"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, April 10, 2022

ஸ்ரீ ராம நவமி சிறப்பு பதிவு - குருவின் மொழியில் ஸ்ரீ ராமாயணம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று ஸ்ரீ ராம நவமி.ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என்பதற்கு உதாரணம் ஸ்ரீ ராமர். தமிழகத்தில் இருக்கும் பல கோயில்களின் தல புராணங்களில் ராமர் வழிபட்ட இடம், லிங்கத்தை பிரதிஷ்டை செய்த இடம் என்றெல்லாம் குறிப்புகள் இருக்கின்றன. ஏகபத்தினி விரதன் என்பதற்கு பல தாரங்களை மணக்கும் ராஜ வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஒரே தாரத்தை போற்றும் அவதாரமாக இருப்பதால், ராமர் ஓர் இல்லுக்குச் சொந்தக்காரர் ஆனார். அதனால் ராமரின் கால் படாத இடமே தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்குத் தல புராணங்கள் பலவற்றில் அவரின் பெருமை வெளிப்படுகின்றது. துஷ்டர்களுக்கு ஒரே பாணம் ஒரு வில்!சரணம் என்று வந்தோர்க்கு அபயம் என்ற வாக்கு ஒரு சொல்! ஜென்மம் முழுவதும் இணைந்து வாழ ஒரு மனைவி ஒரு இல்! இதுதான் ராமனின் அறநெறி ஆகும்.

இன்றைய ராம நவமியில் சிறப்பு பதிவாக இந்த பதிவை குருவருளால் தருகின்றோம்.தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் இருந்து பகிரப்பட்ட ஸ்ரீ ராமா நவமி சிறப்பு செய்தியை அப்படியே தருகின்றோம்.




அன்பர்கள் அனைவருக்கும் கணேசனின் பணிவான வணக்கம் ..

இன்று ஸ்ரீ ராம நவமி இந்த ஸ்ரீ ராமநவமி நாளில்..

ராமபிரானின் புகழையும் அவரது மகிமைகளையும் அநேகம் அநேகம் பேர் ஆங்காங்கே பாடிக்கொண்டு  இருப்பார்கள்..

ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டும் இருப்பார்கள்..

இது ஒருபுறமிருக்க ஸ்ரீராமரின் மகிமைகளைப் பற்றியும், அவரது பெருமைகளைப் பற்றியும்  குருநாதர் முன்னரே ஒரு முறை அருளியதை இங்கு பதிவிட்டுள்ளோம்.இதன் சிறப்பு என்னவென்றால் ஒட்டுமொத்த ராமாயணத்தையும் அந்த ராம நாமத்தின் மூலம் வெளிப்படுத்தி இருப்பார் ..

அதை அனைவரும் படித்து பயன்பெற வேண்டுகிறேன்..

நன்றி ..வணக்கம்.. அகஸ்தியர் அருள்..

ஸ்ரீ இராமபிரான் பற்றி..?

இறை கருணை
கொண்டா ராம் .

அதனால் உலகை
படைத்தா ராம் .

இறை கருணை
கொண்டா ராம் .

அதனால் உலகை
படைத்தாராம்.

இன்பம் இஃகுது என காட்டி தந்தா ராம் .!

இன்பம் இஃகுது என காட்டி தந்தா ராம் .!

ஈகை குணம் வளர்த்தலே என்றும் உயர்வை தரும் என்றா ராம் .

இன்பமிது என காட்டி
தந்தா ராம் .

இறை கருணை
கொண்டா ராம் .

அதனால் உலகை
படைத்தா ராம்.

இறை கருணை
கொண்டா ராம் .

அஃகுதப்ப இறை கருணை கொண்டதனால்,
அஃகுதப்ப இறை கருணை கொண்டுள்ள அத்தன்மையை மீண்டும் உள் உணர்ந்து பார்க்க ஞானிகள்
வந்தா ராம் .

இறைகருணை
கொண்டா ராம் .

இஃகுதப்ப ஒவ்வொரு கணமும் உயிர்கள் மீது அன்பு தந்தா ராம் .

இயம்புங்கால் திருஷ்டியில் அருளை தருவா ராம் .
துயரத்தில் தன்னை இணைத்து
கொள்வா ராம் .
தொல்லை வரும் பொழுதெல்லாம் தன் பக்தருக்கு முன்னால்
நடப்பா ராம் .
அவர் வருவா ராம் .
போவா ராம் .
இருப்பா ராம் ,
என்றும் நல் அருளை
தருவா ராம் .

ஆயினும் இதை
உணர்ந்தவர் யார்.?
புரிந்தவர் யார்.?
இஃகுதப்ப இருக்கும் கருணை வெள்ளம் அனைத்தும் சொந்தம் என
கொண்டவ ராம் .

அதனை தன் உள்ளே உள்ள கருத்தில் ஞானியர்
கொண்டவ ராம் .

அஃகுதப்ப
கொண்டவ ராம் .

அஃகுதப்ப கொண்டவ ராம் தன்னை கொண்டவளே அன்னை.!
கொண்டவ ராம் .


தன்னை கொண்டவளே அன்னை.!
இயம்புங்கால் அவர் என்றும்
இருப்பா ராம் .


அவர் இருந்து, இருந்து உயிர்களை
காப்பா ராம் .


காத்து. காத்து ரட்சித்து
அருள்வா ராம் .


அவர் என்றும் உயிர்களோடு பரிவாய்.!
உறுதுணையாய்
இருப்பா ராம் .
அவர் போவா ராம் ,
வருவா ராம்

என்று தோன்றினாலும் அவர் என்றென்றும்
இருப்பா ராம் .


அவர் பக்தர்கள் நெஞ்சில்
கிடப்பா ராம் .


அவர் அன்புக்கு என்றும் அடிமையாய் இருப்பா ராம் .


இஃகுதை உணர்ந்த உயிருக்குள் உயிராய் ஒளிர்வா ராம் .

அவர் என்றும்
உயர்ந்தா ராம் .


அவர் ஒருபொழுதும்
தாழ்ந்தா ராம் என்று யாரும் கூற இயலாதாம்.!

இஃகுதப்ப இறை கருணை
கொண்டா ராம் .


அதன் தன்மையை புரிய புரிய ஒவ்வொரு உள்ளமும்
மகிழ்வில் ஆழுமாம்.

இறை கருணை
கொண்டா ராம்
.
இறை கருணை
கொண்டா ராம் .


அதனால் அவர்
வந்தா ராம் .


அதனால் பிள்ளை என பிறந்தா ராம் .


அஃகுதும் நாடு ஆள்வது தொல்லை என துறந்தா ராம் .


பிறகு வனம் சென்றா ராம் .

அஃகுதொப்ப அங்கு சிலரை
கண்டா ராம் .


அதன் மூலம் பக்தியை வெளிப்படுத்தினா ராம் .

அஃகுதப்ப அவர் தன் துணையை
பிரிந்தா ராம் .


அங்கு அவர் கண்டா ராம் .


தன் துணைக்கு மேல் துணையாய் தன்னையே தனக்குள் அடிமைபடுத்தும் ஒரு துணையை,
அஃகுதப்ப வாயுபுத்திரனை அவர் கண்டா ராம் .


தோழமை கொண்டா ராம் .


அஃதொப்ப அவர் வாலியை ஒதுக்கி வைத்தா ராம் .

அஃகுதப்ப வாலியின் சோதரனை ஏற்றி
வைத்தா ராம் .


அதனால் வாலியை மோட்சத்தில் இறக்கி
வைத்தா ராம் .


அஃகுதப்ப அவர் மனிதருக்கும், இறைக்கும் பாலம் என
இருந்தா ராம் .


அஃகுதப்ப மனிதர் செய்யும் பாவமெல்லாம் களைய அவர் பாலம் என இருந்தா ராம் .

அஃகுதப்ப ஆழியை
கடந்தா ராம் .


அஃகுதப்ப ஆழிதாண்டி, ஆழிதாண்டி அது பிறவி பெருங்கடல் தாண்டும் வண்ணம், மனிதர் உணரும் வண்ணம் அவர் பாலம் அமைத்தா ராம் .


அஃகுதப்ப சென்றா ராம் . அசுரர், தலை எடுத்தா ராம் .

அசுரர் தலை எடுத்தா ராம் .

அஃகுதப்ப அங்கு தன் ஆத்மாவென விளங்கும் அன்னையை
மீட்டா ராம் .


அஃகுதப்ப ஆத்மாவை அவர் மீண்டும் சோதித்து
பார்த்தா ராம் .

அஃகுதப்ப மோட்சம் என்னும் தேசத்தில் அமர்ந்தா ராம் .

ஆட்சியை
தொடர்ந்தா ராம் .

அஃகுதப்ப,
பஞ்ச புலனெல்லாம்,
அஃகுதப்ப வித விதமாய் அலை கழிக்க ,அஃகுதப்ப ஆத்மா தன்னை அது தொலைக்க,
தொலைந்ததை வைராக்கியம் என்னும் வாய்வு சென்று தேட அஃகுதப்ப தேடி, கண்டுபிடித்து அதை உறுதியோடு பிடித்துக்கொள்ள,
அஃகுதப்ப அந்த ஆத்மாவுக்குள் உள்ள ஆத்மஞானம் செல்ல அஃகுதே இஃகுது.


இஃகுதே அஃகுது என
உணர்ந்தா ராம் ,
உணர்ந்தா ராம் .
அவரெல்லாம் ராமர் வழி வந்தா ராம் ,
வந்தா ராம் .
அஃகுதப்ப அப்படி வருவோரெல்லாம்
சிறந்தா ராம் .!
சிறந்தா ராம் .!


அஃகுதப்ப சிறந்தோரெல்லாம் தொடர்ந்து பிறவியற்ற நிலைக்கு உயர்ந்தா ராம் , உயர்ந்தா ராம் .
இறை கருணை
கொண்டா ராம் .


அதனால் உயிர்கள் மீது அன்பு பொழிந்தா ராம் .
அவர் என்றென்றும்
இருப்பா ராம் .


பக்தர்கள் உள்ளத்தில்
கிடப்பா ராம் .


இஃகுது உணர்ந்தோரே உண்மையை
உணர்ந்தோராம், ஏனையோர் எல்லாம் தாழ்ந்தோ ராம் .


எனவே தாழ்ந்தோ ராம் என்கிற நிலை தாண்டி உயர்ந்தோ ராம் என்ற நிலைக்கு வர அன்றாடம் அவரவர் வாயும் அஃகுதப்ப ராம் ,ராம் ராம் என ஜபிக்க அவரவர் ஆத்மாவும் உயர்ந்தோ ராம் என்கிற நிலைக்கு வரும்.



இஃகுதப்ப யாம் இறை அருளால் அஃகுதப்ப உள்ளத்தில் கலந்து அன்பினால் உயர்ந்து வாழ இறை அருளால் நல்லாசி கூறுகிறோம்.

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சந்திப்போம்:-

உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html




No comments:

Post a Comment