"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 26, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை!

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி, ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள், காரைக்குடிதெய்வத்திரு அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பு என சொல்லிக்கொண்டே போகலாம்.

சென்ற பதிவில் ஒரு அன்பரின் அனுபவத்தைப் பார்த்தோம். இன்றைய பதிவில் மீண்டும் ஜீவ நாடி அற்புதமாக தொடர விரும்புகின்றோம். தலைப்பைப் பார்த்ததும் எமக்கும் சிலிர்ப்பூட்டிய அனுபவமே தோன்றியது. சித்தன் அருளில் வெளியான பதிவை நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் ஆசி பெற்றே இன்று தருகின்றோம். இந்தத் திருத்தலம் பற்றி சில மாதங்களுக்கு முன்னர் தான் கேள்விப்பட்டோம். எப்போது நமக்கு தரிசனம் கிடைக்கும் என்று நாமும் வேண்டிய நிலையில், சித்தன் அருள் மூலமாக இந்த தலம் பற்றி பேச உள்ளோம். ஆம். அண்ணாமலையாரும், அரசண்ணாமலையாரும் என்று நாம் சொல்ல விரும்புகின்றோம். 

அண்ணாமலையார் பற்றி அனைவரும். அறிந்திருப்போம்.அரசண்ணாமலையார் பற்றி அறிய வேண்டியே  இந்தப்பதிவை தர விரும்புகின்றோம். சரி..ஜீவநாடி அற்புதத்திற்குள் செல்வோமா?




 "லக்னம்" வக்கிரமாகும்.  இது சித்தர்களுக்கு மட்டும்தான் தெரியும் - என்று அகத்தியர் சொன்னது, இதுவரையிலும் நான் கேட்டிராத செய்தி.

பொதுவாக ஜாதகம் பார்க்கிறவர்களுக்கு சனி, புதன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் வக்கிரமாகும் என்பது தெரிந்த விஷயம்.  ஆனால், பிறந்த நேரமே வக்கிரமாகும் என்பதை அவ்வளவு எளிதாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.  காரணம், அது அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது.  அந்த அளவுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் எங்கும் குறிப்பிட்டு இருப்பதாகத் தெரியவில்லை.

இதுவரையிலும் பலன் சொல்லி வந்தாலும் - அந்தப் பலன் பெருமளவு பலிக்காமல் போவதர்க்குச் சோதிடர்கள் "வாக்கு" சரியில்லை என்று சொல்ல முடியாது.  ஏனெனில் அவர்களால் "லக்னம்" வக்ரமாயிருப்பதக் கண்டு கொள்ள முடியாது என்பது ஒன்று.

இன்னொன்று, பிறந்த எல்லோருக்கும் லக்னம் வக்ரமாயிருக்கும் என்பதும் இல்லை.  எனவே உண்மையான தெய்வ பக்தியோடும், ஒழுக்கத்தோடும் உள்ளவர்கள் வாக்கில்  ஜோதிட பலனை முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.  இயற்கையாகவே லக்னம் வக்ரமாகியிருக்கிறதா இல்லையா என்பதைக் கூட நாசூக்காக தெய்வம் எடுத்துக் காட்டும் என்கிறார் அகஸ்தியர்.

இருப்பினும் எனக்கு உள்ளூர ஒரு ஆசை.  லக்னம் வக்ரமானத்தை எப்படியாவது அகஸ்தியரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலதடவை முயன்றேன்.

"இதெல்லாம் சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் பெற்ற தெய்வபலத்தால் கிடைக்கக் கூடியது.  சாதாரண மனிதர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது.

அப்படி தெரிந்து பலன் சொன்னால் அது தெய்வ பலத்திற்கு இணையானது.  விதியின் தன்மையை மாற்றக்கூடிய வலிமை வந்து விடும்.  இது மனிதர்களுடைய பிரார்த்தனைகளையும் தாண்டி நிற்கக்கூடியது.  அந்தப் பக்குவம் பெறப் பல நாட்களாகும்.  அதற்குரிய தகுதி உனக்கு இல்லை என்று சொன்னவர், எதற்கும் ஓரிரு தேவ ரகசியத்தை உனக்குச் சொல்லித் தருகிறேன்.  அதை எப்படிக் காப்பாற்றப் போகிறாய் என்பதைப் பொறுத்துதான் லக்ன வக்கிர விஷயம் சொல்வேன்" என்றார்.

இந்த அளவுக்ககாவது அகஸ்தியர் என்னை மதித்தாரே என்று சந்தோஷம்.  ஆனாலும் முழுமையாக என்னை நம்பவில்லை என்ற ஏமாற்றமும் இருந்தது.  அவர் சொன்ன சில தேவ ரகசியம் எனக்குப் புதுமையாக இருந்தது.  அந்த ரகசியத்தைப் பின்பற்றி நான் சொன்ன சில ஜாதகப் பலன்கள் முதலில் சரிவர பலிக்கவும் இல்லை.

அகஸ்தியருக்கு என்றைக்கு மனது வருகிறதோ அன்றைக்கு எனக்கு லக்ன வக்கிர நிலையைப் பற்றிச் சொல்லட்டும் என்று விட்டுவிட்டேன்!

திடீரென்று ஒருநாள், எனக்கு ஒரு உத்திரவு வந்தது.

"சட்டென்று ஏகுக" என்று ஈரோட்டிலுள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு என்னைப் போகச் சொன்னார்.  யாருடைய துணையும் இல்லாமல் நானும் புறப்பட்டேன்!

மறுநாள் காலையில் ஈரோட்டை அடைந்ததும் அங்கிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்தக் கிராமத்தை அடைந்த போது மதியம் மூன்று மணியாகிவிட்டது.

ஏனெனில் அந்தக் காலத்தில் இந்த சிறிய கிராமத்திற்கு செல்ல அவ்வளவு வசதியில்லை.  கட்டை வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம்.  ஆள் நடமாட்டம் அவ்வளவு இல்லாத கிராமம்.

அந்த கிராமத்தில் தலையாரி, கிராம அதிகாரிகள் கூட இல்லை.  வசதி காரணமாகப் பக்கத்துக் கிராமத்தில் தங்கி இருந்தனர்.  சாப்பிடுவதற்கு மட்டும் ஒரு புளிய மரத்திற்கு அடியில் பெஞ்ச் போட்டு டீக்கடை நடத்திக் கொண்டிருந்தார் ஒருவர்.  பொதுவாகச் சுற்றுப்புறச் சூழ்நிலை இயற்கை அற்புதமாக இருந்தது.

டீக்கடைக்காரர் முன்பு கட்டை வண்டியிலிருந்து இறங்கிய என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்.  அந்தக் கிராமத்தில் பேன்ட் ஷர்ட் சகிதம் கட்டை வண்டியிலிருந்து இறங்கிய நபர் நான் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும்.  இல்லையென்றால் என்னை அப்படி வியப்புடன் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

வண்டிக்காரருக்குக் காசு கொடுத்தேன்.  மரியாதை நிமித்தம் வாங்கிக் கொள்ள மறுத்தார்.

டீக்கடைப் பெஞ்சில் அமர்ந்தேன்.  பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.  தயிர் சாதத்தை வாங்கிச் சாப்பிட்டேன்.  அதுவரை நான் யார் எதற்காக அங்கு வந்திருக்கிறேன் என்பதை அவரும் கேட்கவில்லை.

சாப்பிட்டு முடித்ததும் அவரிடம் அந்தக் கிராமத்து மலைக் கோயிலைப் பற்றி மெதுவாக விசாரித்தேன்.

"இது பழமையான கோயிலுங்க, காலையிலே, மத்தியானம் மட்டும் நைவேத்தியம் செய்துவிட்டு அய்யரு வந்திருவாரு, ராத்திரி யாரும் அங்கே தங்கறதில்லை" என்றார்.

"ஏன் ராத்திரி தங்குவதில்லை?"

"தங்கினா யாரும் உயிரோடு வருவதில்லைங்க.  இதுவரைக்கும் ஏழெட்டு பேர் அங்கு தங்கிப் பார்த்து மறுநாள் பொணம் ஆகத்தான் வந்தாங்க" என்று ஒரு அணு குண்டைத் தூக்கிப் போட்டார்.

"ஏன்? என்ன ஆச்சு அவர்களுக்கு?"

"புலியோ, கரடியோ, காட்டு மிருகங்களோ கிடையாதுங்க.  ஆனால் அந்த தெய்வம் சக்தி படைச்சதுங்க.  யாரும் ராத்திரி அங்கு தங்கக் கூடாதுன்னு கிராமத்துப் பஞ்சாயத்து உத்தரவுங்க.  எதுக்கு அந்தக் கோயிலைப் பத்திக் கேட்கறீங்க?" என்று சந்தேகமாக இப்படியொரு வார்த்தையைக் கேட்டார்.

"இல்லை.  அந்த மலைக் கோயில்ல மூணு நாளைக்கு நான் ராத்திரி தங்கணும்.  அதுக்குத்தான் சென்னையிலிருந்து வந்திருக்கேன்" என்று நான் தயங்கித் தயங்கிச் சொன்னதும் தான் தாமதம், இடி விழுந்தார் போல் பதறிப் போனார் அந்த டீக்கடைக்காரர்.

"அய்யா, நீங்க ஊருக்குப் புதுசு.  வேண்டாங்க.  அந்த ஆசையை அடியோடு விட்டுவிடுங்க.  நல்லபடியா ஊர்போய்ச் சேருங்க.  பார்க்க சின்ன வயது, படிச்ச பிள்ளையாட்டம் இருக்கீங்க.  உங்களுக்கு எதுக்கு இந்த விபரீத விளையாட்டு.  பேசாம வந்த வழியைப் பார்த்துப் போங்க" என்று உரிமையோடு கடிந்து கொண்டார்.

அகஸ்தியர் எனக்கிட்ட உத்திரவே மூன்று நாளைக்கு அந்த மலைக் கோயிலில் இரவில் தங்க வேண்டும் என்பதுதான்.  இதை நேரடியாகச் சொல்லாமல் மறைத்துச் சொன்னேன்.  அதுவே அந்த டீக்கடைக்காரருக்கு தாங்கவில்லை. 

இதற்கிடையில் அங்கு வந்து சேர்ந்த அந்த ஊரைச் சேர்ந்த சிலரிடம், டீக்கடைக்காரர் என் விருப்பத்தை சொன்னபோது, "பைத்தியக்காரப் பிள்ளையாக இருக்காரே" என்று ஒட்டு மொத்தமாக ஒன்றாகச் சேர்ந்து என்னை அங்கிருந்து விரட்டியடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

நான் தனி ஆளாக நின்று கொண்டிருந்தேன்.  எனக்கு உதவி செய்ய யாரும் அங்கு முன் வரவில்லை.

என்னடா இது தர்ம சங்கடத்தில் அகஸ்தியர் நம்மை மாட்டி வைத்துவிட்டாரே என்று வருத்தமாகவும் இருந்தது.  கடைசியாக் உள்ளூர்ப் பெரிய மனிதர் யாரிடமாவது நேரிடையாகப் பேசிப் பார்த்தால் காரியம் வெற்றியடையுமே என்று முயற்சி செய்தேன்.

அன்றைக்குப் பார்த்து அந்த ஊர் தலையாரி, கிராம முன்சீப் போன்ற ஒருவர் கூட அந்தக் கிராமத்தில் இல்லை.

அகஸ்தியரிடம் இது பற்றிக் கேட்க நாடியை எடுத்துப் பார்த்தேன்.

"அஞ்சற்க.  தடையின்றி மலை மீது ஏறுவாய் -  ஆங்கொரு அதிசயத்தைத் தொடர்ந்து மூன்று நாள், நள்ளிரவில் நீ காணுவாய்" என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.

நாடியில் உத்திரவு கிடைத்ததும் எனக்கு மனம் மிகவும் தெம்பாக மாறிவிட்டது.  நடப்பது நடக்கட்டும் என்று முடிவெடுத்தேன்.  அவர்கள் சொன்னதைக் கேட்க்காமல் அந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதையைக் கண்ணால் அளவெடுத்துக் கொண்டேன்.  இரவில் பசி எடுத்தால் என்ன செய்வது என்பதை யோசித்து அந்த டீக்கடையில் இருந்த காய்ந்துபோன பன், கன்னிப் போயிருந்த சில பழங்களையும் வாங்கிக் கொண்டேன்.

பொழுது சாய ஆரம்பித்தது.

சட்டென்று அவர்களிடம் சொல்லாமலேயே, அந்த கிராமத்தின் வட கோடியிலிருந்த மலைக் கோயிலை நோக்கி தைரியமாக நடக்க ஆரம்பித்தேன்.  மனதில் தைரியம் இருந்தாலும், ஊர் பெயர் தெரியாத இந்த கிராமத்து மலைக் கோயிலில் மூன்று இரவு கழிக்க வேண்டுமே என்று நினைக்கும் பொழுது - வயிற்றைக் கலக்கத்தான் செய்தது.  ஒரு வேளை அந்த கிராமத்து மக்கள் பயந்தபடி நான் உயிரோடு திரும்பாவிட்டால்? என்ற நினைப்பும் அடிக்கடி வரத்தான் செய்தது.  அவ்வளவு தூரத்திற்கு அவர்கள் என்னைப் பயமுறுத்தி வைத்திருந்தனர்.

அந்தக் குன்றை அடைந்து அகஸ்தியரை வணங்கி நான் படி ஏற ஆரம்பித்தேன்.  பெரிய மலை ஒன்றும் இல்லை.  படிக்கற்கள் தாறுமாறாக இருந்தன.  இடையில் நிறையச் செடி, கொடிகள் வழியில் பின்னிக் கிடந்தன.

கண்ணுக்கு தெரிந்த தூரத்தில் பாம்பு சட்டை உரித்துப் போட்டிருப்பதும் தெரிந்தது.  மனிதனுக்குப் பயப்படா விட்டாலும் இந்த விஷ ஜந்துக்களுக்குப் பயந்து பாதி தூரம் ஏறி இருப்பேன்.

"யாரது அப்படியே நில்லுங்கோ, மேலே வராதீங்கோ" என்று சன்னமான குரல் திடீரென்று கேட்டது.

குனிந்து கொண்டே மலை ஏறிக் கொண்டிருந்த நான் சட்டென்று நின்று நிமிர்ந்து பார்த்தேன்.  வயதான ஒருவர் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.  நெருங்கி வந்த பொழுது, அவர் அந்தக் கோயிலின் குருக்கள் என்று தெரிந்தது.

இறைக்க இறைக்க வந்தவர் என்னைப் பற்றி விசாரித்தார்.  நிதானமாக எல்லாவற்றையும் சொன்னேன்.

"அகஸ்தியர் அனுபிச்சாரோ - இல்லை அந்த சர்வேஸ்வரன் தான் அனுப்பிச்சாரோ எனக்குத் தெரியாது.  நீங்க அங்கே சாயரட்ச்சைக்கு மேல் போகக் கூடாது.  தங்கவும் கூடாது" என்றார் பதறியபடி.

நான் சொல்வதை அவர் கேட்பதாகத் தெரியவில்லை.  கொஞ்சம் அசந்தால் என்னைத் தரதரவென்று இழுத்துக் கீழே கொண்டு வந்து நான்கு சாத்துச் சாத்தியிருப்பார் போலிருந்தது.

அவரைச் சமாளிப்பது கஷ்டம் என்பதைப் புரிந்து கொண்டு, சட்டென்று அவரைத் தாண்டி மலைமீது ஏறினேன்.

அவர் என்னை நோக்கி நிறைய சாபம் இட்டது எதிரொலியாக அங்கு கேட்டது.

சில நிமிஷம் என்னையே வெறுத்துப் பார்த்துவிட்டு பின்பு மள மளவென்று கீழே இறங்கிவிட்டார்.

அடுத்த இருபத்தி ரெண்டாவது நிமிடம் நான் அந்த மலைக் கோயிலை அடைந்தேன்.  சின்னப் பிரகாரம், செங்கல், சுண்ணாம்பு, கற் தூண்கள் கொண்டு பல ஆயிரம் வருஷத்திற்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோயில் இது.

உட்கார கல் திண்ணை இருந்தாலும் அவ்வளவு அழுக்கு.  தூசி.  எந்த மனித நடமாட்டமும் இல்லை.  ஒன்றிரண்டு வௌவால்கள் பறந்து பறந்து அமர்ந்தன.  சுற்றிலும் நோக்கினேன்.  இருட்டுகிற நேரம் என்பதால் அந்தக் கிராமப் புறமே அமைதியாகக் கிடந்தது.

மலைக் கோயிலில் எந்தவித வெளிச்சமும் இல்லை.  கர்ப்பக் கிரகத்திற்குள் தூங்க விளக்கு ஒன்று அரைகுறையாக எரிந்து கொண்டிருப்பதைக் கதவின் சாவித் துவாரத்தின் வழியாகப் பார்த்தேன்.

தாகம் எடுத்தால் அங்கு தண்ணீருக்குக் கூட வழியில்லை என்பது அப்புறம் தான் எனக்கே தெரிந்தது.  சரிதான் இதுவும் அடுத்த ரண மண்டல மலை கேஸ்தான் என்று புரிந்தபோது மனம் லேசாய் பதறியது.

கொஞ்ச நேரம் கழிந்தது.  இருட்டு நன்றாகக் கூடியதும் ஏராளமான மின் மினிப் பூச்சிகள் அந்தக் கோயிலின் பக்கவாட்டில் இருந்து வெளிவருவது தெரிந்தது.  அங்கு சென்றுதான் பார்ப்போமேன் என்று தட்டுத் தடுமாறிச் சென்ற பொழுது......

அந்தப் பாறையிலிருந்து மெல்லியதாகத் தண்ணீர் கசிந்து சிறு குட்டை போல் தேங்கிக் கிடந்தது.

இதைக் கண்டதும் எனக்குப் பாதி உயிர் திரும்பி வந்தது.

அப்பாடா, காய்ந்து போன அந்த பன்னை இந்த நீரில் முக்கி உண்டுவிட்டால் இன்றைய இரவு நல்லபடியாக கழியும்.  அந்த தண்ணீர் நல்ல தண்ணீரோ அல்லது கெட்ட தண்ணீரோ.  அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அதை உண்டு விட்டால் இன்னும் பன்னிரண்டு மணி நேரத்தை நல்லபடியாகக் கழித்துவிடலாம்.  பொழுது விடிந்த பிறகு, பின்பு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் ஏற்ப்பட்டது.

நேரம் நள்ளிரவு ஆகிக் கொண்டிருக்க அகஸ்தியர் என்ன அதிசயத்தை எனக்கு இங்கு காட்டப் போகிறார்? என்ற ஆவலுடன் காத்திருந்தேன்.

இரவு மண் பன்னிரண்டைத் தாண்டியிருக்கும்.

சட்டென்று அந்தக் கோயிலின் கருவறையிலிருந்து வேதகோஷம் அற்புதமாகக் கேட்டது.

பதினெட்டுப் பேர்கள் ஒன்றாக அமர்ந்து முறையாக சொன்ன அந்த வேத மந்திரங்கள், மனதுக்கு உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் தந்தன.

ஆலயமணி அடிப்பதும், வாசனைத் திரவியங்களால் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடப்பதும், அபிஷேகம் நடக்கும் பொழுது நம் நோயில்களில் என்னென்ன நடக்குமோ அத்தனையும் முறையாக, அழகாக, தீப தூபத்தொடு கருவறையில் நடப்பது போல் தோன்றியது.  மேளம் முழங்கியது.  வாத்திய கோஷம் ஒலித்தது.  புஷ்பங்கள், சந்தானம், பத்தி, அகில் புகை, சாம்பிராணிப் புகை அத்தனையும் அந்தக் கருவறைக் கதவிடுக்கிலிருந்து வெளியே வந்து என் மூக்கைத் துளைத்தன.  ஆனந்தத்தின் உச்சிக்கே நான் போனேன் என்று சொல்வதைவிட ஆண்டவனின் சந்நிதானத்தில் இருந்து இந்த அழகான அபிஷேக ஆராதனைகளை அந்த நள்ளிரவிலும் ரசித்தேன் என்பதே பொருந்தும்.

எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்று என்னை நானே கிள்ளிப் பார்த்தேன்.  வேதகோஷம் புஷ்பாஞ்சலியோடு ஆனந்தமாக அரை மணி நேரத்தில் முடிந்தது.  பிறகு கருவறையிலிருந்து எந்த சப்தமும் வரவே இல்லை.

இதுவரை என்காதில் விழுந்தது உண்மையான வேத கோஷமா அல்லது கற்பனையா என்று நான் நினைத்துப் பார்த்த பொழுது எனக்கே ஒன்றும் தெரியவில்லை.

மனப் பூர்வமாக அகஸ்தியருக்கு நன்றி சொல்லி - நாடியைப் பிரித்தேன்.

"இந்தக் கோவிலில் நூற்றி இருபது வருஷத்திற்கு ஒருமுறை தலையாயச் சித்தர் என் தலைமையில் பதினெட்டுச் சித்தர்கள், நள்ளிரவு நேரத்தில் இந்த சிவபெருமானுக்கு ஒன்று சேர்ந்து அபிஷேகம் செய்வது உண்டு.  எனது மைந்தன் என்பதால் உனக்கும் இந்தக் கண் கொள்ளாக் காட்ச்சியைக் காட்ட இக்கோவிலுக்கு வரவழைத்தேன்,  எங்களைக் காண முடியாது என்றாலும் சூட்ச்சுமமாக இந்த உணர்வினைத் தெரிய வைத்தேன்.  இது இன்று மாத்திரமல்ல, இன்னும் இரண்டு நாளைக்குத் தொடரும்.  உனக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கும். எனினும் இதை இப்போது யாரிடமும் சொல்வதில் பயனில்லை.  பொறுத்திரு" என்றார் அகஸ்தியர்.

நான் வெலவெலத்து மெய் மறந்து போனேன்.  பகவானே! இதெல்லாம் உண்மை தானா? என்று அடிக்கடி கேட்டேன்,  ஏனெனில் அப்படிப்பட்ட பாக்கியம் அவ்வளவு எளிதாக எனக்குக் கிடைத்திருக்குமா? என்பது எனக்கே சந்தேகமாகப் பட்டது.

அதே சமயம் இதை வேறு யாரிடத்திலேயும் மனப் பூர்வமாகப் பகிர்ந்து கொள்ளவும் முடியாதே!

ஜீவநாடி அற்புதங்கள் மீண்டும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

Monday, August 24, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி, ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள், காரைக்குடிதெய்வத்திரு அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பு என சொல்லிக்கொண்டே போகலாம். .

மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் அனுபவ பதிவை அப்படியே தருகின்றோம்.

அய்யா வணக்கம்.குருபிரான்ஶ்ரீஅகத்திய பெருமானுக்கும்.குருவின் ஆசியினை சுவடி மூலம் வெளிபடுத்தும் பாக்கியம் பெற்ற கணேசன் அய்யாவிற்க்கும் அநேக கோடி நமஸ்காரங்கள்..அடியவன் பரமசிவன்,மதுரை. 

சுமார்12 ஆண்டுகள் முன் உங்கள் அறிமுகம் கிடைத்தது.இது குருவின் ஆசி.அன்று ஓலையில் குருபிரானிடம் வாழ்வியல் பிரச்சணை குறித்து வாக்கு கேட்கும் பொழுது மிக நல்ல முறையில் குடும்பத்தினர் அணைவரையும் தனிதனியாக சொல்லி ஆசி செய்தார்கள்  (அதில் ஓரு Highlight என்னவென்றால் நாளை  உன் குழந்தைகளுக்கு திருமணமாகி அவர்களுக்கு குழந்தை பிறக்கும் அல்லவா அவர்களுக்கு என் ஆசி என்றென்றும் உண்டப்பா என்பது) 

அதிலிருந்து தொடந்து குருவின் திருவடிகளை இறுக பற்றிக்கொண்டேன் .அடிக்கடி குடில் வரும் பொழுது அங்கு நடக்கும் சேவைகளை பார்த்து மெதுவாக நாங்கள் சிறு குழுவாக இணைந்து அன்னசேவை மற்றும்  சிறுஅளவில் மருத்துவம் கல்விசேவை என தொடர்தோம் அச்சமயம் சேவைக்கு ஆசி கூறும் பொழுது ததீசியகம் போன்று சித்தர்குடில் போன்று இன்னவனின் அந்த இறையருள் மன்றமும் சமுதாய சேவையில் சிறப்புறும் என ஆசி வழங்கினார்கள் அது போன்று இதுகாலம் வரை சிறப்பான முறையில் தொண்டு தொடர்கிறது.அந்த கால நேரத்தில் பொருளாதாரத்தில் மிக பின்னடைவு ஏற்பட்டது. அச்சமயம் குருபிரானிடம் ஆசி கேட்கும்பொழுது உன் ஜாதகத்தில் தொழில் தோஷம் உள்ளது. எனவேதான் உன்னை சேவை மார்கத்தில் இறைவனருளை கொண்டு திசை திருப்பினோம் இல்லையென்றால் இன்னமின்னும் நீ ஒரு மனச்சோர்வை சந்தித்து இருப்பாய் என"குறிப்பிட்டார்கள்.

 பின் எனது குடும்பம் கூட்டு குடும்பம் இதில் இளைய அண்ணனின் மனைவியார் உடல் நலம் பாதிக்கபட்டார்கள் .குருபிரானும் தொடந்து சில மூலிகை வைத்தியங்களை குறிப்பிட்டு மருந்து சாப்பிட சொன்னார்கள் பின் பிரச்சணை பெரிதாகி மருத்துவமணையில் பல்வேறு மருந்துவங்கள் பார்த்து பல பல லட்சங்கள் செலவாகியது .ஆனால் பலன் இல்லை அண்ணியார் இறைவனடி சென்றுவிட்டார்கள் இதன் மூலம் சற்று தொழில் தொய்வு கடன் பிரச்சணை என கூடியது அச்சமயம் குடிலுக்கு எனது அண்ணாவின் மகளை அழைத்துவந்து ஆசி கேட்டோம் குருவின் ஆசியோடு சாந்தியோடு கூடிய மணவாழ்க்கை அமையும் என கூறி ஆசி வழங்கினார்கள்  சில வழிபாடுகளை சொன்னார்கள் அதன்படி அண்ணாவின் மகளுக்கு சில மாதங்களில் நல்ல மணமகன் கிடைத்து திருமணம் ஆனது இதனால் மேலும் கடன் கூடியது.பின் தந்தை வழியில் குடியிருந்த வீட்டை விற்று பெரும்பகுதி கடன் தீர்வானது ஆனால் முழுமையாக தீரவில்லை.தற்பொழுது சுமார் 10 ஆண்டுக்கு மேலாக சேவைகள் சிறப்பாக நடைபெறுகிறது.சேவைக்கு பொருளாதார சிக்கல் வரும் பொழுது குருபிரான் முன் எனது வேண்டுக்கோள் வைக்கபடும் அன்றோ மறுநாளோ தக்க நபர்களை குருபிரான் அனுப்பி பொருளாதாரத்தை சரிசெய்துவிடுவார்.சேவைக்கு மிக நல்ல முறையில் உதவும் என் குரு நாதர் என்தேவை என்று"வரும் பொழுது கையை இறுக்கிவிடுவார் ஆனால் என் முயற்சியால் எனது தேவையை நிறைவு செய்ய முடியவில்லை"ஆனால் குருவின் பலமான கைபிடியானது என்னை பிடித்துக்கொண்டுள்ளது .

சுமார் 10 ஆண்டுகளாகவே குருவின் ஆசியால் எனது பிள்ளைகளுக்கான கல்வி கட்டணத்தை எனது நண்பர்கள் மூலம் ஶ்ரீஅகத்தியர் பெருமான் ஆசியால்   நான் கேட்காமலே எனது மதுரை அன்பர்கள் பாங்க் கணக்கில் கட்டிவிடுகிறார்கள். எனது"கர்மா என்னவோ எனக்கு தெரியவில்லை உன் விதிபடி உனக்கு என்ன வேண்டுமா அது எப்படியாவது கிடைத்து விடும் என ஆசி கூறியது   நடக்கிறது. இதுவரை ஐந்து முறை பொதிகைமலையில் குரு தரிசனம் அமைந்தது .அங்கு சென்றபிறகு உணர்ந்தது குருபிரான் அழைக்காமல் பொதிகை செல்ல முடியாது என்பது.லட்சம் கோடியெல்லாம் அங்கு"செல்ல பயனில்லை குருவினை தரிசிக்க வேண்டுமென்ற லட்சியமே ஜெயிக்கும் என்பது. என் வினை விதி எவ்வாறு  என தெரியவில்லை ஆனால் குருபிரான் என் விதியில்  பலமான  மாற்றங்களை நடத்துவது பலமுறை உணரமுடிகிறது, குருவின் ஆசி என்னை பலமுறை காப்பாற்றி கைபிடித்து செல்வதை உணர்ந்தேன் .

ஒரு முறை சதுரகியில் கோரக்கர் குகை அருகே வழுக்கி விழுந்து சிறு அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டது.பின் 6 மாதங்களில் சரியானது. அது குறித்து குருபிரானிடம் கேட்டபொழுது கடும்விதியப்பா இறையருளை கொண்டு எளிமையக்கினோம். என்று வாக்குரைத்தார்கள்.மழையில் குடைபோல் வெயிலில் நிழல் போல் குருபிரான் இருப்பதால் விதியை பற்றி பெரிதாக நினைப்பதில்லை என் பிரச்சனை இது என அவரிடம் ஒப்பிவித்தபிறகு"அவர்தான் சரிசெய்யவேண்டும் அவர்தானே சரிசெய்வார்  எனவே இறுதியாக குருவின் திருவடி பற்றிக்கொண்டு குரு காட்டிய தர்மத்தை பிரார்த்தணை வழிபாடு என வரும் பொழுது ,வினையின் தன்மை அழுத்தம் குறைவது நன்றாக தெரிகிறது .இப்பொழுது கடந்த கால சுழ்நிலை தொடர்ந்தால் எவ்வாறு இருக்கும் என்பதும் இப்ப நாம் இருக்கும் நிலை மென்மையாக உள்ளதை   நன்றாக உணரமுடிகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரம்ம முகூர்த்த வாக்கினை போது குருபிரான் நமது அன்பர்களுக்கு பலருக்கு சொல்லியது போல் எனக்கும் 1108 சிவாயல தரிசனம் செய்ய அருளானை வழங்கினார்கள்.மீண்டும் சிலமாதங்கள் கழித்து சென்ற"போது முன்னர்"உரைத்த சிவாயல தரிசனத்தை நிறைவு செய்து வர மீண்டும் ஆசி வழங்கி அதன்பிறகு தான் உனக்கு மேல் வாக்கு வழங்கபடும் என"வலியுறுத்தியதால்   குருவின் வாக்குகளை அறிய முடியவில்லை.அதில் பாதியை கடந்துள்ளநிலைதான் இதுவரை குருவின் ஆசி தொடர்கிறது தர்மம் தொடர்கிறது.இறையாசி கிடைக்கிறது..தொடர்ந்த கணேஷன் அய்யாவின் அற்புதங்கள் தொடரட்டும் நன்றி வணக்கம் குருவின் ஆசியை சுவடி மூலம் பெறுவதற்க்கு மீண்டும் மீண்டும் கணேசன் அய்யாவிற்க்கு எனது வணக்கத்தை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம் என்றே நாம் சொல்ல விரும்புகின்றோம். குருவடியைப் பின்பற்றி நடந்தால் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குருநாதரின் அன்பால் தான் நடக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாக புரியும்.இதற்கு முந்தைய பதிவில் ஒரு அன்பரின் நாடி அனுபவம் பற்றி பார்த்தோம்.






நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு ஜீவநாடி  வாழ்க்கை வழிகாட்டி. சென்ற பதிவில் இருந்து மீண்டும் தொடர்கின்றோம்.

                       

 ஜீவநாடியில் வருகின்ற செய்திகள் சில நேரங்களில் ஆச்சரியப்படவைக்கின்றன. சித்தர்கள் மனிதர்களுக்கு உதவி புரிய ஆவலாக உள்ளார்கள். கலியுகத்தில் கடவுளை அடைய ஆயிரம் ஆயிரம் வழிகள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் அடைவதே சிறப்பான மற்றும் மிக எளிமையான முறையாகும். ஆனால் ஜீவநாடியில் வந்து சித்தர்கள் வாக்கு சொல்லும்போது பல நேரங்களில் அறியாமையில் உழலுகின்ற மக்களுக்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறார்கள். ஜீவநாடியை அவதூறு பேசுகிறவர்கள் பற்றியும் குறைபட்டுக் கொள்கிறார்கள். இது என்னமோ என்னைக் குறை சொல்வதாக கண்டிப்பாக எண்ண வேண்டாம்.


எமக்கு எந்தவித எதிர்பார்ப்பும் தேவையில்லை. ஆனால் சித்தர்களை அவதூறு பேசுவதை மட்டும் பொறுத்துக் கொள்ள முடியாது. சித்தர்கள் நம்மிடம் எந்தவித மரியாதையையும் எதிர்பார்க்காவிட்டாலும் நாம் நமது கடமையைச் செவ்வனே செய்தே ஆக வேண்டும். ஒரு சிலர் நமக்கு உடனே நாடி கிடைக்க வேண்டும், உடனே பலன் நடக்க வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். அவ்விதம் இல்லாவிடில் அவதூறு பேசுகிறார்கள். சித்தர்கள் அடிக்கடி வலியுறுத்தும் விஷயம், கலியுக மக்களை நம்பாதே என்பது தான். காரணம் ஒரு சிலர் தெரிந்தோ,
தெரியாமலோ செய்துவிடும் தவறுகள்தான். சித்தர்கள் எப்போதும் குறை சொல்பவர்கள் அல்ல. ஆனால் அதே சமயத்தில் தவறுகளையும் குற்றங்களையும் சுட்டிக் காட்டி நம்மை நல்வழிப்படுத்துவார்கள்.


மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்பதுபோல் சித்தர்கள் காட்டும் நெறி ஆரம்பத்தில் சற்று கஷ்டமாக இருந்தாலும் பின்பு சிறப்பாக இருக்கும். என்னிடம் அடிக்கடி ஜீவநாடி கேட்டு தற்போது ஸ்ரீ வித்யா உபாசனையைஜீவ நாடியில் சொல்லியபடி கடைபிடித்து வரும் நபர் ஒருவர் தனது நண்பருக்கு நாடி படிக்க வேண்டும் என்று அடிக்கடி கேட்டு வந்தார். ஒரு நாள் ஒதுக்கி வாருங்கள் எனச் சொன்னேன். அவருக்கு படித்து அவருடன் வந்த இன்னும் நான்கு நபர்களுக்குப் படித்து முடித்தும் அவர் குறிப்பிட்டச் சொன்ன அந்த நபர் வரவில்லை. அந்த நபர் பாராளுமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வேட்பாளராக முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும், அதைப் பற்றி கேட்கவே அவர் வருகிறார் என்றும் இவர் சொன்னார். 

மதியம் 12 மணிக்கு மேல் ஆனதால் சுவடியைக் கட்டி வைத்து விட்டு பூஜையில் வைத்த பின் பத்து நிமிடம் கழித்து வந்து சேர்ந்தார். இதற்கு மேல் படிக்க கூடாது என்பதால் பின்பு ஒரு முறை முயற்சி செய்யலாம் என சொல்லிவிட்டேன். வந்தவர் அரை மனதுடன் திரும்பினார். 100 கி.மீ பயணித்து வருகிறேன் நாடி படிக்க முடியாது என்கிறாரே என அங்கலாய்த்துக் கொண்டார். நான் ஒன்றும் அகங்காரம்
கொண்டவன் இல்லை. இறை உத்தரவை, தப்பாமல் கடைபிடிப்பவன், எனவே நான் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, கவலைப்படவும் கூடாது. காரணம் நாடி சொல்வது எனது தொழில் கிடையாது. மீண்டும் அவர் பலமுறை முயற்சி செய்தார். கிடைக்கவே இல்லை. கடைசியில் அந்த குறிப்பிட்ட கட்சி வேட்பாளரை அறிவித்தது. இவர் பெயர் அதில் இல்லை.


நாடி படித்து மட்டும் இவருக்கு சீட் கிடைக்கவா போகிறது என முருகப் பெருமான் அவருக்கு நாடி கிடைக்கும் பாக்கியத்தைத் தரவே இல்லை. இந்த சூட்சுமம் தெரியாமல் பலர் குழம்பி விடுகின்றனர். அதே நபர் மீண்டும் ஒரு நபரை அழைத்து வர நினைத்தார். அவரால் வர முடியவில்லை என்பதால் அவர் சார்பாக இவர் கேட்கலாம் என வந்து அமர்ந்தார். எடுத்த எடுப்பிலேயே சம்பந்தப்பட்டவர் வந்தால் உரிய பதில் வரும் என்றார் முருகப் பெருமான். குறிப்பிட்ட அந்த நபர் துணைவேந்தர் பதவிக்கு ஒரு குறிப்பிட்ட ஒரு பல்கலைக் கழகத்திற்காக முயற்சி செய்வதாகச் சொன்னார்,. நாடி படிக்க முடியவில்லை. ஏதேனும் சூட்சுமம் இருக்கும் என அவரே சொன்னார். சில நாட்கள் கழித்து துணைவேந்தரை அரசு அறிவித்தது. இவருடைய பெயர் இல்லை. இது தான் சூட்சுமம்.

எனவே சித்தர்களின் சூட்சுமத்தையும், ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியின் திருவிளையாடல்களையும் புரிந்து கொள்ள அவர் அருள் வேண்டும். நாடி படிக்க தாமதம் ஆவது கூட கர்ம வினைதான் என்பதை மறந்து விடக் கூடாது.


ஒரு தந்தையும், மகளும் நீண்ட கால முயற்சிக்குப் பிறகு ஜீவ நாடி கேட்க வந்தனர். முருகப் பெருமான் பின் வருமாறு உரைத்தார்.

“கோள்களின் சாரமது

குணமில்லா நிலைகண்டு

குடும்பத்தில் வருகின்ற

அவமானம் தலைகுனிவு

ஒழுக்கத்தின் வழியே

ஓர் முறை சீர்கேடு

வந்து நீங்கும்

பின் வளமாகுமே!”

என வந்தது. வந்தமர்ந்திருக்கும் இருவருக்கும் பாடல் வடிவில் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. விளக்கிச் சொல்லவும் எனக்கு மனமில்லை. படித்தால் உங்களுக்கே விளக்கம் புரியும் என நினைக்கிறேன். நாசூக்காக ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். இல்லாவிடில் அவமானம் வரும் என வருகிறது என்று மட்டும் சொல்லி அனுப்பிவிட்டேன்.

அதன் பின்னர் மூன்று மாதம் கழித்து முன் அனுமதி பெறாமல் வந்தார்கள்.உத்தரவு இல்லை என்பதால் திரும்பி விட்டார்கள். ஆறு மாதம் கழித்து அலறியடித்துக் கொண்டு அந்த பெண்ணின் தந்தை வந்தார். ஐயா, எனது மகளைக் காண வில்லை. நீங்கள் தான் ஏதேனும் வழி காட்ட வேண்டும் என்றார். சரி ஏற்கனவே முருகப் பெருமான் என்ன உரைத்தாரோ அதுதான் நடந்திருக்கும் என நினைத்து சுவடியைப் பூஜித்து பிரித்தேன்.

“காதலில்லை காமமில்லை

கோட்சார நிலை நலமில்லை

படிதாண்டினாள் ஆனாலும்

பத்தினிதான் பயமில்லை

சென்றழைத்தால் வரமாட்டாள்

அரவு திசை என்பதால்

புற்று மண் கொண்டு போ

புதுமையாய் வசமாவாள்

சேரவனம் சென்று

சேராமல் ஒரு மண்டலம்

தங்கவை தரமாகும்.

இந்தப் பெண் வீட்டை விட்டுச் சென்றது உண்மைதான். ஆனால் அது காதலினால் அல்ல. காமத்தினாலும் அல்ல. கோட்சார கிரகநிலை சரியில்லை நேரம் சரியில்லாததால் தான் இவ்விதம் நடந்திருக்கிறது. வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாலும் அவள் கற்பிக்கு ஏதும்
பங்கமில்லை. பத்தினிதான் பயப்பட வேண்டாம். இராகு திசை நடப்பதால் பாம்பு குடியிருக்கும் புற்று மண்ணைக் கொண்டு போய் கூப்பிடு வந்திடுவாள். சாதரணமாக சென்றழைத்தால் வர மாட்டாள். புற்று மண்ணிற்கு வசீகர சக்தி உண்டு. வந்திடுவாள். வந்தாலும் சேரவனம் என்றழைக்கப்படும் மலையாள தேசம் கேரளாவில் தனியாக ஒரு மண்டலம் தங்க வைத்துவிட்டால் எல்லாமே சரியாகும் என நீண்ட விளக்க உரையை உரைத்தார் முருகப்பெருமான்.

இப்படி பலரது வாழ்வில் ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி ஒரு மாபெரும் வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறது. இன்று பல அதிசயங்கள், அற்புதங்கள் கண்கூடாக நாம் ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருளால் கண்டும், கேட்டும் வருகின்றோம்.

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாம் முருகப்பெருமான் ஜீவநாடியில் உரைத்த செய்திகளை இங்கே நாம் குருவருளால் தந்துள்ளோம். மீண்டும் மீண்டும் படித்து முருகப்பெருமானின் ஆசியும், சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தராய் விளங்கும் ஸ்ரீ அகத்தியர்  பெருமானின் ஆசி பெறுங்கள். 

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


Sunday, August 23, 2020

பச்சை மயில் வாகனனே...சிவ பால சுப்ரமண்யனே வா....

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாசியால் ஆவணி மாத இறைப்பணி, ஆயில்ய ஆராதனை, மோட்ச தீப வழிபாடு அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது. ஆவணி மாத திருவோண நட்சத்திர வழிபாடு உள்ளது. அன்றைய தினம் மற்றுமொரு சிறப்பு வழிபாடும் உள்ளது. விரைவில் நம் தலத்தில் தனிப்பதிவில் காண்போம். இன்று என்ன பதிவு தரலாம் என்று சிந்தித்த போது, பச்சை மயில் வாகனன் வந்தார். கடந்த சில பதிவுகளில் அண்ணன் விநாயகப் பெருமான் அருளில் திளைத்தோம். இன்று அவரது தம்பி ஸ்ரீ முருகப் பெருமான் பற்றி காண உள்ளோம்.


பதிவின் தலைப்பை படித்தீர்களா? இது ஒரு பாடல் தான். முதலில் அந்தப் பாடலை தருகின்றோம்.

பச்சை மயில் வாகனனே சிவ 

பால சுப்ரமண்யனே வா இங்கு
இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில்
எள்ளளவும் ஐயமில்லையே

கொச்சை மொழியானாலும் உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் – எந்தன்
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும்
சாந்தம் நீறைந்தப்பா

நெஞ்சமெனும் கோவிலமைத்தே – அதில்
நேர்மையெனும் தீபம் வைத்தே - நீ
செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா – முருகா
சேவல் கொடி மயில் வீரா

வெள்ளமது பள்ளம் தனிலே – பாயும்
தன்மைபோல் உள்ளம் தனிலே – நீ
மெல்ல மெல்லப் புகுந்து வீட்டாய் – எந்தன்
கள்ள மெல்லாம் கரைந்ததப்பா

ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா – நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நீறைந்தவனே

அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனந் தந்தாய் - உனக்கு
ஆனந்த கோடி நமஸ்காரம் 

சரி..இனி பச்சை மயில் வாகனன் தரிசனம் காண உள்ளோம். அவ்வப்போது நாம் பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் தரிசனம் செய்து வருகின்றோம். அப்போது நண்பர் சத்யராஜ் பச்சைமலை முருகன் தரிசனம் பெற்று உள்ளீர்களா? என்று கேட்டார். நாம் பச்சைமலை என்றதும் அது வேறெங்கோ இருப்பதாக எண்ணி இல்லை என்றோம். அப்போது தான் அவர், பெருங்களத்தூரில் இருந்து சதானந்தபுரம் செல்லும் வழியில் இருப்பதாக கூறினார். சரி..ஒரு நாள் செல்லலாம் என்று தீர்மானித்தோம். 

பெருங்களத்தூரில் இருந்து சதானந்தபுரம் செல்லும் வழியில் கீழே உள்ள படத்தை கவனத்தில் கொண்டு அங்கிருந்து செல்ல வேண்டும்.


 வழக்கம் போல் மனதில் ஏகப்பட்ட கேள்விகள். பச்சை மலை செல்ல இருக்கின்றோம். மலை யாத்திரை எப்படி இருக்கும்? மலைப் பாதை எப்படி இருக்கும்? கிரிவலம் செல வழி இருக்குமா? என்ற பல கேள்விகளோடு சென்றோம். நண்பரும் நீங்களே அந்த அனுபவத்தை பாருங்கள் என்று கூறி நம்மை இன்னும் ஆச்சர்யப்படுத்தினார். ஆனால் இந்த தரிசனம் நமக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தான் தந்தது. அது என்ன? என்று பதிவின் இறுதியில் பாருங்களேன்.


               

இதோ..பச்சைமலை பாதை ஆரம்பம். சற்று கல்லும் கற்களையும் கொண்ட பாதை தான். சிறிய மலை போல் தான் தெரிந்தது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கேற்ப சிறிய மலை தான் தான் மலையேற்றம் நன்றாக இருந்தது.

                

                 

                 

கல்லும் கற்களும் காலுக்கு மெத்தை என்று சொல்லிக்கொண்டே மலை ஏறினோம். மலை ஏறுவதற்கேற்ப, கம்பு கட்டி வைத்து இருந்தார்கள். சற்று தூரத்தில் மூத்தோன் தரிசனம் பெற்றோம்.

                   

மூத்தோனை வணங்கி, அங்கிருந்து மீண்டும் புறப்பட்டோம்.

                    

அங்கே மேலே இருந்து, கீழே பார்த்தோம். அப்பப்பா..


                     

இதோ..மீண்டும் மலையேற்றம் ஆரம்பம்.

                  

அங்கே கார்த்திகை தீப்பற்ற தீப மேடை இருப்பதை கண்டோம். மனதுள் கோயில் பக்கத்தில் இருப்பதாக நினைத்தோம்.

                   

                    

அடுத்து சிவபெருமான் தரிசனம் பெற்றோம். சிவாய நாமா ..சிவாய நம என்று மனதுள் ஓதிக்கொண்டே இருந்தோம். ஈசனடியை போற்றினோம்..எந்தையடியைப் போற்றினோம்.


ஆஹா.வேல் கண்டு மனமகிழ்ந்தோம். முருகா..முருகா என ஓதினோம்., உள்ளம் உருகினோம். 


                      


நாம் ஏற்கனவே சொன்னது போல், அன்றைய தின தரிசனம் நமக்கு ஏமாற்றம் தந்தது. ஆம். திருக்கோயில் பூட்டி இருந்தது. கோயில் வெளியே மயில் வாகனம் கண்டு தரிசித்தோம்.




கோயில் நடைசாற்றி இருந்தமையால், மீண்டும் மீண்டும் அங்கே சுற்றிக் கொண்டே இருந்தோம். ஏன் எமக்கு நடை சாற்றி நம்மை இங்கு அழைத்தீர் என்று கேட்டோம். மீண்டும் எப்போ தரிசனம் தருவீர்? என்பது போன்ற பல கேள்விகளை பச்சைமலை முருகனிடம் சமர்பித்தோம். ஆனால் நாம் இருக்கும் கூடுவாஞ்சேரி அருகில் இப்படி ஒரு மலை ..அதுவும் நம் குருவின் குருவாம் முருகப்பெருமான் அருள் தரும் மலை..பச்சை மலை இருப்பதை நமக்கு உணர்த்தியமைக்கு நம் குருவிற்கு நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.

மீண்டும் பச்சைமலை முருகப்பெருமான் தரிசனம் பெற இப்போதும் காத்திருக்கின்றோம்.

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஓம் கம் கணபதயே நமஹ - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_65.html

 ஓதும் கிரி அது ஓதிய கிரி - ஓம் ஓதிமலை ஆண்டவரே போற்றி - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_16.html


வித்தக விநாயக! விரை கழல் சரணே! - உழவாரப்பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_22.html

மகான்களின் வி(வ)ழியில்...- ஆதனூரில் இராகவேந்திர சுவாமிகள் ஆராதனை - 25.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/25082019.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

வள்ளிமலை அற்புதங்கள் - (7) - https://tut-temples.blogspot.com/2019/12/7_26.html

வள்ளிமலை அற்புதங்கள் - (6) - https://tut-temples.blogspot.com/2019/12/6.html

வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html

தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

திருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது அள்ளித் தந்த உற்சாகமும் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_3.html

ஒரே கல்லுல மூணு மாங்கா : குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப் பணி செய்ய வாங்க! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post.html

தேனியில் ஞானப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - 05.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/05012020.html

2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/12/2020.html

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....! - https://tut-temples.blogspot.com/2019/12/tut-2020.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4)  - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

Saturday, August 22, 2020

ஓம் கம் கணபதயே நமஹ - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

அடியார் பெருமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முதலில் அனைவருக்கும் நம் தளம் சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் திருக்கோயிலில் சென்ற ஆண்டு நாம் உழவாரப் பணி செய்தோம். ஒரு நாள் அல்ல..இரண்டு நாட்கள் செய்தோம். அந்த அனுபவத்தை இன்றைய பதிவில் தருகின்றோம். 



கூடுவாஞ்சேரி மாமரத்து ஸ்ரீ சுயம்பு சித்தி விநாயகர் கோயில் தான் தேடல் உள்ள தேனீக்களாய் குழு தன் வேரை ஊன்றி கிளைகள் மூலம் தொண்டினை பரப்ப பிள்ளையார் சுழி போட்டது. ஆம். அன்னசேவை ஆரம்பித்த நாம், ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு, அமாவாசை மோட்ச தீபம் என இங்கே தான் செய்து வருகின்றோம். சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக குரு வழிபாடு, குரு காட்டிய மோட்ச தீப வழிபாடும் நம் குழுவின் சார்பில் செய்து வருகின்றோம் என்றால் அது கூடுவாஞ்சேரி விநாயகர் அருளால் தான். அப்படியே நாம் அங்கே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு மற்றும் இன்னும் பிற சேவைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

சரி..சென்ற ஆண்டில் நம் தளம் சார்பில் நடைபெற்ற உழவாரப் பணிக்கு செல்வோமா?






இதற்கு முந்தைய பதிவில் முதல் நாள் உழவாரப்பணி அனுபவத்தோடு நிறைவு செய்திருந்தோம். அனுபவத்திற்கு செல்லும் முன்னர் கூடுவாஞ்சேரி மாமர சுயம்பு சித்தி விநாயகர் திருக்கோயில் பற்றி சில செய்திகள் உங்களோடு பகிர விரும்புகின்றோம்.

1. கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள கோயில் 
2. இங்கு விநாயகர் இடம்புரி கணபதி, வலம்புரி கணபதி என்று அருளாசி தருகின்றார்.
3. இவர் சுயம்பு விநாயகர் ஆவார் 
4. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் 
4. நவகிரக நாயகர்கள் தம்பதி சகிதமாக அருளாசி தரும் தலம் 
5. குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் அருளாசி தரும் தலம் 
6. சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதியில்குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் வழிநடத்தும் அமாவாசை மோட்ச தீப வழிபாடு நடைபெற்று வரும் தலம்
7. முருகப் பெருமான் ஜீவ நாடியில் அகத்தியர் சூட்சுமத்தில் பூஜிக்கும் கணபதி என வாக்கு கொடுத்துள்ளார்

இது போன்று இத்திருத்தலம் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். 

சரி..இரண்டாம் நாள் உழவாரப் பணி அனுபவத்திற்கு சொல்லலாம்.
 

ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணிக்கு அதிக அன்பர்கள் வந்து இணைந்தார்கள். இதோ. தம்பி பாலமுருகன் வந்த உடன் சன்னிதி உள்ளே சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள்.


அடுத்து நண்பர் சத்யராஜும் தன் பங்கிற்கு அம்பாள் சன்னிதி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.



மேலும் நங்கநல்லூர் விஜய் ஆதித்தன் தம்பதியும் சன்னிதி உள்ளே சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள்.இவர் முருகப் பெருமான் சன்னிதி சுத்தம் செய்தார்.


அடுத்து தாம்பரம் அனந்த கிருஷ்ணன் தம்பதியினரும் இணைந்தார்கள். இவர்கள் மாமரத்து ஈஸ்வர் சன்னிதி எடுத்துக்கொண்டார்கள். திருமதி விஜய சுந்தரி அம்மா அவர்கள் சன்னிதி வெளியே சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். மகளிர் அணியினர் சன்னிதி வெளியே உள்ள எண்ணெய் பிசுக்குக்கள் சுத்தம் செய்வது போன்ற பணியில் ஈடுபட்டனர். சுமார் 9 மணி அளவில் ஆரம்பித்த பணி, நேரம் ஆகஆக சூடு பிடித்தது.





அடுத்து  ஒவ்வொரு சன்னிதியில் முழு வீச்சில் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதை கீழே நீங்கள் காணலாம்.






சுமார் 11:30 மணி இருக்கும். தகிக்கும் சூடு ஆரம்பித்து விட்டது. முந்தைய நாள் நாம் எடுத்து வைத்த பாத்திரங்களை துலக்கும் பணியில் மகளிர் அணியினர் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள். அன்றைய தினம் ஒவ்வொரு சன்னிதியில் இருந்து மேலும் பிரபைகள் சேர்ந்து விட்டது.





மகளிர் அணியினர் கை வண்ணத்தில் மிளிரும் பாத்திரங்கள்.





தம்பி பாலமுருகன் சிவன் சன்னிதி மேலே ஏறி அங்கே இருந்த பொருட்களை சுத்தம் செய்ய ஆரம்பித்த காட்சி 



இறை அழகு காக்கும் பிரபைகள் ஒவ்வொன்றாக சுத்தம் செய்வதற்கு தயாரான நிலை நீங்கள் காணலாம்.








மகளிரின் கைவண்ணத்தில் மீண்டும் விளக்குகள் 






சுமார்  1மணி அளவில் நாங்கள் குருதரிசனம் பெற மகளிரோடு கிளம்பினோம். ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திரர் 
சுவாமிகளின் 348 ஆவது வருட ஆராதனை ஆதனுரில் நடைபெறுவது பற்றி நமக்கு அழைப்பிதழ் மூலம் 
தெரிவித்து இருந்தார்கள். மகளிரை மட்டும் அழைத்துக்கொண்டு குரு தரிசனம் பெற நாம் சென்றோம்.





குருவே சரணம்..திருவே சரணம் ...


உழவாரப்பணிக்கு நம்மை ஆட்படுத்தி, குரு தரிசனம் பெற வைக்கின்றார்கள் எனும் போது இறையின் கருணைக்கு எல்லை ஏது என்று நமக்கு தோன்றியது. அடுத்து மீண்டும் உழவாரப்பணி ஆரம்பம் 



அன்றைய தினம் கோயிலில் தண்ணீர் வசதி மின் பற்றாக்குறையால் இல்லை. உடனே தண்ணீர் கேன் கொண்டு பணியை மீண்டும் தொடர்ந்தோம்.


மதிய வேளையில் திரு.ஆதித்யா அவர்களும் நம்முடன் இறைசேவை ஆற்ற இணைந்தார்கள்.










மேலே உள்ள இடம் பணிக்கு முன்னர். கீழே உள்ள படம் சுத்தம் செய்த பின்னர்...





ஒவ்வொரு சன்னிதி உள்ளும் தூய்மை செய்தாகி விட்டது. நம் அகமும் ஏறக்குறைய தூய்மையாகி விட்டது.


அடுத்து பித்தளை பூஜை பொருட்களை குருக்களின் வழிகாட்டல் படி, திருநீறு கொண்டு துடைத்தோம்.




ஒவ்வொரு பூஜை பொருளும் திருநீறு கொண்டு துடைத்த பின்னர் பளபளப்பாக ஜொலித்தது.






நீங்கள் இங்கே நம் குழுவின் கைங்கர்ய பணியை காணலாம்.


சுமார் 4 மணி அளவில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, இதோ இறை தரிசனத்திற்காக நாம் பணிந்த காட்சி 




குருக்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள் 


ஒவ்வொரு அன்பருக்கும் பிரசாதம் கோயில் சார்பில் வழங்கப்பட்டது.



ஒவ்வொரு உழவாரப் பணியும் ஒவ்வொரு விதமாக மனதிற்கு நெருக்கமாக அமையும். அந்தவகையில் இந்த உழவாரப் பணி நம் மனதில் இன்னும் தொண்டு செய்ய தூண்டியது.




நண்பர் சத்யராஜ் அவர்கள் பிரசாதம் பெற்ற போது




                                  திரு. விஜய் ஆதித்தன் தம்பதியர் பிரசாதம் பெற்ற போது 







திருச்சியில் இருந்து வந்த எம் உறவினர் பிரசாதம் பெற்ற போது 

24.08.2019 மற்றும் 25.08.2019 ஆகிய இரண்டு நாட்களிலும் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுக்கு நம் தளம் சார்பில் சிறிய கைங்கரியமாக இந்த உழவாரப்பணி அமைந்தது. உள்ளம் மகிழ்ந்தது. மனம் மகிழ்ச்சியுற்றது . இரண்டு நாட்களிலும் சிரமம் பாராது இணைந்து தொண்டாற்றிய அணைத்து அன்பர்களுக்கும் நம் தளம் சார்பில் இந்தப் பதிவின் மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக:-

வித்தக விநாயக! விரை கழல் சரணே! - உழவாரப்பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_22.html

மகான்களின் வி(வ)ழியில்...- ஆதனூரில் இராகவேந்திர சுவாமிகள் ஆராதனை - 25.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/25082019.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

திருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது அள்ளித் தந்த உற்சாகமும் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_3.html

ஒரே கல்லுல மூணு மாங்கா : குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப் பணி செய்ய வாங்க! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post.html


தேனியில் ஞானப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - 05.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/05012020.html

2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/12/2020.html

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....! - https://tut-temples.blogspot.com/2019/12/tut-2020.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4)  - https://tut-temples.blogspot.com/2019/10/4.html