"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 7, 2020

120 வருடங்களுக்கு ஒருமுறை சித்தர்கள் பூசை செய்யும் அக்னீஸ்வரர், அரசண்ணாமலை!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். சென்ற பதிவில் திருநின்றவூர் பாக்கம் ஊரில் அருள்பாலித்து வரும் படிஅருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர்  ஆலயம் கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம். 

இதற்கு முந்தைய பதிவில்  அரசண்ணாமலையார் கோயிலில் 120 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை பதிவை  மூன்றாம் நாள் தரிசனம் பெற்றோம்.இன்றைய பதிவில் அந்த கோயில் பற்றி சொல்ல விரும்புகின்றோம்.

அகத்தியர் மைந்தன், 120 வருடங்களுக்கு ஒரு முறை சித்தர்கள் பூசிக்கும் சிவலிங்கத்தை, ஈரோட்டுக்கு அருகில் ஒரு ஊரில் அமைந்துள்ள மலை மேல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அர்த்தஜாம பூசையையும் பற்றி விவரித்திருந்தார். அந்த நிகழ்சிகள் விவரிக்கப்பட்ட தொகுப்புக்களின் தொடர்பை  தருகிறேன். ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் பாருங்கள்.


"இந்தக் கோவிலில் நூற்றி இருபது வருஷத்திற்கு ஒருமுறை தலையாயச் சித்தர் என் தலைமையில் பதினெட்டுச் சித்தர்கள், நள்ளிரவு நேரத்தில் இந்த சிவபெருமானுக்கு ஒன்று சேர்ந்து அபிஷேகம் செய்வது உண்டு.  எனது மைந்தன் என்பதால் உனக்கும் இந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் காட்ட இக்கோவிலுக்கு வரவழைத்தேன்,  எங்களைக் காண முடியாது என்றாலும் சூட்சுமமாக இந்த உணர்வினைத் தெரிய வைத்தேன்.  இது இன்று மாத்திரமல்ல, இன்னும் இரண்டு நாளைக்குத் தொடரும்.  உனக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கும். எனினும் இதை இப்போது யாரிடமும் சொல்வதில் பயனில்லை.  பொறுத்திரு" என்றார் அகஸ்தியர்.

சமீபத்தில், ஒரு அகத்தியர் அடியவர், சித்தன் அருள் வாசகர் திரு தீபன், சூரத், குஜராத் அவர்கள், அந்த கோவிலை பற்றிய தகவலை அடியேனுடன் பகிர்ந்து கொண்டார். அவர் அனுமதியுடன், தகவல்கள் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

"சட்டென்று ஏகுக" எனத் தொடங்கிய அவரின் அனுபவம், வாசிப்பவரை மூச்சு விடக்கூட விடாமல் அடுத்தது என்ன அனுபவத்தை அகத்திய பெருமான் அவருக்கு கொடுத்திருக்கிறாரோ என வாசிப்பவரை திகைக்க வைத்த நிகழ்ச்சிகளை படித்துவிட்டு, பலரும், இன்றும், அது எந்தமலை? எங்கிருக்கிறது? எப்படி செல்வது? அந்த மலையில் இரவில் ஆபத்தான சூழ்நிலை விலகிவிட்டதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தனர். அனைத்திற்குமான பதிலை கீழே தருகிறேன்.

இந்தக் கோயில் பெருந்துறை-விஜயமங்கலம் நான்கு வழிச்சாலையில் கொங்கன்பாளையத்தில் "அரசண்ணாமலை" மேல் அமைந்துள்ளது. கிராமத்து மக்கள் வருடந்தோறும் விழா எடுத்து நடத்தி வருகின்றனர். பக்கத்தில் உள்ள விஜய மங்கலத்தில் சமண சமயத்தை அவரின் படுகைகள் குன்றுகள் சிகிலமடைந்த கோயில்கள் இருக்கின்றன. அவை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

கிராமத்து மக்களால், அக்னீஸ்வரர் கோயில் தேவஸ்தான டிரஸ்ட் ஒன்றும் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது.

மாதம் மாதம், கிராமத்து மக்கள் கிரிவலம் செய்து வருகின்றனர். விழாவும் எடுத்து வருகின்றனர். அந்த கோயில் தொடர்பான செய்திகளுக்கு அவர்கள் காணொளியில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டால் மேலும் விவரங்கள் கிட்டும் என்று நினைக்கிறேன்.

கோயிலுக்கு, இன்று வரை, சென்று வர மலைப்பாதைகள் சரியாக இல்லை மிகவும் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது.

இன்றும் இரவில் யாரையும் மலைமேல் தங்குவதற்கு அனுமதிப்பதில்லை. அந்த காலத்தில் இருந்த ஆபத்துகள் இன்று தொடர்வதாக கிராமத்து மக்கள் கூறுகின்றனர். தனியாக யாரும் மலை ஏறி செல்வதில்லை. குழுவாகவே செல்ல வேண்டும். இரவு நேரத்தில் மலை ஏறுவதையும் தவிர்க்க வேண்டும்.

இந்த மலை சம்பந்தமாக கிடைத்த புகைப்படங்களையும், ஒரு காணொளியையும் கீழே தருகிறேன்.

இந்த தொகுப்பை படித்துவிட்டு, உடனேயே மலை ஏறி சென்று விடாதீர்கள். எந்த ஆபத்தான விஷயங்களிலும் ஈடுபடவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

கேட்டுக்கொள்கிறேன்.


















 மேலும் கிடைத்த தகவல்களை கீழே தருகிறேன்.
  • கடந்த 22 வருடங்களாக தை மாதம் முதல் தேதி விழா எடுத்து வருகின்றனர், அன்னதானம் நடத்தி வருகின்றனர். பத்து வருடங்களாக மலைமீது அன்னதானம் செய்து வந்தார்கள் ஆனால் சரியான அமைப்பு இல்லாததால் நீர் உணவு போன்றவை மேலே கொண்டு போக கடும் சிரமமாக இருந்ததால் மீதி 10 ஆண்டுகள் ஆக மலை அடிவாரத்தில் நடந்து வருகிறது
  • கோயிலுக்கு என்ற இருந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டு விட்டன கோயிலுக்குரிய சொத்துக்கள் ஏதுமில்லை.
  • ஊர் மக்கள் கூடி சீட்டு போட்டு ஒரு சிறிய அளவிலான நிலம் வாங்கி அன்னதான மண்டபம் கட்டி உள்ளனர்.
  • கோயிலுக்கு என்று குருக்கள் அர்ச்சகர் யாரும் தற்போது இல்லை.
  • இன்றும் இரவில் யாரும் தங்குவதில்லை
  • கோயிலுக்கு இன்றும் சரியான மலைப்பாதைகள் இல்லை.
  • மாதா மாதம் பௌர்ணமி கிரிவலம் நடத்திவருகின்றனர் அதில் 1500 பேர் வரை பங்கேற்கின்றனர்.
  • வாரா வாரம் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை பூஜையில் சுமார் 70 லிருந்து 100 பேர்வரை பங்கேற்கின்றனர்
  • அந்த ஊரில் ஒரு டீக்கடை கூட இல்லை டீ குடிப்பது என்றாலும் 7 கிலோ மீட்டர் வரவேண்டும்
  • டிபன் கடை என்று எதுவும் இல்லை
  • மத்திய அரசின் வன பாதுகாப்பில் இந்த மலை உள்ளது. படிக்கட்டுகள் அமைப்பதற்கு வன பாதுகாப்பு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது
  • அக்னீஸ்வரர் கோயிலில் அவரிடம் உத்தரவு கேட்டு தான் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் மலை உச்சியில் ஒரு செடி நடுவது என்றாலும் அவருடைய அனுமதி பெற்றே செய்து வருகின்றனர்
  • இன்றுவரை மலையில், இரவில் யாரும் தங்குவதில்லை. சிவராத்திரி ஒரு நாள் மட்டும் தங்கி பூஜை செய்து வந்து விடுகின்றனர்.
  • கோயிலுக்கு என்று வசதிகள் ஒன்றுமே இல்லை.
  • வரும் அடியார்கள் அவரை தொடர்பு கொண்டால் ஒருங்கிணைந்து செயல்பட அவர் தயாராக இருக்கிறார் என்றும் தெரியப்படுத்தினார்.
  • ஞாயிற்றுக்கிழமை மட்டும் மிகச் சிறப்பான முறையில் அபிஷேகங்கள் ஆராதனைகள் பூஜைகள் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
  • இன்றுவரை அந்த கோயிலில், திருமண தடை, காரிய தடை, குழந்தையின்மை, கால்நடைகள் காணாமல் போனாலும் வம்பு வழக்குகள் பிரச்சினைகள், நில பிரச்சினைகள் வறுமை பிரச்சனைகள் என எந்த பிரச்சனைக்கு கோரிக்கை வைத்தாலும் உடனடியாக அக்னீஸ்வரர் அருள்செய்து அனைத்து துன்பங்களையும் மாற்றி நல்லாசி தருகிறார்
அடடா...இணைத்துள்ள படங்களை பார்க்கும்போதே மனம் எப்போது என்று ஏங்குகின்றது. இன்று வரை யாரும் இரவில் தங்கியதில்லை. அகத்தியர் மைந்தன் தெய்வத்திரு. ஹனுமத்தாஸன் அவர்கள் இங்கே தங்கி சித்தர்களின் பூசை கண்டுள்ளார் என்பது நம்மை இன்னும் சித்தர் மார்க்கத்தில் குருவிடம் சரணாகதி எப்படி பெறுவது என்று கூறுவது போல் தான் தற்போது வரை உணர்த்தப்பட்டு வருகின்றோம். தேடல் உள்ள தேனீக்களாய் குழுவில் உள்ள அன்பர்கள் அனைவருக்கும் குருவின் அருள் உணர்கிறார்கள் என்பதை நாம் நம்புகின்றோம். நம் தளத்தின் சேவைகள் இன்னும் நம்மை செம்மைப்படுத்துகின்றன. வாழ வழி காட்டும் குருமார்களின் பாதம் தொட்டு மகிழ்கின்றோம். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2

அனைவருக்கும் அன்பு  வணக்கங்கள்.

நம் தளத்தில் அவ்வப்போது சித்தர்கள் தரிசனம் கண்டு வருகின்றோம். அருள்மிகு வீரராகவ சுவாமிகள், கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள், போகர், ஸ்ரீ ரோம மகரிஷி , ஸ்ரீ சதானந்த சுவாமிகள், ஸ்ரீ சுப்பையா சுவாமிகள், மண் உண்ட மகான் ஸ்ரீ மல்லையா சுவாமிகள், ஸ்ரீ காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள் என தொட்டுக்காட்டி வருகின்றோம். இன்றும் ஒரு மாபெரும் ஞானி பற்றி காண இருக்கின்றோம்.எப்போது அழைப்பாரோ என்று வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றோம்.

இதற்கு முந்தைய பதிவில் திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் அவதாரம், சுவாமிகளின் அருள் நிலை என்று அறிந்தோம். மீண்டும் அங்கிருந்து இந்தப் பதிவில் தொடர விரும்புகின்றோம்.

திண்டுக்கல்லில் சௌராஷ்டிர பிராமணர் ஒருவர் வசித்து வந்தார்.  திருமணாகி, குழந்தையே இல்லை.  சுவாமிகளின் மேல் கொள்ளைப்பிரியம்.  தீவிரமான பக்தர்.  சுவாமிகளை தரிசிக்கவில்லை என்றால்  அவருக்கு உணவு செல்லாது; தூக்கம் வராது.  தங்கள் வீட்டில் மழலை ஒலி கேட்க, குழந்தை வரம் வேண்டி, சுவாமிகளை அவ்வப்போது பிரார்த்தனை செய்வார். விதியின் போக்கை யார் அறிவார்?  பூர்வ வினைகளின் காரணமாகக் காச நோய் அந்த சௌராஷ்டிர பிராமணரைத் திடீரெனப்பற்றிக்கொண்டது.  குடும்பத்தினர் அதிர்ந்து விட்டனர்.  மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.  ஒரு டாக்டரது சிகிச்சை பலன் தரவில்லை என்றால் இன்னொரு டாக்டரைப் பார்த்தனர்.  ஆனாலும், சிகிச்சையினால் எந்தப் பலனும் விளையவில்லை.  ஒரு கட்டத்தில் அனுபவித்தில் முதிர்ந்த டாக்டர்களே, இது தீர்க்க முடியாத வியாதி, உயிர் பிழைப்பதே சிரமம்.  இருக்கும்வரை அவர் சந்தோஷமாக இருக்குட்டும்.  வீட்டுக்கு அழைத்துச் சொல்லுங்கள் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.

திக்கற்றவருக்கு தெய்வமே துணை.... மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் மகானே துணை!  அந்த சௌராஷ்டிர பிராமணர், ஒத  சுவாமிகள் இருந்து வரும் குகைக் கோயிலுக்குப் போய் வழிபட ஆரம்பித்தார்.  தினமும் மனமுருகப் பிரார்த்திப்பார்.  இப்படித்தொடர்ந்து ஒரு மண்டலம் வழிபட்டார்.  



ஆனாலும், பிராமணரின் உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை, ஒரு நாள் மனம் வெறுத்துப்போனார்.  சுவாமிகளை வழிபட்டும் உடல் நிலை தேறவில்லை என்றால், இந்த உடல் இருந்து என்ன பயன்?  என்று தீர்மானித்தவர் அந்தக் கோயிலேயே தன் உயிரை விட முடிவெடுத்தார். அன்றைய தினம் நள்ளிரவு வேளையில் தன்னை மாய்த்துக் கொள்வதாக இருந்தார். பிராமணர். மனைவியைப் பிரிகிறோமே என்கிற வேதனையும் இல்லாமல், தன் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு ஒரு நேரம் பார்த்துக் காத்திருந்தார்.  குகைக் கோயிலின் ஏதோ ஒரு மூலையில் சுவாமிகள் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். மனமுருக அவரைப் பிராத்தித்துக்கொண்டார்.  மற்றப்படி வேறு எவரும் அங்கே இல்லை. தன் பக்தன் ஒருவன் , இப்படி உயிரை மாய்த்துக்கொள்ள ஒத சுவாமிகள் விரும்புவாரா? சித்து வேலைகளைத் துவக்கினார்.  அந்த நள்ளிரவு வேளையில் பிராமணரின் வீட்டுக்குப் போனார். கதவைத் தட்டினார். மனைவிதான் கதவைத் திறந்தார். (கணவர்தான் உயிரைப் போக்கிக்கொள்வதற்காக இங்கே குகைக் கோயிலில் அமர்ந்திருக்கிறாரே!). அகால வேளையில் சுவாமிகளைப் பார்த்தும் பதறிப் போனார் மனைவி.  பிறகு, தோபாரம்மா .... உம் புருஷன் அங்கே உக்கார்ந்து என் நிஷ்டையைக் கெடுத்துக்கொட்டிருக்கான்.  அவனை அந்த இடத்துக்கு இனிமே வரச் சொல்லாதே. அவனுக்கு ஒரு வியாதியும் இல்லை.  தேவை இல்லாம மனசைப் போட்டுக் குழப்பிக்கறான்.  கூடிய சீக்கரமே உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கப் போகுது.  உடனே கௌம்பிப் போய், அவனை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடு.  அதுதான் நல்லது என்று சொல்லி, மனைவியையும் ஆசிர்வதித்து மறைந்தார்.

அதே நேரத்தில் குகைக் கோயிலில், உயிரை விடத் தயாராகத் இருந்த பிராமணருக்கு முன் திண்டுக்கல்லில் பிரபலமாக விளங்கிய ஒரு மருத்துவர் தோன்றினார்.  (அவரது பெயர் டாக்டர் தண்டபானி என்று சுவாமிகளின் சரித நூல் சொல்கிறது).ஏனப்பா இங்கே கிடந்து அல்லாடுகிறாய்?  உனக்கு  எந்த வியாதியும்  இல்லை.  நல்லாருக்க நீ. கௌம்பு வீட்டுக்கு என்று சொன்னார்.  டாக்டர். பிறகு, திரும்பி நடக்க ஆரம்பித்தார்.  பிராமணருக்கு ஒரே ஒரு சந்தேகம் உதித்தது.  என்னதான் டாக்டராக இருந்தாலும், இந்த நள்ளிரவு வேளையில் இங்கே எப்படி வந்தார்?  எந்த விதமான பரிசோதனையும் செய்யாமல் தனக்கு எந்த வியாதியும் இல்லை என்று ஏன் சொல்லவேண்டும் என்று குழம்பிய பிராமணர், சட்டென எழுந்து டாக்டரைப் பின் தொடர ஆரம்பித்தார்.  ஒரு திருப்பத்தில் பிராமணரை மெள்ளத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்த டாக்டர், பொசுக்கென மறைந்துபோனார்.  அதன் பின் டாக்டரைத் தேடியும் அவர் அகப்படவில்லை.  திடீரென ஏதோ தோன்ற, விறுவிறுவென்று வீட்டுக்கு ஒடினார் பிராமணர். வீட்டைப் பூட்டிக்கொண்டு கணவனைத் தேடக் கிளம்பிக்கொண்டிருந்தாள் அவரின் மனைவி.

இருவரும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை அந்த நேரத்தில் பகிர்ந்துகொள்ள.... இவை அனைத்தும் சுவாமிகளின் திருவிளையாடல் தான் என்று அறிந்து தெளிந்தனர்.  அடுத்த நாள் அதிகாலை சுவாமிகளின் கோயிலுக்குச் செல்வதற்கு முன் டாக்டரின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினார் பிராமணர். தூக்கத் கலக்கத்தில் இருந்து எழுந்து வந்தார் டாக்டர். பிரமணர் டாக்டரைப் பார்த்து, சார்.... நேத்து நள்ளிரவு நீங்க எதுக்கு குகைக் கோயிலுக்கு வந்தீங்க?  எனக்கு வியாதியே இல்லைன்னு சொன்னீங்களே.... என்று கேட்க.... டாக்டர் நெளிய ஆரம்பித்தார்.  குழம்ப ஆரம்பித்தார்.  தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் அவரது முகம் சொன்னது. அதன் பின் முதல் நாள் நள்ளிரவு  நடந்த முழுச் சம்பவத்தையும் அவரிடம் சொன்னார் பிராமணர்.  டாக்டர் ஏகத்துக்கும் அதிர்ந்து போனார்.  இதெல்லாம் சுவாமிகளின் திருவிளையாடலாகத்தான் இருக்கும் என்று நெகிழ்ந்து அவர்களை அனுப்பி வைத்தார். அடுத்து வந்த நாட்களில், பிராமணருக்கு இருந்த காச நோய், போயே போய் விட்டதை மருத்துவ சோதனை மூலம் அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டது அவரது குடும்பம்.  கிட்டதட்ட இதே காலத்தில் அவர் மனைவியும் கருவுற்றார். ஓத சுõவமிகளைச் சந்தித்து அவருடைய திருப்பாதங்களில் விழுந்து, கண்ணீரால் நனைத்தனர்.  சுவாமிகளும் புன்னகைத்து அவர்களை ஆசிர்வதித்தார். சரியாக பத்து மாதம் கழித்து சௌராஷ்டிர பிராமணரின் மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.  சுவாமிகளின் திருப்பெயரான சுப்பையா என்பதை நினைவுக்கூரும் வகையில் சுப்பம்மாள் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் தம்பதியர்.

சுவாமிகளின் ஆசி பெற்ற ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆன கதையைப் பார்ப்போமா? மகான்களின் அருள் இருந்தால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.  மடுவும் மலையாகும்; எழுத்தறிவே இல்லாத ஒருவன் சிறந்த கல்விமான் ஆவான்; குடிசைக்கு வழி இல்லாத ஒருவன் மாட மாளிகைக்குச் சொந்தக்காரன் ஆவான்.  என்ன ஒன்று... எதையும் எதிர்பார்க்காமல் மகான்களிடம் - குருமார்களிடம் தன்னை ஒப்படைக்கவேண்டும். திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் சாதாரண முன்சீப்பாக இருந்தவர் சதாசிவ ஐயர்.  ஓத சுவாமிகள் தன் அருளை இவர் மீது பொழியவேண்டிய வேளை வந்தது போலும்! சதாசிவ ஐயருக்கு அப்போதுதான் திருமணம் ஆகி இருந்தது.  பஞ்சக்கச்சமும் மேல்வஸ்த்திரமும் அணிந்து மிகவும் ஆச்சாரமாகக் காணப்படுவார்.  ஒரு நாள் இவருடைய வீட்டுக்கு  ஒத சுவாமிகள் வந்தார்.  வாசல் திண்ணையில் அமர்ந்தார். வீட்டின் உள்பக்கம் திரும்பி, டேய் சதாசிவா...  என்று குரல் கொடுத்தார். வெளியே வந்த சதாசிவம.  சுவாமிகளை பார்த்தார். சுவாமிகளைப் பற்றி ஒரளவு அறிந்திருந்தாலும் அவரது லீலைகளை அறிந்துருக்குவில்லை சதாசிவம்.

ஒரு மேல்வாஸ்திரம் கொண்டு வா.  எனக்குத் தேவைப்படுகிறது என்றார்  சுவாமிகள்.  வீட்டின் உள்ளே போன சதாசிவம் ஒரு புது அங்கவஸ்த்திரத்தை எடுக்கப்போனார்.  பிறகு, முற்றும் துறந்த ஞானிக்கு ஏன் புது வஸ்திரம்?  பழைய வஸ்திரம் ஒன்றையே கொடுக்கலாமே என்று முடிவெடுத்து, பழைய வஸ்திரம் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார். அதை வாங்கி, இப்படியும் அப்படியும் பிரித்துப் பார்த்த சுவாமிகள்.  மீண்டும் பழையப்படி மடித்துக் கக்கத்தில் வைத்துக்கொண்டு புன்னகைத்தாவறே புறப்பட்டு போனார். சுவாமிகளின் இந்த செயல் சதாசிவ ஐயருக்கு வித்தியாசமாகத் தோன்றினாலும், அதற்கான பொருள் அப்போது புரியவில்லை.  மறுநாள் வெளியே புறப்படுவதற்காக பீரோவைத் திறந்து அங்கவஸ்திரம் எடுக்கப் போன சதாசிவ ஐயர் திகைத்தார்.  அனைத்து அங்கவஸ்திரங்களும் செல்லரித்துப் போய், மடிப்புகள் கலைந்து கிழிந்த நிலையில் காணப்பட்டன.  மனைவியை அழைத்து இந்த விவரத்தைச் சொல்லி விளக்கம் கேட்கலாம் என்று பெயர் சொல்லி அழைக்கப் போனவரை, ஏதோ ஒரு சக்தி தடுத்தது. வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.  அவரையும் அறியாமல் அவரது கால்கள் வாசல் பக்கம் நோக்கி நகர்ந்தன.

அப்போது அங்கே அவர் பார்த்த காட்சி நிலைகுலைய வைத்தது.  சுவாமிகளின் தலை மட்டும் தனியாக ஒரிடத்தில் காணப்பட்டது.  உடலின் மற்ற பாகங்கள் அனைத்தும் ஆங்காங்கே துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்தன. பதறிய சதாசிவம் ஒவென்று பெருங்குரல் எடுத்துக் கதறத் தொடங்கும் முன், அனைத்து உறுப்புகளும் சரசரவென்று ஒன்று சோர்ந்தன.  தூக்கத்தில் இருந்து எழுந்து நடப்பதுபோல் சாலையில் நடக்க ஆரம்பித்தார் சுவாமிகள்.  குறுகுறுப்புடன் சதாசிவ ஐயரைத் திரும்பிப் பார்த்துக் கை உயர்த்தி ஆசிர்வதிக்கவும் செய்தார். ஓத சுவாமிகள் சாதாரணப்பட்டவர் அல்ல.... பெரிய மகான் என்று தெளிந்து, அவர் நடந்து சென்ற திசை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் சதாசிவ ஐயர்.  அதே வேகத்துடன் வீட்டினுள் வந்து பீரோவைத் திறந்து பார்த்தவருக்கு ஆச்சிரியம்.  அனைத்து வஸ்த்திரங்களும் புத்தம் புதிதாகக் காணப்பட்டன.  சற்று முன் செல்லரித்துப் போய்ப் பார்த்ததற்கும், இப்போது இருக்கும் பொலிவுக்குமான காரணம் சுவாமிகளே என்று உணர்ந்து, அவரின் தீவிர பக்தரானார் சதாசிவ ஐயர்.

கிட்டத்தட்ட இதே காலக்கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பதவிக்கான இடம் காலியாக இருப்பதை அறிந்தார் சதாசிவம்.  முன்சீப்பாக இருக்கும் தனக்கு, நீதிபதி ஆக வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கினார்.  ஒத சுவாமிகளின் ஆசி கிடைத்துவிட்டால்.  தான் நீதிபதி ஆகிவிடலாம் என்று எண்ணி, அவரை தரிசிக்க வீட்டை விட்டுக் கிளம்பினார். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி, வழியிலேயே சுவாமிகளைப் பார்த்துவிட்டார் சதாசிவம்.  விறுவிறுவென ஒடிப்போய் நடுரோட்டிலேயே விழுந்து அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.  எழுந்திரு சதாசிவம்.  அதான் ஐகோர்ட் ஜடஜ் ஆகப் போகிறாயே.... நீ நீதி தலை வணங்க கூடாது என்று வலது திருக்கரம் உயர்த்தி ஆசிர்வாதம் செய்ய... நெகிழ்ச்சியின் உச்சக்கட்டமாக சதாசிவ ஐயரின் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் பெருகியது. இதை அடுத்து சில நாட்களிலேயே சதாசிவம், உயர்நீதிமன்ற நீதிபதி ஆனார்.  ஊருக்கு வரும்போதெல்லாம் சுவாமிகளை தரிசிக்க சதாசிவம் என்றும் மறந்தில்லை.  இந்த அபரிமிதமான பக்தியின் காரணமாக, தான் ஸித்தி ஆகப் போகும் வேளையில் சதாசிவ ஐயரை ஆட்கொள்ளத் திருவுளம் பூண்டார் சுவாமிகள்.  நீதிபதி சதாசிவ ஐயரின் கனவில் ஓரு நாள் சுவாமிகள் தோன்றி, சதாசிவ.... இன்னும் சில நாட்களுக்குள் நான் ஸித்தி ஆகப் போகிறேன்.  நிரந்தரமாகக் குடிகொள்ள எனக்கென்று ஒரு இடத்தைத் தேர்வு செய் என்று சொல்லி மறைந்தார்.

இதன் பிறகு தற்போது அதிஷ்டானம் அமைந்துள்ள இடத்தை - அதாவது சுவாமிகள் அதிகம் நடமாடிய இடத்தைத் தேர்வு செய்தார்.  சட்டப்படி அந்த இடத்தை அப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்திடம் இருந்து பெற்று சுவாமிகள் பெயருக்கே பதிவு செய்து கொடுத்தார்.  பின்னர், இந்த பத்திரம் சுவாமிகளின் பக்தரான அய்யாத்துரை செட்டியாரிடம் வந்து சேர்ந்தது.  ஓத சுவாமிகள் 1906-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி ஸித்தி ஆனார். அன்று திருவாதிரை நடசத்திரம்.  சுவாமிகளின் ஜனன நட்சத்திரமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திருப்பூரில் வசித்து வருபவர் ரஞ்சனி கணபதி.  சுவாமிகள் பற்றித் தன் முன்னோர்கள் சொன்ன சில அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துக்கொண்டார்.  ரஞ்சனி கணபதி.  இனி அவரே சொல்கிறார். ஓத சுவாமிகள் திண்டுக்கலில்தான் அதிக காலம் வசித்தார்.  அவர் எந்தக் கடைக்கப் போய் கால் வைத்தாலும் அங்கே வியாபாரம் அன்றைய தினத்தில் அமோகமாக நடக்கும்.  இதற்காக வியாபாரிகள், தங்கள் கடைக்கு வந்து பாதம் பதிக்கும்படி சுவாமிகளிடம் வேண்டுவார்கள்.  ஆனால், எங்கே போகவேண்டும் என்று தோன்றுகிறதோ, அந்தக் கடைக்குத்தான் சுவாமிகள் செல்வார். சுப்பையா செட்டியார் என்பவரின் எண்ணெய்க் கடைக்குத்தான் சுவாமிகள் அதிகம் செல்வார்.இன்றும் சுப்பையா செட்டியாரின் பேரனான சுப்பையா என்பவர். அதிஷ்டானத்தைக் கவனித்துக்கொண்டு வருகிறார். திண்டுக்கல்லில் சுவாமிகள் வசித்தபோது தன் அண்ணாவின் (பெரியப்பா மகன்) வீட்டுக்கு அதிகம் போவார்.  பால் கொழுக்கட்டை என்றால் சுவாமிகளுக்கு ரொம்ப பிடிக்கும்.  சுவாமிகளின் அண்ணியார் தன் வீட்டில் பால் கொழுக்கட்டை தயார் செய்துவிட்டு, அவரை நினைத்துக்கொள்வார்.  அடுத்த நிமிடமே சுவாமிகள் அங்கே பிரசன்னமாகிவிடுவார்.  ஒரு தட்டில் பால் கொழுக்கட்டைகளை வைத்து மிகுந்த அன்புடன் அவருக்குக் கொடுப்பார் அண்ணியார்.  ஆசை ஆசையாக சுவாமிகள் சாப்பிடும் அழகையே கண் கொட்டாமல் பார்த்து நெகிழ்வார். அண்ணியார்.

சுவாமிகளுக்கு கணபதி ஐயர் என்ற தம்பி இருந்தார்.  இவர் மனைவியின் பெயர் திருமதி நாகம்மாள்.  இவர்கள் இருவரும் பழநிக்கு அருகிலுள்ள பாலசமுத்திரம் என்ற ஊரில் வசித்து வந்தார்கள்.  இந்தத் தம்பதிக்கு ரொம்ப நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லை.  வேண்டாத தெய்வம் இல்லை.  ஒரு நாள் இருவரும் சுவாமிகளை தரிசித்து, தங்கள் மனக்குறையை அவரிடம்   வைத்தார்கள்.  வீட்டுக் கொல்லைப்புறத்தில் போய்ப் பார் என்று தன் வலக்கையை உயர்த்தி மூன்று விரல்களை அவர்களிடம் காட்டினார் சுவாமிகள். வீட்டுக்கு வந்து கொல்லைப்புறம் போய்ப் பார்த்தில், மூன்று அம்மிக் குழவிகள் அங்கே திடீரென முளைத்திருந்தன.  சுவாமிகள் காட்டிய மூன்று விரலுக்கும், இந்த மூன்று குழவிக்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்று கருதிய தம்பதியர், அவற்றை எடுத்து வந்து பூஜை அறையில் வைத்தார்கள்.  இதை அடுத்த சில காலத்தில் நாகம்மாள் கருவுற்றார்.  முதலில் சுப்பிரமணியன் பிறந்தான்.  அடுத்த சில காலத்தில் கோபலகிருஷ்ணன் பிறந்தான்.  மூன்றாவாதகப் பிறந்தவர்தான் என் மாமனாரான பரமேஸ்வரன். முத்தான மூன்று மகன்கள் பிறக்கும் என்பதை சுவாமிகள் அழகாக உணர்த்தி இருந்தார் தன் தம்பிக்கு.  சுவாமிகளின் அருளால் இந்த மூவருமே நன்றாகப் படித்து, நல்ல நிலைமைக்கு வந்தார்கள்.  இன்றும் எங்கள் குடும்பத்தில் எந்த ஒரு விசேஷம் என்றாலும், முதலில் சுவாமிகளை வணங்கி உத்தரவு கேட்டுக் விட்டுத்தான் அடுத்த வேலைகளைக் கவனிப்போம். என்றார் ரஞ்சனி கணபதி.

திண்டுக்கல் நகரத்தில் ஒரு சிறு சந்தில் எண்ணெய்க் கடை நடத்தி வந்தார். அய்யாத்துரை செட்டியார். தீடீரென இவரது கடைக்குள் நுழைவார் ஓத சுவாமிகள்.  பெரிய பெரிய அண்டாக்களிலும் பாத்திரங்களிலும் எண்ணெய் நிரப்பட்டிருக்கும். ஒரு பெரிய அண்டாவுக்குள் சொம்பு ஒன்றை உள்ளே விட்டு எண்ணெயை முகந்தெடுப்பார் சுவாமிகள்.  அப்படியே அதைத் தன் தலையில் ஊற்றிக்கொண்டு விறுவிறுவென வெளியே ஒடிவிடுவார் சுவாமிகள்.  செட்டியார் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடும். அன்றைய வியாபாரம் அமோகமாக இருக்கும்.  செக்கில் ஆட்டி வைத்திருந்த எண்ணெய் ஒட்டுமொத்தமும் காலியாகிவிடும். செட்டியாருக்குச் சொந்தமாகச் சில செக்குகளும் இருந்தன.  சொந்தச் செக்கிலேயே எள்ளை ஆட்டி நல்லெண்ணெய் விற்று வந்தார் அய்யாத்துரை செட்டியார். ஒருமுறை, ஏதோ ஒரு விசேஷத்தை முன்னிட்டுத் தன் கடையில் எண்ணற்ற அண்டாக்களில் எண்ணெய் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்தார் செட்டியார்.  நன்றாக வியாபாரம் ஆகும் என்று எதிர்ப்பார்த்தார்.  ஆனால் செட்டியாருக்குப் பலத்த ஏமாற்றம். வியாபாரமே ஆகவில்லை. மிகுந்த வருத்துடன் அப்போது சுவாமிகளை மனமார பிரார்த்தித்தார் செட்டியார்.  அடுத்த நிமிடமே அந்த ஆபத்பாந்தவன் அங்கே பிரசன்னமானார்.  செட்டியாருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.  வழக்கமான நடைமுறையை சுவாமிகள் அமல்படுத்துவார் என்று எதிர்பார்த்து. ஒரு சொம்பை எடுத்து சுவாமிகள் கையில் கொடுத்தார் செட்டியார். ஆனால் அந்தச் செம்பைத் தூர எறிந்தார் சுவாமிகள்.  செட்டியார் முதலில் அதிர்ந்தாலும், சுவாமிகள் ஏதோ லீலை நிகழ்த்தப்போகிறார் என்று அமைதியாக இருந்தார்.

பெரிய பெரிய அண்டாக்களில் இருந்த எண்ணெய் அனைத்தையும் கீழே சாய்த்துக் கொட்டினார்.  சுவாமிகள். செட்டியார் தவித்தார். உடனிருந்த அவரின் மனைவியும் கைகளைப் பிசைந்துக்கொண்டு தவித்தார்.  இருவரும் தடாலென சுவாமிகளின் திருப்பாதங்களில் விழுந்தனர். அவர்களை ஆசிர்வதித்த சுவாமிகள், இதோ பார்.... இங்க இருக்கிற எல்லா காலி அண்டாக்களிலும் தண்ணீரைப் பிடிச்சு வை.  இன்னொண்ணும் பண்ணு.  உன் வீட்டுல இருக்கிற எல்லா காலிப் பாத்திரங்களையும் கொண்டுவந்து.  அது எல்லாத்துலயும் தண்ணீரைப் புடிச்சு வை.  வீட்டுக்குப் போய்ப் படு.  நாளை காலைல வந்து கடையைத் திற.  என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் சுவாமிகள்.  அவரின் பேச்சுக்கு மறுபேச்சு எதுவும் பேசாமல் கடையில் இருந்த காலிப் பாத்திங்களிலும்வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பாத்திரங்களிலும் நீரை நிரைப்பினர். செட்டியாரும் அவர் மனைவியும், அதன்பின் வீடு திரும்பினர்.

மறுநாள் காலை செட்டியாரும் அவர் மனைவியும் வந்து கடையைத் திறந்தனர்.  முதல் நாள் இரவு தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரங்களைப் பார்த்த அவர்கள் முகத்தில் பிரகாசம்.  தண்ணீர் முழுதுவதும் எண்ணெயாக மாறியிருந்த ஸித்து வேலையைக் கண்டு பிரமித்தனர்.  பிறகென்ன... அன்றைக்குத் துவங்கிய கோலாகலமான வியாபாரம்.  செட்டியாரின் செல்லவாக்கை ஒஹோ வெனக் உயர்த்தியது.  இதற்கு நன்றிக்கடனாக சுவாமிகளின் பெயருக்கே ஒரு வீட்டை வாங்கி அவருக்கு அர்ப்பணித்தார் செட்டியார்.  இன்றைக்கும் அந்த வீட்டிலிருந்து வரும் வருமானம் சுவாமிகளின் அதிஷ்டானத்துக்குப் பயன்பட்டு வருகிறது.  சுவாமிகளின் எத்தனையோ ஸித்து வேலைகள் செய்து, பல நல்ல உள்ளங்களின் வாழ்வு மேம்பட ஆசிர்வதித்து வந்தாலும், மகனின் நடவடிக்கைகளில் அந்தத் தாயாருக்கு திருப்தி இல்லை மகனது எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று புலம்பினார். தன் தகப்பனார் காலமாகிவிட்ட பின், வீட்டை விட்டு வெளியேறினார் சுவாமிகள்.  புறப்படும் முன், தன் தாயாரிடம், எப்போது நீ என்னைக் கூப்பிடுகிறாயோ, அப்போது நான் உன் முன்னே வருவேன் என்று உறுதிமொழி கூறிவிட்டு வெளியேறினார்.  காலம் உருண்டோடியது.  சுவாமிகளின் தாயார் இறைவனடி சேரவேண்டிய வேளை நெருங்கியது.  அந்த தாயின் கண் முன்னால் காலதேவன் தோன்றி, அழைத்துச்செல்லத் தயாராக இருந்தான்.  உறவினர்களும் அண்டை அயலர்களும் கூடினர்.  தாயின் மனம் மகனை நினைத்து ஏங்கியது.  ஒரு கட்டத்தில் சுப்பையா .... என்று வாய் விட்டு உரக்க அழைத்தார்.  

அடுத்த விநாடியே, வந்துவிட்டேன் அம்மா என்று வீட்டினுள் நுழைந்தார் சுவாமிகள். கூடி இருந்த பலரும் அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டனர்.  தாயை நோக்கி நடந்த சுவாமிகள்.  அந்தப் புனதவதியின் தலையை மெள்ளத் தூக்கித் தன் மடிமேல் வைத்துக் கொண்டார்.  தாயின் மனம் குளிரிந்தது.  பாடசாலைக்குப் போகாமலே சுவாமிகளுக்கு அத்தனை  வேதங்களும் அத்துப்படி ஆகியிருந்தது.  சாம கானம் ஓதுவதில் சுவாமிகள் மிகவும் தேர்ந்தவர்.  தாயின் மனம் சந்தோஷப்படும்படி அழகாக ஏற்ற இறக்கத்துடன் சாம வேத கானம் பாடினார்.  மகன் உடலின் கதகதப்பு, அந்த தாய்க்கு இதமாக இருந்தது.

 இதைவிட ஒரு தாய்க்கு வேறென்ன சுகம் வேண்டும்!

 தாயின் முகத்தை ஏறிட்டார் சுவாமிகள்.  அம்மா.... கயிலாயம் செல்லத் தயாராக இருக்கிறாயா? என்று பரிவுடன் கேட்டார். ஆம் மகனே என்றார் தாயார். அடுத்த கணம் அந்த வீட்டின் முன் ஒரு ரதம் தோன்றியது.  சுவாமிகளின் கண்களுக்கு மட்டும் இந்த ரதம் தெரிந்தது. அதைச் செலுத்தி வந்த சிவ தூதர்களிடம், சிவ கணங்களே.... என் தாயரை வெகு ஜாக்கிரதையாகக் கயிலாயம் அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். சுவாமிகள் யாரிடம் இப்படிப் பேசுகிறார் என்று குழம்பினார்கள் அங்கிருந்தவர்கள். அடுத்த விநாடி, தாயாரிடம் இருந்து இறுதிமூச்சு வெளிப்பட்டுப் பிரிந்தது.  ரதத்ததில் சுவாமிகளின் அம்மா புறப்பட்டார்.  இறுதிக் காரியங்களை நிறைவேற்றும் பொருட்டு, அங்கிருந்தபடியே  சூரிய பகவானைப் பிரார்த்தித்தார் சுவாமிகள்.  தாய்க்கு உண்டான இறுதிக் கடனை நிறைவேற்றிய திருப்தியுடன் அங்கிருந்து மறைந்தார். பயணம் சென்று தரிசிக்க முடியாத இடங்களுக்கும் பலரைத் தன் சித்து வேலை மூலம் கூட்டிச் சென்று தரிசனம் செய்து வைத்தவர். சுவாமிகள்.

 தேச விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, சுவாமிகளின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர். விடுதலைப் போரட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் சுப்பிரமணிய சிவா, ஆன்மிகத்தின் பக்கம் நாட்டம் செலுத்த விரும்பி, சுவாமிகளுடனேயே சுற்றிக்கொண்டிருந்தார்.  நீ நாட்டுக்குச் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது. தேசம் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. என்று அவரை திருப்பி விட்டவர் சுவாமிகள். சுப்பிரமணிய சிவாவின் தங்கை ஞானாம்பாளும், சுவாமிகளின் தரிசனம் பெற்றவர். வயது முதிர்ந்த காலத்தில் ஞானாம்பாளுக்கு காசி, கயா, ஹரித்வார், ரிஷிகேஷ், அமர்நாத், கேதார்நாத் போன்ற புனிதத் திருத்தலங்களை தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் பிறந்தது.  தன் விருப்பத்தை சுவாமிகளிடம் தெரிவித்தார்.  புன்னகைத்த சுவாமிகள், ஞானாம்பாளைக் கண்களை மூடிக்கொள்ளச் சொன்னார்.  சில நிமிடத்திதுளிகளுக்குள் அந்த அம்மையார் ஆசைப்பட்ட தலங்களுக்குக் கூட்டிச் சென்று தரிசனம் செய்து வைத்தார்.

இதுபோல் திண்டுக்கல்லில் இருந்தப்படியே ராயர் ஒருவரின் மகனுக்கு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் காட்சியை தரிசிக்கச் செய்தார். ஒருமுறை தன்னைச் சுற்றி நின்ற பக்தர்களை அண்ணாமலைக்கு அரோஹரா என்று உச்சரிக்க சொன்னார்.  அன்று திருக்கார்த்திகை தீபத் திருநாள்.  அவர்கள் முழங்கிய அடுத்த கணம் அங்கே திருவண்ணாமலை தீபக்காட்சி தத்ரூபாமகத் தெரிந்தது.  திண்டுக்கல்லில் இருந்த அந்த பக்தர்கள் கூட்டம் தீபக் காட்சியை தரிசித்தபடியே பரவசமானது. வயதான தன் உறவினர்களை இதுபோல் கண் மூடிக் கண் திறப்பதற்குள் காசிக்குக் கூட்டிப் போய் கங்கையில் ஸ்நானம் செய்வித்து, காசி விஸ்வநாதர், அன்னை விசாலாட்சி, ஸ்ரீஅன்னபூரணி ஆகிய தெய்வங்களை தரிசிக்க வைத்தார். காசிக்குப் போனால் மட்டும் போதுமா? ராமேஸ்வரத்தையும் தரிசித்தால்தானே யாத்திரை பூர்த்தி ஆகும்? எனவே, காசியை தரிசனம் செய்து முடித்த அடுத்த நிமிடமே அவர்களை சேது சமுத்திரத்தில் ஸ்நானம் செய்ய வைத்து, ஸ்ரீராமநாதரையும் தரிசிக்க வைத்தார்.

ஒரே நேரத்தில் சுவாமிகளை இரண்டு மூன்று ஊர்களில் தரிசித்தவர்களுக்கு உண்டு. ஸ்ரீமத் ஓத சுவாமிகளின் சரித்திரத்தை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். எண்ணற்ற அருள் நிகழ்வுகள் அவரது வாழ்கையில் உண்டு. எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினால், நாம் மற்ற சித்த புருஷர்களை தரிசிக்க இயலாது.  எனவே, அந்த மகானின் குருவருளோடு இத்துடன் நிறைவு செய்வோம். சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ள இந்த மலைக் குøக் கோயிலில் ஸ்ரீலிங்கோத்பவர். ஸ்ரீஅமிர்தாம்பாள். ஸ்ரீவிநாயகர், நாகர்கள் போன்ற திருமேனிகளுக்கும் சந்நிதி உண்டு. அதிஷ்டானத்தின் இன்றைக்கும் ஜீவித்திருந்து தன் பக்தர்களைக் காத்து வரும் ஸ்ரீமத் ஓத சுவாமிகளுக்கு திருவாதிரை, கேட்டை நட்சத்திர நாட்கள் மற்றும் அமாவசை, பௌர்ணமி தினங்களில் அவரின் பக்தர்களால் விசேஷ வழிபாடுகள் நடத்தப்பட்டுவருகின்றன.  அன்னதானங்களும் சிறப்பாக நடந்து வருகின்றன.  சுவாமிகளை தரிசித்து அவரது அருளுக்குப் பாத்திரமான யோகி ஸ்ரீ சாரங்கு ரங்கநாத சுவாமிகளிள் என்பவருக்கும் இங்கே ஒரு அதிஷ்டானம் உண்டு. 

திண்டுக்கல்லில் ஜீவித்துவரும் ஸ்ரீமத் ஓத சுவாமிகளின் அதிஷ்டானத்தை தரிசித்து நலம் பெறுவோம்.

மீண்டும் சிந்திப்போம். 

மீள்பதிவாக:-

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

Tuesday, October 6, 2020

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாம் ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் இணைந்த பிறகு, சித்தன் அருள் வாசிக்க தொடங்கினோம். இந்த வாசிப்பு நம்மை அகத்தியத்தை நோக்கி நம்மை நேசிக்க செய்தது. சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம்  தொகுப்பில் சில கோயில்களுக்கு சென்று வர தொடங்கினோம்.சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பு நம்மை பொறுத்த வரை ஜீவ நாடி அற்புதங்களே ஆகும்.

இந்த அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பின் மூலம் நாம் ஓதிமலை, பாபநாசம் ஸ்நானம், அகத்தியர் மார்கழி குரு பூசை, கோடகநல்லூர் தரிசனம்  என தொடர்ந்து வருகின்றோம். இதில் நம்பிமலை தரிசனம் இன்னும் நாம் பெறாது இருந்தோம். அப்போது தான் சென்ற ஆண்டில் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் பின்வரும் செய்தி கிடைத்தது.

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்)

10/11/2019 - ஞாயிற்று கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம். 


                     

சரி. நம் TUT அன்பர்களோடு இரண்டு நாள் யாத்திரையாக கோடகநல்லூர் யாத்திரை மேற்கொள்ள வேண்டி குருவிடம் விண்ணப்பம் வைத்தோம். இதோ. நாம் சென்ற ஆண்டில் சென்று தரிசனம் செய்த கோடகநல்லூர் யாத்திரை அனுபவத்தை இங்கே தொடர்கின்றோம்.

8/11/2019 அன்று இரவு வழக்கம் போல் நம் பயணம் திருநெல்வேலி வரை தொடர்ந்தது. திருநெல்வேலியில் இருந்து நம்முடன் வி கே புரம் திரு.செல்லப்பா ஐயா இணைந்து கொண்டார். அடுத்து அங்கிருந்து ஒரு ஊர்தி மூலம் நம்பிமலை நோக்கி சென்றோம்.

நம்பிமலை புராணங்களால் போற்றப்பட்ட முக்கியமான மலை. இதன் மீது அமைந் திருக்கும் திருமலைநம்பி கோயில், வைணவத் தலங்களில் பிரசித்திப்பெற்றது. மேற்கு மலைத் தொடரில் மகேந்திரகிரி மலைப் பகுதியின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது நம்பிமலை. மேனியெங்கும் பசுமையைப் போர்த்தியபடி விண்ணை முட்டும் அளவுக்குத் திகழும்  மேற்குமலைத் தொடரின் ஒரு முகட்டில், ‘நம்பினோரைக் கைவிடேன்’ என்று அருளும் வண்ணம், கருணையின் பிறப்பிட மாகக் கோயில் கொண்டிருக்கிறார் திருமலைநம்பி.வாருங்கள் புறப்படுவோம் நம்பி மலைக்கு... நம்பிமலை அடிவாரத்திலேயே திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் உள்ளது. இம்முறை நாங்கள் அங்கே தரிசனம் பெறவில்லை. இந்த கோயில் அருகில் வாடகை  ஜீப் உள்ளது.இங்கே வாகன கட்டணம்  பேசி நாம் நம்பி மலை செல்ல ஆயத்தம் ஆக வேண்டும்.



திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடிக்கு அருகிலுள்ள வைணவ திருத்தலம் திருக்குறுங்குடி. இங்கிருந்து களக்காடு செல்லும் வழியில் பெரிய குளம் ஒன்று உள்ளது. `வட்டக் குளம்’ என்கிறார்கள். அதை யொட்டி வட்டப்பாறை அருகில் கோயில் கொண்டிருக்கிறார் சுடலை யாண்டவர். இவரை வழிபட்டுவிட்டு நகர்ந்தால், இந்தப் பகுதியிலுள்ள தோரண வளைவி லிருந்து தொடங்குகிறது நம்பிமலை பயணம்.


இதோ. இரண்டு ஜீப்களில் நம் அன்பர்கள் நம்பிமலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். நமக்கு தான் எப்போதும் மலை என்றாலே பிடிக்கும் அல்லவா? அடுத்து எப்போது இப்படி ஒரு மலை யாத்திரை நிகழும் என்ற எண்ணத்தில் நாம் நம்பிமலை நோக்கி நடந்து சென்றோம்.

 வட்டக்குளத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்தைக் கடந்தால் வனத் துறையின் செக் போஸ்ட் வருகிறது. அதைத் தாண்டி செல்ல தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.அங்கு, முறைப்படி பெயர் முதலான விவரங் களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்த இடத்துக்குமேல் வாகனங்களில் பயணிக்க இயலாது; ஆனால் அதற்கென்ற பிரத்யேக வாகனத்தில் செல்லலாம் ஒருனபருக்கு இருநூறு கட்டணம் (up & down)சேர்த்து கேட்ப்பார்கள் நாங்கள் அப்படித்தான் சென்றோம் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு மலைப் பாதையில் நடக்கவேண்டியிருக்கும். சற்றுக் கடினமான பயணம்தான். எனினும், பக்தர்கள் திருமலை நம்பியின்மீது அதீத நம்பிக்கை யோடும் பக்தியோடும் நடந்து செல்கிறார்கள்.



பெரும்பாலும் மலைக் கோயில்கள் சித்தர்களால் சிறப்பு பெற்றது என்பார்கள். இந்த மகேந்திரகிரி மலைப்பகுதியிலும் அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் உள்பட பல சித்தர்கள் நித்யவாசம் செய்வ தாகவும், மனதாலும் புலன்களாலும் நன்கு பக்குவப்பட்டவர்கள், இங்குள்ள சித்தர்களின் அனுக்கிரகத்தைப் பெறலாம் எனவும் நம்புகிறார்கள்.

மலை மீது ஏறும்போதே  மகேந்திரகிரியைப் பற்றி அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். விசாரித்ததில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 மீட்டர் உயரம் கொண்டது இந்த மலை. அடர்ந்த வனம்  மற்றும் ஓடைகள் நிறைந்தது இந்த மலைப்பகுதி. மலையின் அற்புதமான சீதோஷ்ண நிலையில் மூலிகைகள் செழித்து வளருகின்றன. தொழு கண்ணி, அழுகண்ணி, இடிநருங்கி, மதிமயங்கி, கருணைக் கிழங்கு, மலைநீலி, நீலத்தும்பை, அழவணம், கல்தாமரை, குமரி, குறிஞ்சிச் செடி, மருள், நாகதாளி, திருநீற்றுப் பூண்டு, பொன்னா வாரை, பேய்த்தி, பூவரசு, காட்டுச் சீரகம், மகா வில்வம், தான்றிக்காய் போன்ற மருத்துவ குணம் மிக்க அரிய மூலிகைகள் நிறைந்து திகழ்கின்றன.

வாகனத்தில் போகும்போது நமது உடலினுள்ள அனைத்து தசைப்பகுதிகளுக்கும் நல்ல ஒரு மசாஜ் கிடைத்ததாகவே உணர்ந்தோம். ஆம் இது நாம் இறங்கும் போது கிடைத்த அனுபவம் ஆகும். அப்படியொரு கரடுமுரடான பாதையில் எப்படி இந்த வாகனத்தை இயக்குகிறார்களோ தெரியவில்லை ஆனால் பத்திரமாக கொண்டுபோய் வந்து சேர்த்தார்கள்.


வாகனத்தில் இருந்து இறங்கியவுடன் ஒரு பாலம் அதனை கடந்துதான் நம்பிமலை கோவிலுக்கு செல்ல வேண்டும்.

நம்பி ஆண்டவர் ஆலயத்தின் அடிவாரத்தில் ஒரு புற்று உள்ளது. இந்தப் புற்றில் 201 சித்தர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தினமும் நம்பியைப் பூஜை செய்து அரூபமாக உலவுபவர்கள்.

நம்பியைத் தரிசிக்கும் முன்பு நம்பி ஆற்றில் ஒரு குளியல் போட வேண்டும். கோயிலில் இருந்து மிக அருகிலேயே நம்பி ஆறு அருவியாக கொட்டுகிறது. பாறைகளைக் கடந்து சில இடங்களில் தத்தித்தாவித்தான் செல்ல வேண்டும். பத்து நிமிடங்கள் பாறைகளைப் பிடித்து இடுக்குகளை தாவியும் நம்பி அருவிக்கு வந்தோம். சுமார் 50 அடிதான் உயரம் இருக்கும். இரண்டு பெரிய பாறை இடுக்கு வழியாக நம்பி ஆறு பொங்கி வழிகிறது. முன்பு பெரிய தடாகம். கண்ணாடி போல் தெளிவாக இருந்தது தண்ணீர்.நீங்களே பாருங்கள் .





அடுத்து எம் பெருமாளின் தரிசனம் பெற்றோம். அதற்கு முன்பாக காலை உணவை அங்கேயே எடுத்துக்கொண்டோம். 




நாம் சென்ற நேரம் சரியாக  திருமஞ்சனம் நடைபெற்ற நேரம். சுமார் 1 மணி நேரம் பெருமாள் முன்பு இருந்தோம்.நமது TUT  குழுவின் சார்பாக நமது உறுப்பினர் அனைவரும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் பெற்று வாழ அர்ச்சனை செய்யப்பட்டது. இவ்விரண்டும் மட்டும் இருந்தால் போதும். இவ்வுலகின் அனைத்து சுகங்களையும் அடைந்துவிடலாம். எப்போதும் கடவுளிடம் வேண்டும்போது தனித்தனியாக வீடு வேண்டும், கல்வி வேண்டும், பணம் வேண்டும், இன்ன பிற சமாச்சாரங்கள் வேண்டும் என கேட்காமல் மகிழ்ச்சி வேண்டும் என்று மட்டும் வேண்டுவோம். எவ்வளவுதான் பணம் இருந்தாலும்,ஆரோக்கியம் இல்லையென்றால் அக்குடும்பதில் மகிழ்ச்சி இருக்காது.ஆரோக்கியம் கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி தானாக வந்துவிடும்.அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமென்றால் மேலே சொன்னவை  கிடைக்கவேண்டும் அதை அந்த கடவுள் பார்த்துக்கொள்வார். அருமையான இறை தரிசனம் பெற்றோம்.





நம்பி மலை பெருமாள் தரிசனம் பெற்று வெளியே வந்து பிரகாரம் சுற்றினோம். மனதுள் ஒரு வித உணர்வில் கலந்தோம். இந்த இடத்தில் தான் அகத்தியர் மைந்தன் தெய்வத்திரு ஹனுமத்தாஸன் அவர்கள் ஜீவ நாடி வாசித்துள்ளார்கள் என்று மனம் மகிழ்ந்தது. ஸ்ரீ அகத்தியர் பெருமானின் ஆசி அங்கே கிடைக்க பெற்றோம். குருவருளும், திருவருளும் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இடம் நம்பி மலை. மீண்டும் மீண்டும் பிரகாரம் சுற்றினோம். அடுத்து ஸ்ரீ அழுகண்ணி சித்தர் தரிசனம் பெற சென்றோம். 





பதிவின் துவக்கத்தில் சொன்னது போல் இந்த இடத்தில் தான் சுமார் 200க்கும் மேற்பட்ட சித்தர்கள் தரிசனம் பெற முடியும். நம் ஊனக்கண்களுக்கு இதை உணர முடியுமா என்ன? மேலும் இங்கே உள்ள புளியமரம் பற்றியும் நம் குருநாதர் அடிக்கடி சொல்வதுண்டு. 





                        

அந்த ஜீவ நாடி அற்புதத்தை இங்கே தொடர விரும்புகின்றோம்.

 அந்த பதினைந்து நிமிடத்தில் அகத்தியர் சொன்னதை எல்லாம் நினைத்து எத்தனை திகைப்போடு இருந்தேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். ஏன் இத்தனை பேருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைத்தது? மற்றவருக்கெல்லாம், ஏன் இத்தனை பெரிய பாக்கியத்தை அவர் கொடுக்கவில்லை என்று யோசித்தேன். சிறிது நேரத்தில் மழை விட்டது. மறுபடியும் அதே இடத்தில் வந்தமர்ந்து நாடியை வாசிக்கத் தொடங்கினேன்.

"விண்ணிலிருந்து விழுகின்ற சிறு துளிக்கே பயப்படுகிறார்களே, வாழ்க்கையை எப்படியடா கொண்டு செல்லப் போகிறார்கள் என்று நான் எண்ணவில்லை. அகத்தியன் ஏட்டை காக்கவே, அகத்தியனை மழையிலிருந்து காக்கவே நினைக்கிறார்கள். அகத்தியன் இறைவன் அடி பணிந்து, தலை தாழ்ந்து உள்ளே தானே அமர்ந்திருக்கிறேன். அகத்தியனை உயர்ந்த இடத்தில் உட்காரவைப்பதில் என்ன நியாயம்? அகத்தியனை உட்கார வைக்கலாமா? அகத்தியன் தான் உள்ளே அமர்ந்து கொண்டு ஆனந்தப்பட்டுக் கொண்டு இருக்கிறேனே. ஆக, விண்ணில் இருந்து விழுந்த இரு துளிக்கு இவர்கள் ஏன் பயப்படுகிறார்கள். பெருமழையே பெய்தாலும், இடியே இடித்தாலும், மின்னலே கண்ணை பறித்தாலும், உங்களுக்குத்தான் ஏதுமே ஆகாது என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேனே. பின்னர் ஏன் இந்த பயம்?"  

​கேட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் ஒரு நிமிடம் திகைத்துத்தான் போய் விட்டனர்.

"அட ராமா! ராமா! அவர் கிண்டலடிப்பதுகூட திட்டுவது போல் தான் உள்ளது" என்றார் ஒரு நண்பர். ​

​நாடியை மேலும் படிக்கலானேன்.

ஆகவே ஒன்பது பிறவிகளில் இருந்து இவர்களை மீட்டுத் தந்திருக்கிறேன். அதுதான் உண்மை. ஆகவே நான் அடிக்கடி சொல்வதெல்லாம், முடிந்த அளவுக்கு நன்மை செய்யுங்கள், ஆனால் கெடுதல் பண்ண வேண்டாம். நீங்கள் அனைவரும் பூரணத்துவம் பெற்று விட்டீர்கள் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும். உங்களுக்கு எத்தனையோ சோதனைகள் தந்திருக்கிறேன், இன்னும் தந்து கொண்டு இருக்கிறேன். விதிமகளிடம் பலபேருக்கு பல காரியங்களுக்காக பேசிய போது விதிமகளுக்கும் எனக்கும் கடும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி அன்று ஒருநாள் கொடுமுடியிலே, காவிரிக்கரை ஓரத்திலே கூறும் போது, எனக்கும், விதிமகளுக்கும், பிரம்மாவுக்கும் மாறு பட்ட கருத்துக்கள் எல்லாம் வந்திருக்கிறது. பிரம்மா சொல்கிறார் "நீ ஏகப்பட்ட பேர்களுக்கு பரிந்துரை செய்துவிடுகிறாய். அத்தனை பேர்களின் தலை எழுத்தை ஓலைச்சுவடி நோக்கி கண்டுபிடித்து மாற்றி எழுத 10 ஆண்டுகள் குறைந்த பட்சம் ஆகும். அத்தனை பேர்களையும் நீ இஷ்டப்படி பரிந்துரை செய்து மாற்றி காப்பாற்று என்று சொன்னால்,  ​வாங்கின கடனை எவன் கொடுப்பான் என்று வட்டிக்காரன் கேட்பது போல் நான் கேட்கிறேன். அவன் செய்த பாபத்துக்கான கர்மாவுக்கு ஒரு தண்டனை கொடுக்க வேண்டாமா? என்று சொல்லி தண்டனையை வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறேன், தண்டனை கொடுக்காமல் இருக்க முடியாது என்று பிரம்மா என்னிடம் சொல்ல, நான்

"தண்டனை கொடுப்பாயோ, இல்லையோ. அதை யாம் அறியோம். என்னை நாடி வந்தான், அவனை காப்பாற்றுவதாக வாக்களித்திருக்கிறேன். அதாவது, அத்தனை பேர்களையும் காப்பாற்றவேண்டும், விதியை மாற்றவேண்டும் என்று தான் அகத்தியன் இன்றைக்கு கூட, கூறி வந்திருக்கிறேன்.  கூட்டம் அதிகம் என்பதால், அவன் பொதுவாக, மெதுவாக செய்கிறான். இது எனக்கு பிடிக்கவில்லை. ஒப்பவில்லை. இன்னும் இரண்டு பேர்களை போட்டுக் கொண்டுவிட்டால், அதிக உதவியாளர்களை வைத்து தீர்க்கச் சொல்லியிருக்கிறேன். கர்மாவை மாற்றி எழுத சொல்லியிருக்கிறேன். பிரம்மனுக்கு மட்டும் யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் இஷ்டப்படி செய்யலாம் என்று சட்டம் இருந்தால், அகத்தியனுக்கு இருக்ககூடாதா? என்று தான் மூவரிடமும் கேட்டு விட்டேன். அவர்களும் புன்னகை பூக்கிறார்கள். ஆகவே எல்லாருக்கும், எல்லா காரியமும் நல்ல சமயத்தில் நடக்கும். அதுவரை, "துன்புறுத்த மாட்டேன்" என்று அகத்தியன் அவர்களிடம் உறுதி மொழி வாங்கியிருக்கிறேன். உடனடியாக நல்ல காரியம் எதுவும் நடக்காவிட்டாலும், அவர்களை துன்பபடுத்தாமல், அவர்கள் மனதை எந்த கெடுதல் பண்ணாமல், புண்ணாக்காமல், நிம்மதியாக தூங்க விடுவதாக உத்தரவு வாங்கி இருக்கிறேன். ஆகவே, அந்த உத்தரவு படி தான் இன்றுவரை நடக்கிறது. ஏன் என்றால், இப்பொழுது கூட, என் வலது பக்கத்தில் இருக்கின்ற அன்னவனுக்கும், அன்னவன் கை பிடித்த நாயகிக்கும் அகத்தியன் மேல் இன்றுவரை சற்று கோபம் தான். சொன்னபடி நடக்கவில்லை என்று புண்ணாகி இருக்கிறான். அகத்தியன் அழைத்தான், திருக்குறுங்குடிக்கு வரட்டும் என்றும், அகத்தியன் என்னவேண்டு மானாலும் செய்யட்டும். அகத்தியன் எனக்கென்று ஒன்றுமே செய்யவில்லை, என்ற கேள்வி அவன் மனதுக்குள் எழுந்ததை, அகத்தியன் யாம் அறிவேன். ஏன் என்றால், அவன் எதிர் பார்த்த விஷயம் என்பது சாதாரண விஷயம். சாதாரண விஷயத்துக்கு கூட அகத்தியன் கை கொடுக்கவில்லையே என்கிற எதிர்பார்ப்பு அவனுக்குள் இருக்கிறது. வெளியே சொல்லவில்லையே தவிர, அதை அகத்தியன் கண்டு புன்முறுவல் பூத்துவிட்டுத்தான் வருகிறேன்.

"என்ன நடந்தது என்பது எனக்குத்தாண்டா தெரியும். சற்று முன் சொன்னேனே. எனக்கும், பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் இடையில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. கலைக்கெல்லாம் அதிபதியான சரஸ்வதி, பிரம்மா என்னிடம் கோபித்துக் கொண்டார் என்பதற்காகவோ, நான் பிரம்மாவிடம் கோபித்துக் கொண்டதற்காகவோ, சரஸ்வதி கூட சில சமயம் திசை மாறி போனாள். அதனால் ஏற்பட்ட விளைவடா இது. ஒருதலை பிரச்சினை என்பது தேவர்களுக்கு வரக்கூடாது. வந்து விட்டது. அது தவறு. இப்பொழுது அகத்தியன் சொல்கிறேன். அகத்தியனை தேடி யார் வந்தாலும் காப்பாற்றுவதாக சத்திய பிரமாணம் வாங்கி இருக்கிறேன். பிரம்மாவும் அதற்கு உடன்பட்டு கை எழுத்து இட்டது போல, புன் முறுவல் பூத்து, தலையாட்டி, கை கொடுத்து, ஆலிங்கனம் செய்துதான் எனக்கு கொடுத்திருக்கிறார். அந்த ஆலிங்கனத்தை வைத்து தான் அன்னவனுக்குச் சொன்னேன், நீ அங்கு போ, உனக்கு கலைவாணி அருள் இருக்கிறது என்று.  ஆனாலும் கலைவாணிக்கு என் மேல் என்ன கோபமோ, தெரியவில்லை. நான் பரிந்துரைத்ததை வந்து பார்க்காமல் சென்றது ஏனோ தெரியவில்லை. ஆனாலும், அன்னவன், சோமபானம், சுராபானம் போன்றவற்றை பழகி, தன் தேர்வில் மதிப்பெண்கள் கணக்கை குறைத்துக் கொண்டு விட்டதாக விதிமகள் என்னிடம் கூறியதை நான் ஏற்கவில்லை. ஏன் என்றால் அகத்தியனே மாறுபட்டு, பொய் சொல்கிறான் என்று எண்ணிவிடலாம். தவறு செய்வது என்பது மனித இயல்பு. மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் ஏதும் சொத்து கேட்கவில்லை, சுகம் கேட்கவில்லை, வேறு எதுவும் கேட்கவில்லை. வாழ்ந்ததற்கு அடையாளமாக, வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு உயர் பதவி வேண்டும் என்றுதானே அகத்தியனை கேட்டான். அகத்தியன் வீடு தேடி வந்தான். அகத்தியன் மனம் திறந்து வாழ்த்தினேன். எல்லோரும் என் குழந்தைகள். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். ஆனால் கலைவாணி சற்று முகம் மாறிவிட்டதால் வந்த விளைவிது. கலைவாணியிடம் எனக்கும் கோபம் இருந்தாலும், அந்த கோபத்தைவிட பன்மடங்கு கோபம் இவர்கள் மனதில் இருக்கிறது என்பதை அகத்தியன் யான் அறிவேன். உண்மையை சொல்வதில் தவறில்லை. ஆனால் அதையும் தாண்டி அகத்தியனை நோக்கி வந்திருக்கிறானே, இவன் பக்தியை என்னவென்று சொல்வது. ஆகவே, அன்னவனுக்கோ, அவன் குடும்பத்தாருக்கோ, இனி எந்தவித வில்லங்கமும் இல்லாமல் சிறப்பாக அமைய, அதை விட பன்மடங்கு வாழ்க்கையில் முன்னேற அகத்தியன் நிச்சயமாக நல்வழி காட்டுவேன். ஆகவே அஞ்சிட வேண்டாம். இதை அவன் கை பிடித்த நாயகியிடம் போய் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வாக்கை சொன்னேன். இது வெறும் முக அலங்காரம் அல்ல. அன்னவனை சமாதானப் படுத்த வேண்டிய அவசியம் அகத்தியனுக்கு இல்லை என்றாலும் கூட, உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசக்கூடாது என்பதால், அகத்தியனுக்கும், கலைவாணிக்கும் இடையில் நடந்த சம்பாஷணையை கூறுகிறேன். 

இவை ஒரு புறம் இருக்க, இப்பொழுது வந்த காரணங்கள், இப்பொழுது அபிஷேகம் முடிந்து பாத பூசை முடிந்து, நதிகள் எல்லாம் நம்பிதனை வணங்கி விட்டு செல்லுகின்ற காலம். கீழே விஸ்வாமித்ரர் இருக்கிறார், அவர் பின்னாலே, வசிஷ்டர் வருகிறார், ஜமதக்னி வருகிறார். துர்வாசர் வருகிறார். அத்தனை பேர்களும் உள்ளே நுழைகிறார்கள் இப்போது. அனைவரும் நம்பிதனை பார்த்து வாழ்த்துக்களை கூற, அவரும் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறார். ஆகவே, இந்த கலியுகத்தில், மகாபாரதம், ராமாயணம் போன்ற நடந்த நிகழ்ச்சிகளை பகுதி பகுதியாகத்தான் படித்திருக்கிறீர்கள். ஆனால், அத்தனை பேர்களும், அத்தனை மகரிஷிகளும், முனிவர்களும் நம்பிபெருமானை வணங்கிவிட்டு ஆசி வாங்கிக்கொண்டு செல்வதை அகத்தியன் ஓரமாக நின்று பார்க்கிறேன். எப்படிப்பட்ட மகான்கள், எத்தனை தபசு செய்தவர்கள். எத்தனை தபசுகளை வளர்த்து, பிரளயத்தையே உண்டு பண்ணக் கூடிய அளவுக்கு இருக்கிறது? அதோ காகபுசுண்டர் வந்திருக்கிறார். பிரளயத்துக்கு அப்பால் நிற்கக்கூடியவர் அவர். 4000 ஆண்டுகளுக்கு முன நடந்த பிரளயத்தின் போது காக்கை உருவத்தில் அமர்ந்திருந்தாரே. காகபுசுண்டர் வந்திருக்கிறார். ஆக, பிரளயத்தை கண்டிருந்த எல்லோரும் ஒன்று சேர்ந்திருந்த காலத்தில், மனித சித்தர்களாய் இருக்கிற உங்களையும் வரவழைத்தேனே. அவர்கள் முன் இங்கு உட்கார்ந்தாலே போதும். அவர்கள் அத்தனை பேர்களின் கடைக்கண் பார்வை உங்கள் மீது விழும். உங்கள் அத்தனை பேர்களுக்கும் அந்த மாபெரும் புண்ணியம் கிடைக்கும். 

உங்களுகெல்லாம் அடிக்கடி சொல்வதுண்டு. சொத்துக்களை சேர்ப்பது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், சொத்துக்களை சேர்ப்பதை விட புண்ணியத்தை சேருங்கள். அந்த புண்ணியம் தான் உங்கள் தலைமுறையை காக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் அதற்கும் மீறி, நீங்கள் பாபம் செய்தாலும், செய்யா விட்டாலும், புண்ணியம் செய்தாலும், செய்யாவிட்டாலும், இந்த அருமையான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் 333 ஆண்டுகளுக்கு உங்கள் குலம் செழிக்க, உங்கள் வாரிசு செழிக்க, உங்கள் வாழ்க்கை செழிக்க அகத்தியன் நல்ல படியாக வாழ்த்துகிறேன். (இந்த ஆசிர்வாதம், இந்தப் பதிவை வாசிக்கும் உங்களுக்கும் சேர்த்துத்தான்).







அடுத்து அங்கிருந்து மீண்டும் நம்பிமலை அடிவாரம் நோக்கி சென்றோம். என்னப்பா? கோடகநல்லூர் யாத்திரை என்று தலைப்பிட்டு, நம்பிமலை பற்றி என்று யோசிக்கின்றீர்களா? குருவின் வழியில் தானே நாம் சென்று கொண்டிருக்கின்றோம். கோடகநல்லூர் தரிசனம் விரைவில் தொடர்வோம்.

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html