"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, November 13, 2020

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு - தீபாவளி நல்வாழ்த்துக்கள் - 2020

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தள அன்பர்களுக்கும், நம்மோடு சேவையில் தொடர்ந்து இணைந்துள்ள அருளாளர்களுக்கும் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின்  தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். 








திருவிழாக்கள் என்றாலே அன்பின் பரிமாற்றம் தானே. ஒவ்வோராண்டும் தீபாவளி திருநாள் சிறுவயது முதல் பெறுவதாக இருந்தது.ஆனால் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு மலர்ந்த பின்னர், நம்மால் முயன்ற அளவில் கொடுக்க ஆரம்பித்தோம். அன்பின் வெளிப்பாடு தான் கொடுப்பது, பெறுவது இன்பம் என்றால் கொடுப்பது பேரின்பம் ஆகும்.



எம்மொழியிலும் இல்லா சிறப்பு நம் தமிழ் மொழியில் உள்ளது. திருவிழா என்று பிரித்து பாருங்கள். திரு விழா..நம்மிடம் உள்ள திரு விழாது இருத்தல் என்று கொள்ளலாம். திரு என்றால் உயர்ந்த, மேன்மை பொருந்திய,ஒப்பற்ற என்று பொருள் கொள்ளலாம். நம்மிடம் உள்ள திரு என்றால் அந்த இறையே ஆகும். இறை நம்மிடம் இருந்து விழாது இருக்க நாம் கொண்டாடுவதே திருவிழா ஆகும். இறை என்றால் என்ன? அன்பே சிவம் ஆகும். அந்த உயர்ந்த, மேன்மை பொருந்திய,ஒப்பற்ற இறைக்கு அன்பு என்றும் சொல்லலாம். நம்மிடம் உள்ள அன்பு விழாது இருக்கவே திருவிழா ஆகும்.இது தான் தமிழின் சிறப்பு. இந்த வகையில் தான் நம் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு திருவிழாவை கொண்டாடி வருகின்றது.

2017 ஆம் ஆண்டில் நாம் தொடங்கிய தீபாவளி சேவை குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இம்முறை கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தில் உள்ள நந்தீஸ்வரர் அமைப்பின் மூலம் சுமார் 25 குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி கொடுத்தோம். தங்களின் பார்வைக்கு ரசீதை தருகின்றோம். அன்றைய சந்திப்பில் பாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக பிரசாதம் கொடுத்து திரு.கிருஷ்ணன் ஐயா அவர்களிடம் ஆசியும் பெற்றோம்.




2017 ஆண்டு தீபாவளி திருநாளில் சிறிய துணிப்பை கொடுத்து நம் சேவையை ஆரம்பித்தோம். 2018 ஆண்டில் கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய பூசையோடு TUT தீபாவளி கோயில் குருக்களுக்கு இனிப்பு காரத்துடன் வழங்கினோம். 








2019 ஆண்டில் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் தீபாவளி சேவை குருவருளால்   சிறப்பாக நடைபெற்றது. 5 கிலோ அரிசி, 2 புது நைட்டி, தீபாவளி புதுத்துணி வகையில் நம் தளம் சார்பில் ரூ.3000 கொடுத்து, புதுத்துணிகளை மாடம்பாக்கம் முதியோர் இல்லத்தில் கொடுத்தோம்.




அடுத்து  ஐப்பசி 6 ஆம் நாள் அகத்தியர் ஆயில்ய பூசை சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் கொண்டாடினோம். மலர் குவியலில், தாமரை பூ மாலை சமர்ப்பித்து நம் ஐயன் தரிசனம் கண்டோம். TUT தீபாவளி சேவையாக கோயில் குருக்களுக்கு இனிப்பு,காரம் கொடுத்து மரியாதை செய்தோம். பூக்கடை வைத்து கோயிலில் சேவை செய்துவரும் அம்மையாருக்கு நம் தளம் சார்பில் புத்தாடை வழங்கினோம்.













அடுத்து கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தில் உள்ள நந்தீஸ்வரர் அறக்கட்டளைக்கு 25 கிலோ அளவில் அரிசி வாங்கி கொடுத்துள்ளோம்.


கொடுப்பதும் பெறுவதும் என்றும் இன்பமே
வழிகாட்டும் குருமார்களின் பாதம் பணிகின்றோம்
நம்முடன் இணைந்த நல்லுளங்களுக்கு என்றும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

மீண்டும் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.


ஏகப்பட்ட பதிவுகள் கோடகநல்லூர் தரிசனம், பல யாத்திரை பதிவுகள் என இன்னும் உள்ளது.விரைவில் ஒவ்வொரு பதிவாக தர விரும்புகின்றோம். அடுத்து நம் தலத்தில் தீபாவளி என்றாலே சஷ்டி தீருவிழா பதிவுகள் என்று இந்த ஆண்டில் தொடர முருகப்பெருமானிடம் வேண்டுகின்றோம்.

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-
TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் தீபாவளி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/tut_26.html
பொங்கலோ பொங்கல் - https://tut-temples.blogspot.com/2019/10/tut_26.html

Wednesday, November 11, 2020

ஐப்பசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 14.11.2020

அனைவருக்கும் அன்பு  வணக்கங்கள்.

நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில்  அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. 2018 ம் ஆண்டு  ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த புரட்டாசி மாதம் மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம்.

ஐப்பசி  மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 14.11.2020

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான சார்வரி  வருடம் ஐப்பசி  மாதம் 29 ஆம் நாள் (14.11.2020)  சனிக்கிழமை   மாலை  6 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ அகத்தியர் ஞானக்குடில் மூலம் கோவை பச்சபாளையத்தில் உள்ள அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோயிலில்  நாம் "மோட்ச தீபம்" என்ற ஒரு உயரிய வழிபாட்டில் கலந்து கொள்ள இறையருளும் குருவருளும் நம்மை பணித்தார்கள். மோட்ச தீபம் என்ற வார்த்தை பற்றி மட்டுமே கேள்விப்பட்டு இருந்தோம். பொதுவாகவே தீப வழிபாடு மிக மிக உயர்ந்தது. எந்த கோயிலுக்கு சென்றாலும் பூவும், தீபமேற்ற நெய் அல்லது எண்ணெய் வாங்கி சென்று வழிபடுங்கள். தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்வதை விட, பூக்களும், தீபமும் சால சிறந்தது. மோட்சம் என்றால் இறந்தவரின் ஆன்மா நற்கதி அடைய வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்வது ஆகும். அப்படி என்றால் நாம் ஏற்றும் அகல் விளக்கிலேயே முன்னோர்களின் ஆன்மா நற்கதிக்கு பிரார்த்திக்கலாம் என்றால் ..இது அப்படி இல்லை.இதற்கென சில முன்தயாரிப்புகள் செய்ய வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா மறுபிறவி இல்லாமல் மோட்சம் அடைவதற்காக திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுவது ஐதீகம்.குறிப்பாக அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அருளிய திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு என்றும் கூறுகின்றார்கள். குறிப்பாக இந்த தீபத்தை மருத்துவ துறையில் இருப்பவர்கள், கோவிலில் ஏற்ற வேண்டும். நம்மைப் பொறுத்த வரையில் பதிவின் ஆரம்பத்திலேயே வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடு என்று இந்த வழிபாட்டை சொல்லி தான் ஆரம்பித்தோம். நாம் யாருக்காக பிரார்த்திக்கின்றோம்/ வழிபாடு செய்கின்றோம்? நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் உற்றார் உறவினர்களுக்கு என்று அடுத்த தான் செல்கின்றோம். கண்ணனுக்கு தெரிந்து உடல் பெற்று வாழும் உயிர்களுக்கு வழிபாடு/பிரார்த்தனை/ அன்னசேவை என செய்கின்றோம். ஆனால் கண்ணுக்கு தெரியாமல் உடல் இன்றி வெறும் ஆத்மா மட்டும் வாழுகின்றார்களே..அவர்களுக்கு யார் உணவிடுவது? பிரார்த்திப்பது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இருப்பதே இந்த  மோட்ச தீபம்  வழிபாடு ஆகும். அப்படியானால் இது மிகவும் உயர்ந்த வழிபாடு தானே? ஐயம் ஏதும் இல்லையே....

அடுத்து நாம் நம் TUT தளம் சார்பில் இந்த வழிபாடு மேற்கொள்ள ஜீவநாடி உத்திரவு கேட்டோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாசியால் 2018 ஆம் ஆனதில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் அமாவாசை அன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மோட்ச தீப வழிபாடு நடைபெற்று வருகின்றது. 2020 ஆண்டு பங்குனி மோட்ச தீப வழிபாடும் சுமார் 10 பேர் அளவில் சிறப்பாக நடைபெற்றது. வருகின்ற வைகாசி அமாவாசை வழிபாடு வழக்கம் போல் நடைபெற உள்ளது. அடியார் பெருமக்கள் வீட்டிலேயே பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகின்றோம்.


சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ அகத்தியர் ஞானக்குடில் மூலம் கோவை பச்சப்பாளையத்தில் உள்ள அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோயிலில்  நாம் "மோட்ச தீபம்" என்ற ஒரு உயரிய வழிபாட்டில் கலந்து கொள்ள இறையருளும் குருவருளும் நம்மை பணித்தார்கள். மோட்ச தீபம் என்ற வார்த்தை பற்றி மட்டுமே கேள்விப்பட்டு இருந்தோம். பொதுவாகவே தீப வழிபாடு மிக மிக உயர்ந்தது. எந்த கோயிலுக்கு சென்றாலும் பூவும், தீபமேற்ற நெய் அல்லது எண்ணெய் வாங்கி சென்று வழிபடுங்கள். தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்வதை விட, பூக்களும், தீபமும் சால சிறந்தது. மோட்சம் என்றால் இறந்தவரின் ஆன்மா நற்கதி அடைய வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்வது ஆகும். அப்படி என்றால் நாம் ஏற்றும் அகல் விளக்கிலேயே முன்னோர்களின் ஆன்மா நற்கதிக்கு பிரார்த்திக்கலாம் என்றால் ..இது அப்படி இல்லை.இதற்கென சில முன்தயாரிப்புகள் செய்ய வேண்டும்.


 உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா மறுபிறவி இல்லாமல் மோட்சம் அடைவதற்காக திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுவது ஐதீகம்.குறிப்பாக அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அருளிய திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு என்றும் கூறுகின்றார்கள். குறிப்பாக இந்த தீபத்தை மருத்துவ துறையில் இருப்பவர்கள், கோவிலில் ஏற்ற வேண்டும். நம்மைப் பொறுத்த வரையில் பதிவின் ஆரம்பத்திலேயே வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடு என்று இந்த வழிபாட்டை சொல்லி தான் ஆரம்பித்தோம். நாம் யாருக்காக பிரார்த்திக்கின்றோம்/ வழிபாடு செய்கின்றோம்? நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் உற்றார் உறவினர்களுக்கு என்று அடுத்த தான் செல்கின்றோம். கண்ணனுக்கு தெரிந்து உடல் பெற்று வாழும் உயிர்களுக்கு வழிபாடு/பிரார்த்தனை/ அன்னசேவை என செய்கின்றோம். ஆனால் கண்ணுக்கு தெரியாமல் உடல் இன்றி வெறும் ஆத்மா மட்டும் வாழுகின்றார்களே..அவர்களுக்கு யார் உணவிடுவது? பிரார்த்திப்பது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இருப்பதே இந்த  மோட்ச தீபம்  வழிபாடு ஆகும். அப்படியானால் இது மிகவும் உயர்ந்த வழிபாடு தானே? ஐயம் ஏதும் இல்லையே....

அடுத்து நாம் நம் TUT தளம் சார்பில் இந்த வழிபாடு மேற்கொள்ள ஜீவநாடி உத்திரவு கேட்டோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாசியால் 2018 ஆம் ஆனதில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் அமாவாசை அன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மோட்ச தீப வழிபாடு நடைபெற்று வருகின்றது. இனி சென்ற ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு பற்றி காண இருக்கின்றோம்.  மேலும் அன்றைய தினம் நடைபெற்ற இறைப்பணி பற்றியும் இங்கே தொட்டுக்காட்ட விரும்புகின்றோம்.



இனி சென்ற புரட்டாசி மாதம் நடைபெற்ற மோட்ச தீப வழிபாட்டின் துளிகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம். நாம் சென்ற மாதம் தேனிக்கு சென்றதால் மோட்ச தீப வழிபாட்டிற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து விட்டு வந்தோம். சில புதிய அன்பர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டார்கள். 











வழக்கம் போல் குருநாதரின் அருளால் சிறப்பாக மோட்ச தீப வழிபாடு நடைபெற்றது.  இந்த மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில் பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின் பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று. இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

புரட்டாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 16.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/16102020.html

மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 16.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/16092020.html

பித்ரு தோஷம் நீங்க - நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/09/blog-post_7.html

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 02.09.2020 முதல் 17.09.2020 வரை - https://tut-temples.blogspot.com/2020/09/02092020-17092020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

 தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை - https://tut-temples.blogspot.com/2019/09/14092019-28092019.html

மகா பெரியவா அருள் வழியில் "மோட்ச தீபம்" வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post.html

ஆனி மாத இறைப்பணியும், மோட்ச தீப வழிபாடும் - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_21.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020  - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html

தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html

மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.htm

திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html

 பெரியபுராணம் கூறும் பூரண தானம் அறிவோமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_14.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

 தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

Saturday, November 7, 2020

ஓம் மகத்தான அகத்தீசாய நமஹ - 1008 சகஸ்ர நாமாவளி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் மீண்டும் அகத்தியம் பற்றி பேச விரும்புகின்றோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் வழிபாட்டில் இருக்கும் போது நம் குருநாதரை எப்படி வழிபடுவது என்று எல்லோருக்கும் தோன்றும்? ஓம் அகத்தீசாய நமஹ என்று போற்றினாலே போதும். இருப்பினும் மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் குருநாதர் போற்றி என்று தொகுப்புகள் உண்டு. நாமும் ஒவ்வொரு மாத ஆயில்ய வழிபாட்டிலும் இப்படித் தான், இந்த போற்றிகளை கொண்டு தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று நாம் நிற்பதில்லை. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வழிகளில் நம் குருநாதர் வழிபாட்டை செய்து வருகின்றோம். இந்த நிலையில் நமக்கு ஸ்ரீ அகத்தியர் பெருமான் 1008 சகஸ்ர நாமாவளி தொகுப்பு கிடைத்தது. 

இந்த தொகுப்பை இங்கே பகிர்கின்றோம்.





தமிழின் மூலத்தை கொடுத்தவர்.முருகப் பெருமானின் அன்பிற்கு பாத்திரமானவர். அகத்தியர் என்ற பெயரில் ஒவ்வொரு யுகங்களிலும் பலர் வாழ்ந்துள்ளனர் என்பது நமக்கு புதிய செய்தி. தமிழ் உள்ளவரை அகத்தியம் இருக்கும். அகத்தியம் ஒன்றே இந்த கலிகாலத்தில் கடைத்தேற உதவும். அகத்தியம் சத்தியம். சத்தியமே அகத்தியம் என்று சொல்லவேண்டும் என்றால் அகத்தியரை அருட்குருவை மனதில் வைக்க வேண்டும்.

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைத்து இந்தப் போற்றித்தொகுப்பை நம்மை இயக்கும் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம்.

ஒவ்வொரு போற்றியையும் வெறுமனே வாயால் போற்ற வேண்டாம். மனத்தால் போற்றப் பழகுங்கள்.

















ஓம் தமிழ் தமிழ் தமிழ் அமிழ்தே போற்றி..போற்றி...என்று போற்றி..நம் குருநாதரின் தாள் பணிகின்றோம்.

PDF வடிவில் தரவிறக்க :- https://drive.google.com/file/d/1WovWZhSsD8odUUEILTcm6kWZLYw5Rr5u/view?usp=sharing

இந்தப்பதிவை மனதில் இறுத்தி, தம் அகத்தில் உள்ள ஈசன் ஸ்ரீ அகத்தீசர் அருள் பெற்றிட பிரார்த்திக்கின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 08.11.2020 - https://tut-temples.blogspot.com/2020/11/08112020.html

அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

 எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

Friday, November 6, 2020

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 08.11.2020

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

ஐப்பசி மாத ஆயில்ய ஆராதனை நாளை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெற உள்ளது. அதன் பொருட்டு இன்றைய பதிவில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பற்றி மீண்டும் தொட்டுக்காட்ட விரும்புகின்றோம். ஸ்ரீ அகத்தியர். தமிழின் மூலத்தை கொடுத்தவர்.முருக பெருமானின் அன்பிற்கு பாத்திரமானவர்.அகத்தியர் என்ற பெயரில் ஒவ்வொரு யுகங்களிலும் பலர் வாழ்ந்துள்ளனர் என்பது நமக்கு புதிய செய்தி. தமிழ் உள்ளவரை அகத்தியம் இருக்கும். அகத்தியம் ஒன்றே இந்த கலிகாலத்தில் கடைத்தேற உதவும். அகத்தியம் சத்தியம். சத்தியமே அகத்தியம். என்று சொல்லவேண்டும் என்றால் அகத்தியரை அருட்குருவை மனதில் வைக்க வேண்டும்.



தேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ! உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் தலைவனே! தாங்கள் தான் எங்களைக் காத்தருள வேண்டும், என்றனர். இந்திரன் தேவர்களின் குறையை கருணையுடன் கேட்டான். தேவர்களே! கலங்க வேண்டாம். 

தேவராயினும், மனிதராயினும், சிறு பூச்சி புழுவாயினும், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். எனினும், இதுகண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. அசுரர்களில் உயர்ந்தவனான தாரகன் தவவலிமை மிக்கவன். கடலுக்குள் மறைந்து வாழும் சக்தி படைத்தவன். பிரம்மாவின் அருளால் சாகாவரம் பெற்றவன். ஒரு கும்பத்தின் அளவே உருவமுடைய ஒருவரே அவனைக் கொல்ல முடியும். ஆனால், அவன் குறிப் பிட்டுள்ள அளவு உயரமுள்ளவர் எவரும் பூவுலகில் இல்லை. பிரம்மனால் கூட அப்படிப்பட்டவரைப் படைக்க முடியாது. இருப்பினும், பிறந்தவர் மாள்வது உறுதி. நீங்கள் அமைதி காக்க வேண்டும். நான் அவர்களை கடலுக்குள் வசிக்க இயலாத அளவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பின்னர், அவர்களது தொந்தரவு குறையும், என்றான்.

தேவர்கள் அரைகுறை மனதுடன் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பினர். இந்திரன் ஆழ்ந்து யோசித்தான். கடலை வற்றச்செய்வது என்பது எப்படி ஆகக்கூடிய காரியம். என்ன செய்வது? என குழம்பிப் போயிருந்த வேளையில், அதுவே சரி, என ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான். அக்னிதேவனை தன் சபைக்கு வரச்செய்தான். அக்னி! நீ உடனே பூலோகத் துக்குச் செல். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்து கிடந்து நம் இனத்தாரை துன் புறுத்துகின்றனர். நீ கடலே வற்றும்படியாக வெப்பத்தை உமிழ். கடல் காய்ந்து போனதும், அரக்கர்கள் நம்மை துன்புறுத்தி விட்டு, ஓடி ஒளிய இடம் இல்லாமல் தவிப்பர். இதைப்பயன்படுத்தி அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்வோம்,  என்றான். அக்னி சிரித்தான். இந்திரரே! தங்கள் யோசனை எனக்கு நகைப்பை வரவழைக்கிறது. அரக்கர்களை அழிப்பதே தேவர் களையும், பூலோக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். உலகில் கடல் இல்லை என்றால் மழை எப்படி பொழியும்? மழை இல்லை என்றால் ஆறுகள் எப்படி ஓடும்? ஆறுகள் இல்லையென்றால், நமக்கு அவிர்பாகம் தரும் யாகங்களை நடத்த தீர்த்தம் கூட இல்லாமல் போய் விடுமே. நீர் வாயுவை அழைத்துப் பேசும். ஒருவேளை வறண்ட காற்றால் அவன்  கடலை வற்றச்செய்யக்கூடும், என்றான்.

இந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது. ஏ அக்னி! நான் இட்ட வேலையைச் செய்யும் வேலைக் காரன் நீ. தலைவனாகிய என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா?இந்த யோசனை யெல்லாம் இல்லாமலா நான் உன்னை கடலை வற்றச்செய்யும்படி பணிப்பேன். சொன்னதைச் செய்,என்றான்.அக்னியோ ஒரேயடியாக மறுத்து விட்டான். தாங்கள் என் எஜமானர் தான். எஜமானர் என்பதற்காக, அந்த எஜமானர் உள்ளிட்ட அத்தனை பேரையும் அழிக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன், எனச் சொல்லி விட்டு,கைகட்டி நின்றான். அடுத்து வாயு வரவழைக்கப் பட்டான். அவனிடமும் இந்திரன், கடல் சமாச்சாரம் பற்றிக் கூற, வாயுவும், அக்னி சொன்ன அதே பதிலையே சொன்னான். அக்னியும், வாயுவும் சொல்வதிலும் நியாயமிருக்குமோ என்னும் அளவுக்கு இந்திரனும் சிந்திக்க ஆரம்பித்து விட்டான். அத்திட்டத்தை கைவிட்டு, அவர்களை அனுப்பி விட்டான். ஆனால், சில நாட்களில் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து, யாகங்கள் முழுமையாக நின்று போயின. யாக குண்டங்களில் அசுரர்கள் மாமிசத்தையும், ரத்த மழையையும் பொழிந்து தீட்டை உண்டாக்கினர். எந்த யாகமும் நடைபெறாமல் தேவர்கள் மெலிந்து போயினர். இப்போது, இந்திரனின் கோபம் அக்னி மற்றும் வாயுவின் மீதே திரும்பியது.

மீண்டும் அவர்களை வரவழைத்து, ஏ அக்னி! ஏ வாயு! அன்று நான் சொன்னதை நீங்கள் செய்யாமல் போனதால், அரக்கர்கள் தங்கள் அட்டகாசத்தை முடித்து விட்டு,  கடலுக்குள் போய் ஒளிந்து கொள்கின்றனர். கடலுக்குள் மறைந்திருப்பவர்களை யாரால் கண்டுபிடிக்க இயலும்? அவர்களைக் கொல்வதென்பது எப்படி சாத்தியம்? என் சொல்லைக் கேளாததால் ஏற்பட்ட துன்பத்தின் பலனை அனுபவிக்கும் வகையில், நீங்கள் பூலோகத்தில் பிறந்து மனிதர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும், என சாபமிட்டான். அக்னியும், வாயுவும் பூலோகத்தில் பிறந்தனர். அக்னி மித்திரா என்ற பெயரிலும், வாயு வருணர் என்ற பெயரிலும் வாழ்ந்தனர். இச்சமயம், தேவலோக மங்கையான ஊர்வசி, தான் செய்த தவறால், இந்திரனின் சாபம் பெற்று பூலோகம் வந்தாள். அவள், ஒரு நீர்நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது, அவளை மித்திராவும், வருணனும் பார்த்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் கண்டதே இல்லை. அப்போது, அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்தகும்பத்தில் வீரியத்தை இட்டார். வருணரோ, அதைத் தண்ணீரில் இட்டார். கும்பத்தில் இருந்த வீரியம் வளர்ந்து ஒரு குழந்தையாக மாறியது. அது சில நாட்களில் கும்பத்தில் இருந்து வெளிப்பட்டு உயிர் பெற்று நடமாடியது. அந்த உருவம் கமண்டலம், ஜடாமுடியுடன் தோற்றமளித்தது.

குடத்தில் இருந்து பிறந்ததால், அந்த குள்ள முனிவருக்கு கும்பமுனிவர் என்றும், குடமுனிவர் என்றும் தேவர்கள் அழைக்கலாயினர். அரக்கர்களைக் கொல்ல கும்ப அளவே உயரமுள்ள ஒரு முனிவர் பிறந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இது ஒருபுறம் இருக்க, வாயுபகவான், தண்ணீரில் இட்ட வீரியத்தில் இருந்து வசிஷ்டர் பிறந்தார். இவர் அயோத்தியை நோக்கி போய் விட்டார். பிற்காலத்தில், இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருடன் சேவை செய்ய  வேண்டியிருந்ததைக் கருத்தில்  கொண்டு அங்கு சென்று விட்டார். கும்பமுனி உருவத்தில் தான் குள்ளம். ஆனால், அவரது சக்தியோ எல்லை மீறியதாக இருந்தது. அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், இவர் உடலில் வெப்பம் தகித்தது. தன் வெப்பத்தை தணிக்க தண்ணீரின் மீதே படுத்திருப்பார். அவரிடம், தேவர்கள் தங்கள் குறையை வெளியிட்டனர். சுவாமி! தங்களால் மட்டுமே அரக்கர்களை அழித்து எங்களைக் காக்க முடியும், என்றனர்.அகத்தியர் அவர்களுக்கு அருள் செய்வதாக வாக்களித்தார். தேவர்களைக்காக்கும் தனது கடமை தடங்கலின்றி நிறைவேற, தனக்கு வசதியான தண்ணீரிலேயே தவத்தை துவங்கினார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீரில் படுத்த படியே இறைவனை தியானித்தார். இறைவன் அருளும் கிடைத்தது.

அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அவர்கள் மறைந்திருந்த கடலை நோக்கிச் சென்றார். தங்களை குள்ள முனிவர் ஒருவர் கொல்ல வந்துள்ளார் என்பதை அறிந்த அரக்கர்கள்  தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால், அகத்தியர் விடுவாரா என்ன? தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார்.  ஒட்டுமொத்த கடல் நீரும் அவர் கைக்குள் வந்தது. தீர்த்தம் குடிப்பது போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. முடிவில், அரக்கர்கள் கொல்லப்பட்டனர். கடலையே சுருக்கி சாப்பிட்டவர் என்றால் சும்மாவா? மேலும், உலகையே காக்க வேண்டிய  தேவர்களையே பாதுகாத்தவர் என்றால் அவரது சக்தி எத்தகையதாக இருக்கும்? அந்த மாமுனிவர், தான் வந்த வேலையை அத்துடன்  முடித்துக் கொள்ள வில்லை. மகாவிஷ்ணு அப்போது மனித அவதாரமான ராமாவதாரம் எடுத்து இலங்கையிலே இருந்தார். ராமனின் மனைவியான சீதாவை, அந்நாட்டு அரக்க அரசனான ராவணன்  தூக்கிச் சென்று விட்டான். அவளை மீட்பதற்காக பெரும்படையுடன் சென்றிருந்தும் கூட, அவரால் ராவணனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியவில்லை. அங்கு சென்ற அகத்தியர், ராமனிடம் சூரிய வழிபாடு செய்வதன் மூலம் பெரும் பலம் பெறலாம் எனக்கூறி, ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகங்களைப் போதித்தார். மேலும்  அவருக்கு சிவகீதையையும் கற்றுத் தந்தார்.

ராமபிரானின் இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் அகத்தியரும் ஒருவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இமயமலைச் சாரலுக்கு வந்தார். அப்பகுதியில் தவமிருந்தார். ஒருமுறை, இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்ட நாட்டுக்குச் சென்றார். அவன் அகத்தியரின் மகிமை அறியாமல் உரிய மரியாதை கொடுக்கவில்லை. பெரியவர்களுக்கும்,  முனிவர்களுக்கும் மரியாதை கொடுக்காதவன் அரசாளத் தகுதியில்லாதவன் என்று கூறிய அவர், நீ யானையாகப் போ என சாபம் கொடுத்தார். அவன் வருந்தி அழுதான். கருணைக்கடலான அகத்தியர், மன்னா! நீ பக்தன் தான். யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி விட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது, என்றார். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி? என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே! என கேட்ட போது, மோட்சம் செல்லப் போகிறவன், சம்சார பந்தத்தை துறக்க வேண்டும். நீ சாட்சாத் மகாவிஷ்ணுவின் மூலம் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் சேர்வாய். பிறப்பற்ற நிலை சித்திக்கும், என அருள் செய்தார்.

பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால், யானையாகத் திரிவதில் தனக்கு சம்மதமே என்ற இந்திரத்துய்மன், காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர், முதலை ஒன்று அதன் காலைக் கவ்வ, அது ஆதிமூலமே என அலற, ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு அதனைக் காப்பாற்றி வைகுண்டம் சென்று சேர்த்தார். இப்படி  ஆடம்பரத்தில் சிக்கித் திளைத்த அரசர்களுக்கு வைகுண்ட பிராப்தி அளிப்பவராகவும் அகத்தியர் விளங்கினார். சிவசிந்தனை தவிர வேறு ஏதும் அறியாத அகத்தியர்,  தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். இமயமலையில், பார்வதி, பரமேஸ்வரனுக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை பொதிகை  மலைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். அவர் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழயில், ஒரு மரத்தில் சிலர் தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்தார். அவர்கள்  அகத்தியா! அகத்தியா! என கத்தினர். நீங்களெல்லாம் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை  வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள். தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது? என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே! உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன், என்ற அகத்தியர் அவர்களை தன்னையறியாமல் வணங்கினார். அகத்தியா! நீ சொன்ன தெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போலவே தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை.  சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். யார் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லையோ, அவர்கள் பிதுர்களின் உலகை அடைய முடியாது. ஆண் குழந்தையே கொள்ளி வைக்க தகுதியானவன். அதனால் எங்கள் அன்பு மகனே! நீ திருமணம் செய்து கொள். ஒரு மகனைப் பெறு. அவன் மூலமாக எங்களுக் குரிய தர்ப்பணம், சிரார்த்தம் செய்து எங்களுக்கு சொர்க்கப்பாதையைக் காட்டு. இல்லாவிட்டால், நாங்கள் இந்த மரத்திலேயே தொங்க வேண்டியது தான், எனக் கூறி வருந்தினர். உயரத்தில் குள்ளமான அவருக்கு யார் பெண் தருவார்கள்?

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பார்கள் நம்மவர்கள். அதுபோல, அகத்தியர் உயரத்தில் மிகச்சிறியவர் என்றாலும், அவரது மகிமைகளை அறிந்த பெண்மணி ஒருத்தி, நிச்சயம் வாழ்க்கைப்பட்டே தீருவாள். தென்னகம் வரும் வழியில், அவர் விதர்ப்பம் என்ற நாட்டை அடைந்தார். அந்நாட்டு மன்னன் யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அதில் பங்கேற்க அகத்தியரை அவன் அழைத்துச் சென்றான். யாகத் தீ கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி, அகத்தியரே! நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை, என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார். மாமுனிவரே! நான் இந்நாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்தரசரே என்தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன், என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். 

அப்போது உலோபமுத்திரை, அகத்தியரே! தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றாள்.லோபா! என் முன்னோர்கள் ஆண் குழந்தை இன்மையால், இறந்தும் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகை அடைவான் என்பதை நீ அறிவாய். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றா விட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர், என்றார். இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன்,அகத்தியரே! உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை எனக்குத் தர வேண்டும், என சொல்லி விட்டான். இதென்ன சோதனை? துறவியிடம் ஏது செல்வம்? இந்த மன்னன் கேட்கும் தொகைக்கு எங்கு போவேன்? என எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், அகத்தியரே! என்ன யோசனை? இப்பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும் பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா? எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவுக்கு இடமும், அதை நிரப்புமளவுக்கு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீர் நரகம்செல் வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளும், என்றார்.

ஒரு பெண் தன்னை மணம் முடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற முறையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களையும் சந்தித்தார். அவர்களிடம் பொருளை யாசித்து பெற்றார். லோபமுத்திரை கேட்ட அளவுக்கு பொன்னும், பொருளும் கிடைத்தது. அதை அவளிடம் தந்து அவளைத் திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றார். முன்னோர்கள் சாபம் நீங்கி அவரை வாழ்த்தினர். தன் மனைவி லோபமுத்திரையிடம், அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே! இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா? இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி  விடும்.ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலகிலுள்ள உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பி வைத்தார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா! நீ என் கமண்டலத்துக்குள் வந்து விடு, எனச்சொல்லி அவர் மீது தீர்த்தம் தெளித்தார். அவள் தண்ணீராக உருமாறி, கமண்டலத்தில் புகுந்தாள். அந்த கமண்டலத்துடன் அவர்  குடகுமலையை அடைந்தார். மலையின் ஓரிடத்தில் தன் கமண்டலத்தை வைத்து விட்டு லிங்கபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு காகம் பறந்து வந்தது. கமண்டலத்தை தட்டி விட்டது. கமண்டலம் சரியவே, உள்ளிருந்த தண்ணீர் ஆறாய்பிரவாகம் எடுத்தது.

பெரிய நீர்வீழ்ச்சியாய் அது கொட்டியது. இதை எதிர்பாராத அகத்தியர் கமண்டலத்தில் கொட்டியது போக மீதி தண்ணீரை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்டார். பிரவாகம்எடுத்த நதி கடல் போல் பெருகியதால் சிவசமுத்திரம் என சிவனின் பெயரால் அதை அழைத்தார். அது கா என்னும் சோலைகளுக்குள் விரிந்து பரவிச் சென்றதால், காவிரி என்று பெயர் வைத்தார். பின்னர், மீதி தண்ணீருடன் பொதிகை மலைக்கு வந்த அவர், லோபா! நீ நிரந்தரமானவள். என் முன்னோரின் சாபம் தீர்த்த நீ, குடகில் நதியாய் பிராவகம் எடுத்தது போல், இந்த பொதிகையிலும் நதியாகி உலகை செழிப்பாக்கு. செழிப் புள்ள உலகத்தில் வறியவர் இருக்கமாட்டார்கள். வறியவர்இல்லாத பூமியில் சமத்துவமான வாழ்வு கிடைக்கும், என்று கூறி, கமண்டலத்தில் இருந்த மீதி நீரை, பொதிகையின் உச்சத்தில் இருந்த சிகரத்தில் கொட்டினார். அது பளபளவென மின்னியபடியே பாணம் போல வேகமாகப் பாய்ந்து ஒரு அருவியை உருவாக்கியது. அதற்கு பாண தீர்த்தம் என பெயர் வைத்தார். அந்த அருவி ஓரிடத்தில் தேங்கி, நதியாகப் பாய்ந்தது. அப்போது, ஓரிடத்தில் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது. அதைக் கண்ட  லாபமுத்திரை ஆனந்தமயமாகி மற் றொரு அருவியாய் வீழ்ந்தாள். அதற்கு கல்யாண தீர்த்தம் என பெயர் சூட்டினார் அகத்தியர். மீண்டும் ஓரிடத்தில் பக்தர்கள் நீராடி மகிழ ஒரு நீர்வீழ்ச்சியாய் மாறி, தன் கணவரின் பெயரால் அகத்தியர் தீர்த்தம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள். இன்றும் அதில் பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர். தாமிரபரணி என்னும் பெயர் பெற்று அப்பகுதியை வளப்படுத்தினாள். பின்னர் அகத்தியர் பொதிகையில் தங்கி தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்.

மேலே உள்ள செய்திகள் சித்தன் அருள் இணைய வெளியில் இருந்து எடுக்கப்பட்டவை.

சென்ற புரட்டாசி  மாத ஆயில்ய ஆராதனை அருள்நிலைகளை சிறிது காண்போம்.



ஐப்பசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 08.11.2020

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான சார்வரி  வருடம் ஐப்பசி  மாதம் 23 ஆம் நாள் 08.11.2020  ஞாயிற்றுக் கிழமை   அன்று ஆயில்ய நட்சத்திரமும், சித்த  யோகமும் கூடிய சுப தினத்தில் காலை  9  மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில்  அருள்பாலிக்கும்  ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு  அபிஷேகம், அலங்காரம் செய்து  ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

 எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

Thursday, November 5, 2020

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் அன்னதானம் பற்றி காண இருக்கின்றோம். அன்னதானம் பற்றி கருணைக் கடல் மகா பெரியவா சொல்லும் சில விஷயங்களைக் காது கொடுத்து கேட்போமா? அன்னதானம் ஏன்  செய்கின்றோம்?  எதற்காக செய்கின்றோம் என்று மிக மிக எளிதாக கூறி உள்ளார்கள்.

இதோ மகா பெரியவாவின் அருளுரைகள் ...

சித்த சுத்திக்குப் பயன்படுகிற சின்னச் சின்ன விஷயங்கள் பல உண்டு. இந்தச் சின்னச் சின்ன தர்மங்களை நம்முடைய பெரியவர்கள் தலைமுறை தத்துவமாக அநுசரித்து வந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் திருப்தியும் சந்தோஷமும் நிறைந்திருந்தன. அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்த்து, அதை நாம் பின்பற்றினாலே போதும். புதிதாக ஒரு கொள்கையும் வேண்டாம். நாமும், சந்தோஷமாக, திருப்தியாக இருக்கலாம்.




பெரிய அத்யாத்ம விஷயங்களில் மட்டுமில்லாமல், ஒரு சமுதாயத்தில், ஒரு குடும்பத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளில்கூட நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் அற்புதமாக வழிகாட்டியிருக்கிறார்கள். உதாரணமாக உறவு, சிநேகிதம் எல்லாம் அந்த நாளில் வெகு உயர்ந்த முறையில் காப்பாற்றப்பட்டன. ஒரு கலியாணம், அல்லது அபரகாரியம் (இறுதிச் சடங்கு) என்றால் பலர் ஒன்று சேர்ந்து செலவு செய்து நடத்திக் கொடுப்பது என்று வைத்துக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு உயர்ந்த பண்பு?


இந்தக் காலத்தில் நடப்பதுபோல் ‘டெமான்ஸ்ட்ரேஷனும்’, வெளிவேஷமும் அப்போது இல்லை. ஆனால் அந்த நாளில்தான் ஏழைகளுக்கு உண்மையாக உதவிசெய்கிற மனப்பான்மை சுபாவமாகக் காரியத்தில் அநுசரிக்கப்பட்டது. ஒரு கலியாணத்துக்குப் போகிறவர்கள் தங்களால் முடிந்ததை, ஐந்தோ, பத்தோ உதவி செய்வது என்பதால் கலியாணம் செய்பவர்களுக்கு எத்தனையோ பாரம் குறைந்தது.

ஒரு கூட்டத்திலே பலர் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் போதும். கொடுக்கிறவர்களுக்குப் பெரிய சிரமம் ஏதும் இல்லை. ஆனால் வாங்குகிறவனுக்கு மொத்ததில் கணிசமாகக் கிடைக்கும். இப்படித்தான் ஓர் ஏழைக்குக் கஷ்டம், அவன் ஒரு கலியாணம் செய்யவேண்டும் அல்லது அபரகாரியம் செய்ய வேண்டும் என்றால் மற்றவர்கள் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் உதவி செய்து அந்தக் காரியத்தை நடத்திக் கொடுத்து வந்தார்கள். முன்னாட்களில் பந்துகளுக்குள் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் அதிகம் இல்லை. பணக்காரனாக இருப்பவன் ஏழையான பந்துவுக்கே அதிக உதவி செய்வான். இதெல்லாம் தர்மத்தைச் சேர்ந்தது. சிரமத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது, உதவியைப் பெறுகிறவனைவிட உதவி செய்கிறவனின் சித்த சுத்திக்கே அதிகம் உதவும்.

ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது. பழைய கால பந்துத்துவம் பணக்காரர்களுக்கு இல்லை. ஏழையான உறவினர்களுக்கு உதவுகிற மனப்பான்மை குறைந்து விட்டது. பழைய காலத்தில் நடந்தது உண்மையான அன்னதானம். இப்போது மனிதர்கள் தங்களைப் போன்ற பணக்காரர்களுக்காகவே பார்ட்டி – ஃபீஸ்ட் வைக்கிறார்கள். தேசத்தில் ஏராளமாக இப்படிப் பணமும் பண்டமும் செலவாகின்றன. இதில் தர்மத்துக்கோ, சித்த சுத்திக்கோ எதுவும் இல்லை. இவன் காரியார்த்தமாகத்தான் ஒருத்தனைக் கூப்பிட்டு பார்ட்டியும் ஃபீஸ்டும் வைக்கிறான். பார்ட்டி கொடுத்து, அதில் சாப்பிட்டவர்களை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறான். பார்ட்டி சாப்பிட்டவனுக்குத் தெரியும். ‘இவன் பிரியத்தின் பேரில் தனக்கு சாப்பாடுபோடவில்லை. காரியத்துக்காகத்தான் சாப்பாடு போட்டான்’ என்று. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டுப் போகிறான். ஆகையால், இவன் அவனை ஏமாற்றுகிறான் என்றால் அவனோ, இவன் போட்டதைச் சாப்பிட்டு விட்டு இவனையே ஏமாற்றிப் போகிறான். ஆக ஃபீஸ்டும் டோஸ்டும் ஏமாற்று வித்தையாகவே ஆகின்றனவேயன்றி சித்த சுத்திக்கு பயன்படவில்லை.

ஏழைக்கு அன்னதானமோ பொருள் உதவியோ செய்யும் போது இரண்டு பக்கத்திலும் உண்மையான சந்தோஷமும் பிரியமுமே நிரம்பியிருந்தன. இப்போது பார்ட்டி நடத்தும்போது அங்கே உண்மையான பிரியம் இல்லாததோடு, துவேஷம் வேறு உண்டாகிறது. வசதியிருப்பவர்கள் பார்ட்டி நடத்துவதைப் பார்த்து, வசதியில்லாதவர்களுக்கு வெறுப்பும் துவேஷமும் உண்டாகின்றன. உறவு முறைகளில் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டக்கூடாது என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.


‘வசதியுள்ளவர்கள்தான் பண உதவி செய்து புண்ணியம் சம்பாதிக்க முடியும்; நாம் என்ன செய்யலாம்?’ என்று மற்றவர்கள் எண்ணக்கூடாது. சரீரத்தால் மற்றவர்களுக்குக் கைங்கரியம் செய்வது பெரிய புண்ணியம். அது சித்த சுத்திக்கு ரொம்ப ரொம்ப உதவும்; வசதியே இல்லாதவர்களும் இவ்விதத்தில் பிறருக்கு சரீர சகாயம் செய்ய முடியும்.

ஒவ்வொருத்தரும் — பிறருக்குக்கூடத் தெரிய வேண்டாம் — ஏதோ ஓர் ஒற்றையடிப் பாதைக்குப் போய் அங்கே உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால் போதும். அது சித்த சுத்திக்கு பெரிய உதவி. இது மாதிரி சின்ன தர்மங்களை எவரும் செய்யலாம். பணக்காரர், ஏழை என்ற வித்தியாசமில்லாமல் ஒரு பேட்டையில் உள்ள அனைவரும் சேர்ந்து குளம் வெட்டலாம்.

‘ஈசுவர அநுக்கிரகம் வேண்டும், வேண்டும்’ என்றால் அது எப்படி வரும்? பரோபகாரமான, ஜீவகாருண்யமுள்ள நல்ல காரியங்களைச் செய்து செய்து மனசு பக்குவப்பட்டால்தான், சித்த சுத்தி உண்டாகி, அந்த சுத்தமான சித்தத்தில் ஈசுவரனின் உருவத்தைப் பார்க்க முடியும். கலக்கின ஜலத்தில் பிம்பம் தெரியாததுபோல், நாம் மனசைக் கலக்கிக் கொண்டு ஈஸ்வரஸ்வரூபம் தெரியாதபடி செய்துகொண்டிருக்கிறோம். பகவத் பக்தியோடு பரோபகாரமும் செய்து, மனசு தெளிவாகும்போது ஈஸ்வர ஸ்வரூபத்தை நாம் கிரகித்துக் கொண்டு, அவனுடைய அநுக்கிரஹத்தைப் பெறமுடியும்.

இப்பொழுது புரிந்து இருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.ஆம். நம் சித்தம் சுத்தி பெற ஒரு சின்ன விஷயம் தான் இந்த அன்னதானம்.

இந்த விஷயத்தை தான் நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின்.  செய்து வருகின்றோம்.அனைத்தும் குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இங்கே நாம் சில தர்ம காரியங்களை தான் சொல்லி வருகின்றோம். சொல்லாமல் செய்வது தானே தர்மம். இதனை தான் எப்போதும் செய்ய விரும்புகின்றோம்.இதனையே எப்போதும் தொடர விரும்புகின்றோம். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குருவருளால் மருத்துவ உதவி செய்து வருகின்றோம். நம்மை வழிநடத்தும்  குருநாதர்களின் பாதம் பணிகின்றோம்.


இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி நம் தளம் சார்பில் அடுத்த வாரம் சேவை செய்ய உள்ளோம்.பொருளுதவி செய்கின்ற அனைவருக்கும் நன்றி கூறி மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

TUT - ஆவணி மாத இறைப்பணி - https://tut-temples.blogspot.com/2020/10/tut_16.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் (1)  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_21.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_11.html

அறம் செய்ய விரும்பு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_57.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

 இன்றைய இறைப்பணியோடு கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_14.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

 தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html

  நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html

 TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

நல்வினையாற்ற 19 வழிகள் - தானம் செய்ய பழகு - https://tut-temples.blogspot.com/2020/09/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - எதிர்பார்ப்பினைத் தவிர் - https://tut-temples.blogspot.com/2020/03/19_31.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html