"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, August 10, 2021

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்று மதியம் முதல் இன்று காலை 11 மணி வரை ஆடிப் பூரம் ஆகும். ஆடிப்பூரம் என்றாலே நமக்கு நம்மை ஆளும் ஆண்டாள் தான் எண்ணத்தில் இருக்கின்றார். இதனையொட்டியே இன்றைய பதிவில் நாம் சிந்திக்க இருக்கின்றோம். இன்றைய பதிவில் மேலும் சிறப்பாக ஸ்ரீ ஆண்டாள் தரிசனம் பெற இருக்கின்றோம்.

சுமார் 1 மாதம் முன்பு நாம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் சென்று தரிசனம் செய்தோம். அன்றைய தரிசனத்தில் நாம் ஸ்ரீ ராமானுஜர் உலக உயிர்களுக்காக நாராயண மந்திரத்தை வெளிப்படுத்திய இடம் சென்று தரிசனம் செய்தோம். பின்னர் சற்று விரைவில் தரிசனம் செய்யும் பொருட்டு ஸ்ரீ ஆண்டாள் சன்னிதி சென்று தரிசனம் செய்யாமல் விட்டு விட்டோம். இது மனதுள் ஒருவித சஞ்சலத்தை தந்தது. அடுத்து அன்று கோயிலில் பட்டாச்சாரியார் நீங்கள் ஒரு நாள் சேவை செய்யலாம் என்று கூறியது நினைவிற்கு வர, இன்றைய ஆடிப் பூரத் திருநாளில் நம் தளம் சார்பில் லோக ஷேமத்திற்காக வழிபாடும். ஸ்ரீ ஆண்டாள் வழிபாடும் இன்று குருவருளால் நடைபெற்று வருகின்றது.

என்னே! குருவின் அருள்! ஸ்ரீ ஆண்டாள் தரிசனம் பெற இயலவில்லையே என்ற ஏக்கம் இன்றைய பதிவில் மூலம் சரி செய்ய உள்ளது. ஆம். ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர உற்சவம் தரிசனம் நமக்கு நேற்று கிடைத்தது. ஒரு நாள் தரிசனம் பெறவில்லையே என்ற ஏக்கம் இன்று தீர்ந்தது. நீங்களும் தரிசனம் செய்து அன்னையிடம் வேண்டுங்கள்.

இன்றைய நன்னாளில் அன்னையை தொழுது அன்னையின் அன்பை பெறுவோம்.

இன்றோ திருவாடிப்பூரம்- எமக்காக
வன்றோ இங்காண்டாளவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்தவான்போகந்தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

ஆம். இன்று ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்த நாள். இந்நாளில் நம் மனதை திறப்போம். ஆண்டாள் நம்மை கொஞ்சம் ஆளட்டும். நம்மை ஆண்ட ஆண்டாள் படைத்த திருப்பாவை தொகுப்பை முழுதும் தருகின்றோம்.





ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.

மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு குழந்தையாக துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சமேத அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், கண்டெடுத்த குழந்தையை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும்.









ஆண்டாள், "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக அனைவராலும் போற்றப்படுகின்றது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

மீண்டும் பல முறை ஸ்ரீ ஆண்டாள் தரிசனம் பெற இருக்கின்றோம்.




















இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது. 


திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே


     திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

     பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

     பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

     ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே

     உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே

     மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே

     வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

மீள்பதிவாக:-

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - திருஆடிப்பூரம் வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_23.html

 கூடுவாஞ்சேரி திருஆடிப்பூரம் திருவிளக்கு பூஜை, ஆடித்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_92.html

நம்மை ஆண்டாள் - ஆண்டாள் திருவடிகளே சரணம் ! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_78.html

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி.. - 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/2020.html

 மார்கழி சிறப்பு பதிவு : திருப்பாவையும், திருவெம்பாவையும் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_17.html

 ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html

Monday, August 9, 2021

ஆடி அமாவாசை - இறை வழிபாடும், இறைப்பணியும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஒவ்வொரு மாத அமாவாசை அன்று குருவருளால் மோட்ச தீப வழிபாடு செய்து வந்தோம். கடந்த 4 மாதங்களாக இந்த வழிபாடு லோக ஷேம தீப வழிபாடாக நடைபெற்று வருகின்றது. இம்மாத அமாவாசை தீப வழிபாட்டோடு ஆயில்ய நட்சத்திரமும் சேர்ந்தது . இதனையொட்டி, கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.08.2021) அன்று மாலை நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு வழிபாடும், லோக ஷேம தீப வழிபாடும் நடைபெற்றது. மேலும் ஆடி மாத குருநாதரின் அருள்நிலைகளை பல கோயில்களில் இருந்து இந்தப் பதிவின் மூலம் பெற இருக்கின்றோம்.


முதலிலே குருநாதர் தரிசனம் அனைவரும் பெற்றுக் கொள்வோம்.





அன்றைய தினம் வழக்கமாக மாலை சுமார் 6 மணி அளவில் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் லோக ஷேமத்திற்காக தீபமேற்றி , அர்ச்சனை செய்து வழிபாடு செய்தோம். நன்றாக குருநாதரின் அருள்நிலைகளை பாருங்கள். கண்களை திறந்து நம்மை பார்ப்பதை நன்கு உணர முடிகின்றது. குருநாதரின் தரிசனம் அவ்வளவு எளிதில் கிடைக்குமா என்ன? குருநாதரின் வாக்கினை அப்படியே இங்கு தருகின்றோம்.

நான் இப்பொழுதும் பூமியில்தான் வலம் வந்து கொண்டு இருக்கின்றேன். என்னுடைய பக்தர்களை ஒவ்வொருவரையும் பார்த்து நல்லது செய்து கொண்டே வந்து இருக்கின்றேன். நீங்கள் அனைவரும் புண்ணியரே! பல பிறவிகளில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே என் பெயரை உச்சரிக்க முடியும் என்னை வணங்கவும் முடியும்.

இதனை உள்வாங்கிக் கொள்ளுங்கள். ஆம். ஓம் அகத்தீசாய நம என்று குருவின் நாமம் சொல்வதற்கு நாம் புண்ணியம் செய்தால் மட்டுமே சொல்ல முடியும். இதற்கு நாம் ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோருக்கு நன்றி கூறி, வணங்கி கொள்ளுங்கள். இப்பிறப்பில் இவர்களின் பிள்ளைகளாய் பிறந்ததினால் தான் நமக்கு நம் குருநாதர் கிடைத்துள்ளார். இல்லையேல் வேறு மாதிரி நம் வாழ்க்கை இருந்திருக்கும் அல்லவா? 

அடுத்து சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலில் இருந்து தரிசனம் பெற இருக்கின்றோம்.







அடுத்து பனப்பாக்கத்தில் இருந்து தரிசனம் பெற உள்ளோம்.


ஆடி மாத ஆயில்ய நட்சத்திர பூஜையில் ஐந்து முக ருத்ராட்சம் மாலையோடு காட்சியளிக்கின்றார் 
ஸ்ரீ அகத்திய பெருமான்.


பிரபஞ்ச சத்குரு ஓம் ஸ்ரீ அகத்தியர் மா மகரிஷி ஆடி அமாவாசை & ஆயில்ய நட்சத்திரம் குரு பூஜை தரிசனம் பெற இருக்கின்றோம்.

TWIN TOWER TEMPLE KL ECO CITY 










அடுத்து பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞான இல்லத்தில் இருந்து குருநாதர் தரிசனம் பெற இருக்கின்றோம்.




நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது அல்லவா? ஆம். இங்குள்ள ஒவ்வொரு கோயிலின் அருள்நிலை பற்றி பேச நமக்கு இந்த ஒரு பதிவு பத்தாது. குருநாதரின் வாக்கை கடைப்பிடிக்க அவரிடமே வேண்டுவோம். இன்னும் நாம் தொண்டு செய்ய குருவே..நீவீர் அருள் காட்டுங்கள்.

அடுத்து இறைபணியாக அன்னசேவை பல இடங்களில் நடைபெற்றது. இன்று 30 நபர்களுக்கு கூடுவாஞ்சேரியில் அன்னம் வழங்கப்பட்டது. ஓம் அகத்தீசாய நம...


அடுத்து நம் தளம் சார்பில் திருஅண்ணாமலை, திருவள்ளூர் போன்ற இடங்களில் நடைபெற்ற அன்னசேவையில் நாம் பொருளுதவி செய்து இணைந்தோம்.அடுத்து சதுரகிரியில் குடிநீர் தானம் செய்யும் பொருட்டு குருவருளால் பணிக்கப் பெற்றோம். மேலும் காந்திகிராம் சௌபாக்கியா அமைப்பில் உள்ள 150 குழந்தைகளுக்கு வடை, பாயாசத்தோடு மதிய உணவு வழங்கினோம். அன்று பசு மாட்டிற்கு வாழைப்பழங்கள் கொடுத்தோம். 


இவ்வாறு ஆடி மாத இறை வழிபாடும், இறைப்பணியும் குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. கருணை உள்ளதோடு நிதி உதவி அளித்துவரும்  அனைத்து நல் உள்ளங்களுக்கும் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவின்  சார்பாக நன்றி கூறி பதிவை நிறைவு செய்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஆடி அமாவாசை - ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்க வேண்டிய பக்திக் கதை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_90.html

விதியினிதான் நமக்கேது குறுமுனி நம் காப்பாமே! - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post_22.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு அறிவிப்பு - 20.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/20072020.html

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_84.html

 முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_83.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2019/06/21.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

Wednesday, August 4, 2021

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 46

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. இந்த பெருந்தொற்று காலத்தில் நம் தளம் சார்பில் குருநாதரின் அருளால் பல இடங்களில் சேவை செய்து வருகின்றோம். வழக்கமான இம்மாத சேவைகளுடன் ஆடி அமாவாசை வழிபாடும் சேர்ந்து உள்ளது. 

1. ஆடி அமாவாசை அன்னதானம்  - திருஅண்ணாமலை 

2. ஆடி அமாவாசை அன்னதானம் - ஸ்ரீ ஆதி சிவன் டிரஸ்ட் 

3. ஆடி அமாவாசை அன்னதானம்- தயவு ஆஸ்ரமம் 

4. மாத அன்னசேவை -  எத்திராஜ் சுவாமிகள் மூலம் முதியோர்களுக்கு 

5. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் மாத சேவை

6. கும்பகோணம் சுரேஷ் ஐயா அவர்களின் மகன் கல்வி உதவி 

7.தர்ம சிறகுகள் குழு மாத சேவை 

8. ஆடி அமாவாசை அன்னதானம் - சேலம் சபரி ஐயா அவர்கள் 

9. திண்டுக்கல் செல்வம் - அரிசி மூடை - நித்ய அன்ன சேவை 

10. சுகம் தரும் சுந்தர காண்டம் - 11 - தானமாக 

இவை அனைத்தும் தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். இங்கு நாம் சில சேவைகளை மட்டுமே சொல்லி இருக்கின்றோம். கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு போன்று இன்னும் இந்த மாத சேவைகள் உள்ளது.சிவத் தொண்டுகள் புரிவதற்கு  நன்கொடை கொடுத்து உதவும் நல் உள்ளங்களின் கர்ம வினை முடிச்சுகளை நிச்சயம்  அவிழ்ப்பார் ஈசன். கருணை உள்ளதோடு நிதி உதவி அளித்துவரும்  அனைத்து நல் உள்ளங்களுக்கும் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவின்  சார்பாக நன்றி தெரிவிக்கிறோம். 

இந்த கலியுகத்தில் கர்மத்தின் வலி குறைய தர்மம் செய்வது ஒன்றே வழி ஆகும். இதனை குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்காக கீழே தருகின்றோம்.


இது தான் இப்போதைய தேவை..அகத்தியமே சத்தியம். சத்தியமே அகத்தியம். இதனுடன் தர்மத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.இவை இரண்டையும் நாம் கைக்கொண்டால் நம்மைத் தேடி இறை வரும் என்பதே உண்மை. இனி இன்றைய  ஜீவ நாடி அற்புதங்கள் பகுதிக்கு செல்வோமா?

ஒருவர் என்னிடம் முதன் முறையாக வந்து நாடி படிக்க வேண்டும் என்றார். எனக்கு நன்கு தெரிந்தவர்தான். விவசாயத்தைத் தொழிலாகச் செய்து வருகிறார். சரி ஞானஸ்கந்த மூர்த்தியை பிரார்த்தனை செய்து ஜீவநாடி சுவடியைப் பிரித்து பாடல் வடிவில் வந்ததைப் படித்தேன்.

“இன்னவனும் ​இந்நேரம்

அரவிலே ஆபத்தை

எதிர்நோக்கியுள்ள நேரம்

ஆலயம்போல் உண்டு ஒன்று

கருப்பதுவும் உண்டு கேள்

கச்சிதமாய் சேவித்து

தீபமதை ஏற்றி வைத்து

பூஜித்து வா

ஆபத்துமது அருகிலுண்டு

ஆனாலும் கருப்புண்டு

காப்பாற்றும் செல்!

ஆசி”


என்ற பாடல் வந்தது. அதாவது வந்து அமர்ந்து இருக்கின்ற இவனுக்கு விரைவில் அரவு என்று சொல்லக்கூடிய பாம்பினால் ஆபத்து வரும். அதே நேரத்தில் இவர்கள் விவசாய பூமியில் ஆலயம் உண்டு. அங்கு கருப்ப  என்று சொல்லப்படும் கருப்பண்ண சுவாமி உண்டு. அதற்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர வருகின்ற ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவாய் ஆசி! ஆசி!

எனச் சொல்லப்பட்டது. வந்தவர் தனியாக வரவில்லை. அவருடன் 4 பேர் வந்திருந்தார்கள். அப்போது எனக்கு வயது 18 தான் ஆனது. சிறுவனான என்னிடம் வாக்கு கேட்டு விட்டு வந்தவர் காணிக்கை என்றார். எனக்கு எப்போதுமே பண ஆசையில்லை. வருகின்ற பணத்தை ஏதேனும் ஆலயப்பணிக்கு சேமித்து வைத்து பயன்படுத்துவது வழக்கம். எந்த காணிக்கையும் கேட்கவில்லை. இவர் தனது சட்டைப் பைக்குள் கையை விட்டு ரூ.500ஐ எடுத்து தட்டில் வைக்கப் போனார், அவரது உறவினர் ஒருவர் திடீரென எழுந்து வந்து வேண்டாம். அவர் காணிக்கை கேட்கவே இல்லை. தர வேண்டாம் செல்லலாம் என்றார். 

வந்தவருக்கு மனதிருப்தி உண்டாகவில்லை. அவரது உறவினரும் விடுவதாக இல்லை. எனக்கு சற்று மனநிலை மாறியது. சட்டென சுவடியை கட்டி வைத்து விட்டுச் சென்று விட்டேன்.காரணம் பணம் தரவில்லை என்கின்ற வருத்தமில்லை. சித்தர்களை ஒரு பிள்ளைப் பூச்சி போல் பாவித்து உற்ற மரியாதை தராவிட்டல் அந்த பாவம் எனக்குமல்லவா வந்து சேரும். என்வே கோபம் வந்துவிட்டது. எனது வாயில் எது சொன்னாலும் பலித்து விடும். என்வே கோபத்தால் ஏதேனும் சொல்லி விட்டால் என்ன செய்வது என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். சிறிது நேரம் கழித்து அவர்களும் சென்று விட்டார்கள். நானும் இந்த சமபவத்தை மறந்துவிட்டேன்.



சுமார் ஒரு மாதம் கழித்து அன்று வந்தவரின் உறவினர் அதாவது காணிக்கை போட வேண்டாம் என்று தடுத்தவர் ஓடி வந்தார். ஐயா மிகவும் அவசரம் நாடி படிக்க வேண்டும் என்றார். யாருக்கு என்றேன்? அன்று நான் அழைத்து வந்தேனே அவருக்குத் தான் படிக்க வேண்டும் என்றார். ஏற்கனவே அவமதித்து இருந்ததால் இப்போது யாருக்கும் படிப்பதில்லை என்று சொல்லி விட்டேன். மிகவும் கதறிய நிலையில் ஐயா அப்படி சொல்லாதீர்கள். அன்று நாங்கள் நடந்துக் கொண்டது தவறு தான்.

அதற்கான தண்டனையினைப் பெற்று விட்டோம்,. பெரிய மனது செய்து நாடி படித்து சொல்லுங்கள் என்றார். என்ன தண்டனை? என்ன விபரம்? எனக் கேட்டேன். ஐயா அன்று தங்களிடம் நாடி கேட்டு விட்டு அவர் காணிக்கை தர வந்தார். அந்த காணிக்கையை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதால் தான் அதை நான் தடுத்தேன். ஆனாலும் தண்டனை அவருக்கு கிடைத்து விட்டது.

விவசாய பூமியில் இரவில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் இவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு கருநாக பாம்பு எங்கிருந்தோ வந்து இவரை தீண்டி விட்டது. நீங்கள் அன்று படித்தது அப்படியே 100% நடந்து விட்டது. இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.மருத்துவர்கள் கைவிடும் நிலையில் இருக்கிறார். உடல் முழுவதும் நீல நிறமாக மாறிவிட்டது. மிகவும் துயரத்திலும் ஆபத்திலும் இருக்கிறார்.

இராகு திசையில் இராகு புத்தி நடக்கிறது. இராகு 6ல் உள்ளார். எனவே விஷ கிரகம் என்று ஜோதிடத்திலும் சொன்னீர்கள், நாடியிலும் சொன்னீர்கள்தோட்டத்தில் கருப்பசாமி உண்டு என்பதும் உண்மை. ஆனால் அவர்கள் தீபமேற்றி வழிபடவேயில்லை. எனவே அந்த கருப்பசாமி
இவர் உயிரை மீட்டுத் தருவாரா? என்பதும் சந்தேகமே. தங்களை சிறுவன் என நினைத்து பிழை செய்து விட்டோம். மன்னித்து ஒரு வழிகாட்டுங்கள்என கண்ணீர் விட்டு கதறியதைப் பார்த்து மனமிறங்கி வருவதற்குள் எனது குடும்பத்தினர் இதை கேட்டு விட்டு படித்துச் சொல்லவும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். சரி தவறை உணர்ந்து விட்டார்கள் தண்டனையும் பெற்று விட்டார்கள். இதன் பின்பு நமது நாடி மூலம் நலம் கிட்டும் என்ற பிராப்தம் இருந்தால் கிட்டும் என்று சொல்லி குறித்து, மந்திரம் ஜெபித்து, தியானித்து பூஜித்து தவறுக்கு சிறு காணிக்கை வைத்து சித்தர்களை சிந்தையில் வைத்து ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவநாடியைப் பிரித்தேன். பின்வரும் பாடல் வந்தது.

 “ஆபத்து வந்ததுவும்

அன்றே உரைத்தோம்

ஆனாலும் அபசாரம்

அது நேர்ந்ததால்

ஆபத்தும் நேர்ந்தது

அய்ந்தின் மடங்கு

அவசர செலவு செய்

அவசியம் தவறாமல்

அர்ச்சித்து வா கருப்பை

கரை சேர்வாய்

ஆசி! ஆசி! ஆசி!

என்று மிகச் சுறுக்கமாக மிக அற்புதமாக அருள்வாக்கை ஜீவநாடியில் அள்ளி வீசினார் ஆறுமுகப் பெருமான். அன்று செய்தது அபசாரம் என்பதையும் சுட்டிக் காட்டினார். ரூ.500/- கொடுப்பதற்கு ஆயிரம் முறை யோசித்து அதையும் கொடுக்காமல் சித்தர்களை அவமதித்ததால்அந்த 5ன் மடங்கு வரை செலவு செய்ய வேண்டும். அவசர சிகிச்சை தீவிரமாக செய்தால் விஷம் இறங்கி அவர் வாழ்வு மீளும். அதே போல் அந்த கருப்பசாமியை அர்ச்சித்து வர வேண்டும் என்று சொல்லி விபூதி, எலுமிச்சை கொடுத்து ஆசி கூறி அன்புடன் வழி அனுப்பி வைத்தேன்.


எந்த அவசரமானாலும் தொடர்பு கொள்ளுமாறும் சொன்னேன். அவரும் பூரண திருப்தியுடன் சென்று அதேபோல் செய்கிறேன் என்று வேகமாக மீண்டும் ஒரு மாதம் கடந்து பாதிக்கப்பட்ட அந்த நபர் தனது குடும்பத்துடன் அவரது உறவினரான மூவரையும் கூட்டிக் கொண்டு நமது முருகன் ஆலயத்திற்கு வந்தார். அப்போது அருள்வாக்கு மேடையும் சுயம்பு முருகன் சிலை மட்டுமே உள்ள மிகச் கிறிய கோவில் அங்கு அமர்ந்தே ஜீவநாடி அருள்வாக்கு சொல்லுவது வழக்கம். இப்போது பெரிய ஆலயம் கட்டப்பட்டு விட்டாலும் அந்த அருள்வாக்கு மேடையில் தான் இப்போதும்  அமாவாசையில் நாடி சொல்லப்படுகிறது.


எனது குடும்பத்தினரும் கூடி சுமார் 30 பேர் ஆலயத்தில் கூடி விட்டார்கள். என்ன விஷயம் என்றேன். பெரிய மாலை போட்டு வஸ்திரம் சாற்றி, சால்வையெல்லாம் போட்டு சில ஆயிரங்கள் தட்சணை வைத்து பழங்களுடன் கொடுத்து குடும்பமே சாஷ்டாங்கமாக விழுந்து ஐயா வயதில் சிறியவராக இருந்தாலும் தாங்கள் ஒரு சித்தர் பிறவி என்பதை நாங்கள் உணர்ந்து விட்டோம். எங்களை மன்னித்து ஆசிர்வதியுங்கள்.


எனக்கு எப்போதுமே தற்பெருமையோ, தலைக்கணமோ இல்லை. நன்றாக வாழ்வீர்கள் எழுந்திருங்கள் என எழுப்பி சித்தர்களையும் முருகப் பெருமானையும் அவமதிப்பது குற்றம். எனக்கு சூட்டிய மாலை மரியாதை அத்தனையும் அந்த முருகனுக்கே அர்ப்பணம். நான் சித்தர் பிறப்பு அது இது என்று எப்போதும் சொல்லிக் கொள்வதில்லை. நான் மிக மிக மிக சாதாரண மனிதன். ஆனால் சித்தர்களும் முருகனும் அப்படியில்லை.

அவர்களுக்குத் தர வேண்டிய மரியாதையை எப்போதும் தர வேண்டும். ஏதோ வந்தோம் கேட்டோம் என்று விளையாட்டாக இருப்பது பல அபசார தோஷங்களை ஏற்படுத்தி விடும். அதனால் தான் அபூர்வமாக சிலருக்கு மட்டும் நாடி உரைக்கிறேன். கலியுகத்தில் ஏராள சிக்கல் இருப்பதால்
சோதனை செய்யாமல் நாடி உரைப்பதில்லை. சித்தர்கள் அனுமதி தராமல் நாடி படிப்பதில்லை. பணத்திற்கு ஆசை பட்டும் உரைப்பதில்லை என்பது என்னை சந்தித்து வருபவர்கள் அனைவரும் அறிந்த விஷயம்.


சரி என்ன நடந்தது சொல்லுங்கள் என்றேன். ஐயா தாங்கள் ஜீவ நாடியில் சொன்னது போல் 5ன் மடங்காக 5 லட்சம் செலவு செய்த பின்பே உயிர் பிழைத்து வந்து தங்கள் முன்பு நிற்கிறேன். இனி காலம் பூராவும் ஞானஸ்கந்த மூர்த்திக்கு சேவை செய்கிறேன். என்றார். வாசகர்களுக்கு ஒரு
சந்தேகம் வரலாம். சித்தர்கள் 500 ரூபாய்க்கு ஆசைப்படுவார்களா? என்று இந்த இடத்தில் மிகக் கவனமாக யோசிக்க வேண்டும். தட்சிணை என்பது மன நிறைவுக்காக நாம் தருகின்ற மரியாதை. அது எவ்வளவாக இருந்தாலும் மன நிறைவோடும், மரியாதையோடும் தர வேண்டும் என்பது நாடியில் வாக்கு கேட்டுவிட்டு அந்த நாடியை அவமதிக்கும் வகையில் சொல்லுவது தான் குற்றம். எனவே சித்தர்கள் பணத்திற்கு மயங்க மாட்டார்கள். அதே சமயம் மரியாதைக் குறையை அவர்கள் விரும்புவதில்லை. ரூ.5 லட்சம் செலவு செய்தேன் என்பவர்கள் டாக்டர் கேட்ட அத்துணை பணத்தையும் கொடுத்தவர்கள் சித்தர்களுக்குத் தருகின்ற தட்சிணை விஷயத்தில் ஏன் தவறு செய்ய வேண்டும். பேருந்தில் ஏறி ரூ.5/- கொடுத்தால் தான் பயணம் செய்ய முடியும் எனும் நிலையில் ரூ.4.99 பைசா கொடுத்து 1 பைசா இல்லை என்றாலும் பயணிக்க முடியுமா?

சித்தர்கள் வாக்கு என்ன அவ்வளவு கீழாகவா போய் விட்டது? அதேபோல் ஜோதிடம் மூலம் பணம் வாங்கினால் தரித்திரம் பிடிக்கும் என்று மெத்தப் படித்த மேதாவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் சொல்கிறார்கள். கள்ளச் சாராயம் திருட்டு  போன்ற கீழ்நிலைத் தொழில்களோடு இலஞ்சம் வாங்கி, ஊரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் மட்டும் பணம் சம்பாதிக்கலாமா? அது தரித்திரம் இல்லையா? அது தான்
தரித்திரம். 

ஜோதிடம் மூலம் வருகின்ற தொகை புண்ணியம். தெய்வத்தின் காணிக்கை அதை தவறான் வழியில் செலவு செய்தால் தான் குற்றம். இது என்னவோ பணம் வாங்குவதற்காகச் சொல்கிறேன் என எண்ணி விட வேண்டாம். எங்கு ஜோதிடம் கேட்டாலும் உரிய தட்சிணை கொடுத்து அந்த ஜோதிடனை வணங்கி வாருங்கள். உடனே நற்பலன்கள் நடக்கும். அவர் உண்மையான ஜோதிடராக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 45- அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - மகேஸ்வர பூசை - https://tut-temples.blogspot.com/2021/07/45.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 44 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/06/44.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 41 - ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம்!  - https://tut-temples.blogspot.com/2020/12/41.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்.... - https://tut-temples.blogspot.com/2020/11/40.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html 

Monday, August 2, 2021

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ - ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று ஆடி கிருத்திகை. அனைத்து முருகப் பெருமான் ஆலயங்களும் இன்று திருவிழாக்கோலம் நடைபெறும். ஆனால் தற்போதைய சூழ்நிலையால் வழக்கமாக கொண்டாட்டங்கள் ஊரடங்கால் எங்கும் காண இயலவில்லை. நாமும் இன்றைய ஆடி கிருத்திகை தரிசனம் பதிவு பற்றி யோசித்த போது, நமக்கு கந்தர் அனுபூதியில் இருந்து எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ என்ற பதமே உணர்த்தப்பட்டது.


இதனையொட்டியே இன்று முருகப்பெருமான் அருளைப் பெற இருக்கின்றோம். பொதுவாக கிருத்திகை என்றாலே நமக்கு சிறப்பு தான். இருந்தாலும் ஆடிக் கிருத்திகை என்றால் சிறப்பிலும் சிறப்பு. நமக்கு ஆடி கிருத்திகை என்றாலே வேல் மாறல் பாராயணம் தான் நினைவிற்கு வரும். இரண்டு முறை பொங்கி மடாலயத்தில் நடைபெற்று வரும் வேல்மாறல் அகண்ட பாராயணத்தில் நாம் கலந்து கொள்ளும் வாய்ப்பு முருகனருளால் நமக்கு கிடைத்தது.

வேல்மாறல் என்று இணைய வெளியில் கிடைத்த தொகுப்புகளில் இருந்த ஒரு முக்கியமான,அடிக்கோடிட்டு உணரவேண்டிய வார்த்தை - வினைகள் தீர்க்கும் வேல்மாறல் என்ற பதமே. நாம் செய்த தீவினையை அறுப்பதற்கு வேல்மாறல் என்ற சர்வ ரோக நிவாரணி உதவும் என்பது இங்கே நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இது கவசமாய் இருந்து நம்மை காக்கும்.கலியுகத்தில் நமது பிணிகளுக்கு – அது உடல் பிணியானாலும் சரி, வினைப் பிணியானாலும் சரி – உற்ற மருந்தாக விளங்குவது ‘வேல்மாறல்’ என்னும் மஹாமந்த்ரமே ஆகும்.மேலும் இந்த பதிவை நீங்கள் படிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று தான் கொள்ளவேண்டும்.



"திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன்மலை
விருத்தன் எனது உளத்தில் உறை
கருத்தன் மயில் நடத்து குகன் வேலே."

கலியுகத்தில் நமது பிணிகளுக்கு – அது உடல் பிணியானாலும் சரி, வினைப் பிணியானாலும் சரி – உற்ற மருந்தாக விளங்குவது "வேல் மாறல்"

வேல்மாறல் என்பது முருகனை போற்றி அருணகிரிநாதர் பாடியது. எப்படியான கடும் துன்பங்களில் இருந்தும் உடனடி நிவாரணியாக செயல்படுவது வேல்மாறல் பாராயணம். வேல்மாறல் பாராயணம் பாடி தங்களின் பிரச்சனைகளில் இருந்து இன்றும் விடுபட்ட பக்தர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட கடும் வீரியமுடைய மந்திரம்தான் வேல்மாறல்.அருணகிரி நாதர் பாடிய ஒன்பது நூல்களுல் ஒன்றுதான் திருவகுப்பு. அந்த திருவகுப்பில் வேல் பற்றி கூறப்படும் 16 அடிகளை வேலூரின் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அவர்கள் திரும்ப திரும்ப முன்னும் பின்னும் வருமாறு கொஞ்சம் மாற்றி இன்னும் சக்தி ஏற்றப்பட்ட மந்திரம்தான் வேல்மாறல். தொடக்கத்திலும் முடிவிலும் கந்தரலங்கார பாடலை முன்னும் பின்னும் சேர்த்து பாடலின் பலனை பல மடங்கு பெருக்கியுள்ளார் சுவாமிகள்.

எந்த ஒரு பாராயண முறைக்கும் பலன் தெரியவேண்டும் என்றால் சிறிது அவகாசம் பிடிக்கும். குறைந்தது அரை மண்டலமோ அல்லது ஒரு மண்டலமோ அவகாசம் தேவை.வேல்மாறல் ஒரு பரம ஔஷதம். நமது அத்தனை பிரச்னைகளுக்கும் அதில் தீர்வு உள்ளது. வேல்மாறல் வரிகளை சற்று ஊன்றிப் பார்த்தாலே அது புரியும். எத்தனை பேர் ஊன்றிப் பார்த்தீர்கள்?நோய், பகை, கடன், உறவுகளில் பிரச்னை என அனைத்திற்கும் அதில் தீர்வாக வரிகள் உண்டு. அது தான் அதன் சிறப்பு.

துதிக்கும் அடியவர்க்(கு) ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர்
குலத்தைமுதல் அறக்களையும் எனக்(கு) ஓர்துணை ஆகும் |

இதன் அர்த்தம் பார்த்தாலே புரியும். முருகனை வணங்கும் அடியார்களுக்கு யாரேனும் தீமை நினைத்தால், அவர்களுடைய குலத்தையே வேல் சென்று அழித்துவிடுமாம். இந்த வரிகளை எழுதியது அருணகிரிநாதர். வேல் வகுப்பில் இதை அவர் கூறியிருக்கிறார்.

அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிற்காலத்தில் 20 ஆம் நூற்றாண்டில், சேஷாத்திரி ஸ்வாமிகளின் கட்டளையையடுத்து சச்சிதானந்த சுவாமிகள் வள்ளிமலைக்கு வந்தபோது இதன் சக்தியை உணர்ந்து இதன் வரிகளை முன்னும்பின்னும் மாற்றிப்போட்டு இதை உருவாக்கினார். அப்படி மாற்றிப் போட மாற்றிப்போட இதற்கு சக்தி பன்மடங்காகிவிட்டது. (சூரியனுக்குள் ஏற்படும் அணுப்பிளவு, அணுசேர்க்கை போல!)

இதற்கு யந்த்ர வடிவம் கொடுத்து வேல்மாறல் யந்த்ரத்தை அறிமுகப்படுத்தியது ஸாதுராம் ஸ்வாமிகள். இவர் வள்ளிமலை சுவாமிகளின் நேரடி சீடர். வேல்மாறல் யந்திரம் தங்களுக்காக !




வேலமாறல் யந்திரம்(velmaral yanthra)


வேல்மாறல் மஹாமந்த்ர பாராயணப் பலன்!

கால்மாறி ஆடும் இறை கால்முளையாம் கந்தர்கைவேல் வகுப்பைக் கண்டு
நூல்மாரி வரத்தொகுத்து நோய்பிலிபேய் ஸுனியம்எலாம் நூற வேண்டி
'வேல்மாறல்' எனும்பேரால் வகுத்தருளி வள்ளிமலை மேதை வள்ளல்
பால்மாறல் இன்றிஉத(வு) அரிய மந்த்ரஜபப் பயன்மிக் காமே!
- ஸ்ரீ ஸாதுராம் ஸ்வாமிகள்

இதன் பொருள் என்ன தெரியுமா?

மதுரையில் ராஜசேகரப் பாண்டியனுக்காக இடது காலை கீழே வலது காலை மேலே தூக்கி, காலை மாற்றி நடனம் ஆடிய நடராஜப் பெருமானின் (கால் முளை) மைந்தனாகிய கந்தப் பெருமானின் கையில் உள்ள வேலைப் புகழ்ந்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். அந்த வேல் வகுப்பில் உள்ள அடிகள் மாறி மாறி வரும்படியாகத் தயக்கமின்றி தொகுத்து வியாதிகள், பேய், பில்லி, சூனியம், போன்றவையால் வரும் கஷ்டங்கள் எல்லாம் பொடிப் பொடியாக ஆகுமாறு வகுத்து, அதற்கு 'வேல் மாறல்' என்று பெயரிட்டார் மகாமேதையாம் வள்ளிமலைத் திருப்புகழ் ஸச்சிதாநந்த ஸ்வாமிகள். அந்த அருமையான யந்த்ர மந்த்ரத்தை ஜெபிப்பதால் வரும் பயன் மிக மிக அதிகமாகும். * நூற வேண்டி என்றால் - சுக்கு நூறாக வேண்டி என்று பொருள்.

ஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.

வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.

வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.

இந்த அற்புதத் திருநாளில் அனைவரும் வேல்மாறல் பாராயணம் செய்து முருகப் பெருமானின் அருள் பெற வேண்டுகின்றோம்.

பதிவின் ஆரம்பத்திலே நாம் பெற்ற தரிசனம், கூடுவாஞ்சேரி முருகப் பெருமான் தரிசனம் ஆகும். அடுத்து அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தரிசனம் பெற இருக்கின்றோம்.



நமக்கு தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் முருகப் பெருமானின் பதத்தை பற்றுவோம். இந்தப் பற்று ஒன்றே போதும். இந்த கலியுக துன்பங்களில் இருந்து நாம் விடுபட கந்தன் பாதம் பற்றி, போற்றுவதை தவிர வேறு உபாயம் நமக்கில்லை. 

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று சொல்வார்கள். அது போல் பிள்ளை எப்படி இருந்தாலும் தாயன்பு தான் அன்பின் ஊற்று. தாயின் அன்பின் மூலம் தான் தந்தையை பற்றி அறிகின்றோம். மாதா, பிதா, குரு ,தெய்வம் என்ற வரிசையில் நமக்கு முருகப்பெருமான் தாயாக, தந்தையாக, குருவாக, தெய்வமாக இருக்கின்றார். 

    உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
    பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
    கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
    வேலப்பா! செந்தில் வாழ்வே!

    அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில்
    ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
    'முருகா!' என்று ஓதுவார் முன்.

    முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
    மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
    தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
    நம்பியே கைதொழுவேன் நான்." 

என்று அனுதினமும்  முருகப் பெருமானை போற்றி வழிபடுவோம். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நாம் தினமும் கூட்டு பிரார்த்தனை செய்து வருகின்றோம். இன்றைய நிகழ்வில் முருகன் அருள் முன்னிற்க வேல்மாறல் பாராயணம் செய்ய உள்ளோம்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. வெற்றிவேல். முருகனுக்கு அரோகரா....

முருகா! முருகா!! முருகா!!!

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு - தேனி சண்முகநாத மலை தரிசனம் (3) - https://tut-temples.blogspot.com/2019/07/3_23.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_61.html

குரவு விரவு முருகா வருக! - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_26.html

திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_17.html

மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_21.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html