அகத்தியர் பூசையின் போது இந்த பாடல் கேட்டிருக்கின்றோம். நம் தளத்திலும் பதிவிட வேண்டும் என்று விரும்பி மீண்டும் ஒரு முறை உத்திரவு பெற்று இங்கே தருகின்றோம். இணைய வெளியில் தேடிய போது நமக்கு கிடைத்தது. கொங்கணர் கடைக்காண்டத்தில் இந்தப் பாடல் வருகின்றது. இதோ அந்தப் பாடல்...
அகத்திய மாரஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேடமீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக்கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியார் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
-கொங்கணார் கடைக்காண்டம்.
ஆனால்
உச்சரிக்கும் போது அகத்திய மகரிஷி நம என்றென்றோது என்று கூறுவதாக
கேட்டுள்ளோம். சித்தர் பாடல் கிடைத்தால் நாம் எந்த செய்தி சரி என்று
பின்வரும் நாட்களில் உறுதி செய்கின்றோம்.சரி...மகான்களை பூசித்தால் மனம்
மகிழும், ஒடுங்கும்,ஓங்கும். ஒன்பது
கோடி ஞானிகளுக்கு தலைவரும் கும்பமுனி என்றும் குருமுனி என்றும் பட்டம்
பெற்ற ஆசான் அகத்தீசர் அவர்களின் திருவடியை பூசித்துதான் ஒன்பது கோடி
மனிதர்களும் பாவத்தை நீக்கி புண்ணியத்தைப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு
பெற்று ஞானிகள் ஆகியுள்ளார்கள். அகத்தியர் என்ற பெயரை உச்சரிக்கவே நாம்
புண்ணியம் செய்திருக்க வேண்டும். எந்த பிறப்பில் நாம் செய்த புண்ணியமோ
நம்மை சித்தர் மார்க்கத்தில் ஈடுபட வைத்துள்ளது. ஞாலம் சிறக்க ஞானிகளை போற்றுங்கள். போற்றினால் நமது வினை அகலுமப்பா..சரி..இந்தப் பதிவில் அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக சில செய்திகளை உங்கள் அனைவரோடும் பகிர விரும்புகின்றோம்.
அகத்தியர் அறிவுரை :-
அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் வந்து தனிப்பட்ட முறையில் வாக்குரைக்கும் பொழுது, சில விஷயங்களை பொதுவாக பகிர்ந்து கொள்ளச் சொல்வார். அடியேனுடைய நண்பர், ஒரு அகத்தியர் அடியவர், சமீபத்தில் நாடி கேட்கச் சென்ற பொழுது வந்த அருள் வாக்கை அடியேனிடம் பகிர்ந்து கொண்டு, சித்தன் அருள் வழி, அனைத்து அடியவர்களுக்கும் தெரிவிக்கும்படி, வேண்டிக்கொண்டார். அவர் தெரிவித்ததிலிருந்து பொதுவாக நம் எல்லோருக்கும் ஆன அருள்வாக்கை இங்கு தெரிவிக்கிறேன். அனைத்து அகத்தியர் அடியவர்களும், அவர் உத்தரவை சிரம் மேற்கொண்டு நடை முறைப்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.
1.ஒரு சில மாதங்களுக்கு முன் மழை வளம் வேண்டி அகத்தியர் அடியவர்கள் அனைவரையும் விளக்கேற்றி வேண்டிக்கொள்ளச் சொன்னது நினைவிருக்கலாம். அத்தனை வேண்டுதலையும் இந்திரன் மனம் நிறைவாய் ஏற்றுக்கொண்டு, நிறைய மழை பெய்வித்து அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிய உத்தரவிட்டது, பயனை தந்துள்ளது. அனைத்து அடியவர்களுக்கும் அகத்தியப் பெருமானின் ஆசிகள்.
2. இனி வரும் காலத்தில் ஆயுதப்பிரயோகம், துஷ்டத்தன்மை, அறிவிழந்து மோகத்தால், மனிதர் மாள்வார். இவ்வையகத்தில் நடக்கப்போகும் தீங்கு விலகிட எங்கள் தலைநாதன் முருகனே துணையாய் நின்று, நலம் பல ஆற்றிடும் காலமப்பா. இந்த காலமதில் நலம் விளைய அனைவரும் முருகப்பெருமானை ஆராதிக்க வேண்டும். அப்படிச் செய்யின் உயர்வான புவன நலம் விளையும். நாம் செய்கிற விஷயங்களில் நிறைவான தலைமை பண்பு முருகனருளால் வந்து சேரும். தன் கடமையை குறைவற செய்ய வல்லவனாகிய முருகன், இணை ஒன்றும் இல்லாத சித்தர் தலைவன், வேண்டுதலுக்கிணங்கி இறங்கி வருவான். புவனம் முழுவதும் சுத்தியாகும். எத்தலம் ஏகி வேண்டினாலும், அழகனாம் முருகனே சூட்ச்சுமமாய் நின்று பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான். முருகனுக்கு ப்ரீதி செய்யின் பூரணமாகும். இந்த காலமதில் புவனத்தில் நலமே உண்டாகும். புவன நலம் காக்க, அன்னை வாலையின் உத்தரவின் படி, விரைவில் சித்தர்கள் விஜயம் எங்கும் உண்டாகும்.ஆசிகள்.
3. மதுரையில் திருப்பரங்குன்றத்துக்கு அருகில் பசுமலை என்கிற இடத்தில் உள்ள "சக்தி மாரியம்மன் கோவிலில்" நம் குருநாதர் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கு ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் 07/02/2020 அன்று காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் சுபமுகூர்த்தத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. விரைவில் தனிப்பதிவில் இந்த ஆலய தரிசனப் பதிவை தருகின்றோம். இதோ.சில தரிசனப் பதிவுகளை இங்கே தருகின்றோம்.
4. ஆறறிவு பெற்ற மனிதனை தவிர பிற உயிர்கள்/ஆத்மாக்கள் (அனைத்து பிராணிகளும்) உடலை நீத்து சென்றாலும் அவைகளை மோக்ஷத்திற்கு கரை ஏற்றிவிட இங்கு மனிதர்களின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. ஆதலின், கீழ்கண்ட பிரார்த்தனையை அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட தினத்தில் சூரிய உதயத்துக்கு பின், சூரிய அஸ்தமனத்துக்குள் செய்யச்சொல்கிறார்.
எல்லா மாதமும் "திருவோணம்" நட்சத்திரத்தன்று, ஒரு செம்பு பாத்திரத்தில் நீர்விட்டு, அதில், சிறிது துளசி, சிறிது மஞ்சள்பொடி, சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து, வலதுகையை அந்த நீரில் மேலாக வைத்து "ஓம் ஸ்ரீ மாய மாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து, பின்னர் அந்த நீரை பூமியில்/மண் தரையில் விட்டுவிடவேண்டும். இதை செய்யும் முன், பெருமாளிடம், "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும். நாம் பூமியில் விடும் தீர்த்தத்தை/பிரார்த்தனையை ஏற்று சென்று, இறைவனிடம் அவ்வுயிர்களுக்கு மோக்ஷத்தை வழங்க அகத்தியப்பெருமான் செய்வார் என உரைத்துள்ளார். பிரார்த்திப்பவர் வாழ்வும் சிறப்பாக மேம்படும் என்ற அருள் வாக்கும் வந்துள்ளது. அடியேன் இரண்டு மாதங்களாக செய்து உணர்ந்துவிட்டேன். திருவோண நட்சத்திரம் என்று வருகிறது என பார்த்து செய்ய வேண்டியது ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் கடமையாகும்.
இந்த வழிபாட்டின் பெருமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இந்த மாதம் "திருவோணம்" நட்சத்திரம், நாளை, புதன் கிழமை 13.05.2020 அன்று காலை 9:30 மணி அளவில் தொடங்கி , மறுநாள் வியாழக்கிழமை 14.05.2020 காலை 10 மணி அளவில் வருகிறது,. தேடல் உள்ள தேனீக்களாய் TUT வலைப்பூவை வாசித்துவரும் அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் வாய்ப்பை வழங்குவதற்காக இன்று தெரிவிக்கின்றோம்.
அகத்தியரின் உத்தரவை நிறைவேற்றி, அவர் அருள் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.மேலும் ஒரு சிறப்பு செய்தியாக தினசரி செய்ய வேண்டிய கடமைகளாக நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் உரைத்த அறிவுரைகளை கீழே தந்துள்ளோம். இவற்றை பின்பற்ற, பின்பற்ற இந்த அறிவுரை நமக்கு அறவுரைகளாக புலப்படும் என்பது திண்ணம்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html
ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்) - https://tut-temples.blogspot.com/2019/11/10.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி! - https://tut-temples.blogspot.com/2019/11/9.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை! - https://tut-temples.blogspot.com/2019/09/6.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html
அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html
வணக்கம்! நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅக்னிலிங்கம்
குரு வார்த்தை..எமக்கு மகிழ்ச்சியில்
Deleteநன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் அகத்தீஸ்வராய நமஹ
ஓம் அகத்தீஸ்வராய நம:
ReplyDeleteஓம் அகத்தீஸ்வராய நமஹ
Delete