"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, July 23, 2022

சரணம் சரணம் சண்முகா சரணம் - ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று ஆடி கிருத்திகை.அனைத்து முருகப் பெருமான் ஆலயங்களும் இன்று திருவிழாக்கோலம் தான். பொதுவாக கிருத்திகை என்றாலே நமக்கு சிறப்பு தான். இருந்தாலும் ஆடிக் கிருத்திகை என்றால் சிறப்பிலும் சிறப்பு. நமக்கு ஆடி கிருத்திகை என்றாலே வேல் மாறல் பாராயணம் தான் நினைவிற்கு வரும். இரண்டு முறை பொங்கி மடாலயத்தில் நடைபெற்று வரும் வேல்மாறல் அகண்ட பாராயணத்தில் நாம் கலந்து கொள்ளும் வாய்ப்பு முருகனருளால் நமக்கு கிடைத்தது. தற்போது சின்னாளபட்டியில் இருப்பதால் நாம் நேரில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை.

இன்றைய நாளில் நம் தளம் சார்பில் காலை அன்னசேவையும். சில அன்பர்களுக்கு கூழ் வாங்கி கொடுத்தோம்.பின்னர் ஏனைய ஜீவ ராசிகளுக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்தோம். இன்று மாலை சின்னாளப்பட்டி ஸ்ரீ முருகப்பெருமான் கோயிலில் பாமாலை படித்து வழக்கம் போல் லோக ஷேமத்திற்காக பிரார்த்தனை செய்தோம். மேலும் 20 முழம் பூக்கள், பத்தி, சந்தனம் , பன்னீர் , பஞ்ச தீப தட்டு என கொடுத்தோம். மேலும் சிவபுராணம், கணபதி கவசம் பிரதிகள் என கொடுத்தோம்.




அடுத்து சில தரிசன காட்சிகளை இங்கே பெற உள்ளோம். 





கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் இருந்து நாம் பெற்ற இன்றைய அழகனின் தரிசனம் எப்படி உள்ளது? ஒரு முறை அல்ல, பல முறை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகின்றது அல்லவா?



இங்கே நாம் தோரணமலை ஸ்ரீ முருகப் பெருமானின் அருள் தரிசனம் பெறுகின்றோம். தோரணமலையானுக்கு அரோகரா..அரோகரா என்று கூறி கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது அல்லவா? குருவருளால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தோரணமலைசெல்லும் வாய்ப்பு கிடைத்தது. அன்றைய தினம் கிடைத்த அருளும் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தது. இன்னும் ஓரிரு பதிவுகளில் மீண்டும் தோரண மலை செல்வோம்.

முருகப் பெருமானை எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ என்று அருணகிரிநாதர் போற்றுகின்றார். நாமும் அவ்வாறே போற்றி வழிபடுவோம். நமக்கு தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் முருகப் பெருமானின் பதத்தை பற்றுவோம். இந்தப் பற்று ஒன்றே போதும். இந்த கலியுக துன்பங்களில் இருந்து நாம் விடுபட கந்தன் பாதம் பற்றி, போற்றுவதை தவிர வேறு உபாயம் நமக்கில்லை. 

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று சொல்வார்கள். அது போல் பிள்ளை எப்படி இருந்தாலும் தாயன்பு தான் அன்பின் ஊற்று. தாயின் அன்பின் மூலம் தான் தந்தையை பற்றி அறிகின்றோம். மாதா, பிதா, குரு ,தெய்வம் என்ற வரிசையில் நமக்கு முருகப்பெருமான் தாயாக, தந்தையாக, குருவாக, தெய்வமாக இருக்கின்றார். 

    உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
    பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
    கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
    வேலப்பா! செந்தில் வாழ்வே!

    அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில்
    ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
    'முருகா!' என்று ஓதுவார் முன்.

    முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
    மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
    தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
    நம்பியே கைதொழுவேன் நான்." 

என்று அனுதினமும்  முருகப் பெருமானை போற்றி வழிபடுவோம். இன்றைய பதிவில் பூ மாலை கொண்டு வழிபாடு செய்ததை உங்களோடு பகிர்ந்தோம். அடுத்த பதிவில் பாமாலை கொண்டு வழிபாடு செய்ததை உங்களோடு பகிர குருவிடம் வேண்டுகின்றோம். பதிவின் தலைப்பை பார்த்தாலே உங்களுக்கு புரிந்து விடும் என்று நம்புகின்றோம். இருப்பினும் அடுத்த பதிவில் இதனை பற்றி மீண்டும் பேசுவோம்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. வெற்றிவேல். முருகனுக்கு அரோகரா....

முருகா! முருகா!! முருகா!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ - ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post.html

ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு - தேனி சண்முகநாத மலை தரிசனம் (3) - https://tut-temples.blogspot.com/2019/07/3_23.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_61.html

குரவு விரவு முருகா வருக! - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_26.html

திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_17.html

மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_21.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

Friday, July 15, 2022

கணபதி கவசம் - இடுக்கண் களைந்தே அருள்வாயே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்,
சகட சக்கரத் தாமரை நாயகன்,
அகட சக்கர இன்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! 

என்று கந்தபுராணத்தில்  உள்ள விநாயகர் காப்பு கொண்டு இன்றைய பதிவை ஆனைமுகன் அருள் கொண்டு தொடங்குவோம். இப்பாடலுக்கு தானே இறைவன் விளக்கமளித்துள்ளார். சரி..இனி கந்த புராண நிகழ்விற்கு செல்வோம்.

கச்சியப்ப சிவாச்சாரியர் காஞ்சிபுரத்தில் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகரான காளத்தியப்ப சிவாசாரியாரின் குமாரர். வடமொழி, தென்மொழி என இரு மொழிகளிலும் வல்லவராக இருந்த கச்சியப்பரின் கனவில் முருகன் தோன்றி தமிழர்கள் கந்த புராணத்தின் பெருமையை தமிழில் படித்து ஆனந்திக்கும் வண்ணம் இந்தப் புராணத்தை இயற்ற ஆணையிட்டார்.

தன்னால் முடியுமா என்று தயங்கிய கச்சியப்ப சிவாச்சாரியருக்கு கந்த புராணத்தின் முதல் அடியான ‘திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்’ என்னும் பதங்களை அசரீரியாக முருகப்பெருமானே எடுத்து கொடுத்தார்.

‘திகடச் சக்கரம்’ என்றால், ‘திகழ் தசக்கரம்’ என்று பொருள். அதாவது, திகழ்கின்ற பத்து கரங்களை உடையவன், செம்முகம் ஐந்து உடையவன் என்று விநாயகப் பெருமானைக் குறிப்பிடுகிறது இந்த வரி. அதையே தொடக்கமாகக் கொண்டு கச்சியப்பர் பாடத் தொடங்கினார்.

திகட சக்கரச் செம்முக மைந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர வின்மணி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

விளக்கம் : திகழ்கின்ற பத்து கரங்களையும் ஐந்து செம்முகங்களையும் உடையவன், சக்ராயுதத்தை உடையவன், தாமரைமேல் வீற்றிருப்பவன், எங்கும் நிறைந்திருப்பவன், விகட சக்கரனாகிய அந்த விநாயகனின் பாதங்களை வணங்குவோம்!

இவ்வாறு தொடங்கி கச்சியப்பர் கந்தனின் வரலாறஂறை இனிய பாடல்களாக எழுதத் தொடங்கினார். நாளும் நூறு நூறு பாடல்கள் எழுதி பரமன் தாளில் பணிவுடன் வைப்பார். மறுநாள் ஓலைச்சுவடிகளின் பாடல்களில் மெருகேற்றும் திருத்தங்கள் சில காணப்படும்.

கச்சியப்பர் சங்கர சம்ஹிதையிலிருந்து முதல் ஆறு காண்டங்களாகிய (உபதேச காண்டம் நீங்கலாக) சம்பவ காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் முதலியவை மட்டும் கந்த புராணத்தில் சேர்த்தார். சிவாச்சாரியார் தான் இயற்றிய 10,345 பாடல்களைை மேல் கூறிய ஆறு காண்டங்களாகப் பிரித்தார்.

நூலை இயற்றி முடித்த பின் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரங்கேற்றத்தின்போது, இறைவனை வணங்கி ‘திகட சக்கரம்’ என்ற அந்தப் பாடலை அவர் வாசித்ததும், ஒரு புலவர் 'திகட சக்கரம் எனல் என்ன?’ என்று கேட்டார். ‘திகழ் தசக்கரம் என்று பொருள்,’ என்றார் கச்சியப்பர். 'ழகரமும் தகரமும் சேரும் போது டகரமாக மாறும் சந்தி இலக்கண முறை தொல்காப்பியத்தில் அல்லது பின் வந்த இலக்கண நூல்களில் இல்லை என்று புலவர்கள் வாதித்தனர். ஆகவே, கந்தபுராண அரங்கேற்றம் அப்படியே நின்றது.

அன்று இரவு, அவர் கனவில் மீண்டும் முருகன் வந்தான். ‘நாளை அந்தப் புலவரின் சந்தேகம் சரியான முறையில் தீர்க்கப்படும்‘ என்றான். மறுநாள், அரங்கேற்றம் தொடரவேண்டிய நேரம். புலவர் ஒருவர் சபையில் கையில் வீரசோழியம் என்ற நூலுடன் நுழைந்து அந்த நூலின் சந்திப் படலத்தில் பதினெட்டாவது செய்யுளில் “திகடசக்கரம்“ என்று தொடரும் இலக்கண விதி இருக்கிறது என்று எடுத்துரைத்தார். திகழ் + தசக்கரம் = திகட சக்கரம் என்பதற்கான இலக்கணம் அங்கே குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்தி அடைநஂத புலவர்கள் திரும்பி பார்த்தால், வந்தப் புலவரைக் காணவில்லை. அவையினர் இலக்கணப் பிழை உள்ளதாகச் சொன்னவர்களின் சந்தேகத்தைத் தீர்க்க கச்சியப்பரின் காவியத்துக்கு முதல் அடி எடுத்துக்கொடுத்த முருகனே நேரில் வந்தது புரிந்து மெய் சிலிர்த்து போனார்கள். இதற்குப் பிறகு நூல் சிறப்பாக அரங்கேறியது. அரங்கேற்றி முடிக்க ஓர் ஆண்டு ஆனது. குமரகோட்டத்துப் பிரபுக்கள் கச்சியப்ப சிவாசாரியாரைக் கந்தபுராண நூலோடு பல்லக்கில் ஏற்றி சிறப்பித்தனர். 

இத்தகு சிறப்புமிக்க விநாயகர் காப்பு பாடலை தினமும் வழிபாட்டில் இணைத்து வளம் பல பெறுவோமாக!


நாம் நமது தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் வழிபாடுகளை முதன் முதலில் கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் இருந்து குருவருளால் தொடங்கினோம். ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு, மோட்ச தீப வழிபாடு, மாதந்தோறும்  குடிநீர் உபயம், இறை மூர்த்தங்களுக்கு மாலை உபயம், பௌர்ணமி பூஜை, வள்ளலார் பூஜை  என கடந்த 5 ஆண்டுகளாக சேவை செய்து வருகின்றோம். இவை அனைத்தும் குருவருளால் மட்டும் தான் சாத்தியம் என்பது தெளிவாக உணர்த்தப்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட இடம்  கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் தான் எனும் பொது கணநாதரின் அன்பு நம்மை மகிழ செய்கின்றது.

இந்த வழிபாட்டில் TUT மதுரை யாத்திரையில் நமக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷமாக கணபதி கவசம் கிடைத்து. இதனை நம் அன்பர் திரு.நாகராஜன் ஏகாம்பரம் அவர்கள் வழங்கினார்கள். இன்றைய பதிவில் கணபதி கவசம் பகிர்கின்றோம். அன்பர்கள் நித்திய வழிபாட்டில் இணைத்து குருவருளும், திருவருளும் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ விண்ணப்பம் வைக்கின்றோம்.






மேலும் இன்றைய TUT திருநெல்வேலி நவகைலாய யாத்திரையில் சுமார் 500 கணபதி கவசம் அச்சிட்டுள்ளோம். வழக்கம் போல் நாம் தரிசனம் செய்யும் கோயில்களில் சிவபுராணம் புத்தகம், கணபதி கவசம் என கொடுக்க குருவருளால் பணிக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு நொடியும் குருவின் கருணை கண்டு மெய் சிலிர்க்கின்றோம். இது வாழ வழி காட்டும் குருவின் பாதங்களை என்றும் வணங்கி மகிழ்கின்றோம்.


விநாயகர் காப்பு


(திகட சக்கர)


திகட சக்கரச் செம்முக மைந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர வின்மணி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். ......    1


(உச்சியின் மகுட)


உச்சியின் மகுட மின்ன வொளிர்தர நுதலி னோடை

வச்சிர மருப்பி னொற்றை மணிகொள் கிம்புரி வயங்க

மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண் டுற்ற

கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம். ......    2


சுப்பிரமணியர் காப்பு


(மூவிரு முகங்கள்)


மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி

ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி

மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்

சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி. ......    3


நூற் பயன்


(இந்திர ராகி)


இந்திர ராகிப் பார்மே லின்பமுற் றினிது மேவிச்

சிந்தையி னினைந்த முற்றிச் சிவகதி யதனிற் சேர்வர்

அந்தமி லவுணர் தங்க ளடல்கெட முனிந்த செவ்வேற்

கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வோரே. ......    4


வாழ்த்து


(வான்முகில் வழாது)


வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்

கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க

நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம். ......    5


ஆகத் திருவிருத்தம் - 5


குருவருளால் நேற்று முதல் தினசரி கூட்டுப் பிரார்த்தனையில் 208 ஆம் நாள் அன்று குருவருளால் கந்த புராணம் வாசிப்பு தொடங்கி உள்ளோம். இது போன்ற பாமாலை வழிபாடு நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் நமக்கு அருளி செய்தார். ஓம் ஸ்ரீ குருவே சரணம் என்று குருவின் பதம் பிடித்து வாழ, குருவருள் என்றும் நம்மை வழி நடத்திட வேண்டி பிரார்த்திக்கின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 கூடுவாஞ்சேரி குருநாதர் ஸ்ரீ அகத்தியர் & ஸ்ரீ குகன் அருள் பெற வாருங்கள் - 05.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/05062022.html

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_59.html

கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் சதுர்த்தி பெருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_35.html

விநாயகர் சதுர்த்தி தின விழா ...தொடர்ச்சி (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1_30.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/tut_29.html

 குருவருள் பரிபூரணம் - ஓம் அகத்தின் ஈசனே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2022/03/blog-post_15.html

அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்! - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 29.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/29102021.html

கூடுவாஞ்சேரி ஸ்ரீ குருவே! சரணம்! - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post.html

கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியரே! சரணம் !! - https://tut-temples.blogspot.com/2021/09/blog-post.html

ஓம் எம் அப்பன் அகத்தீசனே போற்றி! போற்றி!! - ஆவணி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 05.09.2021 - https://tut-temples.blogspot.com/2021/09/05092021.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 08.11.2020 - https://tut-temples.blogspot.com/2020/11/08112020.html

அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

Thursday, July 14, 2022

ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா! நமோ நம!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்றைய குரு பூர்ணிமா வழிபாடு மிக மிக சிறப்பாக நடைபெற்றது. நம் தளம் சார்பில் அன்ன தானம், வஸ்திர தானம், ஞான தானம் என ஒருங்கே  செய்ய வாய்ப்பு கிடைத்தது. இவை அனைத்தும் குருவருளால் தான் என்று நினைக்கும் போது மீண்டும் மீண்டும் குருவின் கருணை, அருள் கண்டு இன்புறுகின்றோம். குருவின் பதம் பிடித்தல் நாம் செய்த பாக்கியம் என்றே கருதுகின்றோம். ஒவ்வொருவருக்கும் குரு கிடைத்தல் தான் பிறவிப் பயன் ஆகும். கல்வி,தொழில், திருமணம் போன்றவற்றில் நாம் சிறக்காது இருந்தாலும், குரு கிடைத்தால்  மட்டும் போதும். அது போன்று தான் நம் அனைவருக்கும் கிடைத்தற்கரிய பேறாக குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் அருளாசி கொடுத்து வருகின்றார். எத்தனையோ பிறப்பில் இந்த மானிடப் பிறப்பில் நம் குருநாதர் நமக்கு கிடைத்துள்ளார் எனும் போது நேரத்தை வீண் செய்யாது, குருவின் வித்தைக்கு என்றும் வாரிசாக நாம் இருக்க வேண்டும்.

நேற்றைய தினம் நாம் இரண்டு கும்பாபிஷேக தரிசனம் கண்டு மகிழ்ந்தோம். அகரம் ஸ்ரீ உலோபமுத்ரா உடனுறை ஞான அகஸ்தீஷ்வர மூர்த்தி திருக்கோயில் - மஹா கும்பாபிஷேகம்  மற்றும்   சாம்பவர்வடகரை ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் - அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் கண்டு மகிழ்வுற்றோம். இரண்டு தரிசன அனுபவத்தை விரைவில் தனிப் பதிவில் தருகின்றோம்.

இன்றைய குரு நாள் பதிவாக குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானை போற்ற உள்ளோம். அனைவரும் போற்றி, போற்றி மகிழுங்கள்.



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா

நக்ஷத்ரஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா

மவுன தேசிக நாதனே நமோ நம:




ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
அநந்த கல்யாண குணாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
சித்தேஸ்வராய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
ஞானஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
மௌனஸ்வரூபாய நமோ நம:





ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
தேஜஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
சக்திஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
கனகஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
கானனஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
ஆத்மஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
குருஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
ரவிஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
மதிஸ்வரூபாய நமோ நம:




ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
அகண்டஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
அண்டஸ்வரூபாய நமோ நம:




ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
காந்தஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
மூலஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
காலஸ்வரூபாய நமோ நம:





ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
சாஸ்திரஸ்வரூபாய நமோ நம:




ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
பீஜஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
நிர்விகல்பஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
அரூடஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
சஞ்சாரஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
தியானஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
அனுகிரஹஸ்வரூபாய நமோ நம:




ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
ஆதிஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
ஜீவஸ்வரூபாய நமோ நம:






ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
அகாரஸ்வரூபாய நமோ நம:




ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
உகாரஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
மகாரஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
கீர்த்திஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
பிராணஸ்வரூபாய நமோ நம:


ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
ருத்ரஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
மாயாஸ்வரூபாய நமோ நம:





ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
அம்ருதஸ்வரூபாய நமோ நம:


ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
அக்னிஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
பிரேமஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
ஆகாசஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
நிராமயஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
அவினாசஸ்வரூபாய நமோ நம:





ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
மூலஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
காலஸ்வரூபாய நமோ நம:



ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
அவ்யயாய நமோ நம:


ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
வரிஷ்டாய நமோ நம:


ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
ஸர்வஞாய நமோ நம:




ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா
ஸர்வபூஜிதாய நமோ நம:


குருநாதரை போற்றிட நமக்கு கிடைத்த வாய்ப்பை கருதி மகிழ்கின்றோம். ஓம் ஸ்ரீ குருவே சரணம்! என்றும் குருவின் பதம்  பற்றி, பாதம்  போற்றி தொடர்வோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - 13.07.2022 - https://tut-temples.blogspot.com/2022/07/13072022.html

 அகரம் ஸ்ரீ உலோபமுத்ரா உடனுறை ஞான அகஸ்தீஷ்வர மூர்த்தி திருக்கோயில் - மஹா கும்பாபிஷேகம் - 11,12,13.07.2022 - https://tut-temples.blogspot.com/2022/07/111213072022.html

குரு பூர்ணிமா (16/7/2018) சிறப்புப் பதிவு (2) - https://tut-temples.blogspot.com/2019/07/1572018-2.html

ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - 24.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/24062021.html

அருணகிரிநாதர் குரு பூஜை - பௌர்ணமி திதியோடு கூடிய ஆனி மூலம் - 04.07 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/0407-2020.html

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_4.html

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_4.html

பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனுறை நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/blog-post_9.html

கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_7.html

 ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/09/38.html

ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_54.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html
 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html
 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

வைகாசி விசாகத்தை வரவேற்போம் - 04.06.2020  - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு  - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html