"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 31, 2024

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2025 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள்

                    இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலம் அனைவருக்கும் 2025 ஆம் ஆண்டின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம்,உயர்புகழ், மெய்ஞானம் பெற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல குருவிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.உங்கள் வாழ்வில், நிறைய மகிழ்ச்சியை, ஆரோக்கியத்தை, இறை அருளை, 
ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானின் கனிவை, பாதுகாப்பை, வழிநடத்தலை அருளட்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றோம்.


எல்லோரும் இறை அருள் பெற்று நலமாக வாழவேண்டும்!



2024 ஆண்டு அனைவருக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது. சற்று ஆழ்ந்து பார்க்கும் போது இறையின் விளையாடல் ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.இவையனைத்தும் பார்க்கும் போது அந்த இறை நமக்கு ஏதோ சொல்ல நினைக்கின்றது. ஆம்..வாழ்தலின் நோக்கமே அன்பு தானே..ஆனால் நாம் வேறு எதையோ அல்லவா தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம். இதனை தான் அகத்தியமும் போதிக்கின்றது. இந்த மாற்றம் உடனே நிகழாது. கொஞ்சம் கொஞ்சமாக தான் நிகழும். அன்பை விதைக்க கற்றுக் கொள்வோம்.




தமிழ் புத்தாண்டா? ஆங்கில புத்தாண்டா? என்று பட்டிமன்றம் நடத்த நாம் விரும்பவில்லை. உலகமே கொண்டாடும் இன்றைய நாளை நாமும் கொண்டாடுவதில் தவறில்லை, ஆனால் எப்படி கொண்டாடுகின்றோம் என்பதில் தான் விஷயம் உள்ளது. இன்றைய நாளை,விடுமுறை தினத்தை நாமும் வழக்கமாக தொலைக்காட்சி, சினிமா என்று கொண்டாடாது, குடும்பம், உறவுகள் என சுற்றம் சூழ, மூத்தோர் ஆசி பெற்று, அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். 

ஏற்கனவே சொன்னது போன்று அன்பை விதைக்க கற்று கொள்வோம். இது  ஆன்மிகத்தின் ..இல்லையில்லை வாழ்வியலின் அடிப்படையும் கூட.

அனைவரும் கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் கேட்டிருப்பீர்கள். கந்த குரு கவசத்தில் கீழ்க்கண்ட வரிகள் மிக மிக ஞானம் போதிப்பவை. 




உலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்றாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
 அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அன்பே சிவமும்; அன்பே சக்தியும்
அன்பே ஹரியும்; அன்பே பிரம்மனும்
அன்பே தேவரும்; அன்பே மனிதரும்
அன்பே நீயும்; அன்பே நானும்
அன்பே சத்தியம்; அன்பே நித்தியம்
அன்பே சாந்தம்; அன்பே ஆனந்தம்
அன்பே மௌனம்; அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும்; அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்

நம் தளமும் அன்பையே துணையாக கொண்டு பல அறப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
அன்பின் ஆழம் தான் அனைத்தும், அன்பே கடவுள்.எளிய சித்தாந்தம் தான். சொல்லக்கூடிய வேதாந்தம் தான். எந்த மார்க்கத்தில் சென்றாலும் அன்பைத் தான் நாம் கைவரப் பெற இருக்கின்றோம். இதற்கு மேல் எளிமையாக சொல்ல முடியாது. நம் தளம் துவக்கிய நாளில் இருந்து நமக்கு உதவிய, தற்போது உதவிக் கொண்டிருக்கும்  அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

1. கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்திய பெருமான் ஆயில்ய பூஜை 


2. கூடுவாஞ்சேரி, சின்னாளபட்டி அன்னதான சேவை 


3. ஆலய தீப எண்ணெய் தானம் 



4. ஆலய தரிசனம் & யாத்திரை 


5. மோட்ச தீபம் & தீப வழிபாடு 



6. உழவாரப்பணி 



இதில் மோட்ச தீப வழிபாடு குருநாதர் ஆணைப்படி 2020 முதல் நிறுத்தியுள்ளோம். அதற்கு மாறாக வாய்ப்பு கிடைக்கும் போது தீப வழிபாடு செய்து வருகின்றோம். இந்த தொற்றுக்கிருமி கட்டுப்பாட்டால் உழவாரப்பணி தொடர்ந்து செய்ய இயலவில்லை. விரைவில் நாம் வழக்கம் போல் ஆண்டிற்கு ஒருமுறையேனும் நடத்தும் உழவாரப்பணி பற்றிய அறிவிப்பு விரைவில் தருகின்றோம். இது தவிர சித்தர்கள் குருபூஜை, பொருளுதவி செய்தல், ஆலய திருப்பணி, சிவபுராணம் அச்சிட்டு வழங்குதல், ஜூம் செயலி மூலம் தினசரி கூட்டுப் பிரார்த்தனை, திருமுறைகளுக்கென்று ஒரு புதிய வலைத்தளம் என சேவைகள் குருவருளால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

இந்த பணியில் அன்பர்கள் இணைந்து அனைத்து உயிர்களுக்குள் இருக்கும் ஈசனுக்கு உணவளிக்கும் வாய்ப்பு போன்ற சேவைகளை  எம்பெருமான் ஒரு சிலருக்கே கொடுத்துள்ளார். ஏனெனில் சிவத்தொண்டில் கலந்துகொள்ளவும் எம்பெருமான்  கருணை இருந்தால் மட்டுமே இயலும்.

அவர்களின் கர்மவினை முடிச்சுகளை அவர் அவிழ்ப்பார்.எனவே நமது நோக்கத்தை புரிந்து உதவி செய்து வரும் அன்பர்கள் அனைவரையும்  நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பில் வாழ்த்தி மகிழ்கின்றோம்.






மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புதிய ஆண்டின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.





மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புதிய ஆண்டின் வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கின்றோம். 2025ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நிறைவை தந்து, நன்மையே செய்யட்டும் என்று "தேடல் உள்ள தேனீக்கள்-TUT  "வலைப்பூ சார்பாக அனைவரையும் வாழ்த்துகிறோம்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக : -

 2021 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2020/12/2021.html

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....! - https://tut-temples.blogspot.com/2019/12/tut-2020.html

2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/12/2020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

No comments:

Post a Comment