Thursday, March 18, 2021
ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி ஆலய கலசவிழா - 07.04.2021
Thursday, March 11, 2021
மாசி அமாவாசை லோக ஷேம தீப வழிபாடு அழைப்பிதழ் - 12.3.2021
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அனைவரும் சிவராத்திரி வழிபாடு நிறைவு செய்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். நமக்கு ஆன்மிகம் நோக்கிய பாதையை சிவராத்திரி வழிபாடு தான் உருவாக்கியது. நேற்றைய சிவராத்திரி தரிசனத்தில் 9 திருக்கோயில்கள் தரிசனம் செய்து நம் தளம் சார்பில் தூய இலுப்பெண்ணை, குங்கிலிய பத்தி, தூய சூடம் என கொடுத்தோம். இது போன்ற சேவைகளுக்கு தோள் கொடுத்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறி மகிழ்கின்றோம்.
நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில் அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.
இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. 2018 ம் ஆண்டு ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். குருநாதரின் அருளின்படி இந்த மாசி மாத முதல் மோட்ச தீப வழிபாட்டை லோக ஷேம தீப வழிபாடாக மேற்கொள்ள இருக்கின்றோம். நாம் ஏற்கனவே பலமுறை தீப வழிபாடு பற்றி பேசி இருக்கின்றோம். தீப வழிபாடு மிக மிக சக்தி வாய்ந்த வழிபாடு ஆகும்.
நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர பரிகாரத்திற்கு சொல்லக்கூடிய தீப வழிபாடுகளுக்கு அதீத சக்தி உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை வெறும் தீபம் என்று நினைத்து மட்டும் ஏற்றாமல் உங்கள் கஷ்டத்தை நெருப்பில் போட்டு பொசுக்குவது போல நினைத்து மனதில் உறுதியோடு தீபத்தை ஒளிர விட வேண்டும். இப்படி ஒரு மன உறுதியோடு தீப வழிபாட்டை செய்தால் மட்டுமே பரிகார தீபம் கைமேல் பலனை கொடுக்கும்.
நம்மில் பெரும்பான்மையினருக்கு பெரிய கஷ்டம் என்றால், அது இன்றைய சூழ்நிலையில் கடன் கஷ்டமாகத்தான் இருக்கின்றது அல்லவா? இந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. எந்த பரிகாரத்தை செய்தும் பலனில்லை என்று சிந்திப்பவர்கள் கூட, தொடர்ந்து தீபத்தை ஏற்றி பாருங்கள். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.ஜெயம் உங்கள் பக்கம், அதற்கான நல்ல நேரமும் காலமும் உங்களுக்கு கை கொடுப்பதற்காகத் தான் இந்த தீப வழிபாடு. இனி மாசி அமாவாசை லோக ஷேம தீப வழிபாடு அழைப்பிதழ் - 12.3.2021 இங்கே பகிர விரும்புகின்றோம்.
குடும்ப ஒற்றுமை ஓங்கும்
புத்திரதோஷம் நீங்கும்
சகல நன்மைகளும்,ஐஸ்வர்யமும் பெருகும்.
அதே போல், விளக்கேற்றும் திசை, எண்ணையின் பலன்கள் என்று பல செய்திகள் உண்டு, சாதாரண தீபம் தானே என்று எண்ணாதீர்கள். தீபங்கள் ஏற்றும் போது, அந்த இடத்தில உள்ள இருள் நீங்கி, ஒளி பரவுகின்றது. அதே போல் தீபம் ஏற்ற ஏற்ற நம் அக இருள் நீங்கி , அக ஒளி பெருகும். நம்மைப் பொறுத்த வரையில் முதலில் அகத்தியர் ஆயில்ய வழிபாட்டில் அபிஷேகத்தில் மட்டும் கவனம் செலுத்தினோம். பின்னர் குருவின் வழிகாட்டல் படி, தற்போது ஆயில்ய பூசை ஆரம்பிக்கும் முன்னர், அஷ்ட திக்கு விளக்குகள் ஏற்றி தான் வழிபாட்டை ஆரம்பிக்கின்றோம்.மேலும் தீப வழிபாடு என்பது "பஞ்ச பூத" வழிபாட்டின் தத்துவமாகும். தீப வழிபாட்டில் நாம் நமக்காக வேண்டுவதை விட, மற்றவர்களுக்காக வேண்டுவது சால சிறந்தது. அதுவும் மோட்ச தீப வழிபாடு இன்னும் பிரசித்தம் பெற்றது.
தீபமேற்றிய உடன் நமக்கு என்ன தோன்றுகின்றது. மகிழ்ச்சி தானே..
தீபமேற்றுவதன் தாத்பரியமே நாம் மகிழ்வோடு வாழ்தல் என்பதற்காகத் தான். தீபமேற்றியவுடன் அந்த இடத்தில் உள்ள இருள் விலகி, ஒளி பெறுகின்றது. இது புறத்தில் நடைபெறும் நிகழ்வு. நீங்கள் இது போன்று தீபமேற்றி பிரார்த்தனை செய்ய செய்ய, அந்த புற நிகழ்வு, உங்கள் அகத்தில் நிகழ்வும். மாசற்ற ஜோதி மனதில் ஒளிர்ந்து, மலர்ந்த மலரை நாம் நம்முள் உணரலாம். நாம் ஒவ்வொருவரும் எத்துணையோ விதமான துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். சொல்லொணா துயரில் இருப்பவர்கள் தினமும் அகல் விளக்கில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி சிறிய அளவில் பிரார்த்தனை செய்து வாருங்கள். சுமார் மூன்று மாதங்களுக்கு உள்ளாக நீங்கள் மாற்றம் பெறுவது உறுதி.
இந்த உலகம் எதனால் இயங்குகின்றது? சூரியனால் தான். சூரியன் இல்லையென்றால் நம் கதி அதோகதி தான். ஆதியில் நம் வழிபாடாக இருந்ததும் சூரிய வழிபாடு தான். ஞாயிற்றுக் கிழமை வாரத்தின் முதல் நாள், சூரியனை வழிபட்டு நம் நாட்களை தொடங்க வேண்டிய நாள். ஆனால் மாறாக அன்று தான் நாம் கேளிக்கை, கூத்து என்று திண்டாடி வருகின்றோம். ஆதி வழிபாட்டை மறந்து விட்டோம். தற்போது ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக நம் கையில் சீரழிந்து வருகின்றது. இதற்கு மாற்றாக நாம் என்ன செய்ய முடியும்? ஞாயிற்றுக் கிழமை அன்றாவது விடியல் கண்டு சூரியன் தரிசனம் பெறுங்கள், சூரியக் குளியல் போடுங்கள். சரி வாருங்கள்..விளக்கின் மூலம் விளக்கம் பெறுவோம்.
நெய் - நாதம் என்ற ஒலி தத்துவம்
திரி - பிந்து என்ற ஒளி தத்துவம்
சுடர் -திருமகள்
பிழம்பு - கலைமகள்
தீ- சக்தி
என ஐந்து இறைமகாசக்திகள் உள்ளடங்கி உள்ளது. அகல் விளக்கேற்றி வழிபடுவது பஞ்ச பூத வழிபாடாகும். நாம் மோட்ச தீபத்தில் களிமண்ணால் ஆன பெரிய அகல் விளக்கில் விளக்கேற்றி வழிபாடு செய்கின்றோம். பஞ்ச பூத வழிபாடும், முன்னோர்களின் வழிபாடும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைப்பதைப் போன்றதாகி விடும். அதே போல் விளக்கேற்ற உகந்த நேரம் நாம் ஏற்கனவே சொல்லியது போன்று பிரம்ம முஹூர்த்தம் என சொல்லப்படும் அதிகாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை தான். அதற்குப் பின்னரும் விளக்கேற்றலாம். தவறில்லை. பலன்கள் சற்று குறைவாக இருக்கும். அவ்வளவே. பயன்படுத்தப்படும் உலோக விளக்குகளுக்கென தனித்தனி பலன்கள் உண்டு.
வெண்கல விளக்கு - பட்சி தோஷங்கள் நீக்கும்
பித்தளை விளக்கு - சண்டை சச்சரவு நீங்கும்
செப்பு விளக்கு - அமைதி தரும்
வெள்ளி விளக்கு - பூரணத்துவம் தரும்
தங்க விளக்கு - ஆயுள் விருத்தி
நவரத்தின ஆபரண விளக்கு - நவரத்தின தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
உலோக விளக்குகளுக்கு என்று சளைக்காது இருப்பது மண் அகல் விளக்குகள். வலம்புரி சங்கு விளக்கு, பச்சை மண் அகல் விளக்கு, சுட்ட அகல் விளக்கு, பனம்பழ குறுக்கு வெட்டு அகல்விளக்கு, விசிறித்தட்டு அகல் விளக்கு, பாதாளக்குழி அகல்,தூங்கா(தூண்ட) விளக்கு, பலரூப அகல் விளக்கு என பலவகையான அகல் விளக்குகள் உண்டு. இதே போல் விளக்கேற்றும் எண்ணெயிலும் பல செய்திகள் உண்டு.

Tuesday, March 9, 2021
உலக நன்மை வேண்டி மஹாவேள்வி - சிவராத்திரி சிறப்பு வழிபாட்டு அழைப்பிதழ்
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அனைவரும் இன்னும் சில தினங்களில் சிவராத்திரி வழிபாட்டிற்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றோம். அம்மைக்கு நவராத்திரி என்றால் அப்பனுக்கு சிவராத்திரி என்றே சொல்லலாம். அதே போல் அமாவாசை அன்று சக்தி வழிபாடு என்றால் பௌர்ணமி அன்று சிவ வழிபாடு. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. சென்ற ஆண்டில் சிவராத்திரி வழிபாடு குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. சென்ற ஆண்டில் கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் ஆரம்பித்து ஆவடி செல்லும் வழியில் ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில்,ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், நத்தம் ஸ்ரீ வாலீஸ்வரர் ஆலயம், பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தியர் கோயில், திருநின்றவூர் பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில், உலக நன்மை வேண்டி ICF கமல விநாயகர் அரங்கில் நடைபெற்ற யாகம், சித்தாலப்பாக்கம் ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் தரிசனம் என்று கிடைக்கப் பெற்றோம். ஒவ்வொரு தரிசனமும் நம்மை ஒவ்வொரு விதமாக அருள் காட்டியது என்றே சொல்லலாம். இதில் நாம் சென்ற ஆண்டில் கலந்து கொண்ட உலக நன்மை வேண்டி மஹாவேள்வி பற்றியும், இந்த ஆண்டிற்கான அழைப்பித்தலும் இன்றைய பதிவில் பகிர உள்ளோம்.
சிவராத்திரி அன்று நடைபெறும் யாக வழிபாட்டில் கலந்து கொள்வது பெரும் பேறு ஆகும். யாக வழிபாடு என்பதும் நம்முடைய வழிபாட்டில் ஆக சிறந்த வழிபாட்டு முறை ஆகும். அன்றைய காலத்தில் மன்னர்களும்,அரசர்களும் மட்டும் தான் யாகம் வளர்த்து வழிபாடு செய்துள்ளார்கள்.ஆனால் இன்றைய காலத்தில் பல இடங்களில் பற்பல பெரியோர்கள் இந்த வழிபாட்டை செய்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக சித்தர் வழிபாட்டு முறையில் இந்த யாக வழிபாடு மிக மிக முக்கியத்துவம் பெற்று வருகின்றது.
சென்ற ஆண்டில் சிவராத்திரி நாளில் உலக நன்மை வேண்டி ICF கமல விநாயகர் அரங்கில் நடைபெற்ற யாகத்தில் நிறைவாக பங்கு பெற்றோம். அந்த காட்சிகளை கீழே பகிர்கின்றோம்.
யாக வழிபாடும் பஞ்சபூத வழிபாட்டில் உள்ள சிறப்பான வழிபாடு ஆகும். யாக வழிபாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் யாரும் தவறவிட வேண்டாம். இந்த யாக வழிபாடும் ஒவ்வொரு விதங்களில் செய்யப்பட்டு வருகின்றது. பஞ்சபூத வழிபாட்டில் நேரிடையாக நாம் அக்னி தேவனை வணங்குகின்றோம். அடுத்து யாகத்தில் சேர்க்கப்படும் மூலிகைகள் நமக்கு பல வித உடல் நோய்களை தீர்த்து வைக்கின்றது. இதன் மூலம் மூலிகைகளின் ஆற்றலை நாம் நேரிடையாக பெற முடிகின்றது. யாகத்தில் நிறைவாக உள்ள பூரண ஆகுதி மிக மிக உயர்ந்த ஒன்று. இவற்றைப் பற்றி இனிவரும் பதிவுகளில் குருவின் அருளால் காண்போம். இனி மீண்டும் உலக நன்மை வேண்டி மஹாவேள்வி பற்றிய செய்தி பற்றி பேசுவோம்.
உலக நன்மை வேண்டி மஹா வேள்வி
அன்புடையீர்,
வணக்கம். தலையாய சித்தர் அகத்திய பெருமான் தனது வாக்கில் 5 இடங்களில் உலக நன்மைக்காக வேள்வி நடத்தும்படி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கடந்த ஆண்டு சிவராத்திரி ( 21.2.2020 ) அன்று சென்னையிலும் மதுரையிலும் 136 வகையான மூலிகைகளைக் கொண்டு (மொத்தம் 136 மூலிகைகளால்) இரவு முழுவதும் மஹா வேள்வி நடத்தப்பட்டது.
அதேபோல் இந்த ஆண்டும் மஹா சிவராத்திரி (11.3.2021) அன்று 148 வகையான மூலிகைகளைக் கொண்டு சென்னையிலும் மதுரையிலும் உலக நன்மைக்காக மஹா வேள்வி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வேள்வி: அருள்மிகு கமல விநாயகர் சத் சங்க மண்டபம், ICF பஸ் ஸ்டாண்ட் அருகில், சென்னை
மதுரை வேள்வி: அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில், திருப்பரங்குன்றம் பிரதான சாலை, அவனியாபுரம், மதுரை – 12.
விவரங்களுக்கும் நன்கொடை அனுப்புவதற்கும்:
சென்னை வேள்வி: திரு முருகானந்தம், GPAY & PAYTM 84891 25459
MURUGANANDAM.R A/C. NO: 075-610-400-019-3016 Saving account
IFSC CODE IBKL 00-00-756 IDBI BANK THIRUVALLUR MAIN
மதுரை வேள்வி: திரு ஆனந்தன், GPAY 9080721747
T R ANANDHAN SB ACCOUNT NUMBER 004901000039406
IFSC IOBA0000049 INDIAN OVERSEAS BANK MADURAI MAIN
மதுரை வேள்விக்குத் தேவைப்படும் பூசைப் பொருட்கள் விவரம்:
மஞ்சள் பொடி 500 கிராம்
பூ மாலை 12
உதிரிப்பூ 6 கிலோ (செவ்வந்தி, வெள்ளை அரளி, சிவப்பு அரளி, இட்லி பூ, துளசி, மருவு, பச்சை, மரிக்கொழுந்து, தாமரைப்பூ)
பசு நெய் 6 லிட்
தேங்காய் 21
வாழைப்பழம் 1 தார்
வெற்றிலை 30 ரூ
பாக்கு 30 ரூ
குங்குமம் 1 கிலோ
சந்தனம் 1 கிலோ
சூடம் 500 கிராம்
வேஷ்டி, புடவை 9 X 5 4 செட்
விறகு 50 கிலோ
நன்கொடை வரவு விவரம்
சென்னை வேள்விக்கு
7.03.2021 வரை வரவு ரூ.21005
08.03.2021
P சக்திவேல் பவானி ரூ.500
சங்கர் மூர்த்தி ரூ.301
A A திலக் ரூ.1500
மொத்தம் ரூ.2301
ஆக மொத்தம் ரூ.23306
மதுரை வேள்விக்கு
06.3.2021 வரை வரவு ரூ. 22900
E S S சுமதி மதுரை ரூ.500
மலர்கொடி ஹரிராம் ரூ.350
J N உஷா ரூ.250
மொத்தம் ரூ.1100
ஆக மொத்தம் ரூ.24000
உலக நன்மைக்காக செய்யப்படும் இந்த வேள்விகளில் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளும் ஆசியும் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 148 வகையான மூலிகைகளைக் கொண்டு மிகுந்த பொருட்செலவில் செய்யப்படும் இவ்வேள்விகளுக்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
மீண்டும் சென்ற ஆண்டில் நடைபெற்ற வேள்வியின் நிகழ்வுகளை மீண்டும் பகிர்கின்றோம்.
வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.
Saturday, March 6, 2021
ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய 11ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி அழைப்பிதழ் - 11.03.2021
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் சிவ ராத்திரி விழா வரும் வியாழக்கிழமை அன்று அனைவரும் கொண்டாட உள்ளோம். அனைவரும் அருகில் உள்ள தொன்மை வாய்ந்த சிவாலயம் சென்று, ஈசனை வழிபட்டு, வினைத் தூய்மை பெறவும். முடிந்தவர்கள் வாரம் ஒருமுறையாவது கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். முடியாதவர்கள் மாதம் ஒருமுறையாவது விளக்கேற்றி வழிபடவும். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் தீப வழிபாட்டை நமக்கு அருளிக்கொண்டே இருக்கின்றார்.
இங்குள்ள சிவனார் கிழக்கு நோக்கியும்,சற்று ஈசான்ய மூலை நோக்கியும் பார்க்கின்றார்.இந்த கொளத்தூர் கிராமம் இவரின் அருளால் மேம்பட்டு வருகின்றது என்பது கண்கூடு.
அடுத்து ஒவ்வொரு சன்னிதியாக சென்று விநாயகர், கல்யாண துர்க்கை, முருகப்பெருமான், பைரவர், நவ கிரக நாயகர்கள், பைரவர் என போற்றினோம்.