"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, January 15, 2024

தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் இன்றைய பொங்கல் வழிபாடு மிக சிறப்பாக நடைபெற்றது. நமது உறவுகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தோம். இன்றைய கூட்டு வழிபாடும் குருவருளால் மிக மிக சிறப்பாக திருவாசகத்தில் சிவபுராணம், போற்றித் திருஅகவல், திருக்கோத்தும்பி படித்து  மகிழ்வுற்றோம். இன்றைய சேவையாக நம் தளம் சார்பில் சமயபுரத்தில் அன்னசேவையில் இணைந்தோம். இது நாம் திட்டமிட்டு இணையவில்லை. ஆனால் குருவருளால் இன்று நடைபெற்றது. இன்றைய நன்னாளில் இயற்கைக்கு நன்றி கூறி மகிழ்கின்றோம். 

இன்று அண்ணாமலையார் பற்றி சில துளிகள் அறிய உள்ளோம். 

காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.

பஞ்சபூதத் தலங்களுள் நெருப்புக்குரிய தலம்.ஆறு ஆதாலத் தலங்களில் திருவண்ணாமலை மணிபூரகத் தலமாக விளங்குகிறது.

இங்கு மலையே இறைவனின் சொரூபம்.சோணாசலம், அருணாச்சலம், அண்ணாமலை எல்லாம் இத்தலத்தைக் குறிப்பவையே.

ஒரு முறை பிரம்மாவிற்கும், மஹாவிஷ்ணுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின் அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் சோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் சோதியின் அடி முடியைக் காண இயலவில்லை. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும் அவரை வணங்கினர். சிவபெருமானும் அவர்களுக்கு சோதி வடிவிலிருந்து ஓர் மலையாக மாறி காட்சி கொடுத்தார். அதுவே இத்தலமான அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார். (சிவலிங்கம் என்றால் இறைவனைக் குறிக்கும் குறியீடு என்று பொருள்.) லிங்க உத்பவம் (சிவலிங்கத்தின் தோற்றம்) நடைபெற்ற தலம் இது. திருஞானசம்பந்தர் பதிகங்களில் ஒன்பதாம் பாடல் தோறும் அடிமுடி தேடிய இந்த வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

தமிழில், அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் அளக்க முடியாத வடிவாகத் தோன்றிய சிவபெருமானின் மலை என்பதால் அண்ணாமலை எனப் பெயர் வந்தது.

வடமொழியில், அருணம் என்றால் சிவப்பு. அசலம் என்றால் மலை. சிவந்த நெருப்பு வடிவில் தோன்றிய மலை என்பதால் அருணாசலம் எனப் பெயர் பெற்றது. 

அண்ணாமலையானது கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது.

உமையம்மை இங்கு தவம் இருந்து சிவபெருமான் திருமேனியில் ஒரு பாகம் பெற்றார் 

சூரியன், பிரதத்தராஜன், அஷ்டவசுக்கள், பிரமதேவன், சந்திரன், திருமால், புளகாதிபன் முதலியோர் பூசித்துப் பேறுபெற்ற தலம்.

வித்தியாதரர்களாகிய இருவர் ஒரு ரிஷியின் சாபத்தால் பூனையாகவும் குதிரையாகவும் இருந்த நிலையில் வச்சிராங்கத பாண்டியன் குதிரை மீதேறி பூனையைத் துரத்திவர திருவண்ணாமலையை வலம் வந்து இரண்டும் இச்சாபம் நீங்கி வித்தியாதரர்களாயினர். 

வச்சிராங்கதன் என்னும் பாண்டியன் தினமும் வலம் வந்து திருப்பணி பல செய்துள்ளான்.

நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. 

இங்கு மலையே இறைவனின் சொரூபம். மலைவலம் (கிரிவலம்) இங்குச் சிறப்புடையது.

இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர். பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பு. 

மலைவலம் சுற்றி வரும் போது எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் காணலாம். அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம்.உயர்ந்தோங்கிய அருணாசலத்தின் - அண்ணாமலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகும். 

வெளிச்சுற்று மதிலில் திசைக்கு ஒன்றாக அமைந்துள்ள நான்கு கோபுரங்கள் பிரதான கோபுரங்களாகும். 5-ம் பிரகாரத்தில் இருந்து 4-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் திசைக்கு ஒன்றாக 4 கோபுரங்கள், 4-ம் பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் கிழக்கில் கிளி கோபுரம் என்று அழைக்கப்படும் கோபுரம் ஒன்று ஆக மொத்தம் 9 கோபுரங்களுடன் இவ்வாலயம் திகழ்கிறது. இவற்றில் கிழக்கு திசையிலுள்ள இராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். இது 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தெற்கு திசை கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்றும், மேற்கு திசை கோபுரத்திற்கு பேய் கோபுரம் என்றும், வடக்கு திசை கோபுரத்திற்கு அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் பெயர்.

கிழக்கு கோபுரத்தில் நடனக் கலையும் பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.

கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம்; தரிசிக்கத் தக்கது.திருவண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பேய்  கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. 

அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.)

உள்ளே சென்றால் கம்பத்திளையனார் சந்நிதியும், ஞானப்பால் மண்டபமும் உள்ளன; 

'அதலசேடனாராட' என்னும் திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சந்நிதி.விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

சாதாரணமாக கோயில்களில் அஷ்டபந்தன மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வது போலன்றி, இக்கோயிலில் அண்ணாமலையார் ஸ்வர்ணபந்தனம் (சுத்தமான தங்கத்தால் பந்தனம்) செய்யப் பெற்றுள்ளார்.மூலவர் - அருணாசலப் பெருமான், தங்கக் கவச நாகாபரணத்துடன் வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.

சதுர் முக லிங்கம் இங்கு உள்ளது.25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ளது 

இத்திருக்கோயில்.(திருவாசகத்தில்) திருவம்மானை, திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது. திருவாசகத்துள் திருவெம்பாவை என்ற பனுவல், இத்தலத்துப் பெண்கள் ஒருவரை ஒருவர் வழிபாட்டுக்கு எழுப்பிச் சென்றதை அடிப்படையாகக் கொண்டது.

தலபுராணம் - அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார்.

'அண்ணாமலை வெண்பா ' குருநமசிவாயர் பாடியது.

குருநாமசிவாயர், குகைநமசிவாயர், அருணகிரியார், விருபாக்ஷதேவர், ஈசான்ய ஞானதேசிகர், தெய்வசிகாமணி தேசிகர் முதலியோர் இப்பதியில் வாழ்ந்த அருளாளர்கள்; இவர்களுள் பெரும் யோகியாகத் திகழ்ந்த தெய்வசிகாமணி தேசிகரின் வழியில் வந்த நாகலிங்க தேசிகர் என்பர் இராமேஸ்வரத்திற்கு யாத்திரையாகச் சென்றபோது, இராமநாதபுர ராஜா சேதுபதி அவர்களின் வேண்டுகோளையேற்று, இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஐந்து கோயில்களின் நிர்வாகத்தைக் தாம் மேற்கொண்டதோடு குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் ஓர் ஆதீனத்தையும் ஏற்படுத்தினார்; அதுவே 'குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்' என்று வழங்கப்பட்டுவருகின்றது.

இங்கே நாம் மகிழ மரம் தல விருட்சம் கண்டு , இங்கே இருந்து 9 கோபுரங்களை தரிசனம் செய்யலாம்.

திருவண்ணாமலை - சித்தர்கள் பார்வையில் ஒரு அதிசயமாக பாவிக்கப் படுகிறதே!

திருவண்ணாமலை, அகத்தியர் கூற்றின்படி, நித்தம் நித்தம், ஒவ்வொரு நொடியும், அதிசயங்கள் நடக்கும் இடம். நிறைய மனிதர்களுக்கு, அவரவர் கர்மாவின்படி, அதிசயத்தில் பங்குபெறுகிற, காண்கிற வாய்ப்பை சித்தர்கள் அளித்துள்ளனர். அப்படிப்பட்ட நிகழ்ச்சியே, பலரது வாழ்விலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது, என்பதும் உண்மை. ஒவ்வொரு கிரிவலமும், முறையாக, அமைதியாக, சிவநாம ஜெபத்துடன், உள் முனைப்புடன் செய்தால், அந்த ஒருவன்/ஒருவள், வந்த பொழுது வாங்கி வந்த மிகப்பெரிய கர்மா கட்டை, அவிழ்த்து, அண்ணாமலையார், தன் மீது கட்டிக்கொள்வர். இவனுக்கு/இவளுக்கு கர்ம பாரம் குறையும்.

மேலும், சித்த மார்கத்தில் ஒரு வழக்கு சொல் உண்டு.  "வட்டம் என்பது ஒரு நேர்கோடு" என. திருவண்ணாமலை கிரிவலம் அது என்னவென்று புரியவைக்கும்.

வாழ்க்கையில் மனிதன் இயல்பாகவே சேர்த்துக் கொள்கிற கர்மா என்பது, கிரிவலத்தின் பொழுது செய்கிற தானத்தினால், உடனேயே விலகும்.

கர்மா கழிதல்:-

மரணம் என்பது எல்லோருக்கும் உள்ள ஒரு நிலைதான். அது எங்கு, எப்பொழுது, எப்படி என்பதில்தான் வித்தியாசப்படுகிறது. உடல் அசந்து போகும்முன் பௌதீகத்தை சேர்த்துவிடவேண்டும் என்று முனைப்புக்காட்டுகிற மனிதன், உயிர் நீத்தபின் கூட வருவது அவனது பாபமும், புண்ணியமும் தவிர சேர்த்துவைத்த எந்த பொருளோ, தனது உறவோ, சுற்றமோ இல்லை என்பதை உணர்வதே இல்லையே. முனைப்பு அனைத்தும், உலகாயாத பொருட்களில், தன் குடும்பத்தாரிடம் மட்டும் வைத்துவிட்டு, தனக்கொரு பிரச்சனை வந்தால் மட்டும் சித்தர்களை நாடியில் தேடி வந்து, அன்றுவரை செய்த கெட்ட கர்மாவை, அவர்கள்  மொத்தமாக கழித்துவிட, வழி கூற வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். சாப்பிட்டது ஜீரணமாக, குறைந்தது ஒரு மணி நேரம் உடலுக்கு தேவைப்படுகிறதென்றால், எத்தனை ஜென்ம கர்மாவுக்கு, எவ்வளவு நேரம் வேண்டி வரும்? இதை ஏன் யோசிப்பதில்லை?

சித்த மார்கத்தில் தானம் செய்யும் முறை:-

சித்த வித்யார்த்திகள், தானம் செய்வது, தங்கள், மூச்சை. அது பார்க்கக் கிடைப்பது அரிது. அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பிப்பதாக வரித்துக் கொண்டு, இரு கையையும் சேர்த்து, இரு கட்டை விரலும் மூக்கின் இரு பக்கமும் வைத்து, இரு ஆள்காட்டி விரலும் ஒன்றாக சேர்த்து, சுழுமுனையில் இருக்க, மற்ற விரல்கள் மூக்கை மறைத்து நிற்க, பிறர் காணா வண்ணம், இடது மூக்கை அழுத்தி மூடி, வலது மூக்கு வழியாக காற்றை உள்ளிழுக்கும் பொழுது "ஓம் நமச்சிவாய" என்று மனதுள் தியானித்து, கும்பமானதும், "சிவாய நமஹ" என தியானித்து, அந்த நேரத்தில், இடது மூக்கின் வழி மூச்சை, மூடிய விரல்களை திறந்து, இறைவன் பாதத்தில் சமர்ப்பிப்பார்கள். 

தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்;
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம், நமது உள்ள வினைகளே.

தெளிவுரை : திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவ பெருமானை மனதார எண்ணிச் சென்று, அப் பெருமானின் தூய மலர்ப் பாதங்களை ஏத்துமின். பக்தியில் திளைத்து மெய்மறந்து ஆடுமின்; கசிந்து உருகிப் புகழ்ப்பாடல்களைப் பாடுமின்; கைதொழுது வணங்குமின். அத்தன்மையில் அப்பெருமான் நமது உள்ளத்தில் புகுந்து நம்மை ஆட்கொள்வார். நமது வினைகள் யாவும் நம்மை விட்டு ஓடிப் போகும்.

நினைத்தால் முக்தி தரும் திருஅண்ணாமலையாரை தேடி சென்று ஆடிப் பாடி தொழ வேண்டும் என்பது இங்கே தெளிவாக நமக்கு கூறப்பட்டுள்ளது. இப்படி தேடி சென்று அண்ணாமலையாரை தொழுதால் வர நம்மை ஆட்கொள்வது திண்ணம். இதன் மூலம் நமது வினைகளும் ஓடிப் போகும். இதன் பொருட்டே நாம் திருஅண்ணாமலையாரை நினைத்து, நினைத்து அகத்துள் வழிபாடு செய்து மகிழ்வோமாக!

அல்லல் தீர்க்கும் அண்ணாமலையார் பாதம் தொழுது நம் வினைகளை போக்குவோமாக!  

 5.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஐந்தாம் திருமுறை  

திருக்குறுந்தொகை  -  திருவண்ணாமலை -  அருணாசலேசுவரர்: உண்ணாமுலையம்மை) திருவண்ணாமலை ; 

அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி 

பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம்

இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும்

அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக்

கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே! [ 1]

பெற்றம் ஏறுவர், பெய் பலிக்கு ஏன்று அவர்;

சுற்றமா மிகு தொல் புகழாளொடும்

அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ

நல்-தவத்தொடு ஞானத்து இருப்பரே.  [ 2]

பல் இல் ஓடு கை ஏந்திப் பல இலம்

ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர்,

அல்லல் தீர்க்கும், அண்ணாமலை கைதொழ

நல்லஆயின நம்மை அடையுமே. [ 3]

பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர்

ஓடிப் போயினர்; செய்வது ஒன்று என்கொலோ?

ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ

ஓடிப் போகும், நம் மேலை வினைகளே.  [ 4]

தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!

நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்;

ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ

ஓடிப் போம், நமது உள்ள வினைகளே.  [ 5]

கட்டி ஒக்கும், கரும்பின் இடை; துணி

வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்,

அட்டமூர்த்தி, அண்ணாமலை மேவிய

நட்டம் ஆடியை, நண்ண நன்கு ஆகுமே.  [ 6]

கோணிக் கொண்டையர் வேடம் முன் கொண்டவர்,

பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்,

ஆணிப் பொன்னின், அண்ணாமலை கைதொழப்

பேணி நின்ற பெருவினை போகுமே. [ 7]

கண்டம்தான் கறுத்தான், காலன் ஆர் உயிர்

பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்,

அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ

விண்டு போகும், நம் மேலைவினைகளே. [ 8]

முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்,

அந்திவாய் ஒளியான் தன் அண்ணாமலை!

சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்,

கந்தமாமலர் சூடும் கருத்தனே. [ 9] 

மறையினானொடு மாலவன் காண்கிலா

நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன்

உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப்

பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே.  [ 10]

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருஅண்ணாமலை பதிகத்தை  பாடி மகிழ்வோம்.

திருச்சிற்றம்பலம்!

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல்
அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.

பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே.

கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.

ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரன் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட வடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.

விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே

வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே.

வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.

திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!! திருச்சிற்றம்பலம்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 திருமூலர் பெருமான் அருளிய நந்தி மஹாத்மியம்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_12.html

திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!! - https://tut-temples.blogspot.com/2023/08/3000.html

திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023 - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா - 11.1.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/100-1112024.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே! - https://tut-temples.blogspot.com/2022/10/blog-post_14.html

அண்ணாமலை எம் அண்ணா போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/10/blog-post_14.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_29.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html

 தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

Friday, January 12, 2024

திருமூலர் பெருமான் அருளிய நந்தி மஹாத்மியம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் தளம் சார்பில்  சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இம்மாத சேவைகளுக்கு பொருளுதவி செய்து வரும் அனைவரின் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றோம். சென்ற வாரம் திமிரியில் தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் சார்பில்  நடைபெற்ற சத்சங்கத்தில் கலந்து கொண்டோம். நம் அகத்திய அடியார்களை அன்று சந்தித்து மகிழ்ந்தோம். குருநாதரின் வாக்கினை கேட்டும் மகிழ்ந்தோம்.அன்றைய தினம் அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரர் தரிசனம் பெற்று வந்தோம். இது போன்ற நிகழ்வுகள் நாம் நினைத்தால் பங்கு பெற இயலாது. குருவருள் துணை கொண்டே இவற்றில் நாம் பங்கு பெற முடியும். இவற்றுடன் தினம் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது பன்னிரு திருமுறை படித்து வருகின்றோம். 

இதற்கு. முந்தைய பதிவில்  ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா பற்றி கூறி இருந்தோம். குருவருளால் அன்றைய தினம் இரவு கூட்டுப்பிரார்தனையில் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய அசோக சால வாசம் படித்து மகிழ்ந்தோம். கடந்த கந்த ஷஷ்டி விரத காலங்களில் ஸ்ரீமத் குமாரசுவாமியம் படிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. இதுவெல்லாம் குருவருளால் தான் நமக்கு கிடைத்து வருகின்றது. 

இந்த பயணத்தில் திருவாசகம் பற்றி அவ்வப்போது சிந்தித்து வருகின்றோம். குருவருளால் திருமந்திரம் பற்றியும் நாம் உணர்த்தப்பட்டு வருகின்றோம். இதில் நாம் மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலில்  நடைபெற்ற  திருமந்திரம் முற்றோதுதலில் கலந்து கொண்டோம். இந்த சிந்தனையின் பயனாக நமக்கு திருமூலர் பெருமான் அருளிய நந்தி மஹாத்மியம்! கிடைத்தது. அவற்றை இங்கே குருவருளால் பதிவு செய்ய விரும்புகின்றோம். மார்கழி மாத தேய்பிறை பிரதோஷம் அன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அவற்றை அச்சிட்டு சில அன்பர்களுக்கு கொடுத்துள்ளோம். பதிவின் அன்றைய தரிசனத்தையும், நந்தி மஹாத்மியம் பற்றியும் இன்று படித்து, தினமும் நந்தியெம்பெருமான் அருள் பெற படித்து உணர்வோம்.

அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு

நம்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதன் ஆகிப்

பங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படை பொறுத்த

செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி

என்று நந்தியெம்பெருமானை போற்றி மகிழ்வோம்.

இந்த பாடல் காஞ்சிபுராணத்தில்  திருநந்தி தேவர் போற்றியாக பாடப்பட்டுள்ளது.காஞ்சிப் புராணம் காஞ்சித் தலத்தைச் சிறப்பித்துக் கூறும் புராண நூலாகும். இந்நூலாசிரியர் சிவஞான முனிவராவார். வடமொழியில் உள்ள காஞ்சிமான்மியங்களைக் கருவாகக் கொண்டு சிவஞானமுனிவர் விரிவாக இந்நூலினை எழுதியுள்ளார். இந்நூலிலுள்ள பாடல்களின் தொகை 2742 ஆகும். சேக்கிழாரின் பெரியபுராணம் போன்றே இப்புராணமும் தமிழில் புராணத்தின் பெருமையை உயர்த்தியுள்ளது. 

இப்புராணத்தின் இறுதிப் பகுதியில் மக்கள் பின் பற்ற வேண்டிய ஒழுக்கங்களும் பதிபுண்ணியம், பசுபுண்ணியம் என்ற இரண்டிலும் பதி புண்ணியம் எவ்வாறு சிறந்தது என்பதும் விளக்கப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் இறைவனின் உருவத்திருமேனிகள் இருபத்திநான்கின் இயல்புகள் அழகாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. இப்புராணத்தை படித்துணர குருவிடம் வேண்டி பணிகின்றோம்.

அடுத்து திருமூலர் பெருமான் அருளிய நந்தி மஹாத்மியம்! காண இருக்கின்றோம்.

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் இருந்து நாம் பெற்ற தரிசனத்தை இங்கே பகிர்கின்றோம்.

இனி நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் தரிசனம் பெற உள்ளோம்.

அனைவரும் இந்த தொகுப்பில் உள்ள நந்தி மஹாத்மியம்! திருமந்திரகளை அச்சிட்டு வைத்து கொள்ளுங்கள். நீங்கள் வழிபட செல்ல இருக்கும் கோயில்களில் இவற்றை அன்பர்களுக்கு கொடுத்து படிக்க சொல்லுங்கள்.

அனைவரும் இங்கே குருவருளால் அருளப்பட்ட நந்தி மஹாத்மியம் தொகுப்பை தினமும் வழிபாட்டில் இணைத்து வாருங்கள். மீண்டும் நந்தியெம்பெருமான் அடி பணிந்து நிற்கின்றோம். இப்படி நமக்கு அருள்வழி காட்டி வரும் நம் குருநாதரின் பாதமும் பணிந்து நிற்கின்றோம்.

இதனை நமக்கு தொகுத்து அருளிய ஆசிரியர்  சிவத்திருமதி. சிவ மல்லிகா அவர்களுக்கு நன்றி கூறி மகிழ்கின்றோம்.இன்னுமொரு பெறற்கரிய பேறு உள்ள நிகழ்வை குருவருளால் விரைவில் அறிவிக்கின்றோம். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!! - https://tut-temples.blogspot.com/2023/08/3000.html

திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023 - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா - 11.1.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/100-1112024.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

Wednesday, January 10, 2024

ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா - 11.1.2024

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் தளம் சார்பில்  சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இம்மாத சேவைகளுக்கு பொருளுதவி செய்து வரும் அனைவரின் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றோம். சென்ற வாரம் திமிரியில் தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் சார்பில்  நடைபெற்ற சத்சங்கத்தில் கலந்து கொண்டோம். நம் அகத்திய அடியார்களை அன்று சந்தித்து மகிழ்ந்தோம். குருநாதரின் வாக்கினை கேட்டும் மகிழ்ந்தோம்.அன்றைய தினம் அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரர் தரிசனம் பெற்று வந்தோம். இது போன்ற நிகழ்வுகள் நாம் நினைத்தால் பங்கு பெற இயலாது. குருவருள் துணை கொண்டே இவற்றில் நாம் பங்கு பெற முடியும். இவற்றுடன் தினம் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது பன்னிரு திருமுறை படித்து வருகின்றோம். 

இந்த பயணத்தில் இன்றைய நாள் முருக பக்தர்களுக்கு ஒரு பொன்னாள். ஆம். இன்றைய நன்னாளில் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்றைய விழாவின் அழைப்பிதழை இன்றைய பதிவில் அறிய தருகின்றோம்.

பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவிலும் ஆறுமுகப்பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சுவாமிகள் உலகம் உய்ய பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார். 

 1923ம் ஆண்டு டிசம்பர் 27ம் நாள், சுவாமிகள் சென்னை தம்பு செட்டி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு குதிரை வண்டியின் சக்கரம் அடிகளாரது இடது கணை காலின் மீது ஏற, கால் முறிவடைந்தது. அங்கிருந்த அன்பர்கள் சுவாமிகளை சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமை மருத்துவரான ஆங்கிலேயர், சுவாமிகளின் கால் குணப்படாது என்று கூறினார். அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர்.

 பதினோராவது நாள் இரவு அடிகளார், படுக்கையில் படுத்த வண்ணம் முருகனை வேண்டினார். அப்போது முருகனின் வாகனமாகிய மயில்கள் வானத்தில் நடனம் புரிந்து வருவதை கண்டார். அப்பொழுது, முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார். மறுநாள் இரவு அடிகளார் அருகில் முருகன் குழந்தை உருவில் படுத்திருப்பதை கண்டார். "முருகா" என்று அழைத்தவுடன் இறைவன் மறைந்து போனார். முருகனின் திருநாமத்தை பன்னிரு முறை கூறி வணங்கினார். உடனே கால் கூடி விட்டது. பெரிய மருத்துவரான ஆங்கிலேயர், இவரை சோதித்து இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்து புதுப்பாக்கத்தில் உள்ள அன்பர் ஒருவர் வீட்டில் தங்கினார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, அடியார்கள் ஒவ்வொரு ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள்.

 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் தூய பக்தியையும், அவர் இயற்றிய சண்முகக் கவசத்தின் மகிமையையும், முருகப்பெருமான் தம் மெய்யடியார்களுக்கு அருளும் கருணையையும் மக்கள் அறியும் வண்ணம், சென்னையில் முருகப்பெருமான் திருவிளையாடல் புரிந்தார். உருத்ரோத்காரி ஆண்டு, மார்கழி மாதம், 12-ஆம் நாள் வியாழக்கிழமையன்று (27.12.1923) வடசென்னை, தம்புச் செட்டித் தெருவில் வேகமாக வந்த குதிரை வண்டி பாம்பன் சுவாமியின் மீது மோதியதால் அவரின் இடக்கால் எலும்பு முறிந்தது. அதைக்கண்டு சுவாமி கலங்கவில்லை; மருத்துவம் செய்து குணப்படுத்தி வாழ நினைக்கவில்லை. இத்துடன் உடற்பற்றும், உயிர்ப்பற்றும், உலகப்பற்றும் ஒருங்கே ஒழிந்துவிட்டன என்றும், மீண்டும் பிறவித் துன்பம் வராது என்றும் எண்ணி முருகப்பெருமான் திருவடியையே சிந்தித்திருந்தார்.

இந்த விபத்தைக் கண்ட சுவாமியின் அன்பர் ஒருவர் அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். பாம்பன் சுவாமி 73 வயதுக்கு மேற்பட்டவர் என்பதாலும், உப்பில்லாத உணவையே உண்பவர் என்பதாலும் அவரின் முறிந்த எலும்பு ஒன்று சேராது என்றும், அறுவைச் சிகிச்சைச் செய்ய வேண்டுமென்றும் மருத்துவர்கள் கூறினர்.

அவர்கள் கூறியதை ஏற்காமல் பாம்பன் சுவாமி, முருகப்பெருமானையே சிந்தித்த வண்ணமாய் இருந்தார். சீடர்கள், 1891-ஆம் ஆண்டில் சுவாமி இயற்றிய சண்முகக் கவசத்தை தினந்தோறும் பாராயணம் செய்தார்கள். மருத்துவமனையில் சேர்ந்த 11-ஆம் நாள் இரவில் முருகப்பெருமானின் பெரிய மயில் ஒன்று தனது தோகையை விரித்து, அழகிய வானை மறைத்திருப்பதையும், மற்றொரு மயில் அதனுடன் சேர்ந்து நடனமாடிய காட்சியையும் கண்டார். அக்காட்சி மறைவதைக் கண்டு, முருகப்பெருமானின் திருவருளைச் சிந்தித்து அழுதார்.

அவர் மனம் மகிழுமாறு செவ்வேட் பரமன் ஓர் இரவில் ஒரு சிவந்த நிறக் குழந்தைவடிவில் சுவாமி படுத்திருந்த படுக்கையில் படுத்திருந்தான். குழந்தையாக வந்தவன் முருகப் பெருமானே என்று அறிந்துகொண்டதும் அக்குழந்தை மறைந்துவிட்டது.

பிறகு, மருத்துவர்கள் ஆராய்ந்து, எலும்பின் ஒடிந்த பகுதி கூடி வருவதைக் கண்டு மகிழ்ந்தனர். இந்த அற்புத தெய்வீக நிகழ்ச்சி அந்த மருத்துவமனை கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அக்குறிப்பு வருமாறு:

""பாம்பன் ஸ்ரீமத் குமரகுருபர சுவாமிகள் கால் முறிவுண்டு சென்னை பொது மருத்துவமனையில் 11வது வார்டு (மன்றோ வார்டு) 11வது படுக்கையில் 27.12.1923 அன்று சேர்க்கப்பட்டிருந்தார். முருகப்பெருமான் திருவருளால் 11-ஆம் நாள் இரவு (6.1.1924) வளர்பிறை பிரதம திதியும், பூராட நட்சத்திரமும் சேர்ந்த நன்நேரத்தில் சுவாமிகள் மயில் வாகனக் காட்சி கண்டு, அறுவை சிகிச்சை இல்லாமலேயே பூரண குணம் பெற்றார். அந்நாள் "மயூர வாகன சேவன' விழாவாக ஒவ்வோராண்டும் சுவாமிகள் காலம் தொடங்கி, விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது''.

அவ்வகையில்÷மகிமை பொருந்திய "மயூரவாகன சேவன விழா' 100-ஆம் ஆண்டு விழாவாக 10.1.2024 மற்றும் 11.1.24 தேதிகளில் சிறப்பாக மஹாதேஜோ மண்டல சபையால் பாம்பன் சுவாமியின் சமாதி நிலையத்தில் நடத்தப்படுகிறது. ஆண்டவன் அருள்பெற்ற அடியார்களின் பூஜையே ஆண்டவனுக்கு உகந்த - சிறந்த பூஜையாகும். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கூறியதுபோல மயூரவாகன சேவனம் ஒரு மகத்தான சேவனம்! தொடர்ந்து நிகழ்த்தினால் துன்பங்கள் தொலைந்தோடும்!

என்னை  ஆதரித்தருள்  பரம  ரகசிய  சக்தி என்னை  நம்பியோரை   ஆதரியாது நிற்குமோ    ஐயம்  வேண்டாம் - பாம்பன் சுவாமிகள்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

Saturday, January 6, 2024

சித்தர் அருட்குடில் & ஸ்ரீ அகத்திய மகரிஷி உழவாரப்பணி - (குடும்ப விழா) - 07.01.2024

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி உழவாரப்பணி குழு இணைந்து நாளை குடும்ப விழா கொண்டாட உள்ளார்கள். அதன் பொருட்டு இன்றைய பதிவில் அனைவரையும் சந்திக்கின்றோம். வழக்கம் போல் குருவருளால் ஒவ்வொரு நாளும் நம் குழுவின் சேவை நடைபெற்று வருகின்றது. கடந்த மதுரை அஷ்டமி சப்பரம் சேவையை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். விரைவில் தனிப்பதிவில் இது பற்றி பேசுவோம். குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் தலைமையில் நாம் இயங்கி வருவது நாம் செய்த புண்ணியமே. இதற்கு நாம் ஒவ்வொருவரும் நம் பெற்றோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளோம். ஏனென்றால் சித்தர் அருட்குடில் சேவையில் நாம் சாதாரணமாக இணைய இயலாது. குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் இருந்தால் தான் சித்தர் அருட்குடில் சேவையில் நாம் இணைய முடியும்.

சித்தர் அருட்குடில் சேவையில் நாம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து உள்ளோம். வருடத்திற்கு ஒருமுறை சித்தர் அருட்குடில் சென்று வருவது வழக்கம். இந்த ஆண்டில் நாளை நடைபெற உள்ள விழாவில் நாம் சித்தர் அருட்குடில் அன்பர்களை சந்திக்க உள்ளோம். நம் தளம் சார்பில் முதல் சேவையாக மாதந்தோறும் சித்தர் அருட்குடில் சேவைக்கென்று சிறு தொகையாக அனுப்பிவிடுவது வழக்கம். சித்தர் அருட்குடில் சேவைகளைப் பற்றியும் சிறிது தொட்டுக் காட்டி உள்ளோம். சரி. இனி நாளை நடை பெற உள்ள விழாவின் அழைப்பை அனைவருக்கும் அறிய தருகின்றோம்.

பதிவின் இறுதியாக சில  அருள்நிலை படங்களை இணைத்துள்ளோம்.

சித்தர் அருட்குடில் & ஸ்ரீ அகத்திய மகரிஷி உழவாரப்பணி - (குடும்ப விழா) - 07.01.2024

கூட்டுப்பிரார்த்தனை மற்றும் சத்சங்கம் 

இறை அன்பர்களே! 

வருகின்ற ஜனவரி மாதம் (07/01/24) ஞாயிற்றுக்கிழமை அன்று ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் நம் சித்தர் அருட்குடில் சார்பாக சத்சங்கம் குடும்ப விழா நடைபெற இருக்கிறது. .வாய்ப்புள்ள அன்பர்கள் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். 

நாள் -07/01/24 ஞாயிற்றுக்கிழமை 

காலை 07 மணி அளவில். .

இடம் -KBJ MAHAL(திருமண மண்டபம்) ஆற்காடு -திமிரி ரோடு..விளாரி கூட் ரோடு 
ஸ்டாப்..திமிரி..632515

நன்றி. .வணக்கம்.  அகஸ்தியர் அருள். .

இனி ஜீவ நாடி பற்றி சிறு துளியாக அறிய உள்ளோம்.

ஜீவ நாடி என்றால் என்ன?

ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும். மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல் ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம் ஜோதிடரிடம் போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன.

“இந்த ஜீவ நாடியைக் கைவசம் வைத்திர்ப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த சுத்தத்துடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு அவர்கள் முறை தவறி நடந்து கொண்டால் நாடி பலிக்காது, நாளடைவில் பலன்கள் தவறாகிச் செயலிழந்து விடும்” என்பது நாடி ஜோதிடர்களின் கூற்று.

தனக்குக் கிடைத்த அகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன். சாதாரண மனிதர் முதல், அன்றைய, இன்றைய பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றனர். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவ நாடி படித்துப் பலன் பெற்றனர் பலர். 

ஹனுமத்தாஸனைப் போலவே தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாது, ஜோதிடத்தை ஒரு சேவையாக எண்ணிச் செய்து வருபவர் திரு கணேசன். இவரிடம் இருப்பதும் அகத்தியர் ஜீவநாடிதான். பல ஆண்டுகளாக இவர் தன்னிடம் இருக்கும் ஜீவநாடி மூலம் பலன் சொல்லி வருகிறார். உலகெங்கிலுமிருந்தும் பலர் இவரிடம் நாடி பார்க்க வருகின்றனர். பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் இவரிடம் வந்து ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளனர்.

இதற்காக இவர் ”கட்டணம் இவ்வளவு கொடு” என்று கேட்டு வாங்குவதில்லை. கொடுப்பதைப் பெற்றுக் கொள்கிறார். அவ்வாறு வரும் பணத்தையும் நாடியில் வரும் கட்டளைப்படி அன்னதானத்திற்கும், தீப வழிபாட்டிற்கும், யாகங்கள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறார். ஒரு ஆன்மீக சேவையாகவே எண்ணி இதைச் செய்து வருகிறார்.

சித்தர் அருட்குடில் முகவரி

Mr. J.Ganesan

Siddhar Arut Kudil

No. 33/56,2nd street

co-operative colony

opp. co-operative bus stop

Thanjavur-7

இதில் முக்கியமான விஷயம். இது சாதாரண நாடிகளைப் போன்றதல்ல. ஜீவநாடி. ஆகவே ஆன்மீகம், ஞானம், சித்த யோகம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு மிகத் தெளிவான பதில்கள் கிடைக்கும். வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் தகுந்த ஆலோசனைகள் கூறப்படுகின்றன.

சித்தர் அருட் குடிலுக்குச் செல்லும் வழி :  தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். வழியில் பழைய ஹவுஸிங் யூனிட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அருட் குடிலுக்குச் செல்லலாம்.

மற்றொரு வழி :  பழைய பேருந்து நிலையத்தில் இருந்து K74 அல்லது B6A ஆகிய பேருந்துகளில் ஏறி கோ-ஆபரேடிவ் காலனி பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் அருகிலேயே குடில் பார்வைக்குக் கிடைக்கும்.

முக்கியமான விஷயங்கள்:

அது ’அகத்தியர் அருட் குடில்’ என்பதால் அதற்கேற்றவாறு மனம், உடல் சுத்தத்துடனும் பக்தியுடனும் செல்வது நல்லது.

பாத்திரத்துக்கேற்றவாறு நீர் நிரம்பும் என்பது போல பார்ப்பவர்களின் ஆன்ம பலத்துக்கேற்ப நல்ல, விரிவான பலன்கள், வழிகள் கிடைக்கும்.

சித்தர்கள் கூறும் ஆலோசனைப் படி நடந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

இனி சில தரிசனப் படங்களை கண்டு மகிழ்வோம்.

சித்தர் அருட்குடில் நேரில் சென்று தரிசிப்பதும், சித்தர் அருட்குடில் சேவையில் பங்கு கொள்வதும் சொல்லில் அடக்க முடியாதது ஆகும். இது அனுபவத்தில் தான் நாம் பெற முடியும். எனவே அன்பர்கள் சித்தர் அருட்குடில் சேவையில் பங்கு கொண்டு சித்தர்களின் அருள் பெற வேண்டி நாம் பணிகின்றோம்.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அசைவம் தவிர்! இதை அனைவருக்கும் பகிர்!! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post.html

கல்பதரு தினம் - கேளுங்கள், நீங்கள் பெறுவீர்கள் - 01.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/01012024.html

ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - தொகுப்பு 3 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023-3.html

ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - தொகுப்பு 2 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023-2.html

 ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023.html

லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_23.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html