"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, June 13, 2021

இன்றைய குரு பூஜையில் நால்வரின் பதம் பணிவோமாக!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய நாளில் நால்வரின் பாதம் பணிவோம் என்ற தலைப்பில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். சென்ற மே மாதம் இதே போன்று தலைப்பில் ஒரு பதிவு கண்டோம். அன்றைய பதிவில் ஸ்ரீ மத் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்,திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள்,ஸ்ரீ  சற்குரு நாத மாமுனி சுவாமிகள் ,ஶ்ரீலஶ்ரீ பழனி சாக்கடை சித்தர்  என நான்கு அருளாளர்களின் தரிசனம் பெற்றோம். இதோ இன்றும் அதே போன்றதொரு தலைப்பில் இன்று நான்கு அருளாளர்களை பற்றி அறிய உள்ளோம்.

இன்று குருபூஜை காணும் மகான்கள்

1.கமலமுனி சித்தர் திரு நட்சத்திரம் - திருவாரூர் பெரிய கோயில்

2. ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் - சதுரகிரி

3.சேக்கிழார் குருபூஜை - குன்றத்தூர் சென்னை

4.வல்லநாட்டு சித்தர் ஸ்ரீ சாது சிதம்பரம் சுவாமிகள் குருபூஜை விழா

இப்பொழுது  பதிவின் தலைப்பு சரியாக இருக்கின்றது அல்லவா? சரி. இனி ஒவ்வொரு அருளாளர்களைப் பற்றி காண உள்ளோம்.



1. கமலமுனி சித்தர்

காப்பான கருவூரார் போகநாதர் 
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான  கொங்கணரும் பிரம்மசித்தர் 
முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார் 
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான 
வாசமுனி கமலமுனி காப்புத் தானே....

என்று பாடப்பட்டு வரும் சித்தர்கள் போற்றி துதித்து கமலமுனி சித்தரை போற்றுவோம்.

பதினெண் சித்தர்களுள் ஒருவராக கருதப்படுபவர் கமலமுனி சித்தர் ஆவார். குறவர் குடியில் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். மேலும் 4000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், சிலர் இவரை நான்முகனே கமல முனியாக அவதரித்தார் எனக்கூறுவர். கருவூராரின் சீடராக இருந்தார் என்று சிலர் சொல்வதுண்டு. இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் கற்று சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார்.



“கமலமுனி முந்நூறு”, “ரேகை சாஸ்திரம்” முதலிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். காப்பான கருவூரார் என்று தொடங்கும் காப்புப்பாடல் கமலமுனி அருளியது. பாரத தேசத்தில் இருந்ததைக் காட்டிலும் சீனாவில் வெகுகாலம் இருந்ததாக போகர் கூறுகிறார். திருமூலர் இவரைக் காலங்கி , கஞ்ச மலையன் என பல பெயர்களில் குறிப்பிடுகிறார்.

சித்தர்களின் நூல்களை அரங்கேற்றம் செய்ய கமலமுனி சதுரகிரிக்கு வந்தார். மற்ற இடங்களில் அந்த நூல்களை வெளியிடாமல் சிலர் தடுத்ததால் சதுரகிரியில் வெளியிடும் எண்ணத்தோடு அங்கு வந்து சேர்ந்தார். ரோமரிசியை சந்தித்து நிகழ்ந்ததை கூற அவரும் எங்களுக்கு பரிபூரண சம்மதம் என்று கூறி அரங்கேற்றம் முடிவு செய்யப்பட்டது.

ரிஷிகள், தேவர்கள், சித்தர்கள் ஒன்று கூடி வெளிச்சம் நிறைந்த குகையில் நூலை அரங்கேற்றம் செய்தனர். சில சமயம் தம்மைத்தாமே மறைத்து வைத்து தவம் செய்வார். மற்றவரிடன் கண்ணில் படாமல் மறைந்துகொள்வார்.

திருவாரூரில் தியாகராஜர் (சிவன்) சுயம்பு மூர்த்தியாக அருள் தருகிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம். தமிழகத்திள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். கமலமுனி சித்தர் பீடம் அம்மன் மூலஸ்தானம் அருகே உள்ளது. சித்துக்களில் கமலமுனி நிகரற்றவர் என போகர் கூறுகிறார்.

காலாங்கிநாதர் சீன நாட்டில் சமாதி கொண்டிருப்பதாக பல இடங்களில் கூறியிருந்த போதிலும் போகர் ஜனை சாகரம் என்ற நூலில்,

“ஆதி என்ற சிதம்பரமே திருமூலரச்சு

அவருடன் பதினெண்பேரதிலே யாச்சு

சோதியென்ற காலங்கிநாதர் தாமும்

துலங்குகின்ற காஞ்சிபுரம் தண்ணிலேயாகும்” என்று கூறுகிறார்.

சீன முதலியவனம் எங்கெங்கு சுற்றிய போதிலும் , சமாதிகள் இருந்தபோதிலும் கடைசியாக முக்தி அடைவதற்கு தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது.



திருமூலர் இவரைக் காலங்கி , கஞ்ச மலையன் என பல பெயர்களில் குறிப்பிடுகிறார்.

2. சேக்கிழார் பெருமான்




சேக்கிழார் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.

பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.

சே என்பதற்கு காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். வெள்ளாளர்களில் காளையை வைத்து உழவுத்தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது.

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார்.இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.

சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாயசோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.

சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்பு பட்டத்தினை தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார். 

இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினை செலுத்தியதாகவும், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது. சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.
மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான். அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார் சேக்கிழார். எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.


புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.
பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

சேக்கிழார் பெரியபுராணத்தினை திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரை தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறி, சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினை சிவபெருமானாக கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.

3. வல்லநாட்டு சித்தர் ஸ்ரீ சாது சிதம்பரம் சுவாமிகள் குருபூஜை விழா


வல்லநாடு பாறைக்காட்டில் உள்ள சித்தர் பீடத்தில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசாது - உலகம்மை தம்பதியர். தெய்வபக்தி மிக்கவர்கள், ஏழைகளுக்கு மூலிகை மருத்துவம் செய்து வந்தனர். தம்பதியருக்கு வெகுநாளாய் குழந்தை பாக்கியம் இல்லை. எனவே ராமேஸ்வரத்திற்கு நடந்து சென்று சிவபெருமானை வணங்கி நின்றனர்.  இதன் பயனாக ஐப்பசி மாதம் அமாவாசைஅன்று சித்திரை நட்சத்திரத்தில், வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் பிறந்தார். 3-வது வகுப்பு வரை படித்தார். ஏழ்மை காரணமாக வல்லநாடு மலையில் ஆடு மேய்க்க ஆரம்பித்தார். அப்போதே இவர் அனைத்து உயிர்களையும் நேசிக்க ஆரம்பித்தார்.

இவருக்கு நஞ்சு கக்கும் நாகப்பாம்பு ஒன்று நண்பன் ஆனது. இருவரும் ஒரே கலசத்தில் உணவு அருந்தினர். இதைக் கண்ட அவரது நண்பர்கள் அச்சமடைந்தனர். மலை மீது திடீரென்று தோன்றிய சித்தர் மூலம் உபதேசம் பெற்றார்.  இதை அறிந்த பெற்றோர், தங்கள் பிள்ளை தங்களைவிட்டு பிரியாமல் இருக்க திருமணம் செய்து வைத்து விடலாம் என்று யோசித்தனர். அதன்படி லட்சுமி என்ற பெண்ணை மணமுடித்து வைத்தனர். ஆனாலும் துறவறம் மேற்கொள்வதே என் எண்ணம் என்று முதல் நாள் இரவே அப்பெண்ணை பிரிந்து இல்லற துறவு பூண்டார். கணவனை தெய்வமாக போற்றிய அவரது துணைவியார், கணவன் ஈடுபட்டிருந்த ஆன்மிகப் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார்.

சுவாமி ஏற்படுத்திய சமூகப் பணியிலும் சிறந்து விளங்கினார். சுவாமிகள் அன்னக்காவடி எடுத்து ஏழைக்கு அன்னதானம் வழங்கினார். இது அவரின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை. பெரிய சமுதாயத்தில் பிறந்தவன் பிச்சை எடுப்பதா? என கண்டித்தனர். ஆனாலும் சுவாமி தொடர்ந்து பிச்சை எடுத்தார். எனவே அவரை கொலை செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் உறவினர்கள் சிலர் அவரது வீட்டுக்கு வந்தனர். அங்கு அவர் தனது உடலை எட்டு துண்டாக பிரித்து நவயோகம் செய்து கொண்டிருந்தார், *சிதம்பர சுவாமிகள். அதை கண்டவர்கள் யாரோ ஒருவர் நமக்கு முன்பு சுவாமியை வெட்டி கொன்று விட்டனர் என்று பயந்து ஓடினர்.  மறு நாள் ஊரார்களை கூட்டி வந்த போது, சுவாமி குளித்து விட்டு பூஜை செய்து, “என்ன சாமி நீங்க நினைச்சது நடக்கலையா?” என்று கேட்டாராம்.  காடுகளிலும், மலைகளிலும் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை இவருக்கு மிகவும் பிடித்த இடமாகும்.

அங்கு மதம்பிடித்த யானை ஒன்றை, தனது பார்வையால் கட்டுப்படுத்தினார். அதன் பின் சுவாமி எப்போது சதுரகிரிக்கு சென்றாலும் அந்த யானை சுவாமியை பார்க்க வந்துவிடுமாம். யானை இறந்த பிறகு அதன் சிரசை, சட்டபடி வாங்கி பாறைக்காட்டில் உள்ள தனது தியானமடத்தில் தீபம் போட்டு வணங்க வைத்துள்ளார்.  சுவாமிகள் வேட்டியும் துண்டும்தான் அணிவார். எளிய தோற்றம் படைத்தவர்கள். எளிதில் எவரும் அருகே சென்று பேசலாம். ஆனால் காலைத் தொட்டு வணங்க மட்டும் சம்மதிக்கமாட்டார். தெரியாமல் யாராவது, அவரது காலை தொட்டு கும்பிட்டு விட்டால், அவரும் அதே போல் அந்த நபரின் காலில் விழுந்து வணங்குவார். இனிய வார்த்தைகளையே பேசுவார். அடிக்கடி மொட்டையடித்துக் கொள்பவர். மண்சட்டியில் சோறு போட்டு உண்ணுவார்.

 மூலிகை மருந்தை ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவார். தமக்கு பணம் தர முயலுவோர்களுக்கு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கச் சொல்வார்.  ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்ற வள்ளலாரின் வாசகத்தைத் தனது வாழ்நாளில் நோக்கமாகக் கொண்டு மக்களை வழிநடத்தியவர். பல ஊர்களுக்கு சென்று பக்தர்களின் வீடுகளில் தீப வழிபாட்டினைச் செய்தார். அற்புதங்களை விளைவித்து அருள்வாக்குகளைத் தந்தார். சுவாமிகள் பெற்றோரைப் பேணியவர். வீட்டாருக்கும், வெளியாருக்கும் மகானாக விளங்கியவர்.

ஊனமுற்றோருக்கு தீபாவளிஅன்று எண்ணெய் தேய்த்து குளிக்க உதவிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்காக பாளையங்கோட்டை காதுகேளாதோர் மற்றும் கண் தெரியாதோர் பள்ளிக்குசென்று வருவார். தொண்டர் குலத்தார் அப்பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.  வல்லநாடு பாறைக்காட்டில் உள்ள சித்தர் பீடத்தில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. 1981-ல் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தன்று சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்தார். அவரது உடல் தனது தாய் தந்தையர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்விடத்தில் வந்து நின்றாலே நமது வினைகள் தீருகிறது. கேட்ட வரம் கிடைக்கிறது. சுவாமி ஜோதியில் கலந்த நாளில் குருபூஜை நடத்தப்படுகிறது. தை பூசத்தில் வள்ளலார் ஜோதியான நாளை முன்னிட்டும், வைகாசி பூசத்தில் சுவாமி ஜோதி ஆன நன்னாளிலும் 1008 தீப வழிபாடு நடைபெறுகிறது.

அன்னதான மகிமை:

ஏர்வாடியைச் சேர்ந்த முகமதியப் பெண் ஒருவர் தீராத வயிற்று வலியால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். சுவாமி அந்த பெண்ணின் வயிற்று வலியை போக்க அன்னதானத்தில் வந்து உணவு உண்ண கூறினார். அதுவரை சாப்பிடக்கூட முடியாத அளவிற்கு, தீராத நோயாக இருந்த அந்நோய் தீர்ந்தது. தற்போதும் கூட வல்லநாட்டு சித்தர் பீடத்திற்கு வந்து சுவாமியை வணங்கி விட்டு அன்னதானம் சாப்பிட்டால் பலதரப்பட்ட நோய்களும் தீருகிறது. இந்த சித்தர் பீடத்தில் தினமும் அன்னதானம் நடந்துவருகிறது. 

சித்தர் அற்புதம்:

சாது சித்தர் சுவாமிகள், ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருப்பார். இப்படித்தான் ஒரு சமயம் நெல்லை அருகே ஒரு கிராமத்தில் தீப வழிபாட்டினை சுவாமி நடத்திக் கொண்டிருந்தார். அதே சமயம் அருகில் உள்ள ஆற்றில் ஒருவர் குளிக்க இறங்கியபோது தண்ணீர் அடித்து சென்று விட்டது. அங்கு வந்த சுவாமி அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். காப்பாற்றப்பட்ட நபர் தீப வழிபாட்டு இடத்திற்கு வந்தபோது அங்கேயும் சுவாமி இருந்தார்.  இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 




அமைவிடம் :

வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமி பீடத்திற்கு செல்ல திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள வல்லநாட்டில் இறங்க வேண்டும். அங்கிருந்து கலியாவூர் செல்லும் சாலையில் 1 கிலோமீட்டர் தூரத்தில் பாறைக்காடு திருத்தலம் உள்ளது. வல்லநாட்டில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

4. ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமி




 கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 உயரத்தில் உள்ள சதுரகிரி மலையில் அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்களும், பல்லாயிரக்கணக்கான முனிவர்களும் தங்கித் தவம் மேற்கொண்டதாக நம்பப்படும் 'பூலோகக் கைலாயம்' என்று புகழப்படும் இம்மலையின் நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டு 'சதுரகிரி' எனத் திருநாமம் பெற்று விளங்கி வரும்  இத்திருமலையில் அ/மி சுந்தரமகாலிங்கம், அ/மி ஆனந்தவல்லி அம்மனைத் தரிசிக்க வரும் பக்தர்கள்,இம்மலைகளில் நிறைந்துள்ள மூலிகைகளால் பல்வேறு நோய் நீக்கம் பெற்றும் குருவருளையும்,இறையருளையும் பெற்று மனம் நிம்மதி கொள்கின்றனர்.

அன்னையின் ஆசை:-

இவ்விதம்  இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் ஆன்மப்பசி அடங்கியவுடன், மலை ஏறி வந்த பக்தர்களின் களைப்பை நீக்கியும், வயிற்றுப் பசியையும் போக்கி புத்துணர்வு தந்திடும் வண்ணம் இரக்கம் கொண்ட தாயுள்ளம் தான் ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் ஈன்றெடுத்த அன்னை பத்ரகாளியம்மாள்.
  தாயின் உள்ளத்தில் உதித்த  எண்ணத்தைச் செயலாக்க பிள்ளையின் மனதில் பிறந்த திட்டமே 'அன்னதானத் திட்டம்' ஆகும்.
  சதுரகிரி மலையின் மீது நடந்து செல்லவே தடுமாறும் கடினமான மலைப்பாதையில் சமையலுக்கு வேண்டிய சாமான்களைத் தலையில் சுமந்து சென்று மலைக் கோவிலில் தினமும் அன்னதானம் செய்ய சுவாமிகள் முடிவு செய்தார்கள். தம் முடிவின் பயனாய்த் தோன்றியதே ஸ்ரீ காளிமுத்து சுவாமிகளின் 'அன்னதான மடம்' ஆகும்.

கஞ்சி மடம்:-

 ஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் 1976 ஆம் ஆண்டில் சதுரகிரி மலையில் துவக்க காலத்தில் அரிசிக் கஞ்சியும்,கூழும் வழங்கப்பட்டு வர 'கஞ்சி மடம்' எனப் பெயர் பெற்று, பின்பு சில காலம் கழித்து சுவாமிகளின் திருவுளப்பாங்கின்படியே தினமும் சுவையான சாம்பார், ரசம், கூட்டு வகைகளுடன் கூடிய சூடான சாதம் வழங்கப்பட்டு வருகிறது.
 
இன்றளவும் சுவாமிகளின் அன்னதான மடத்தில் உணவருந்துவதை ஒரு தேவப் பிரசாதமாகவே பக்தர்கள் கருதி வருகின்றனர்.
படி அரிசித்திட்டம்:-

 இதற்கென சுவாமிகள் 'படி அரிசி'த் திட்டத்தை விருதுநகர் மாவட்ட பக்தர்களிடம் அறிமுகப்படுத்தினார்கள்.அதன்படி  நம் இல்லங்களில் தாய்மார்கள் சமையல் செய்யும் போது ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துத் தனியே ஒரு பையில் "இது ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்திற்கு" எனச் சொல்லி தனியாகச் சேகரித்து வருவார்கள். அதனை சுவாமிகள் மாதமொருமுறை ஊருக்குள் வந்து சேகரித்துப் பின் அதனைத் தலைச்சுமையாகத் தாய் பத்ரகாளி அம்மாளுடன் சேர்ந்து சுமந்து சதுரகிரி மலை மீது எடுத்துச்சென்று அன்னதான மடத்தில் அன்னதானத்திற்கெனக் கொண்டு சேர்ப்பார்கள்.
 
இதுவே சுவாமிகளின் மனதில் உதித்த 'தானம் பெற்று தானம் வழங்கும்' திட்டமாகும். இன்றளவும் மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மனமுவந்து இம் மகத்தான கைங்கர்யத்திற்குத்  தங்களால் இயன்ற காணிக்கையைக் கஞ்சி மடத்திற்குச் செலுத்தி வருகின்றனர்.

ஜீவ முக்தி:-

தானத்தில் சிறந்த தான அன்னதானத்தினை இட்டு 'அன்னதானச் சக்கரவர்த்தி' என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் 10.06.2005 அன்று ஜீவ முக்தி அடைந்தார்கள்.
 ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் ஜீவசமாதி சுந்தரபாண்டியத்திற்கு அருகில் எஸ். ராமச்சந்திரபுரத்திலுள்ள  ஸ்ரீ காளிமுத்து சுவாமிகளின் ஆசிரமத்திலேயே சமாதி பீடத்தின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது

குருபூஜை:-

ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகளின் குருபூஜை இன்று சதுரகிரி அருகில் சுந்தரபாண்டிக்கு அண்மையில் எஸ்.ராமச்சந்திரபுரத்திலுள்ள சுவாமிகளின் ஆசிரமத்தில் நடைபெறுகிறது.

ஓம் குருவே சரணம்! ஓம் குருமார்களின் பதம் போற்றி!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

இன்றைய குரு பூஜையில் நால்வரின் பதம் பணிவோமாக! - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post_31.html

 தெய்வ மணக்குஞ் செய்யுளெ லாம் - சேக்கிழார் குரு பூஜை (07/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/06/07062019.html


திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் 121 ஆவது குருபூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/121.html

அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் 184 ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/05/184.html

 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html


நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 22.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/22022021.html

பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை 13 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் - 28.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/13-28022021.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருமாலிருஞ்சோலை தரிசனம் பெறலாமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_19.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சோலைமலை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_88.html

சோலைமலை வந்து கந்த பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_20.html

 களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_23.html

இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html 

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

 ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_28.html

ஸ்ரீமத் ராமானுஜர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_90.html

இன்றைய சித்திரை திருவாதிரையில்... விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_78.html


வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

Saturday, June 12, 2021

ஸ்ரீஅகத்தியர் ஞானம் - ஓம் அகத்தியர் மலரடிகள் போற்றி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்று மூன்றாம் பிறை தரிசனம் அனைவரும் பெற்று இருப்பீர்கள் என்று விரும்புகின்றோம். இன்றைய பதிவில் ஸ்ரீஅகத்தியர் ஞானம் பற்றி சிறிது சிந்திக்க உள்ளோம். இதனை ஸ்ரீஅகத்தியர் உபதேசமாக கூட நாம் எடுத்துக் கொள்ளலாம். முதலில் ஞானம் என்றால் என்ன? இது தான் மிக மிக உயர்ந்த நிலை. நாம் தற்போது ஆன்மிகத்தில் அரிச்சுவடி படித்துக் கொண்டு இருக்கின்றோம். இதில் பக்தி என்ற நிலை தான் முதலில் கைக்கொள்கின்றோம். இங்கிருந்து தான் நாம் ஞானம் நோக்கி செல்ல வேண்டும். பக்தியின் உச்சம் ஞானம் என்று சொல்லலாம். ஞானத்திற்கு அடிப்படை என்றால் அது அன்பு மட்டும் தான். அன்பில் இருந்து தான் அகத்தியமும் தோன்றுகின்றது. இன்ப ஊற்றான இறைவனை தரிசிக்க வேண்டும் என்றால் அது அன்பால் தான் முடியும்.இதனை தான் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் முதல் கொண்டு அனைத்து சித்தர்களும் போதித்து வருகின்றார்கள். இதனை தான் அனைத்து அருளாளர்களும் கூறி வருகின்றார்கள். 

இன்னொரு வழியில் பார்த்தால் ஞானம் என்பது எப்போது கிடைக்கும்? பெறுவதிலா? கொடுப்பதிலா? கொடுப்பதில் தான் என்று கூற முடியும். இது நாள் வரை நாம் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் பெறுவதில் என்ன பயன்? இன்னும் இன்னும் நாம் பக்குவப்படவில்லையே. ஆனால் கொடுத்து பாருங்கள். கொடுப்பதற்கு அருள் வேண்டும். இந்த அருளிற்கு அன்பு வேண்டும். எனவே கொடுப்பதற்கு அன்பு தான் தேவை. அன்பு இருக்குமிடத்தில் தான் கொடுக்கும் எண்ணம் வரும். இன்று நாம் பார்க்கும் பற்பல சேவைகள் அனைத்தும் அன்பில் இருந்து தான் பிறக்கின்றது. எனவே தான் மீண்டும் மீண்டும் அன்பு தான் ஞானதின் அடிப்படை என்று சொல்கின்றோம்.

இந்த அன்பின் வலைப்பின்னலில் தான் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவும் இயங்கி வருகின்றது. பற்பல வழிகளில் குருவருளால் கொடுத்து வருகின்றோம். வழக்கமான நம் தள சேவைகளை தொடர்ந்து வருகின்றோம். இம்முறை குருவருளால் 1000 கிலோ அரிசி வாங்கி அதனை பல ஆன்மிக அமைப்புகளுக்கு 100கி என பிரித்து கொடுத்துளோம். இவை அனைத்தும் உங்களால் தான் சாத்தியம். அடுத்து ஊரப்பாகத்தில் சுமார் 10 அன்பர்களுக்கு அன்னசேவை ஒரு நாள் செய்துள்ளோம். கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் பாதத்தில் என்றும் அவர் பதம் பற்றிட, லோக ஷேமத்திற்காக தீபமேற்றி வழிபாடு செய்துள்ளோம். தரிசன காட்சிகளை இங்கே பகிர்கின்றோம்.

                                               





அடுத்து இனி நம் குருநாதரின் உபதேசம் பெற இருக்கின்றோம். இது போல் பல சித்தர் பெருமக்கள் ஞானப் பாடல்களை வழங்கியுள்ளார்கள். இவை அனைத்தும் நாம் பொருள் கொண்டு விளங்கிக்கொள்ள குருவருள் வேண்டி நிற்க வேண்டும். பாடலின் இடையிடையே நம் குருவின் தரிசனமும் பெற்றுக் கொள்ளுங்கள்.




ஸ்ரீஅகத்தியர் ஞானம் 

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
பாழிலே மனத்தை விடார் பரம ஞானி;
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே.



மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன்
மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே;
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு
காசினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே
பலவேத சாஸ்திரமும் பாரு பாரு;
ஏச்சலில்லா தவர்பிழைக்கச் செய்த மார்க்கம்
என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே.



பாரப்பா நால்வேதம் நாலும் பாரு
பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி;
வீரப்பா ஒன்றொன்றுக்கு கொன்றை மாறி
வீணிலே யவர்பிழைக்கச் செய்த மார்க்கம்;
தேரப்பா தெருத்தெருவே புலம்பு வார்கள்
தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்;
ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ!
ஆச்சரியங் கோடியிலே யொருவன் தானே!




கூடப்பா துரியமென்ற வாலை வீடு
கூறரிய நாதர்மகேச் சுரியே யென்பார்;
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு;
நந்திசொல்லுஞ் சிங்காரந் தோன்றுந் தோன்றும்;
ஊடப்பா சிகாரவரை யெல்லாந் தோன்றும்;
ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊற லாகும்;
தேடப்பா இதுதேடு காரிய மாகும்;
செகத்திலே இதுவல்லோ சித்தி யாமே




ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறுபயிர் செய்ய வேணும்
பாழிலே மனத்தை விடான் பரம ஞானி;
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி;
வருவார்க ளப்பனே அனேகங் கோடி
வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே.



கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா!
கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா;
சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று
சாகாத கால்கண்டு முனை யிலேறி
நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று
நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு;
சொற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்;
துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே.

ஓம் அகத்தியர் மலரடிகள் போற்றி



மீண்டும் நம்மை நாமே திருத்திக் கொள்ள இறை கொடுத்த வாய்ப்பை தவற விட வேண்டாம்.

1. குருவின் பாதம் பிடியுங்கள்

2. கல்கண்டு தீபம் ஏற்றுங்கள். ( கல்கண்டு,ஏலக்காய்,கிராம்பு பொடி செய்து விளக்கில் சேர்க்க)

3. நமக்கு கிடைத்து வரும் ஒவ்வொரு நாளுக்கும் நன்றி சொல்லுங்கள்

4.  ஒவ்வொரு நாளும் ஒரு உயிருக்கு உதவி செய்ய விரும்புங்கள்

5.  தினசரி மாலை 6-7 மணி அனைவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

6.  ஆரோக்யத்தை மேம்படுத்த உடற்பயிற்சி, யோகா என செய்யுங்கள்

7. கண்டிப்பாக சைவ உணவை கடைபிடியுங்கள். சைவ உணவு கொண்டு செய்யும் வழிபாடு,பரிகாரம் மட்டுமே பலனைத் தரும்.

ஓம் குருவே சரணம்! ஓம் குருமார்களின் பதம் போற்றி!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி சுவாமிகளின் 23-ஆம் ஆண்டு குருபூஜை - 07.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/23-07062021.html

ஸ்ரீ போகர் சித்தர் குரு பூஜை - 07.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/07062021.html

மண்ணே மருந்து; மலையே மருந்து - சித்தர்கள் வாழும் திருக்கச்சூர் கிரிவலம் - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_3.html

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் 121 ஆவது குருபூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/121.html

அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

Sunday, June 6, 2021

சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி சுவாமிகளின் 23-ஆம் ஆண்டு குருபூஜை - 07.06.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

சித்தர்கள் அறிவோம் என்ற தொடரில் பல சித்தர்களை நாம் தொட்டு காட்டியுள்ளோம். இது சிறு துளியே. பெரு வெள்ளம் போன்றவர்கள் சித்தர்கள். சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது. இன்றைய பதிவில்  அருள்மிகு   சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி  தரிசனம் பெற இருக்கின்றோம்.

இன்று சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி சுவாமிகளின் 23-ஆம் ஆண்டு குருபூஜை திருக்கச்சூரில் உள்ள ஜீவ சமாதி கோயிலில் நடைபெற்று வருகின்றது.

செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர் கோவில் அருகே  ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது. சரி..இனி அங்கே செல்வோமா?



தர்மமிகு சென்னை எப்படி சித்தர்களின் அருளில் திளைக்கின்றதோ, செங்கல்பட்டு ஊரும் சித்தர்களின் அருளில் நிலை பெற்று உள்ளது. இதற்கு சான்றாக ஸ்ரீ ராகவா சுவாமி, குழந்தை வேல் சுவாமிகள், ஸ்ரீ மாதாவானந்த சுவாமி,ஸ்ரீலஸ்ரீ பதஞ்சலி சுவாமிகள், ஸ்ரீ பொன்மார் சித்தர், சதனபுரி மஹாத்மா ஸ்ரீ ராமச்சந்திர குரு சுவாமிகள்,ஸ்ரீலஸ்ரீ சுப்பையா சுவாமிகள்,பிரம்ம ஸ்ரீ எத்திராஜா  ராஜயோகி சுவாமிகள்,ஸ்ரீலஸ்ரீ முத்து சுவாமி,புலிப்பாக்கம் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் என சொல்லிக்கொண்டே போகலாம். நாம் எப்பேர்ப்பட்ட நாட்டில் வாழ்ந்து வருகின்றோம் என்பது இது போன்ற அருள் நிலையில் தான் வெளிப்படும். இதனை நாம் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் அருளில் காணலாம்.

அகத்திய மஹரிஷி அருள் நாடி வாக்கு

1) ஒரு ஆத்மா மீண்டும் இந்த பூமியிலே பிறக்க வேண்டிய ஒரு சூழல் வரும்போது, இதுவரை எடுத்த மொத்த ஜென்மங்கள் எத்தனை? அதில் கழித்த பாவங்கள் எத்தனை? சேர்த்த புண்ணியங்கள் எத்தனை? இந்த விகிதாசாரத்தின் அடிப்படையிலே ஓரளவு புண்ணியம் இருந்தால்தான் மனிதனாகவே பிறக்க முடியும். அதற்கே அவன் சேர்த்து வைத்த புண்ணியம் செலவாகி விடும். 

2)மிகுதி புண்ணியம் இந்த பூமியிலே மேல்திசை நாடுகளிலே பிறக்காமல் இஃதொப்ப பாரத கண்டத்திலே, கர்ம பூமியிலே பிறப்பதற்கே சில புண்ணியம் வேண்டும். 

3) அதனினும் இறை மறுப்புக் குடும்பத்தில் இல்லாமல், இறையை நம்பக்கூடிய குடும்பத்தில் பிறப்பதற்கே, சில புண்ணியங்கள் வேண்டும். 

4) அஃதோடு மட்டுமல்லாமல் மகான்களின் தொடர்பு கிடைப்பதற்கும், ஸ்தல யாத்திரை செல்வதற்கும், தர்மங்களில் நாட்டம் வருவதற்கும் புண்ணியம் தேவைப்படும். 

5) பிறகு ஆணாக, பெண்ணாக, ஆரோக்கியமான உடல் கிடைக்க புண்ணியங்கள் வேண்டும். பெண்ணாக பிறப்பதற்கு புண்ணியம் வேண்டும். 
பெண் என்றால் பெண் தோற்றத்தில் மட்டுமல்ல. அந்தப் பெண் உணர்வை நன்றாக உணரக் கூடிய, பெண்மைக்குரிய குணங்கள் மேலோங்கி நிற்கக்கூடிய சாத்வீகமான பெண்ணாக பிறப்பதற்க்கென்றே சில புண்ணியம் தேவைப்படும். 

6) அதன் பிறகுதான் ஏனைய விஷயங்கள். கல்வி, பணி, பொருளாதாரம் என்று புண்ணியத்தைப் பகுத்துக் கொண்டே வந்தால் ஒரு நிலையில் புண்ணியம் தீர்ந்து விடும். 

7) எதோடு புண்ணியம் தீர்ந்து விடுகிறதோ, அதன் பிறகு அந்த ஆத்மாவிற்கு போராட்டமாகத்தான் இருக்கும். அதை(புண்ணியத்தை)த்தான் அவன், அந்த ஊரிலே பிரார்த்தனை செய்து, தர்மங்களை செய்து, சத்தியத்தைக் கடைபிடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொது நாம் சொல்வது புரியும் என்று நினைக்கின்றோம். ஆம். இங்கே தமிழ் நாட்டில் நாம் பிறப்பதற்கு நாம் செய்த புண்ணியமே காரணம் ஆகும். சரி, விசயத்திற்கு வருவோம். சித்தர்கள் தரிசன யாத்திரையில் நாம் அடிக்கடி திருக்கச்சூர் சென்று வந்தோம். மண்ணே மருந்து, மலையே மருந்து என்று சித்தர்கள் வாழும் திருக்கச்சூர் போற்றி வருகின்றோம்.

இங்கே தான் குருவும் சீடரும் என்று மெளனகுரு வீராசாமி சுவாமிகள் ஜீவ சமாதி உள்ளது.


திருக்கச்சூர் மலை அடிவார சித்தர் கோயிலில் நாம் இருக்கின்றோம். நம்மை வரவேற்கும் சுவாமிகள் தரிசனம் பெற்று உள்ளே செல்ல உள்ளோம்.


இதோ..இன்று குருபூஜை காணும் சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி சுவாமிகள் தரிசனம் பெறுகின்றோம்,

இங்கே தான் இரண்டு அருளாளர்கள் அருள் தந்து கொண்டு இருக்கின்றார்கள். திருக்கச்சூர் தரிசனம் சென்றால் நமக்கு எப்படியும் குறைந்து 6 மணி நேரம் தேவைப்படும். திருக்கச்சூர் கிரிவலம் சுமார் 2 மணி நேரம் அடுத்து மருந்தீஸ்வரர் தரிசனம் 2 மணி நேரம், அடுத்து இங்கே சித்தர்கள் கோயில் தரிசணம்  மணி நேரம் என்று எடுத்து கொள்ளலாம். உள்ளே நுழைந்த உடன் சீடர் சற்குரு குழந்தைவேல் சுவாமிகள் தரிசனம் பெறலாம்.



இங்கே அமைதியை அன்பில் உணர்த்தினார்கள். அமைதியாக அமர்ந்து நம்மை உள்சென்று பார்க்கலாம். சுவர் முழுதும் ஏகப்பட்ட தகவலை உள்வாங்கினோம்.










சீடர் தரிசனம் பெற்ற பின்னர் எதிரே குருவின் தரிசனம் பெற்றோம். நம் நண்பர் திரு.சத்யராஜ் தரிசித்த போது 



 அங்கே ஐயாவின் உயிர்ப்பின் மேலே லிங்க பிரதிஷ்டை. ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமானாக இங்கே இருக்கின்றார்.



இது போன்ற உயிர்நிலைக்கோயில்களுக்கு சென்று நம் ஆற்றலை பெருக்கி கொள்ளுங்கள். இன்று 23 ஆம் ஆண்டு குருபூஜை காணும் சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி சுவாமிகள் தரிசனம் அனைவரும் பெற்று இருப்பீர்கள் என்று நாம் நம்புகின்றோம். 

இன்றைய நன்னாளில் போகர் சித்தர் குருபூஜையும் நடைபெற்று வருகின்றது. பழுத்த ஞானியான போகர் இறுதியாக வந்து தங்கிய இடம்தான் பழநி. தற்போது பழநி கோவில் வளாகத்திலேயே அவருடைய சமாதி இருக்கிறது.

அனைவரும் வீட்டிலேயே ஒரு நெய் விளக்கேற்றி வைத்து சித்தர்கள் போற்றியை துதித்து, 
ஓம் ஸ்ரீ போக சித்தரே போற்றி என்று உங்களால் முடிந்தவரை உருவேற்றி வழிபாடு செய்யுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ போகர் சித்தர் குரு பூஜை - 07.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/07062021.html

மண்ணே மருந்து; மலையே மருந்து - சித்தர்கள் வாழும் திருக்கச்சூர் கிரிவலம் - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_3.html

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

Saturday, June 5, 2021

வள்ளலாரும் அகத்தியரும்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

பெருந்தொற்று காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கடந்த ஆண்டு முதல் தொடர்ந்த இந்நிலை என்று சரியாகும் என்று சொல்வது கடினமே.. நாம் தான் இந்த சூழலில் வாழ பழக வேண்டும்.நாளொரு பொழுதும் பெருந்தொற்றின் காரணமாக இழப்புகள் தாங்கொணா துயரமாக இருக்கின்றது. இது நாள் வரை நாம் எப்படி வாழ்ந்துள்ளோம்? பஞ்சபூதங்களை மதித்தோமா? இன்று பஞ்ச பூதங்களால் மிதிபட்டு வருகின்றோம்.

நிலத்தை எப்படி எல்லாம் பாழ்படுத்தி வந்துள்ளோம். ஒரு நாள் நம்மால் பிளாஸ்டிக் பயன்படுத்தாது வாழ முடியவில்லை. மற்றவரை குறை சொல்வது போதும். நம்மை நாமே திருத்திக் கொள்ள இறை கொடுத்த வாய்ப்பை தவறவிட்டு, இன்று திருத்தப்பட்டு வருகின்றோம். 

1. குருவின் பாதம் பிடியுங்கள்

2. கல்கண்டு தீபம் ஏற்றுங்கள். ( கல்கண்டு,ஏலக்காய்,கிராம்பு பொடி செய்து விளக்கில் சேர்க்க)

3. நமக்கு கிடைத்து வரும் ஒவ்வொரு நாளுக்கும் நன்றி சொல்லுங்கள்

4.  ஒவ்வொரு நாளும் ஒரு உயிருக்கு உதவி செய்ய விரும்புங்கள்

5.  தினசரி மாலை 6-7 மணி அனைவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

6.  ஆரோக்யத்தை மேம்படுத்த உடற்பயிற்சி, யோகா என செய்யுங்கள்

7. கண்டிப்பாக சைவ உணவை கடைபிடியுங்கள். சைவ உணவு கொண்டு செய்யும் வழிபாடு,பரிகாரம் மட்டுமே பலனைத் தரும்.

இன்றைய நாளில் நம் குருநாதர் தரிசனம் பெற்று, பதிவைத் தொடர்வோம். மலேசியா (setia eco city) விலிருந்து ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளை நாம் அனைவரும் பெற்றுக்கொள்வோம்.


என்னப்பா? பதிவின் தலைப்பில் இன்னும் செல்லவில்லை என்று தோன்றுகிறதா? இது இன்று மாலை நடைபெற உள்ள சத் சங்கத்தை பற்றிய அறிவிப்பே ஆகும். இந்த தொற்று காலத்தில் அனைத்து ஆன்மிக அமைப்புகளும் பல்வேறு வழிகளில் தங்கள் சேவையைத் தொடர்ந்து வருகின்றார்கள். தஞ்சாவூர் சித்தர் அருட்குடில், திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமம், சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில், தென்காசி ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயில், செங்கல்பட்டு ஸ்ரீ அகத்தியர் கோட்டம், மதுரை திருச்சுனை ஸ்ரீ அகத்தியர் கோயில், திருவள்ளூர் ஸ்ரீ ஆதி சிவன் ட்ரஸ்ட், மதுரை இறையருள் மன்றம், கூடிடுவாஞ்சேரி வள்ளலார் சபை, மயிலாதுறை ஓம்காரம் ட்ரஸ்ட் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இது போன்ற பல அமைப்புகள் அன்னதானம் செய்வதில் தொடங்கி மருத்துவ உதவியும் செய்து வருகின்றார்கள். இதில் மேலும் சில அமைப்புகள் இணைய வழியில் சத் சங்கம் செய்து வருகின்றார்கள்.


மௌனத்தில் அலைகளில் இருந்து இனி தொடர்வோம்.

ஸத் என்றால் உண்மை அதாவது மெய்ப்பொருள். சங்கம் என்றால் பற்றுதல், கூடுதல், கூட்டம் என்று பல பொருட்கள் உள்ளன. இதில் என்ன பிரச்சனை என்றால், யாரைக் கேட்டாலும் தாங்கள் உண்மையைத் தேடுவதாகவோ அல்லது தாங்கள் சார்ந்திருப்பது மட்டுமே உண்மை மற்றவை அனைத்தும் நிலையற்றவை, பொய்யானவை என்பார்கள். எனவே இதில் எந்த சத்சங்கத்தைக் கூடுவது என்று கோள்வி எழுகிறது. ஆனால், உண்மை எது என்பதை அறிந்தார் யாருமே இல்லை என்பதே மிகப் பெரிய உண்மை. நாம் மெய்ப்பொருள் குறித்து கேட்கிற அனைத்தைம் அனுமானங்களே. ஆயினும் மெய்ஞானிகளின் தரத்தை கருத்தில் கொண்டு அவற்றையே பிரமாணமாக ஏற்றுக் கொள்கிறோம். எனவேதான் இந்த மெய்ப்பொருள் குறித்த கோட்பாடுகளில் முரண்பாடு காணப்படுகிறது. உங்களுக்கு எது அடையாளப்படுத்தப்பட்டதோ, எந்த வழி உங்களுக்கு உகந்ததாக, ஏற்புடையதாகத் தோன்றுகிறதோ, அந்த வழியில் மெய்பொருளை உணர்ந்தவர்களோடு அல்லது தேடுபவர்களோடு கூடுவதே சத்சங்கம்.

எல்லா வழிகளும் மெய்ப்பொருளை நோக்கியே. எதற்காக சாதகர்களுக்கு இந்த சத்சங்கம் தேவை என்று சொல்கிறார்கள் என்றால், சாதனங்களுக்கிடையே ஏற்படும் தேக்கங்கள் மற்றும் ஐயப்பாடுகள் நீங்கித் தெளிவு பெற்றுக் கொள்வதற்காகவே. உலகாய பந்தங்களில் கட்டுண்டு கிடப்பவன் உண்மையை விட்டு விலகி அவித்தையில், அஞ்ஞானத்தில் மூழ்கிக் கிடக்கிறான். இந்த உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு மெய்ப்பொருளை அடைய நினைப்பவன் அதற்குரிய நல்லொழுக்கம் உடையவனாக தன்னை மாற்றி அமைத்துக் கொள்கிறான். அத்தகைய மேன்மக்களோடு கொள்ளும் இணக்கமே சத்சங்கம் எனப்படுகிறது. இதனால் அவித்தை, மற்றும் அஞ்ஞானம் விலகி பரம்பொருள் நாட்டம் அதிகரிப்பதோடு, நல்லொழுக்கம் உருவாகிறது. தனக்கோ, பிறர்க்கோ உடலாலோ, மனதாலோ தீங்கு செய்யாமல் வாழ்வதே சிறந்த நல்லொழுக்கமாகும். 

அத்தகையவர்கள் கூடும் சத்சங்கத்தையே நாம் கூடுவது நல்லதாகும். வள்ளுவப் பெருந்தகை கூறும் பொழுது,
''நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு''

என்பார். நீருக்கு நிறமோ, சுவையோ கிடையாது. எனினும் அது சார்ந்திருக்கும் வஸ்துவுடைய நிறத்தையோ, சுவையையோ கொண்டிருக்கும். அது போல மனிதன் பெற்றிருக்கும் அறிவும், ஒழுக்கமும் அவன் சார்ந்திருக்கும் கூட்டத்தினரின் அறிவையும், ஒழுக்கத்தையும் பொருத்தே அமையும்.

பட்டினத்தார் பாடும் பொழுது
''நல்லாரி ணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுள தோ ?''
என்று இறைவனிடம் கேட்பார். 

மாணிக்கவாசகப் பெருமான்
''உன்னடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்''
என்று இறைவனிடம் வேண்டுவார். சிவ ஞான போதம் எனும் சைவ நூல்
''பத்தரினத் தனாய்ப்பரன் உணர்வினால் உணரும்
மெய்த்தவரை மேவாவினை''
என்கிறது. 

எனவே இதையெல்லாம் பார்க்கும் பொழுது, மனிதன் மேன்மையடைய வேண்டும், நல்லொழுக்கம் உடையவனாக விளங்க வேண்டும் என்றால், மெய் உணர்வு பெற்றவர்கள், மெய்யுணர்வு வேண்டி தவ வாழ்வு மேற் கொள்பவர்கள் போன்றவர்களைச் சார்ந்து ஒழுக வேண்டும் என்பது புலனாகிறது. முதலில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு நல்லொழுக்கம் உடையவர்களோடு கூடி வாழ வேண்டும். அவ்வாறு நல்லொழுக்கம் உடையவனாக வாழும் பொழுதுதான் அஞ்ஞானம் விலகி மனம் உள்ளதை உள்ளபடி உணர்த்தும்.

வசிஷ்டரிடம் இராமர் பிராணனுடைய சலனத்தை அடக்குவது எங்ஙனம் என்று கேட்ட பொழுது, அவர் சாஸ்திரங்களைக் கற்றுணர்தல், நல்லோர் இணக்கம், வைராக்கியம், அப்பியாசம், தவம் இவற்றால்தான் பிராணனின் சலனத்தை அடக்க முடியும் என்பார். எனவே சத்சங்கத்தை நாட வேண்டும். நல்லாரோடு கூட வேண்டும். உலகியல் சங்கி­லிகளிலி­ருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். மற்ற உலகாய சங்கங்கள் அனைத்தும் துர்ச்சங்கங்களேயாம். அவை என்றும் கெடுதலையே விளைவிக்கும். நம்முடைய அகங்காரம் அழிந்து, பேதமற்ற மனப்பாங்கு வளர்வதற்கு சத்சங்கம் உதவுகிறது. சத்சங்கம் ஆசையி­ருந்து நம்மை விடுவிக்கும். சம்சார பந்தங்களி­ருந்து விடுதலை அளிக்கும். சத்சங்கத்தால் நாம் நல்ல பல உபதேசங்களைப் பெறலாம். சத்சங்கம் ‘நான் யார்’ என்பதைக் கண்டுபிடிக்க நமக்கு உதவும். சத்சங்கம் தேக அபிமானத்தை நாசம் செய்யும். சத்சங்கம் பிறப்பிறப்பு சுழலை உடைக்கும். சத்சங்கம் உலக பந்தங்களை அறுத்து, மெய்ப்பொருளை அடைய வழிவகுக்கும். அப்படி அந்த மெய்ப்பொருளை நாம் அடைவதே உயர்வான, நிலையான, நிரந்தரமான சத்சங்கமாகும்.

நல்லொழுக்கத்துக்கு இன்னொரு வழி நல்லோர் தொடர்பு. அது நேரடித் தொடர்போ,சொற்பொழிவுகளோ அல்லது புத்தகங்களோ ! ஏதோ ஒன்று நம்மை நல்வழிக்கு மாற்றுவதாயிருந்தால் ஒழுக்கம் துளிர்விடத் தொடங்கும்.

அவ்வை சொல்கிறார்,

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

நல்லாரோடு இணங்கி இருப்பதற்கு சத்சங்கம் உதவி செய்கின்றது. இன்று பலவித சத்சங்கங்கள் இணைய வழியில் நடைபெற்று வருகின்றது. இன்று மாலை நடைபெற உள்ள வள்ளலார் மிசன் சார்பில் நடைபெற  சத்சங்கத்தில்  வள்ளலாரும் அகத்தியரும்! என்ற தலைப்பில் சிந்திக்க உள்ளார்கள். இதனை ஒட்டியே இந்த பதிவை பார்த்து வருகின்றோம். 

நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழு முதன் முதலில் சுமார் 10 நபர்களுக்கு அன்னதானம் என்றே ஆரம்பிக்கப்பட்டது. அடுத்து சித்தர்கள் வழிபாட்டில் நம்மை நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வழிநடத்தி வருகின்றார். கூடுவாஞ்சேரி வள்ளலார் சபையும், கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நம் குருநாதர் தரிசனமும் நம் குழுவிற்கு ஆசி வழங்கி வருவதை நம் கண்டு வருகின்றோம். இன்னும் சிறப்பாக சொல்வது என்றால் வள்ளலாரும், அகத்தியரும் நம் இரு கண்கள் ஆவர்.  பலமுறை நம் தளத்தில் வள்ளலார் பற்றியம், ஸ்ரீ அகத்தியர் பெருமான் பற்றியும் பேசி வருகின்றோம். இருப்பினும் தேனை சுவைக்க நேரம்,காலம் உண்டா என்ன?

 நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை 
 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி... 
 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! 
 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே என பேசும் போதெல்லாம் நமக்கு வள்ளலார் தான் வாழ்ந்து வருகின்றார்.

மிகப் பெரும் வாழும் சித்தர், மகான், வள்ளல். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல..அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு வேளை வயிற்றிற்கு சோறிடாது என்ன தான் ஆன்மிகம், அறம் என்று உபதேசித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான். வள்ளலார் என்று சொன்னாலே அன்னதானம் தான் நம் கண் முன் நிற்கின்றது. எத்துணை எத்துணை சான்றோர் பெருமக்கள் இன்றும் அந்த அறப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். வள்ளலாரும் அவர் தம் மார்க்கமும் பற்றி பேசுவது பெருங்கடலில் சென்று ஒரே ஒரு நீர்த்துளியை எடுத்து பருகுவது போன்றதாகும்.

 அருட்பெருஞ்சோதி ஆண்டவரை ஆராதனை செய்தவர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என முழங்கியவர். அந்த முழக்கமே வடலூரில் சத்திய தரும சாலையாய் இன்றும் பசிப்பிணி தீர்த்து வருகின்றது. அவர் பிறப்பு முதல் எத்தனை எத்துனை சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வள்ளலார் நமக்கு எப்படி தெரிகின்றார் ? ஆன்மிகவாதி மட்டும் என்றால் அது மேலோட்டமாக உணர்வதே.

சிறந்த சொற்பொழிவாளர்,போதகாசிரியர்,உரையாசிரியர்,சித்தமருத்துவர்,பசிப் பிணி போக்கிய அருளாளர்,பதிப்பாசிரியர்,நூலாசிரியர்,இதழாசிரியர்,இறையன்பர்,ஞானாசிரியர்,அருளாசிரியர்,

சமூக சீர்திருத்தவாதி,தீர்க்கதரிசி,மொழி ஆய்வாளர் (தமிழ்) என்றெல்லாம் உணர்த்தப்பட்டு வருகின்றார்.இதெல்லாம் சாதாரண மானிடனுக்கு வாய்க்குமா? ஞானிகளுக்கு வாய்க்குமா?

அன்பு,கருணை ,இரக்கம், தயவு என்று அனைத்திற்கும் இலக்கணம் நம் வள்ளலார் தான் என்று சொல்லத் தோன்றுகின்றது.








அடுத்து நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் பற்றி சிறிது தொட்டுக்காட்ட விரும்புகின்றோம்.

 விதியினிதான் நமக்கேது குறுமுனி நம் காப்பாமே! 
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்
எந்தையும் தாயும்
குருவடி பொற்றாள் சரண் சரணம் 
கும்பமுனி குருவே சரணம்! சரணம்!!
அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் 
ஞானத்தேவே! வருக! வருக!! 
மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே
மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு என்றெல்லாம் பேசும் போது நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் தான் நம்முடன் இருந்து வழிகாட்டுவதை உணர்ந்து வருகின்றோம்.


 நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

நெஞ்சார மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல் என்றால் பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து வழி காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும் தராமல், அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும் தருகின்ற அக குரு ஆவார்.இதனை  நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம் ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர் அருள் காட்டுவார்.




அடுத்த இன்று மாலை நடைபெற உள்ள சத்சங்க அழைப்பிதழை பகிர்கின்றோம்.




அருட்பெருஞ்ஜோதி 

வள்ளலார் சன்மார்க்க ஞானசத்சங்கம் 

வள்ளலாரும் அகத்தியரும் 

தயவுதிரு.தம்பையா ஐயா அவர்கள் 

 6.00-8.00pm ( IST ) 

 YouTube live 
 VALLALAR MISSION ORG 

https://youtube.com/user/saintvallalar

Join Zoom Meeting 
https://us02web.zoom.us/j/4497966411?pwd=VFFwQVBQbGgwcVpCSmhQbVg1dDRYdz09

Meeting ID: 449 796 6411
Passcode : vallalar

+91 98940 10007
vallalarmission.org

 நிகழ்ச்சி ஏற்பாடு 

அருள்திரு.பாபு சாது
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை
திருவண்ணாமலை

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html