இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் அகஸ்தியர் வழிபாடு என்ற ஞானப் பொக்கிஷம் பற்றி இன்றைய பதிவில் தொட்டுக் காட்ட உள்ளோம். அகஸ்தியர் வழிபாடு என்ற இரண்டு சொற்கள் பற்றி பார்க்கும் போது நம் குருநாதர் அகஸ்தியர் பெருமான் சித்தர்களுக்கெல்லாம் தலைமை சித்தராக விளங்கி வருகின்றார். அவருடைய நாமம் சொல்வது புண்ணியம் செய்து இருந்தால் தான் நமக்கு கிடைக்கும். ஏற்கனவே நாம் கூறியபடி, ஒருவருக்கு வாழ்வில் குரு கிடைப்பது தான் வாழ்வின் நோக்கம். பெற்றோர்,உற்றார்,உறவினர், குழந்தை, செல்வம், வேலை என அனைத்தும் அமைவதை விட, ஒரு குரு அமைவது தான் பெறற்கரிய பேறு ஆகும். அப்படி நாம் பெறற்கரிய பேறு பெற்றுள்ளதால் தான் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் நாமத்தை நாம் உச்சரிக்க முடிகின்றது. இப்படி குருநாமம் கூறி, கூறி நம்முள் உள்ள அகத்தின் ஈசனை நாம் காண வேண்டும் என்பதே அகத்தியரின் நாம உச்சாடனம் ஆகும்.
அடுத்து வழிபாடு பற்றி காண உள்ளோம். வழிபடு ..வழிபாடு..ஒரு வழியில் சென்று பாடு படுதல் வேண்டும். இந்த வழியில் செல்லும் போது நம் நோக்கம் அந்த வழியில் இருக்க வேண்டும். இப்படி ஒரு வழியில் செல்லும் போது, அதற்கு நாம் பாடு பட்டு உழைத்து இறையை காண வேண்டும். இன்னும் சுருக்கமாக கூறுங்கால் , வழிபாடு என்பது ஒரு செயல் ஆகும். இதனை நாம் பக்தியின் செயல் என்று கூறலாம். ஏனென்றால் பக்தி தான் அனைத்திற்கும் அடிப்படை. இந்த வழிபாட்டை நாம் தினமும் செய்து கொண்டே இருக்கும் போது நமக்கு ஞானம் குருவருளால் சித்திக்கும். இதுதான் வழிபாட்டின் நோக்கம் ஆகும்.
இப்போது அகஸ்தியர் வழிபாடு என்பது நம் குருநாதர் அகஸ்தியர் பெருமான் காட்டும் பக்திக்கான வழிமுறைகள் ஆகும். அப்படி தான் நமக்கு அகஸ்தியர் வழிபாடு எனும் நூல் கிடைத்தது. அதிலும் முதல் பாகமாக நமக்கு கிடைத்தது. படித்ததும் குருநாதர் நமக்கு வழிகாட்டும் நிலைகளை எப்படி நாம் உரைப்பது ? அவரின் கருணைக்கு எல்லை ஏது ? என்று ஏங்கினோம்.
இப்படியான அகஸ்தியர் வழிபாடு என்றொரு வழிகாட்டல் நமக்கு கிடைக்கப்பெற்றது. இந்த பயணம் எப்படி அமைந்தது ? மூன்று தொகுதிகள் அடங்கிய அகஸ்தியர் வழிபாடு நூல், அகஸ்தியர் வழிபாடு மூலம் சேவை என ஒவ்வொன்றும் குருநாதர் அகத்தியர் பெருமான் அருளால் கிடைக்கப்பெற்றது. இதனை பற்றி இனிவரும் பதிவுகளில் காண குருவருள் நம்மை வழிநடத்தட்டும்.
அதற்கு முன்னர், அகஸ்தியர் வழிபாடு என்ற ஞானப் பொக்கிஷம் என்ற நூலின் இருந்து சில ஞான முத்துக்களை இங்கே படக்காட்சிகளாக பதிவு செய்துள்ளோம். இவற்றையெல்லாம் படித்து நன்கு நம் மனதில் இருத்தி நம் வாழ்வை செம்மை ஆக்குவோம். முதல் படத்தை படிக்கும் போதே ஞானம் என்பது என்ன? என்று நமக்கு நம் குருநாதர் பாடம் புகட்டுகின்றார்.
இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது
படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும்.
குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை
வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின்
மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை
தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும்.
இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம்
ஓம் குரு வழியே ஆதி ஆதி
ஓம் குரு மொழியே வேதம் வேதம்
ஓம் குரு விழியே தீபம் தீபம்
ஓம் குரு பதமே காப்பு காப்பு
இன்னும் அகஸ்தியர் வழிபாடு நம்மை வழிநடத்தட்டும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
No comments:
Post a Comment