"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, September 19, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். சென்ற பதிவில் திருநின்றவூர் பாக்கம் ஊரில் அருள்பாலித்து வரும் படிஅருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர்  ஆலயம் கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம். 

இதற்கு முந்தைய பதிவில்  அரசண்ணாமலையார் கோயிலில் 120 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை பதிவை  மூன்றாம் நாள் தரிசனம் பெற்றோம். மீண்டும் அங்கிருந்து தொடர விரும்புகின்றோம்.





ஆனந்தமான எண்ணத்தோடு அகஸ்தியர் பெருமானையும் மலைமீது குடி கொண்டிருக்கும் சிவபெருமானையும் மனதார வணங்கினேன்.

கையிலிருந்த "நாடிக்கு" மானசீகமான நன்றி சொல்லிவிட்டு மலையிலிருந்து கீழே இறங்கிய எனக்கு அந்தக் கிராமத்து மக்களின் வழியனுப்பு விழாவும் கிடைத்தது.

"இங்கேயே உங்களுக்குச் சகலவிதமான வசதிகளையும் செய்து தருகிறோம்.  இந்த மலை கோயிலுக்குச் சித்தர்களும் வருகிறார்கள்.  புனிதமான இந்தக் கிராமத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடுங்களேன்" என்று சொன்ன அந்தக் கிராமத்து ஜனங்களின் அன்பான வேண்டுகோளுக்கும் நன்றி சொல்லிவிட்டு ஊருக்குப் புறப்பட்டேன்.

கைமுறுக்கு, பணியாரம், அப்பம், பழம் ஆகியவை அவர்களால் எனக்கு அன்போடு கொடுக்கப்பட்டது.  இரட்டைக் காளை வண்டி ஒன்றை தயார் செய்து, அதில் ஏற்றி விட்டாலும், அந்தக் கிராமத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை என் மீது வெயில் படக்கூடாது என்பதற்காக ஒருவர், வண்டியில் ஏறி நின்று கொண்டே குடைபிடித்து வந்தது என் மனதை உருகச் செய்தது.

எப்படியும் இந்தக் கிராமத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்ல குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரமாகும்.  பொழுதை எப்படியாவது நல்ல படியாகக் கழிக்க வேண்டும் என்றால் அதற்க்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது எனக்குக் குடைபிடித்துக் கொண்டிருந்தவர் பரிதாபமாக என்னையும் அருகில் இருந்த நாடி வைத்திருந்த பெட்டியையும் மாறி மாறிப் பார்ப்பது தெரிந்தது.  ஆனால் வாய் திறந்து கேட்கவில்லை.

சரி இவனுக்கும் தான் "நாடி" பார்ப்போமே என்று எண்ணி அவனை அழைத்து "உனக்கு நாடி பார்க்க வேண்டுமா?" என்று கேட்டேன்.

"ஆமாம்" என்று வேகமாகத் தலையை ஆட்டினான்.

"சரி.  என் பக்கத்தில் உட்கார் - உனக்கு நாடி படிக்கிறேன்" என்று சொன்னேன்.  பவ்வியமாக உட்கார்ந்தான்.

எனக்கும் பொழுது போக வேண்டுமே - அகஸ்தியர் நாடியை ஓடுகின்ற மாட்டுவண்டியில் படிக்க ஆரம்பித்தேன்.

படிக்க படிக்க எனக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.  அவனைப் பற்றி ஒரு புதிய வரலாறே கிடைத்தது.

"மிகப்பெரிய ஜாமீன் பரம்பரையைச் சேர்ந்த அவனைச் சிறுவயதிலேயே சொத்துக்காகக் கடத்தி வந்திருக்கிறார்கள்.  அவன் பெற்றோர்களுக்குக் கொலை மிரட்டலும் அனுப்பப்பட்டிருக்கிறது.  இதை அவனது பெற்றோர் துளிகூட லட்ச்சியம் செய்யவில்லை.  ஆந்திராவுக்குக் கொண்டு சென்று கொல்ல வேண்டும் என்று எண்ணியவர்கள், அங்கு செல்லவில்லை.  ஈரோட்டிலேயே சில நாட்கள் தங்கிவிட்டார்கள்.  எந்த மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படாததால் இந்தக் குழந்தையைக் கொல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று அந்தக் குழந்தையை ஒரு வைகறைப் பொழுதில் ரோட்டில் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள்.

ரோட்டில் தனியாகக் கிடந்த ஆண் குழந்தையை இந்த மலைக் கோயிலைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தினர் ஈரோடு சந்தைக்கு வரும் பொழுது கண்டெடுத்துத் தங்களோடு எடுத்துச் சென்று விட்டனர்.

எங்கோ ராஜ போகாமாகப் பிறந்த இந்தக் குழந்தை விதியின் கொடுமையால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஒரு மண் குடிசைக்குள் வாழ்ந்து வந்தது.  நாளாக நாளாக அந்தப் பையன் வளர்ந்தான்.  படிப்பு இல்லை.  மலைக் கோயிலுக்கு அருகேயுள்ள மலைக்குன்றில் ஆடு மாடுகளை மேய்த்தும், சுள்ளி, விறகுகளைப் பொறுக்கியும் காலத்தைத் தள்ளியிருக்கிறான்.

ஒவ்வொரு நாளும் ஆடு மாடு மேய்க்கப் போகும் போது, மலைகோயில் சிவபெருமானை மனதார வேண்டி பிரார்த்தனை செய்து நூற்றி எட்டு தோப்புக் கரணங்களையும் போடுவான்.  எதற்காகப் பிரார்த்தனைச் செய்கிறான் என்று யாருக்கும் தெரியாது.  ஆனால் தெய்வ நம்பிக்கை மட்டும் அவனுக்கு அதிகம் இருந்தது.

அந்தக் கிராமத்தில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்த அவனுக்கு அவ்வளவாகப் பேசவராது.  திக்கித் திக்கித்தான் பேசுவான்.  கோயில் திருவிழா என்றாலும், அந்தக் கிராமத்து வீட்டுத் திருமண விழா என்றாலும் சரி, இவன் தான் முக்கியப் பொருப்பேர்ப்பான்.  வலிய வந்து உதவுவான்.

இதற்கிடையில் இவனை வளர்த்த அந்த விவசாயி காலமாகவே, ஊர் சோற்றில் வளர்ந்து கொண்டிருந்தான்" என்றொரு கதையை அகஸ்தியர் எனக்கு முதலில் சொல்லி - "விதி எவ்வளவு வலிது என்று பார்த்தாயா?" என்று என்னிடம் கேட்டார்.

"விதி வலிது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.  ஆனால், இவன் தன் பெறோரிடம் இனியும் சேர்ந்து வாழ முடியாதா?  அதற்கு அகஸ்தியர் அனுகிரகம் பண்ணக் கூடாதா?" என்று ஆவலுடன் கேட்டேன்.

"அப்படியொரு வாய்ப்பு அவனுக்கு இருப்பதனால் தான் அவனுக்கு யாம் உதவ இங்கு வந்தோம்" என்று ஒரு போடு போட்டார் அகஸ்தியர்.

"எப்படி?"

"சொல்கிறேன் கேள்.  இன்றிலிருந்து நாற்பது நாள் வரை இவன் அந்த மலைக் கோயில் சிவபெருமான் கருவறையில் ஒரு விளக்கு ஏற்றி வரட்டும்.  நாற்பத்தி ஒன்றாம் நாள் இவனைத் தென் மேற்குத் திசையிலிருந்து வருகின்ற ஒருவர், வேலைக் காரணமாக நியமித்து அழைத்துச் செல்வார்.

பின்னர்தான் இவன் வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீசும்.  எந்த ஜமீனிலிருந்து வெளியே வந்தானோ, அதே ஜாமீனுக்குள் நுழைவான் இருபத்தெட்டு ஆண்டுளுக்குப் பிறகு" என்று முடித்தார்.

நான் அவனை ஆச்சரியத்தோடும் பரிதாபத்தோடும் பார்த்தேன்.

அவனுக்குச் சரியாகப் பேசவராது என்று ஒன்றைத்தவிர சொலவதைப் புரிந்து கொள்ளும் சக்தி இருந்தது.

மெதுவாக அவனுக்குப் புரியும்படி அகஸ்தியர் நாடியில் வந்த விஷயத்தைச் சொன்னேன்.  முதலில் அவனுக்கு "ஜாமீன்" என்றால் என்னவென்றே புரியவில்லை.  அவன் கேட்ட ஒரு கேள்வி இதுதான்.

"எனக்கு மூணு வேளைக்கு வயிறார கஞ்சி கிடைக்குமா.  நல்ல வேட்டி கிடைக்குமா?" மிகப்பெரிய ஜாமீன் என்று அகஸ்தியர் குறிப்பிட்டதை எண்ணி இவனையும் பார்த்தேன்.  கோடிக்கணக்கான சொத்து கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இவன் இப்பொழுது வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறான்.  காய்ந்த வயிறு வெயில் பட்டுப்பட்டுக் கருத்துப் போன மேனி.  சீவாத தலை, ஷேவ் பண்ணாத முகம், சட்டையோ - பனியனோ போடாத உடம்பு.  ஒரு நான்கு முழ அழுக்கு வேட்டி, அடிக்கடி வெற்றிலை பாக்குப் போடுவான் போலிருக்கிறது.  அதனால் பல்லில் வெற்றிலைக் கறை லேசாகத் தெரிந்தது.

இத்தனையும் கொண்டிருந்தாலும் விகல்பம் இல்லாத மனது.  வெகுளியான பார்வை.  அடிகொரு தடவை மலைக் கோயிலைப் பார்த்துப் பார்த்துக் கும்பிடுகின்ற பக்தி.  இது தான் எனக்கு அவன் மீது அளவற்ற அன்பை வர வழைத்தது.  இல்லையெனில் அகத்தியர் நாடியை இவனுக்கு நான் ஏன் பார்க்கப் போகிறேன்?

"நாற்பது நாள் கோயிலுக்கு விளகேத்தனும், முடியுமா உன்னால்?"

"என்னை உள்ளே விடமாட்டாங்களே சாமி.  என்ன செய்யறது?"

நான் சொன்னதாகச் சொல்லு.  கர்ப்ப கிரகத்திலே விளக்கேத்த விடுவாங்க".

"சரி சாமி.  இந்த வண்டிக்காரர் கிட்டேயும் சொல்லுங்க சாமி.  அப்பத்தான் அவங்க நும்புவாங்க".

நான் உடனே எனக்கு வண்டி ஒட்டிக் கொண்டு வந்தவரிடம் "அகஸ்தியர் அருளும், மலைக்கோயில் சிவனது அருளும் இவனுக்குக் கிடைத்திருக்கிறது என்று நடந்ததைச் சொல்லி, நாற்பது நாள் கோயில் கர்பக்ரகத்தில் இவன் விளகேத்தணும்" என்றேன்.

"சரிங்க.  இவன் கையிலே காலணா காசு இல்லை.  எப்படி விளகேத்துவான்" என்று வண்டிக்காரர் கேட்டார்.

"நான் என்னால் ஆனதை தரேன்.  நீயும், மற்ற ஊர் காரங்களும் இவனுக்கு விளகேற்ற உதவி செய்யுங்க.  இவன் இன்னிக்கு ஒன்னும் இல்லாதவனாக உங்களுக்குப் படலாம்.  பலகோடி சொத்துக்கு விரைவில் அதிபதியாவான்.  அப்போ உன்னையும் கவனிச்சுப்பான்" என்று நான் சொன்னதைச் சுத்தமாக அந்த வண்டிக்காரர் நம்பவில்லை.

"சாமி! ஏதோ ஊருக்கு வந்தீங்க, மலை கோயிலுக்குப் போனீங்க.  உயிரோடு திரும்பி வந்தீங்க.  ஊர் சனங்க உங்களைப் பத்தி ஒசத்தியா நெனக்கிறாங்க.  எல்லாம் சரிதான்.  ஆனா போற போக்கிலே இவனைப் பத்தி சொல்லி "ஜாமீன் வாரிசு" கோடி கணக்கான சொத்துக்கு அதிபதின்னு சொல்றீங்களே இதைத்தான் நான் நம்பலே.

ஒரு வேளை சினிமாவிலே வேணா இப்படி நடக்கும்க.  நிஜ வாழ்க்கையிலே இதெல்லாம் நடக்காதுங்க.  இப்படி நான் சொல்றேன்னு என்னைத் தப்ப நெனச்சுக்காதீங்க" என்று பட்டவர்த்தனமாக என்னிடம் நேரிடையாகவே சொல்லிவிட்டார்.  நான் வாய் மூடி மௌனமானேன். மேற்கொண்டு பேசவோ விளக்கவோ முடியவில்லை.  இதற்குள் ஈரோடு ரயில்வே நிலையத்தை வண்டி நெருங்கியது.

ஜீவநாடி அற்புதங்கள் மீண்டும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

Wednesday, September 16, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். சென்ற பதிவில் திருநின்றவூர் பாக்கம் ஊரில் அருள்பாலித்து வரும் படிஅருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர்  ஆலயம் கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம். இன்றைய பதிவில் மீண்டும் அரசண்ணாமலையார் கோயிலில் 120 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை பதிவை  மூன்றாம் நாள் தொடர விரும்புகின்றோம்.


என்னிடம் இருக்கும் ஜீவநாடியில் இருந்துதான் அகஸ்தியர் அருள் புரிந்து வருகிறார் என்று இதுவரையில் நினைத்திருந்தேன்.  ஆனால் வேறு சில நாடிகள் மூலமும் அகஸ்தியர் அருள் புரிகிறார் என்பதை அகஸ்தியர் சொல்ல நான் கேட்ட பொழுது அதிசயித்துப் போனேன்.

முதலில் இந்தக் கிராமத்தில் அடியெடுத்து வைத்தபோது அந்த கிராமத்தின் பெருமை, மலைக்கோயிலின் பெருமை தெரியாமலிருந்தது.  கடந்த இரண்டு நாட்களாக எனக்கு அகஸ்தியர் மூலம் கிடைத்த அனுபவத்திற்குப் பின் என்னையும் அறியாமல் அந்தக் கோயிலின் மீது ஓர் ஈர்ப்பு தன்மை ஏற்பட்டது.

இரவில் மட்டும் தேவர்களையும், சித்தர்களையும் ஒலிவடிவாக கண்டு வந்த நான் இப்பொழுது பகலிலும் வழிபடத் தொடங்கினால் என்ன? என்று தோன்றியது.  கீழே இறங்கி குளித்து, பூசையை முடித்துவிட்டு மற்றவர்களோடு வீண் அரட்டை அடிப்பதை விடப் பேசாமல் இங்கு வந்து பகல் முழுவதும் த்யானம் செய்வது நல்லது எனத் தோன்றியதை குருக்களிடம் சொன்னேன்.

அவர் "திருவாதிரை" நட்சத்திரத்தைச் சொன்னதும் நேற்றிரவு சாம்பார் சாதமும் தயிர் சாதமும் திருவாதிரைக் களியாக மாறியதற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் என்று என் உள்மனம் சொன்னதால் பகலிலே சிவபெருமானை தரிசனம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தேன்.

இதற்கிடையில்,

நோய்வாய்ப்பட்ட கர்ணத்தின் தம்பி மனைவி இறைவனடி சேர்ந்துவிட்டதாகவும் மற்ற காரியங்கள் அங்கேயே நடப்பதாகவும் தகவல் கிடைத்தது.  எப்படியோ "கர்ணம்" தப்பிவிட்டார்.  அவர் தம்பிக்கும், அவர் மனைவியிடமிருந்து விடை கிடைத்து விட்டது.  இனிமேல் தன் இரண்டாம் மனைவியோடு குடித்தனம் நடத்த காஷ்மீரத்திருக்குப் புறப்பட்டுச் செல்லலாம்.

கர்ணத்தின் தம்பியின் சொத்துக்கள் இனி இந்த மலைக் கோயிலுக்கு சேர்ந்து விடும்.  அதை வைத்து, ஆகம விதிப்படி விமரிசையாக கோயில் கும்பாபிஷேகம் செய்துவிடலாம்.  கோயிலுக்குரிய தோஷம் விலகிவிடும் என்று இப்படியெல்லாம் மனதிற்குள் எண்ணிக் கொண்டேன்.

கிராமத்திற்கு சென்று என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின்னர் சிற்றுண்டி தண்ணீர் சகிதம் மதியத்திற்கு மேல் மலைப்படி ஏறினேன்.  விளக்கு, டார்ச் லைட் எதுவும் கொண்டு வராதே.  நடு வழியில் படுக்காதே, நந்திக்கு பக்கத்தில் அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டு த்யானம் செய்.  தப்பித் தவறிக் கூட கண்ணைத் திறக்காதே - இதெல்லாம் இன்று நள்ளிரவில் நான் கடைபிடிக்க வேண்டிய விதிகள்.

இரண்டு நாள் இரவில் எனக்குக் கிடைத்த அனுபவம் அலாதிதான்.  இதைவிட மூன்றாவது நாளான இன்று என்ன அதிசயத்தை அகஸ்தியர் எனக்குக் காட்டப் போகிறார் என்ற ஆர்வம் சாயங்காலத்திலிருந்தே ஏற்பட்டது.  மலைக்கு வருகிறவர்கள் பலர், சுவாமியைப் பார்க்கிறார்களோ இல்லையோ, நந்தி பக்கத்திலிருந்த என்னை, வினோதமாய்ப் பார்த்தார்கள்.  மிருகக் காட்சி சாலையில் வினோதமான மிருகத்தைத் தள்ளி நின்று பார்ப்பது போல்தான் என் மனதில் தோன்றியது.

கொஞ்ச நேரம் த்யானம்.  கொஞ்ச நேரம் மலையை சுற்றி வருதல்.  கொஞ்ச நேரம் அந்த மலையை சுற்றி உள்ள காட்ச்சிகளை ரசித்தல்.  கோயிலில் ஏதாவது கல்வெட்டு தென்படுகிறதா? என்று கோயில் மதில் சுவற்றை தடவிப் பார்த்தேன்.  இப்படியாகச் சாயங்காலம் வரை பொழுதைக் கஷ்டப்பட்டு கழித்தேன்.  முழுமையாக "த்யானம்" செய்யச் சூழ்நிலை இடம் தரவில்லை.

சாயரட்ச்சை ஆனதும் குருக்கள் கோயில் கதவைப் பூட்டிவிட்டுக் கீழே இறங்கினார்.  அவரை வழியனுப்பிவிட்டு அமைதியாக நந்தி பக்கம் அமர்ந்தேன்.

திடீரென்று ஒரு குளிர்ந்த காற்று வேகமாக வீசியது.  உடம்பை நன்றாகப் போர்த்திக் கொள்ளலாம் என்றால் - ஒரு துண்டைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை.  இந்த குளிர்காற்று தொடர்ந்து வீசினால் ஒன்று நான் ஜுரத்தால் அங்கேயே படுத்திருப்பேன், அல்லது போனால் போகட்டும் போடா என்று விறு விறு என்று மலையிலிருந்து கீழே இறங்கி, கிராமத்தில் எங்கேயாவது அடைக்கலாமாகியிருப்பேன்.

எனினும் தட்டுத் தடுமாறி என் கைபெட்டியைத் திறந்து அந்தத் துண்டை எடுத்து முண்டாசு போல் கட்டிக் கொண்ட போது என் பெட்டியிலிருந்த அகத்தியர் நாடியை, மறுபடியும் வீசிய காற்று எங்கேயோ தூக்கிச் சென்றுவிட்டது.

எனக்கு உயிர்காத்த அந்த நாடியைத் தொலைத்தது துரதிஷ்டம்தான்.  பெட்டியை ஒரு ஓரமாகக் காற்றுபடாமல் சாய்த்துவிட்டு அந்த சந்தியாகால இருட்டில் தேடியபொழுது என் கைக்கு எங்குமே கிட்டவில்லை.  மாறாக அந்தக் குளிரிலும் நான் வியர்த்துப் போனதுதான் மிச்சம்.

சில சமயங்களில் இக்கட்டான சூழ்நிலையில் நான் மாட்டிக் கொண்டு முழித்தபோது "இந்த நாடியைத் தூக்கி எறிந்துவிட்டால் என்ன?" என்று நினைத்தது உண்டு.  ஆனால் இன்றைக்கு உண்மையில் அந்த ஓலைச்சுவடி காற்றினால் தூக்கிச் செல்லப்பட்டபோது ஒரு நிமிடம் ஆடித்தான் போனேன்.

"சரி.  எப்படி என் கைக்கு வந்ததோ அப்படியே கை மாறிவிட்டது.  எல்லாம் அகத்தியர் இஷ்டம் என்று கஷ்டப்பட்டு என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.  மேலும் நேரத்தை வீணாக்க கூடாது என்பதால் அலைந்து திரிந்து பார்த்துவிட்டு மறுபடியும் அந்த நந்தியின் காலடியில் அமர்ந்தேன்.

நந்தியின் காலடியில் அமர்ந்ததால் அடிக்கடி அப்போது வீசிக்கொண்டிருந்த குளிர்ந்த வேகமான காற்று இப்பொழுது என் மீது படாமலே சென்றது. அந்தக் காற்றிலிருந்து என்னைக் காப்பாற்ற நந்தி பெருமானே தன் இரு கரங்களுக்கு இடையில் என்னை மிக நன்றாகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது போல் ஓர் உணர்வு தலை தூக்கியது.

இப்பொழுது எனக்குக் குளிர் காற்று தெரியவில்லை.

ஒரு உஷ்ணமான மூச்சு என்னைச் சுற்றி வீசியதால் தலையில் கட்டிய முண்டாசுவைக் கழற்றி விட்டேன்.  நேரமாக நேரமாக என் சட்டை, பனியன் இவற்றையும் கழற்றி விட்டேன்.

காற்று பலமாக வீசிய போதும் நான் வெறும் மார்புடன் இருந்தேன்.  குளிர்வாடை தெரிய வில்லை.  ஆனால் ஒரு உஷ்ணமான காற்று மட்டும் என்னைச் சுற்றி வீசிக் கொண்டிருந்ததை உணர முடிந்தது.  அது எப்படி எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை.  அப்படியே விட்டு விட்டேன்.

நேரமாக நேரமாக நான் கண்ணை மூடிக்கொண்டு த்யானத்தில் ஈடுபட்டேன்.  இடை இடையே ஜீவநாடி காணாமல் போனதால் மனம் சஞ்சலப்பட்டது.  முழுமையான த்யானம் எட்டவில்லை.  பசியும் என்னைவிட்டு விலகிவிட்டதால் கொண்டு வந்திருந்த சாப்பாடு அப்படியே கிடந்தது.

கண்ணை மூடிக்கொள்ளச் சொல்லியிருந்ததால் அப்படியே மூடிக் கொண்டு தியானத்தை செயல் படுத்த ஆரம்பித்தேன்.  எவ்வளவு நேரம் இப்படியே இருந்திருப்பேனோ தெரியாது.  திடீரென்று மெட்டி ஒலிச் சத்தம் கேட்டது.

சட்டென்று கண்ணைத் திறந்தேன்.  மெட்டிச் சப்தம் காணவில்லை.

மறுபடியும் அகத்தியரை வேண்டி த்யானம் செய்து கண்ணை மூடிக் கொண்டேன்.  இப்போது பல மெட்டிகளின் சப்தங்கள் கேட்டது.  நறுமணப் புகை நாசியில் நுழைந்தது.  மேளம் துந்துபிகள் முழக்கம், ஆலயமணி ஓசை, மங்கலமான வேத கோஷம் காதில் விழ ஆரம்பித்தது.

சர்வ வியாபியான சிவ பெருமானும் பார்வதி தேவியும் நடுவில் அமர்ந்திருக்க மலர்களால் வாசனைத் திரவியங்களால் சித்தர்கள், தேவர்கள், அர்ச்சனை அபிஷேகங்களைச் செய்கிறார்கள்.

விஷ்ணு - சிம்ம முகத்தோடு லெட்சுமி தேவி சகிதம், சிவபெருமானுக்கு மங்கள ஸ்நானம் செய்கிறார்.

பிரம்மன், சரஸ்வதி தேவியோடு வந்து சிவபெருமானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் செய்கிறார்.

பிறகு இந்திரர்கள் - முனிவர்கள் - சித்தர்கள் - அபிஷேக ஆராதனை செய்கிறார்கள்.  எங்கும் மங்கள கோஷம்.

இவையெல்லாம் பத்து நிமிடத்திற்குள் முடிந்துவிட பின்பு பெரும்காற்று ஒன்று வேகமாகக் கருவறையிலிருந்து வெளியேற, அங்கிருந்த அத்தனை பேர்களும் ஒரு நொடி நேரத்தில் மறைகிறார்கள்.

பின்பு வெகுநேரம் எந்தவித சப்தமும் பரிமள வாசனையும் என்னில் படவில்லை.  கண்ணை திறந்தேன்.

அமைதியான சூழ்நிலை கண்ணில் தெரிந்தது.  நந்தி பெருமான் தன் பிடியிலிருந்து என்னை விட்டுவிட்டது போன்று தோன்றியது.  நேற்றைய இரவு போல் என்னைப் பயமுறுத்தும் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

நள்ளிரவு நேரம் என்பதை வானத்து நட்சத்திரங்களும் கிராமத்திலிருந்து அவ்வப்போது குரைக்கும் நாய்களின் சப்தமும் மட்டும் மெல்லியதாக உணர்த்தின.

சற்று முன்னர் நான் கண்டது கற்பனையா? இல்லை நடந்ததா? என்பதை அறியும் முயற்சியில் இறங்கவில்லை.

இதை வெளியில் சொன்னால் அளவுக்கு மீறிய கற்பனை என்று ஒரே பேச்சில் என்னைப் பைத்தியக்காரனாக்கி விரட்டி விடுவார்கள்.  இல்லையென்றால் கற்பனைக்கும் ஒரு எல்லை உண்டு.  அதையும் தாண்டி நான் பேசுவதாக எண்ணி, இந்த சமுதாயத்திலிருந்தே விலக்கி வைத்தாலும் வைக்கலாம்.  மொத்தத்தில் என்னை நம்பவே மாட்டார்கள்.  எனவே இதைச் சொல்லாமல் அகத்தியருக்கு நன்றி சொல்லி, அமைதியாக இருப்பதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தேன்.

நேற்று இரவை விட இன்று எனக்குக் கிடைத்த அனுபவம் புதிதுதான்.  கண்ணை மூடிக் கொண்டு சிவபார்வதியையும் லெட்சுமி நரசிம்மரையும், பிரம்மா சரஸ்வதியையும் இன்னும் பல்வேறு தேவர்களையும் ஒன்று சேர தரிசனம் செய்தது அதைவிட இவர்கள் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் அபிஷேகம் செய்வதை மானசீகமாக தரிசனம் செய்தது எனக்குக் கிடைத்தது,  என் பெற்றோர் செய்த புண்ணியம் தான்.  இதுதான் உண்மை.

இத்தகைய அபூர்வமான பாக்கியத்தை எனக்கு மூன்றாம் நாள் இரவு அன்று தந்த அகத்தியர், என்னிடமிருந்த நாடியைக் காற்றில் பிடிங்கிக் கொண்டது நான் செய்த பாபம் என்று எண்ணினேன்.

எப்படி எனக்குக் கிடைத்ததோ அப்படியே அதுவும் என் கைவிட்டுப் போயிற்று என்று ஒரு வகையில் திருப்தியாக இருந்தாலும், நிறையப் பேர்கள் எதையும் நம்ப மாட்டார்கள்.  பொய் சொல்கிறான் என்று தான் பெயர் சூட்டிவிடுவார்கள்.




பல்வேறு மிக முக்கியமான பெரிய பதவியில் நாட்டை ஆளுகின்ற பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் ரகசியமாகத் தங்களது எதிர் காலத்தைப் பற்றியும், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கேட்டுக் கொண்டு சென்ற நேரம்.

நாட்டிற்காகவும் சில காரியங்கள் அப்போது செய்ய வேண்டியிருந்தது.  அதற்கெல்லாம் நல்ல வழியைக் காட்டுவதாக அகஸ்தியர் ஏற்கெனவே சொல்லி இருந்தார்.  இதெல்லாம் இப்போதுதான் என் நினைவுக்கு வந்தது.

அப்படிப்பட்ட நேரத்தில் என் கையிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டு சென்று விட்டது மலை காற்று என்று நான் உண்மையைச் சொன்னால், சத்தியமாக ஒருவர் கூட நம்பமாட்டார்கள்.

இந்த நேரத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதை நினைத்து துக்கம் தொண்டையை அடைக்கத்தான் செய்தது.  யாருக்கும் கிடைக்காத சில பாக்கியங்களைக் கொடுத்துவிட்டுப் பிடுங்கவும் வேண்டாமே என்று நினைத்து வருந்தினேன்.  இதனால் பகவான் காட்டிய அந்த அருமையான "காட்சி" முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் போயிற்று.

மறுநாள் விடியற்காலை.

பொல பொலவென்று விடியத் தொடங்கிய காட்சி மனதைக் கொள்ளை கொண்டது.  இரவில் சாப்பிடாமல் இருந்த சாப்பாட்டு பொட்டலத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு வெற்று வயிற்றில் தண்ணீரை மட்டும் குடித்து முடித்தேன்.

காலையில், குருக்களும் வேறு சிலரும் வேகமாக மலையேறி வந்தார்கள்.  என்னைக் கண்டு "நேற்றைக்கு என்ன நடந்தது சொல்லுங்கோ" என்று ஆவலாகக் கேட்டார்கள்.  அவர்களது வேகத்தை சட்டென்று மாற்றக் கூடாது என்பதை உணர்ந்து "எல்லாம் நல்லபடியாக முந்தாநாள் மாதிரி தரிசனம் கிடைத்தது.  அதை அப்புறமாகச் சொல்றேன்" என்று கூறவிட்டு மௌனமானேன்.

குருக்களுக்கு என்ன தோன்றியதோ, தெரியவில்லை.  "கொஞ்சம் இருங்கோ, கருவறைக்குச் சென்று பார்த்துவிட்டு வருகிறேன்.  முந்தாநாள் மாதிரி ஏதாவது விசேஷம் நடந்திருக்கிறதா" என்று சொல்லிவிட்டு, கோவில் கதவைத் திறந்தார்.

அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே கையில் எதையோ எடுத்துக் கொண்டு பரக்கப் பரக்க என்னை நோக்கி ஓடி வந்தார்.

"என்ன சுவாமி அப்படிச் செய்திட்டேளே.  இது ரொம்பத் தப்பாச்சே" என்றார் குருக்கள்.  அவர் முகத்தில் எள்ளும் கொள்ளுமாக கோபம் வெடித்தது.

"என்ன செஞ்சுட்டேன் விளக்கமாகச் சொன்னா நன்னாயிருக்கும்"

"உங்களை கோயில்ல தங்கச் சொன்னதே ரொம்பத் தப்பு.  கர்ணம் இடம் கொடுத்திட்டார்.  ஊர் மக்கள் சொல்றதும் சரிதான்" என்றார், இன்னும் கடுமையாக.

நேத்திக்கு மிகுந்த மரியாதையோடு சாப்பாட்டுப் பொட்டலம் கொடுத்து வாய் நிறைய உபசரித்த குருக்களா இப்படி பேசுகிறார்? என்று எண்ணி நான் "ஹ்ம். நமக்கு நேரம் சரியில்லை.  இல்லைனா அகத்திய நாடி கைவிட்டுப் போகுமா? அல்லது குருக்கள் தான் இப்படி மாறி பேசுவாரா?" என்று மனதில் சொல்லிக் கொண்டேன்.

"செய்யற தப்பையும் செய்திட்டு இப்படி குத்துக்கல் மாதிரி நிக்கறேளே.  இது ஊர் மக்களுக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியுமோ........... உங்களை மாத்திரம் இல்லை, என்னையும் சேர்த்து மரத்திலே கட்டி உசிரை எடுத்துடுவா!" என்று மேலும் பொருமினார்.

குருக்களோடு மலைமேல் வந்திருந்த இரண்டொருவரின் முகம் மாறியது.  என்னை முறைத்துப் பார்த்தார்கள்.  ஏதோ மிகப் பெரிய விபரீதம் கருவறைக்குள் நடந்திருக்கிறது.  இதற்கு மூல காரணம் நான்தான் என்பதை குருக்கள் கண்டு பிடித்து விட்டதாக எண்ணினார்கள் போலும்! ஏற்கனவே இவர்களுக்கு கர்ணத்தின் மீது ஆத்திரம் இருந்தது.  இப்போது குருக்களே, கர்ணத்தைப் பற்றிச் சொல்லும்போது அவர்களுக்கு படு குஷியாகி விட்டது.

"என்ன சாமி - என்ன நடந்தது?"  கேட்டார்கள் அவர்கள்.

"என்ன நடக்கக் கூடாதோ அது நடந்திருக்கு.  நேத்திக்கு திருவாதிரை ஆச்சேன்னு சொல்லி, சிவனுக்குப் பிடித்தமான களியைப் பண்ணி பகவானுக்கு எடுத்து வச்சேன்.  நைவேத்தியம் பண்ணிட்டு எடுத்துண்டு வரலாம்னு நெனச்சு மறந்துட்டேன்.  இப்போ வந்து பார்த்தா, இந்த மனுஷன் ராத்திருக்கு உள்ளே போய் அந்த நைவேத்தியத்தை கபளீகரம் பண்ணிட்டு இவருக்கு நான் கொடுத்த தயிர் சாதத்தை அரையும் குறையுமாகச் சாப்பிட்டுவிட்டு அப்படியே எச்சிலோடு கருவறையிலே போட்டுட்டு வந்துட்டார்.  இப்படிச் செய்யலாமா?" என்றார் குருக்கள், மிகுந்த வருத்தத்துடன்.

எனக்கு இது ஒரு அதிர்ச்சி தகவலாக இருந்தது.

"குருக்களே! அவசரப்பட்டு ஏதாவது சொல்லாதீர்கள்.  நேத்திக்கு ராத்திரி பூராவும் நான் நந்தி பக்கத்திலேதான் உட்கார்ந்திருந்தேன்.  இன்னும் சொல்லப்போனால் நீங்க கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்தை அங்கேதான் வெச்சிருந்தேன்.  சாப்பிடக்கூட இல்லை.  வேணும்னா பாருங்கோ" என்று திரும்பிப் பார்த்தேன்.

அங்கே சற்றுமுன் எடுத்து வைத்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைக் காணவில்லை.

"இதைத்தானே தேடறேள்.  அது எப்படி அங்கிருக்கும்?  பாதி சாப்பிட்டும் சாப்பிடாமல் பொட்டலம் பிரிஞ்சு உள்ளே கிடக்கிறதே" என்று தன் கையிலிருந்த அந்தச் சாப்பாட்டுப் பொட்டலத்தை தூக்கிக் காண்பித்து, தூர எறிந்தார்.  பின்னர் கை கழுவி வருவதாகச் சொல்லிச் சென்றார்.  குருக்களது இந்த செய்கை எனக்கு வியப்புக் கலந்த வருத்தத்தைத் தந்தது.




குருக்கள் திரும்பி வந்ததும் அவரிடம் கேட்டேன்.

"குருக்களே - நீங்க ரொம்பக் கோபமாக இருக்கேள்.  நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ.  கோயில் கருவறைச் சாவி உங்ககிட்டே தானே இருக்கு?  பின் நான் எப்படிக் கோயிலுக்குள் போயிருக்க முடியும்!" என்றேன்.

"என்னது எப்படிப் போயிருக்க முடியுமா? அதற்கு ஆதாரம் இருக்கு - கொண்டு வந்து காட்டட்டுமா" என்றவர் சட்டென்று மறுபடியும் கோவிலுக்குள் நுழைந்தார்.

திரும்பி வரும் பொழுது அந்தக் குருக்களின் கையில் நேற்றிரவு காற்றினால் தூக்கிச் செல்லப்பட்ட காணாமல் போன, அகத்தியரின் ஜீவநாடி இருந்தது.

ஜீவநாடி அற்புதங்கள் மீண்டும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - 59 ஆண்டு ஆம் குருபூசை அழைப்பிதழ்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தலத்தில் அவ்வப்போது சித்தர்கள் தரிசனம் பெற்று வருகின்றோம். சித்தர்களை நாம் குருவாகவும் சிந்தித்து வருகின்றோம். இந்த சூழலில்இந்த ஆண்டு மகாளய பட்ச சேவை நாம் தினமும் செய்வோம் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து 15 ஆம் நாள் இன்று வரை செய்து வருகின்றோம். இம்முறை தினமும் குறைந்தது 5 அன்பர்களுக்கு உணவு கொடுக்க தீர்மானித்தோம். ஆனால் குருவருளால் கடந்த 15 நாட்களாக குறைந்தது 10 அன்பர்களுக்கு உணவு கொடுத்துள்ளோம். மேலும் இம்முறை போர்வை தானம், குடை தானம், வஸ்திர தானம் செய்ய குருவருளால் பணிக்கப் பெற்றோம். மஹாளய பட்ச அன்ன சேவையாக நாளை  காலை திருஅண்ணாமலையில், மதியம் கூடுவாஞ்சேரி வள்ளலார் சபையில் நடைபெற உள்ளது. மேலும் சோழிங்க நல்லூர் ஆதி சிவன்  டிரஸ்ட் சார்பில் வருகின்ற வியாழன் அன்று காலை சுமார் 50 அடியார்களுக்கு அன்னசேவை செய்ய குருவருள் நம்மை கூட்டுவித்துள்ளது. இவை அனைத்தும்  நாம் தான் செய்கின்றோம் என்று துளியும் எண்ணவில்லை, அனைத்தும் குருவருளால் தான் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கின்றது. நாம் இங்கே ஒரு கருவியாகத் தான் உள்ளோம் என்பது கண்கூடாக நமக்கு உணர்த்தப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு சித்தர் குருபூஜையும் ஒவ்வொரு விதத்தில்  சிறப்பாக இருக்கும். சிலர் பக்தி பற்றி பேசுவார்கள். சிலர் யோகம் பற்றி பேசுவார்கள்.சிலர் ஞானம் பற்றி பேசுவார்கள். சில சித்தர்களுக்கு யாக பூசை பிடிக்கும். சில சித்தர்களுக்கு அலங்காரம் பிடிக்கும். சில சித்தர் கோயில்களில் அபிஷேகம் இருக்கும். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர் எம் பெருமாள் அலங்காரப் பிரியர். சூரிய பகவான் நமஸ்காரப் பிரியர் ( இதனால் தான் சூரிய நமஸ்காரம் செய்ய சொல்கின்றார்கள் !).  அதே போல் விநாயகப் பெருமான் நைவேத்தியப் பிரியர். இது போல் தான் ஒவ்வொரு சித்தர் குரு பூஜையும் அவர்களின் சீடர்களால்  ஒவ்வொரு விதங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. அது போல் காவாங்கரை ஸ்ரீ கண்ணப்ப சுவாமிகள் குருபூஜைக்கென்று ஒரு சிறப்பு உள்ளது. ஆம்..ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குரு பூஜை வழிபாட்டில் அன்றைய ஒரு நாள் மட்டுமே ஸ்ரீ பகவான் ஸ்ரீ கண்ணப்ப சுவாமிகளுக்கு விபூதி அபிஷேகம் செய்யும் அரிய வாய்ப்பு கிடைக்கும். நாம் சென்ற ஆண்டு குருபூஜையில் கலந்து கொண்டு சுவாமிகளுக்கு விபூதி அபிஷேகம் செய்தோம்.


வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்தது கொண்டு குருவருள் பெறும்படி வேண்டுகின்றோம். இனி சுவாமிகள் பற்றி இங்கே காண உள்ளோம்.

நைநா என்று எல்லோறையும் அழைத்ந இந்த கருணைக்கடலிடம் உமது பெயர் என்ன? நைநா என்றதற்கு  கண்ணா,கண்ணான்னு கூபிடுவாங்க .இப்படி தான் இவருக்கு,கண்ணப்ப சுவாமி என்ற பெயர் விளங்களாயிற்று.இவரது சமாதி அமைந்திருக்கும் இடம் இவரது பெயரிலேயே காவாங்கரை கண்ணப்பசாமி நகர் என்று ஆழைக்கப் படுகிறது. நிர்வாண கோலத்தில் காவாங்கரை வந்த இவருக்கு.ஒரு துணியை எடுத்து உடுத்தி இருக்கிறார் ஒரு அம்மா,அவரை தான் முதலில் அம்மா என்று அழைத்தாராம்.அதுவரையில் அவர் மௌனமாக இருந்துள்ளார்.

                                                         
 நம் குருவும், குருவின் குருவும் தரிசனமும் பெற்றோம்.









மெளனம் களைந்த சாமி.அதன் பிறகு மக்களோடு இனைந்து சாதாரண மனிதராகவே வழ்ந்தார்.ஒரு சமயம்,சாமி தலையில் அதிக முடியுடன் பார்க்க அழுக்காக இருந்ததால்.அந்த அம்மா,முடி மழிப்பவரை அழைத்து சாமிக்கு மொட்டையடிக்க சொன்னாராம்.அதற்கு அந்த நாவிதர் ,தலை மிகவும் அழுக்காக உள்ளது,மொட்டையடித்தால் துர்நாற்றம் வீசும்.தான் மழிக்கமாட்டேன்.என்றாராம்.அத்த அம்மா வற்புறுத்தி கேட்டதன் பேரில் நாவிதர் கத்தியை எடுத்து சாமி தலையில் கை வைத்தவுடன்.நாவிதர் அரண்டு போய் விட்டாராம்.சாமி தலையிலிருந்து, சந்தனமும், ஜவ்வாது மணம் வீசியதாம்.நாற்றம் அடிக்கும் மொட்டை அடிக்கமாடேன் என்று சொன்னவருக்கு தன் வல்லமையை காட்டி அற்ப்புதம் செய்தவர் நமது  கண்ணப்ப சாமி. இந்த நிகழ்வுக்கு பிறகு.சாமியிடம் ஒரு வல்லமை இருப்பதை சிலர் உணர்ந்தனர்.



ஒரு சமயம் தங்க வேலை செய்யும் ஒருநபர் திருமணத்திற்கு தாலி செய்வதற்கு பணம் வாங்கி சூது விளையாடி. அந்த பணத்தை தோற்று விட்டார்.திருமண நாள் நெருங்கியது.ஒரு பெண்ணின்  வாழ்க்கை பறிபோவதற்கு  நான் காரணமாகிவிட்டேனே,என்று மனவேதனை பட்டு,இந்த விசயம் வெளியில் தெரிந்தால் மானம்போய்விடுமே என்றெண்ணி  தற்கொலை செய்து தன் உயிரை,மாய்த்துக் கொள்ள நினைத்த அவர்.கடைசியாக கண்ணப்ப சாமியை பார்த்துவிட்டு போகலாம் என்று,காவாங்கரைக்கு வந்தாராம்.

எப்போதும் 'வா..'நைனா,'என்று வரவேற்கும் சாமி,அன்றைக்கு அவருக்கு  முகம் காட்டாமல் அமைதியாக இருந்தாராம்.சிறிது நேரம் கழித்து,அவர் என்னா? நைனா? எதுவும் பேசாம முகத்த திருப்பிக்கிற.?என்று,சாமியை கேட்டாராம்.அதற்கு சாமி.தற்கொலை செய்யணும்னு  நெனைக்கறவங்க கிட்ட பேசக்கூடாது 'நைனா'னு சாமி சொன்னாராம்.நான் என்னபன்னுவேன். தப்புப்பன்னிடேன்.எனக்கு வேற வழி தெரியலனு சொன்னாராம்.

பிறகு சாமி,தன் 'கை' யில் களிமண்ணை  எடுத்து இரண்டு உருண்டைகளாய் உருட்டி,

இந்தா ,ஒன்ன வச்சி தாலி செஞ்சி  குடு ,இன்னென்ன வச்சி பொழச்சிக்கோன்னு சாமி சொல்ல  ஒன்றும் புரியாம,அதை எடுத்துட்டு போய் பூசை அறையில வச்சிருக்காரு,மறுநாள் காலையில் பார்த்த போது,அந்த களிமண்  உருண்டை இரண்டும் தங்கமாய் மாறி இருந்த்தாம். மானத்தையும் உயிரையும் காப்பாற்றி தன் அற்புதத்தையும்  காட்டி இருக்கிரார் கருணைக்கடல் கண்ணப்பசாமி...


கண்ணப்ப ஸ்வாமிகள் கேரள பூமி, கண்ணனூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. இவருடைய தாய் எரமத்து என்னும் கிராமத்தையும் தந்தை செனியஞ்சால் என்ற கிராமத்தையும் சேர்ந்தவர்கள். இந்தக் கூற்றை மெய்ப்பிப்பது மாதிரி பின்னாளில் காவாங்கரையில் தான் தங்கி இருந்த குடிசையின் முகப்பில், எரமத்த செனியஞ்சாலு பிறந்தது மௌனகுரு கண்ணப்ப ஸ்வாமிகள் என்று எழுதி வைத்திருந்தாரம்.
ஷீர்டி பாபாவுக்கும் கண்ணப்ப ஸ்வாமிகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே எப்போது பிறந்தார்கள் என்கிற விவரம் தெரியாது. புகைக்கும் வழக்கம் இருவருக்குமே இருந்தது. இருவருடைய ஆரம்ப நாட்களும் குடிசையில்தான் கழிந்தன. பாபா வசித்த இடத்தின் அருகே ஒரு வேப்பமரம் இருந்தது போல கண்ணப்ப ஸ்வாமிகள் வசித்த வீட்டின் அருகேயும் ஒரு வேப்பமரம் இருந்தது. இருவருமே சட்டி போன்ற ஒரு பாத்திரத்தைக் கையில் வைத்து பிட்சை எடுத்துதான் உண்டு வந்தனர். இதையே பிறருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

ஒரு கட்டத்தில் சென்னை திரும்பிய அவர் செங்குன்றம் பகுதிக்கு வந்தார். 1948ம் வருடம், காவாங்கரையில் ஓரிடத்தில் அமர்ந்திருந்தார் கண்ணப்ப ஸ்வாமிகள். அப்போது அவருடன் கோவிந்தராவ் ஸ்வாமிகள் (இவர் தற்போது இல்லை, கண்ணப்ப ஸ்வாமிகளின் நினைவாலயத்தில் இருவருக்கும் சமாதி இருக்கிறது) நாகப்ப ரெட்டியார் போன்ற வேறு சில அன்பர்களும் இருந்தனர். 

உள்ளூர் விவசாயிகள் ஸ்வாமிகளின் குடிசையைக் கடந்தபோது ஆசி வாங்குவதற்காக உள்ளே நுழைந்தனர். உள்ளே கண்ட காட்சி அவர்களை உறையை வைத்தது. அந்த நேரத்தில் அகண்ட யோகத்தில் இருந்தார் ஸ்வாமிகள். கை கால், தலை, உடல் என்று அனைத்து உறுப்புகளும் தனித்தனியாக இருப்பதைப் பார்த்த விவசாயிகள் கலப்பையை அப்படியே போட்டுவிட்டு நம்ம சாமியை யாரோ கொன்னு போட்டுட்டாங்க என்று ஊருக்குள் தகவல் பரப்பினர். சற்று நேரம் கழித்து தன் அகண்ட யோகத்தை முடித்து கண்ணப்ப ஸ்வாமிகள் குடிசையை விட்டு வெளியே வந்தார். தன் குடிசை முன் ஏராளமானோர் திரண்டு நிற்பது ஏன் என்று கேட்டார். சற்று முன் அவரை அக்கு வேறு ஆணி வேறாகப் பார்த்த விவாசயிகள் முழு உடலுடன் பார்த்தபோது குழம்பிப் போனார்கள். அதன்பிறகே ஸ்வாமிகள் அவர்களிடம் அகண்ட யோகம் பற்றிச் சொல்லித் தெளிய வைத்தார்.
சபரிமலைக்குச் செல்லும் வழக்கம் உள்ள பக்தர்கள், காவாங்கரை கண்ணப்ப ஸ்வாமிகள் பற்றி ஓரளவு அறிந்திருப்பார்கள். பெரும்பாலான சென்னை பக்தர்கள் காவாங்கரை ஸ்ரீ கண்ணப்ப ஸ்வாமிகளின் அடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். சென்னையில் இருந்து பயணிக்கும்போது செங்குன்றத்துக்கு முன்னால் வரும் புழல் அருகே இருக்கிறது காவாங்கரை எனும் சிறு கிராமம்.

இந்தத் திருக்கூட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சைட்பேக் எனப்படும் ஜோல்னா பையைத் தங்களது தோளில் மாட்டிக் கொண்டு செல்வர்கள். அதில் காவாங்கரை ஸ்ரீ கண்ணப்ப ஸ்வாமிகள் திருவுருவப் படம் ஒரு பக்கம் இருக்கும் இன்னொரு பக்கம் இவர்களது அடியார் திருக்கூடத்தின் பெயர் இருக்கும். பொதுவாக இத்தகைய பக்தர்களை மற்றவர்கள் கண்ணப்பா குரூப் என்றே சொல்வார்கள்.
மௌனகுரு பகவான், சட்டிசாமி, சட்டிப்பரதேசி என்றெல்லாம் கண்ணப்ப ஸ்வாமிகளை அன்புடன் அழைத்து வருகிறார்கள்.

மகான்களின் சிலர், மனிதர்களை விட்டு விலகியே இருப்பார்கள். அந்த மகான்களின் செயல்பாடுகள் அனைத்தும் உலகத்தில் உள்ள சாதாரண மக்களின் தேவைகளையும் அவர்களது நலன்களையுமே சுற்றி இருக்கும்.



மகான்களை முழுவதுமாக நம்பி சரண் அடைந்தால் எண்ணியது கைகூடும். இது எவருக்கும் விதிவிலக்கல்ல. இவர்கள் சொல்வது நமக்கு அதன் தன்மையை அதிகப்படுத்துவதாக இருக்கும் ஆனால் உண்மையில் அது அப்படி அல்ல. ஏன் நமக்கு இப்படி ஒரு தீர்வு சொல்லி இருக்கிறார்? என்று ஆராய முற்படக்கூடாது. ஒரு குருவுக்கு தெரியாதா தன் சீடனின் கவலை?
கண்ணப்ப ஸ்வாமிகளின் பக்தர் ஒருவரால் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஒரு வருடம் சபரிமலைக்குச் செல்ல முடியவில்லை. அந்த பக்தருக்கு வருத்தம். சபரிமலையில் மகரஜோதி தென்படும் நாளன்று அந்த பக்தர், காவாங்கரைக்கு வந்தார். பக்தனின் குறையை அறிந்தார் ஸ்வாமிகள். அப்போது மாலை நேரம் சூரியனும் மறைய ஆரம்பித்தார்.

என்னப்பா, சபரிமலைக்குப் போய் ஜோதி பார்க்க முடியலேன்னு வருத்தமா? என்று கேட்டார். ஆமா சாமீ. வா என் பின்னால் என்ற ஸ்வாமிகள் விறுவிறுவென்று அருகில் இருக்கும் ஏரிக்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை. எனினும் ஸ்வாமிகளைப் பின்தொடர்ந்தார். ஒரு மேடான இடத்தை அவர்கள் அடைந்தனர். பக்தனை அருகே அழைத்த ஸ்வாமிகள் மேலே ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி அங்கே பார் நீ காண விரும்பிய காந்தமலை ஜோதி. நன்றாகத் தரிசித்துக்கொள் என்றார். ஸ்வாமிகள் காட்டிய திசையைக் கவனித்த பக்தர் விதிர்விதிர்த்துப் போய்விட்டார். சபரிமலையில் இருந்தால் எப்படி ஜோதியைத் தரிசிக்க முடியுமோ, அதுபோல் காவாங்கரையில் இருந்தபடியே அந்த அற்புதக் காட்சியைத் தரிசித்தார் பக்தர். கண்ணப்ப ஸ்வாமிகளுக்கும் ஐயப்பனுக்கும் எப்படி ஒரு தொடர்பு ஏற்ப்பட்டது.


காவல்துறையில் பணிபுரிந்த ஒருஅன்பர் கடும் எலும்புருக்கி நோயால் அவஸ்தைப்பட்டார். நான்கு விலா எலும்புகளை எடுத்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என்று மருத்துவர் திர்மானமாகசொல்லிவிட்டார்கள். உடல்நோய் காரணமாக பணியில் இருந்து அவரை விலக்கி விட்டார்கள். இனியும் தான் பிழைப்போம் என்கிற  நம்பிக்கை இழந்த நிலையில் அன்பர் கண்ணப்ப ஸ்வாமிகள் பற்றி யாரோ சிலர் அவரிடம் சொன்னார்கள். அவநம்பிக்கையுடன் ஸ்வாமிகளிடம் வந்தார் அன்பர். கவலையுடன் காணப்பட்டவரை அருகே அழைத்து ஒரு பாக்கெட் சிகரெட்டைக் கொடுத்துப் புகைக்கச் சொன்னார். பதறிப்போய்விட்டார் அந்த அன்பர் ஐயையோ, எலும்புருக்கி நோயால் தவிக்கும் எனக்கு சிகரெட்டைக் கொடுத்து ஏன் புகைக்கச் சொல்கிறீர்கள்? ஏற்கனவே இருக்கும் நோயை அதிகப்படுத்தாதா? ஆபத்தை வலியச் சென்று தேடுவதாக அல்லவா உங்கள் செயல் இருக்கிறது? என்று ஸ்வாமிகளிடமே கேட்டார். புன்னகைத்த ஸ்வாமிகள், இதைப் பிடி அன்பனே, உனது நோய் எல்லாவற்றையும் இது போக்கிவிடும் என்று பதில் சொல்லி இருக்கிறார்.

3மாதங்கள் ஓடின. வழக்கம்போல் ஒரு நாள் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றார் அந்த அன்பர். அவரை முழுவதும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், உங்கள் உடலில் வியாதி இருந்தற்கான அடையாளமே இல்லை. நீங்கள் பூரணமாக நலம் பெற்றுவிட்டீர்கள். ஏதோ ஒரு சக்திதான் உங்களை இந்த அளவுக்கு குணமாக்கி இருக்கிறது என்று கூறி, சந்தோஷத்துடன் அனுப்பி வைத்தனர். இந்த அன்பர் ஓர் உதாரணம்தான். இப்படி எத்தனையோ பேரைப் பல வியாதிகளில் இருந்து காப்பாற்றி வாழ வைத்திருக்கிறார்.


கண்ணப்ப ஸ்வாமிகளின் பக்தர்களது இல்லத்து முகப்பில் இவர் புகைப்படத்தை காணலாம். இந்தப் புகைப்படத்தின் பின்னணியில் ஒரு குடிசை வீடும், நாயும் தென்படும். என் பக்தர்களின் வீட்டில் ஒரு கூர்க்காவாக இருந்து அவர்களை என்றென்றும் காப்பேன் என்றே கண்ணப்ப ஸ்வாமிகள் சொல்லி இருக்கிறாராம்.




9.10,1961 பிலவ வருடம் புரட்டாசி மாதம் 23 ஆம் தேதி மகளாய அமாவாசை ஹஸ்த நட்சத்திர தினத்தில் கண்ணப்ப ஸ்வாமிகள் முக்தி அடைந்தார். தற்போது இந்த நாளில் கண்ணப்ப ஸ்வாமிகளின் குருபூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. புழல் சிறைச்சாலையின் அருகே ஒரு வளைவின் உள்ளே சென்றால் இவருடைய சமாதியையும் திருக்கோயிலையும் அடையலாம். ஒரு சிறு சாலையின் ஒரு பக்கம் திருக்கோயிலும் மறுபக்கம் சமாதியும் அமைந்துள்ளள. சமாதி அடைவதற்கு முன் தனக்கான இடத்தைத் தேடினாராம் கண்ணப்ப ஸ்வாமிகள் அருகில் உள்ள ஓர் இடத்தைத் தேர்வு செய்தார். அந்த இடம் ராஜா அண்ணாமலைச் சொட்டியாருக்குச் சொந்தமானது. அந்த இடத்திலேயே சமாதி அமைந்துள்ளது.
திருக்கோயிலுக்குள் நுழைந்தால் தெய்வத் திருவுருவங்களின் நிறைவான தரிசம். சமாதிக்குள் அந்த சத்திய புருஷனின் சான்னித்யம். திருக்கோயிலுக்குள் சுதை. சிலா (கல்) மார்பிள் வடிவங்களில் கண்ணப்ப ஸ்வாமிகள் அருள் புரிகிறார். தவிர விழாக் காலங்களில் உலா வருவதற்கு இவருக்கு இங்கே பஞ்சலோக விக்கிரகமும் இருக்கிறது. இந்தத் திருக்கோயிலை உருவாக்கியதில் கோவிந்தராவ் ஸ்வாமிகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மூலவர் விக்கிரகம் கிழக்கு நோக்கியும் உற்சவர் விக்கிரகம் வடக்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன, தவிர விநாயகர், ஆதிசங்கரர், முருகப் பெருமான், ஐயப்பன், ஆஞ்சநேயர் முதலான தெய்வங்களுக்கும் சந்நிதி உண்டு. பௌர்ணமி, அமாவசை (இரு தினங்களில் இரவில் வழிபாடு) பிரதோஷம் (மாலை வேளை) ஜனவரி முதல் தேதி, தமிழ்புத்தாண்டு தினம் (சித்திரை 1) கண்ணப்ப ஸ்வாமிகளின் குருபூஜை தினம் புரட்டாசி ஹஸ்த நட்சத்திரம்) ஆகிய நாட்களில் இங்கே விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. சென்னை அருகே காவாங்கரையில் உறையும் கண்ணப்ப ஸ்வாமிகளின் தூய வாழ்க்கையைப் போற்றி, அவருடைய சந்நிதியை தரிசனம் செய்து அருள் பெறுவோம்.

சென்ற ஆண்டு நாங்கள் பெற்ற  அருள்நிலைகளை இங்கே தருகின்றோம்.








நாளைய குருபூஜை தகவலை உங்களுக்கு மீண்டும் பகிர்கின்றோம்.

ஸ்ரீ பகவான் மௌன குரு கண்ணப்பசாமிகள் 59 ஆம் ஆண்டு குரு பூஜை விழாவை முன்னிட்டு அவர்தம் திருவருளால் வருகின்ற புரட்டாசி மாதம் 1ஆம் நாள்:17.09.2020 வியாழன்கிழமை

1.முதல் காலமாக கணபதி பூஜை நடைபெற உள்ளது நேரம் மாலை 6.30 மணி முதல் 7.30 மணிக்கும்

2. இரண்டாம் கால பூஜை மறுநாள் அதாவது 18.09.2020 வெள்ளிக் கிழமையன்று விடியற் காலை 5 மணிக்கும் 

3. மூன்றாம் கால பூஜையும் அன்றே காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்கும், எல்லாம் வல்ல பரம்பொருள் ஸ்ரீ மௌன குரு பகவான் கண்ணப்பசாமிகள் திருவருள் கொண்டு ஆரம்பம் ஆக உள்ளது.

4. அன்று காலை 11.30 மணிக்கு மேல் மஹா வேள்வி முடிந்து சாமியின் திருஉலா புறப்பாடு நடைப்பெற்று தொடர்ந்து மஹா அபிஷேகம்  நடைப்பெற உள்ளது. 

ஆகையால் அனைத்து ஆலய நிர்வாகிகள், அடியார் பெறு மக்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் அன்பர்கள் அனைவரும் இப்பெருவிழாவில் கலந்து  கொண்டு, காவாங்கரை ஈசன் ஸ்ரீ மௌன குரு பகவான் கண்ணப்பசாமியின் அருளும் ஆசியும் பெற்று இன்பமாக வாழ வரவேற்கிறோம்.

முகவரி:
                ஸ்ரீ மௌன குரு பகவான் கண்ணப்பசாமி ஜீவசமாதி
                காவாங்கரை கிராமம்,புழல்,சென்னை.
அமைவிடம் : https://goo.gl/maps/R6euaUVmYmprbECj9  
இப்படிக்கு, 
ஸ்ரீ மௌன குரு பகவான் கண்ணப்பசாமிகள் ஜீவசமாதி ஆலய நிர்வாகம்.

நடைதிறந்திருக்கும் நேரம்:
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6மணி முதல் பகல்12 மணி வரையிலும், மாலை 5மணி முதல் இரவு 8மணி வரையிலும் திறந்திருக்கும்.

அன்பர்கள் இவ்வாலயத்திற்கு ஒருமுறை சென்று கண்ணப்ப ஸ்வாமிகளின் அருள் பெற்று சிறப்பாக வாழப் பிரார்த்தித்து நிறைவு செய்கின்றோம்.

திருவள்ளூர் மாவட்டம், சென்னை 66 புழல் காவாங்கரையில் ஜீவசமாதி அமைந்துள்ளது.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் - தவத்திரு.காட்டு சுவாமிகளின் மூன்றாம் ஆண்டு குரு பூஜை - 07.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/07092020.html

ஆவணி திருவோணம் - வண்டிக்கார சுவாமி ( எ) தினகரன் சிவயோகி சுவாமிகள் 37-ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/08/37.html

குருவைக் கொண்டாடுவோம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_14.html

குரு உரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_54.html

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே! - இன்று பட்டினத்தார் குருபூசை - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_1.html

நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_28.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html