இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் வழக்கம் போல் ஜூன் மாத சேவைகளை தொடங்கி உள்ளோம். குருவின் கருணைக்கு எல்லை எது? சொல்லில் அடக்க முடியுமா என்பது சந்தேகமே? சொல்லை காட்டிலும் கடந்து செல்லும் அனுபவம் தான் குருவின் அன்பும்,கருணையும் ஆகும். குருநாதர் தற்போது வரை பற்பல ஞான உபதேசங்களை நமக்கு அளித்துக் கொண்டு வருகின்றார். நாம் தான் அவற்றை கடைப்பிடிக்கின்றோமா ? என்பது தெரியவில்லை. குருநாதர் சொல்வது போல் நாம் இன்னும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் பட்டப்படிப்பை / கல்லூரிப் படிப்பை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றோம். கல்லூரிப் படிப்பை நோக்கி செல்ல வேண்டும் என்றால் நாம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் அல்லவா? இதற்கு நமக்கு குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த நல்வாக்குகளை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். அதற்காகவே இந்த தொகுப்பை இங்கே பகிர்கின்றோம்.
- அப்பனே! ஒன்றை தெரிந்துகொள் அப்பனே! காலங்கள் அனைவருக்கும் உண்டு, அப்பனே! ஆனால், இறைவன் கட்டங்கள் வைத்துத்தான் திருத்துவான் என்பேன். இவைகளெல்லாம், மிக மோசமாகவே, இதற்கு முன் நடந்ததப்பா! அப்பொழுது தொலை நோக்கி பார்வைகள் இல்லையப்பா. அனைத்தையும் மறைத்து விட்டார்கள். இப்பொழுது கையிலே இருக்கின்றதப்பா (செல்போன்).
- அப்பனே! இருக்கும் இடத்தில் கொடுப்பது (அன்னதானம்) மிகச்சிறப்பானது!
- அப்பனே! பொதுநலத்துக்காக விளக்கு ஏற்றுவது மிகுந்த பலனைத் தரும்!
- அப்பனே! எங்கு சென்றாலும், கடைசியில் வரவேண்டியது என்னிடத்தில் தான்!
- அப்பனே! ஒரு நொடியில் என்னால் அனைத்தையும் கொடுக்க முடியும். அதை கொடுத்தால், பக்குவங்கள் இல்லை என்றால், பயனில்லை அப்பனே! கட்டங்கள் கொடுத்தால்தான், பக்குவநிலை அடைய முடியும் அப்பனே! அதனால், யானே கொடுத்துவிட்டு, யானே பின்னர் வருந்தும் நிலை வந்து விடக்கூடாது என்பதற்காகவே அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
- அப்பனே! எது என்று அறிய! அறிய! மனிதன் என்றாலே இப்படித்தான். அப்பனே, வாழ வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே! உலகத்தில் பிறந்து, பிறந்து! அதனால் தான் அப்பனே, யாங்கள் எப்படியாவது மனிதனை, இப்படி சென்றால் நலமாகும் என்று அழைத்துக் கொண்டிருக்கின்றோம். பிறவிகள் வேண்டாம் என்று அப்பனே! அனைவருக்கும் சொல்லுகின்றோம் அப்பனே! பிறந்துவிட்டீர்கள், வாழ்க்கையில் எப்படிப்பட்ட கட்டங்கள் எல்லாம் அனைவரும் அனுபவித்துத்தான் வந்து கொண்டிருக்கின்றீர்கள். இது தேவையா? இப்பிறப்பு தேவையா? அப்பனே! என் வார்த்தையை கேட்டு வந்துவிட்டால், என் வழியில் வந்துவிட்டால் நிச்சயம் பிறவி கிடையாதப்பா. அதனால் தான், முட்டாள் மனிதன், எங்கெங்கோ சென்று அவ் மந்திரத்தை ஜெபித்தால் மோக்ஷம் கிட்டும் என்று உசுப்பேத்துகின்றான் அப்பா! அனைத்தும் வீணானதப்பா! பொய் சொல்லி திரிந்து கொண்டு இருக்கின்றானப்பா! கர்மத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறானப்பா! மாயையில் விழுந்துவிட்டானப்பா! ஈசனை விட மிக பலமாக இவ்வுலகத்தில் என்ன இருக்கிறது என்று சொல்.
- குருவுக்கு (அகத்தியனுக்கு) பெயர் வாங்கித் தாருங்கள் என்று யான் கேட்கவில்லை. பெயரை கெடுக்காதீர்கள் என்றுதான் யான் சொல்லுகின்றேன்!
- அப்பனே! எது என்று அறிய! அறிய! உங்களை காக்கவே யாங்கள் வந்துள்ளோம். அதனால், எங்களை வைத்து திட்டி தீர்த்து, கர்மாவை சேர்த்துக்கொண்டு, அப்பனே! அவ் கர்மாவே, ஒருநாள் உங்களை திருப்பி தாக்கும்! இது தேவையா?
- அப்பனே! யாங்கள் வரவில்லை என்றால், அகத்தியன் பொய் என்று திட்டுவார்கள் மனிதர்கள். அதனால் தான் யான் வந்துவிட்டேன். மனிதர்களை திட்டுவேன். காரி துப்புவேன் அப்பனே! இனி அங்கேயே கஷ்டத்தை கொடுப்பேன்.
- அப்பனே! மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே யாங்கள் வந்துள்ளோம் அப்பனே! அனைத்தும், இவ்வுலகத்தில் இறைவனை வைத்து, பணம்தான் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றார்கள் அப்பனே! புண்ணியத்தை சம்பாதிக்கவில்லை அப்பனே! அப்படி பார்த்தால், கடைசியில் நோய்களும் பற்றிக்கொள்ளும், இறந்தும் விடுவான், இவன் மட்டும் பாபத்தை சம்பாதித்து கொள்ளவில்லை, பிள்ளைகளையும் தாக்கும் அப்பனே! இது தேவையா? மனித பிறப்பு!
- அப்பனே! எங்கள் இடத்தில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள், அப்பனே! கர்மாவை எடுத்து மாற்றுவேன். அதனால் தான் சில கட்டங்கள். அகத்தியன் அருகில் இருக்கின்றோமே? ஏன் கட்டங்கள் வருகின்றது என்று யாரும் கவலைப்படத் தேவை இல்லை அப்பனே! ஏன் என்றால் மனிதப் பிறப்பு வேண்டாம் அப்பனே!
- அப்பனே! உண்மைகள், இதனால், வரும் காலங்களில் எடுத்துரைப்பேன் அப்பனே! கலியுகம் என்பது கூட வாழ முடியாத காலமப்பா! ஏற்கனவே சொல்லிவிட்டோம் இதனை! ஆனால், வாழ்கின்றோம் என்ற தவறான கருத்தை மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே! ஆனால் ஒன்றை மட்டும் சொல்லுங்கள். என் தந்தை அகத்தியன் இருக்கின்றான் என்று. அப்பனே! இதுதானப்பா, கலியுகத்தில் மந்திரம்!
- எங்கள் அருள் இல்லாமல், எந்த மந்திரமும் பலிக்காதப்பா. அதனால், மண்ணை தின்பது போல்தான் இப்பொழுது மந்திரங்களும் ஆயிற்று. அப்பனே! மனித பிறப்பு என்பதே வீணான பிறப்பப்பா! கட்டங்கள் படுவதே இயல்பாக போய்விட்டது! அதனால் தான், மனிதர்கள், பாபங்கள் செய்து, கட்டங்கள் அனுபவித்து இப்படி எல்லாம் வாழ்கின்றானே என்றுதான், அவன் மனதுள் தோன்றி தோன்றி போராடிக் கொண்டு இருக்கின்றேன்! அதனால், சித்தர்களை சொல்லிக் கொண்டு, மனதை மாற்றிவிடாதீர்கள் அப்பனே! கடைசியாகவே எச்சரிக்கின்றேன் அப்பனே!
- அப்பனே! யானே அனைத்தையும் பார்த்துக் கொள்கின்றேன். அனைத்தையும், விதி என்று விட்டுச் செல்லுங்கள். அப்பனே! இப்படி செய்தால், மதியால், யான் உன்னை வெல்லச் செய்வேன்!
- தர்மம் செய்வேன்
- அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
- போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
- அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
- பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
- அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
- அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
- பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
- பிறருக்காக உழைக்க வேண்டும்
- பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
No comments:
Post a Comment