"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, June 4, 2024

அகஸ்தியர் வழிபாட்டுடன் கொண்டறங்கி மலை யாத்திரை..!!

 

                                                                இறைவா.! அனைத்தும் நீயே..!!

                                                               சர்வம் சிவார்ப்பணம்...!!!

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.  

குருவருளால் அவ்வப்போது நாம் தல யாத்திரைகள் செய்து வருகின்றோம். இதில் அந்த நாள் இந்த வருடம் தொகுப்பிலும், குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்குரைத்து நமக்கு வழிகாட்டும் திருத்தலங்களுக்கு சென்று வருகின்றோம். வருடத்திற்கு ஒரு முறை ஏதேனும் மலை யாத்திரை அமைவதும் உண்டு,. அது போன்று தான் கொண்டறங்கி மலை யாத்திரை  - அருள்மிகு கெட்டி மல்லீஸ்வரர் ஆலய தரிசனம் அமைந்தது.

இந்த மலையை பார்த்தவுடன் அதன் உச்சி சென்று அங்கிருந்து இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எல்லாருக்கும் எழத் தான் செய்யும்! ஆனால் இந்த மலையின் உச்சியை அடைய மேற்கொள்ள வேண்டிய பயணம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. 3825 அடி உயரம் கொண்ட இந்த மலையை ஏறும் தரிசனம் செய்ய நமக்கு குருவருள் பணித்தார்கள். 

வழக்கம் போல் குருவிடம் வேண்டி பணிந்து நாம் யாத்திரையை தொடங்கினோம். சின்னாளபட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்றோம். பின்னர் அங்கிருந்து கொடுமுடி செல்லும் பேருந்தில் ஏறி,  கீரனூர் பேருந்து நிறுத்தம் இறங்க வேண்டும் என்று பயணித்தோம்.பேருந்தில் பயணிக்கும் போதே கொண்டறங்கி மலை தரிசனம் காணும் பாக்கியம் கிடைத்தது.  இதற்கு முந்தைய பதிவுகளில் ஏற்கனவே யாத்திரை தொடங்கி, கொண்டறங்கி மலை ஏறி, மிக சரியாக உச்சியில் உள்ள கோயிலை அடைந்து விட்டோம்.



இம்முறை அகஸ்தியர் வழிபாட்டோடு பயணம் செய்தோம். இதோ. மலை உச்சியில் உள்ள கோயிலில் அந்த சிவபரம்பொருளிடம் இந்த நூலை சமர்ப்பித்து பெற்றுக் கொண்டோம்.

இங்கே நீங்கள் பார்ப்பது தான் கொண்டறங்கி மலை உச்சியில் உள்ள கோயில். இங்கே உள்ளே சென்று அந்த சிவபரம்பொருள் தரிசனம் பெற்றோம்.




பின்னர் அங்கிருந்த விநாயகர் பெருமானிடம் தரிசனம் பெற்றோம்.





பின்னர் அகஸ்தியர் வழிபாடு நூலை கண்ணை மூடி, ஒரு பக்கத்தை திறந்து , அதில் இருந்த உபதேசத்தை படித்தோம். அதில் அனைவருக்குமான செய்தியாக கோபம் ஏன் வருகின்றது என்று படித்தோம்.

கோபம் ஏன் வருகின்றது என்பது நம் அனைவருக்குமான செய்தி தான். சினம் என்றால் ஆறிவிட வேண்டும். ஆனால் நமக்கு ஆறாமல் அல்லவா வருகின்றது. இதைத் தான் ஒளவை பாட்டி நமக்கு ஆறுவது சினம் என்று கூறுகின்றார். கண்டிப்பாக நாம் சினத்தை கைவிட வேண்டும். அதுவும் ஆன்மிக பாதையில் நாம் சேர்க்கும் அனைத்து புண்ணியத்தையும் ஒரு நொடியில்உருவாகும் சினம் அழித்து விடும். இதனைத் தான் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானும் பலமுறை நமக்கு உபதேசமாக வழங்கி வருகின்றார்கள்.




இந்தப் பதிவின் நோக்கமாக கூட - கோபம் ஏன் வருகின்றது என்று சிந்தித்து நாம் செயல்பட வேண்டும். அப்படியே கோயில் மேல் தளத்தில் அமர்ந்து கண்ணை மூடி சற்று நேரம் அமைதியாக அமர்ந்து, அந்த சூழலை உள்வாங்கினோம்.


பின்னர் அங்கிருந்து மீண்டும் மலை உச்சி சென்று அங்கிருந்து இயற்கையை கண்டு ரசித்தோம். ஏன் சித்தர் பெருமக்கள் இது போன்ற மலைகளில் இருக்கின்றார்கள் என்று புரிந்து கொண்டோம். பின்னர் சுமார் 9:30 மணி அளவில் மேலிருந்து மலை அடிவாரம் நோக்கி இறங்க ஆரம்பித்தோம்.






இறங்கும் போது அப்பப்பா! சொல்வதற்கு வார்த்தை இல்லை.நீங்களே அந்த அழகை கண்டு ரசியுங்கள்.











இதோ. மலை அடிவாரம் நோக்கி வந்துவிட்டோம்.




திண்டுக்கல் மாவட்டம் வேடசத்தூர் கீரனூர் பகுதியில் உள்ள சிவ லிங்க வடிவிலான மலைக்கு தினந்தோறும் மேகக்கூட்டங்கள் வந்து அபிஷேகம் செய்து கொண்டே இருக்கும் அந்த மலை தான் கொண்டரங்கி மலை. கடல் மட்டத்தில் இருந்து 3825 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியை பார்த்தால் வானத்தை தொட்டு கொண்டு இருப்பது போல் இருக்கும்!

கொண்டரங்கி மலை என பெயர் வரக் காரணம் என்ன வென்று பார்த்தால் கொண்டல் என்றால் மேகம் என்றும் அவை இறங்கி வந்து இந்த மலையை தொட்டு செல்வதால் கொண்டறங்கி மலை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. கூம்பு வடிவில் பூமியில் இருந்து 3825 அடி உயரத்தில் அமைந்த மலை உச்சியில் தியானம் மேற்கொண்டால், வானில் இருந்து பல நேர்மறையான கதிர்கள் நம்மில் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் நிகழ்த்தி காட்டுவதாக நம்பப்படுகிறது. 

கொண்டராங்கி மலை என பெயர் வரக் காரணம் என்ன வென்று பார்த்தால் கொண்டல் என்றால் மேகம் என்றும் அவை இறங்கி வந்து இந்த மலையை தொட்டு செல்வதால் கொண்டராங்கி மலை என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. கூம்பு வடிவில் பூமியில் இருந்து 3825 அடி உயரத்தில் அமைந்த மலை உச்சியில் தியானம் மேற்கொண்டால், வானில் இருந்து பல நேர்மறையான கதிர்கள் நம்மில் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் நிகழ்த்தி காட்டுவதாக நம்பப்படுகிறது.கீரனூர் கொண்டராங்கி மலை பயணத்தை தொடங்கும் முன் மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் கெட்டிமல்லிஸ்வரர் எனும் சிவன் கோயிலில் வழிபட்டோம். அந்த ஆலயத்தில் வெளிப்பகுதியில் கோயிலின் விவரங்கள் அடங்கிய பதாகை வைக்கப்பட்டிருந்தது. பின் அங்கிருந்த தோரண வாயில் வழியாக படிக்கட்டுகளில் ஏற தொடங்கினோம், மலைப் பாறைகள் செதுக்கப்பட்டு படிகளாக அமைக்கப்பட்டிருந்தது. சுற்றி இருக்கும் எந்த மலை இந்த கொண்டலிறங்கி மலை போல் என்பது தான் தனிச்சிறப்பு.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 கெட்டி மல்லீஸ்வரரை கெட்டியாக பிடிக்க.! - கொண்டறங்கி மலை யாத்திரை..!! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_28.html

கொண்டறங்கி மலை யாத்திரை - அருள்மிகு கெட்டி மல்லீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_90.html

 வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! - ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_22.html

 கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை முருகா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_15.html

கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை தோழா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_5.html

குகைக்குள் வாழும் குகனே- தோரணமலை முருகா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_28.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

 தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html

பரம்பொருளைக் காண பருவத மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_87.html

 மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html

 குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

  ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

 தேனி சண்முகநாத மலை தரிசனம் (2) - https://tut-temples.blogspot.com/2019/07/2_25.html

 வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_7.html



2 comments:

  1. மிக மிக சிறப்பான பதிவு. படிக்க படிக்க அந்த யாத்திரையை மேற்கொள்ளவேண்டுமென்று தூண்டுகிறது. அடுத்தமுறை இப்படி ஒரு யாத்திரை என்றால், சகோதரரே, தயவுசெய்து எனக்கு முன்னமே தெரிவித்தால், நானும் கட்டாயம் கலந்துகொள்வேன். நன்றி. இப்படிக்கு ரமேஷ் சர்கம், பெங்களூரு.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஐயா. கண்டிப்பாக அடுத்த முறை தெரியப்படுத்துகின்றோம்.

      குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து
      ரா.ராகேஸ்
      கூடுவாஞ்சேரி

      Delete