"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, April 10, 2022

ஸ்ரீ ராம நவமி சிறப்பு பதிவு - குருவின் மொழியில் ஸ்ரீ ராமாயணம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று ஸ்ரீ ராம நவமி.ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என்பதற்கு உதாரணம் ஸ்ரீ ராமர். தமிழகத்தில் இருக்கும் பல கோயில்களின் தல புராணங்களில் ராமர் வழிபட்ட இடம், லிங்கத்தை பிரதிஷ்டை செய்த இடம் என்றெல்லாம் குறிப்புகள் இருக்கின்றன. ஏகபத்தினி விரதன் என்பதற்கு பல தாரங்களை மணக்கும் ராஜ வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஒரே தாரத்தை போற்றும் அவதாரமாக இருப்பதால், ராமர் ஓர் இல்லுக்குச் சொந்தக்காரர் ஆனார். அதனால் ராமரின் கால் படாத இடமே தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்குத் தல புராணங்கள் பலவற்றில் அவரின் பெருமை வெளிப்படுகின்றது. துஷ்டர்களுக்கு ஒரே பாணம் ஒரு வில்!சரணம் என்று வந்தோர்க்கு அபயம் என்ற வாக்கு ஒரு சொல்! ஜென்மம் முழுவதும் இணைந்து வாழ ஒரு மனைவி ஒரு இல்! இதுதான் ராமனின் அறநெறி ஆகும்.

இன்றைய ராம நவமியில் சிறப்பு பதிவாக இந்த பதிவை குருவருளால் தருகின்றோம்.தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் இருந்து பகிரப்பட்ட ஸ்ரீ ராமா நவமி சிறப்பு செய்தியை அப்படியே தருகின்றோம்.




அன்பர்கள் அனைவருக்கும் கணேசனின் பணிவான வணக்கம் ..

இன்று ஸ்ரீ ராம நவமி இந்த ஸ்ரீ ராமநவமி நாளில்..

ராமபிரானின் புகழையும் அவரது மகிமைகளையும் அநேகம் அநேகம் பேர் ஆங்காங்கே பாடிக்கொண்டு  இருப்பார்கள்..

ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டும் இருப்பார்கள்..

இது ஒருபுறமிருக்க ஸ்ரீராமரின் மகிமைகளைப் பற்றியும், அவரது பெருமைகளைப் பற்றியும்  குருநாதர் முன்னரே ஒரு முறை அருளியதை இங்கு பதிவிட்டுள்ளோம்.இதன் சிறப்பு என்னவென்றால் ஒட்டுமொத்த ராமாயணத்தையும் அந்த ராம நாமத்தின் மூலம் வெளிப்படுத்தி இருப்பார் ..

அதை அனைவரும் படித்து பயன்பெற வேண்டுகிறேன்..

நன்றி ..வணக்கம்.. அகஸ்தியர் அருள்..

ஸ்ரீ இராமபிரான் பற்றி..?

இறை கருணை
கொண்டா ராம் .

அதனால் உலகை
படைத்தா ராம் .

இறை கருணை
கொண்டா ராம் .

அதனால் உலகை
படைத்தாராம்.

இன்பம் இஃகுது என காட்டி தந்தா ராம் .!

இன்பம் இஃகுது என காட்டி தந்தா ராம் .!

ஈகை குணம் வளர்த்தலே என்றும் உயர்வை தரும் என்றா ராம் .

இன்பமிது என காட்டி
தந்தா ராம் .

இறை கருணை
கொண்டா ராம் .

அதனால் உலகை
படைத்தா ராம்.

இறை கருணை
கொண்டா ராம் .

அஃகுதப்ப இறை கருணை கொண்டதனால்,
அஃகுதப்ப இறை கருணை கொண்டுள்ள அத்தன்மையை மீண்டும் உள் உணர்ந்து பார்க்க ஞானிகள்
வந்தா ராம் .

இறைகருணை
கொண்டா ராம் .

இஃகுதப்ப ஒவ்வொரு கணமும் உயிர்கள் மீது அன்பு தந்தா ராம் .

இயம்புங்கால் திருஷ்டியில் அருளை தருவா ராம் .
துயரத்தில் தன்னை இணைத்து
கொள்வா ராம் .
தொல்லை வரும் பொழுதெல்லாம் தன் பக்தருக்கு முன்னால்
நடப்பா ராம் .
அவர் வருவா ராம் .
போவா ராம் .
இருப்பா ராம் ,
என்றும் நல் அருளை
தருவா ராம் .

ஆயினும் இதை
உணர்ந்தவர் யார்.?
புரிந்தவர் யார்.?
இஃகுதப்ப இருக்கும் கருணை வெள்ளம் அனைத்தும் சொந்தம் என
கொண்டவ ராம் .

அதனை தன் உள்ளே உள்ள கருத்தில் ஞானியர்
கொண்டவ ராம் .

அஃகுதப்ப
கொண்டவ ராம் .

அஃகுதப்ப கொண்டவ ராம் தன்னை கொண்டவளே அன்னை.!
கொண்டவ ராம் .


தன்னை கொண்டவளே அன்னை.!
இயம்புங்கால் அவர் என்றும்
இருப்பா ராம் .


அவர் இருந்து, இருந்து உயிர்களை
காப்பா ராம் .


காத்து. காத்து ரட்சித்து
அருள்வா ராம் .


அவர் என்றும் உயிர்களோடு பரிவாய்.!
உறுதுணையாய்
இருப்பா ராம் .
அவர் போவா ராம் ,
வருவா ராம்

என்று தோன்றினாலும் அவர் என்றென்றும்
இருப்பா ராம் .


அவர் பக்தர்கள் நெஞ்சில்
கிடப்பா ராம் .


அவர் அன்புக்கு என்றும் அடிமையாய் இருப்பா ராம் .


இஃகுதை உணர்ந்த உயிருக்குள் உயிராய் ஒளிர்வா ராம் .

அவர் என்றும்
உயர்ந்தா ராம் .


அவர் ஒருபொழுதும்
தாழ்ந்தா ராம் என்று யாரும் கூற இயலாதாம்.!

இஃகுதப்ப இறை கருணை
கொண்டா ராம் .


அதன் தன்மையை புரிய புரிய ஒவ்வொரு உள்ளமும்
மகிழ்வில் ஆழுமாம்.

இறை கருணை
கொண்டா ராம்
.
இறை கருணை
கொண்டா ராம் .


அதனால் அவர்
வந்தா ராம் .


அதனால் பிள்ளை என பிறந்தா ராம் .


அஃகுதும் நாடு ஆள்வது தொல்லை என துறந்தா ராம் .


பிறகு வனம் சென்றா ராம் .

அஃகுதொப்ப அங்கு சிலரை
கண்டா ராம் .


அதன் மூலம் பக்தியை வெளிப்படுத்தினா ராம் .

அஃகுதப்ப அவர் தன் துணையை
பிரிந்தா ராம் .


அங்கு அவர் கண்டா ராம் .


தன் துணைக்கு மேல் துணையாய் தன்னையே தனக்குள் அடிமைபடுத்தும் ஒரு துணையை,
அஃகுதப்ப வாயுபுத்திரனை அவர் கண்டா ராம் .


தோழமை கொண்டா ராம் .


அஃதொப்ப அவர் வாலியை ஒதுக்கி வைத்தா ராம் .

அஃகுதப்ப வாலியின் சோதரனை ஏற்றி
வைத்தா ராம் .


அதனால் வாலியை மோட்சத்தில் இறக்கி
வைத்தா ராம் .


அஃகுதப்ப அவர் மனிதருக்கும், இறைக்கும் பாலம் என
இருந்தா ராம் .


அஃகுதப்ப மனிதர் செய்யும் பாவமெல்லாம் களைய அவர் பாலம் என இருந்தா ராம் .

அஃகுதப்ப ஆழியை
கடந்தா ராம் .


அஃகுதப்ப ஆழிதாண்டி, ஆழிதாண்டி அது பிறவி பெருங்கடல் தாண்டும் வண்ணம், மனிதர் உணரும் வண்ணம் அவர் பாலம் அமைத்தா ராம் .


அஃகுதப்ப சென்றா ராம் . அசுரர், தலை எடுத்தா ராம் .

அசுரர் தலை எடுத்தா ராம் .

அஃகுதப்ப அங்கு தன் ஆத்மாவென விளங்கும் அன்னையை
மீட்டா ராம் .


அஃகுதப்ப ஆத்மாவை அவர் மீண்டும் சோதித்து
பார்த்தா ராம் .

அஃகுதப்ப மோட்சம் என்னும் தேசத்தில் அமர்ந்தா ராம் .

ஆட்சியை
தொடர்ந்தா ராம் .

அஃகுதப்ப,
பஞ்ச புலனெல்லாம்,
அஃகுதப்ப வித விதமாய் அலை கழிக்க ,அஃகுதப்ப ஆத்மா தன்னை அது தொலைக்க,
தொலைந்ததை வைராக்கியம் என்னும் வாய்வு சென்று தேட அஃகுதப்ப தேடி, கண்டுபிடித்து அதை உறுதியோடு பிடித்துக்கொள்ள,
அஃகுதப்ப அந்த ஆத்மாவுக்குள் உள்ள ஆத்மஞானம் செல்ல அஃகுதே இஃகுது.


இஃகுதே அஃகுது என
உணர்ந்தா ராம் ,
உணர்ந்தா ராம் .
அவரெல்லாம் ராமர் வழி வந்தா ராம் ,
வந்தா ராம் .
அஃகுதப்ப அப்படி வருவோரெல்லாம்
சிறந்தா ராம் .!
சிறந்தா ராம் .!


அஃகுதப்ப சிறந்தோரெல்லாம் தொடர்ந்து பிறவியற்ற நிலைக்கு உயர்ந்தா ராம் , உயர்ந்தா ராம் .
இறை கருணை
கொண்டா ராம் .


அதனால் உயிர்கள் மீது அன்பு பொழிந்தா ராம் .
அவர் என்றென்றும்
இருப்பா ராம் .


பக்தர்கள் உள்ளத்தில்
கிடப்பா ராம் .


இஃகுது உணர்ந்தோரே உண்மையை
உணர்ந்தோராம், ஏனையோர் எல்லாம் தாழ்ந்தோ ராம் .


எனவே தாழ்ந்தோ ராம் என்கிற நிலை தாண்டி உயர்ந்தோ ராம் என்ற நிலைக்கு வர அன்றாடம் அவரவர் வாயும் அஃகுதப்ப ராம் ,ராம் ராம் என ஜபிக்க அவரவர் ஆத்மாவும் உயர்ந்தோ ராம் என்கிற நிலைக்கு வரும்.



இஃகுதப்ப யாம் இறை அருளால் அஃகுதப்ப உள்ளத்தில் கலந்து அன்பினால் உயர்ந்து வாழ இறை அருளால் நல்லாசி கூறுகிறோம்.

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சந்திப்போம்:-

உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html




அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன் - 10.04.2022

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

இன்று பங்குனி மாத பூச நட்சத்திரம். இன்று அதிகாலை 3 மணி முதல் நாளை காலை 5 மணி வரை பூச  நட்சத்திரம் உள்ளது.  பூச நட்சத்திரம் என்றாலே வள்ளலார் பெருமானார் தான்  நினைவிற்கு வருகின்றார். ஆனால் பங்குனி மாத பூச நட்சத்திர  நாளில்  முனையடுவார் நாயனார் குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய  அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகளில் சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார் , அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார், திருநீலகண்ட நாயனார், அப்பூதியடிகள், கலிக்கம்ப நாயனார், எறிபத்த நாயனார்,காரி நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார், தண்டியடிகள், காரைக்கால் அம்மை, நேச நாயனார்,கணநாதநாயனார் பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம். 

இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார்.  மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து , சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார், இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்த திருநீலகண்ட நாயனார்,   திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்து ,தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்து பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்று, சிவானந்த அனுபவத்தில் முக்தி பெற்றவர் அப்பூதியடிகள். அதுபோல்  இன்று நாம் முனையடுவார் நாயனார் பற்றி அறிய உள்ளோம்.


முனையடுவார் நாயனார் – போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கு தொண்டு செய்தவர்

முனையடுவார் நாயனார் போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கும் சிவாலயங்களுக்கும் தொண்டுகள் செய்த‌ வேளாளர். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

முனையடுவார் நாயனார் பண்டைய சோழ நாட்டில் திருநீடூரில் வசித்த வேளாளர். திருநீடூர் தற்போது மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.

பண்டைய காலத்தில் வீரத்தில் சிறந்தவர்கள் தம்மோடு மற்ற பல வீரர்களையும் சேர்த்துக் கொண்டு சிறுபடையை உருவாக்கி வைப்பர்.

மன்னர்களுக்கிடையே போர்நிகழும் சமயத்தில், அம்மன்னர்களுள் எவரேனும் இவர்களின் உதவியை வேண்டினால், அம்மன்னனுடன் சேர்ந்து போர் செய்து உதவி நாடிய மன்னனுக்கு வெற்றி கிடைக்கும்படி செய்வர்.

போரில் வென்ற மன்னனும் தனக்கு உதவிய படையுடை பெரும்வீரனுக்கு பல பரிசுகளையும் பொன்னையும் பொருளையும் வழங்கி சிறப்பிப்பர்.

கடையேழு வள்ளல்களுள் ஒருவராக வைக்கப்பட்ட மலையமான் திருமுடி காரி இத்தகைய படையைக் கொண்டிருந்த பெரும்வீரன்.

ம‌லையமான் திருமுடி காரி எந்த அரசனுக்கு துணையாக நின்று போர் புரிகிறானோ, அம்மன்னன் உறுதியாக போரில் வெற்றி பெறுவான் என்ற எண்ணம் அக்கால மக்களிடத்தில் நிலவியது.

சங்க நூல்களில் பாண்டியனுக்கு உதவிய பெரும்படை வீரன் பாண்டியன் மறவன் என்றும், சோழனுக்கு உதவிய பெரும்படை வீரன் சோழ மறவன் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

வீரத்தில் சிறந்த முனையடுவார் நாயனாரும் தம்முடன் பல வீரர்களைச் சேர்த்துக் கொண்டு பெரும்படை வீரராகத் திகழ்ந்தார்.

தம் உதவியை நாடிவரும் மன்னனின் சார்பாகப் போர் புரிந்து அம்மன்னனுக்கு பெரும் வெற்றியை ஈட்டி தந்தார்.

மன்னர்களும் பெரும்படை வீரரான முனையடுவாருக்கு பொன்னையும் பொருளையும் பரிசில்களையும் வழங்கினர்.

பல உயிர்களைக் கொல்லும் கொடிய தொழிலான போர்த்தொழிலைச் செய்தாலும், முனையடுவார் சிவனாரிடத்தும் சிவனடியவர்களிடத்தும் பேரன்பினைக் கொண்டிருந்தார்.

ஆதலால் போர் தொழிலால் கிடைத்த பொருட்கள் முழுவதையும் சிவனடியார்களுக்கு திருத்தொண்டுகள் புரிவதற்கும், சிவாலயங்களுக்கு தொண்டுகள் புரிவதற்கும் பயன்படுத்தினார்.

சிவனடியார்களை வரவேற்று அறுசுவை உண்டியளித்து, அவர்கள் வேண்டுபவற்றை முகம் காணாது வழங்கி திருதொண்டு புரிந்தார்.

போர்முனையில் எதிரிகளை அடுவதைத் தொழிலாக கொண்டிருந்ததால், இவரின் இயற்பெயர் மறைந்து முனையடுவார் என்று அழைக்கப்பட்டார். இதில் முனை என்பது போர் முனையைக் குறிக்கும்.

போரிட்டு வந்த ஊதியத்தால் சிவனடியார்களுக்குத் தொண்டுகள் செய்த முனையடுவார் நாயனார், 63 நாயன்மார்களில் ஒருவராக வைக்கப்படும் சிறப்பினைப் பெற்றார்.

முனையடுவார் நாயனார் குருபூஜை பங்குனி மாதம் பூசம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

முனையடுவார் நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் ‘அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்‘ என்று போற்றுகிறார்.


9.05. முனையடுவார் நாயனார் புராணம்


4089 மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திரு நாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழுந்தேன்
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும்
சேறு நறுவாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர்
9.5.1

4090

விளங்கும் வண்மை மிக்குள்ள வேளாண் தலைமைக்குடி முதல்வர்
களம் கொள் மிடற்றுக் கண் நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும்
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார்
9.5.2

4091

மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர் வந்து தம்பால் மா நிதியம்
ஆற்றும் பரிசு பேசினால் அதன் நடுவு நிலை வைத்து
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்றுச் சென்று எறிந்து
போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார்
9.5.3

4092

இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள்
சொன்ன சொன்ன படி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும்
கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனியுள்ளுறுத்த கலந்து அளித்து
மன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டு ஆற்றி வைகினார்
9.5.4

4093

மற்றிந் நிலை பல்நெடு நாள் வையம் நிகழச் செய்து வழி
உற்ற அன்பின் செந்நெறியால் உமையாள் கணவன் திருஅருளால்
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார்
முற்ற உழந்த முனை அடுவார் என்னும் நாமம் முன்னுடையார்
9.5.5

4094

யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார் தமக்கு இன்பம்
மேவ அளிக்கும் முனை அடுவார் விரைப் பூம் கமலக் கழல் வணங்கி
தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செம்கோல் முறை புரியும்
காவல் பூண்ட கழற் சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம்
9.5.6



4095

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி

செறிவுண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும்
குறியுண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால்
வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்க
பறியுண்டவர் எம்பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே
9.5.7

திருச்சிற்றம்பலம் 


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் - 08.04.2022 - https://tut-temples.blogspot.com/2022/04/08042022.html

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன் -05.04.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/09032022.html

நாட்டமிகு தண்டிக்கும் அடியேன் - 29.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/29032022.html

தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன் - 02.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/02022022.html

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் - 26.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/26022022.html

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - 20.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/20022022.html

 கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் அடியார்க்கும் அடியேன் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/06022022_5.html

ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் - 03.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/03022022.html

 திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் - 26.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/26012022_25.html

சண்டேசுவர நாயனார் குரு பூஜை - 22.01.22 - https://tut-temples.blogspot.com/2022/01/220122.html

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் - 16.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/16012022.html

கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன் - 15.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/15012022.html

 தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் - 09.01.2022  - https://tut-temples.blogspot.com/2022/01/09012022.html

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் - 03.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/03012022.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

Saturday, April 9, 2022

சுவாமி சரவணானந்தா அவர்களின் 16ம் ஆண்டு மகா குருபூஜை விழா அழைப்பிதழ் - 10.04.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்

நம் தளத்தில் அவ்வப்போது குருபூஜை தரிசனங்கள் கண்டு வருகின்றோம்.நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை, பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022,  குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022, ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை,  ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 , அருள்மிகு  ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104வது மஹா  குரு பூஜை அழைப்பிதழ்,  மகான் ஸ்ரீமத் தோபா சுவாமிகளின் 172-ம் ஆண்டு குருபூஜை - 01.04.2022  அழைப்பிதழ்  என சித்தர்களின் தரிசனம் நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இன்று சுவாமி சரவணானந்தா அவர்களின் 16ம் ஆண்டு மகா குருபூஜை விழா அழைப்பிதழ் காண இருக்கின்றோம்.



திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

உபதேசப் பகுதியில் வள்ளல் பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டது “தயவு” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப்பாக்கள், தயாவிளக்கமாலை, தயவுப்பெருநெறி, தயவுக்குறள்என்றபலஉரைநடைநூல்களும்பலபாக்களும்யாத்துள்ளார்கள். சுவாமிஅவர்களுக்கு, மேட்டுக்குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி, அவர்களதுஇளம்வயதிலேயேகிடைத்துள்ளது.
அவர்கள் தமது 96 வயதில் சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் என்ற இடத்தில், “சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்” கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

சுவாமி சரவணானந்தா தயவு இல்லம் குடமுழுக்கு விழா கடந்த மார்ச் 1 ஆம் தேதி நடைபெற்றது. நமது கோவை தலைவர்கள் தயவு ராமதாஸ் ஐயா, தயவு பிரபாகர் ஐயா, தயவு சிவகுமார் ஐயா....சிறப்பாக நமது கண்டியன் கோவில் சுவாமிகள் அருட்திரு திருவடிதாசன் ஐயா வுமே கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் உள்ள அருள்காட்சிகளை கீழே தருகின்றோம்.








மீண்டும் ஒருமுறை சுவாமிகள் பற்றி அறிய உள்ளோம்.

நமது தயவுக் குருநாதர் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள், 1910ல் தோன்றினார். இவர், 1929-ம் ஆண்டு சத்திய ஞான சபாபதி சுவாமிகளைச் சார்ந்தார். 1930ல் திருவருட்பாவைப் பயிலும் பேறு பெற்றார். தினசரி ஜீவ தயவுப் பணியில் ஈடுபட்டு, எஞ்சிய நேரத்தில் எல்லாம், திரு அருட்பாவினை, ஆழ்ந்த நிலையில் ஆராயவும், அதற்கான புதிய புதிய கருத்துக்கள், விளக்கங்கள் தினமும் வெளியாகக் கண்டு உணர்ந்து வந்தார்.
1938ஆம் ஆண்டு வடலூர் தைப்பூச விழாவிற்குச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தங்கி இருந்த போது கற்பூர நன் மணத்தையும், வள்ளற் பெருமானின் காட்சியையும் ஒருங்கே காணும் பேற்றினைப் பெற்றார். அடுத்து சத்திய ஞான சபைத் தத்துவ விளக்க நூல் வெளியிட அவருக்கு, திருவருளே உதவியது.

1943ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்து தயாவிளக்க மாலை உருவாக்கப் பெற்று விட்டது. இதை ஏற்கும் வகையில், இயற்கையில், அக அனகச் சான்றாக, 1.8.1943ல், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காட்சி, வானக் கோளின் கணித முறைப்படி, கடக நடு பூசத்து ஒரே காலில் சூரியன், சந்திரன், குரு விளங்கின போது, கலி முடிந்து கிருத யுகம் தோன்றும் என்ற குறிப்புக்கும் மேலாக, திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள் தமது சிரநடு சிற்றம்பலத்தில், கடக நடு பூச காற்குளத்து ஒரு அணுப்புள்ளி அருட்ஜோதி ஒளியில் வெளிப்பட்ட இரவி மதி குருவுமே சுத்த ஞான பிரணவ தேகத்தை குறிப்பதாய்க் கண்டு கொண்டதோடு, வள்ளலாரின் திரிதேக சித்தி உண்மையும், தமது ஆன்ம அகத்தில் கண்டு உணர்ந்து பதிவாக்கிக் கொண்டார்.
இந்தப் பதிவு அக்கணமே எல்லா ஆன்மாக்களிலும் அனகமாகப் பதிவாகி விட்டது.

1.8.1943-ல் சரவணானந்த சுவாமிகள், தமது சிரநடு பூசமாகிய காற்குளத்தே பெற்ற சூரிய, சந்திர, குரு எனும் முக்கோட் காட்சியின் மூலம், மூவியல் கொண்ட இறை இயல் உண்மை அருட்பெருஞ்ஜோதியே, ஒரு தயவு அனுபவம் வழங்குவதை கண்டு உணர்ந்தார்.

இந்த தயவு அனுபவத்தைத் தொடர்ந்து சுவாமிகள் தயவுப்பாக்கள் இயற்றினார். தொடர்ந்து பலவான உரை நூல்களும் அடுத்தடுத்து வெளியாயின.
. இதன்பின்தான் அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம் எழுத ஆரம்பித்தார். 1.1.1960 முதல் 8.3.1962 முடிய 798 நாட்களில், அருட்பெருஞ்ஜோதி அகவல் அடிகள், 1596க் கும் விளக்கம், சுருக்கமாக எழுதப்பெற்றன.

இந்த அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம் எழுதும்போது ஒரு உச்சக் கட்டத்தில் .. அதாவது 4.2.1962 ஞாயிற்றுக் கிழமை நடு இரவிலும், 5.2.1962 திங்கட் கிழமையிலும், உலகத்தார் எல்லாம் உலகம் அழியப் போகின்றது என அஞ்சிய நிலையில், அண்டத்தில் மகர ராசியில் எட்டு கிரகங்கள் ஒன்று கூடிய நிகழ்வு நடைபெற்றது.

இதனை சுவாமிகள், தமது சிரநடு பகர பீடத்தில் கடக நடு பூச நட்சத்திர ஒளியை, திரைகள் எல்லாம் விலக்கப்பட்டு, எல்லாப் பக்கங்களிலும் எல்லாவற்றையும் கண்டு உணரும் வண்ணம்

“திரையெல்லாம் தவிர்த்துச் செவ்வியுற்று ஆங்கே
வரையெலாம் விளங்க வயங்கு செஞ்சுடராக” (அருட்பெருஞ்ஜோதி அகவல்)க் கண்டு உணர்ந்தார்.

இந்த அனுபவம் எல்லா ஆன்மாக்களுக்கும் பொதுவானதாகும். பின்னால், இதன் விரிவினில் “பூசமும் நாமும்” என்ற சிறு நூலும் வெளியானது.
இதன் பின் 1969ஆம் ஆண்டு, சாலை சகாப்த திங்களாகிய வைகாசி முதல், 4 மாதங்களில் அகவலுக்கு விரிவான உரை விளக்கத்தை1,000 பக்கங்களைக் கொண்ட 4 பெரிய நோட்டுப் புத்தகங்களில் பதிவாகி நிறைவுற்றது.

சுவாமிகள் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்க பெரு நூலினை. வள்ளலாரின் சித்தி நிலைப் பேறு உற்ற நூற்றாண்டின் நிறைவாக வெளியிடத் திருவுள்ளம் கொண்டார்.

திருவருள் கூட்டி வைக்க - அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அய்யா அவர்களுக்கு, 14.6.1973ல் சுவாமி சரவணானந்தரை தயவு சத்திய ஞான கோட்டத்தில் தரிசிக்கும் பேறு கிட்டியது.

அவரது வேண்டுகோளின்படி, சுவாமிகளும், தாம் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை கையெழுத்துப் பிரதிகளை அருட் செல்வரிடம் அளித்தார்.

இராமலிங்கர் பணிமன்றம் மூலம் அதனை அச்சிட்டு, வடலூர் சாலை சகாப்த நாளான வைகாசி, 11ம் நாள் அதாவது, 18.5.1974-ல் வடலூர் வள்ளலார் குருகுலம் மேனிலைப் பள்ளியில் உள்ள O.P.R. மண்டபத்திலும், சத்திய தருமச் சாலை மேடையிலும், முதன் முதலாக சுவாமிகள் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்க நூல் வெளியிடப்பட்டது.

இப்படிப்பட்ட உண்மைகளை எல்லாம் இன்று நாம் கருத்திற் கொண்டு சுவாமிகளின் அருட்பெருஞ் ஜோதி அகவல் இரண்டு வரிகளுக்கான உரை விளக்கத்தை பிரதி மாதந் தோறும் வாசிக்கும் பணி தொடங்கப் பெற்றுள்ளது – என்பதை இந்த சத்திய ஞான சபையில் தெரிவித்துக்கொள்கின்றோம் 





வாய்ப்புள்ள அன்பர்கள் அழைப்பிதழ் கண்டு குருவருளும், திருவருளும் பெற வேண்டுகின்றோம்.

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

- மீண்டும் அடுத்த பதிவில் பேசுவோம்.

மீள்பதிவாக:-

 திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தின சிறப்பு பதிவு - 2 - https://tut-temples.blogspot.com/2021/10/2.html

திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தின சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_49.html

உலகம் தழைக்க வந்துஉதித்த உருவே வருக! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_4.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_5.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - அருள்மிகு ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104 ஆம் ஆண்டு குருபூஜை - 27.03.2022  - https://tut-temples.blogspot.com/2022/03/104-27032022.html

ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/68-27032022.html

ஓம் ஸ்ரீ குருவே சரணம்! - ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை - https://tut-temples.blogspot.com/2022/03/99.html

குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/8-13032022.html

 குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

 பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/11032022.html

 மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 09.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/134-09032022.html

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/188-27022022.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html