இறைவா.! அனைத்தும் நீயே..!!
சர்வம் சிவார்ப்பணம்...!!!
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் அவ்வப்போது நாம் தல யாத்திரைகள் செய்து வருகின்றோம். இதில் அந்த நாள் இந்த வருடம் தொகுப்பிலும், குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்குரைத்து நமக்கு வழிகாட்டும் திருத்தலங்களுக்கு சென்று வருகின்றோம். வருடத்திற்கு ஒரு முறை ஏதேனும் மலை யாத்திரை அமைவதும் உண்டு,. அது போன்று தான் கொண்டறங்கி மலை யாத்திரை - அருள்மிகு கெட்டி மல்லீஸ்வரர் ஆலய தரிசனம் அமைந்தது.
இந்த மலையை பார்த்தவுடன் அதன் உச்சி சென்று அங்கிருந்து இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எல்லாருக்கும் எழத் தான் செய்யும்! ஆனால் இந்த மலையின் உச்சியை அடைய மேற்கொள்ள வேண்டிய பயணம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. 3825 அடி உயரம் கொண்ட இந்த மலையை ஏறும் தரிசனம் செய்ய நமக்கு குருவருள் பணித்தார்கள்.
வழக்கம் போல் குருவிடம் வேண்டி பணிந்து நாம் யாத்திரையை தொடங்கினோம். சின்னாளபட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்றோம். பின்னர் அங்கிருந்து கொடுமுடி செல்லும் பேருந்தில் ஏறி, கீரனூர் பேருந்து நிறுத்தம் இறங்க வேண்டும் என்று பயணித்தோம்.
கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை தோழா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_5.html
குகைக்குள் வாழும் குகனே- தோரணமலை முருகா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_28.html
No comments:
Post a Comment