"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, June 11, 2024

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - முத்தைத்தரு திருப்புகழ்..!! - 48 நாட்கள்

                                                             இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று மீண்டும் குருநாதர் அருளிய திருப்புகழ் வாக்கினை அறிய உள்ளோம். அதிலும் குறிப்பாக முத்தைத்தரு திருப்புகழ் குறித்து அறிந்து அதனை குருநாதர் அருளிய உத்தரவாக இன்றைய பதிவில் காண உள்ளோம். முதலில் குருநாதர் அருளிய திருப்புகழ் வாக்கினை உணர்ந்து அடுத்து முத்தைத்தரு திருப்புகழ் படித்து குருவின் அருளை பெற முயல்வோம்.

குருவே போற்றி அருணகிரி நாதர் திருப்புகழ் பற்றி கூறுங்கள்

அப்பனே எதையென்று உணர எதை எவை என்று கூட அப்பனே அதிகாலையில் பாடிட்டே வாருங்கள் அதன் நிலைமை புரியும் என்பேன்!!! அப்பனே யான் சொல்லிவிடுவேன் அப்பனே... நீயும் கேட்டு விட்டாய் அப்பனே சொல்லிவிட்டால் இவ்வளவுதானா என்று விட்டு விடுவாய் அதனை நீ பாடி வா!!! எதையென்று பின் மாற்றங்கள் வருவதை நீயே எண்ணி விடுவாய்!! அதன் தன்மையை புரிந்து கொள்வாய்!! அப்பனே!!!

அவ்வப்போது நம் தளத்தில் திருப்புகழ் தலங்கள் தரிசனம் பெற்று வருகின்றோம். மேலும் நம் தளத்தில் நடைபெறும் கூட்டு வழிபாட்டில் முருகவேள் பன்னிரு திருமுறை மூலமாக திருப்புகழ் படிக்க வாய்ப்பு கிடைத்து. மீண்டும் மாலை வழிபாட்டில் திருப்புகழ் படிக்க முருகப் பெருமானிடம் வேண்டுகின்றோம். இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம்மில் தோன்றுவது இது தான். இது மட்டும் தான்.

முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!


மீண்டும்  அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 05.09.2023 உரைத்த வாக்கில் அம்மை ஒருவருக்கு குருநாதர் அருளிய வாக்கில் நாம் அனைவரும் இந்த திருப்புகழை அனுதினமும் பாடி, முருகப் பெருமான் அருள் பெறுவோமாக!


அடியவர்:- ( அம்மை ஒருவருக்கு வாக்கு கேட்ட பொது )

குருநாதர்:- அம்மையே ஏதாவது ஒரு பாடலை பாட வேண்டும்.

அடியவர்:- ( அம்மை அவர் கந்த வடிவேலவன் அருளால் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் உள்ள முத்தைத்திரு என்ற பாடலை மிக அருமையாக பாட ஆரம்பித்தார். அந்த மகிமை புகழ் பெற்ற மகத்தான பாடலை அடியவர்களுக்கு பகிர்கின்றோம். இந்தப்பாடல் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.)

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

(கருணைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி பாடல் முடியும் வரை கேட்டார்கள். இந்த அம்மை செய்த பாக்கியம்)

குருநாதர்:- அம்மையே இவை தன் யான் சொல்லுகின்றேன் அம்மையே. யாருக்கும் சில அறிவுரைகளே இல்லை அம்மா.  அனுதினமும் அம்மையே அதாவது இல்லத்திலேயே தீபம் ஏற்றி ஒரு மண்டலம் வரை (48 நாட்கள் இந்த பாடலை) இதை உரைத்து அனைவரையும் பாடச்சொல்லிட்டு மீண்டும் வாக்குகள் கேட்கச்சொல். அதன் உள்ளே சில விசயங்கள். அனைவருமே கர்மாவில் இருக்கின்றார்கள் அம்மையே. அதனை (யான்) மாற்றி அமைக்கின்றேன் என்று நீ கூற வேண்டும். எழுந்து நில்.

அடியவர்:- (இந்த அம்மை அங்கு உள்ள அடியவர்களுடம் பின் வருமாறு உரைத்தார்கள்)  48 நாளைக்கு உங்க வீட்டில் தினமும்  தீபம் ஏற்றி, இந்த முத்தைத்திரு என்ற பாடலை பாடுங்கள். 48 நாள் முடிந்த பின் வாக்குகள் குருநாதர் ஐயாவிடம் கேளுங்கள்.

குருநாதர்:- அம்மையே நீயே பாட வேண்டும் இல்லத்தில் கூட.









மீண்டும் மீண்டும் முருகப் பெருமானை மனதில் நினைத்து, திருப்புகழ் படித்து, பாடி மெய் உணர்வோமாக!குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று நித்தமும் முருகப் பெருமானிடம் வேண்டிப் பணிவோம். குருநாதர் கூறிய வழியில் தினமும் விளக்கேற்றி தொடர்ந்து 48 நாட்கள் முத்தைத்தரு திருப்புகழ் படித்து குருவின் உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவோம்.

திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ்..!! - https://tut-temples.blogspot.com/2024/06/blog-post_6.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html
 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 14 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-14.html

 அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

 அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருவாசகமும், திருப்புகழும்...!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_1.html

 அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

No comments:

Post a Comment