இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!
இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!
இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்
சித்தன் அருள் - 1129 - அன்புடன் அகத்தியர் - சோமநாதேஷ்வரம் ஆலயம், சோம்நாத்!
23/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் : சோமநாதேஷ்வரம் ஆலயம். ஜோதிர்லிங்கம்
சோம்நாத்.
பிரபாஸ் பட்டினம். வெராவல்
கிர் மாவட்டம்
குஜராத்.
ஆதி சோமனை மனதில் எண்ணி செப்புகின்றேன் வாக்குகள் அகத்தியன்.
"""தர்மமெல்லாம் எப்பொழுது தாழ்ந்து நிற்கின்றதோ??!! அப்போதெல்லாம் யான் வருவேன் என்று கூட...
நிச்சயம் வருவான்!!! என்பதை உறுதியாகச் சொல்லி விட்டேன் அப்பனே.
இவையன்றி கூற தர்மம் !!!தர்மம்!!! உயர்ந்து நிற்க வேண்டும்.
என் வழியில் வந்தவர்கள் அப்பனே பொறாமைகள் படக்கூடாது அப்பனே!!!
"""தான் !! என்ற அகங்காரம் வந்துவிடக்கூடாது.....அப்பனே!!!!
அனைத்தும் இறைவன் செயல் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
அதையும் மீறி நடந்தால் அப்பனே நிச்சயம் என் சீடர்களே பின் வந்து கஷ்டத்தை அள்ளித் தருவார்கள் அப்பனே...எதையன்றி கூற.
அதனால் அப்பனே சரியாக இருங்கள்!!! ஒழுங்காக இருங்கள் அப்பனே.!!!
வேண்டாம் அப்பனே!!! அப்பனே!!! இப்பிறவி என்பது சிறிது காலமே....
மாயை என்பேன்!!! அப்பனே. கனவு என்பேன்.!!!
அதையன்றி
கூற அப்பனே!!! இக் கனவில் வாழும் மனிதர்கள் எவ்வாறு? வாழ்ந்து வருதல்!!
வேண்டும்!! என்பதைக்கூட அப்பனே இவையன்றி கூற அப்பனே பலபல இதிகாசங்கள்
உள்ளது அப்பனே.
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


.jpeg)

.jpeg)
.jpeg)

.jpg)
No comments:
Post a Comment