"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, May 11, 2022

குருவருள் பரிபூரணமாகுக!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய குரு நாளில் வழக்கம் போல் குருவருளால் அன்னசேவை, பசு,யானைகளுக்கு உணவு என செய்ய பணிக்கப்பட்டோம். பணம் வைத்திருக்கும் அனைவராலும் இது போன்ற சேவைகளை செய்ய இயலாது. குருவருள் துணை கொண்டு மனம் வைத்தால் தான் இது போன்ற சேவைகளை செய்ய இயலும் . குருவருள் மட்டும் தான் திருவருளை காட்டும். குருவருள் துணை கொண்டு தான் திருவருள் நாம் பெற இயலும். குரு என்பதை வார்த்தையாக கருதாது வாழ்க்கையாக கருதுங்கள். ஒவ்வொரு நிகழ்விலும் குருவருள் நம்மை வழிநடத்துவதை கண்கூடாக உணர இயலும். சித்திரை மாத ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரியில் சிறப்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்ற மனக்குறை இன்னும் இருக்கின்றது. 



குரு என்ற சொல்லில் கு என்ற எழுத்துஅறியாமையையும் , ரு என்பது அழித்தலையும்  குறிக்கும். ஆக குரு என்பவர்அறியாமையை  அழித்து மெய்யுணர்வு புகட்டுபவர் ஆவார்.மேலும் கு என்பது சத்துவ,ராஜச, தாமச குணங்களை  கடந்தவர் என்று,குணாதீத நிலைமையையும், ரு என்பது ரூபாதீதம் எனும் உருவை  கடந்த நிலையினைக் குறிக்கும். ஆக, குரு என்பவர் குணங்களையும் , ரூபத்தையும் கடந்த பரப்பிரம்மமே ஆவார்.இதனைத் தான் குருவே சிவம் என முன்னரே தொட்டுக் காட்டினோம்.

"குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனும் ஆய்க் கோனும் ஆய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே."
 

நடைமுறையில், நம்மில்  பெரும்பாலானவர்களுக்கு ஆசிரியர் யார், குரு யார் என்பதைத் தீர்மானிப்பதில் தடுமாற்றம் காணப்படுகின்றது.

ஆசிரியரைக் குரு என்பதும் குருவை ஆசிரியர்  என்பதுமாக நாம் குழப்பமடைந்துள்ளோம். பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர் ஒருவரை அவருக்கு விசேட மதிப்பைக் கொடுப்பதற்காக குரு என்றும் குறிப்பிடுகின்றோம்.

கலை உலகில் இந்தப் பிரயோகத்தை நாம் காணலாம். உதாரணமாக, நடனக் கலையைக் கற்பிக்கும் நடன ஆசிரியரை நடன அரங்கேற்ற மேடைகளில் குரு எனக் கௌரவிக்கப்படுவதைக் காணலாம்.

ஒருவர் ஆசிரியரா அல்லது குருவா எனத் தீர்மானிப்பதில் அடிப்படையாகக் கொள்ளப்படும் உண்மை  எது? என்பது தான் ஆசிரியருக்கும் குருவுக்குமான வேறுபாட்டைக் கொடுக்கின்றது. 
மாதா,பிதா, குரு, தெய்வம் என்பதில் குறிப்பிடப்படும் குரு என்பவர் ஆசிரியராக இருப்பின் ஒருவருக்கு எத்தனை குருக்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். அதேபோன்று 'தாரமும் குருவும் தலைவிதிப்படி' என்பதில் தாரம் ஒன்று ,குரு ஒன்று என்பது வெளிப்படையானதே. 

இதிலிருந்து ஒரு விஷயத்தை  நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதாவது, நாம் பல ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்கிறோம் ஆனால் குரு, தாரத்தைப் போல் அமைய வேண்டியதாகின்றது என்பதே. இங்கு அமையவேண்டியது என்பது எமது தேடலின் அடிப்படையில் இடம்பெறுகின்றது என்பதாகும். 

இப்போது ஒரு ஆசிரியரின் செயற்பாடு என்ன என்பதைப் பார்ப்போம். ஒரு ஆசிரியர் தான் கற்றுக்கொண்ட அறிவை மாணவர்களுக்கு மாற்றம் செய்பவராவார். அதாவது, ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவை (Knowledge) மாற்றம் செய்பவர் ஆசிரியராவார். 

இவ்வாறு அறிவை மாற்றம் செய்யும் ஆசிரியர்கள் தமது அறிவை பாடசாலை மாணவர்களுக்கு மாற்றம் செய்பவர்கள் மட்டுமல்ல, கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள் என முன்னோர்கள் கூறியவற்றைக் கற்றுப் பெற்ற அறிவை பிறருக்கு மாற்றம் செய்பவர்களும் ஆசிரியர்களே. 

இதே போன்றே கலைகளிலும் தாம் கற்றுக் கொண்ட அறிவை இன்னொருவருக்கு மாற்றும் போது அவரும் ஆசிரியராகின்றார். அப்படியாயின் குரு என்பவர் யார்? 

குரு என்பவர் ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு புரிந்துகொள்ளலை (understanding) கொடுப்பவராவார். இங்கே அறிவுப்பரிமாற்றம் இடம் பெறுவதில்லை. அறிவுப்பரிமாற்றமானது மனம் சார்ந்தது. 

ஆனால் குருவால் கொடுக்கப்படும் புரிந்துகொள்ளல் என்பது உள்ளுணர்வு சார்ந்ததோடு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானதாயும், தனித்துவமானதாயும், வார்த்தைகளின் விளக்கங்களுக்கு அப்பாற் பட்டதாயும் அமையும். 

எனவே ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவை மாற்றம் செய்பவர் ஆசிரியர், ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு புரிந்து கொள்ளலைக் கொடுப்பவர் குரு.

எமக்குக் கிடைப்பது அறிவு சார்ந்ததா அல்லது உள்ளுணர்வு சார்ந்ததா என்பதன் மூலம் கொடுப்பவர் ஆசிரியரா அல்லது குருவா என்பதைத் தீர்மானிக்கலாம்.
சரி .இனி அடுத்த கேள்விக்கு செல்வோம். 

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.

"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட நாட்டின் அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து,பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,
சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர்.

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது;

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின்,இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள்.இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...'

என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்..

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..

இன்றைய குருநாளில் நாமும் இயற்கையிடம் இருந்து உயர்ந்த பாடங்களை கற்க முயற்சிப்போம். நம் தளம் சார்பில் செய்து வரும் சேவைகளின் படங்களை நாம் கடந்த ஓராண்டுக்கு மேலாக பகிர்வதில்லை. இது குருவருள் நமக்கு சொன்ன பாடம். அதே போல் நாம் வேறெங்கும் விளம்பரங்கள் செய்தது இல்லை. ஆனால் குருவருள் துணை கொண்டு முதன்முதலாக நம் தளத்தின் பெயர் தென்காசி ஷீரடி திருக்கோயில் மூலம் வெளியிடப்பட்ட ஸ்ரீ சாயி சித்திர சரிதம் புத்தகத்தில் வெளியிடப்பட்டது.


நன்கொடையாளர் பெயர் புத்தகத்தில் கண்டு குருவருள் கண்டு மெய் மறந்து நின்றோம். அடுத்து மீண்டும் தென்காசி சீரடி கோயிலில் இருந்து இந்த தமிழ் புத்தாண்டில் ஸ்ரீ சாயி சித்திரக் கூடம் - பாபாவை பற்றிய புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டு, அதில் ஏற்கனவே வெளியான நூலில் இருந்து படங்களை அமைத்து இருந்தார்கள். இதிலும் நாம் பங்கேற்க குருவருள் வழிநடத்தியது. அதனை தான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் நாம் தரிசனமாக பெற்றோம். அதில் உள்ள செய்தி நம் தளத்திற்கும் மிக மிக பொருத்தமாக உள்ளது. குருவருள் துணை கொண்டு நம்மை வழிநடத்தி வருவது கண்டு நன்றி கூறி மகிழ்கின்றோம்.










வாழ வழி காட்டும் குருவின் பாத கமலங்களுக்கு நன்றி கூறி, தென்காசி சாய்பாபா கோயில் தரிசனம் தனிப்பதிவில் விரைவில் காண்போம்.

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

Tuesday, May 10, 2022

வேண்டும் வரம் அருள்வாள் - வீரபாண்டி மாரியம்மா!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சுபகிருது ஆண்டு சித்திரை மாத பயணத்தில் அனைவரும் இருக்கின்றோம். சித்திரை மாதம் என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான், அம்மையப்பர் அருள் இந்த மாதத்தில் நாம் நம் பாரம்பரிய திருவிழாக்கள் மூலம் பெற்று வருகின்றோம். சித்திரை திருவிழா என்றாலே மதுரை மட்டுமன்று: எங்கள் தேனி மாவட்டத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.


தேனி வீரபாண்டி ஸ்ரீ  கௌமாரி அம்மன் திருவிழா ஒன்றே எங்கள் சித்திரை திருவிழா கொண்டாட்டம் பற்றி பேசும். இதோ..வீரபாண்டி ஸ்ரீ கௌமாரி அம்மன் தரிசனம் பெற அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். 7 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அன்னையின் அருள் பெற அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

திருவிழா நாள்: 10 முதல் 17 மே 2022




இந்த பதிவை படிக்கும் அனைவரும் ஆத்மார்த்தமாக கூட்டுப்பிரார்த்தனை செய்து வாருங்கள். ஆம். அம்மை போன்ற காய்ச்சலுக்கு எங்கள் சுற்றுவட்டார பகுதியில் இங்கு வந்து வேண்டுதல் வைத்து வேப்பிலை ஆசி பெற்று வந்தாலே போதும். காய்ச்சல் ஓடி விடும். அதே போல் தற்போதுள்ள நுண்கிருமி காய்ச்சல் வேரோடு ஒழிய வீரபாண்டி ஸ்ரீ கௌமாரி அம்மனிடம் பிரார்த்திக்கின்றோம்.

 “ஆதியீறில்லாள் கன்னிக் களித்ததுங் கரந்தாணாகி
மீது காரணத்தாள் கன்னியீச் சுரமாயிற்றென்று
சூதனா ரருளக் கேட்டுக் தொழுதனர் முனிவர்
பின்னர் தாதுலாம் வேப்பந் தார்
ஆன்றனிக் கொலு அமர்ந்தாம் உனன்றே”

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது.
முல்லை நதியின் வனப்பில் உள்ள ஊர் வீரபாண்டி. சுகந்த காற்றும், பசுஞ்சோலை மரங்களும், முல்லை நதி பாயும் வீரபாண்டி இயற்கை அன்னையின் கொடையே.இன்றொரு நாள் போதுமா? என்றொரு பாடல் கேட்டிருப்போம்.அதே போல், வீரபாண்டியின் அழகையும், கௌமாரியம்மன் அருளையும்,கண்ணீஸ்வரமுடையாரின் கருணையையும் பெற இன்றொரு நாள் போதுமா? என்று கேட்கத் தூண்டுகின்றது.

தென்றல் தவழும் தேனியில் பற்பல திருக்கோவில்கள் உள்ளன.எங்கே ? யாராவது சொல்லுங்கள் பார்ப்போம் என்றால் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு  தனி இடம் உண்டு.தேனியில் பிறந்து வளர்ந்த ஒவ்வொரு வரும் கண்டிப்பாக வீரபாண்டி கௌமாரியம்மன் தரிசனம் பெற்றிருப்பர்.

பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அம்மை மற்றும் கோடைக்கால அனைத்து வெப்ப நோய்களும் நீங்கி விடும் என்கின்றனர்.கோயிலின் தீர்த்தமாக கோயிலுக்கு அருகே ஓடும் முல்லை நதியின் நீர் பயன்படுத்தப்படுகிறது.கோயில் குறித்த தகவல்கள் சின்னமனூர் அரிகேசரி நல்லூர் தல புராணத்தில் பதினான்காம் படலத்தில் இடம் பெற்றிருக்கிறது. கோயில் கோபுரத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளான மகாத்மா காந்தி, கஸ்தூரிபா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரது உருவச் சிலைகள் கோபுரத்தில் இடம் பெற்றுள்ளன என்பது போன்ற பற்பல சிறப்புகள் ஆலயம் வீரபாண்டி கௌமாரியம்மன்.


அன்றைய ‘அளநாடு’ என்று அழைக்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதியே இன்றைய வீரபாண்டி ஆகும். ஆதிநாளில் ஒரு அசுரனை வெல்வதற்காக உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரியம்மன் தவம் இருந்தார். இன்று கோவில் கொண்டிருக்கும் இடம் முன்பு அடர்ந்த காடாக இருந்தது. அங்கே தவமிருந்த கௌமாரியைக் கண்டு ஒரு அசுரன் தன் கைவாளை விட்டு விட்டு சப்தமில்லாமல் தூக்கிச் செல்ல முயன்றான்.

இதனை அறிந்த தேவி பக்கத்தில் இருந்த அருகம்புல்லை எடுத்து அசுரன் மீது வீச அப்புல்லே முக்கழுப்படை என உருவெடுத்து அவனை இரு கூறாய் பிளந்ததாம். அவ்வமயம் தேவர்கள் மலர் தூவி கௌமாரியைத் தெய்வமாக்கியதாக ஸ்தல வரலாறு உள்ளது.


வீரபாண்டி மன்னன் மதுரையில் ஆட்சி செய்த போது ஊழ்வினையால் தனது இரண்டு கண்களின் ஒளியை இழக்க நேரிட்டது. கடவுளின் அருளை வேண்டினான். இறைவன் அவன் கனவில் தோன்றி இன்றைய வீரபாண்டி தலம் இருக்கும் இடத்தினை சுட்டிக்காட்டி, வைகைக்கரை ஓரமாகச் சென்று நிம்பா ஆரணியத்தில் உமாதேவி அம்சம் பெற்ற ஸ்ரீ கௌமாரியை வணங்கச் சொல்கிறார். மன்னன் கோவிலுக்கு சென்று அவள் தாழ் வணங்க கண் ஒளி பெற்றதாக வரலாறு கூறுகிறது.





சப்த கன்னியரில் ஒருவர்

இக்கோவிலில் அம்மன் கன்னி தெய்வமாகக் காட்சி அளிக்கிறார். கௌமாரி என்பது சப்த கன்னி தெய்வங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கண்நோய் கண்டவர், அம்மை வந்தவர்கள் அம்மனைத் தூய உள்ளத்துடன் வழங்கி, தீர்த்தம் பெற்றுச்சென்றால் தீராத நோயும் தீர்ந்து விடுகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். ஸ்தலவிருட்சமாக வேப்பமரம் உள்ளது. திருக்கோவில் முன்பு கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது.

இதுவே காவல் தெய்வமாக உள்ளது. காவல் தெய்வத்தை அடுத்துள்ள முன் மண்டபத்தை கடந்து பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கம்பத்தடி மண்டபம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தடி மண்டபத்தில் தான் சித்திரை திருவிழாவிற்காக கம்பம் நடப்படுகிறது. கம்பத்தடி மண்டபத்தை கடந்து சென்றால் மகா மண்டபம் உள்ளது. இந்த மகா மண்டபத்தினை கடந்து முன் செல்லும் போது கருவறையில் நமக்கு அன்னை கௌமாரி கன்னி தெய்வமாக சுயம்புவாக காட்சி தருகிறார்.




பிரகாரத்தைச் சுற்றி வரும் பொழுது தெற்கே விநாயகர், கன்னிமார் தெய்வமும், வடக்கே நவக்கிரக மண்டபமும் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேரளத்தில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் திருவிழாவிற்கு வருகை தருகின்றனர். அம்மனுக்கு முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து நீர் எடுத்து வந்து கோவில் வளாகத்தில் திருவிழாவிற்காக நிறுவப்பட்டுள்ள முக்கொம்பில் பக்தர்கள் நீர் ஊற்றுகின்றனர்.

பெரியாறு ஆற்றில் குளித்து விட்டு பக்தர்கள் கையில் அக்கினிச் சட்டி ஏந்தி அம்மனுக்கு நன்றி கடன் செலுத்துகின்றனர். மேலும் ஆயிரம் கண் பானை சுமர்ந்து வருதல், மாவிளக்கு படைத்தல் என இப்படியும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.


தினம் ஒரு பட்டு

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 22வது நாள் 8 நாட்கள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகிறது. இதில் கொடியேற்றம் நடந்த நாள் முதல் 21நாட்கள் அம்மன் விரதம் இருப்பார். 21நாட்களும் அம்மனுக்கு மாவு பூஜை மட்டுமே நடைபெறும். நெய்வேத்தியமாக காப்பு அரிசி மட்டும் படைக்கப்படும்.
கொடியேற்ற நாள் முதல் திருவிழா முடியும் வரை கொடி கம்பமாக நடப்படும் அத்தி மரத்தாலான முக்கொம்புக்கு மண் கலயத்தில் முல்லை பெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுவது முக்கிய ஐதிகமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த அத்திமர முக்கொம்பையே அம்மன் சிவனாக பூஜிக்கிறாள்.




அத்திமரக்கம்பம் நடப்பெற்றதிலிருந்து திருவிழா முக்கிய நாட்கள் தொடங்கும் வரை உள்ள 21நாட்கள் அத்திமர முக்கொம்பிற்கே மாவு பூஜை நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். சித்திரை திருவிழா நடைபெறும் எட்டு நாட்களிலும் சன்னதி இரவு, பகல் என 24 மணிநேரமும் திறக்கப்பட்டிருக்கும் திருவிழாவில் தினமும் அம்மன் ஒரு பட்டு உடுத்தி பக்தர்களின் மனதைக் குளிரச் செய்கிறார்.






சித்திரைத் திருவிழா

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் போது மட்டும் 24 மணி நேரமும் கோயிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்மனிடம் நேர்த்திக் கடனாக வேண்டிக் கொண்டவர்கள் அக்கினிச் சட்டி எடுத்து காணிக்கை செலுத்துகின்றனர். சிலர் நாக்கில் அலகு குத்துதல் எனும் சிறிய வேலைக் குத்திக் கொண்டு அக்கினிச் சட்டி எடுக்கின்றனர். சிலர் ஆயிரம் கண் பானை எடுத்து காணிக்கையாகச் செலுத்துகின்றனர். சிலர் உடல் முழுவதும் முல்லை ஆற்றின் கரையில் உள்ள சேற்றைப் பூசிக் கொண்டு கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்கின்றனர். சித்திரைத் திருவிழாவின் போது அனைத்துப் பக்தர்களும் முல்லை ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துச் சென்று அம்மன் கோயிலில் இருக்கும் முக்கொம்புவிற்கு ஊற்றிவிட்டு அதன்பிறகு அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கோயிலுக்கு நேர்த்திக் கடனாக ஆடு, கோழி போன்றவை பலியிட்டு அசைவ உணவு அன்னதானம் செய்யும் வழக்கம் கடைப்பிடிக்கப் படுகிறது. (பொதுவாக மாரியம்மன் கோயில்களில் ஆடு, கோழி பலியிடப்படுவதில்லை என்றாலும் இந்த அம்மனை அசைவ உணவு உண்பவர்கள்தான் அதிகமாக வணங்கி வருகின்றனர் என்பதால் இந்த வழக்கம் காவல் தெய்வமாக இருக்கும் கருப்பசாமியின் பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் பலரும் மாரியம்மனுக்குத்தான் பலியிடும் வழக்கத்தை நேர்த்திக்கடனாக செய்து வருகின்றனர்.)

சித்திரைத் திருவிழாவின் போது அம்மன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், காமதேனு வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் போன்றவற்றில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமையன்று பூவால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஊர்வலமாகக் கொண்டு வரப்படுகிறார். பூப்பல்லக்கில் நகர உலா வரும் அம்மனைக் கண்டு தரிசிக்கவும், அம்மன் அருள் பெறவும் அதிக அளவில் மக்கள் வருகின்றனர்.

சித்திரைத் திருவிழாவின் போது பொழுது போக்கிற்காக ராட்டினங்கள், சர்க்கஸ் மற்றும் பல வேடிக்கை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை 24 மணி நேரமும் நடந்து கொண்டிருக்கிறது. கோயிலுக்கு வரும் இந்தப் பகுதி மக்கள் வாங்கிச் செல்வதற்காக குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், ஆடை அணிகலன்கள், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் என்று பல வகையான வணிகக் கடைகள் தற்காலிகமாக அமைக்கப்படுகின்றன.


பொழுதுபோக்கு அம்சம்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா என்றாலே பக்திக்கு எவ்வளவு பிரசித்தி பெற்றதோ அதே அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் பிரசித்தி பெற்றது. திருவிழாவின் போது கோவில் அருகில் உள்ள திடலில் அமைக்கப்படும் ராட்டினங்களும், கலை நிகழ்ச்சிகளும், அலங்கார பொருட்கள் விற்பனை நிலையங்களும் பக்தர்களை வெகுவாக கவரும். குறிப்பாக ராட்டினங்கள் அனைத்தும் சிறுவர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது
கோடை விடுமுறை கொண்டாட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இந்த ராட்டி னமும், கலை நிகழ்ச்சிகளும் நல்லதொரு பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்து வருகிறது.


முல்லை ஆறு 

தீச்சட்டி பிரார்த்தனை 

முளைப்பாரி 


தாயே சரணம் 


முல்லையாறு மேம்பாலம் 


முல்லையாற்றின் அழகு 


ஜோராக பஞ்சு மிட்டாய் விற்பனை 


புல்லாங்குழல் விற்பனை 




தேர் 


 பயண வசதி

தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வீரபாண்டிக்கு இந்த வழியே செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்கின்றன.

இனிமேல் தொடரும் பதிவுகளில் நம்முடைய தரிசனம் அனுபவத்தை இணைத்து காணலாம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

 தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

Friday, May 6, 2022

அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா?

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமானின் அறிவுரையை மீண்டும் படிக்க உள்ளோம். அதற்கு முன்பாக உங்களோடு சில வார்த்தைகள் பேச விரும்புகின்றோம். வழக்கம் போல் மே மாதத்திற்கான நம் தளத்தின் சேவைகளுக்கு சிறு தொகை காணிக்கையாக செலுத்தி உள்ளோம். குருவருளால் பல சேவைகள் தொடர்ந்து வருகின்றது.இது தவிர மாதந்தோறும் நமக்கு கிடைக்கும் பொருளுதவி கொண்டு மேலும் பல கோயில்களுக்கு நம்மால் இயன்ற சேவைகள், மருத்துவ உதவி, ஞான தானமாக திருவருள் பயணம் இதழ் சந்தா, TUT தளத்தின் பதிவுகள்  என இன்னும் பல... அனைத்தும் நீங்கள் தருகின்ற பொருளுதவியாலும், அருளுதவியாலும் தொடர்ந்து செய்து வருகின்றோம். இன்னும் பற்பல சேவைகளை நாம் குருவருளால் செய்ய வேண்டியுள்ளது. நமக்கு உற்ற துணையாகவும் உறுதுணையாகவும் உள்ள தங்கள் அனைவருக்கும் நன்றி கூறி இங்கே மகிழ்ச்சி அடைகின்றோம். சரி இனி பதிவின் உள்ளே நுழைவோம்.

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." 


வினைப் பதிவால் தானே இந்த தேகம் கொண்டுள்ளோம். ஆனால் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் கர்ம வினைக்கேற்ப பாவ புண்ணியங்களை சேர்த்து கொண்டு வருகின்றோம். புண்ணியத்திலும் அருட் புண்ணியம் என்றும் பொருட் புண்ணியம் என்று உள்ளது. பாவத்திலும் நேர்முக பாவம், மறைமுக பாவம் என்றும் உள்ளது. என்ன தான் நாம் பல வழிகளில் நம் அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்தாலும் இந்த கர்மா கோட்பாடு நமக்கு புரியாத புதிராகவே உள்ளது. இது புரியாத புதிராக இருப்பதால் தான் வாழ்வின் சுவாரஸ்யம் அடங்கி உள்ளது. 








காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.

ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.

மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார். மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.

தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.

ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.

‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.

அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.

பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.

ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.



தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன!

புதிதாய் ஈட்டும் இதுவே ஆகாம்ய கர்மம். இவை மலைபோல் அடுத்த பிறவியில் சஞ்சித கர்மாவாகத் தலையில் வந்து விழும். அப்போது இன்னல்களை அனுபவிக்க நேரும்போது எல்லாம் நம் பிராரப்தம் என்று புலம்பிக்கொள்ளும்படி ஆகிவிடுகிறது.

இப்போது மீண்டும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் கூறும் அறிவுரையை படித்து பாருங்கள். ஒரு முறை படித்தால் புரியாது. மீண்டும் மீண்டும் படித்து உள்வாங்கி ஒவ்வொரு செயலையும் விழிப்புணர்வுடன் செய்வதற்கு குருவிடம் வேண்டி நிற்கின்றோம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை! - https://tut-temples.blogspot.com/2021/12/1052.html

சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 அந்தநாள் >>இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர் - 12.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/12122021.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

 ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

Tuesday, May 3, 2022

ஓம் ஸ்ரீ பேப்பர் சுவாமிகள் 66 ஆவது குரு பூஜை - 05.05.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்

நம் தளத்தில் அவ்வப்போது குருபூஜை தரிசனங்கள் கண்டு வருகின்றோம்.நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை, பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022,  குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022, ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை,  ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 , அருள்மிகு  ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104வது மஹா  குரு பூஜை அழைப்பிதழ்,  மகான் ஸ்ரீமத் தோபா சுவாமிகளின் 172-ம் ஆண்டு குருபூஜை - 01.04.2022  அழைப்பிதழ்,  சுவாமி சரவணானந்தா அவர்களின் 16ம் ஆண்டு மகா குருபூஜை விழா அழைப்பிதழ் - 10.04.2022 ,  ஓம் அருள்மிகு வீரராகவர் சுவாமி - 60 ஆம் ஆண்டு குரு பூஜை விழா - 14.04.2022   என சித்தர்களின் தரிசனம் நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இன்று நாம் நாளை நடைபெற உள்ள ஓம் ஸ்ரீ பேப்பர் சுவாமிகள் 66 ஆவது குரு பூஜை பற்றி இங்கே அறிய உள்ளோம்.


திருக்குற்றாலத்தை அடுத்த இலஞ்சி என்னும் ஊரில் பேப்பர்  சுவாமிகள் தமது அருளாட்சியைத் தொடங்கினார்கள். சுவாமிகள் எப்பொழுதும் தமது கைகளில் பேப்பர் செய்தித்தாள்களை வைத்திருப்பது வழக்கம். கீழே கிழிந்து கிடக்கும் தாள்களை எடுத்து அவற்றை ஒன்றாகச் சேர்த்து வைத்துக்கொள்வார். பின்னர் அவற்றைப் பார்த்து வாசிப்பார். வாசித்தவை மறுநாள் நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக வரும். இவற்றைக் கண்ட மக்கள் வியப்படைவார்கள். இதனாலேயே சுவாமிகளை மக்கள் பேப்பர் சுவாமிகள் என்று பெயரிட்டழைத்தனர்.

இலஞ்சியிலுள்ள பெரியவர்கள் சுவாமிகளைப் பற்றிக்கூறும் போது, "சுவாமிகள் சுமார் ஐந்தரை அடி உயரம் இருப்பார். ஜிப்பா சட்டையும் வேஷ்டியும் அணிவது வழக்கம். இரண்டு கைகளிலும் காப்பு அணிந்திருப்பார். கால்களில் பூட்ஸ் அணிந்திருப்பார்" என்று கூறுகின்றனர்.

 சுவாமிகள் இலஞ்சியில் அருளாட்சி செய்த காலத்தில் ஓரிடத்தில் நிலையாக இருந்தது இல்லை. சுவாமிகள் எங்கிருப்பார், எப்பொழுது வருவார், போவார் என்று தெரியாது. இலஞ்சியில் உள்ள பெருந்தெரு பிள்ளையார் கோயில், குன்னக்குடி பிள்ளையார் கோயில், கீழ் இலஞ்சியில் உள்ள நாராயணசுவாமி கோயில் போன்ற இடங்களில் சுவாமிகள் தவமிருப்பார்கள்.

பேப்பர் சுவாமிகள் மிகுந்த அருளாற்றல் மிக்கவராக விளங்கினார்கள். சுவாமிகள் பரிபூரணமடைவதற்கு முன் இறுதிப் பத்தாண்டுகள் இளையசனேந்தல் ஜமீனில் இருந்தார்கள். ஜமீனில் மூத்த ஜமீன், இளைய ஜமீன் இருவருக்கும் ஆண் வாரிசுகள் இல்லை. ஒருமுறை சுவாமிகளை வணங்கிய இளைய ஜமீன் நரசிம்ம அப்பாசாமி, தமக்கு பிள்ளை இல்லாக்குறையை மனம் உருகச் சொல்ல... சுவாமிகள் இரண்டு கடுக்காய்களை அவரிடம் கொடுத்து உனக்கு சிம்மலக்னத்தில் இரண்டு ஆண்குழந்தைகள் பிறக்கும் பிறக்கும் என ஆசீர்வதித்தார். சொன்னபடியே குழந்தைகள் பிறந்தனர். முதல் ஆண் குழந்தைக்குப் பெரிய பேப்பர் என்றும், இரண்டாம் ஆண் குழந்தைக்கு சின்ன பேப்பர் என்றும் பெயரிட்டு ஜமீன்தாரர் மகிழ்ந்தார்.

 சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். மழையில்லா நிலையில் மழை பெய்வித்தது, சிறுவன் தவறுதலாகக் கொடுத்த நவபாஷணத்தைச் சாப்பிட்டும் உயிரோடு இருந்தது, சுவாமிகள் கேட்டும் வைத்துக்கொண்டே இல்லை என்று சொன்னதால் ஊறுகாய்ப் பானையில் புழுவாய் ஆய்ந்தது, வறுமையில் வாடிய அன்பருக்கு அருள்பாலித்தது, குத்தகைக்கு எடுத்த பட்டாமரங்களை தளிர்க்கச் செய்து காய்த்துக் குலுங்க வைத்தது, முத்துக்கோனார் என்பவரின் இறந்துபோன இரண்டு வயது மகனை உயிர்பெற்று எழச் செய்தது, ஒரே நேரத்தில் இலஞ்சியிலும், இளையசனேந்தம் அரண்மனையிலும், அன்பர் ஒருவர் வீட்டிலும் காட்சி கொடுத்தது, அன்பர் ஒருவர் சிறுநீரகங்கள் பழுதடைந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலையிலிருந்ததை மாற்றிக் குணமாக்கியது போன்ற அற்புதங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

 பேப்பர் சுவாமிகள் வைத்தியத்திலும் சிறந்து விளங்கினார்கள். கீழ்இலஞ்சி இராமசாமி, திருநெல்வேலி முத்தையாபிள்ளை போன்றோர் சுவாமிகளிடம் மருத்துவம் கற்றனர். இவர்களுள் முத்தையா பிள்ளையிடம் ஜி.டி.நாயுடு, நீதிபதி பலராமையா போன்றோர் மருத்துவம் பயின்று இருக்கின்றனர்.

1946-ஆம் ஆண்டு முதல் 1950-ஆம் ஆண்டு வரை இளையரசனேந்தலில் தவத்தை மேற்கொண்ட சுவாமிகள் 1950-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு வரை மெளன தவத்தில் வீற்றிருந்தார்கள். தமிழ்நாட்டின் தென்பகுதியில் தமது ஞானப்பணி நிறைவடைந்ததை உணர்ந்த சுவாமிகள் தாம் ஜீவசமாதி ஆகப் போவதை ஜமீன் குடும்பத்தார்க்கு உணர்த்தினார்கள். 14-05-1956-ஆம் ஆண்டு சித்திரை மாதம் 31-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 01.30 மணியளவில் திருவாதிரை நட்சத்திரத்தில் பேப்பர் சுவாமிகள் பரிபூரணமடைந்தார்கள்.

சமாதி அமைக்கும் பணியை கோவில்பட்டி முக்தானந்தா சுவாமிகள் மடத்தினர் முன்னின்று நடத்தினர். சுவாமிகள் ஜீவ சமாதி ஆனது முதல் இன்று வரை ஆண்டு தோறும் சித்திரை வளர்பிறை திருவாதிரை நட்சத்திரம் அன்று பக்தர்களோடு இளையரசனேந்தல் ஜமீன்தார் குடும்பத்தினர், குரு பூஜையை சிறப்பாக நடத்தி வருகின்றனர். சுவாமியின் சீடர்கள் அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்ப கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போதும் பேப்பர் சுவாமி தனது சீடர்களையும், தன்னையும் நம்பி வருவோருக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருக்கிறார். ஜீவ சமாதி அடைந்த பிறகும் கூட இளையரசனேந்தல் ஜமீனில் பல அற்புதங்களை பேப்பர் சுவாமி செய்து வருகிறார்.




அடுத்து பேப்பர் சுவாமி நிகழ்த்திய அற்புதங்களை காண உள்ளோம்.

 இலஞ்சியில் இருந்த காலத்தில், துப்புரவுத் தொழிலாளரான கருப்பன் என்பவரின் வீட்டுக்கு தனது சீடர் ஒருவரோடு சென்றார் பேப்பர் சுவாமிகள். கருப்பன் வீட்டில் உணவு உண்ட சுவாமிகள் தனது சீடரையும் சாப்பிடச் சொன்னார். அவர் முகம் சுளிக்கவே.. ‘உனக்கு வசதி இருந்தாலும் மாதத்தில் பாதி நாள் உணவு கிடைக்காது போ' என சாபம் விட்டார். அதே போல் அவர் பிற்காலத்தில் வறுமையில் வாடியுள்ளார். எனவே சாமியிடம் வரம்வேண்டும் என வேண்டுபவர்கள், அவரிடம் சாபம் வாங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்களாம்.

பேப்பர் சுவாமிகள் பல சித்தர்களோடு தொடர்பு கொண்டவராகவே வாழ்ந்துள்ளார்.

அம்பலவாண சுவாமிகள் என்ற சிவகிரி சுவாமிகள், இலஞ்சி முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் சிவபூஜை செய்து தவம் இருந்தார். இவரை அடிக்கடி சந்தித்தார் பேப்பர் சுவாமிகள்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பேப்பர் சுவாமிகள் தவமேற்றும் போதெல்லாம் அவரை காண வந்து செல்வார் என்றும் பலர் கூறுகிறார்கள்.

பேப்பர் சுவாமிகள் தனது அருள் மேம்பட, ஒரு முறை ஒரு விஷயத்தைச் செய்தார்.

ஒரு காலகட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையே மழையின்றி வறண்டது. குற்றாலச் சாரலின் மூலமாக எப்போதுமே குளுகுளுவென காணப்படும் இலஞ்சிக்கும் அதே நிலை தான். குளங்களில் தண்ணீர் இல்லை. இதனால் விவசாயம் பொய்த்தது.

தென்றல் தவழும் புண்ணிய பூமியில் மழை இன்றி வறண்டால் விவசாயிகள் பரிதவித்தனர்.

விவசாயிகள் சுவாமியிடம் ஓடோடி வந்து, ‘சுவாமி! வயக்காட்டுல நாத்து நட்டாச்சு.. ஆனால் மழையும் இல்லை.. தண்ணியும் இல்லை. நீங்கதான் அருள் புரியனும்' என்றனர்.

சுவாமி அவர்களை மேலும் கீழுமாக பார்த்தார்.

‘மழை தண்ணி வரும்டா, பாத பூஜை நடத்தி.. ஊர்ல பட்டண பிரவேசம் சுத்தி வாங்கடா.. மழை பெய்யும்' என்றார்.

அதோடு மட்டுமல்லாமல் அவர் ஒரு பாடலையும் பாடினார். அவர் பாடிய பாடல் இதுதான்.

‘இடி இடிக்க மழை பெய்ய

இடும்பன் குளம் தத்தளிக்க

குடை பிடிச்சு வருவேன்

குடமயிலே தூங்கி டாதே..' என்று போனது அந்தப் பாடல்.

பேப்பர் சுவாமிகள் கூறியதை விவசாயிகள் ஊர் மக்களிடம் கூறினர். ஊர் கூடியது. சுவாமிக்கு பாத பூஜையும், பட்டணப் பிர வேசமும் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை பேப்பர் சுவாமி களிடம் கூறினர். மேலும் இந்தப் பூஜையை யாரை வைத்து செய்வது? என்றும் அவர்கள் கேட்டனர்.

அதற்கு பேப்பர் சுவாமி கள், ‘பங்களாக்காரனை வைத்து செய்யுங்கள்’ என்றார்.

அவர் குறிப்பிட்டது, இளையரசனேந்தல் ஜமீன் நரசிம்ம அப்பாசாமி.

ஜமீன்தாருக்கு சொந்த ஊர் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் என்றாலும், அவருக்கு சொந்தமான பல நிலபுலன்கள் இலஞ்சி பகுதியில் இருந்தது. மழை இல்லாமல் அதை நம்பியிருந்த விவசாய தொழிலாளிகளும் மிகவும் கஷ்டப்பட்டனர். எனவே மழைக்காக எதுவும் செய்ய தயார் என்ற நிலையில் ஓடோடி வந்தார் ஜமீன்தார்.

தன்னை வணங்கி நின்ற ஜமீன்தாரை மேலும் கீழுமாக பார்த்த பேப்பர் சுவாமிகள், ‘நீ.. எனக்கு பாத பூஜை செய்யப் போகிறாயா? இது லேசான வண்டி கிடையாதுடா. இந்த வண்டி முதலில் கடலூரில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் சமாதி ஆகியிருக்கு. இரண்டாவதாக கரூருக்குப் பக்கத்தில் உள்ள நெரூரில் சமாதி ஆகியிருக்கு’ என்றார்.

சித்தர்கள் பல இடங்களில் அடங்குவார்கள். மக்கள் சேவைக்காக மீண்டும் பிறவி எடுப்பார்கள். ராமதேவர் தான் பிற்காலத்தில் தேரையராக பிறந்தார். நெல்லை மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரண மலையில் தான் தேரையர் அடக்கமானார். பேப்பர் சுவாமிகளும் ஏற்கனவே இரு இடங்களில் ஜீவ சமாதி அடைந்து, மூன்றாவதாக இங்கே அவதரித்திருக்கிறார் என்பதை அறிந்து மக்கள் பலரும் வியந்து நின்றனர்.

தொடர்ந்து பேப்பர் சுவாமிகள், ‘இன்று மட்டும் நீ.. பூஜை நடத்தினால் போதாது, 21 வருடம் தொடர்ந்து பாத பூஜை நடத்தவேண்டும். முடியுமா?' எனக் கேட்டார்.

‘நடத்துகிறேன் சுவாமி' என நரசிம்ம அப்பாசாமி ஜமீன்தார் ஒத்துக்கொண்டார்.

அதன் பிறகு பட்டணப் பிரவேசத்துக்கு தயாரானார்கள்.

6.4.1936 அன்று சித்ரா பவுர்ணமி.

விவசாயிகள் ஒன்று கூடினர். பேப்பர் சுவாமிகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

இளையரசனேந்தல் ஜமீன்தார் சுவாமிக்கு பாத பூஜையை நடத்தினார்.

பின்னர் சுவாமிகளை அலங்கரிக்கப்பட்ட காரில் அமரச் செய்து இலஞ்சி ஊரைச்சுற்றி பட்டணப்பிரவேசம் கூட்டி வந்தனர்.

வானம் எப்போதும் போலவே காணப்பட்டது. கரும்மேகம் கூடவில்லை. மழை வருமா?. பலருக்கு சந்தேகம் எழுந்து விட்டது.

ஆனால் விவசாயிகளுக்கு சித்தர் பெரும் மகனார் மீது அளவில்லாத பக்தியும், நம்பிக்கையும் இருந்தது. நிச்சயமாக மழை வரும் என்ற நம்பிக்கையிலேயே ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தனர்.

ஊர்வலம் பெருந்தெருவில் இருந்து கீழ் திசையில், மேற்கு பார்த்த பிள்ளையார் கோவில் அருகே வந்தது. அதன் பின் அங்கிருந்து ஜமீன்தாரின் பங்களாவின் தலைவாசலுக்குச் சென்றது.

திடீரென மிகப்பெரும் ஓசையுடன் கூடிய இடியோடும், மின்னலோடும் பலத்த மழை இடைவிடாது பெய்தது. மழை என்றால் மழை.. அப்படியொரு மழை. அதுவரை அப்படியொரு மழையை யாரும் பார்த்திருக்கவே இயலாது. ஒவ்வொரு துளியும் பனிக்கட்டி போல வெளியே நின்றவர்கள் மீது விழுந்தது. பட்டணப் பிரவேசத்தோடு வந்தவர்கள் அருகிலுள்ள வீடுகளில் ஒதுங்கிக் கொண்டார்கள்.

சுவாமி தன்னோடு வந்தவர்களை அழைத்தார். ‘இங்கே வாங்கடா.. அன்னைக்கே சொன்னேனே.. நினைவு இருக்கிறதா? இடி இடிக்க மழை பெய்ய... அந்த பாடலை போல மழை பெய்ததா. நாளைக்கு காலையிலேயே போய் பாருடா.. குளம் எல்லாம் எப்படி நிறைஞ்சு இருக்குன்னு சொல்லுங்க' என்றார்.

மறுநாள் காலையில் இலஞ்சியை சுற்றியுள்ள அனைத்து குளங்களும் தண்ணீரால் தளும்பிக் காணப்பட்டன. இதனால் இலஞ்சி மக்களுக்கு பேப்பர் சுவாமிகள் மீது அளவற்ற அன்பும் பக்தியும் ஏற்பட்டது.

இளையரசனேந்தலின் ஜமீனில் மூத்தவர் சங்கர நாராயண அப்பாசாமி ஆவார். இளையவர் நரசிம்ம அப்பாசாமி. இருவருக்குமே பெண் குழந்தைகள் இருந்தனர். ஆண் வாரிசுகள் இல்லை.

இலஞ்சியில் சுவாமியை நேரில் பார்த்து வணங்கினார்கள் ஜமீன்தார்கள்.

அவர்களை எதிர்பார்த்தது போலவே சுவாமிகள் சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தார்.


ஆண் வாரிசு இல்லாத கவலையில், பேப்பர் சுவாமியைப் பார்ப்பதற்காக ஜமீன்தார் இருவரும் சென்றிருந்தனர். அவர்களைப் பார்த்த பேப்பர் சுவாமி, ‘என்னப்பா... ஏதோ எதிர்பார்த்து வந்திருக்கிற போல' என்று கேட்டார்.

மூத்த ஜமீன்தார் கண்கலங்க நின்றார். அவரால் பேச முடியவில்லை. நா தழுதழுத்தது.

 ‘சுவாமி அண்ணனுக்கு ஆண் வாரிசு இல்லை. எனக்கும் ஆண் வாரிசு இல்லை. ஜமீன் அரண்மனையில் ஆண் வாரிசு இல்லன்னா, எவ்வளவு கஷ்டமுன்னு உங்களுக்கு தெரியும்...' இளையவர்தான் பேசினார்.

சிரித்தார் சுவாமி..

இரண்டு கடுக்காய்களை எடுத்தார். ஜமீன்தார் கைகளில் கொடுத்தார். ‘இங்க பாருப்பா... உனக்கு சிம்ம லக்னத்தில இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கும்..' என்றார்.

சந்தோஷமாக நரசிம்ம அப்பாசாமி அதை கையில் பெற்றுக்கொண்டார்.

‘சுவாமி... அண்ணனுக்கு' என்று நீட்டி இழுத்தார்.

சுவாமி சிரித்தார்.. ‘உனக்குத் தான் இரண்டு ஆண் குழந்தை கிடைக்கும் டா...' என்றார்.

நரசிம்ம அப்பாசாமிக்கு பெண் குழந்தை பிறந்து, சுமார் 16 வருடங்கள் கடந்து விட்டது. பிறகு எப்படி குழந்தை பிறக்கும் என்று பலரும் கேள்வி கேட்டனர்.

ஆனால் ஜமீன்தார் மட்டும் நம்பிக்கையோடு இருந்தார்.

காலங்கள் கடந்தன. சுவாமிகள் திருவாக்கின் படியே இளையரசேனந்தல் ஜமீன்தார் நரசிம்ம அப்பாசாமிக்கு சிம்ம லக்னத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார் ஜமீன்தார். தனது குழந்தைகளுக்கு பெரிய பேப்பர், சின்ன பேப்பர் என பெயர் வைத்தார். அதன் பிறகு சுவாமிகளுக்கும் ஜமீன்தார்களுக்கும் மிகவும் நெருக்கம் ஏற்பட்டது.

1941-ம் ஆண்டு.

இளையரசனேந்தல் ஜமீன்தார் தனது மகள் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக பேப்பர் சுவாமியை அழைத்துவர காரில் இலஞ்சிக்கு வந்தார்.

பேப்பர் சுவாமி இலஞ்சி ஐ.கே.எஸ். பிள்ளை என்பவர் வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தார்.

ஜமீன்தார், ‘சுவாமி! எனது மகள் திருமணத்தை நடத்தி வைக்க நீங்கள் தான் வரவேண்டும்' என்றார்.

சுவாமி சிரித்துக்கொண்டே ‘சரி... நாளைக்கு காலையில வாரேன். நீ... குன்னக்குடி பிள்ளையார் கோவிலுக்கு வா. நான் அங்கு உனக்காகக் காத்திருக்கேன்' என்றார்.

ஜமீன்தாருக்கு சந்தோஷம். ஐ.கே.எஸ்.பிள்ளைக்கோ வருத்தம். ‘நமது வீட்டு விசேஷத்தை விட்டு விட்டு சுவாமி கிளம்புவேன் என்கிறாரே..'

இரண்டு பேர் முகத்தினையும் பேப்பர் சுவாமி கவனித்தார்.

மறுநாள் காருடன் வந்தார் ஜமீன்தார். அங்கிருந்த சுவாமியை காரில் ஏற்றிக்கொண்டு இளையரசனேந்தல் நோக்கி விரைந்தார்.

இதைக் கேள்விப்பட்ட ஐ.கே.எஸ்.பிள்ளை. ‘தனக்கு தெரியாமல் தனது வீட்டை விட்டு சுவாமி வெளியே சென்று இருக்க முடியாதே. எப்படி நம் வீட்டை விட்டு சுவாமி கிளம்பினார்’ என பலவித யோசனையுடன் தனது வீட்டில் பேப்பர் சுவாமி தங்கி இருந்த அறைக்கு சென்றார்.

அங்கே சுவாமி பூஜை செய்ய ஆயத்தமாக அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்.

அதைப் பார்த்து அதிர்ந்து விட்டார் ஐ.கே.எஸ்.பிள்ளை.

‘அப்படியென்றால் ஜமீன்தார் அழைத்து கொண்டு சென்றது யாரை?’ என்று குழம்பிப் போனார்.

குன்னக்குடி பிள்ளையார் கோவிலுக்கு ஒருவரை அனுப்பி, ஜமீன்தாருடன் சுவாமி சென்றாரா? என்று விசாரித்து வரச் சொன்னார்.

அந்த நபர் அங்கு சென்றுவிட்டு திரும்பி வந்து ‘சுவாமி எங்கேயும் செல்லவில்லை. குன்னக்குடி பிள்ளையார் கோவிலில் பூஜை செய்து கொண்டிருக்கிறார்' என்றார்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறதே என்று நினைத்த பிள்ளை, வீட்டிற்குள் நுழைந்தபோது, ‘என்ன பிள்ளை... அதிர்ச்சியா இருக்கா?' என சிரித்துக்கொண்டே கேட்டார், பேப்பர் சுவாமி.

அந்த நேரத்தில் பிள்ளை வீட்டில் இருந்த போன் அலறியது.

அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே போனை எடுத்தார் பிள்ளை.

‘பிள்ளை மன்னிச்சிடுங்க! உங்க வீட்டு நிகழ்ச்சிக்கு இடையிலேயே பேப்பர் சுவாமியை எனது மகள் திருமணத்துக்கு கூட்டிட்டு வந்துட்டேன். மன்னிச்சுடுங்க..' என்றார் ஜமீன்தார்.

‘சுவாமி.. இளையரசனேந்தலிலுமா? அப்படியென்றால் மூன்று இடத்தில் சுவாமியா?’ என்று அதிர்ந்து போய் விட்டார் பிள்ளை.

அந்த காலத்தில் டிரங்கால் புக் செய்து பேசவேண்டும். அல்லது ஏதாவது டாக்ஸி புக் செய்து அதன் மூலம் சென்று தான் மற்ற ஊரைப்பற்றி அறியமுடியும். இலஞ்சியில் இருந்து இளையரசனேந்தல் பல கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

செய்தி அலைவரிசை கூட ஓரிடத்தில் இருந்து மறு இடத்துக்கு செல்ல நேரம் பிடிக்கும். அப்படியிருக்கும் போது ஒரே நேரத்தில் மூன்று இடத்தில் இருந்த சித்தர் மிகவும் பெருமைக்குரியவர்தானே. இந்த செய்தி ஊரெங்கும் பரவியது. பக்கத்தில் உள்ள கிராம மக்கள் மட்டுல்லாமல் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமே அதிசயமாய் பேசியது. அந்தக் காலத்தில் சுதேச மித்திரன் பத்திரிகையில் இந்த நிகழ்வை செய்தியாக வெளியிட்டு இருந்தார்கள்.

1946-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேப்பர் சுவாமிகளை இளையரசனேந்தல் அரண்மனைக்கே கூட்டி வந்து விட்டனர் ஜமீன்தார்கள். அங்கேயும் அவரது அற்புத செயல்கள் தொடர்ந்தது.

அரண்மனையில் பணியாற்றியவர் முத்தையா பிள்ளை மகன் வையாபுரி பிள்ளை. இவர் 1950-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதியிருந்தார்.

அவருடைய தேர்வை பலநாளுக்கு முன்பே கணித்தார் பேப்பர் சுவாமி.

எப்படி?

பேப்பர் சுவாமியிடம் முத்தையா பிள்ளை ‘என் மகன் தேர்வில் வெற்றி பெற்று விடுவானா?' என்று கேட்டார்.

உடனே பேப்பர் சுவாமி, அங்கே கிடந்த ஒரு பழைய பேப்பரை எடுத்துக் காட்டினார். அதில் 1949-ல் நடந்த ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு வெளியாகியிருந்தது. அந்த பேப்பரில் சுவாமி குறிப்பிட்டு காட்டிய இடத்தில் வையாபுரி பிள்ளையின் பதிவெண் இருந்தது.

முத்தையா பிள்ளைக்கு கொஞ்சம் சந்தேகம் தான். இது 1949-ம் ஆண்டு பேப்பர் அல்லவா?. ‘இந்த பதிவெண்ணில் அந்த வருடம் தேர்வானவர் அல்லவா இருப்பார்’ என்று நினைத்தார். தேர்வு முடிவு வந்த போது, அவர் காட்டிய படியே பதிவெண், அதே பக்கத்தில் அதே பாராவில் வெளியாகி இருந்தது.

ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார் முத்தையா பிள்ளை. அதன் பின் பேப்பர் சுவாமியின் தீவிர பக்தராக மாறி விட்டனர், தந்தையும் மகனும்.

இலஞ்சியில் ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தெருவில் முத்துக்கோனார் என்பவர் வசித்து வந்தார். சுப்பையா என்ற அவரது இரண்டு வயது மகன் இறந்து விட்டதில் வீடும் ஊரும் சோகத்தில் மூழ்கியது. இறுதிச்சடங்கு செய்வதற்கான அனைத்து ஏற்பாடும் நடந்து வந்தன. அவ்வேளையில் அங்கு வந்த பேப்பர் சுவாமி, முத்து கோனாரிடம் ‘எனக்கு கஞ்சி தாப்பா’ என்றார்.

சோகத்தினை அடக்கிக்கொண்டு அவருக்கு கஞ்சி கொடுத்தார். அப்போது மகனை இழந்த வருத்தத்தில் அழுது துடித்தார்.

உடனே சுவாமி ‘என்னப்பா.. மகன் இறந்து விட்டான் என்று அழுகிறாயா? இந்த உருண்டை சோற்றை அவன் வாயில் தினி. உயிர் வந்து விடும். அவனுக்கு நூறு வயதுக்கு மேல் ஒரு வாய் சோறு கொடுக்கும் போது தான் உயிர் போகும்’ என்றார்.

அதுபோலவே மகன் வாயில் சோறு உருண்டையை வைத்ததும், அந்தச் சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். தற்போது 100 வயதை தாண்டிய நிலையில் இருக்கும் சுப்பையா, தனது வீட்டில் தினமும் பேப்பர் சுவாமியின் படத்தை வைத்து பூஜை செய்து வருகிறார். ஓராண்டுக்கு முன்னர் இவர் சித்தி அடைந்ததாக கூறப்படுகின்றது.


சாதாரண தோற்றத்தில் பேப்பர் சுவாமி, இலஞ்சியில் பேப்பர் சுவாமி தவம் செய்த விநாயகர் கோவில்


 ஆண்டுதோறும் சித்திரை வளர்பிறை திருவாதிரை நட்சத்திரத்தில் குருபூஜையை  இளையரசனேந்தல்  ஜமீன் குடும்பத்தினர் சிறப்பாக நடத்திவருகின்றனர். கோயில்பட்டியிலிருந்து திருவேங்கடம் இராஜபாளையம் செல்லும் வழியில் 10 கி.மீ. தூரத்தில் இளையசனேந்தல் என்னும் ஊரில் உள்ள ஜமீன் அரண்மனையின் ஒரு பகுதியில் பேப்பர் சுவாமிகளின் அதிஷ்டானக் கோயில் உள்ளது. அழகிய மண்டபத்தின் நடுவில் சமாதி மேடை உள்ளது. கிழக்குப் பார்த்த சன்னதியாக சிவலிங்க பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.    



ஓம் ஸ்ரீ பேப்பர் சுவாமிகள் திருவடிகள் போற்றி! போற்றி !!

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஓம் அருள்மிகு வீரராகவர் சுவாமி - 60 ஆம் ஆண்டு குரு பூஜை விழா - 14.04.2022 - https://tut-temples.blogspot.com/2022/04/60-14042022.html

 சுவாமி சரவணானந்தா அவர்களின் 16ம் ஆண்டு மகா குருபூஜை விழா அழைப்பிதழ் - 10.04.2022 - https://tut-temples.blogspot.com/2022/04/16-10042022.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - அருள்மிகு ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104 ஆம் ஆண்டு குருபூஜை - 27.03.2022  - https://tut-temples.blogspot.com/2022/03/104-27032022.html

ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/68-27032022.html

ஓம் ஸ்ரீ குருவே சரணம்! - ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை - https://tut-temples.blogspot.com/2022/03/99.html

குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/8-13032022.html

 குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

 பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/11032022.html

 மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 09.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/134-09032022.html

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/188-27022022.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html