"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, August 2, 2024

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 21

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவாக நம் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கை காண உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. பெரிதினும் பெரிது கேள் என்று சொல்ல கேட்டிருப்போம். ஆம். நம் குருநாதர் நமக்கு உரைக்கும் வார்த்தைகள் மிக மிக பெரியது.இவற்றை வெறும் வார்த்தைகளாக கொள்கின்றோமா? இல்லை. வாழ்க்கையாக கொள்கின்றோமா? என்பதில் தான் அர்த்தம் உள்ளது. மதுரைக்கு முன்பாக கோயம்பத்தூரில் குருநாதர் வாக்குகள் அருளியுள்ளார். இதில் யாருமே கூறாத தான, தருமம் பற்றி உரைத்துள்ளார். இவற்றையெல்லாம் நாம் கேட்டு, வாழ்வில் பின்பற்ற வேண்டும்.  குருநாதரின் வாக்கிற்கு அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டிய நிகழ்வை இன்று காண இருக்கின்றோம். குருநாதரின் உபதேசம் எப்படி எல்லாம் இருக்கும் என்று யார் அறிவார்?ஆனால் நாம் தான் எதையெதையோ தேடிக்கொண்டு இருக்கின்றோம். குருவை இறுக இரு கை கொண்டு சிக்கென பிடித்தாலே போதும். நமக்கு வேண்டியது கிடைக்கும். வாழ்வு சிறக்கும்.

இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம் 

ஓம் குரு வழியே ஆதி ஆதி

           ஓம் குரு மொழியே வேதம் வேதம்

 ஓம் குரு விழியே தீபம் தீபம்

                                                                ஓம் குரு பதமே காப்பு காப்பு




குருநாதர்:- அம்மையே எது என்று அறிய அம்மையே பற்று எதுனுடைய அறிய அறிய அம்மையே பின் எதைப் பற்றிக் கொள்ள வேண்டும் முதலில் அம்மையே?

அடியவர்:- பற்றற்றவன் திருவடியை

குருநாதர்:- அம்மையே யார் பற்றற்றவன்?

அடியவர்:- இறைவன்

குருநாதர்:- தெரிகின்றதா? ஆனாலும் இதில் அர்த்தமும் உள்ளது. இறைவன் எவை என்றும் அறிய திருவாசகம் இன்னும் எதை எதையோ இன்னும் இதிகாசங்கள் அதில் இருக்கும் சரியான வழியெல்லாம் எடுத்துக் கொண்டு பின் (இதன் வழியில் நீங்கள் ) நடந்தால் அது தான் பற்று. இல்லை என்றால் அம்மையே வெற்று.

அடியவர்:- சித்தன் அருள் வலைதளத்தில் இருக்கக்கூடிய எல்லா விசயங்களையும் மக்களுக்கு எடுத்து உரைக்கலாமா?

குருநாதர்:- அப்பனே இவ்வளவு நேரம் அதனால்தான் மனிதனை அறிவு கெட்டவன் என்று கூற அப்பனேஅதை மக்களுக்காகவே அதாவது சேவை செய்வதற்காகவே அப்பனே யான்
தீர்மானித்தது அப்பா. இவ்வளவு முட்டாள் இருப்பதை எங்கப்பா? அதனால் அவ் அம்மையும் கூட எப்படி இருக்கிறான் முட்டாள் என்று கூட அப்பனே திட்டுவாள்.

( சித்தன் அருள் வலை தளத்தில் உள்ள செய்திகளை அனைவருக்கும் வகுப்பு போல அனைவருக்கும் எடுத்து உரைக்கலாம். அது சேவைக்காகவே குருநாதரால் உண்டாக்கப்பட்ட வலை தளம் )

அடியவர்:- கோவிலில் கொங்கணர் வைக்கலாமா?

குருநாதர்:- அப்பனே இதையும் நேற்றைய பொழுது சொல்லி விட்டேன். அதாவது சித்தர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கிறார்கள் அப்பனே. அதனால் எங்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஆத்மார்த்தமாக அப்பனே. அதனால் ஒன்றை சொல்கின்றேன் அப்பனே. எங்களுக்கு கூட ஆசைகள் இல்லை அப்பனே. மனதில் ( இறைவனை/சித்தர்களை ) வையுங்கள் என்று கூட நேற்றைய பொழுதுலே சொல்லி விட்டேன். ஆனாலும் அப்பனே தாராளமாக வைக்கலாம்.

ஆனால் அப்படி எது என்று அறிய அங்கு கொங்கணனே இருக்கின்றான் என்பேன் அப்பனே, எவை என்று தெரியாமல் தான் கேட்கிறேன் அப்பனே.

அடியவர்கள்:- ( சில உரையாடல்கள் )

அடியவர்:- ( அம்மை ஒருவர்) ஆனா இப்ப உருவ வழிபாடுக்கும் உத்தரவு வந்திருக்கு.

குருநாதர்:- அம்மையே சிலவற்றுக்கு மட்டுமே உண்டு. அம்மையே சிலவற்றுக்கு இல்லை.அம்மையே சிலைகளுக்கும் உயிர் உள்ளது. ஆனாலும் எப்படி உயிர் இருக்கும் கூடு விட்டு கூடு பாயும் வித்தை இதனால் சில தளங்களில் கூட இன்றளவும் நடந்து கொண்டிருக்கின்றது தாயே சிலைகள் மூலமே. அதை தொட்டால் பாவம் கரைந்து விடும். ஆனாலும் நீங்கள் அதற்கு தகுதியானவராக இருந்தால் நானே சொல்வேன் வருங்காலத்தில். அம்மையே அப்பொழுதெல்லாம் மக்களுக்கு நல்லது செய்ய சித்தர்கள் அப்படியே கல் ரூபமாகவே இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று விடுவார்கள் அம்மையே. இதனை பற்றியும் விவரமாக குறிப்பிடுகின்றேன். எங்கெங்கெல்லாம் அப்படியே நிற்கின்றது அருவமாக என்று அம்மையே ஆனால் அங்கு தொட்டால் வினைகளும் நீங்கும்.

மோட்சம் கிட்டும் தாயே. இதனால் சாதாரணமில்லை திருத்தலங்களை. தன்னிடம் உள்ள ஆசையை அறுத்து அறுத்து அம்மையே எவையென்று பின்பற்றி பின்பற்றி அம்மையே (இது எல்லாம்) தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன். அது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தாலே அம்மையே ஒன்றும் லாபம் இல்லை. அதனால்தான் நாங்களே சில கஷ்டங்களை மனிதனுக்கு வைத்து வைத்து எதை என்றும் புரியும் அளவிற்கு கூட அழைத்துச் சென்று கொண்டே இருக்கின்றோம். அம்மையே கவலையை விடு.

அடியவர்:- பாலாலயம் செய்கிறோம் சொல்லி என்னமோ பண்றாங்கயா. அப்ப அந்த சிலைக்கு வந்து ஒன்னும் இல்ல மகிமை அந்த இதெல்லாம் இல்ல அப்டின்றாங்க. ஆனா நம்மள தொட்டு போய் கும்பிட சொல்றாங்க. ஆனா அப்படித் தொடுரப்போ ஒரு ஈர்ப்பு இருக்கேன்னு அந்த சிலையில…

குருநாதர்:- அம்மையே இதை இப்பொழுது தான் சொன்னேன்.

அடியவர்:- இல்ல அவங்க சொல்றாங்க. பாலாலயம் பண்ணினாங்க. அதை ( சிலைக்கு உயிர் கொடுத்ததை) எடுத்துட்டோம் அப்டின்னு சொல்றாங்க?

குருநாதர்:- அம்மையே எப்படியம்மா எடுக்க முடியும். இவையெல்லாம் அம்மையே ஒரு மனிதனின் உயிரை எடுக்கச் சொல்லு பார்ப்போம்.

அடியவர்:- அம்மா, பாலாலயம் பண்ணலாம். அத எடுக்க முடியாதம்மா.

கேள்வி கேட்ட அடியவர்:- அத அவங்க அப்படி சொல்ராங்க வழக்கம் எடுகின்றேன்னு…

அடியவர் 2:- (சிலைக்கு கொடுத்த உயிரை ) எடுக்க முடியாதம்மா

அடியவர் 3:- எடுக்க முடியாது

அடியவர்:- பாலாலயம் அப்டின்றது, அதுக்கு அபிஷேகம் பன்றாங்க இல்ல …அது கிடையாது

( பல அடியவர் உரையடல்கள்…)

அடியவர்:- ( ஒரு ஆலயத்தில் கட்டுமான பணி குறித்து அங்கு ) அகஸ்தியர் வந்தாச்சா?

குருநாதர்:- அப்பனே யான் அங்கே சொன்னேனே அகத்தியன் வாக்கு வாக்குத்தான் அப்பனே.

அடியவர்:- பணி வேகமாக நடக்குது…

குருநாதர்:- அப்பனே இனிமேல் அதாவது அப்பனே வேகமாக உனக்கு வயது ஏற்றலாமா என்ன அப்பனே?

அடியவர்கள்:- ( சிரிப்பு அலை )

அடியவர்:- ஏத்திடுங்க …

குருநாதர்:- அப்பனே ஆனால் உன்னை நம்பி இதை குடும்பத்தோடு வந்து கேட்டால் அப்பனே யான் சொல்லுவேன் அப்பனே. தனியாக வந்து கேட்டு இருக்கின்றாயே?.

அடியவர்கள்:- ( சிரிப்பு அலை )

அடியவர்:- அது கரக்ட்தான் (சரிதான்)

குருநாதர்:- அப்பனே அப்படி நீ சொல்லலாம் அப்பனே. உங்கள் இல்லத்திலிருந்து கேட்டால் அப்பனே சொல்லுவார்கள் அப்பனே.

அடியவர்:- சாமி நான் யார் என கேட்டால் அது அதுவாக இருக்கின்றது…

குருநாதர்:- அப்பனே நிறைய நீ தனி என்று அப்பனே ஒரு 20 வருடத்திற்கு முன்பு ( திருமணத்திற்கு முன்பு ) சொல்லியிருந்தால் அப்பனே யான் ஏற்றுக்கொள்வேன்.

அடியவர்:- 20 வருசத்துக்கு முன் இல்ல, இதுக்கு பிறகும்..

குருநாதர்:- அப்பனே உன்னை நம்பிக் கொண்டிருப்பவர்களை நீ காப்பாற்றமாட்டாயா என்ன, நீ தனியாள் என்று சொல்லிவிட்டாய் அப்பனே. அப்பனே, தனியாக பிரித்து விடட்டுமா உன்னை?

அடியவர்:- ரொம்ப நல்லது. ( சில விரக்தி பதில்கள்)

குருநாதர்:- அப்பனே வாய் ஏதாவது பேசலாம் அப்பனே.ஆனால் இருக்க முடியாது அப்பா.

அடியவர்:- இல்ல ஜீவாத்மாகிட்ட ( கடவுள்/அகத்தியர்  இடம்) நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ( சில தனிப்பட்ட வருத்தங்கள்/விரக்திகள் உரையாடல்கள் …)

குருநாதர்:- அப்பனே நம்பாமல் ஊர் சுற்றுவாயா? பார்ப்போம். அப்பனே இல்லத்துக்கு செல்லாமல் இரு அப்பொழுது புரியும் உன் நாட்டம் என்னவென்று அப்பனே எதை என்றும் அறிய அறிய.

அடியவர்:- ( இந்த பிறவி ) கர்மாவ தொட்டு தொட்டு , ஒருத்தன் நான் இல்லற யோகி என்று சொல்கின்றான். ஒருத்தன் நான் கர்ம யோகி என்று சொல்கின்றான்.,,

குருநாதர்:- அப்பனே (அடியவர் குறிப்பிட்ட) அவன் பொய்கள் அப்பா. நீ கூட சொல்லிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. மற்றவர் நம்ப போவதில்லை. இதனால்தான் அறிவு கெட்டவனாக இருக்கின்றான் மனிதன். அதனால்தான் சில கஷ்டங்களை கொடுத்து கொடுத்து உண்மை நிலையை உணருங்கள் என்று கூற அப்பனே எப்படி அப்பா ஒரு மனிதன் கர்ம ஞானியாக ஆகலாம் என்று , சித்தனாக ஆகலாம் என்று அப்பனே. சிந்தன் என்றால் அப்பனே பறக்கச்சொல் பார்ப்போம்.

கர்மா என்றால் கர்மா வீரன் என்கின்றானே அப்பனே எதையும் அவனால் அதாவது கருமா எது என்று கூற அப்பனே வென்றவன் தான் என்பேன் அப்பனே. முதலில் நீ சொன்னாய் அல்லவா அவனிடத்தில் எடுத்து சென்று என் கர்மாவை நீக்கு என்று சொல் பார்ப்போம்.

அடியவர்:- அவருக்கு தெரியலையே… ( கர்மாவை நீக்க )

குருநாதர்:- அப்பனே அப்போது கேட்க கூடாது என்பேன்.

அடியவர்:- சாமி நாங்க யார்கிட்டயும் கேட்க முடியாது. ஏன் என்றால் நாங்கள் மனிதர்கள் ..எல்லாம் ஆசை….

குருநாதர்:- அப்பனே அதனால் இப்பொழுது புரிகின்றதா? மனிதன் அப்பனே தெய்வமும் ஆக முடியாது.

அப்பனே வித்வான் ஆகவும் ஆக முடியாது. அப்படி ஒன்றும் ஆக முடியாது அப்பா. அப்பனே பின் ( ஏதாவது இருந்தால் ) ஒரு மாதம் கழித்து உருப்படி இல்லாமல் சென்றவனுக்கு அப்பனே இன்னும் கர்ம வீரனாம் இன்னும் எதை எதையோ வித்வானாம் இன்னும் அப்பனே எவை எவை பட்டம் அப்பா. அப்பனே கீழே விழுந்தால் தூக்கக்கூட ஆள் இல்லையப்பா.

அடியவர்:- ……….

குருநாதர்:- அப்பனே அதனால் இறைவன் கஷ்டங்கள் கொடுப்பது சரியா தவறா?

அடியவர்:- சரி

குருநாதர்:- அப்பனே புரிந்து கொண்டாய் அல்லவா? நிச்சயம் அனைவருக்குமே கஷ்டங்கள் கொடுத்துத்தான் வரும் காலங்களில் அழிப்பான் இறைவன்.

அடியவர்:- ( ஒரு பாழடைந்த சிவன் ஆலயம் அதனை புதுப்பிப்பது குறித்த கேள்வி)

குருநாதர்:- அப்பனே நீங்கள் விரும்பினாலும் அப்பனே இதை க்கூட சொல்லிவிட்டேன் அப்பனே. சிறிது காலத்தில் இறைவனே விரும்புவான் அப்பனே. ஈசனை தன்னை யார் யார் மூலம் எதை செய்ய வேண்டும் என்று அமைத்துக் கொள்வான் அப்பனே. அதி விரைவிலேயே யானும் வருகின்றேன் அங்கு.

அடியவர்:- ( தனிப்பட்ட கேள்வி )

குருநாதர்:- அப்பனே _____________

அடியவர்:- நான் கேட்ட குடும்பத்துக்கு ஐயா வோட ஆசிர்வாதம்

குருநாதர்:- அம்மையே ஆனாலும் அனைவருமே அங்கு சென்று இங்கு சென்று பொய்கள் கூடும் இடத்தில் தான் அம்மையே காசுகள் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். ஆனால் உண்மை சொன்னால் பொய் என்று சொல்வார்கள் நம்ப மாட்டார்கள். அதனால் தாயே சொல்லவில்லை தாயே ஆசிகள்.

அடியவர்:- நான் அந்த பையனுக்கு இதய அறுவை சிகிச்சை நடக்க போகுது

குருநாதர்:- எது என்பதை அறிய அம்மையே என்னுடைய ஆசிகள் என்று சொல்லிவிட்டேன்.

அடியவர்:- Rheumatoid arthritis ( முடக்கு வாதம்) அதுக்கு மருந்து சொல்லுங்க.

குருநாதர்:- அப்பனே எவன் என்று அறிய இவை எல்லாம் சில காலங்கள் பொறுத்தே யான் சொல்லுவேன்.

அடியவர்:- ஐயா எனக்கு வாக்கு வேண்டும்.

குருநாதர்:- அப்பனே இவன் வாழ்க்கை பற்றி எது என்றும் அறிய அறிய ஆனால் பிரம்மா இவன் வாழ்க்கையே ஏதும் இவன் செய்யக்கூடாது. அப்படி செய்தால் கர்மா என்று எழுதி வைத்து விட்டான். ஆனால் அதை மீறி என்ன என்ன செய்தான் என்பதை க்கூட. ஆனால் அப்பனே புரிகின்றதா? அப்பனே.

நாடி அருளாளர்:- ( அடியவர்கள் உரையாடல்கள் இந்த பதில் குறித்து விவாதித்தனர் )

அடியவர்:- அதையும் மீறி அவர் செஞ்சாருன்னா அது விதி தானே. விதியில எழுதி இருக்கு ஆனால் விதிய தாண்டி செய்ராரு?

குருநாதர்:- அப்பனே இல்லை அப்பா. இது தான் சூட்சுமம். இவன் விதியில் அப்பனே ஒன்றைச் சொல்கிறேன். ஆனால் அப்பனே இவன் விதியில் என்ன உள்ளது என்பதைக்கூட. ஆனாலும் அப்பனே ஏசுநாதன் இருக்கிறானே அவனுடைய சீடன்தானப்பா அப்பா இவன். ஆனாலும் ஏசு நாதனே இவனுக்கு பல கஷ்டத்தை கொடுத்தான். அப்பனே ஆனாலும் கஷ்டத்தைப் பொறுக்க கொள்ளாமல் அப்பனே வந்து விட்டான் அங்கிருந்து. ஆனால் அப்பனே பிடுங்கிக் கொண்டது அனைத்தும் அப்பனே. இப்பொழுது புரிகின்றதா அப்பனே இறைவனும் சோதனை செய்வான் அப்பனே பின். அப்பனே எது என்று அறிய இதிலிருந்து புரிகிறதா? அப்பனே விதி கூட அவை தன் இருந்தாலும் அப்பனே இவன் எதற்கு சரியானவன் என்று இறைவன் தேர்ந்தெடுத்து அப்பனே மாற்றும் தகுதி கூட இறைவனுடத்தில் இருக்கின்றது.அப்பனே ஒன்றைச்சொல்கின்றேன் அப்பனே. தேர்வை அப்பனே நிச்சயம் ஒரு மாணவன் எழுதுகின்றான். ஆனாலும் அப்பனே ஒரு ஆசிரியன் விருப்பப்பட்டால் இவனுக்கு நன்றாக அதாவது தோராயமாக இன்னும் அதிகளவு கொடுத்து விடுவோம். இன்னும் குறைத்து விடுவோம் என்று அப்பனே ( மாணவனின் மதிப்பெண் ) யார் கையில் இருக்கின்றது அப்பனே? ஆசிரியர் நினைத்தால் அப்பனே எதை வேண்டுமானாலும் செய்யலாம் அப்பனே. அதே போலத்தான் விதியை எழுதியவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அப்பனே.அப்பனே புரிகின்றதா? அப்பனே அதனால் உன் விதியில் அப்பனே எது என்று மாறிய பின் அதாவது ஏதும் புரிகின்றதா யான் சொன்னேன். ஆனால் இதை ஏசுநாதன் சரியாக உன்னை கெட்டியாக அனைத்தும் கொடுக்க வேண்டும் என்று எண்ணி அப்பனே சில சோதனை செய்தான் அப்பனே. ஆனால் அதில் வெற்றி பெறவில்லை அப்பா நீ.

நாடி அருளாளர்:- அப்போ ஒரு காலத்துல ஏசுநாதனுடனேயே இருந்து இருக்கீங்க நீங்க. ஐயா இது சத்தியம்.

அடியவர்:- சரிங்கய்யா.

குருநாதர்:- அப்பனே இதனால் அங்கும் இங்கும் எதை என்று அறியாமலேயே பணம் சேர்ப்பதற்கு அப்பனே ஆனாலும் ஏசு நாதனுக்கே கோபம் வந்துவிட்டது அப்பா.

அடியவர்:- விதிக்கு மாற்று ஒன்று இருந்தால் அது இறைவன் தான்.

அடியவர்:- அதனால் எழுதியவருக்கு எதை வேண்டுமானாலும் செய்ய தெரியும்.

குருநாதர்:- அப்பனே இதனால்தான் அப்பா வந்தது வினை அப்பனே. அதனால் சில காரியங்கள் கூட செய்தாய் என்பேன் அப்பனே விதியில் இல்லாத்தைக் கூட அப்பனே எவை என்று புரியாமல் கூட பிற ___________( சில தனிப்பட்ட கர்மாக்கள் எடுத்து உரைத்தார்கள் ) என்ன லாபம் அப்பனே.

அப்பனே அதை வைத்துக்கொண்டு எதை எதையோ ஆனாலும் அப்பனே பொறுத்து இருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே விதியைக் கூட அப்பனே பின்  உன்னை ஆட்கொண்டானே ( ஏசுநாதன் ) அவனே அப்படியே விட்டுவிடுவான் பொறுத்தாக வேண்டும் நீ. ஆனாலும் எதற்கும் பயப்பட தேவையில்லை. நன்முறைகளாகவே பயம் என்பது உன் உள்ளத்தில் அப்பனே பயம், தவறு செய்துவிட்டோமே என்று அனைவருக்குமே அப்படித்தான் பயம் அதனால் அப்பனே அழகாகவே அப்பனே உந்தனை பின் பக்குவப்படுத்தும் திறன் ஏசுநாதன் அவன் கைகளிலே இருக்கின்றது.

அடியவர்:- நான் அகத்தியர்….

குருநாதர்:- அப்பனே இது நாள் வரை அதாவது இதுவரை அப்பனே என்ன நீ எதைப் பிடித்தாலும் அப்பனே சரியாக புடி. அப்பனே பின் அதாவது உண்மையாக வாழ். அப்பனே அனைத்து தெய்வங்களும் ஒன்றி வரும். ஆனாலும் தெய்வங்களும் கூட ஏற்கனவே அப்பனை ஒன்றே குலம் ஒருவனே தேவன் இவையெல்லாம் யான் எடுத்துரைக்கின்றன். அதனால் அப்பனே பின் கருணை உள்ளவனாக , எதற்கும் ( யாருக்கும், எந்த ஒரு ஜீவராசிகளுக்கும் ) தீங்கு செய்யாதவனாக , நன்மை ( மட்டுமே ) மற்றவர்களுக்கு ( செய்பவனாக ) அப்பனே இவ்வாறாக இருந்தாலே அப்பனே நீ எதனை ( எந்த தெய்வத்தை ) வணங்கினாலும் அப்பனே குற்றங்கள் இல்லை.

( இந்த வாக்கு மதங்களை கடந்த சித்த வாக்கு என்பதை உள் வாங்கவும் )

அடியவர்:- அந்த வேலை செய்ய பிடிக்கவில்லை…

குருநாதர்- அப்பனே இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே பின் ( ஏசுநாதன் உன்னை ) ஆட்கொண்டு, அப்பனே உன் பாதையில் நீ செல் பார்த்துக்கொள்வோம்.

அடியவர்:- சரிங்க ஐயா. இப்ப சும்மா தியானத்தில் உட்கார்ந்தோம்னா ஏதோ சம்திங்…

குருநாதர்:- அப்பனே தியானத்தில் எப்படி உட்கார வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பது எல்லாம் தெரியாமல் செய்தாலும் கூட அது தியானமே இல்லையப்பா. இது நாள் வரை நீ செய்தது தியானமே இல்லையப்பா.

அடியவர்:- ( தியானத்தில்) சில  எண்ணங்கள் மாறி வருது….

குருநாதர்:- அப்பனே எண்ணங்கள் எதனால் வருகிறது?. இதனால் நிச்சயம் அப்பனே இன்னும் இன்னும் உன்னுடைய விதி கூட இறைவன் சோதித்தது. ஆனாலும் எவை பின் எவை பின் வருவதாக இருந்தாலும் ஆனாலும் அளவுக்கு தகுந்தாற்போல் சில வழிகள் நீ பொறுத்தே ஆக வேண்டும் அப்பனே மாற்றம் அடையும்.

நாடி அருளாளர்:- கொஞ்சம் பொறுத்து இருங்க ஐயா. தானாகவே மாற்றம் வரும்.

அடியவர்:- இல்ல என்ன சொல்ரது, (இங்கு) guidance பன்றேன்னு சொன்னாங்க வர்ரேனாங்க..

குருநாதர்:- அப்பனே இவனை ( இந்ந நாடி கேட்க இங்கு ) அழைத்தவன் யார்? இவன் தனக்கு சொன்னவன் யார்? வரச்சொல்.

 நாடி அருளாளர்:- ( இந்த அடியவரை அழைத்த அடியவரை அகத்தியப்பெருமான் பாதத்தின் ( நாடியின் ) முன்வர அழைத்து அமரச்சொன்னார்கள். அதன்பின்….)

குருநாதர்:- அப்பனே இது நாள் வரை யான் பல கருத்துக்களை இவன்தனக்கு அதாவது அனைவருக்குமே சொல்லி இருக்கின்றேன். அதை இவன் இடத்தில் சொன்னாயா இல்லையா? நீ.

அடியவர் :- சொன்னோம் ஐயா.

குருநாதர்:- அப்பனே நீயே கேளு அவன் இடத்தில் அதை எல்லாம் ஏன் பின்பற்ற வில்லை என்று?

அழைத்து வந்த அடியவர்:- ( கேள்வி கேட்டார் )

குருநாதர்:- அதனால் அப்பனே சில மனிதர்கள் தன் மீது குறைகள் வைத்துக் கொண்டு  பின் இறைவனை நிந்தித்தால் என்ன லாபம்? அப்பனே பின் எழுந்து நில்.

அடியவரை அழைத்து வந்த அடியவர்:- ( எழுந்து நின்றார்கள்)

குருநாதர்:- அப்பனே சில சில வழிகளை கூட அப்பனே அவனதனக்கு எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடு முதலில்.

(குருநாதர் கேள்வி கேட்ட அடியவரை அழைத்து வந்த அடியவரை சில அறிவுரைகள் சொல்ல சொன்னார்கள். அனைவரும் கவனிக்கவும் - ஒருவனுக்கு எப்படி வாழ வேண்டும் என்று ஏதாவதை நல்லது சொல்லி கற்றுக்கொடுத்தால் அதுவே முதல் உயர் நிலை புண்ணியம். இங்கு முதன் முதலில் நமது காலத்தில் இந்த அற்புத நிகழ்வு அகத்திய பிரம்ம ரிஷி முன் ( நாடியின் முன்னே நேரடிப்பார்வையில் )  நடந்து உள்ளது என்பதை அடியவர்கள் உணர்க. முதல் வகையான புண்ணியம் அதன் அரங்கேற்றம் அழைத்து வந்த அடியவர் உரைக்க அங்கு ஆரம்பமானது….)

அழைத்து வந்த அடியவர்:-  ஐயா இறைவனே கதி என்று சரணாகதியாக இருக்கனும். எதையும் ( இறைவனிடம் / வாழ்க்கையில் ) எதிர்ப்பார்க்க கூடாது. குருவே நமக்கு திருவருளை கூட்டி ( பெற்று ) கொடுப்பார்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவன் பார்த்துக்கொள்வார் என்ற சரணாகதியில சிவார்பணம் என்ற தத்துவத்திலேயே எல்லாம் இறைவன் நம்மை வழி நடத்துகின்றார் என்று நமக்குள் இருந்து எண்ணமாகவும்,  சொல்லாகவும் செயலாகவும், 22,000 நாடி நரம்புகளில் இருந்து ரத்தங்களிலும், சதைகளிலும் எல்லாமே அந்த இறைவனே , குருவே நின்று (நம்மை) வழிநடத்துகின்றார்கள் என்ற பாதையில் நம்ம பயணிக்கனும்.

( இப்போது அங்கு உள்ள அடியவர்கள் அனைவருக்கும் இந்த உரை சென்று அடைந்ததால், உரைத்த இந்த அடியவருக்கு உண்டானது - மிக உயர் வகை முதல் நிலை புண்ணியம் என்பதை உணருங்கள் அடியவர்களே. ஏழை எளியோருக்கு இந்த உலகில் நல்லது சொல்லி அவர்கள் நன்கு தர்ம வாழ்க்கை வாழ கற்றுக்கொடுங்கள். முதல் தர உயர் நிலை புண்ணியங்கள் பெறுங்கள். இது குறித்து குருநாதர் முன்பு உரைத்த வாக்கு:- ஏழை எளியோர்கள் அப்பனே அவர்களுக்கு சேவை செய்வது பெரும் புண்ணியமப்பா. )

குருநாதர்:- அப்பறம் எது என்று அறிய என்னைக் கேட்பதை போல் அவனிடத்தில் நீ கேள்.

( இங்கு குருநாதர் - கேள்வி கேட்ட அடியவர் , இவரை அழைத்து வந்த அடியவரிடம் கேள்வி கேட்க உத்தரவு இட்டார். இதனிடையில் எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என்று மற்றவரு புதிய அடியவர் எடுத்து உரைக்க, உடனே குருநாதர் இந்த புதிய அடியவரை நோக்கி பின்வருமாறு உரைத்தார்கள் )

குருநாதர்:- அப்பனே பின்னே திரும்பு. பின் அவன் கேட்கவில்லை அவன்.அவனையே ( புதிய அடியவரை கேள்வி கேட்ட ) இவன் தனக்கு எடுத்துரைக்க சொல்.

( இந்த புதிய அடியவரை முன்னர் கேள்வி கேட்ட ஏசுநாதரின் முன்நாள் சீடருக்கு எடுத்து உரைக்க ஆணை இட்டார்கள்)

புதிய அடியவர்:- ( ஏசுநாதரின் பூர்வ ஜென்ம சீடருக்கு உரைக்க ஆரம்பித்தார் ) குருநாதர் சொன்னதுதான். முன்னொரு வாக்கில் சொல்லி இருக்காங்க. குருநாதர் ஒரு ஆறு ஏழு செய்லகளை செய்ய சொல்லி இருக்கின்றார். அவை…

        1.      அதிகாலை 3 மணிக்கு எழுந்து தியானம் செய்ய வேண்டும். சரிங்களா. அமைதியாக உட்காருங்க. தியானம் தானாக வந்து விடும். நம்மளுடைய ஆன்மா நமக்குள்ள அமைதிய கொண்டு வந்துடும். தினமும் 3 மணிக்கு. குருநாதர் சொன்னதுதான். அதுக்கு அப்புறம்
        2.      காலையில பசு மாட்டுக்கு அகத்திக்கீரை வாங்கி கொடுத்திடுங்கள். வாரத்துக்கு ஒரு முறை உங்க கையால கொடுங்க
        3.      இரவு படுக்கும்போது இறைவனுடைய நாமத்தை உச்சரிச்சிகிட்டு, பாட்டு படிச்சுகிட்டு உறங்குங்க.
        4.      உங்களால இயன்ற அளவுக்கு பிற உயிர்களுக்கு நன்மை செய்யுங்க. நன்மை செய்யாவிடிலும் தீமை செய்யாதீங்க.

இதை எல்லாம் நீங்க செஞ்சுகிட்டு வந்தாலே தானாகவே எல்லாம் சரி ஆகிவிடும். இது எல்லாம் குருநாதர் சொன்னது.

முன்பு கேள்வி கேட்ட அடியவர்:- பணி மாற்றம் வருமா?

குருநாதர்:- அப்பனே இதையும் அவனிடத்தில் ( புதிய அடியவரிடம் ) கேள்.

புதிய அடியவர்:- இதெல்லாம் நீங்க செய்ய செய்ய தானாகவே ( பணி மாற்றம் ) நடக்கும். நீங்க எதுவுமே கேட்க தேவை இல்லை.

கேள்வி கேட்ட அடியவர்:- இல்ல இது எல்லாம் வந்து ….( இந்த அடியவர் கேட்ட கேள்வி ஒலி பதிவு போதிய சத்தம்ஆக இல்லாததால் தட்டச்சு செய்ய இயலவில்லை )

புதிய அடியவர்:- அப்டின்னா இன்னும் ( புண்ணியம் ) பத்தவில்லை. என்ன சொல்கின்றேன் என்றால் நாம செய்கின்ற தான தர்மங்கள் ( அதன் மூலம் நினைத்த காரியம் ) நடக்கவில்லை என்றால் இன்னும் கர்மா வலிமையாக உள்ளது. இன்னும் தான தர்மங்களை அதிகப்படுத்தனும். அப்படி என்றால்தான். அப்படி என்றால்தான் புண்ணியம் சேரும். நீங்க நினைப்பது நடக்கும்.

கேள்வி கேட்ட அடியவர்:- கர்ம காரியங்களில் அதிக ஈடுபடும்போது புண்ணியங்ஙள் அதிகமாகும், எல்லாமே நடக்க ஆரம்பிக்கும். .( இந்த அடியவர் கேட்ட கேள்வி ஒலி பதிவு போதிய சத்தம் ஆக இல்லாததால் தட்டச்சு செய்ய இயலவில்லை )

குருநாதர்:-  அப்பனே இவன் தனக்கும் ஒரு மந்திரத்தை கொடுத்தேன். அதை அப்பனே சொல்லி கொடு.

( சில உரையாடல்கள்)

கேள்வி கேட்ட அடியவர்:- இப்ப சொல்லாம்னு எடுத்தேங்க ஐயா ( ஆனால் மந்திரம் சொல்ல ஆரம்பிக்க வில்லை)

குருநாதர்:-  அப்பனே இதுபோலத்தான் அப்பனே உண்மையை சொன்னால் யாரும் ஒத்துக் கொள்வதே இல்லை அப்பனே ஆனால் பொய் சொன்னால் ஓடி ஓடி ஏமாந்து விடுவார்கள்.  அங்க ஏமாந்துட்டு அப்பனே ஏமாந்து விட்டோமே அனைத்தும் பொய்யே என்று அதனால் உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள்.

சித்தன் பேச்சை பின் யாருமே கேட்பதில்லை. அப்படி கேட்காவிடில் யான் எப்படி ( நாடி வாக்கு உரைக்க ) வருவேன் அப்பா?

(சில அடியவர் உரையாடல்கள். இந்த அடியவர் மந்திரம் சொல்கின்றேன் என்று சொன்ன உடன்)

குருநாதர்:- அப்பனே கூறு. எத்தனை முறை என்று?

அடியவர்கள்:- ஒரு நாளைக்கு எத்தனை முறை ஜெபிக்கின்றீர்கள்?

கேள்வி கேட்ட அடியவர்:- ( ஒரு பதில் )

குருநாதர்:-அப்பறம் எதை என்று அறிய அப்பனே போய் பார் அப்பனே உடனடியாக நாளையில் இருந்து. பார்ப்போம்.

கேள்வி கேட்ட அடியவர்:- (……)

குருநாதர்:- அப்பனே எது என்று அறிய இல்லையப்பா.

நாடி அருளாளர்:- தினமும்…

கேள்வி கேட்ட அடியவர்:- சொல்கின்றேன்…

குருநாதர்:- அப்பனே  நிச்சயம் இல்லையப்பா.அப்பனே சொல் அனைவரிடத்திலும்.

கேள்வி கேட்ட அடியவர்:-  ( குருநாதர் உரைத்த மந்திரத்தை அங்கு உள்ள அனைவர்முன் உரைத்தார்)

குருநாதர்:- அப்பனே இது சரியா?

கேள்வி கேட்ட அடியவர்:-  ( குருநாதர் உரைத்த மந்திரத்தை இரண்டாம் முறையாக அங்கு உள்ள அனைவர்முன் உரைத்தார்)

குருநாதர்:- அப்பனே சரியாகவே சொல்லிக்கொண்டு வா அப்பனே. நிச்சயம் உயர்வுகள் ஏற்படும் என்பேன் அப்பனே.

கேள்வி கேட்ட அடியவர்:-  உயர்வுகள் ஏற்படுமா?

நாடி அருளாளர்:- ஏற்படும் ஐயா

குருநாதர்:- அப்பனே இன்னும் இன்னும் என்னென்ன மந்திரங்கள் அப்பனே. எதையுமே பின்பற்றவில்லை. முதலிலேயே இவன் தனக்கு யான் சொன்னேன். இதை கூட பின்பற்றவில்லை.

கேள்வி கேட்ட அடியவர்:-  வாய்ப்பு கிடைக்கலைங்க.

குருநாதர்:- அப்பனே அதனால் யான் சொல்லியதை சரியாக கடைப்பிடிக்காவிடில் அப்பனே எப்படி அப்பா மீண்டும் வந்து (வாக்கு) சொல்லுவது? அப்பனே உன் விதியை கூட மாற்ற வேண்டும். எங்களால் மாற்ற இயலும் ஆனால் யாங்கள் சொல்வதை நீங்கள் சரியாக பயன்படுத்தினால் தான் மாற்ற முடியுமே தவிர பின் யாங்கள் எத்தனையோ வகை வேலைகள் அப்பா எங்களுக்கு. மனிதர்களை பல மனிதர்களை பக்குவப்படுத்த. அது தெரியாமலே அது சிலருக்கே கிடைத்துள்ளது என்றால் அப்பனே புண்ணியம் தான் அதைக் கூட சரியாக பயன்படுத்தவில்லை என்றால் என்ன என்றால் அப்படியே இன்றைய சூழலில் அப்பனே காசுக்காக மனிதன் எதை எதையோ செய்து கொண்டிருக்கிறான், அதை செய்கிறேன் இதை சரி படுத்துகிறது. இவ் மந்திரத்தைச் சொன்னால் அவை நடக்கும் என்றெல்லாம். அப்பனே எங்கள் அருள் இருந்தால் தான் அனைத்தும் நடக்கும் அப்பா இல்லை என்றால் ஒன்றும் நடக்காது அப்பா. கருமம் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும் கடைசியில் அப்பனே விதியில் இல்லாத்தை கூட. அவன் விதியில் என்ன உள்ளதே என்று கூற கஷ்டங்கள். அதைக்கூட உன்னிடத்தில் பாதி அளவு கொடுத்து விடுவான் அப்பனே. சேர்ந்து அனுபவிக்க வேண்டியதுதான் கடைசியில் அப்பனே சொல்லிவிட்டேன்.

கேள்வி கேட்ட அடியவர்:- _______

குருநாதர்:- அப்பனே அதனால் நல்வாழ்க்கை உண்டு. நீயேதான் கெடுத்துக் கொண்டாய் உந்தனை. அப்பனே இங்கு விதியா? மதியா? அப்பனே விதி கூட நிச்சயம் மதியால் ஜெயிக்க முடியும் அப்பனே. மதியினால் ஜெயிக்க உனக்கு நிச்சயம் வாய்ப்புகள் கொடுத்தால், அது சரியாகவே பயன்படுத்திக் கொள்ளவில்லை நீ.

புதிய அடியவர்:- நீங்கதானே கேட்டீங்க..

கேள்வி கேட்ட அடியவர்:- இப்போ எனக்கு எதுவும் வேண்டாம் ஐயா.

குருநாதர்:- அப்பனே இப்பொழுதுதான் கேட்டாயே எந்தனுக்கு  பணி வேண்டும் என்று (கேள்வி கேட்ட) அப்பனே. ( புதிய) அப்பனே பளார் என்று ( கேள்வி கேட்ட அவனை) அறை.

கேள்வி கேட்ட அடியவர்:-  இப்ப எனக்கு பணிகள்  ஒரு விசயம் கிடையாதுங்கயா

குருநாதர்:- அப்பனே எதுவுமே வேண்டும் வேண்டாம் என்று முதலிலேயே சொல்லி இருந்தால் இத்துன்பத்திற்கு அப்பனே ஆளாக முடியாது அப்பா. அதனால் அப்பனே எது என்று புரியாமல் கூட அப்பனே திருமணம் வேண்டும் வேண்டும் என்று எல்லாம் பின் சித்தனாக கூட அதனால் அப்பனே முதலில் அமைதியாக பொறுத்து இரு. தியானங்கள் செய் போதுமானது அப்பனே. யாங்கள் உனக்கு எப்படி வாழ்க்கை தரமுடியும் என்பதைக்கூட யாங்கள் தருகிறோம். அப்பனே மனம் அப்படியே அலைபாயுது அப்பா. அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்போதே பிரம்மன் எழுதி வைத்து விட்டான் அப்பனே இளவரசனாக இருந்து அப்பனே ( பூர்வ ஜென்ம கர்மா அதன் விளக்கம் ____________________ _______ ______ ) அப்படி இருப்பினும் ஏசுநாதன் கருணை கொண்டு உன்னை மாற்ற எண்ணினான்.  ஆனாலும் அப்பனே. அவ் ஆன்மா ( பழைய அதே கர்மத்தை ) நோக்கித்தான் சென்று அடைந்தது. யான் மாற்றுகின்றேன் பொறுத்திருக்க.
( சில கடுமையான பூர்ம ஜென்ம கர்மங்கள் இந்த அடியவரை பின் தொடர்கின்றது.  மனித ரூபத்தில் பழி தீர்க்க பிறந்து உள்ளது என்று விரிவாக எடுத்து உரைத்தார்கள். ) அதில் இருந்து முதலில் காத்துக்கொள். யாங்கள் காப்போம்.

அடியவர்கள்:- ( நீன்ட அமைதி இந்த பூர்வ ஜென்ம கர்ம சூட்சுமங்களை கேட்டு )

ஒரு அம்மை அடியவர்:- முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

குருநாதர்:- அப்பனே ஒன்றும் செய்ய தேவையில்லை. இதற்கு காரணம் எந்த மாதிரி அப்பனே இப்போது தான் சொன்னேன். ( சில பரிகார விளக்கங்கள்) யானே முடிவெடுத்து அப்பனே தெரிந்து கொள்,  யாங்கள் தான் மாற்ற முடியும் சொல்லிவிட்டேன் பொறுத்திருக்க.

கேள்வி கேட்ட அடியவர்:-  ஐயா மாந்தீரீகம்…? ( அதன் பாதிப்பா)

குருநாதர்:- அப்பனே அவை எல்லாம் ( சித்தர்கள் ) எங்கள் இடத்தில் வேலை செய்யாத அப்பா. சித்தர்களை நம்பு.

கேள்வி கேட்ட அடியவர்:- ஐயாவேட திருவடிகள் கிடைக்குமா?

குருநாதர்:- அப்பறம்  இதுவும் முட்டாள்தனமாகவே அப்பனே கேள்வி இருக்கின்றது. என்னோட ஆசிகள் இல்லாமலா ( நீ இங்கு வந்தாய்) நேற்றைய தெரிவித்து விட்டேன். ( மதுரை அடியவர் பரமசிவம் ) பரமனே சொல்?

மதுரை அடியவர் பரமசிவம்:- ( இந்த மதுரை அடியவர் இல்லத்தில் குருநாதர் ஆட்கொண்டு வந்து இந்த நீண்ட பலமான நாடி வாக்குகள் பலவற்றை உலகோர் அறிய உரைத்தார்கள் என்று அடியவர்கள் அறிய தருகின்றோம்)

அகத்திய பிரம்ம ரிஷி அருள் இல்லாமல் யாரும் ( நாடி வாக்கு கேட்க) இங்க வர முடியாது. அதனால் குருநாதர யாருக்கு ஆசீர்வாதம் கொடுத்தாரோ அவர்கள் மட்டும் இங்கு வரமுடியும். அடுத்த நாடி ஆசிர்வாதம் ( நாடி வாக்குகள் ) வேண்டும் என்றால் பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால் பஞ்ச பூத ஸ்தலத்திற்கு போய்விட்டு வரச்சொன்னாங்க.

கேள்வி கேட்ட அடியவர்:- அந்த அந்த அந்த பிரச்சனை கேளுங்க.

குருநாதர்:- அப்பனே ஒரு காலில் நில்.

கேள்வி கேட்ட அடியவர்:- ( எழுந்து ஒரு காலில் நின்றார்)

குருநாதர்:- அப்பனே அப்படியே நில்.

( ஏறக்கனவே நின்று கொண்டு இருக்கும் அடியவர் ஒருவரை ) அப்பனே நீ நிற்கின்றாயே இவனை ஏன் நிற்க வைத்தேன் என்று கூற வேண்டும்.?

அடியவர்:- சரியான பாடம் புகட்ட

குருநாதர்:- அப்பனே அவன் தனக்கு என்னென்ன தவறுகள் செய்தோம் என்பது அவனுக்கே தெரியும். அப்பனை மீண்டும் என்னிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறானே , இது நியாயமா என்று அவனிடத்தில் கேள்?

கேள்வி கேட்ட அடியவர்:- ( பல கேள்விகள் கேட்டது)  தப்பு தாங்கய்யா. அதுக்கு தாங்கய்யா நிக்கிறேன்.

குருநாதர்:- அப்பனே இரு கைகள் மேலே  கூப்பி ( தூக்கி குவித்து )  வணங்கு.

கேள்வி கேட்ட அடியவர்:- சரிங்க ஐயா ( ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தார்)

குருநாதர்:-  அப்பனே அப்படியே நில்.

அடியவர்கள் :- ( சிரிப்பு )

கேள்வி கேட்ட அடியவர்:- இருங்கயா பேலன்ஸ் பண்ணி நிக்கிறேன். கஷ்டம் தாங்க ஐயா. நான் பாத்துக்கிறேன்.

குருநாதர்:- அப்பனே அனுதினமும் இப்படியே நின்று  மந்திரத்தை சொல்லிக் கொண்டே இரு அப்பனே அனைத்தும் மாறும் அப்பா சொல்லி விட்டேன் அப்பனே. பின் என்னால் முடியவில்லை என்று கூறிவிட்டால் அப்பனே சொல்லி விட்டேன் யான்.

கேள்வி கேட்ட அடியவர்:- நிக்கின்றேன் ஐயா. சுதர்ஷன மந்திரமா ஐயா?

குருநாதர்:- அப்பனே முதலில் நின்று எவ் மந்திரத்தையும் ஜெபி.

( அடியவர்கள் இந்த வாக்கை நன்கு உள் வாங்கவும் மந்திர ஜெபங்களுக்கு குருநாதர் காட்டிய சூட்சும வழி )

கேள்வி கேட்ட அடியவர்:- ஐயா நான் பல குழப்பத்தில் உள்ளேன். எனக்கு தெளிவாக..

குருநாதர்:- அப்பனே இதை செய். குழப்பமும்  நீங்கும் என்பேன் அப்பனே. இதில் கூட அர்த்தம் உள்ளதப்பா.

அடியவர்:- மனதை ஒருமுகப்படுத்தல்…

குருநாதர்:- அப்பனே மனிதன் ( அவனுக்கு) அனைத்தும் கொடுத்தாலும் அப்பனே மற்றவர் தயவால் தான் வாழ்கிறான். நீயும் அதுபோலத்தான் அப்பனே. (மனிதர்களை) புடித்து விட்டாய் அங்கு அப்பனே உன் நிலைமை இப்பொழுதே புரிகின்றதா? அப்பனே நீயாக சரியாக ( எங்களையே நம்பி ) ஒரே காலில் நின்றிருந்தால் யாங்கள் வந்து காத்து இருப்போம் அப்பனே. ஆனால் மனிதர்களை நம்பி விட்டாய் நீ.

கேள்வி கேட்ட அடியவர்:- அப்டீங்களா ஐயா ( குருநாதர் கருணையால் அடியவர் மனம் மாற்றம் அடைய ஆரம்பித்த தருணம் இது )

அடியவர்:- மனிதனை பிடிச்சுட்டார்

கேள்வி கேட்ட அடியவர்:- தப்புங்க ( தவறுதான் ) ஐயா

குருநாதர்:- அப்பனே அதனால்தான் தன்னோடு இருக்கும் குறைகளை அப்பனே நீக்கவே இறைவன் சில கஷ்டங்களை தருகின்றான். இப்பொழுது கூட என் பேச்சை கேட்க மாட்டாய் வரும் காலங்களில் என்று யான் சொல்வேன். யான் காலை கீழே விடு என்று சொல்ல வில்லை. நீ விட்டு விட்டாய் அப்பனே.  (அடியவர்கள் சிரிப்பு அலை) இப்பொழுதே புரிகின்றது இதில் இருந்து.

கேள்வி கேட்ட அடியவர்:- ஐயா இந்த…

குருநாதர்:- அப்பனே எங்கிருந்து வந்தாய் நீ?

கேள்வி கேட்ட அடியவர்:- ( தன் ஊர் பெயரை செப்பினார் )

குருநாதர்:- அப்பனே என்று கூற. அதிகாலையில் இருந்து யாரு கூட பேசினாய்?

கேள்வி கேட்ட அடியவர்:- ( இரு அடியவர்கள் பெயர்கள் கூறினார் )

குருநாதர்:- அப்பனே  அவர்கள் இருவரையும் எழச்சொல்.

( அந்த இரு அடியவர்களும் எழுந்து நின்றனர் அங்கு. குருநாதர் அந்த இரு அடியவர்களிடம் வாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள்… )

குருநாதர்:- அப்பனே பின் நீங்கள் சொல்வதை இவன் வாழ்க்கையில் மறக்கக்கூடாது. அப்படி சொல்ல வேண்டும் இப்பொழுது அப்பனே.  அப்பொழுதுதான் உங்களுக்கும் என்னுடைய ஆசிகள். 

கேள்வி கேட்ட அடியவர்:- (என்னை) திட்டுங்கய்யா.

கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:-     நம்பிக்கை வர வேண்டும். குருநாதர் சொன்னார் ஒரு வார்த்தை சொன்னார். ஒற்றைக்காலை தூக்கி கையை கூப்பி நிக்கச்சொன்னார்கள். நீங்க நின்று இருந்தீர்கள் என்றால் கர்மம் நீக்கி இருப்பார் அகத்தியர்.

கேள்வி கேட்ட அடியவர்:- ஐயா நிக்க முடியல

கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- நிக்கல நீங்க. முயற்சி செய்யுங்க தப்பு இல்லை. நீங்க முயற்சி செய்யலையே.

கேள்வி கேட்ட அடியவர்:- நிக்குறேன் ஐயா.

கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- தயவு செஞ்சு நில்லுங்க.

கேள்வி கேட்ட அடியவர்:- ( ஒரு கால் அடுத்த காலில் வைக்கும்போது ) பேன்ட் வழுக்குது…

கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- நீங்க எல்லாம் வேற விளையாட்டா நினைச்சுகிறீங்க. உண்மையில சொல்ரேன் . ஐயா சொன்னார்னா விளையாட்டு கிடையாது. சிரிப்பு கிடையாது. அது நிச்சயம் தயவு செஞ்சு நில்லுங்க.

கேள்வி கேட்ட அடியவர்:- நிக்கிறேன்…

கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- தயவு செஞ்சு நில்லுங்க. விளையாட்டுக்கு சொல்லல..நீங்க திருப்பி திருப்பி உங்க குறைகளை கேக்குறீங்களே ஒழிய. அவர் ( குருநாதர் ) சொல்றத கேக்க மாட்டேங்குறீங்க.

கேள்வி கேட்ட அடியவர்:- ________

கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர்:- அது சரி. அதுவும் சொல்லுவார் ஐயா.  முயற்சி செய்யுங்க. தப்பு இல்ல.  இது ஒரு யோகா. அவ்ளோதான். இதுனால ரத்தம் மேல போகும்ங்க.  மூளைக்கு அதிகப்படியா ரத்தம் போச்சுன்னா மனசு தானாக அமைதி ஆகும். மூளைக்கு ரத்தமே போக மாட்டேங்குது. அதை கொண்டு போங்க. மனசு தானாக அமைதி அடையும்.

குருநாதர்:- அப்பனே ( இருவரில்) ஒருவன் மட்டும் சொன்னான் அப்பனே. மற்றவன வாயை மூடிக் கொண்டிருக்கின்றனே பேசச்சொல்.

அடியவர்கள்:- ( சிரிப்பு அலை )

கேள்வி கேட்ட அடியவரிடம் எடுத்து உரைக்கும் அடியவர் 2:- ஐயா அவர் கருணைக்கடல். அவர் நம்ம எல்லாரையும் இந்த இடத்தில கூட்டி ( அழைத்து வாக்கு உரைக்கின்றார்கள் ). அந்த கருணைக்கடல் நம்ம
பிரச்சனைகளுக்கு எதிராக ( நம்மை ) ஒரு ஆட்கொண்டு சொல்ரார். அவர் தெய்வம். தெய்வம் வந்து அவ்ளோ கருணையோட சொல்லும் போது அதை மீறி எதுவுமே இல்லங்க ஐயா. அப்படியே கெட்டியாக பிடிச்சுக்கனும்.

குருநாதர்:- அப்பனே மூன்று நாட்கள் நான்கு நாள்களுக்கு முன்பே இப்பொழுது சொன்னானே ( அடியவர்# 2) அவனுக்கு ஒரு பெரிய மரண கண்டம் அப்பா. ஆனாலும் அப்பனே அதை மாற்றி எழுதி வைத்து விட்டேன் அப்பனே. இப்பொழுது பார்த்தீர்களா விதியை கூட என்னால் மாற்ற இயலும் அப்பனே. (ஆனால்) உன் விதியை என்னால் மாற்ற இயலாது அப்பனே. எவை என்று புரிய புரிய அப்பனே, மூடனே, முட்டாளே.

( இந்த அடியவருக்கு ரயிலில் ஒரு பெருய மரண கண்டம் இருந்ததாக அங்கு அடியவர்கள் பேச்சு)

குருநாதர்:- அப்பனே அனைவருக்கும் சொல் அப்பனே. விதியைக் கூட எப்படி என்னால் எப்படி மாற்ற இயலும்  என்று நீ (அடியவர்# 2) கூற வேண்டும் அப்பனே. முதலில் நீ கூறு?

( இந்த அடியவரின் மரண கண்டம் இதனை எப்படி விதி மூலம் மாற்றினார்கள் என்று எடுத்துஉரைக்க ஆரம்பித்தார் இரண்டாம் அடியவர். இந்த அடியவருக்கு காலே துண்டாகி போய் இருக்க வேண்டிய கொடுமையான கண்டம். ஆனால் கருணைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி இந்த அடியவருக்கு ஆச்சரிய மூட்டும் வகையில் காப்பாற்றி உயிர் பிச்சை இட்டு உள்ளார்கள். அந்த அடியவர் சொன்னவற்றை அப்படியே வாய் மொழி வழக்கி்ல் இங்கு கீழே…..)

அடியவர்# 2:- கோயம்புத்தூருக்கு ஐயா ஜீவ நாடி ஐயா வந்து இருக்கின்றார்ங்க என்று தெரிந்து போனோம். போயிட்டு வரும்போது நான் அடியவர்#1 காரில் இரண்டரை மணிக்கு பெரியார்ல இறக்கி விட்டாங்க. அங்க இருந்து எனக்கு  4 மணி இருந்ததனால ஐயாவுடைய youtube கேட்டுக்கிட்டே இருந்து அப்பறம் (train) unreserved என்பதால் கூட்டம் அதிகமா இருந்துச்சு. நான் ஏறின வாசலுக்கு opposite வாசல்ல உட்காந்து இருக்காங்க.  ( மதுரை to தென்காசி trainல ) .  உட்கார்ந்துகிட்டு இவருக்கு மெசேஐ் எல்லாம் அனுப்பிவிட்டு பாக்கெட்ல போட்டுகிட்டு  ஐயாவோட அன்னைக்கு ஜீவ நாடியதான் மனசுல ( அகத்தியர் ) ஐயா பேரதான் உச்சரிச்சு கிட்டே இருந்தேன். ஒரு 5 நிமிஷம் கூட ட்ரயின் கிளம்பிடுச்சு. ஒரு 20 நிமிசத்துக்கு அப்புறம் வந்து பாத்தீங்கன்னா மதுரை to கள்ளிக்கொடி இந்த ஸ்டேசன்ல பிளாட்பாம்ல என் காலு உள்ள இருக்கு. Platform ல ( என் கால் ) விரு விருன்னு கால்ல அடிக்கிரது மட்டும் sound கேட்டுச்சு. நான் எப்படி மேல வந்தேன்?  ( எனக்கு ) காலே இல்ல அப்டிங்குற ஒரு feel வந்துச்சு வெளிய எடுக்கும் போது ஆனா பாத்தீங்கன்னா வலி அவ்வளவு உயிருபோச்சு. உடனே இவருக்கு ( அடியவர்# 1) phone அடிச்சேன். என்னமோ நடந்துச்சு. ஆனா ஐயாதான் fullஆ தூக்கி உட்ட மாதிரி காப்பாத்தீட்டாரு. இது உடனே ஐயாவே phone அடிச்சு அன்னைக்கே சொல்லிட்டேன். என்னால முடிநல. என்னால முடியல சுத்தமா 100% இல்ல 1000% ஐயா( அகத்தியர்) இல்லாம என்னால மேல வந்து இருக்க முடியாது. எல்லாருக்கும் சொன்னோம். பௌர்ணமி அன்னைக்கு அன்னதானமும் வெச்சு இருந்தோம். அப்படி அங்க போவது அப்டினு எனக்கே தெரியாம அந்த யோசனை வந்தது. ஆனால் ஒரு சிறு சொட்டு ரத்தம் மட்டும்தான் வந்துச்சு. அவ்வளவு பெரிய accident. ஒன்னுமே ( எந்த சேதமும் ) இல்லாம போச்சு. இன்னைக்கு ( எந்த இழப்பும் ) ஒன்னுமே இல்லை என் கால்ல.
எல்லாமே குருநாதர். உடனே நான் சொல்லிட்டேன். ஐயாதான் ( எனக்கு உயிர் பிச்சை கொடுத்தார்).

மற்றொரு அடியவர்:- அங்க கோயம்புத்தூர்ல இதே மாதிரி ( ஜீவ நாடி )  சத்சங்கம் நடக்கும்போது இவ்விடத்தில் இருக்கக்கூடிய ஒருவனுக்கு மரண கண்டம் அப்டின்னு ஐயா சொல்லி இருந்தார்கள். அப்பா ஐயாகிட்ட பேசும்போது ஐயா அந்த ( நாடி வாக்கு ) வார்த்தையோ அப்டின்னு யோசன பண்ணி சொன்னேன்.

குருநாதர்:- அப்பனே எதை என்றும் அறிய அறிய இப்படியும் கூட. அதனால் அப்பனே விதியில் கூட என்ன இருந்தாலும் அதை சிறியதாக என்னால் குறைக்க முடியும். ஆனால் நம்பிக்கை வேண்டும். உயிரை அப்பனே இறந்திருக்கக் கூடியவனைக்கூட யான் உயிர்ப்பித்து இருக்கின்றேன் இன்னும் நலன்கள் செய்ய. நின்று கொண்டு இருக்குன்றானே இவன் தனக்கு உயிர் பிச்சை கொடுத்து விட்டேன் அப்பனே.

அடியவர்:- ஈஸ்வரா…

குருநாதர்:- அப்பனே இதனால் யார் யாருக்கு தெரியும்? என்னை நம்பியவர்களை அப்பனே கைவிட்டதாக சரித்திரமே இல்லை என்பேன் அப்பனே. சோதனைகள் வைப்பேன் அப்பனே. ஏன் என்றால் அப்பனே உங்கள் நன்மைக்காகத்தான் அப்பனே. கடைசியில் அனைத்தும் சீராக்குவேன் அப்பனே. அகத்தியனால் முடியாதது இவ்வுலகத்தில் எவராலும் முடியாதப்பா. ஈசனாயினும் சரி. விஷ்ணுவாயினும் சரி.பிரம்மனாயினும் சரி.

அடியவர்# 1:- எல்லாமே அவர்தான்.

குருநாதர்:- அப்பனே இப்பொழுது புரிந்து கொள்ள மாட்டார்கள் அப்பனே. அப்பனே பின்பு விவரிக்கின்றேன். அதாவது அனைத்து சொல்லிவிட்டு பக்குவங்கள் ஏற்படுத்தி ஏற்படுத்தி மனிதனுக்கு அப்பனே பக்குவங்களே இல்லையப்பா நேற்றைய பொழுதில் சொல்லிவிட்டேன். பக்தி என்பது உண்மை என்பது கூட அப்பனே இன்னும் அப்பனே பூஜியத்திலேயே இருக்கின்றான் மனிதன் அப்பனே. அப்படி இருந்தால் எப்படியப்பா புரியும் இன்றைய மனிதர்களுக்கு? புரியாதப்பா.

அப்பனே அதனால் முதல் வகுப்புக்கு அழைத்து வர வேண்டும். அப்பனே இரண்டாம் வகுப்புக்கு இன்னும் மூன்றாம் வகுப்புக்கு அப்பனே இப்படி அழைத்து வந்து சொன்னால்தான் புரியும் அப்பா. அப்படி இல்லை என்றால் புரியாதப்பா புரியாமலே இறந்து விடுகின்றான் அப்பனே. மீண்டும் பிறவிகள் எடுத்து அப்பொழுதுகூட புரிவதில்லை என்பேன் அப்பனே. இவ்வாறு பிறவிகள் எடுத்து எடுத்து கஷ்டங்களை பட்டு பட்டு அப்பனே ஆதனால்தான் என்னிடத்தில் வருபவர்கள் கூட சில சோதனைகளை கொடுத்து கொடுத்து , அப்பனே திருத்தி திருத்தி முதலில் அப்பனே முதலில் பிறவிக் கடனை  முடிப்பேன் அப்பனே.  அவ்வளவுதான் என்பேன் அப்பனே. அதற்காக யான் பாடுபடுவேன் நீங்கள் அமைதியாக இருந்தாலும்.

அடியவர்கள்:- ( அமைதி )

குருநாதர்:- அப்பனே என்னை பற்றி எடுத்துரை.

அடியவர் :- ஆதியும் அவரே. அந்தமும் அவரே.  ஈசனும் அவரே.  பிரம்மாவும் அவரே. விஷ்ணுவும் அவரே. முருகனும் அவரே.

அதாவது அகஸ்தியர் ஒரு பாடல் இருக்கு. பிரம்மாவாகவும் விஷ்ணுவாகவும் கால பைரவர் ஆகவும் , தட்சணாமூர்த்தியாகவும் சக்தியாகவும்,  எல்லாமாகவும்்இருப்பது யாமே. அதாவது ஈசனுக்கு மேல அகத்தியர் வாக்கு சொல்லி இருக்கிறார் குருநாதர். ஈசனுக்கு மேல் மித மிஞ்சிய சக்திகள் எனக்கு உண்டுன்னு சொல்லி இருக்கிறார். அப்போ அந்த வார்த்தை படிக்கும்போது ஈசன்தான் பிரதான தெய்வம் அப்டின்னு நாம நினைக்கிறோம். அதையும் மீறி மிஞ்சிய சக்தின்னா இவருதான் ஆதி. அதுக்கப்புறம் தான் அதாவது தன்னை சுருக்கிக் கொண்டு குறுக்கிக் கொண்டு மற்ற தெய்வங்கள் வெளிப்படுத்துறார். ஆனா இவர்தான் ஆதி. ஆதியும் அந்தமும் சர்வ சொரூபியும் இவர்தான். ஆனா மற்ற தெய்வங்களை முன்னிலைப்படுத்தி எல்லாரையும் முன்னிலைப்படுத்தி சொல்றாரே தவிர, இதுக்கு முன்னாடி ஆதியே இவர்தான்.  ஆகி பகவானை வணங்கலாம் என்று சொல்ராங்க இல்ல. அது இவர்தான். சர்வமும் அகத்தியர்.

குருநாதர்:- அப்பனே எது என்று அறிய போதவில்லை என்பேன்.

அடியவர்:- உண்மைதாங்க ஐயா. ஏன்னா அது வந்து புலஸ்தியர் வந்து பொதிகையில் வந்து ஒரு புகழ் மாலை பாடினார். அதாவது நான் சொன்னது மனிதனல்ல உங்கள பத்தி ஒரு துளி கூட யாருக்குமே தெரியாது அகத்தியனை பத்தி சொல்லுவார் ( புலஸ்திய மஹரிஷி). (அடியேன் சொன்னது) அதுல ஒரு துளி கூட கிடையாதுதான். உண்மைதான்.

குருநாதர்:- அப்பனே அப்படி தெரியாமல் என்னிடத்தில் எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூட மனிதனுக்கு தெரியவில்லையே அப்பனே. அப்பொழுது கூட யான் உரைத்துக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று அப்பனே. இதனை கூட அதாவது புண்ணியம் இருந்தால் தான் அப்பனே என்னுடைய வாக்குகளும் கேட்க முடியும் சொல்லி விட்டேன் அப்பனே.

அப்போது உண்மைகள் அனைவருக்குமே யானே குவித்து ( ஊட்டி ) விடுகின்றேன் அப்பனே.  அதனால் எக்குறையும் கொள்ள தேவையில்லை. இன்னும் இன்னும் மாற்றங்கள் இவ்வுலகத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே கர்மா கடலில் நீந்தி கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. அவ்வாறு கடலில் நீந்தினால் அப்பனே யாருமே உதவி செய்ய மாட்டார்கள் அப்பா. ஆனால் அப்பனே சித்தர்கள் யாங்கள் அப்பனே நீந்தாதே  என்று கையை பிடித்து இழுத்து வருகின்றோம். அதுபோலத்தான் உங்களை அனைவருமே நீங்கள் கஷ்டத்தில் நுழைந்து நுழைந்து அப்பனே சென்று கொண்டிருக்கிறீர்கள். அவ்கஷ்டத்தை யாராலும்  தடுக்கவும் முடியாது. அதனால் யாங்களே இவ்வாறு இருக்கின்றானே என்று சில வழிகளில் கூட இழுத்து, அப்பனே அரவணைத்து நல்லது செய்து கொண்டிருக்கிறோம் அப்பனே.

அதனால் எங்களால் மட்டுமே முடியும் நல்லது செய்ய. மற்றவரால் முடியாதப்பா. நீ என்ன பரிகாரம் செய்தாலும் அப்பறம் எப்படி பின்பற்றினாலும் அப்பனே ஊர்ந்து சென்றாலும் அப்பனே தலைகீழாக நின்றாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை அப்பா ஒன்றும் நடக்கப் போவதில்லை. அப்பனே. யாங்கள் மனதை வைத்தால்தான் அப்பனே அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் கேட்காதீர்கள். நீதி, நேர்மை தர்மத்தை கடைப்பிடியுங்கள் போதுமானது யாங்களே வருவோம்.

அடியவர்:- அந்த ஒரு ஊரில் ஒரு நபர்…

குருநாதர்:- அப்பனே உன்னை பற்றி பேசு. அதனால் உன் நிலைமையே இப்படி இருக்கிறது மற்றவர்களை பற்றி பேசுகிறாயே அப்பனே. வேண்டாம் அப்பனே. அப்படி பேசினால் அவன் கர்மா  உன்னை வந்தடையும். அப்படித்தான் சம்பாதித்துக் கொண்டாய். அதனால் என் நிலமை பின் சீர் செய் என்று பின் புத்திகள் வரவில்லை அப்பனே இப்போது கூட கேட்கவில்லையே அப்பனே. அப்பனே வாய் அகலமானவனே கூறு.

அடியவர்கள் :- ( சிரிப்பு )

அடியவர்:- என்னை ஏன் குருநாதர் அப்படி அழைக்கின்றார்…

( சில உரையாடல்கள் )

குருநாதர்:- அப்பனே அகல வாய் என்று சொன்னேனே எதற்காக சொன்னேன் என்று கூறுகின்றேன் அப்பனே. உன்னிடத்தில் அப்பனே வாய் கொடுத்து யாரும் ஜெயிக்க முடியாதப்பா. அதானால் தான் சொன்னேன்.  யாராவது ஜெயிக்க முடிந்தால் அவனிடத்தில் பேசுங்கள் அப்பனே. ஜெயித்து காட்டுங்கள் அனைத்தும் தருகின்றேன்.

கேள்வி கேட்ட அடியவர்:- ( இவ்வளவு விளக்கத்திற்கு பின்னும் ஒரு கேள்வியை கேட்க ஆரம்பித்தார்)

குருநாதர்:- அப்பனே எத்தனை உரைகள் அப்பனே சொல்லி இருக்கிறேன். அதனால் இப்பொழுது சொன்னேனே உன் விளக்கத்தை பற்றி அப்பனே நீயே கூறு அப்பனே எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்று.

குருநாதர் எடுத்து உரைக்க சொன்ன அடியவர்:- ஏமாத்துறது வந்து பாத்திங்கன்னா நிறைய வழிகள் ஏமாத்துறாங்க. சரிங்களா. நான் அகத்தியர் சிஷ்யன். நான்தான் அகத்தியன். அகத்தியர் என்னை வழி நடத்துகின்றார். அப்டின்னு சொல்லிகிட்டு அவர் பெயரை சொல்லிவிட்டு நிறைய பேர் வந்து நம்மள ஏமாத்திகிட்டு இருக்காங்க. நம்ம அவங்க வழியில ( ஏமாந்து ) செல்கின்றோம். அது மட்டும் கிடையாது. நாடிகளையும்  வந்து பாத்திங்கன்னா ஜீவ நாடிகளில் நிறைய வந்து பொய் நாடிகள் இருக்கு. இறைவாக்கு சொல்லி மக்கள் வந்து தவறான மக்கள வந்து தவறான வழியில செலுத்திகிட்டு இருக்காங்க. இது மாதிரி ஏமாத்துரத்துக்கு நிறைய வழி இருக்கு.

குருநாதர்:- அப்பனே மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவனுக்குத்தான் அதிக தண்டனை என்பேன் அப்பனே. ( ஏமாற்றும் ) அவனுக்கு தண்டனை இல்லை. ( ஏமாறும் ) இவனுக்குதான் தண்டனை அப்பனே இப்பொழுது அப்பனே.

அப்பனே அனைத்தும் தெரிந்தும் கூட அப்பனே உன்னை ஏமாற்றுபவன் அதனால் நீயே ஒரு ஏமாற்றுக்காரன் அப்பனே. உன்னை ஏமாற்றி இருந்தால் அப்பனே அவளோ அவன் எவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரன் என்று நீயே புரிந்து கொள்.

அடியவர்:- ( சில உரையாடல்கள் ) ஏமாறாமல் இருக்க ஏதாவது solution இருக்கா?

குருநாதர்:- அப்பனே மீண்டும் இதைத்தான் இவ்வளவு நேரம் அப்பனே நீயே கூறு.?




ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 20 - https://tut-temples.blogspot.com/2024/07/04092023-20.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 19 = https://tut-temples.blogspot.com/2024/07/04092023-19.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 18  - https://tut-temples.blogspot.com/2024/06/04092023-18.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 17 - https://tut-temples.blogspot.com/2024/06/04092023-17.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 16 - https://tut-temples.blogspot.com/2024/06/04092023-16.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 15 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-15.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 14 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-14.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 13 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-13.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 12 - https://tut-temples.blogspot.com/2024/04/04092023-12.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2024/04/04092023-1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 11 - https://tut-temples.blogspot.com/2024/03/04092023-11.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 10 - https://tut-temples.blogspot.com/2024/03/04092023-10.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 9 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-9.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 8 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-8.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7 - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்!

                                                             இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் இந்த மாத அதாவது ஜூலை மாத சேவைகள் வழக்கம் போல் தொடங்கியுள்ளோம். இன்றைய பதிவில் குருநாதர் அருளிய உத்தரவை நாம் உறுதிமொழியாக ஏற்க வேண்டும். அதனை அப்படியே சித்தன் அருள் வலைத்தளத்தில் இருந்து அப்படியே தருகின்றோம். அனைவரும் இதனை குருநாதர் அகத்திய உபதேசமாக கொண்டு வாழ வேண்டும் பிரார்த்தனை செய்வோமாக!

29/4/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் கோயமுத்தூரில் முல்லை நகர் வடவள்ளியில் அமைந்திருக்கும் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய பெருமான் ஆலயத்தில் வைத்து பொதுமக்கள் கலந்து கொண்ட சத்சங்கத்தில் குருநாதர் நல் உபதேசங்கள் செய்தார்

அதாவது பொதுமக்கள் பெருமளவு கூடி இருந்தாலும் யார் யார் என்னென்ன தான தர்மங்கள் செய்தார்கள் என்பதை கேட்டறிந்து கேட்டறிந்து புண்ணியத்தின் தான தர்மத்தின் மகத்துவத்தை அனைவரும் உணரும்படி உபதேசம் செய்து நல்வாக்குகள் தந்தருளினார்

அதில் முக்கியமாக ஒரு கட்டத்தில் ஒரு அடியவரை எழுப்பி யான் கூறுவதை அப்படியே மக்களிடம் உறுதி மொழியாக சொல்லும்படி அனைவரையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வைத்தார்.

இந்த உறுதி மொழி அனைத்து அடியவர்களும் சாஷ்டாங்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோயம்புத்தூரில் நடந்த முழு சத்சங்கமும் பொதுவாக்கில் விரைவில் வெளிவரும் அதற்கு முன்பாக அவசர உத்தரவாக இந்த உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குருநாதர் அகத்திய பெருமான் தினசரி அனைவரும் எடுக்க வேண்டிய

உறுதிமொழி 

வாக்குரைத்த ஸ்தலம்:- ஸ்ரீ லோப முத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் திருக்கோயில் வடவள்ளி முல்லை நகர் மருதமலை அடிவாரம் கோயம்புத்தூர்.

அகத்திய மாமுனிவர் வாக்கு:- 

எதை என்று அறிய அறிய யான் சொல்லிக் கொடுக்கின்றேன். அதை அவர்களிடத்தில் சொல்.
  1. தர்மம் செய்வேன்
  2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
  3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
  4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
  5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
  6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
  7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும். 
  8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
  9. பிறருக்காக உழைக்க வேண்டும்
  10. பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல் மகனே


நம் குருநாதர் வழியில் மனிதனாக பிறந்து விட்டால் புண்ணியம் செய்ய வேண்டும். நாம் மனதளவில் பொதுநலம் கொண்டு வாழ வேண்டும். அப்படி வாழ்தல் தான் வாழ்வின் நோக்கம் ஆகும். நாம் எப்பொழுது பார்த்தாலும் தான், தனது என்ற பற்றுகளை கொண்டு தான் வாழ்ந்து வருகின்றோம். இதனை நாம் உடைத்து எறிந்து விட வேண்டும். தானம், தனது என்று நாம் இருக்கும்போது நம்மிடம் தர்ம சிந்தனை வரவே வராது. இதற்கு முதலில் நாம் மனதை செப்பனிட வேண்டும். தினமும் நம் குருநாதர் அருளிய உறுதிமொழியை மனதில் கூறிக் கொண்டே வர வேண்டும். இவ்வாறு கூறிக் கொண்டே வந்தால் அது நம் எண்ணத்தில் பதியும். எண்ணத்தில் பதிந்த இந்த உறுதிமொழி சொல்லாக பரிணமிக்கும். பின்னர் சொல்லில் இருந்து செயலுக்கு வந்துவிடும் .எனவே தான் குருநாதர் அருளிய உறுதிமொழியை தினமும் கூறிக் கொண்டே வாருங்கள்.

















இங்கே அப்படியே வாழ்க்கையின் தத்துவத்தை குருநாதர் கோயம்புத்தூர் சத்சங்கத்தில் அருளியதை பகிர்கின்றோம்.

குருநாதர்:- அம்மையே அனைவருக்கும் வாழ்க்கையின் தத்துவத்தைக் கூறு?

ஆதி ஈசனை தன் மனதில் குடிகொண்டு அருளும் மூதாட்டி வாக்கு:- மனிதனாய் பிறந்தோம் என்றால் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். சந்தோசமாக இருப்பதற்கு எல்லாரும் ஒற்றுமையா இருப்பதோடு மட்டும் இல்லாமல், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யணும்.

நமது ஒரு கை அரித்தது என்றால் மற்றொரு கைதான் போய் சொரிந்து விடும். கண்ணால் கையைச் சொரிய முடியாது. கண் அழத்தான் செய்யும். அந்த சமயத்தில் வேறு எதுவும் கண்ணால் செய்ய முடியாது.

அதுபோல இந்தக்கை அந்தக்கைக்கு உதவி செய்வது போல நாம் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.

இந்தக் கையை மடக்காமல் நாம் சாப்பிட வேண்டும் என்றால், அடுத்தவர்களுக்கு நாம் உண்ண உணவு கொடுத்தால், நிச்சயமாக அவர்கள் சாப்பிடுவார்கள். நிச்சயமாக அவர்கள் நமக்கு உண்ணக் கொடுத்து நாம சாப்பிடலாம். கையை மடக்காமல் சாப்பிட வேண்டும் என்றால் இதுவே வழி.  நீங்க அவங்களுக்கு கொடுக்கனும். அவங்க உங்களுக்கு கொடுக்கனும். ஆக மொத்தம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். சந்தோசமாக எல்லோரும் இருக்கலாம். என் என்றால் நீங்கள் சாப்பிடலாம். நானும் சாப்பிடலாம். எல்லாரும் சந்தோசமாக இருக்கலாம்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நல்ல எண்ணங்கள் உடன் இருக்கவேண்டும். தூங்கி எழுந்தவுடன் இறை வழிபாடு,  சிந்தனையோடு எழுந்திருக்க வேண்டும். இன்றைக்கு என்ன என்ன நல்லது செய்யலாம் என்று திட்டம் போட்டு எந்திருச்சு செய்ய வேண்டும். கடவுள் வழிபாடு எப்பொழுதும் மனசுக்குள்ள இருக்கணும்.  வெளியிலே தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. சாதா சர்வ காலமும், சிவ சிவ சிவ சிவ என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பூப்போட்டுத்தான் இறைவனை வேண்ட வேண்டும் என்பதில்லை. மனசால வெறும் கையால செய்தாலே போதும் அதுவே பூ தான்.

மனதில் எப்போதும் சிவ சிந்தனையோடு இருக்க வேண்டும். மனதில் எந்நேரமும் சிவ வழிபாட்டில் இருக்க வேண்டும். ஒரு காலடி எடுத்து வைத்தாலும் சிவ சிவ சிவ சிவ சிவ என்று சொல்ல வேண்டும். காலடி எடுத்து வைக்கும் போது சிவாயநம சிவாயநம என்று சொல்லிக்கொண்டே போக வேண்டும். எல்லா வேளையும் சிவாயநம என்று சொல்வதை விடவே கூடாது. தூங்கும் போதும், எழுந்திருக்கும் போதும், சாப்பிடும் போதும், நடக்கும் போதும், எல்லா நேரமும் சிவ சிந்தனையோடு எழுந்தோம் என்றால் நமக்கு எந்த துன்பமும் வராது. நல்ல எண்ணங்களோடு எப்போதும் இருக்க வேண்டும்.

இன்று நாம் தூங்கி எழுந்துவிட்டால், இன்று யாருக்கு நன்மை செய்யப் போகின்றோம்? எதாவது நல்லது பேச வேண்டும். தவறு செய்யக் கூடாது. தீயவை வரக்கூடாது. தீய எண்ணங்கள் வரக்கூடாது. கோபம் வரக்கூடாது. சந்தோசமாகப் பேசவேண்டும். இனிமையாகப் பேசவேண்டும் என்ற சங்கல்பத்துடன் காலையில் எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும்போதே அந்த சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இன்று நல்லது செய்ய வேண்டும். நல்ல வார்த்தைகள் பேச வேண்டும். இன்பமாக இருப்பதற்கு உதவி செய்ய வேண்டும். எல்லா ஜீவராசிகளுக்கும் உதவி செய்ய வேண்டும். என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும். இதுபோல சங்கல்பம் செய்து கொண்டு எழுந்திருக்க வேண்டும். தூங்கி எழுந்த உடன் இங்க போகலாமா, அங்க போகலாமா என்று பல சிந்தனையுடன் எழுந்திருக்கக் கூடாது.

படுக்கையில் இருந்து எழுந்த உடன் , சிவ சிவா என்று நல்ல சிந்தனையுடன் எழுந்திருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணங்களுடன் எழுந்திருக்க வேண்டும். இன்றைய பொழுது நல்லபடியாக ஆக வேண்டும் என்ற எண்ணங்களோடு எழுந்தோம் என்றால் நமக்கு எந்தத் துன்பமும் வருவதில்லை.

நாம் அனைவரும் சந்தோசமாக இருக்கலாம். தீமை செய்தால் மட்டுமே தீமை நமக்கு வரும். என்ன விதை விதைக்கின்றோமோ , நாம் என்ன செய்கின்றோமோ அதுவே நமக்கு வரும்.

நெல் விதைத்தால், நெல் தான் அறுவடைக்கு வரும். தினையை அறுவடை செய்ய முடியாது. தினை விதைத்தால் தினையை அறுவடை செய்ய முடியும். அப்பொழுது நெல் அறுவடை செய்ய இயலாது. என்ன நாம் விதைக்கின்றோமோ அதுவே நமக்குக் கிடைக்கும். நல்லது விதைத்தால் நல்லது கிடைக்கும். தீயது விதைத்தால் தீமைதான் கிடைக்கும். என்ன விதை விதைக்கின்றோமோ அதுவே நமக்கு முளைக்கும். அதனால் காலையில் எழுந்திருக்கும் போது நல்ல சிந்தனையுடன் , நல்ல செய்ய வேண்டும் என்று நல்லது சொல்ல வேண்டும் என்று எழுந்தால், அதுவே நமக்கு இரவு தூங்குவதற்குள் நமக்குத் திரும்பி வரும். நல்லதே விதைக்க வேண்டும் என்றால் நல்ல எண்ணங்களோடு இருந்தால்தான் செய்ய முடியும். எண்ணங்களில் இருந்து வாரத்தை வருகின்றது. உள்ளத்தில் என்ன இருக்கின்றதோ அது நமது வார்த்தையாக வருகின்றது.

மனதில் நல்லதாக நினைத்தால் நல்ல வார்த்தைகள் வரும். அப்பொழுது நமக்கு எண்ணங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். சொல் தூய்மையாக இருக்க வேண்டும். செயல் தூய்மையாக இருக்க வேண்டும். எல்லாம் தூய்மையாக இருக்க வேண்டும். உடல் மட்டும் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது. உடலில் பல சோப் போட்டுக் குளித்து , வாசனைத் திரவியங்கள் தடவி, பவுடர் போட்டு, தலையை அழகாக வகிடு எடுத்து, நல்ல தூய்மையான அழகான உடை அணிந்தால் மட்டும் போதாது. இது எல்லாம் தேவையே இல்லை.

மனசு சுத்தமாக இருக்க வேண்டும். மனசு சுத்தமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? சதா சர்வகாலமும் சிவ சிந்தனையில் இருக்க வேண்டும். சிவ சிந்தனையில் இருந்தால் அவர் எந்த இடத்திற்கும் நம்மை விட மாட்டார். அவர் (ஈசன்) நம்மை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பார்.

அவரை விட்டு விட்டோம் என்றால், தறிகெட்டுப் போய்விடுவோம். சிவ சிந்தனையிலேயே இருந்தோம் என்றால் , அவரை நம் மனதில் இறுக்கிப் பிடித்துக்கொண்டு நல்லது செய்ய வேண்டும் என்று உள் இருந்து கொண்டு உணர்த்துவார். நமக்கு அனைத்தும் சொல்லிக் கொடுப்பார். நல் எண்ணம் தோன்றத் துணையாக இருப்பார்.

சிவன் நம் எல்லோருக்கும் தோன்றாத் துணையாக இருப்பார். அப்படி சிவன் தோன்றாத் துணையாக இருப்பதால்தான் நாம் இங்கு வந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றோம். நாடி வாக்கு கேட்கின்றோம். நாடி கேட்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது (சிவன்) அவர்தான். வரச்சொன்னதும் (சிவன்) அவர்தான்.

நம்மைக் கேள்வி கேட்கச் சொன்னதும் (சிவன்) அவர்தான். நம்மைப் பேசச் சென்னதும் (சிவன்) அவர்தான். சதா,சதா, சதா சர்வ காலமும் சிவ சிந்தனையிலேயே இருக்க வேண்டும். நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும். நல்ல எண்ணங்களே இருக்க வேண்டும். நல்ல செயலே செய்ய வேண்டும். யாருக்காவது உதவி செய்ய வேண்டும். இன்றைக்கு என்ன என்ன உதவி செய்தோம் என்று கணக்கு எடுக்கக் கூடாது. தூங்கப்போகும் முன் யாருக்கு உதவி செய்தோம், யாருக்குப் பணம் கொடுத்தோம், யாருக்கு என்னென்ன செய்தோம் என்று கணக்கு போட்டு எழுதக்கூடாது. அதை எல்லாம் அப்பொழுதே மறந்து விடவேண்டும்.

நல்லது செய்தால் உடனே மறந்து விடவேண்டும். யாராவது நமக்குத் தீமை செய்தால் , அவர்களை ஏதாவது செய்ய வேண்டும். பழிக்குப் பழி வாங்க வேண்டும். எனக்கு இரண்டு கண் போனாலும் பரவா இல்லை, எனக்குத் தீமை செய்த அவர்களுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று நினைக்கக் கூடாது. நல்லதையே நினைக்க வேண்டும்.

அவர்கள் தீமை செய்தார்களா, பரவாயில்லை என்று சிவார்ப்பணம் செய்து விட வேண்டும். யாராவது நமக்குத் தீமை செய்தால் சிவார்ப்பணம் உடனே சொல்லிவிட வேண்டும். எல்லாம் சிவனுக்கு அர்ப்பணம் ஆகிவிடும். சிவன் அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.

உங்களை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. நாய் சத்தம் போடுகின்றதை, கடிக்க வருகின்றது என்றால் திருப்பி நாம் கடிக்க வேண்டாம். பயந்து விட்டுப் போய் விடுவோம். அதுபோல் நமக்கு யாராவது தீமை செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் சிவார்ப்பணம், சிவார்ப்பணம் என்று சொல்லிக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

அதனை விடுத்துத் திருப்பி நான் ஒரு அடியாவது அடிக்க வேண்டும் என்று பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்றால் திருப்பி 4 அடி நாம் திருப்பி வாங்க வேண்டும். நாம் யாரையாவது அடித்து வீட்டுக்குப் போய்விட்டால், நாம் கீழே விழுந்து நமக்கு கை, கால் உடைந்து விடும். அதனால் யாராவது அடித்தாலும் சரி, திட்டினாலும் சரி , தூற்றினாலும் சரி, எம்மை என்ன செய்தாலும் சரி சிவார்ப்பணம், சிவார்ப்பணம் என்று சொல்லிக்கொண்டு நம் வழியில் சென்று கொண்டே இருக்க வேண்டும்.

பழிக்குப்பழி வாங்கும் எண்ணமே இருக்கக் கூடாது.

நல்லது நினைக்க வேண்டும் நல்லது செய்ய வேண்டும் என்று இருந்தால் நமக்கு எந்தத் துன்பமும் வராது. மனதில் தூய்மை இருக்க வேண்டும். எண்ணங்களில் தூய்மை இருக்க வேண்டும். செயலில் தூய்மை இருக்க வேண்டும். வாக்கு, மனம், மெய் ,மொழி எல்லாம் தூய்மையாக இருந்தால் தூய்மை நம்மிடையே இருக்கும். உலகம் முழுவதும் தூய்மை இருக்கும். எல்லோரிடமும் தூய்மை இருக்கும். உலகம் முழுவதும் சொர்க்கமாக இருக்கும். எல்லாமே இன்பமாக இருக்கும். எல்லா ஜீவராசிகளும் இன்பமாக இருக்கும்.

( வணக்கம் அடியவர்களே, ஆதி ஈசனை மனதில் ஆலயம் கொண்ட மகத்தான இவ் மூதாட்டி, இவ் சத்திய வாக்குகளை உரைத்த போது, “எல்லா ஜீவராசிகளும் இன்பமாக இருக்கும்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது அங்கு பல்லி ஒன்று மகிழ்ந்து பலத்த நீண்ட சத்தம் இட்டது. )

ஜீவராசிகளைப் பார்க்கும் போது அதற்கு உதவி செய்தால், அதற்குச் சாப்பாடு, தண்ணீர் கொடுக்கின்றோம் என்றால் அது சந்தோசப்படும். அது சந்தோசப்படுவதைப் பாரத்து நாமும் சந்தோசப்படுவோம். இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் போது அவர்கள் சந்தோசமடையும் போது நாமும் சந்தோசமடைவோம்.

இறைவன் சந்தோசப்பட வேண்டும் என்றால் இல்லாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஏழைக்குக் கொடுக்கும்போது அவர்கள் முகத்தில் சந்தோசம் மலரும் , அதைப் பாரத்து நாமும் சந்தோசப்படுவோம். அவர்கள் நம்மிடம் இருந்து வாங்கிவிட்டுப் போன பின்பு வருத்தப்பட மாட்டான். அவன் முகம் மலரும்போது , குழந்தைக்கு ஒரு இனிப்பு கொடுத்தால் அது எவ்வளவு சந்தோசப்படும்? அதைப்பார்த்து நீங்களும் சந்தோசப்படுவீர்கள்.

அதுபோல இயலாதவர்களுக்கு நாம் கொடுக்கும் போது , அவர்கள் அடையும் சந்தோசத்தையும், முகமலர்ச்சியையும் பார்க்கும் போது நாமும் சந்தோசம் அடைவோம். அதுவே இறைவன் நம் அருகில் வருகின்றார் என்று அர்த்தம் ஆகும்.

இறைச் சிந்தனையோடு இருப்பது மட்டும் இல்லாமல் நாம் அடுத்தவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தோம்  என்றால், நம்மிடம் உள்ள பொருளைக் கொடுக்கின்றோம். அடுத்தவர்களிடம் இருந்து எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. நாம் கொடுக்க வேண்டும். அவர்கள் சந்தோசப்பட வேண்டும். அதைப் பாரத்து நாம் சந்தோசப்படுவோம். நாம் சந்தோசப்படுவதைப் பார்த்து நம் உள் இருக்கும் இறைவன் சந்தோசப்படுவார். எல்லாம் மனதிலும் இறைவன் இருக்கின்றார்.

சிவன் அவர் எங்கேயும் கோவிலில் எல்லாம் இருப்பதில்லை. கோவிலில் சாமி இருக்கின்றார் என்று போய்ப் பார்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. நம் மனசுக்குள்ளேயே இறைவன் இருக்கின்றார். அவர் நல்ல எண்ணங்கள் இருந்தால்தான் வருவார். தூய்மையான எண்ணங்கள் இருந்தால்தான் வருவார். நல்ல செயல்பாடு இருந்தால்தான் வருவார். அதுபோல் நாம் இருந்தோம் என்றால் இறைவன் நம்மிடையே இருப்பார். நம்மைவிட்டு எங்கும் போக மாட்டார்.

இங்கு உள்ள எல்லோரும் (இதனை வாசிக்கும் நீங்களும், அடியவர்களும்)  , எல்லோருக்கும் இதனை எடுத்துச் சொல்லுங்கள். நல்ல சிந்தனையோடு இருக்க வேண்டும். நல்ல எண்ணங்களுடன் இருக்க வேண்டும். தூய சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் சொல்லுங்கள். ( அடியவர்களே, இது உயர் புண்ணியத்திற்கு வழி வகுக்கும் என்று உணர்க. )

பழிக்குப் பழி வாங்கும் எண்ணமே இருக்கக்கூடாது. எல்லோரும் திட்டினார்கள் என்றால் ஒதுங்கிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்று அடுத்தவர்களுக்குச் சொல்லுங்கள்.

ஒரு முனிவரைக் கோபப்படுத்த வேண்டும் என்று ஒருவர் நினைக்கின்றார். ஒரு குரு அவருக்குக் கோபமே வராது. அவரது சிஷ்யன் எப்படியாவது குருவிற்குக் கோபத்தை உண்டாக்க வேண்டும் என்று எண்ணுகின்றார். குரு ஆற்றிற்குக் குளிக்கச் செல்கின்றார். இந்த சிஷ்யன் வாய் நிறைய வெற்றிலையைப் போட்டுக்கொண்டு கரையில் உட்கார்ந்து இருக்கின்றான். கங்கையில் குளித்து விட்டு வந்த குருவின்மேல் வெற்றிலையைத் துப்புகின்றான். அவர் இதனைப் பார்த்து விட்டு ஆற்றில் மறுபடியும் குளித்து விட்டு வருகின்றார். மறுபடியும் சிஷ்யன் துப்புகின்றான். குரு ஆற்றில் மறுபடியும் குளித்து விட்டு வருகின்றார். இப்படியே பல முறை குரு ஆற்றில் மறுபடியும், மறுபடியும் குளித்து விட்டு வருகின்றார். சிஷ்யன் வசம் உள்ள வெற்றிலை தீர்ந்து போய் விட்டது. அலுத்துப்போய் விட்டான். குரு ஆற்றில் மறுபடியும் குளித்து விட்டு வருகின்றார். நடக்க ஆரம்பிக்கின்றார். சிஷ்யன் அவர் பின்னால் ஓடுகின்றான். குருவே, குருவே தப்பு செய்து விட்டேன் என்று காலில் விழுகின்றான். உங்களுக்குக் கோபமே வராதா? இவ்வளவு தப்பு செய்தேனே என்று கேட்கின்றான். குரு உடனே, சிஷ்யனைப் பாரத்து உனக்கு நன்றி சொல்லவேண்டும் அப்பா, நன்றி சொல்ல வேண்டும் என்று சிஷ்யனிடம் கூறினார் சிஷ்யன் உடனே ஏன் சாமி எனக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்? நான் தவறு செய்தவன்தானே? என்று கேட்டுவிட்டான். 108 முறை என்னைக் கங்கையில் குளிக்க வைத்தாய் அல்லவா, அதற்கே உனக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார். பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு முறைதான் குளித்து விடுவேன். மறுபடி நாளைதான் குளிக்க வருவேன் இங்கு. ஆனால் இன்று நீ மறுபடி, மறுபடி என்னை வெற்றிலை எச்சிலை என்மேல் துப்பி என்னை அசிங்கப் படுத்தியதால் 108 முறை உன்னால் குளித்தேன். எனக்கு மிக்க சந்தோசமே. நீ நன்றாக இரு என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.

எனவே தீமை செய்தவர்களுக்கும் நாம் நல்லதே செய்ய வேண்டும் என்று அந்த மகத்தான மண்ணுக்கும் குரு சொல்கின்றார். நாம் மேலும் மேலும் தீமை செய்து அடுத்தவர்களைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது. சிஷ்யன் அவனாகவே தானே திருந்திவிட்டான். நாம் தவறு செய்துதான் அடுத்தவர்களைத் திருத்த வேண்டும் என்று அவசியம் கிடையாது. தப்பு செய்யாமலேயே எப்பொழுதும் இறைச் சிந்தனையில் இருந்தால் தவறு செய்ய வாய்ப்பே உண்டாகாது. இறை சிந்தனையுடன் எப்பொழுதும் இருந்து நன்றாக வாழ்ந்தால் ஒற்றுமையாக வாழலாம்.

வாழ்க வளமுடன்!!!!!

அடியவர்கள் :- ( ஒருமித்த குரலில் ) வாழ்க வளமுடன்! சிவாய நம!

குருநாதர்:- கயிலாய மலையைப் பற்றி் ( ஈசனை ) உணர்ந்து விட்டீர்களா? அதனால் கயிலாய மலைக்குச் சென்றவர்கள் யார்?

நாடி அருளாளர்:- கயிலாய மலைக்குச் சென்றவர்கள் இங்கு யாரும் இருக்கின்றீர்களா?

அடியவர்கள்:- ( கயிலை மலைச் சென்று வந்த சில அடியவர்கள் எழுந்தனர்)

குருநாதர்:- அறிந்தும் கூட இதனால் இன்றைய அளவில் பின் கயிலாய மலையைத் தரிசிப்பதே உங்களுக்கே கஷ்டங்கள். ஆனாலும் எதை என்று தெரியாமல் சென்றிருந்து, செல்ல முடியவில்லையே என்றாலும் ஈசனும் பார்வதி தேவியும் அழகாக இவள்தன் ( இவ் மூதாட்டி ) பின் முடியாமல் இருக்கின்ற போது நிச்சயம் ஈசனும்,  பார்வதி தேவியும் இவள்தனை தன் மடியில் நிச்சயம் படுக்கச் சொன்னார்கள். (இவ் மூதாட்டியை) எதை என்று கூற தாலாட்டினார்கள். இதனால் நிச்சயம் அனைவருக்குமே அவள்தன் ( இவ் மூதாட்டி )  பின் ஈசன் பார்வதி எவை என்றும் புரிந்திருந்தும் நிச்சயம் பின் நல்விதமாக மடியில் படுத்திருந்தும் நீங்கள் அனைவருமே ( இவ் மூதாட்டியிடம் ) ஆசிகள் பெற்றுச் செல்லுங்கள். அனைவருக்குமே சில கர்மாக்கள் தொலையும். அம்மையே யான் உத்தரவு இடுகின்றேன். அனைவருக்கும் பின் ஆசிகள் கொடுத்து சில கர்மாக்கள் தொலையட்டும். மீண்டும் வந்து பின் வாக்குகள். ஆனாலும் அப்பனே பின் இங்கு இதை  (ஜீவநாடியை) ஓர் முறை போகனிடம் எடுத்துச்சென்று வரச்சொல் மீண்டும் இதனைப் பற்றித் தெரிவிக்கின்றேன்.

நாடி அருளாளர்:- அய்யா, இங்கு உள்ள அனைவரும் இவ் அம்மையிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஆதி ஈசனை தன் மனதில் குடிகொண்டு அருளும் மூதாட்டி வாக்கு:-

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!
வாழ்க வளமுடன்!!!!
வாழ்க வளமுடன்!!!!!

அடியவர்கள்:- ( இதனை அடுத்து அனைத்து அடியவர்களும் இவ் அம்மையிடம் ஒவ்வொருவராக திருநீற்று ஆசி பெற்றார்கள்.)

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!





சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 14 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-14.html

 அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

 சித்திரை மாதம் பேசுகின்றேன் - இன்னும் 10 நாட்களே உள்ளன!  - https://tut-temples.blogspot.com/2024/05/10.html

 அகத்திய மாமுனிவர் வாக்கு - உயர்தர புண்ணியம் பெறுவது எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post.html

 என்றும் குருநாதரின் வழியில்...இறைவா.! அனைத்தும் நீ..!! சர்வம் சிவார்ப்பணம்...!!!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_30.html

 மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_29.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி..! தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_26.html

 சிவசித்தர் திருமூலர் வாக்கு - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_24.html

 அகத்திய பிரம்மரிஷி வாக்கு - வள்ளலார் வழியில் சுத்த சன்மார்க்கம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_23.html

வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! - ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 4 - https://tut-temples.blogspot.com/2024/04/4.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “புண்ணியத்திற்கான ஆலயம்” - சென்னீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_20.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_18.html

 திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_19.html

 குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த நெடார் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_45.html

 காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_16.html

 சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 3 - https://tut-temples.blogspot.com/2024/04/3.html

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2  - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html
தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html











Thursday, August 1, 2024

வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே - அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி!

                                                                   இறைவா..அனைத்தும் நீயே.

                                                                      சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நாம் அவ்வப்போது திருமுறைகள் படித்து வருகின்றோம். நால்வர் காட்டிய வழியில் நாம் சென்றால் இறையை உணரலாம். நால்வர் பெருமக்கள் நமக்கு தந்துள்ள ஞானத்தை படிக்க வேண்டியது நமது வாழ்வின் நோக்கமாக கொள்ள வேண்டும். தித்திக்கும் திருமுறை பாராயணம் தினமும் செய்வோம் என்பதை நமது வாழ்வியல் கடமையாக எண்ணுதல் வேண்டும். 

பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவு நம் தலத்தில் கண்டு வருகின்றோம். அந்த வகையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருநெடுங்களம்,திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்,திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்,திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்,உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் என பார்த்தோம். பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் சைவத் தலங்களாக பார்த்து வருகின்றோம். சைவம்,வைணவ பாகுபாடு நமக்கேது? இந்த தொடர்பதிவிலேயே வைணவத்தலங்கள், திருப்புகழ் தலங்கள் என தொடர விரும்புகின்றோம்.

இன்றைய பதிவில் திருவேட்களம் சென்று தரிசனம் செய்ய உள்ளோம். 

இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

தேவாரப்பதிகம் : திருஞானசம்பந்தர் - 2, திருநாவுக்கரசர் - 5, சுந்தரர் - 1

அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி 


இத்தலத்தில் சிவலிங்கப் பெருமான வெண்ணிறமுடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வன்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மி. தொலைவிலுள்ள சிவபுரி என்றும் திருநெல்வாயல் என்றும் வழங்கும் மற்றொரு சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே தனி ஆலயத்தில் தனது மற்ற பரிவார தேவதைகளுடன் தற்போது எழுந்தருளியுள்ளார்.


3 நிலை ராஜ கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. வாயிலின் இருபுறங்களிலும் அதிகார நந்தியர் துணைவியருடன் தரிசனம் தருகின்றனர். கொடிமரம் ஏதுமில்லை. பிராகாரத்தில் சூரியன், விநாயகர், கிராத மூர்த்தி, மகாவிஷ்ணு, சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகம், காலபைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். உள் மண்டபத்துள் சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். மண்டபத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. 


நடராச சபையில் சிவகாமி அம்மையின் திருமேனி தன் தோழியர் இருவர் சூழ ஒரே பீடத்தில் காட்சி தருகிறாள். துவார விநாயகரை, தண்டபாணியைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம். பெயருக்கேற்ப வெண்ணிறமாக சுயம்பு மூர்த்தியாக மிகச் சிறிய பாணத்துடன் காட்சியளிக்கிறார். மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் இலிங்கத் திருமேனி காட்சி தருகின்றது. அபிஷேகத்தின் போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது. குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.


இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞான அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். இவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும். இத்தலம் பைரவர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.


கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. மனம் நொந்த முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, எம்பெருமான் உமையவளுடன் நேரில் அருட்காட்சி தந்து, முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள் என்றார்.


சிதம்பரத்தில் இருந்து 13 கி.மி. தென்கிழக்கே கொள்ளீடம் நதியின் வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்து வந்த இந்த சிவஸ்தலம் ஒரு சமயம் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதம் அடைந்த போது அருகில் உள்ள திருநெல்வாயல் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் கோவிலின் அருகே ஒரு புதிய ஆலயத்தின் உள்ளே மூலவர் பால்வண்ண நாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். திருநெல்வாயல் சிவஸ்தலத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் திருக்கழிப்பாலை ஆலயம் உள்ளது.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு

அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி 



 ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து(வ்), ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து,

தாம் எடுத்த கூரை தவிரப் போவார்; தயக்கம் பல படைத்தார், தா(ம்)மரையினார்,

கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;

வான் இடத்தை ஊடு அறுத்து வல்லைச் செல்லும்

வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 1]





முறை ஆர்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று,

முன்னும் ஆய், பின்னும் ஆய், முக்கண் எந்தை;

பிறை ஆர்ந்த சடைமுடிமேல் பாம்பு, கங்கை,

பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார்; பெரிய நஞ்சுக்

கறை ஆர்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை- கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்;

மறை ஆர்ந்த வாய்மொழியால், மாய, யாக்கை,

வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 2]





நெளிவு உண்டாக் கருதாதே, நிமலன் தன்னை நினைமின்கள், நித்தலும்! நேரிழையாள் ஆய

ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள் தன்னை ஒருபாகத்து அமர்ந்து, அடியார் உள்கி ஏத்த,

களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்;

வளி உண்டு ஆர் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே. [ 3]





பொடி நாறு மேனியர்; பூதிப் பையர்; புலித்தோலர்; பொங்கு அரவர்; பூணநூலர்;

அடி நாறு கமலத்தர்; ஆரூர் ஆதி; ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்-

கடி நாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;

மடி நாறு மேனி இம் மாயம் நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 4]



விண் ஆனாய்! விண்ணவர்கள் விரும்பி வந்து,   வேதத்தாய்! கீதத்தாய்! விரவி எங்கும்

எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! கடல் ஏழ்

ஆனாய்! இறை ஆனாய் எம் இறையே! என்று நிற்கும்

கண் ஆனாய்! கார் ஆனாய்! பாரும் ஆனாய்! கழிப்பாலையுள் உறையும் கபால (அ)ப்பனார்,

மண் ஆன மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 5]





விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த, விரி கதிரோன்,   எரி சுடரான், விண்ணும் ஆகி,

பண் அப்பன்; பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி; பாசுபதன்; தேசமூர்த்தி;

கண்ணப்பன் கண் அப்பக் கண்டு உகந்தார்- கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;

வண்ணப் பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 6]





பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யாப் பேதப்படுகின்ற பேதை மீர்காள்!

நிணம் புல்கு சூலத்தர்; நீலகண்டர்; எண் தோளர்;   எண் நிறைந்த குணத்தினாலே

கணம் புல்லன் கருத்து உகந்தார்; காஞ்சி உள்ளார்-கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;

மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 7]





இயல்பு ஆய ஈசனை, எந்தைதந்தை, என் சிந்தை மேவி உறைகின்றானை,

முயல்வானை, மூர்த்தியை, தீர்த்தம் ஆன தியம்பகன், திரிசூலத்து அனல் நகையன்

கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலிக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;

மயல் ஆய மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 8]





செற்றது ஓர் மனம் ஒழிந்து, சிந்தைசெய்து, சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால்

உற்றது ஓர் நோய் களைந்து இவ் உலகம்

எல்லாம் காட்டுவான்; உத்தமன் தான்; ஓதாது எல்லாம்

கற்றது ஓர் நூலினன்; களிறு செற்றான்கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;

மற்று இது ஓர் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 9]





பொருது அலங்கல் நீள் முடியான்போர் அரக்கன் புட்பகம் தான் பொருப்பின் மீது ஓடாது ஆக,

இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும்,

ஏந்திழையாள் தான் வெருவ, இறைவன் நோக்கிக்

கரதலங்கள் கதிர்முடி ஆறு-அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்,

வருதல் அங்கம் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. [ 10]






திருச்சிற்றம்பலம் 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீரார் திருவையாறா போற்றி

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி

குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க

காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-
பாடல் பெற்ற தலங்கள் (13) - திருவேட்களம் - https://tut-temples.blogspot.com/2024/07/13.html
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே...!!! - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_20.html
பாடல் பெற்ற தலங்கள் (12) - திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/04/12.html
பாடல் பெற்ற தலங்கள் (11) - திருநணா சங்கமேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/03/11.html

பாடல் பெற்ற தலங்கள் (10) - வரம் தரும் வயலூர் முருகன் - https://tut-temples.blogspot.com/2020/02/10_13.html
பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html
பாடல் பெற்ற தலங்கள் (8) - திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/12/8.html
பாடல் பெற்ற தலங்கள் (7) - அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - https://tut-temples.blogspot.com/2019/11/7_29.html
பாடல் பெற்ற தலங்கள் (6) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/11/6_13.html
பாடல் பெற்ற தலங்கள் (5) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/10/5.html
பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html
தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html
பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html
பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html