக்கு சென்றனர்.
அப்போது அங்குள்ள பஞ்சகோஷ்ட மூர்த்தியான துர்க்கையம்மன் மாடத்தில் இருந்து இறங்கும் படிகளில் மங்கலான உருவத்தில் சிறு பெண் கொலுசு சத்தம் ஒலிக்க இறங்கி பிரகாரத்தை சுற்றி நடந்து சென்றது. அப்பெண்ணை அழைத்தபடி 2 பேரும் பின்தொடர்ந்து சென்றபோது அந்த உருவம் புவனேஸ்வரியம்மன் சன்னதி மூலவருடன் சென்று ஐக்கியமானது.

மேலும் அந்த உருவம் நடந்து சென்ற பிரகா தரையில் சிறுபெண்ணின் பாதங்கள் கல்லில் செதுக்கியதுபோல் அழுந்த பதிந்திருந்தது. இதை பார்த்த இருவரும் மெய்சிலிர்த்து போயினர். கலியுகமான இக்காலத்திலும் இறைவன் தனது அதிசயங்களை நிகழ்த்துவான் என்பதற்கு அத்தாட்சியாக தரையில் பதிந்த அம்மனின் பாதங்களை பக்தர்கள் காணும் வகையில் பாதுகாத்துள்ளனர்
















பூஜைகள்:-

வழக்கமான பூஜைகள் தவிர, பௌர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, தைப்பூசம், பிரதோஷம், மகா சிவராத்திரி, ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரர் பூஜை (16.00 மணி முதல் 18.00 மணி வரை), வாராஹி பூஜைகள், தேய்பிறை அஷ்டமி, நாயன்மார்களின் குருபூஜைகள் போன்றவற்றில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

இந்த கோவில் ராகு மற்றும் கேது பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது. ராகு மற்றும் கேது பெயர்ச்சி நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.  

கோவில் நேரங்கள்

கோவில் 08.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், 16.30 மணி முதல் 20.00 மணி வரையிலும் திறந்து வைக்கப்படும்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 குருவருளால் நடைபெற்ற கோவை & பழனி யாத்திரை - (29 & 30.06.2024) - https://tut-temples.blogspot.com/2024/07/29-30062024.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய மருதமலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/06/blog-post_28.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 14 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-14.html

 அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

 சித்திரை மாதம் பேசுகின்றேன் - இன்னும் 10 நாட்களே உள்ளன!  - https://tut-temples.blogspot.com/2024/05/10.html

 அகத்திய மாமுனிவர் வாக்கு - உயர்தர புண்ணியம் பெறுவது எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post.html

 என்றும் குருநாதரின் வழியில்...இறைவா.! அனைத்தும் நீ..!! சர்வம் சிவார்ப்பணம்...!!!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_30.html

 மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_29.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி..! தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_26.html

 சிவசித்தர் திருமூலர் வாக்கு - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_24.html

 அகத்திய பிரம்மரிஷி வாக்கு - வள்ளலார் வழியில் சுத்த சன்மார்க்கம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_23.html

வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! - ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 4 - https://tut-temples.blogspot.com/2024/04/4.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “புண்ணியத்திற்கான ஆலயம்” - சென்னீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_20.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_18.html

 திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_19.html

 குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த நெடார் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_45.html

 காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_16.html

 சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 3 - https://tut-temples.blogspot.com/2024/04/3.html

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2  - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html
தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

No comments:

Post a Comment