"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 11, 2023

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவை தொடங்குகின்றோம். நம் தளத்தை தொடர்ந்து கவனித்து வந்தால் ஒவ்வொரு சேவைகளும் , ஆலய தரிசனமும் குருவருளால் நடைபெற்று வருவதை கண்டு வருவீர்கள் என்று நம்புகின்றோம். மனித முயற்சியால் இது நடைபெறவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். நம்மால் என்ன செய்ய முடியும். ஒன்றுமே செய்ய இயலாது. நாம் வெறும் கருவிகளே. கருவியாய் இருந்து கொண்டே இங்கே நாம் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். இறைவா! அனைத்தும் நீயே என்று சரணாகதி அடைவதை தவிர நம்மால் செய்வது ஒன்றும் அறியோம் பராபரமே! இந்த நிலையில் மதுரை பசுமலை அகத்தியர் கோயில்  பற்றி இன்றைய பதிவில் மீண்டும் அறிய விழைகின்றோம்.






அடுத்து, ஜீவ நாடி அற்புதங்கள் தொடரில் மதுரை - பசுமலை ஸ்ரீ அகத்தியர் கோயிலில் நம் குருநாதர் அருளிய வாக்கினை சில துளிகளாக இங்கே தருகின்றோம். மதுரையில் திருப்பரங்குன்றத்துக்கு அருகில் பசுமலை என்கிற இடத்தில் உள்ள "சக்தி மாரியம்மன் கோவிலில்" நம் குருநாதர் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கு ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் 07/02/2020 அன்று காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் சுபமுகூர்த்தத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. விரைவில் தனிப்பதிவில் இந்த ஆலய தரிசனப் பதிவை தருகின்றோம். இனி குருநாதர் அருளிய ஞானத்தை இங்கே அறிய உள்ளோம்.

( மதுரை பசுமலையில் அமைந்துள்ள அகத்திய மஹரிஷி ஆலயத்தில் வாசிக்கப்பட்ட அகத்திய மஹரிஷி நாடி வாக்கு)

நல்முறைகளாக வினையை தீர்த்துக்கொள்ளலாம் என்பேன்.கந்தனிடத்தில் இங்கு வந்து கந்தர் அனுபூதியும் , கந்த சஷ்டி கவசத்தையும் ஓதி வந்தால் அதி சிறப்பை ( பலன்களை) பெறலாம் என்பேன்.

மீனாட்சி தாயே இங்குவருவாள் என்பேன்.

கன்னித்திங்களில் 4 சனிக்கிழமை ( புரட்டாசி மாதத்தில்) அண்ணதானம் செய்ய மிகு சிறப்பு என்பேன்.நிச்சயமாய் பெருமாள் இங்கு வந்து ஆசி தந்து செல்வான் என்பேன்.நல்முறைகளாக (அன்னதானம் ) நடக்க அவன்தனும் உண்ணிச்செல்வான் என்பேன்

( நல்ல முறையில் அண்ணதானம் நடக்க பெருமாள் அங்கு வந்து கலந்து உணவு உண்டு செல்வார் என குருநாதர் அகத்திய மஹரிஷி வாக்கு)

( கடந்த ) ஆடி கிருத்திகை அன்று இங்கு ( பசுமலை சக்தி மாரியம்மன்  ஆலயம்) முருகப்பெருமான் வந்துதான் சென்றான் என்பேன்.

அனைத்து தெய்வங்களும் இந்து வந்துதான் செல்கின்றனர் என்பேன்.

யான் இங்கு இருப்பதால் நாள் ( பார்க்க ) தேவை இல்லை .

நிலையானது இறைவன் மட்டுமே.மற்றவை எல்லாம் நிலையற்றது.ஆனால் முட்டாள் மனிதன் நிலையற்றதையே தேடிக்கொண்டு இருக்கின்றான்

பிறருக்காக வாழ வேண்டும் என்ற கொள்கையை பிடித்தால், உந்தனுக்காக இறைவன் வாழ்வான்









அகத்திய மஹரிஷி பொது நாடி வாக்கு:

வாசிக்கப்பட்ட இறை தலம் :- மதுரை பசுமலையில் சக்தி மாரியம்மன் தளத்தில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்திரை உடன் உறை அகத்திய மஹரிஷி ஆலயம்

நாடி அருளாளர்:- திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள். 6-September-2021, திங்கள் கிழமை

குருநாதர் நாடி வாக்கு ஆரம்பம்:- 

ஆதி ஈசன் பொற்ப்பாதத்தை தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்.

நலன்களே என் அருள்களால் நலமே மிஞ்சும் என்பேன். மிஞ்சும் என்பேன் யான் வாரத்திற்க்கு ஒரு முறை இங்கு தங்கித் தங்கி செல்கின்றேன்.பின் அவ்நாளும் ( அந்த நாளை ) பின் நல்முறைகளாக உரைக்கின்றேன். பின் குரு வாரம் என்கின்றார்களே அவ்வாரத்தில் ( ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் ) யான் தங்கித்தங்கி சென்றிருக்கையில் பின் அப்பொழுது கூட நல்முறைகளாக வந்தார்கள் பலர். பல என்பேன் அதனால் பல பல பேர்களுக்கும் ஆசிகள் தந்து கொண்டேதான் இருக்கின்றேன். மேன்மைகள் பெறும்.

ஆனாலும் சில கட்டங்கள் வந்து வாட்டுவதறக்கும் எவ்வாறு எனபதையும் புரியுதல் நிலை ஏற்றவாறு அன்றொரு தினத்தில் ( வியாழன் ) நல்முறைகளாக இங்கு அமர்ந்து வந்து துவில் வந்து சென்றுவிட்டால் ஆனாலும் சென்றுவிட்டு நல்முறையாய் பின் ஓர் மாதத்திற்க்கு (30 நாட்கள்) இயலாதவருக்கு அண்ணம் அளித்து வந்தால் என்னுடைய அருள் ஆசிகள் பலம்.அனைத்தும் (கெட்ட கர்மா) விலகிப்போகும். ஆனாலும் இவை அன்றி இப்படியே செய்ய பின் மதுரை நல்முறைகளாக வாழும் மீனாட்சி தாயும் பின் அதன்உள்ளே ( மதுரை மீனாட்சி ஆலயத்தின் உள்ளே) ஓர் மாதம் அங்கும் தங்கி இருக்க பின் நல் முறைகளாகவே திருப்பரங்குன்றம் நல்முறைகளாகவே அங்கும் ஓர் மண்டலம் (48 நாள்) தரிசிக்க பின் பழமுதிர்ச்சோலையும் (48 நாள்) தரிசிக்க , இவை ( கட்டங்கள்/கர்மா ) அனைத்தும் ஒவ்வொன்றும் நீங்கி நல் முறைகளாக நினைத்ததை நிச்சயமாய் நடை பெறும் என்பேன். யான் சொல்வதை சரிமுறையாக கேட்க்க ஒரு துன்பம் இல்லை என்பேன். துன்பமில்லை என்பேன் இவ்வாலயத்தின் சிறப்பு கூட இது.

நல்முறைகளாகவே திருமூலனும் நல்முறைகளாகவே அருணகிரியும் வந்து வந்து செல்கின்றார் என்பேன். ( இவ்வாலயத்தில் சித்தர் திருமூலர் , அருணகிரிநாதர் இருவருக்கும் நுழைவு மேல் தளத்தில் உருவசிலை இறை அருளால் அமையப்பெற்றது.இங்கு வருபவர்கள் அவசியம் அவர்களை வணங்கி ஆசி பெறுங்கள்). என்பேன் எதனால் என்பதைவிட யான் இருக்கும் இடத்தில் அனைத்து சித்தர்களும் வருவார்கள் என்பது மெய். அதனால் யான் சொன்னேன்

பின் நல் முறைகளாக அன்போடு ஏற்படுத்தியது இத்தலம். அவ்வாறு ஏற்படுத்தினால் நிச்சயமாய் அன்போடு நல்முறைகளாகவே எவை வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டே என்னை வணங்கினால் போதும். யான் கொடுப்பேன் அனைத்தும். இதனையன்றி பின் அதைவேண்டும் இதைவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தால் நிச்சயம் அதனை யான் ஏற்க்க மாட்டேன் இத்தலத்தில். அதனால் தான் அன்போடு வாருங்கள் ஏனென்றால் என்னை அன்போடே உருவாக்கியவர்கள் நல் முறைகளாக என் பகத்தர்கள். அதனால் அன்போடுதான் வணங்கவேண்டும்.

ஒழுக்கம் நல் முறைகளாக இருந்துவிட்டால் அவனைத்தன் தேடி அனைத்தும் வந்துவிடும். ஒழுக்கம் இல்லை என்றால் அப்பனே எது வந்தாலும் நிறக்காது என்பேன். அப்பனே இதனால்தான் எவ்வாறு என்பதைக்கூட வள்ளுவன் சிறப்பாக கூறி இருக்கின்றான். அப்பனே ஒழுக்கம் நல்முறைகளாக இருந்து விட்டால் அவனிடம் நற்ப்பண்புகள் பெருகும். பெருகும் அவனிடத்தில் ஆசைகள் இருக்காது என்பேன். இதனால் அன்புடன் இறைவனை வணங்குவான். அனைத்தும் இறைவன் கொடுப்பான் என்பேன்.

அப்பனே நலமாக நலமாக எவை வேண்டுமோ அதை என்னிடமே கேள். யான் யாராவது மூலமாக நல்முறைகளாக பெற்றுத்தருகின்றேன் அப்பனே. என்னிடத்தில் இருக்கும் போது என்னையே கேள் நீ.  அப்பனே நல்முறைகளாக வயதும் கடந்து விட்டது. அப்பனே இன்னும் என்னென்ன தேவை கூறு உந்தனுக்கு.

( இங்கு நாடி அருளாளர் எவை வேண்டும் என்று அந்த வாக்கு கேட்பவரிடம கேட்க்க அதற்க்கு அவர் எல்லோரும் நல்லா இருக்கனும் என்று கேட்க்க உடனே பின்வருமாறு உரைத்தார் மகத்தான அகத்திய மஹரிஷி)

அப்பனே இவை என்றுகூற இதைத்தான் கேட்க வேண்டுமே தவிர தன்பிள்ளைகள் , தன் இல்லங்கள், தன் சொந்த பந்தங்கள் இவை எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் பின் கேட்க்க்கூடாது என்பேன். அவ்வாறு கேட்டாலும் இறைவன் செய்ய மாட்டான். அப்பனே இறைவனே நீ என்று நீ என்று கூட இறைவனே அனைத்தும் உந்தனுக்கே தெரியும் என்று பின் நல்முறைகளாக கேட்டு விட்டால் அனைத்தும் தருவான். ஆனாலும் அறியாத முட்டாள்கள் எதை எதையோ கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். 














குருநாதர் அருளிய வாக்குகளை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். இந்த தொகுப்பில் அற்புதம் இல்லையே என்று தேடுகின்றீர்களா? இதோ. குருநாதர் வாக்கிற்கிணங்க,  வருகின்ற  புரட்டாசி சனிக்கிழமை (14.10.2023) அன்னசேவை மற்றும் வழிபாடு  நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழு சார்பில் நடைபெற உள்ளது. இது எப்படி நமக்கு சாத்தியமாகின்றது? குருநாதர் அருளாலே தான். மேலும் ஒரு அற்புதத்தை இங்கே கூறுகின்றோம். நாளை அன்னசேவை செய்யலாமா என்று யோசித்து கொண்டிருந்த வேளையில், 

( 6.9.2021 மதுரை பசுமலையில் அமைந்துள்ள அகத்திய மஹரிஷி ஆலயத்தில் வாசிக்கப்பட்ட அகத்திய மஹரிஷி நாடி வாக்கு)

யான் இங்கு இருப்பதால் நாள் ( பார்க்க ) தேவை இல்லை .

- அகத்திய மஹரிஷி

( இங்கு குருநாதர் பரிபூரணமாக நிறைந்து உள்ளதால், இங்கு பூசை, அண்ணதானம் செய்ய எந்த நாள், நட்சத்திரம், ஜாதகம் எதுவும் பார்க தேவை இல்லை. இங்கு 365 நாளும் சுப நாள் இங்கு. குரு இருக்கும் இடமே கயிலாயம், மகாமேரு, வைகுண்டம், பிரம்ம லோகம். இங்கு வருபவருக்கு விதியே விலகித்தான் நிற்க்கும். கலி புருஷன் உள்பட. ) 

அனைத்து அடியவர்களுக்கும் பகிர வேண்டுகின்றோம். 

திருச்சிற்றம்பலம்!

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/12.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 48 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/09/48.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 47 - ஓம் அகிலத்தின் அருளே போற்றி - https://tut-temples.blogspot.com/2021/08/47.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 46 - https://tut-temples.blogspot.com/2021/08/46.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 45- அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - மகேஸ்வர பூசை - https://tut-temples.blogspot.com/2021/07/45.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 44 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/06/44.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 41 - ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம்!  - https://tut-temples.blogspot.com/2020/12/41.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்.... - https://tut-temples.blogspot.com/2020/11/40.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

Tuesday, October 10, 2023

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் குருவின் தாள் பணிந்து நம் குழுவின் சார்பில் வழக்கமான சேவைகளுடன் மஹாளய பட்ச சேவையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவை அனைத்தும் குருவின் அருளாலே தான் நடைபெற்று வருகின்றது என்பது கண்கூடாக தெரிகின்றது. மனித முயற்சியால் இது நடைபெறவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். நம்மால் என்ன செய்ய முடியும். ஒன்றுமே செய்ய இயலாது. நாம் வெறும் கருவிகளே. கருவியாய் இருந்து கொண்டே இங்கே நாம் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். இறைவா! அனைத்தும் நீயே என்று சரணாகதி அடைவதை தவிர நம்மால் செய்வது ஒன்றும் அறியோம் பராபரமே! இந்த நிலையில் ஆவணி ஆயில்ய வழிபாட்டை இன்றைய பதிவில் தொட்டுக் காட்ட விழைகின்றோம்.

அன்றைய தினம் மாலை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுக்கு சென்றோம். ஆனால் அன்று காலை ஆவணி ஆயில்ய அழைப்பிதழை சிவத்திரு வேதகிரி ஐயாவிற்கு பகிர்ந்தோம். அன்று அவர் நம்மை அழைத்து கோயில் இருப்பிடம் பற்றி விசாரிக்க, நாம் அதற்கு பதில் கூறிவிட்டு, வேதகிரி ஐயா அன்று மாலை வந்தால் சிறப்பாக இருக்கும் என்று மனதுள் எண்ணினோம். அவரும் அன்று மாலை பிரதோஷ தரிசனம் பெறவும் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் வந்து சேர்ந்தார். நாமும் ஐயாவை மரியாதை செய்ய வேண்டும் என்றெண்ணி துண்டு,பழங்கள் என வாங்கி விட்டு மிக மிக தாமதமாகே சென்றோம். இரண்டு ஆண்டுகள் கழித்து , கூடுவாஞ்சேரியில் குருநாதர் தரிசனம் நேரில் பெற உள்ளோம் என்று உள்ளம் மகிழ்ந்து அனைவரும் ஆயில்ய வழிபாட்டிற்கு தயாரானோம்.



அன்றைய தினம் பிரதோஷம் என்பதால் சிறப்பு அலங்காரத்தில் பெருமானார் தரிசனம் பெற்றோம்.






அடுத்து குருக்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு , ஆயில்ய வழிபாட்டிற்கு தயாரானோம். வழக்கம் போல் அபிஷேகங்கள் நடைபெற்றது. நிறைவாக தீப ஆராதனை நடைபெற்றது. நீங்களும் கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள்.





தீப ஆராதனை பெற்ற பிறகு, சிவத்திரு.வேதகிரி ஐயா அவர்கள் சிறிய சொற்பொழிவு ஆற்றினார்கள். மேலும் அகத்தியர் வழிபாடு மூன்றாம் தொகுதி குருநாதரின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்தோம்.பின்னர் வேதகிரி ஐயா அவர்களை நம் தளம் சார்பில் மரியாதை செய்து, அவரிடம்அகத்தியர் வழிபாடு புத்தகம் கொடுத்தோம். 








அகத்தியர் வழிபாடு நூலுடன் 











பின்னர் மீண்டும் மீண்டும் வந்து, குருநாதரின் தரிசனத்தை பெற்றுக் கொண்டே இருந்தோம். மீண்டும் மீண்டும் எதற்காக வந்தோம்? மீண்டும் ஒரு பிறவி வேண்டாம் அப்பா! என்று மனதுள் உரைக்க தானே! அகத்தியர் ஞானமும் இதைத் தானே கூறுகின்றது. தற்போது பதிவின் தலைப்பையும் உற்று நோக்குங்கள். இதனை அப்படியே அருணகிரிநாதரின் திருப்புகழில் கீழே படித்து மகிழ்வோம்.


ஞானம் பெற திருப்புகழ் 598 காலனிடத்து  (திருச்செங்கோடு)


தான தனத் ...... தனதான

......... பாடல் .........

காலனிடத் ...... தணுகாதே

காசினியிற் ...... பிறவாதே

சீலஅகத் ...... தியஞான

தேனமுதைத் ...... தருவாயே

மாலயனுக் ...... கரியானே

மாதவரைப் ...... பிரியானே

நாலுமறைப் ...... பொருளானே

நாககிரிப் ...... பெருமாளே. 

நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ அருளிய ஞானோபதேசம் செய்த தேன் போன்று இனிக்கும் நல்லமிர்தத்தை எனக்கும் தந்தருள்க!  என்று குருவிடம் வேண்டி பணிகின்றோம். இன்னும் சிந்தித்துப் பார்க்கும் போது கீழே குறிப்புகளாக தருகின்றோம்.

1. அகத்தியர் ஞானம் வேண்டி திருப்புகழ் பாடல் 

2. சிவத்திரு வேதகிரி ஐயா அவர்களின் சொற்பொழிவு 

3. அகத்தியர் வழிபாடு மூன்றாம் தொகுத்து - நூல் வழிபாடு 

4. குருநாதர் முன்பு, TUT கூட்டுப் பிரார்த்தனையில் சிவபுராணம் படித்தோம்.

இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது மீண்டும் மீண்டும் குருவருள் வேண்டி பணிவதை நம் மனம் விரும்புகின்றது.ஆவணி மாத ஆயில்ய தரிசன பதிவாக ஆரம்பித்து, குருவின் ஞானம் வேண்டி முழுமை செய்கின்றோம்.

திருச்சிற்றம்பலம்!

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/12.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

Sunday, October 8, 2023

தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னிற்க, இன்றைய ஆயில்ய வழிபாடு கூடுவாஞ்சேரியில் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. சென்ற மாத ஆவணி ஆயில்ய வழிபாட்டில் நீண்ட நாட்களுக்கு பின்னர் குருநாதரை நேரில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அனைத்தும் அவனருளால் தான் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டிற்கான 108 தீப வழிபாட்டிற்கு குருவிடம் விண்ணப்பம் வைத்துள்ளோம். தினம் ஒரு முருகன் ஆலயம் தொடர்பதிவில் தினம் ஒரு முருகன் ஆலய தரிசனம் கண்டு, திருப்புகழ் படித்து வருகின்றோம். தற்போது வரை அருணகிரிநாதரின் வழியில் 5 திருப்புகழ் திருக்கோயில்  தரிசனம் கண்டு வந்துள்ளோம்.  குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று நித்தமும் முருகப் பெருமானிடம் வேண்டி வருகின்றோம்.

முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!

என்று வேண்டி இன்றைய பதிவில் மீண்டும் முருகப் பெருமான் தரிசனம் காண உள்ளோம்.

 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  

2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - 3 திருப்புகழ் 

3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - 4 திருப்புகழ் 

4. திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - 1 திருப்புகழ்

5. சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் 

6. விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 

7. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 

8.  திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் 

9. வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் 

10. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

11. கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்

தெய்வீக உணர்வை ஏற்படுத்தி அருளுகின்ற  தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் தரிசனம் காண இருக்கின்றோம்.

ஆனந்தம் தரும் தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில்

அருள்மிகு முருகன் திருக்கோவில்

பழனிசெட்டிபட்டி

தேனி-625531

தேனி மாவட்டம்

இருப்பிடம்: தேனி பேருந்து நிலையம் 3 கிமீ, கம்பம் 37 கிமீ

மூலவர்: முருகன்

உற்சவர்: முருகப்பெருமான்

தலமகிமை:

தேனி மாவட்டம் தேனி நகரம் பேருந்து நிலையத்திலிருந்து தேனி-கம்பம் சாலையில் 30 கிமீ தூரத்தில் உள்ள பழனிசெட்டிபட்டியில் ஆனந்தம் தரும் முருகன் கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் இக்கோவிலில் மூலவராக அருளாட்சி செய்கின்றார். இக்கோவில் கம்பம் நகரிலிருந்து 37 கிமீ தொலைவில் உள்ளது.

இக்கோவிலில் முருகப்பெருமானுக்குரிய பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன, கிருத்திகை, சஷ்டி திங்கங்களில் விசேஷ பூஜைகள் உண்டு.

தல வரலாறு:

பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் ஊர் பக்தர்கள் உதவியுடன் நிறுவப்பட்டது.

தல அமைப்பு:

இக்கோவிலின் கருவறையில் மூலவராக முருகன் வடிவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், ஐயப்பன், சிவன், அம்பாள், பெருமாள், தட்சிணாமூர்த்தி. துர்க்கை, நவக்கிரகங்கள் முதலான தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி

பிரார்த்தனை:

ஆனந்தம் கிடைக்க, நினைத்தது நடந்தேற, குடும்ப வாழ்வு சிறக்க, வியாபார சிறக்க, விவசாயம் செழிக்க

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்

திறக்கும் நேரம்:

காலை 7-9 மாலை 5-8


                                             ஆனந்தம் தரும் தேனி பழனிசெட்டிபட்டி முருகன்


                                      நினைத்தது நடந்தேற அருளும் தேனி பழனிசெட்டிபட்டி முருகன்


நினைத்தது நடந்தேற அருளும் தேனி பழனிசெட்டிபட்டி முருகன் திருத்தாள் பணிந்து வணங்குவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

Friday, October 6, 2023

அகத்திய பெருமானின் அருள்வாக்கு! தெய்வத் தீவு ( இராமேஸ்வரம்) செல்வதின் முக்கியத்துவம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் மகாளயபட்ச சேவை கடந்த 6 நாட்களுக்கும் மேலாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நம்மால் இங்கு ஆவது ஒன்றும் இல்லை. இறைவா! அனைத்தும் நீயே !! என்று மனதுள் இருத்தி ஒவ்வொரு நாளும் தற்போது கடந்து வருகின்றோம். இந்த நிலையில் சித்தன் அருள் தளத்தின் வாயிலாக தெய்வத் தீவாக கருதப்படும் இராமேஸ்வரம் செல்வதின் முக்கியத்துவத்தை இன்றைய பதிவில் தருகின்றோம். அன்பர்கள் நன்கு கவனித்து, உள்வாங்கி இராமேஸ்வரம் வழிபாடு செய்யும்படி வேண்டி பணிகின்றோம்.





28/09/2023 (வியாழன்) அன்று அகத்திய மாமுனிவர் இட்ட உத்தரவு - ஜீவநாடி வழியாக :

 மகாளய பட்ச காலங்களில், வருகிற மகாளய அமாவாசை அடுத்து வரும் மூன்றாம் பிறை தரிசன நாள் வரை (17/10/2023 - செவ்வாய்) செய்ய வேண்டிய தர்மகாரியங்களாக அகத்திய மாமுனிவர் உரைத்த ஜீவநாடி வாக்கு :

 29/09/2023 (வெள்ளி) முதல் 17/10/2023 (செவ்வாய்) வரை செய்ய வேண்டிய தர்மகாரியங்கள் :
1. தினந்தாேறும் காேமாதாக்களுக்கு அகத்திக்கீரை உணவாக அளிக்க வேண்டும்.
2. தினம் இயலாதவர்களுக்கு உணவு (அன்னதானம்) அளிக்க வேண்டும்.
3. தினம் வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு, நீர் வழங்கிடுதல் வேண்டும்.
4. இந்த புரட்டாசி மாதத்தில் கங்கை, காவேரி, தாமிரபரணி, நர்மதா, காேதாவரி பாேன்ற புண்ணிய நதிகளில் நீராட வேண்டும்.
5. காக்கும் கடவுளான பெருமாளை (விஷ்ணு பகவான்) இந்த புரட்டாசி மாதத்தில் நல் முறையாக விரதம் இருந்து வழிபட்டு வர வேண்டும். எதற்கென்றால் காக்கும் கடவுள் (பெருமாள்) விஷ்ணு முக்தி பெறாத ஆன்மாக்களை முக்தி பெற செய்வார்.
6. எந்த உயிரையும் கொல்லாமல் கொன்று புசிக்காமல் ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்து வரவேண்டும்.

 இவ்வாறு அகத்திய மாமுனிவர் கடந்த 28/09/2023 (வியாழன்) அன்று ஜீவநாடி மூலம் வாக்கு உரைத்துள்ளார்.மகாளய பட்ச காலங்களில் (29/10/2023 - வெள்ளி) தொடங்கி, அமாவாசை வரை செய்திட்டு அப்பனே அமாவாசை பின் மூன்றாம்பிறை வரை செய்து மூன்றாம் பிறை தரிசனம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே! இப்படி என் (அகத்தியன்) பக்தர்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!  -சுபம்- 
குருவே சரணம்! 

குறிப்பு : 29/09/2023 (வெள்ளி) முதல் 17/10/2023 (செவ்வாய்) வரை, இந்த நற்காரியங்களை செய்ய, பக்தர்களுக்கு அகத்திய மாமுனிவர் ஜீவநாடி வாயிலாக உத்தரவு இட்டுள்ளார்.

அகத்திய பிரம்ம ரிஷி பாதம் காப்பு 

ஒரு மனிதனை மிக வேகமாக கீழே அதள பாதாளத்தில் தள்ளிவிடுவது 3 முக்கிய கர்மாக்கள். 
இந்த மூன்றும் அவனது வாழ்க்கை எனும் பாத்திரத்தில் உள்ள 3 பெரிய ஓட்டைகள். (கீழே கொடுக்கப்பட்டுள்ள சதவிகிதம் ஒரு தோராயமே - புரிதலுக்காக) 
1) பித்ரு கர்மா (70%) ( இந்த தளத்தில் உள்ளது போல் வழிபட இந்த மிகப்பெரிய ஓட்டை குரு அருளால் அடைபடும்) 
2) வம்சத்தின்/குலத்தின்/பரம்பரையின் பூர்வ பாவங்கள் (15%) 
3) அந்த தனி மனித ஆத்மாவின் பூரவ ஜென்ம பாவங்கள்.(15%)

இந்த  ஓட்டைகளை அடைக்காமல் எந்த மகத்தான முன்னேற்றமும் ஒரு மனிதனின் வாழ்வில் சாத்தியமாகாது. ஓட்டை பாத்திரத்தில் நீர் ஊற்றுவது போல. நம்மை தாக்கும் எதிரிகள் இந்த மூவர் கூட்டணி . அதள பாதாளத்தில் உள்ள நம் அனைவரின் வாழக்கையில் அதி மிக உச்ச இமாலய வெற்றி கொள்ள இந்த மூவரையும் அழிக்க வேண்டியது அவசியம். குருநாதர் இதனை பல வாக்குகளில் உணர்த்தி, அறிவுறுத்தி நம் அனைவரையும் நல் வாழ்வு வாழ வைக்க அருளுகின்றார். நாம் அனைவரும் குருநாதருக்கு ஒரு எறும்பு போல. இருப்பினும் நமக்கு , மனித குலத்திற்க்கு இந்த வழிமுறைகளை அருளுகின்றார். சித்த கருணாமூரத்தியான அகத்திய பிரம்ம ரிஷியின் கருணையோ கருணை.  

இந்த தளத்தில் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த படி அனைவரும் அடிக்கடி இராமேஸ்வரம் சென்று வழிபட்டு வெற்றி வாகை சூடுங்கள். உங்கள் குடும்பத்தில் சந்தோசங்கள் பொங்கி வழியட்டும். தலை நிமிர்ந்து பெருமையுடன் வாழ்க வளமுடன். குரு இருளால் இந்த வாக்கை அடுத்தவருக்கு எடுத்து சொல்லி புண்ணியத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இந்த வாக்கை அனைத்து தளங்களிலும் இட உதவுங்கள். தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கும் கொண்டு சேரக்க உதவுங்கள். இந்த மகத்தான செய்தியை அனைவருக்கும் பரப்புவது தமிழகமே கூடி ஒரு பெரிய தேர் இழுப்பது போல. ஓவ்வொருவரும் குறைந்த பட்சம் 108 நபர்களுக்கு பேசி புரிய வையுங்கள். அனைவரும் நன்றாக வாழட்டும். 

உலகம் இதுவரை அறியாத இராமேஸ்வர ரகசியம். எப்படி ஒருவர் வாழ்வில் சந்தோசங்கள் உண்டாகும் என்ற அதி சூட்சும ரகசிய வாக்கு. இந்த வாக்கை அனைத்து இனைய தளங்களிலும் பகிர வேண்டுகின்றோம். உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருடமும் அவசியம் பகிரவும். அவர்களிடம் எடுத்து கூறவும். மகத்தான, மகிமை புகழ் வாக்கு. அனைவரும் இதனை பின்பற்றி அவர்கள் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ உதவுங்கள் ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!! 


(சமீபத்தில், அடியவர் ஒருவர் இராமேஸ்வரம் செல்வது குறித்த கேள்வியை குருநாதர் அகத்தியப் பெருமானிடம் நாடியில் கேட்ட போது, உலகோர் நன்மைக்காக இதுவரை உலகம் அறியாத இரகசிய வாக்கு ஒன்றை அருளினார். அந்த வாக்கு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்)




ஆதி ஈசனின் பொற்கமலத்தைப்பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அம்மையே, அப்பனே அனைவரும் கேட்டுக்கொள்ளுங்கள். இராமேஸ்வரத்திற்கு எதற்கு போகச் சொன்னேன்? எதை என்றும் அறிய அறிய அதுவே கடைசி எதை என்றும் அறிய அறிய பின் ஈர்ப்புத்திறன் அதாவது எதை என்றும் புரியாமல் அளவிற்கும் கூட தனுஷ்கோடி எதை என்றும் புரியப்புரிய அங்குதான் இவ் ஆன்மாக்கள் (முன்னோர்கள்) அனைத்துமே தேங்கி நிற்கும். ஒரு சக்தியானது எதை என்றும் கூற இவ் ஆன்மாகளை அங்கு இழுத்துக் கொள்ளும். எதை என்றும் கூற அடுத்த படியாக எவை என்றும் பின்பற்ற அங்கு சென்றால் எதை என்றும் அறிய அறிய (தனுஷ்கோடி) அருகே சென்றால் உங்களுக்கும் எதை என்று அறிய அவ்சக்திக்கும் நிச்சயம் ஈர்ப்பு விசை ஏற்பட்டு மீண்டும் எதை என்று கூற அவ் ஆன்மா (முன்னோர்கள்) ஆனது உன்னிடத்தில் வந்து பின் பிறவி எடுக்க வில்லை என்றாலும் எதை என்றும் பின்பற்றி நிச்சயம் வேறு வேறு உயிருக்கு அதாவது எதை என்றும் புரியப்புரிய அப்படியே அவ் ஆன்மா மாறிவிடும் (பிறவி எடுத்துவிடும்) . (அப்படி பிறவி எடுக்கவில்லை) இல்லை என்றால் எதை என்றும் அறிந்து அறிந்து அங்கு நீ செல்கின்றாயே உள்ளே (அன்னை பர்வதவர்த்தினி உடனுறை ஆதி ஈசன் இராமநாத சுவாமி) ஈசனிடத்தில் பின் அது சரணாகதி (முக்தி) அடைந்து விடும். இது யாருக்குமே தெரிவதில்லை. அதனால்தான் அங்கு போகச் சொல்கின்றேன். போகச் சொல்கின்றேன்.

(முதலில் தனுஷ்கோடி அடிக்கடி சென்று பின் ஆதி ஈசன் இராமநாத சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைந்து மனிதர்கள் வாழ்வில் சந்தோசங்கள் ஏற்படும்)


(இங்கு மீண்டும் அம்மை ஒருவர் இது தொடர்பாக கேட்க)

அதனால் அம்மையே எதை என்றும் அறிய அம்மையே எதை என்றும் புரியப்புரிய பல கஷ்டங்கள் (உந்தனுக்கு உள்ளது) அம்மையே அவ் ஆன்மா அங்கு அலைந்து கொண்டு இருந்தது என்பேன். எதை என்றும் அறிய அறிய (இது போல இராமேஸ்வரத்திற்கு ) அதாவது (அடிக்கடி) சென்று கொண்டே இரு. (அவ் ஆன்மா உன்னிடத்தில் வந்து உன்னை ) ஈர்க்கும். இறைவனிடத்தில் விட்டு விடு. அப்பொழுதுதான் (உனக்கு) சந்தோசங்கள் (உனது வாழ்வில் உண்டாகும்).

அடியவர் கேள்வி:- எனது தம்பி ஈசனிடம் முக்தி அடைந்து விட்டாரா?

அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய (உனது தமையன் முக்தி அடையாமல்)  அலைந்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. (இராமேசுவரத்திறக்கு அடிக்கடி) சென்று கொண்டே இரு அப்பனே. எவை என்று கூற யான் பார்த்துக் கொள்கின்றேன். அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இதன் ரகசியங்களும் முன்னே எதை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுது புரிகின்றதா? அப்பனே. அங்கேயே தான் இருக்கின்றான் அப்பனே.



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சித்தன் அருள் - 1353 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2023/09/1353.html

ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 - https://tut-temples.blogspot.com/2023/09/26102023.html

 சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html