"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, April 8, 2022

நந்தி கல்யாணம்...முந்தி கல்யாணம்... - 09.04.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தமிழ் ஆண்டில் பங்குனி மாத வழிபாட்டில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு வழிபாடு என்று வகுத்து, நம்மிடம் உள்ள திரு விழாது இருக்க திருவிழாக்களை நமக்கு நம் முன்னோர்கள் கொடுத்து உள்ளனர். இது வேறெங்கும் காண இயலாது. இந்த பங்குனி மாதத்தில் புனர்பூசம் நட்சத்திரம் நமக்கு மிகப் பெரிய வழிபாடும், திருவிழாவாகவும் உள்ளது. இதனை நந்தி கல்யாணம்...முந்தி கல்யாணம் என்றும் கூறி வருகின்றோம்.

நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. நந்திக் கல்யாணம் பார்த்தவருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள்.அதன்படி நந்திக் கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்த வருடம் நந்திக் கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர்.


திருமணம் ஆகாமல் உள்ள ஆண் பெண் அனைவரும் திருமணமாக வேண்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திருந்து அரியலூர் வழியிலுள்ள திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சென்று பங்குனி மாதம் நடக்கும் நந்தி கல்யாணத்தை பார்க்கும் அனைவருக்கும் முந்தி கல்யாணம் நடக்கும் என்பார்கள். அடுத்த வருடம் நந்தி கல்யாணம் நடப்பதற்க்குள் கல்யாணம் நடக்கும் எண்பது ஜதீகம்.
அதன்படி வருகிற ஸ்ரீ ப்லவ ஆண்டுl பங்குனி மாதம் 26ஆம் தேதி  புனர்பூசம் நட்சத்திரம் 09-04-2022 சனிக்கிழமை நந்தி கல்யாணம் நடக்கிறது. அதில் அனைவரும் கலந்து கொண்டு நந்தியின் அருள் பெற்று திருமணம் நடைபெற வாழ்த்துக்கள். நம் தளம் சார்பில் பிரார்த்தனைகளையும் சமர்ப்பிக்கின்றோம்.

நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. நந்திக் கல்யாணம் பார்த்தவருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள்.
அதன்படி நந்திக் கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்த வருடம் நந்திக் கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர்.

ஆம், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நந்திகேஸ்வரரின் தெய்வீக திருமணம் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் வரக்கூடிய புனர்பூச நட்சத்திரத்தன்று இந்த சிறப்பு வாய்ந்த திருமணம் நடைபெறுகிறது.அரியலூர் மாவட்டம் திருமழபாடி திரு சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் இந்த தெய்வீக திருமணம் வருடாவருடம் நடைபெறுகிறது

மணமகன்: பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமான்

மணமகள்: வசிஷ்ட முனிவரின் பேத்தியும் வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகை

இந்த ஸ்தலமானது திருமால்,இந்திரன் ஆகியோரால் வழிபாடு செய்யப்பட்டது மேலும் திருஞானசம்பந்தர்,அப்பர் சுந்தரர் ஆகியோரால் திருப்பதிகங்கள் பாடியும் வழிபாடு செய்யப்பட்ட ஸ்தலமாகும்.

தஞ்சாவூர் மற்றும் லால்குடியில் இருந்து 28 KM தூரத்திலும் மற்றும் திருவையாறில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் புள்ளம்பாடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இக்கோயிலில் மூன்று திருச்சுற்றுகள் உள்ளன தலவிருட்சமாக பனை மரம் உள்ளது நடராஜர் மண்டபம் அருகில் திரு நந்திகேஸ்வரர் தனது மனைவி சுயசாம்பிகை யுடன் காட்சி தருகிறார்.

திருமணத்திற்கு முதல் நாள் நந்தியம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது விழாவின்போது பலவகை அபிஷேகங்கள் நந்தியம் பெருமானுக்கு செய்விக்கப்படுகிறது அன்று மாலை திருவையாறு கோயிலில் அவருக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.

திருமணம் நடைபெறும் நாளன்று காலை ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்தியம்பெருமான் பட்டுச் சட்டை அணிந்து கையில் செங்கோல் ஏந்தி வெள்ளியில் ஆன தலைப்பாகை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வானவேடிக்கை இன்னிசை கச்சேரி உடன் புறப்படுகின்றனர். அன்று மாலை கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழபாடி வந்தடைகின்றனர். அங்கு கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மங்கள வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை வீட்டாரை எதிர்கொண்டு அழைத்து அவர்களை வரவேற்று கோயில் முன் உள்ள திருமண மேடைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

திருமண மேடையில் சுயசாம்பிகை தேவிக்கும் நந்தியம் பெருமானுக்கும் அனைத்து விதமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றது.
தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாரப்பர் முன்னிலையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையிலும் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுகிறார்.

திருமணம் முடிந்ததும் மணமக்களுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது தொடர்ந்து இருவரும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இறைவனே முன்நின்று திருமணத்தை நடத்தி வைப்பதால் நந்தியம்பெருமான் திருமணத்தை காணும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடைகள் நீங்கி காலத்தே திருமணம் கைகூடிவரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

இத்திருமணத்தில் கலந்து கொள்ளமுயற்சி செய்யுங்கள் .திருமண நாளன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர் என அறிகிறோம் தகுந்த முன்னேற்பாடுகளுடன் சென்று கலந்துகொண்டு திருமண பாக்கியம் பெறுவோம்.

இந்த ஆண்டு நந்தி கல்யாணம்  09.04.2022 அன்று நடைபெற உள்ளது.வாய்ப்புள்ள திருமணத்தடை உள்ள அன்பர்கள் நேரில் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற வேண்டுகின்றோம்.





இனி இந்த திருத்தலம் பற்றிய தல வரலாறு காண உள்ளோம்.

திருமழபாடி வைத்தியநாதர் கோயில்

திருமழபாடி வைத்தியநாதர் கோயில் தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், திருமழபாடி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். 

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றது. 

இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதசுவாமி, தாயார் சுந்தராம்பிகை. தல விருட்சமாக பனை மரம் உள்ளது. 

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 54வது சிவத்தலமாகும்.

தல வரலாறு

பிரம்மனின் சத்தியலோகத்திலிருந்து புருஷா மிருகம் லிங்கத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டது. இதை அறிந்த பிரம்மன் லிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்றான். பிரம்மன் அந்த லிங்கத்தை எடுக்க முயல, அது அவனின் கைக்கு வர மறுத்து அது முடியாது போகவே இது, வைரத்தூணோ என்று கூறினான். பிரம்மன், வைரத்தூணானவனோ எனக் கூறியதால், இவ்விறைவனை வைரத்தூண் நாதர் என்றும், வச்சிரதம்பேஸ்வரர் என்றும் ஈசனுக்கு பெயர்கள் ஏற்பட்டது.

இந்த ஊருக்கு பெயர் மழபாடி என்று வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.

கயிலைநாதன் எழுந்தருளியுள்ள திருக்கோவிலை கண்டு வழிபட எண்ணிய நம்பியாரூரராம் சுந்தரமூர்த்தி சாமிகள் திருவாரூரிலிருந்து புறப்பட்டு நன்னிலம், திருவாஞ்சியம், ஆவடுதுறை, நாகேச்சரம், கண்டியூர் போன்ற தலத்தை தரிசித்து திருவாலம் பொழிலையைடைந்து இறைவனை வழிபட்டு அன்றிரவு தங்கியிருந்த போது அவர் கனவில் சிவபெருமான் தோன்றி "மழபாடிக்கு வருவதற்கு மறந்தாயோ" என்று வினவி மறைந்தார். பின் வடகரையை அடைந்து திருமழபாடி ஈசனாரை தரிசித்து,

"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கு அசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே"

என்ற தேவார திருப்பதிகத்தை பாடிப்போற்றினர்.

இந்த மழப்பாடி ஈசனை சுந்தரர் காலத்துக்கு முன்பே திருஞானசம்பந்தர் கண்டு "காச்சிலாத பொன்னோக்கும் கனகவயிரத்தின் ஆச்சிலதா பளிங்கினன் மழப்பாடி வள்ளல்" என்று போற்றியுள்ளார். 

திருநாவுக்கரசரோ "மரு சுடரின் மாணிக்கக்குன்று கண்டாய் மழப்பாடி மண்ணும் மணாளன் தானே " என்று மழப்பாடி ஈசனை போற்றியுள்ளார்.

நந்திதேவர் விழா

நந்தி கல்யாணம்: திருமழபாடி திருத்தலத்தில் தான் நந்தி தேவர் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், திருக் கயிலையின் தலை வாயிலைக் காக்கும் உரிமையையும் பெற்றார். ‘நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலமும் திருமழபாடி திருத்தலம்தான்.

குழந்தை பாக்கியம் வேண்டி சிலாத முனிவர் சிவனை நோக்கி தவம் இருந்தார். அப்போது அசரீரி தோன்றி,"முனிவரே! புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

நீர் யாகம் செய்யும் நிலத்தை உழும் போது, பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். 

ஆனால், அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும்,''என்றது.சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில், மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். 

வியந்து போன அவர், பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள் மறைந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது. அதற்கு "ஜபேசர்' என பெயரிட்டார்.

இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார்.

சிலாத முனிவர், தம் மகனுக்கு திருமழப்பாடி தலத்தில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்து வைத்தார்.

இதற்காக திருவையாற்றில் இருந்து நந்திகேஸ்வரர் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். 

தனது பக்தனுக்கு தானே முன்னின்று திருமணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்தநாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர்.திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தி்யம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இருவருக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக இன்றும் நந்தியம்பெருமான்- சுயசாம்பிகை திருமணம் திருமழப்பாடியில் நடைபெறுகிறது.

திருமழபாடி என்னும் இத்திருத்தலம் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு மற்றும் மேற்கு கரைகளில் திகழ்வதாகும். இந்த கோவில் கிழக்கு நோக்கி ஏழு நிலைகளையுடைய ராஜகோபுரம் இரண்டு திருசுற்றுகள் உடன் கோபுரம் அமைந்துள்ளது. 

இந்த ஆலயத்தில் பல்லவ வேந்தர்களின் பாடல் இடம்பெற்றுள்ளதால் இவ்வாலயம் கி.பி 7 ஆம் நூற்றாண்டு காலத்திய ஆலயம் என்பதில் ஐயமில்லை. 

ஆதித்தசோழன் காலம் தொடங்கி பல்வேறு சோழ அரசர்களின்  கல் வெட்டு சாசனங்கள் சுந்தரபாண்டியன் போன்ற பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள், போசன அரசர்கள், கோனேரிராயன் காலத்து மற்றும் விஜய நகர நாயக்க மன்னர்கள் கல்வெட்டுகளை இந்த கோவிலில் காணலாம். 

சோழர் கல்வெட்டுகளில் வடகரை ராஜராஜ வளநாட்டுப் பொய்கை நாட்டு உட்பிரிவான மிய்பிலாற்று திருமழபாடி என்றும் ராஜேந்திர சிம்ம வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருமழபாடி என்றும் இவ்வூர் குறிப்பிடப்பெற்றுள்ளது. 

இவ்வூரோடு இணைந்து ஸ்ரீ கண்டராதித்தர் சதுர்வேதிமங்கலம் என்ற பேரூரும் இருந்துள்ளது. தற்போது இவ்வூர் கண்டராதித்தம் என்ற பெயரோடு மழபாடியோடு இணைந்து திகழ்கின்றது. இங்குள்ள செம்பியன் மாதேவிப் பேரேரி என்ற பெயரால் சோழர்கள் வெட்டுவிக்கப் பெற்றதோடு எந்த ஏரியில் பிரிந்து செல்லும் வாய்க்காலுக்கு ராஜராஜன் வாய்க்கால், குலமணிக்க வாய்க்கால், சுந்தரசோழன் வாய்க்கால் உத்தமசோழன் வாய்க்கால் என்ற பெயரில் இருந்தமையும் குலோத்துங்கசோழப் பெருவழி என்ற நெடுஞசாலை இவ்வூர் வழி சென்றமையும் சோழசமாதேவி வீதி, கண்டராதித்தர் வீதி என்ற இரண்டு வீதிகள் இருந்தமையும் கல்வெட்டு சொல்லும் செய்திகளாகும். 

இத்திருக்கோவிலில் மிக தலையாய சிறப்புடைய கல்வெட்டு முதலாம் ராஜேந்திர சோழனின் 14ஆம் ஆண்டு 70 ஆம் நாளில் வெட்டுவிக்கப்பெற்ற சாசனமேயாகும். ராஜராஜ சோழனின் காலத்தில் சிதைந்த திருமழபாடி கோவிலை புதுப்பிக்க விரும்பி ஓர் ஆணை பிறப்பித்தான். 

அதன்படி கோவில் விமானத்தை பிரித்து மீண்டும் கற்றளியாக புதுப்பிக்கவேண்டி இருப்பதால் விமானத்தில் உள்ள கல்வெட்டு சாசனங்களை படியெடுத்து புத்தகத்தில் பதிவு செய்யவேண்டும். 

புதிய கற்கோவில் எடுத்த பிறகு மீண்டும் அக்கல்வெட்டுகளை அங்கு பொறிக்கவேண்டும் என்பதேயாகும். 

திருமழபாடி கோயில் திருப்பணியை மன்னன் ராஜேந்திர சோழன் கி.பி 1026 இல் நிறைவுசெய்ததாக கல்வெட்டுகள் சொல்கின்றது. புத்தகத்தில் பதிவு செய்யப்பெற்ற பழைய கல்வெட்டு செய்திகளை நகல்களை தன்னுடைய தண்டநாயக்கர்(சேனாதிபதி) ராமன் அருள்மொழியான உத்தமசோழ பிரம்மராயன் மேற்பார்வையில் ஓலை அனுப்பி திருமழபாடி கோயிலின் அலுவலரான குளவன் சோழன் அரங்கலமுடையன் பட்டலாகன், திருமழபாடி பிச்சன் கண்டராதித்த சதுர்வேதிமங்கள சபையோர் பெரும்புலியூர் சபையோர் ஆகியோர் முன்னிலையில் கல்வெட்டுகள் ஒப்பிட்டு பார்த்தபின் கல்வெட்டில் பொறிக்கவேண்டும் என்பது ராஜேந்திர சோழரின் ஆணை.

மேலும் இந்த ஆணை திருமழபாடிமூலவரின் கருவறைச் சுவற்றில் 83 வரிகளில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. அதில் 73 வரிகள் ராஜேந்திர சோழனின் ஆணையும் 74 ஆம் வரிகளில் ராஜ ராஜ சோழரின் ஆணையும் இடப்பெற்றுள்ளது சிறப்பு செய்தியாகும். 

இந்த அனைத்து செய்திகளையும் தற்போது உள்ள கல்வெட்டுகளில் காணலாம்.

இறைவர் திருப்பெயர் :வஜ்ரஸ்தம்பநாதர், வயிரத்தூண் நாதர், வைத்தியநாதசுவாமி, வச்சிரதம்பேஸ்வரர்
இறைவியார் :சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல மரம் : - பனை மரம்
தீர்த்தம் : -  கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
வழிபட்டோர் : புருஷாமிருகம், பிரம்மா, சிலாத முனிவர் , செப்பேசர் என்கிற திருநந்திதேவர் ,திருமால், இந்திரன், மார்க்கண்டேயர், அகத்தியர், பராசரர், வசிஷ்டர்
தேவாரப் பாடல்கள் :-சம்பந்தர், அப்பர், சுந்தரர்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. கருவறை மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார். இந்த கோவிலின் தல விருட்சம் பனை மரம், மேலும் இங்கு உள்ள குளத்திற்கு மருத்துவ குணம் இருப்பதால் இதில் நீராடுவோர்க்கு தோல் சம்பந்தமான நோய்கள் குணமாவதாக நம்பிக்கை இருக்கிறது.

பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர். இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை ஈசன் தம் நெற்றிக்கண்ணால் அழித்துவிட்டராம். அதன் காரணமாக முக மண்டபத்தில் உள்ள மூன்று குழிகளையே நவகிரகங்களாக பாவித்து வழிபடுகின்றனர். சரும நோயினால் அவதிப்பட்ட சந்திரன், இந்தத் தலத்து இறைவனை வழிப்பட்டான். சந்திரனுக்குக் காட்சி அளித்த இறைவன், நவகிரகக் குழிகளில் நெய்விளக்கு ஏற்றி வழிபடும்படி கூறினார். சந்திரனும் அப்படியே செய்து சருமநோய் தீரப்பெற்றதாகத் தலவரலாறு. சிபி சக்கரவர்த்தியின் நவகிரக தோஷமும் நீங்கியதாகச் சொல்லப்படுகிறது. சனிக்கிழமைகளில் இந்தக் குழிகளுக்கு முன்பாக எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

இத்தலத்தில்தான் நந்திக்கு திருமணம் நடைபெற்றது.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 54 வது தேவாரத்தலம் ஆகும்.

இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன

சிவனை நோக்கி கடும் தவம் இருந்து சிவகணங்களின் தலைமைப்பதவியையும், கயிலாயத்தின் முதல் வாயில் காவல் உரிமையையும், நந்தி தேவர் என்ற பெயரையும் பெற்றார்.

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வைதீஸ்வரன் தலத்திற்கு எவரேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை இந்த கோவிலிலே நிறைவேற்றலாம் என்பதும் இத்தல சிறப்பாகும்.

இந்த சிவஸ்தலம் திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மி. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 நந்தி கல்யாணம்...முந்தி கல்யாணம்... - 23.03.2021 - https://tut-temples.blogspot.com/2021/03/23033021.html

ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி ஆலய கலசவிழா - 07.04.2021 - https://tut-temples.blogspot.com/2021/03/07042021.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 22.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/22022021.html

 மகான் பைரவ சித்தர் 133 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 20.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/133-20022021.html

ஒட்டன்சத்திரம் பகவான் ராமசாமி சித்தர் 34 ஆவது மஹா குருபூஜை விழா - 05.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/34-05022021.html

ஓம் - பரமஹம்ச ஓம்கார சுவாமிகள் 54-ஆம் ஆண்டு குருபூஜை விழா - 11.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/54-11012021.html

ஸ்ரீல ஸ்ரீ சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள் 120 ஆவது குரு பூஜை - 10.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/120-10012021.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் - 08.04.2022

 அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

இன்று பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரம். இன்று முழுதும் திருவாதிரை நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் கணநாதநாயனார் குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய  அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகளில் சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார் , அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார், திருநீலகண்ட நாயனார், அப்பூதியடிகள், கலிக்கம்ப நாயனார், எறிபத்த நாயனார்,காரி நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார், தண்டியடிகள், காரைக்கால் அம்மை, நேச நாயனார் பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம். 

இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார்.  மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து , சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார், இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்த திருநீலகண்ட நாயனார்,   திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்து ,தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்து பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்று, சிவானந்த அனுபவத்தில் முக்தி பெற்றவர் அப்பூதியடிகள். அதுபோல்  இன்று நாம் கணநாத நாயனார் பற்றி அறிய உள்ளோம்.



கணநாத நாயனார் பழம்பெரும் புகழ் பெற்ற தலமான சீர்காழியில் பிறந்த வேதியர். அவர் சீர்காழியில் வாழ்ந்த வேதியர்களுக்குத் தலைவராகவும், அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார்.

அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கணநாதர். அவர் இறைவன் மற்றும் அடியவர்கள் பால் கொண்டிருந்த பேரன்பின் காரணமாக கையிலாயத்தில் சிவகணங்களின் தலைமைப் பதவியை இறையருளால் கிடைக்கப் பெற்றவர்.

கணநாதர் தம்முடைய மரபுக்கு ஏற்ப ஒழுக்கத்தில் சிறந்து, சீர்காழியில் உள்ள தோணியப்பர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு பலவகையான தொண்டுகளைச் செய்து வந்தார்.

திருக்கோவில், நந்தவனம் மற்றும் தெப்பம் முதலியவற்றை பாதுகாத்து அவ்வப்போது செப்பனிட்டு சிறப்பாக வைத்துக் கொள்வதை தம்முடைய வாழ்நாள் பணியாகக் கொண்டு அவற்றைத் திறம்படச் செய்து வந்தார்.

மேலும் அவர் திருக்கோவிலுக்குத் திருத்தொண்டு செய்ய விரும்பி வந்தவர்களை, அவரவர்களுக்கு ஏற்றவாறு தொண்டு செய்யும் வழியில் பயிற்சிகள் தந்து, சிறப்பாக அத்தொண்டில் ஜொலிக்கச் செய்தார்.

நந்தவனப்பணி செய்வர்களுக்கு எவ்வாறு செடி கொடிகளைப் பாதுகாத்து வளர்ப்பது என்பதைக் கற்றுத் தந்தார். பூக்களைப் பறிக்கும் முறையையும், அப்பூக்களை மாலையாகத் தொடுக்கும் பணியையும் சிலருக்குக் கற்றுக் கொடுத்தார்.

திருமஞ்சனப் பணி செய்பவர், இரவும் பகலும் ஆலயத்தில் திருவலகிடுபவர், மெழுகுபவர், திருவிளக்கு எரிப்பவர், திருமுறைகளை எழுதுபவர் மற்றும் அத்திருமுறைகளை ஓதுபவர் ஆகிய பலவகைத் தொண்டர்களுக்கும் முறையான பயிற்சிகளை தந்ததோடு அவர்களை அச்செயலில் சிறந்து விளங்கும்படி ஊக்குவித்தார்.

இதனால் கணநாதரைச் சுற்றிலும் எப்போதும் தொண்டர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இல்லறத்தில் வழுவாது நின்று, சிவத்தொண்டில் ஆர்வம் கொண்டு, தொண்டு புரிபவர்களுக்கு ஆதரவும் ஆக்கமும் அளித்து, யாவரும் நன்கு மதிக்க வாழ்ந்தார் நாயனார்.

அவருக்கு சீர்காழியில் தோன்றிய ஞானக் கொழுந்தான திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம் அளவற்ற பக்தி உண்டாயிற்று. அவர் ஞானசம்பந்தரின் திருவடிகளை போற்றி வணங்கி வந்தார்.

தொண்டருக்குத் தொண்டராகவும் தொண்டர்களுக்கு நாதராகவும் ஞானசம்பந்தர் பக்தராகவும் வாழ்ந்த இப்பெருமான், சிவனாரின் திருவருளால் திருக்கையிலையை அடைந்து கணநாதராகும் பதவி பெற்றுச் சிறப்படைந்தார்.

முறையான சிவவழிபாடு மற்றும் சிவனடியாரான சம்பந்தரை போற்றி கையிலையில் சிவகணங்களுக்கான தலைமைப் பதவியைப் பெற்ற கணநாத நாயனாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்‘ என்று புகழ்கிறார். சரியை மூலம் இறைவனிடம் சேர்ந்த நாயனார் இவர் ஆவார்.

ஆன தொண்டினில் அமர்ந்தபேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும்

ஞானம் உண்டவர் புண்டரீகக் கழல் அருச்சனை நலம் பெற்றுத்

தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால்வரை எய்தி

மான நல்பெரும் கணங்கட்கு நாதராம் வழித் தொண்டின் நிலை பெற்றார்.

பாடல் விளக்கம்:

திருத்தொண்டில் விரும்பியிருந்த பேரன்பரான கணநாதரும், பரந்த மண் உலகத்தில் எந்நாளும் ஞானசம்பந்தரின் தாமரை போன்ற திருவடியை வழிபடுதலான நன்மையை அடைந்து, அதன் பயனாய்த், தூய மணமுடைய கொன்றைப் பூக்களைச் சூடிய சடையுடையவரின் ஒளியுடைய நீண்ட திருக்கயிலை மலையை அடைந்து, பெருமையுடைய நல்ல பெருஞ் சிவகணங்களுக்கு நாதராகும் தலைமை பெற்று, அங்கு வழி வழியாகச் செய்து வரும் திருத்தொண்டில் நிலைபெற்று நின்றார்.

கணநாத நாயனார் குருபூஜை பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன் -05.04.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/09032022.html

நாட்டமிகு தண்டிக்கும் அடியேன் - 29.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/29032022.html

தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன் - 02.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/02022022.html

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் - 26.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/26022022.html

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - 20.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/20022022.html

 கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் அடியார்க்கும் அடியேன் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/06022022_5.html

ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் - 03.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/03022022.html

 திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் - 26.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/26012022_25.html

சண்டேசுவர நாயனார் குரு பூஜை - 22.01.22 - https://tut-temples.blogspot.com/2022/01/220122.html

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் - 16.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/16012022.html

கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன் - 15.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/15012022.html

 தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் - 09.01.2022  - https://tut-temples.blogspot.com/2022/01/09012022.html

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் - 03.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/03012022.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

Wednesday, April 6, 2022

பாலராமபுரம் அகஸ்தியர் கோவில் திருவிழா! (05.04.2022 முதல் 14.04.2022 வரை)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் நம் குருநாதர் திருவிழா அழைப்பிதழ் ஒன்றை இங்கே பகிர விரும்புகின்றோம்.சித்தனருள் வலைத்தளத்தில் இருந்து அப்படியே பதிவு செய்கின்றோம். வழக்கம் போல் பதிவின் இறுதியில் இன்று நமக்கு கிடைத்த பாலராமபுரம் அகஸ்தியர் கோவில் தரிசன அருள் நிலைகளை குருவருளால் பகிர உள்ளோம். இந்தப் பதிவின் ஆக்கத்தில் நமக்கு இந்த அருள் நிலை தரிசனம் காண உள்ளோம் என்று நினைக்கவில்லை. ஆனால் இது குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் அருளால் நடைபெறுகின்றது என்று பார்க்கும் போது குருவின் அருளிற்கு எல்லையுண்டோ? என்று தோன்றுகின்றது.

இதே போன்று சென்ற ஞாயிற்றுக் கிழமை அதாவது ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று நமக்கு குருநாதர் தரிசனம் தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் மெய் நிகர் சத்சங்கம் ஜூம் செயலி வாயிலாக பங்குபெற்று கிடைத்தது. அன்று கூட்டுப் பிரார்த்தனைக்கு முன்பாக தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் பூஜை அறை தரிசனம் கண்டோம். அன்று நமக்கு குருநாதர் ஓலை சுவடி பெட்டி காணும் போது, இதே நாள் 2021 ஆம் ஆண்டில் பொதிகை மலையில் குருநாதர் தரிசனம் பெற்றது நினைவிற்கு வந்தது. ஆக ..2021, 2022 ஏப்ரல் 3 ஆம் தேதி குருநாதர் தரிசனம் கிடைத்தது என்றால் இது என்ன சாதாரண செயலா? வாழ வழி காட்டும் குருவின் பாதம் என்றும் பணிகின்றோம். இனி இன்றைய பதிவிற்குள் நுழைவோம்.

வருடம் தோரும் பங்குனி மாதத்தில் பாலராமபுரத்தில், நம் குருநாதர் அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும் அபிஷேக ஆராதனைகள் 10 நாட்கள் நடக்கும். இந்த வருடம் அகத்தியர் பூஜை 05/04/2022 அன்று தொடங்கி 14.04.2022 வரை நடக்க, அவர் அருளால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான விரிவான அழைப்பிதழை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

8ம் நாள் திருவிழா அன்று முருகப்பெருமான், எரித்தாவூர் மலை மீதிலிருந்து கீழே இறங்கி வந்து, அகத்தியப்பெருமானால் மரியாதை செய்யப்பெற்று, அவரால், பாலராமபுரம் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவது கண்கொள்ளாக் காட்ச்சியாகும். முருகப்பெருமானும், குருநாதரும் ஒன்று சேர்ந்து பாலாராமபுரம் ஊர் வீதிகளில் உலா வந்து அனைவரையும் ஆசிர்வதித்து, பின்னர், 9ம் நாள் பூசையை முருகப்பெருமான், அகத்தியர் கோவிலில் ஏற்றுக்கொண்டு, மறுநாள் (10வது நாள்) தன இருப்பிடம் ஏகுவார். இந்த நிகழ்ச்சிகளை, காண கண் கோடி வேண்டும். அன்றைய தினம், மிகுந்த சந்தோஷத்தில் அகத்தியப்பெருமான் அனைவருடைய வேண்டுதலாயு அருளுவார்.

யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்கிற நோக்கில், அகத்தியர் பூஜை திருவிழாவில் பங்கு பெற குருநாதர் கோவிலுக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். பூஜையில் கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள். திரு.ரதீஷ் (Sri.Ratheesh) அவர்களை  9048322565 என்கிற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் சார்பாக இந்த அழைப்பிதழை உங்கள் அனைவர் முன்னும் சமர்ப்பிக்கிறேன்.












அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அனைவரும் வீட்டிலே விளக்கேற்றி காலையிலும், மாலையிலும் குருநாதரின் மந்திரங்களை ஓதி கூட்டுப்பிரார்தனை செய்ய வேண்டுகின்றோம். பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போன்று, பாலராமபுரம் அகஸ்தியர் கோயில் தரிசன அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம்.












அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பாலராமபுரம் அகஸ்தியர் கோவில் திருவிழா! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_1.html

 குருவருள் பரிபூரணம் - ஓம் அகத்தின் ஈசனே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2022/03/blog-post_15.html

அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்! - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 29.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/29102021.html

கூடுவாஞ்சேரி ஸ்ரீ குருவே! சரணம்! - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post.html

கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியரே! சரணம் !! - https://tut-temples.blogspot.com/2021/09/blog-post.html

ஓம் எம் அப்பன் அகத்தீசனே போற்றி! போற்றி!! - ஆவணி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 05.09.2021 - https://tut-temples.blogspot.com/2021/09/05092021.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 08.11.2020 - https://tut-temples.blogspot.com/2020/11/08112020.html

அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

Tuesday, April 5, 2022

கூட்டுப் பிரார்த்தனை எனும் மகா சக்தி!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் புதிய தமிழ் புத்தாண்டு நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். பங்குனி மாத வழிபாடுகள் குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த பங்குனி மாதத்தில் பல திருத்தலங்களில் திருவிழாக்கள் நம்மை இறை நோக்கி நகர வைத்து வருகின்றது. பிறக்கும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இது ஒரு புறமிருக்க, இந்த சித்திரை மாதத்தில் வெயில் தாக்கம் இப்போதே ஆரம்பித்து விட்டது. எனவே அன்பர்கள் தத்தம் இல்லங்களில், வாய்ப்பு கிடைக்கும் போது குடிநீர், நீர் மோர் தானம் போன்றவற்றை சிரமேற்கொண்டு செய்ய வேண்டுகின்றோம். நாமும் குருவருளால் நம் தளம் சார்பில் நீர் மோர் தானம் இன்னும் சில தினங்களில் தொடர உள்ளோம். அடுத்து கூட்டுப் பிரார்த்தனை பற்றி பேச விரும்புகின்றோம்.

இன்றைய காலகட்டத்தில் கூட்டுப்பிரார்தனை ஒன்றே எளிய வழி. தினமும் ஒரு 30 நிமிடமாவது வழிபாடு செய்யுங்கள். உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நாம் நம் குழு நண்பர்களோடு தினமும் சுமார் 30 நிமிடம் திருவாசகம் போன்ற தமிழ் திருமுறைகளை ஓதி..இல்லை இல்லை...படித்து பிரார்த்தனை செய்து வருகின்றோம். இன்றைய பதிவில் சில பிரார்த்தனை செய்திகளை இங்கே பதிவிடுகின்றோம். அன்பர்கள் தினமும் படித்து பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகின்றோம். 



பிரார்த்தனை 1:

ஸ்ரீ அகத்திய பெருமானே ! அற வொழுக்கதொடு வாழ வேண்டும். நான் செய்த கொலை கருமங்களிலிருந்து எம்மை காப்பாற்றுவாயாக!

நான் இனி நினைக்கும் மனம்,மெய்,மொழி இம்மூன்றில் அடங்கி உள்ள 10 தீய குணங்களில் இருந்து காப்பாயாக ! முறையே  எதையும் விரும்புதல்,காமப் பற்று, கொலை செய்ய நினைத்தல்,பொய்யுரைத்தல்,கோள் சொல்லல்,சினந்து பேசுதல்,பயனில் கூறல், களவாடுதல்,வீணாக தொழில் புரிதல்,கொலை செய்தல் ஆகியவற்றை அறவே நீக்கிட வேண்டும். தீயவருடன் சேராமல் விலகி இருத்தல்  வேண்டும்.உத்தம குணமுடையோருடன் இணைந்து நேசித்து வாழ வேண்டும்.எனது வருவாய்க்கேற்ப வறுமைப்பிணி,மனத்துயரம் இவற்றால்  வருந்துவோரையும், இறப்பவரையும் ஆதரித்தும்,தீயவர்க்கும்,நல்லவர்க்கும்,பகைவர்க்கும், நன்மையே புரிந்து குணம் அடைய வேண்டும்.


பிரார்த்தனை 2:

இறைவனே.! அகத்தீசனே! என்னை பாவ மன்னிப்பு கோருபவர்களில் ஒருவனாக ஆக்குவாயாக. இன்னும் பரிசுத்தமுடையவர்களில் ஒருவனாக ஆக்குவாயாக.உன்னுடைய உத்தம அகத்திய அடியார்களில் ஒருவனாக ஆக்குவாயாக. நீவீர்  மிகத் தூய்மையானவர் 

அகத்தியனே! நான் உன் புகழைக் கூறுகின்றேன். என்றும் எமது வேண்டுதலுக்குரிய தலைவனே! எமக்கு உம்மைத் தவிர வேறு யாருமில்லை. உன்னிடம் எம் கர்மவினை தீர பாவ மன்னிப்பு கோருகின்றேன்.சமாதானம் அனைவர் மீதும் உண்டாவதாகுக. எல்லாப் புகழும் சர்வேஸ்வரனான அகத்தீஸ்வரனுக்கே உரியதாகுக!


பிரார்த்தனை 3:

அகத்தீசனே ! உம்மை பிரம்ம முகூர்த்தத்திலே தொழுவது தூக்கத்தை விட சிறந்ததாகும்.வெற்றி ஒருவர் பெற வேண்டுமெனில் உன் நாம  ஜெபம் ஒன்றே தாரக மந்திரமாகும்.ஏன் எனில் நீர்! மெய்யே உரைத்தீர்.தவம் செய்தீர். சத்தியத்தை பகன்றீர்.எங்கள் புனித அழைப்பிற்கு  நிலைப்பாடான வேண்டுதலுக்கு உடையவரே. உயர்நிலையில் எங்களை உயர்த்தி அருள்வீராக! நிச்சயமாக நீரே..எங்களை காப்பாற்றி அருள்வீராக.

அகத்தீசனே! நாங்கள் நிச்சயமாக உன்னிடமே உதவி தேடுகின்றோம்.உன்னிடமே பாவ மன்னிப்பு கோருகின்றோம்.உன்னைக் கொண்டே நம்பிக்கை கொள்கின்றோம்.உன்னிடமே பொறுப்பு வைக்கின்றோம். நன்மைக்காகவே உன்னையே தொழுகின்றோம்.உமக்கு நன்றி செலுத்துகின்றோம். எனவே உமக்கு மாறுபாடு செய்ய மாட்டோம்.உமக்கு பாபம் செய்கிறவனை விட்டு ஒதுங்கிக் கொண்டு விடுகிறோம். என்றும்  அகத்தீசனே!  நாங்கள் உன்னையே வணங்குகிறோம்.தலை தாழ்ந்து பணிதல் செய்கின்றோம். உம்மிடமே நாங்கள் அன்பு செலுத்த விழைகிறோம்.வழிபட்டு நடக்கின்றோம்.அனைத்து துன்பத்திலிருந்து இந்த அகிலத்தை காத்திட வேண்டும்.




பொதுப் பிரார்த்தனை:

அப்பனே அகத்திய பெருமானே! ஆதி மகாலட்சுமி அருளால் சன்மார்க்கத்தில் நிற்கும் அன்பர்களுக்கு அருட் செல்வம்,பொருட் செல்வம் கிட்ட ஆசி புரிய வேண்டுகிறோம்.

ஆதி பராசக்தியே, உமையொரு பாகனாக நின்ற எங்கள் அன்னையே திருமணத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கு மனமொத்த மங்கை / மணாளன் அமைய வேண்டுகிறோம்.

இகபர சுகமளிக்கும் ஈசனே,குழந்தை வரம் வேண்டி ஏங்கி நிற்கும் அன்பர்களுக்கு சித்தர்கள், ஞானியர், சன்மார்க்கத்தை விரும்பும் குழந்தைகள் பிறக்க வேண்டுகிறோம்.

உணவு மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் பல்கி பெருக மழைக் கடவுளான இந்திராணி சமேத இந்திரரையும்,வாருணி சமேத வருணரையும் வேண்டுகிறோம்.

எட்டா கனி போல் இருக்கும் சித்தர்களின் மாமறை மீண்டும் வெளிப்பட வேண்டுகிறோம்.

ஏழாம் பாவத்தால்,மன சஞ்சலத்தில் இருக்கும் சன்மார்க அன்பர்களின் மனக்குறை தீர வேண்டும்.

ஐவகை நிலங்களில் இயற்கை வளங்கள் அன்னை பூமாதேவி  மற்றும் ஆதிசேசன் அருளால் பெருக வேண்டும்.

ஒப்பற்ற மெய்ஞானம் உலகெங்கும் பரவ வேண்டும்.

ஓங்கார சொருபமான ஞான ஸ்கந்தரின் அருளால் சன்மார்க அன்பர்களுக்கு நாதம் பெருக வேண்டும்.

ஔஷதங்கள் சித்தர்களின் கருணையால் மீண்டும் பொலிவு பெற வேண்டுகிறோம்.



என் உடல் என்னும் பம்பரத்தில்

உயிர் என்னும் கயிற்றைக் கட்டி

வினை என்னும் ஆட்டக்காரன்

ஆட்டுவிக்கிறான்


இறைவா எம்பிரானே அகத்தீசா

வினை அறுக்க உன்னையே சரணடைந்தேன்

போற்றினால் உனது வினை அகலுமப்பா

போற்றினால் பூரணமும் கூடப்பேசும்


என்று சொன்னவனும் நீ தானே

ஆகவே உன்னையே சரணடைந்தேன்

நான் விடுகின்ற மூச்சும் நீயே

என் உடலும் நீயே உயிரும் நீயே


கூட்டுவிப்பவனும் நீயே குலைவிப்பவனும் நீயே

ஆட்டுவிப்பவனும் நீயே பெருமானே

இனி பிறப்பு வேண்டாம் எங்களுக்கு

ஒரு வேளை பிறப்பு இருக்குமானால்


அப்பிறப்பில் உனக்கு தொண்டு செய்யும்

பாக்கியத்தைக் கொடுத்தருள்வாயாக அகத்தீசா!



என்றும் குருவின் பாதம் சரணம். இங்கே தொகுத்து கொடுத்துள்ள பிரார்த்தனைகளை தினமும் வழிபாட்டில் இணைத்து குருவின் பதம் சரண் அடைவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன் -05.04.2022

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

இன்று பங்குனி மாத ரோஹிணி நட்சத்திரம். இன்று மாலை 05:30  மணி முதல் நாளை மாலை 7 மணி வரை  பங்குனி மாத  ரோஹிணி  நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் நேச நாயனார் குருபூஜை வருகின்றது. இதற்கு முந்தைய  அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகளில் சாக்கிய நாயனார். வாயிலார் நாயனார், கண்ணப்ப நாயனார் , அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார், திருநீலகண்ட நாயனார், அப்பூதியடிகள், கலிக்கம்ப நாயனார், எறிபத்த நாயனார்,காரி நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார், தண்டியடிகள், காரைக்கால் அம்மை பற்றி அறிந்து கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா? என்றால் நடக்கும் என்று பெரிய புராணம் வழியில் அறிகின்றோம். 

இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார்.  மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சிவபூஜைக்கு இடையூறு செய்த தம் தந்தையில் கால்களை மழுவால் அரிந்து , சிவ பூஜை செய்து சண்டேஸ்வரர் பதவி பெற்று சிவனோடு கலந்தவர் சண்டேஸ்வர நாயனார், இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்ற சபதத்திற்காகத் தன் வாழ்வின் மகிழ்ச்சியைத் தியாகம் செய்த திருநீலகண்ட நாயனார்,   திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்து ,தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்து பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்று, சிவானந்த அனுபவத்தில் முக்தி பெற்றவர் அப்பூதியடிகள். அதுபோல்  இன்று நாம் நேச நாயனார் பற்றி அறிய உள்ளோம்.



அக்காலத்தில் அந்த சாளுக்கியம் எனும் குந்தள நாடும் அதன் பகைநாடுகளும் பெரும் யுத்தம் செய்தன, அதில் காம்பீலியில் இருந்து மக்கள் வெளியேறும் அவசியம் வந்தது

அது சமண தாக்கம் என்கின்றார்கள், சமண மன்னன் செய்த அட்டகாசம் என்கின்றது சில குறிப்புகள்

அப்படி காம்பீலியில் இருந்து மக்கள் வெளியேறும் பொழுது சாலியர்களுக்கு அவர்கள் குடியேறவேண்டிய பகுதி பருத்தி விளைவிப்பதாகவும் சிவபூமியாகவும் நெசவுக்கு ஏற்ற பூமியாகவும் வணிக வாய்ப்பு கொண்டதாகவும் பலத்த காவல் கொண்டதாகவும் இருக்க தேடினர்

அப்பொழுது சோழநாடு அவர்களுக்கு தோதாயிற்று

பெரும் சாலியர் கூட்டம் காம்பீலியில் இருந்து சோழநாட்டின் மாயவரம் பக்கம் குடியேறிற்று, அங்கு சாலியர்களின் நெசவுதொழில் பெருகிற்று

துணியினை அறுப்பதால் அது அறுவையர் குலம் என்றானது போல, கூறு கூறாய் துணியினை விற்றதால் கூறை இனம் என்றாயிற்று, அவர்கள் வாழ்ந்த பகுதி கூறை நாடு என வழங்கலாயிற்று

அது கூறை நாடு என்ற வழக்கில் இருந்து "கொர நாடு" என திரிந்தது, மாயவரம் பக்கம் கொரநாடு என அழைக்கபடுவது இதனாலே

அப்பகுதி துணிகள் தரமானதாகவும் அழகானதாகவும் சிறந்து விளங்கியதால் திருமணம் முதலான முகூர்த்த விஷயங்களுக்கு சேலை வாங்கும் இடமானது, "கூறை சேலை" "கூறை பட்டு" எல்லாம் இப்படி வந்த பெயர்களே

கால கடந்து இப்பொழுதும் அப்பெயர் நிலைத்து நிற்கின்றது

கூறை நாட்டுக்கு அடியார் வரும்பொழுது சில சிலைகளுடன் வந்தார் என்கின்றது தரப்பு, வந்தவர் பிள்ளையார் சிலை உள்ளிட்ட சில சிலைகளை கொண்டு வந்தார் அவை இன்றும் கூறைநாடு புனுகீஸ்வரர் கோவிலில் உண்டு

அந்த புனுகீஸ்வரர் கோவில் திருவானைக்கா ஆலயம் போலவே ஆச்சரியமான வரலாற்றினை கொண்டது

ஆம், முற்பிறவி பலனால் கானக‌ லிங்கம் ஒன்றுக்கு புணுகு பூனை பூஜை செய்து முக்தி அடைந்ததால் அந்த லிங்கத்துக்கு புனுகீஸ்வரர் என பெயர் வந்தது.

முற்பிறவி பலனால் மிருகங்கள் இறைவனைப் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் பல உண்டு.

குற்றாலம், திருவானைக்கா, மதுரை ஆகிய தலங்களில் யானையும், நல்லூரில் சிங்கமும், சாத்தமங்கையில் குதிரையும், கருவூர், பட்டீஸ்வரம, பேரூர் ஆகிய தலங்களில் பசுவும், சிவபுரத்தில் பன்றியும், தென் குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை ஆகிய ஊர்களில் குரங்குகளும், சோலூரில் மீனும், திருத்தேவன் குடியில் நண்டும் பூஜித்து பேறுபெற்றன.

அவை ஏன் பூஜித்தன அவற்றின் பூர்வ ஜென்ம வாசனை எது என்பதையெல்லாம் இறைவன் ஒருவனே அறிவான், மானிட பதர்கள் பலவுமே ஆலயம் பக்கம் வராத நிலையில் பூச்சியும் விலங்குகளும் இறைவனை பணிவதெல்லாம் முன் ஜென்ம தொடர்ச்சியே

அப்படி புனுகுப் பூனை ஒன்று சிவபெருமானை மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள இந்த‌ கூறைநாடு எனும் தலத்தில் பூஜித்துப் பேறுபெற்றது. கானகத்தில் இருந்த லிங்கத்து மேல் புனுகு பூனை ஒன்று தீரா பக்தி கொண்டு லிங்கத்திருமேனி முழுவதும் புனுகினை அப்பியது.

வில்வத் தளிர்களை வாயினால் கவ்வி இறைவனின் முடியில் சாத்தியது. இறைவனை வலம்வந்து வணங்கியது. இப்படியே சிவபெருமானை பல நாட்கள் அந்தப் புனுகுப்பூனை வணங்க மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து கயிலாயத்திற்கு அழைத்துக்கொண்டார்.

அதனாலேயே இங்குள்ள ஈசன் புனுகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

அந்த புனுகீஸ்வரர் கோவிலுக்கு வரும் அடியார்களுக்கு தன் திருதொண்டை கூறைநாட்டிலும் தொடர்ந்து வந்தார் நேசநாயனார்

மயிலாடுதுறை பக்கம் அந்த கூறைநாடெங்கும் அவர் தன் திருபணியினை செய்து வந்தார், அங்கும் எல்லா அடியாருக்கும் அமுதும் உடையும் கொடுத்து சிவதொண்டனாகவே நெசவு தொழிலை நடத்திவந்தார், புனுகு வாசம் ஒரு காலத்தில் அந்த லிங்கத்தில் அடியாரின் பக்தி வாசமும் கலந்தது

அங்கு வரும் அடியாருக்கெல்லாம் நேச நாயனார் தன் உழைப்பின் பலனான உடையும் உணவும் கொடுத்து ஆதரிக்க ஆதரிக்க அந்த சிவனடியார்கள் சிவனிடம் நேச நாயனார் பெயரால் நன்றி சொல்லி கிளம்பும் பொழுது சிவ லங்கம் அன்பால் மணம் வீசிற்று

காலெமெல்லாம் அப்பக்கம் உழைத்தபின் ஆரூரில் சில நாட்கள் தங்கி இருந்து சிவனை தரிசித்து கொண்டே தன் முதிர்ந்த வயதிலும் திருதொண்டை செய்தபடி முக்தி அடைந்தார் நேச நாயனார்

அவர் வாழ்வில் சிவன் வந்து பெரிதும் சோதிக்கவில்லை, அவர் தொண்டை இடைமறித்து அதில் அவர் மிக சிரமபட்டு தன்னை நிரூபித்து உலகுக்கு சொல்லும் வழக்கமான சிவ விளையாட்டெல்லாம் இல்லை

மாறாக நதி எப்படியாயினும் கடலுக்கு வரும் என்பது போல் அவர் வாழ்வினை அதன் போக்கிலே விட்டுவிட்டா சிவன், அந்த நதியும் திசைமாறாமல் மிக சரியாக தொண்டாற்றி இறைபதம் அடைந்தது.

ஆம் சோதனை வந்து நாயன்மார் என நிரூபிப்பது ஒருவகை, சோதனையே வராமல் வாழ்வின் கடைசிநொடி வரை ஒருவன் நிரூபிக்கின்றானா என இறைவன் ஓடவிட்டு சோதிப்பது இன்னொரு வகை

அடியாருக்கு வாய்த்தது இரண்டாம் வகை, அதில் ஊரும் உலகமுமே அவர் நாயனார் என சாட்சியாய் நின்றது, அப்படி ஒரு வாழ்வு அவர் வாழ்ந்திருந்தார்

மக்களே அவர் நாயனார் என சான்று சொன்னபின் இறைவன் வரவேண்டிய அவசியம் அங்கு ஏற்படவில்லை

காம்பீலி எனும் துங்கபத்ரா கரையோரம் தொடங்கிய அவரின் சிவ தொண்டு காவேரி கரையில் திருவாரூரில் முக்தியாய் முடிந்த பக்தி வரலாறு இதுதான்

திருநீலகண்டர் ஓடு கொடுத்தது போல, அமர்நீதி நாயனார் உடை கொடுத்தது போல இந்த நேசநாயனாரின் வாழ்வும் அவர்கள் சாயலே

தொழிலை மிக சரியாக செய்து, தன் தொழில் ஒன்றையே இறைவனுக்குரிய தொண்டாகவும் மாற்றி அதனாலே நாயன்மார் என அதி உன்னத நிலையினை அடைந்த அடியாரின் வரலாறு சொல்வதென்ன?

கர்மத்தில் இறைவனை நிறுத்தினால் அவனை எளிதாக அடையலாம், கீதை சொல்லும் கர்மயோகம் என்பது இதுவே.

அவர் தன் கர்மம் எனும் கடமை ஒன்றால் சிவதொண்டை செய்தார், ஆம் அவருக்கு மந்திரம் தெரியாது, யாகம் தெரியாது, அனுதினமும் கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்வதும் தெரியாது

இருந்த இடத்தைவிட்டு ஒரு அடி நகரமுடியாத அவரின் தொழிலின் தர்மம் அப்படி

அந்த தொழில் தர்மமத்தினை கெட்டியாக பிடித்து கொண்டு அதில் சிவதொண்டு தன் சுயதர்மம் என்பதை கலந்து அதைவிட்டு துளியும் விலகாது திருத்தொண்டு புரிந்து வந்தார்

ஆம் கர்மம் எனும் கடமையில் இறைசிந்தனையினை நிறுத்தி அதற்காவே வாழ்ந்தால் அதுதான் மாபெரு பக்தி, கடவுளை அடையும் மிகபெரிய வழி என்பதை நிரூபித்தார் நேசநாயனார்

உங்களின் கர்மம் எதுவாகவும் இருக்கட்டும், அதில் சிவனை முழுக்க நிறைந்து கர்மத்தை செய்யுங்கள் உங்களுக்கும் ஆச்சரியங்கள் நிகழும்

அடியார் வாழ்வில் நோக்க வேண்டிய இன்னொரு விஷயம், அவர் பெரும் தனவான் அல்ல, பெரும் துணி வியாபாரம் செய்தவரும் அல்ல, ஆயிரகணக்கான நெசவாளர்களை வைத்து நெசவு செய்த பெரும் முதலாளியும் அல்ல‌

ஆனால் அவர் தன்னால் முடிந்ததை செய்தார், எது தன்னால் முடியுமோ அதை சிவனுக்காக ஒதுக்கினார். அவரால் அவர் சூழலால் செய்ய முடிந்தது நெசவு ஒன்றே. அந்த நெசவில் சிவனுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அதை செய்தார்

ஆம், நீங்கள் எந்த தொழிலை செய்கின்றீர்களோ அதை சிவனுக்காய் நீட்டித்து செய்யுங்கள். நீங்கள் கட்டட பொறியாளரோ, பொறியாளரோ , வியாபாரியோ, கலைஞர்களோ, பணக்காரரோ, ஏழையோ, கூலியோ ,விவசாயியோ எதுவாகவும் இருங்கள் ஆனால் உங்களுக்கு தெரிந்த தொழிலை கர்மமாக செய்யும் பொழுது இறைசிந்தனையுடன் முழு மனதோடு செய்யுங்கள் எல்லாம் நலமாகும்

அடியார் வாழ்வு சொல்லும் மிகபெரிய தத்துவம் வஸ்திர தானமும் மிகபெரிய புண்ணியத்தை கொடுக்கும் என்பது

அடிப்படை தேவைகளில் உணவுக்கு அடுத்து மகா முக்கியமானது உடை, மானிடரின் மிக முக்கிய தேவை அது

தானம் கொடுப்பது மகா முக்கியம் என வலியுறுத்தும் இந்துமதம் 32 வகையான தானங்களில் வஸ்திர தானத்தை இரண்டாம் நிலையில் அதாவது அன்னதானத்துக்கு அடுத்து வைத்திருந்தது

இறைவனுக்கு உணவு படைப்பது போலவே உடுத்தியும் அழகு பார்த்த தர்மம் இது, உணவோடு உடைக்கு கொடுத்த முக்கியத்துவம் அது

வஸ்திர தானம் என்பது ஒருவனின் கடந்தபிறவி பாவம் எனும் கர்ம பலனை போக்கும் என்பது ஐதீகம், நேசநாயனார் வாழ்வில் அது நடந்தது

அந்த புண்ணியத்தை பெருக்கியதாலே அவரின் காம்பீலி நகருக்கு ஆபத்து வந்தபொழுது அவரின் புண்ணியம் சோழ நாட்டு மாயவரத்தில் அவரை பத்திரமாக கொண்டு சேர்த்து ஆரூரில் முக்தி அடையும் அளவு வழிகாட்டிற்று

ஆம் வஸ்திர தானம் செய்ய செய்ய ஒருவனின் பாவங்கள் தீரும், புண்ணியம் பெருகும் இதை ஒவ்வொருவரும் செய்தல் நன்று

வஸ்திர தானம் என்பது ஒரே வரியில் ஆடை கொடுப்பது அல்ல, அதிலும் சில வகை தானங்கள் உண்டு

கோவிலுக்கு பட்டு துணிகள்தான் தானமாக கொடுத்தல் வேண்டும், சன்னியாசிகளுக்கு காவி உடைகளும், ஏழைகளுக்கு எல்லா துணிகளும் அனுமதிக்கபட்டவை

கண்டிப்பாக தானம் கொடுக்கும் பொழுது புதிய சுத்தமான பழுதில்லா உடையினைத்தான் தானமாக கொடுத்தல் வேண்டும், பழையது பயன்படுத்தியது என கொடுப்பது தரித்திரத்தை கொண்டு வரும்

உண்மையில் தரித்திரம் கொண்டுவருமா என்றால் அதில்தான் இருகின்றது இந்துக்களின் ஆழ்ந்த அறிவு

உடை என்பது உடலை மறைக்க மட்டுமல்ல அது உடலின் சூட்சும சக்திகள் தொடர்புடைய உணர்வுகளை கொண்டது, ஒவ்வொருவர் உடலிலும் காணும் சரீரம் போல சூட்சும சரிரமும் அதன் சக்திகளும் உண்டு

அதை மறைக்கவும் அச்சக்தி வெளி செல்லாமல் இருக்கவும் துணிபோட்டு மறைத்தல் அவசியம், ஆலய கர்ப்பகிரகங்களில் திரையிடும் காரணம் இதுதான்

உடலுக்கு அப்படி திரையிடும் விஷயமே ஆடைகள், துறவிகள் பலருக்கு மேலாடை இல்லை ஏன் என்றால் அவர்களின் சக்திகளும் தன்மையும் விஷேஷமான சில பக்குவ நிலைகளும் மேம்பட்டவை

அவர்கள் உடலில் இருந்து சக்தி வெளிபட்டு கொண்டே இருக்க வேண்டும் அதை மக்கள் பெற்றுகொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மேலாடைகளை பெரிதும் முழு ஞானம் பெற்ற‌ துறவியர் அணிவதில்லை, இந்நிலை என்பது வெகு வெகு அபூர்வமே

இம்மாதிரி ஞானியரின் உடல் சக்திமிக்கது என்பதால்தான் அதை எரிக்காமல் சமாதி ஆக்கி மக்களை வழிபட சொல்வார்கள், அதில் இன்றளவும் ஆச்சரியமான பலன்கள் உண்டு எனபது கண்கூடு

இந்த அபூர்வமான ஞான முழு பக்குவ ஞானியர் ஆடையும் அணிவதில்லை, இது சமணரில் கூட உண்டு

எனினும் கீழ்கோவணமும் கீழாடையும் சராசரி துறவிகள் யோகிகளுக்கு அவசியம் என்றது இந்துமதம், இன்றும் ஞானியர் கைபட்ட துணியின் சக்தி மகத்தானது என்பது உலக வழக்கு

கோவிலில் கர்ப்பகிரகத்திலும் சாமி சிலையிலும் சூழ்ந்திருக்கும் உடைகளை பக்தர்கள் விரும்பி வாங்கி வீட்டில் வைக்கும் விஷயமும் இதுதான், ஆம் சக்தி மிக்க இடத்தில் இருந்து நல்ல சக்திகளை அவை பெற்றுவரும்

துறவியர் நிலை இப்படி என்றால் இல்லற சாமான்யர்களின் உடல் சூட்சுமத்தை தன்னில் தாங்கியிருக்கும் ஆடைகள் இன்னொரு உடல் பயன்படுத்தும் பொழுது சில குழறுபடிகள் ஏற்படும், இதனாலே ஒருவர் பயன்படுத்திய ஆடையினை இன்னொருவருக்கு கொடுக்க கூடாது என்றார்கள், ஆம் சூட்சும உடலின் சாயலை ஆடை தாங்கி நிற்கின்றது

மந்திர தந்திர சூனிய வேலைகளில் ஒருவனின் ஆடை மிக முக்கிய பங்கு வகிப்பது இதனாலே.

ஆடை சுத்தமாக இருக்க வேண்டும், தூசுபடியாமல் மடித்து வைக்கபட வேண்டும், நறுமணம் கமழும் விதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தபட்டது இதனாலே

அதன் வண்ணங்களில் கூட பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் தன்மை உள்ளதால் துறவிக்கு, சாமான்யனுக்கு, அந்தணருக்கு என விதம் விதமாக நிறம் கொடுத்தார்கள் முன்னோர்கள்

ஆம் ஆடைகள் என்பது சாதாரணம் அல்ல, மானம் காக்கும் வழங்கும் ஆடைகளில் ஆயிரம் சூட்சுமமான விஷயங்கள் உண்டு

இன்னும் ஆடை உடுத்தலில் பல விஷயங்களை குறிப்பால் சொன்னார்கள், அதில் ஆலயம் செல்லும் பொழுது பட்டு அவசியம் என்றார்கள்

பெண்கள் பட்டுசேலை அணிந்து செல்வதும் ஆண்கள் பட்டுவேட்டி பட்டு துண்டு அணிந்து செல்வதும் கட்டாயமாக்கபட்டதே ஏன்? பட்டுக்கு சில நல்ல சக்திகளை கிரஹித்து உடலுக்கு அனுப்பி காக்கும் சக்தி உண்டு என்பதாலே ஆலயம் செல்லும்பொழுது பட்டு கட்டாயமாக்கபட்டது

பட்டுநூல் மின்சக்தியினை எளிதில் கடத்தாது என்பது விஞ்ஞானம் ஒப்புகொண்ட உண்மை, அப்படி சில சூட்சும சக்திகளை உள்ளடக்கி வைக்கும் தன்மை பட்டுக்கு உண்டு என்பதால் அது ஏற்பாடானது

இதுதான் சாமி சிலைக்கும் பட்டுகட்டி பார்க்கும் ஏற்பாடு என்றானது

இதனால் ஆலயங்களுக்கு வஸ்திர தானம் செய்யும் பொழுது பட்டு அவசியம், அப்படியே சாமான்ய பக்தர்களுக்கும் தானம் செய்யும் பொழுது பட்டு அவசியம்

சன்னியாசிகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான வெள்ளுடை அல்லது காவி உடை தானம் செய்வதே சிறப்பு

இது தவிர ஏழைகளுக்கும் உதவி தேவைபடும் நிலையில் உள்ளோருக்கும் எந்த ஆடையும் வழங்கலாம் ஆனால் எக்காரணம் கொண்டும் உபயோகித்த, அழுக்கான, கிழிந்த ஆடைகளை ஒருகாலமும் தானமாய் கொடுத்தலே கூடாது

தானம் செய்யும் பொழுது மிக முக்கியமான விஷயம் தானம் செய்கின்றோம் எனும் கர்வமும் பெருமையும் வந்துவிடவே கூடாது, அன்னதானமோ வஸ்திர தானமோ செய்யும் பொழுது நம் பாவங்களை கொடுத்து அதாவது கர்மத்தை கழித்து புண்ணியம் வாங்குகின்றோம் எனும் நிலையில் கொடுப்போரை வணங்கி அவர் தாள் பணிந்துதான் கொடுக்க வேண்டும், அதுதான் ஏற்புடையது.

ஆம் அடியாரின் வாழ்வு வஸ்திர தானத்தின் மகத்துவத்தை காட்டுகின்றது, ஆடை தானம் செய்தே புண்ணியம் சேர்த்து இறைவனை அடைய முடியும் என்பதை மிக தெளிவாக காட்டுகின்றது

ஆடைகளின் மகத்துவமும் சிறப்பும் அப்படியானவை

நேச நாயனார் வாழ்வில் சோதனை நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக வந்தது, ஆம் அவர் துங்கபத்ரா நதியோரம் வேற்றுமொழி வேறு கலாச்சாரம் உணவு என வாழ்ந்தவர் அவருக்கு தமிழ் தெரிந்திருக்க நியாயமில்லை

அப்பகுதியில் அவர் சிவதொண்டு செய்தது பெரிய விஷயம் அல்ல, அது அவரின் சொந்தமண்

ஆனால் சிவன் எல்லோருக்கும் பொதுவானவர் எனும் வகையில் பிழைக்க வந்த கூறை நாட்டிலும், முன்பின் தெரியாத, மொழி தெரியாத, சொந்தபந்தம் ஏதுமில்லா அந்நிய நாட்டிலும் அடியார்களை கண்டு அவர்களுக்கு உதவி செய்தர் அல்லவா? அது சிலாகிப்புக்குரியது

ஆம் அடியார்களெல்லாம் சிவனின் தொண்டர்கள், அவர்களில் இனம்,மொழி,நாடு,குலம்,கோத்திரம் எனும் பிரிவினை ஏதுமில்லை சிவனின் தொண்டர்கள் எனும் ஒரு அடையாளம் போதும் என கூறைநாட்டிலும் தன் தொண்டை தொடர்ந்தார்

ஆம் தொண்டு செய்ய மனம் போதும். இடம் , காலம், சூழல் என எதுவும் அதை பாதிக்க கூடாது என தெளிவாக வாழ்ந்து காட்டினார் நேச நாயனார்.

எது நேசநாயனாரின் இந்த மாபெரும் பக்திக்கு காரணமாயிற்று?

சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அவரின் உன்னதமான சிவ அன்பு, சிவன் மேல் அவர் கொண்ட பரிசுத்தமான அன்பு.

அதை எப்படி வெளிகாட்டுவது என எண்ணினார், அவருக்கு சிவனடியார்கள் உருவில் சிவனே தெரிந்தார்கள், சிவனடியார்க்கு செய்வதெல்லாம் சிவனுக்கே என எண்ணி மகிழ்ந்து அன்பின் உச்சியில் இந்த பெரும் தொண்டினை காலம் முழுக்க செய்தார்

அந்த சிவன் மேலான அன்பே , அந்த சிவனுக்கு உழைப்பதே தன் கர்மம் என அவர் முடிவு செய்து அதை தன் சுதர்மம் என ஏற்றுகொண்டு சுமந்ததிலே இந்த மாபெரும் பாக்கியம் அவருக்கு கிட்டிற்று

அவர் முன்னால் இரு தேர்வுகள் இருந்தன, ஒன்று தனக்கென நூற்று பொருள் சேர்த்து பெரும் தனவந்தனாகி வாழ்வாங்கு வாழும் வாய்ப்பு, அவரின் தொழில்திறமை அதற்கு வழி செய்யும்.

இன்னொன்று சிவனுக்காய் வாழ்ந்து தன் உழைப்பு நேரம் வாழ்வு எல்லாம் அவருக்கே அர்ப்பணிப்பது

இதில் இரண்டாம் வகையினை தேர்ந்து கொண்டார் சிவநேசர், அவரின் வாழ்வெல்லாம் அடியாரை கவனிப்பதிலும் ஆடை வழங்குவதிலுமே கழிந்தது.

ஆனால் அவர் காலத்தில் நூற்று சம்பாதித்தவர்கள், செல்வம் குவித்து மாளிகையில் வாழ்ந்தவர்கள் புது புது வகையாக நூற்று விற்றவர்களெல்லாம், செல்வத்தில் புரண்டவர்களெல்லாம் என்ன ஆனார்கள் என்பது வரலாற்றில் இல்லை, காலம் அவர்களை இழுத்து புதைத்துவிட்டது.

ஆனால் சிவனுக்காய் வாழ்ந்த அடியார் தலைமுறை தலைமுறைகளை தாண்டி இதோ நின்று கொண்டிருக்கின்றார், சிவாலயங்கள் உள்ள அளவும் அவர் நிற்பார்.

இதுதான் இறைவனுக்காய் வாழ்ந்தோருக்கும், தனக்காக வாழ்ந்தோருக்கும் உள்ள வித்தியாசம், தனக்கென வாழ்ந்தோர் தடம் தெரியாமல் சென்ற உலகில் சிவனுக்காய் வாழ்ந்த நேசநாயனார் தெய்வமென கொண்டாபடுகின்றார்.

தன்னலம் மறந்து தனக்காய் வாழ்ந்த பக்தனுக்கு சிவன் கொடுத்த வரம் இது.

இந்த உலகில் ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனை உணர்ந்து அடைய பிறப்பெடுக்கின்றன, அதை உணர்ந்து அவனை நோக்கி வாழ்ந்து அவனை அடையாதவரை, இந்த ஜீவாத்மா தன்னை உணர்ந்து பரமாத்வாவினை அடையாதவரை மறுபடி மறுபடி பிறக்கின்றன‌

அது ஏழு பிறப்பு அல்ல மாறாக எழுந்து கொண்டே இருக்கும் பிறப்பு, இதைத்தான் "எழு பிறப்பு" என தெளிவாக சொல்லி வைத்தார்  பெரும்ஞானி வள்ளுவ நாயனார்.

நேச நாயனார் அந்த உண்மையினை அவரின் நெசவாளர் பிறப்பில் கண்டு கொண்டார், சிவனை தேடினார் சிந்தையெல்லாம் சிவத்தை நிறைத்தார், அது மூச்சாக பேச்சாக சிவதொண்டு செயலாக வெளிபட்டது.

மனமெல்லாம் நிறைந்த சிவபக்தி அவரின் பெரும் தானமும் தர்மமுமாய் வளர்ந்தது, அது வளர வளர தன் முன் ஜென்ம கர்மாவினை எல்லாம் தீர்த்து புண்ணியம் தேடி நாயன்மார் என்றாகி கயிலாயமும் ஏகினார்

இப்பிறவியிலே உங்கள் கர்ம வாழ்வு மூலம் அதை அடைய நீங்கள் முயலாவிட்டால் பல பிறவிகள் எடுத்து எப்பொழுது இறைசிந்தனையில் மூழ்கி நிறைகின்றீர்களோ அப்பொழுதுதான் பிறப்பில்லா நிலையினை அடியார் போல் அடைவீர்கள்

அதை இன்றே தொடங்குங்கள், தானமும்  தர்மமும் உங்கள் கர்மாவின் பலனை புனிதமாக்கும்

நேச நாயனாரின் வாழ்வு கர்மத்தில் கடவுளை அடைய செய்ய அவரின் பக்தி வழிகாட்டியது போல் உங்கள் பக்தியும் உங்களுக்கு வழிகாட்டட்டும், எல்லா நலன்களும் உங்களை அடையட்டும்

நேச நாயனாரின் குருபூஜை பங்குனி மாதம் ரோகினி நட்சத்திரம் அன்று கொண்டாடபடும்

அன்று காம்பீலியில் இருக்கும் விருபாஷீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும், கன்னட மாநிலம் பெல்லாரி அருகே அமைந்திருக்கும் அந்த ஊரே அடியார் பிறந்த ஊர் என்பதால் பெரும் உற்சாகமாக கொண்டாடப்படும்

நெசவுத் தொழில் செய்து அதன் மூலம் இறைவனை அடைந்த அறுவையர் குலம் எனும் சாலியர் குலத்தில் பிறந்ததால் சாலிய இன மக்களின் தனிபெரும் நாயனார் என்றாகின்றார் நேசநாயனார், அவரின் குருபூஜை அவர்களுக்கு தனி கொண்டாட்டமாகும்

அவர் பெயரில் ஏகபட்ட அடையாளங்களை அம்மக்கள் ஏற்படுத்தி தலைமுறை தலைமுறையாக அவர் புகழை காத்து பரப்பி வருகின்றனர்.

சாலியர் எனும் சாலிய மகரிஷி வழிவந்த அவரின் சொந்த குலம் கடந்து எல்லா நெசவாளருக்கும் ஒரு தெய்வ வழிகாட்டியாக விளங்கும் அவர் செங்குந்தர், சவுராஷ்ட்ரர் போன்ற நெசவு  குலங்களாலும் கொண்டாடபடுகின்றார்

அடியாரின் குருபூஜை கூறைநாடு அதாவது இன்றைய மாயவரத்தின் புனுகீஸ்வரர் ஆலயத்திலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்

அங்கு அவருக்கு தனி சன்னதி உண்டு, அங்கு பங்குனி ரோகினி நட்சத்திர நாள் மகத்துவமானது, தனி சிறப்பாக கொண்டாடப்படும்

வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்த ஆலயத்துக்கு சென்று வாருங்கள், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட வஸ்திரங்கள அந்த ஆலயத்துக்கும் அங்கிருக்கும் அடியார்களுக்கும் தானமாக கொடுத்து வழிபடுங்கள்

அடியார் சன்னதி முன் இருந்து ஒரு துண்டு நூலோ துணியோ எடுத்து வந்து உங்கள் வீட்டில் வைத்தாலும் எக்காலமும் உங்கள் சந்ததி வஸ்திர தானம் கொடுக்கும் உயர் நிலையில் இருக்குமே தவிர கையேந்தி நிற்காது இது சத்தியம்.

அடியாரை மனதால் தொழுது அவர் வாழ்வில் இருந்து கர்மத்தினால் கடவுளை அடைவது எப்படி என்பதை படியுங்கள்.

முடிந்தமட்டும் நல் வஸ்திரதானத்தை ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்து வாருங்கள்.

அடியாரை போல் உங்கள் கர்மத்தாலும் இறைதொண்டு செய்து வர முயலுங்கள், நீங்கள் தொடங்கி செய்ய செய்ய அந்த சிவன் ஓடிவந்து உங்களை அரவணைத்து தன்னோடு சேர்த்து கொள்வார்.

தூய்மையான மனதுடன் வாக்கு காயம் மூச்சு என எல்லாவற்றிலும் இறைவனை நிறுத்தி ஒரு முழம் துணியினை தானமாக வழங்கினாலும் மிகபெரும் பலனை பெறாமல் இருக்கமாட்டீர்கள் , பன்மடங்காக திருப்பி சிவன் தருவார் இது சத்தியம். 







வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

நாட்டமிகு தண்டிக்கும் அடியேன் - 29.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/29032022.html

தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன் - 02.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/02022022.html

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் - 26.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/26022022.html

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன் - 20.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/20022022.html

 கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் அடியார்க்கும் அடியேன் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/06022022_5.html

ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் - 03.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/03022022.html

 திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் - 26.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/26012022_25.html

சண்டேசுவர நாயனார் குரு பூஜை - 22.01.22 - https://tut-temples.blogspot.com/2022/01/220122.html

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் - 16.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/16012022.html

கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன் - 15.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/15012022.html

 தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் - 09.01.2022  - https://tut-temples.blogspot.com/2022/01/09012022.html

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் - 03.01.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/03012022.html

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html