"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, May 21, 2022

எனைத் தள்ளினாலும் எனை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 93ஆவது மஹா குருபூஜை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

வைகாசி மாதம் என்றாலே திருவிழாக்கோலம் தான் என்று தோன்றுகின்றது. வைகாசி விசாகம் முருகப் பெருமானின் அவதாரத் திருநாளாக கொண்டாடப்படுகின்றது. அடுத்து வைகாசி ரோஹிணி ஸ்ரீலஸ்ரீ வாத்தியார் சுவாமிகள் குரு பூஜை , வைகாசி அனுஷம் மகா பெரியவா குரு பூஜை, வைகாசி மூலம் திருஞான சம்பந்தர், திருநீலநக்க நாயனார் குரு பூஜை என சொல்லிக் கொண்டே போகலாம். இன்றைய வைகாசி தேய்பிறை ஷஷ்டியில் அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு  பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் குரு பூஜை கொண்டாடப்பட்டு வருகின்றது. பாம்பன் சுவாமிகளை பற்றி இந்த நன்னாளில் உணர்வோம். பதிவின் இறுதியில் சில தரிசனக்காட்சிகளை இணைத்துள்ளோம். வீட்டிலே இருந்து நீங்கள் பாம்பன் சுவாமிகள் தரிசனம் பெற அன்போடு அழைக்கின்றோம்.

20 ம் நூற்றாண்டில் முருகனை கண்ணால் கண்ட மகான் பாம்பன் சுவாமிகள் அவர்கள்.இவரின் வாழ்க்கை வரலாறும். இவர் செய்த அதிசயங்களும், அற்புதங்களும் பல ராமாயணம், மகாபாரதம் போன்ற சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்கும் பலருக்கு அவற்றை பற்றி சீன் பை சீன் தெரிந்து இருந்தாலும் எதனால்? அதை திரும்ப, திரும்ப கேட்கிறார்கள்.அவற்றை திரும்ப, திரும்ப கேட்பதால் புண்ணியம் என்பதால் தான்.பாம்பன் சுவாமிகளின் வரலாறும் அதேபோல் ஒரு புண்ணிய சரித்திரம் தான்.

உண்மையில் சொல்லப்போனால் புராண, இதிகாசங்களை காட்டிலும் அதிக புண்ணியம் தர வல்லது பக்த விஜயம் போன்ற மகான்களின் திவ்ய சரிதங்கள் தான். பகவத் கைங்கரியத்தை காட்டிலும் பாகவத கைங்கர்யம் அதிக புண்ணியம் தர வல்லது. பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறை படிப்பவர், கேட்பவர் கேடுகள் யாவும் மாயும்.

பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவிலும் ஆறுமுகப்பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சுவாமிகள் உலகம் உய்ய பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார்.

 பாம்பன் என்னும் ஊரில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். அடிகளாரது தந்தையார் சாத்தப்ப பிள்ளை, தாயார் செங்கமல அம்மையார். அடிகளாரது பிள்ளை திருநாமம் அப்பாவு. சுவாமிகள் பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்படவில்லை. 1850 முதல் 1852 ஆண்டுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அடிகளார் சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் விளங்கினார். திருமுருகன்பால் மிகுந்த பக்தி கொண்டார். கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் போல் தாமும் முருகன் பால் தமிழில் கவி பாட வேண்டும் என வேட்கை கொண்டார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை வைத்தே முடிக்க வேண்டும் என முடிவு செய்தார். முதன் முதலாக முருகனை போற்றி "கங்கையை சடையிற் பரித்து" என தொடங்கும் பாடலை இயற்றினார். தினமும் உண்பதற்கு முன் ஒரு பாடல் வீதமாக நூறு பாடல்கள் இயற்ற வேண்டும் என்ற நியதியை மேற்கொண்டார். அவ்வாறே நூறு பாடல்களை இயற்றினார். பின்னர் சேது மாதவ ஐயர் என்பவரிடம் சடக்ஷர மந்திர உபதேசம் பெற்றார்.

சுவாமிகள் திருமண பருவம் அடைந்தும் சேது மாதவ ஐயரின் வற்புறுத்தலின் பேரில் 1872ஆம் ஆண்டு காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். மூன்று ஆண்டுகள் கழிந்தன. முருகாண்டியாபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர். சிவஞானாம்பாளுக்கு ஒராண்டு நிரம்பிய போது ஒரு நாள் நள்ளிரவில் ஓயாது அழுது கொண்டே இருந்தது.அம்மையார் சுவாமிகளிடம் குழந்தை அழுவதை கூறி திருநீறளிக்குமாறு வேண்டினார். சுவாமிகள் இப்பொழுது எவருக்கும் திருநீறு அளிப்பதில்லை என்றும், முருகனிடம் வேண்டுமாறும் கூறினார். அவ்வாறே அம்மையார் முருகனிடம் வேண்டி குழந்தையின் அருகில் படுத்தார். அப்போது, காவி உடை உடுத்திய ஒருவர் அங்கு வந்து குழந்தையை அம்மையாரிடம் வாங்கி திருநீறு பூசி குழந்தை இனி அழாது என கூறி தாயிடம் தந்து விட்டு மறைந்தருளினார். அம்மையார் நடந்தவற்றை சுவாமிகளிடம் கூறினார். சுவாமிகள் முருகனின் திருவருளை நினைத்து வியந்தார்.

 சுவாமிகளின் பெருமையை உணர்ந்து பல அடியார்கள் சீடர்கள் ஆயினர். இந்நிலையில், சுவாமிகளின் தந்தையார் சிவபதம் அடைந்தார். சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். ஒரு சமயம் அங்கமுத்துப்பிள்ளை என்பவரிடம் தாம் பழனி செல்ல இருப்பதாக சுவாமிகள் கூறினார். அங்கமுத்துப்பிள்ளை தற்போது செல்ல வேண்டாம் என சுவாமிகளிடம் கூறினார். அதற்கு சுவாமிகள், இது முருகப்பெருமான் ஆணை என பொய் பகன்றார். அன்று மாலை, சுவாமிகள் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது, சுவாமிகள் கண்களுக்கு தென் திசையில் இறை உருவம் தென்பட்டது. அந்த உருவம் அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக இருந்தது. "எனது கட்டளை என பொய் கூறினாயே, இது முறையாகுமா?" எனக்கூறி அச்சுறுத்தியது. சுவாமிகள், இறைவனது சினத்தை கண்டு அஞ்சி, "தம் தவறுக்கு மன்னித்தருளுமாறு" வேண்டினார். அதற்கு, இறைவன், "இனி பழனிக்கு வரக்கூடாது" என உறுதி அளிக்குமாறு கூறினார். சுவாமிகளும் அவ்வாறே உறுதி அளித்ததும் அந்த உருவம் மறைந்து போனது. ஒரு பொய் கூறிய காரணத்தினால் சுவாமிகள் இறுதி வரை பழனி செல்ல முடியாமல் போனது.

 அடிகளார் முருகப்பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என பேராவல் கொண்டார். 1894ம் ஆண்டு பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்கு உள்ள மயான பூமியில் தமது சீடர்களின் உதவியால் ஒரு சதுரக் குழி வெட்ட செய்தார். அதை சுற்றி முள் வேலி, கொட்டகை அமைக்கச் செய்தார். அக்கொட்டகையின் உள் ஒரு கை செல்லுமாறு சிறிய சந்து அமைக்க செய்து, நாள் தோறும் ஒரு வேளை உப்பிலாத அன்னம் வைக்குமாறு சீடர்களுக்கு கூறினார். வைத்த உணவை தாம் எடுக்கவில்லையானால் அது முதல் வைக்க வேண்டாம் என கட்டளையிட்டார். பின்னர் அக்குழியில் அமர்ந்து தியான யோகத்தில் ஈடுபட்டார்.

எழாவது நாள் இரவில் இரு முனிவர்களுடன், முருகப்பெருமான் இளைய அடிகளார் உருவில் காட்சி அளித்தார். அவரிடம் ஒரு ரகசியமான சொல்லை உபதேசித்து விட்டு, அம்முனிவர்களுடன் மேற்கு திசை நோக்கி சென்று மறைந்து போனார். அச்சொல்லை சிந்தித்த வண்ணம் முப்பது நாள் தவ யோகத்தில் இருந்தார். முப்பத்தைந்தாம் நாள், "தவத்திலிருந்து எழுக" என்ற ஒலி கேட்டது. "முருகன் கூறினால் மட்டுமே எழுவேன்" என சுவாமிகள் கூறினார். "முருகன் கட்டளை! எழுக" என்று பதில் வந்தது. சுவாமிகள், அவ்விடத்தை வணங்கி விட்டு அங்கிருந்து நீங்கினார். பின் பாம்பன் வந்து சேர்ந்தார்.

1918ம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட வெப்பு நோய் விலகும் பொருட்டு குமாரஸ்தவம் எனும் அர்ச்சனை நூலை சுவாமிகள் இயற்றினார். அந்நோயும் நீங்கியது. சுவாமிகள் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் சுவாமிகட்கு குரு பூஜை நடத்தப்படாமை குறித்து வருந்தினார். தியான யோகத்தில் அமர்ந்து, அருணகிரிநாதர் முக்தி பெற்ற தினம் உத்தராயணம் கழிந்த ஆறாவது பௌர்ணமி என்று உணர்ந்தார். தமது சீடர்களுக்கு இது குறித்து அறிவித்து குரு பூஜை நடைபெறுமாறு செய்தார்.

 1923ம் ஆண்டு டிசம்பர் 27ம் நாள், சுவாமிகள் சென்னை தம்பு செட்டி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு குதிரை வண்டியின் சக்கரம் அடிகளாரது இடது கணை காலின் மீது ஏற, கால் முறிவடைந்தது. அங்கிருந்த அன்பர்கள் சுவாமிகளை சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமை மருத்துவரான ஆங்கிலேயர், சுவாமிகளின் கால் குணப்படாது என்று கூறினார். அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர்.

 பதினோராவது நாள் இரவு அடிகளார், படுக்கையில் படுத்த வண்ணம் முருகனை வேண்டினார். அப்போது முருகனின் வாகனமாகிய மயில்கள் வானத்தில் நடனம் புரிந்து வருவதை கண்டார். அப்பொழுது, முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார். மறுநாள் இரவு அடிகளார் அருகில் முருகன் குழந்தை உருவில் படுத்திருப்பதை கண்டார். "முருகா" என்று அழைத்தவுடன் இறைவன் மறைந்து போனார். முருகனின் திருநாமத்தை பன்னிரு முறை கூறி வணங்கினார். உடனே கால் கூடி விட்டது. பெரிய மருத்துவரான ஆங்கிலேயர், இவரை சோதித்து இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்து புதுப்பாக்கத்தில் உள்ள அன்பர் ஒருவர் வீட்டில் தங்கினார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, அடியார்கள் ஒவ்வொரு ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள்.

தாம் முக்தி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த சுவாமிகள், தமது சீடர்களிடம் திருவான்மியூரில் நிலம் வாங்குமாறு கூறினார். அவ்வாறே நிலம் வாங்கப்பட்டது. 1929ம் ஆண்டு, ஒரு நாள் சுவாமிகள் தமது சீடர்களை அழைத்து, "மயூர வாகன சேவன விழாவை தொடர்ந்து நடத்தி வாருங்கள். நான் சமாதி அடைந்ததும் என்னுடைய உடலை திருவான்மியூரில் சேர்த்து விடுங்கள்" என்று கட்டளையிட்டார். 30-5-1929 வியாழக்கிழமை காலை 7.15 மணிக்கு, சுவாமிகள் பிராண வாயுவை உள்ளிழுத்து மகாசமாதியில் ஆழ்ந்தனர். இதை அறிந்த அனபர்கள் பலர் சுவாமிகளை வந்து தரிசித்து சென்றனர். 
மறுநாள் (31-5-1929), சுவாமிகளின் திருமேனியை திருவான்மியூரில் சேர்த்து சமாதிக்கோவில் அமைத்தனர். சுவாமிகளின் சமாதிக்கோவில் மிகவும் மகிமை வாய்ந்தது. அங்கு சென்று வாழ்வில் வளம் பெற்றோர் பலராவர் .

இத்திருக்கோவில்  திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அனைவரும் தரிசித்து திருவருளும், குருவருளும் பெறுவோம்.

இன்றைய நன்னாளில் சுவாமிகள் அருளிய பாடல்களை பாடி ஸ்ரீ முருகப் பெருமானை வேண்டி நிற்போம்.

எழும் போது வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்து 
தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன், செந்தில் வேலவனே!

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஓம் ஸ்ரீ பேப்பர் சுவாமிகள் 66 ஆவது குரு பூஜை - 05.05.2022 - https://tut-temples.blogspot.com/2022/05/66-05052022.html

ஓம் அருள்மிகு வீரராகவர் சுவாமி - 60 ஆம் ஆண்டு குரு பூஜை விழா - 14.04.2022 - https://tut-temples.blogspot.com/2022/04/60-14042022.html

 சுவாமி சரவணானந்தா அவர்களின் 16ம் ஆண்டு மகா குருபூஜை விழா அழைப்பிதழ் - 10.04.2022 - https://tut-temples.blogspot.com/2022/04/16-10042022.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - அருள்மிகு ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104 ஆம் ஆண்டு குருபூஜை - 27.03.2022  - https://tut-temples.blogspot.com/2022/03/104-27032022.html

ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/68-27032022.html

ஓம் ஸ்ரீ குருவே சரணம்! - ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை - https://tut-temples.blogspot.com/2022/03/99.html

குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/8-13032022.html

 குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

 பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/11032022.html

 மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 09.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/134-09032022.html

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/188-27022022.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

 ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் 184 ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/05/184.html

 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 22.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/22022021.html

பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை 13 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் - 28.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/13-28022021.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருமாலிருஞ்சோலை தரிசனம் பெறலாமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_19.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சோலைமலை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_88.html

சோலைமலை வந்து கந்த பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_20.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_23.html

இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html 

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

Thursday, May 19, 2022

சகல கலாவல்லியே! - ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் குருபூஜை இன்று - 19.05.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் அவ்வப்போது குருபூஜை தரிசனங்கள் கண்டு வருகின்றோம்.நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ், சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி ,குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை சித்தர்கள் அறிவோம்: கூடுவாஞ்சேரி மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை, பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022,  குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022, ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை,  ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 , அருள்மிகு  ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104வது மஹா  குரு பூஜை அழைப்பிதழ்,  மகான் ஸ்ரீமத் தோபா சுவாமிகளின் 172-ம் ஆண்டு குருபூஜை - 01.04.2022  அழைப்பிதழ்,  சுவாமி சரவணானந்தா அவர்களின் 16ம் ஆண்டு மகா குருபூஜை விழா அழைப்பிதழ் - 10.04.2022 ,  ஓம் அருள்மிகு வீரராகவர் சுவாமி - 60 ஆம் ஆண்டு குரு பூஜை விழா - 14.04.2022   என சித்தர்களின் தரிசனம் நம் தலத்தில் வந்து கொண்டே உள்ளது. அந்த வரிசையில் இன்று நாம் ஸ்ரீ  குமரகுருபர சுவாமிகள்  குரு பூஜை பற்றி இங்கே அறிய உள்ளோம்.

தாமிரபரணியின் வடகரையில் தோன்றியவர் குமரகுருபர சுவாமிகள். ஸ்ரீ வைகுண்டம் எனும் கிராமத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர் - சிவகாம சுந்தரி தம்பதிக்குத் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் மகனாகப் பிறந்தவர். குமரகுருபரர் வாய் பேச முடியாதவராக இருந்தார். பிறந்ததிலிருந்து ஐந்தாண்டுகள் வரை அவர் பேசாத காரணத்தால் வருத்தமடைந்த பெற்றோர் குழந்தை வரம் கொடுத்த திருச்செந்தூர் முருகனிடம் சென்று முறையிட்டார்கள்.

தங்கள் குழந்தைக்குப் பேச்சு வரவேண்டும் என்று 45 நாள்கள் கடுமையாக விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டினார்கள். விரதம் முடிந்த பிறகும் குமரகுருபரருக்குப் பேச்சு வரவில்லை. மிகுந்த மனவருத்தம் கொண்ட பெற்றோர், குமரகுருபரரை செந்திலாண்டவரிடம் ஒப்படைத்துவிட்டு, கடலில் விழுவதற்குச் சென்றார்கள். சிறிது தொலைவுதான் சென்றிருப்பார்கள். குமரகுருபரர் பேசத் தொடங்கிவிட்டார். பேசத் தொடங்கினார் என்பதைவிட, பாடத் தொடங்கினார் என்பதே சரி. முருகனின் அருளால் பேசும் வரம் பெற்ற குமரகுருபரர், `கந்தர் கலிவெண்பா'வைப் பாடி கந்தக் கடவுளை வழிபட்டார்.

வாய் பேசுவானா என்று ஏங்கிய பெற்றோர்கள், குமரகுருபரர் பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து கண்ணீருடன் முருகனைத் தொழுதார்கள்.

இறைவனின் திருவருளால் தமிழ் இலக்கண இலக்கியங்கள், ஞான சாத்திரங்கள் ஆகியவற்றை விரைவில் கற்றுத் தேர்ந்தார் குமரகுருபரர். இவற்றோடு பக்தி ஞானமும் இவரிடம் பெருகத் தொடங்கியது. ஸ்ரீ வைகுண்டத்தில் தங்கியிருந்த காலத்தில், அந்தத் தலத்திலிருந்த கயிலாசநாதர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். மேலும், கயிலாசநாதரைப் போற்றி `கயிலைக் கலம்பகம்' எனும் பிரபந்த நூலை இயற்றினார்.

மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர், குமரகுருபரரின் கடவுள் பக்தியையும், தமிழ்ப் புலமையைப் பற்றியும் கேள்விப்பட்டு, அவரை அரண்மனைக்கு அழைத்துச் சிறப்பித்தார். அரசரின் விருப்பத்துக்கிணங்க, குமரகுருபரர், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை அரங்கேற்றிக்கொண்டிருந்தபோது புலவர்கள், அமைச்சர்கள் என அனைவரும் பக்தியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது மீனாட்சியம்மன் கோயிலின் தலைமை அர்ச்சகரின் மகள் உரிமையோடு வந்து திருமலை நாயக்கரின் மடியில் அமர்ந்தாள். குமரகுருபரர் முத்தப் பருவத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தபோது தன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையைப் பரிசாக அவரது கழுத்தில் சூட்டிய குழந்தை, கோயில் கருவறையில் மீனாட்சியோடு கலந்து மறைந்தாள். குமரகுருபரரின் அருளால் மீனாட்சியையே நேரில் பார்க்கும் புண்ணியம் கிடைக்கப்பெற்ற மக்கள் அனைவரும் அவருக்கு நன்றி கூறினார்கள். இந்த அதிசயம் நடந்த பிறகு சில காலம் மதுரையில் தங்கியிருந்த குமரகுருபரர் மதுரை சொக்கநாதரைப் போற்றி, `மதுரைக் கலம்பக'த்தைப் பாடினார்.

அதன் பிறகு, சோழநாட்டு சிவத் தலங்களைத் தேடித் தேடி தரிசித்த குமரகுருபரர், திருவாரூர் தியாகராஜரைத் தரிசித்தபோது அவரைப் பற்றி `திருவாரூர் நான்மணிமாலை' எனும் நூலைப் பாடினார். திருவாரூர் தியாகராஜரை தரிசித்த பிறகு அவருக்கு `சிவ ஞான உபதேசம்' பெற வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்து உபதேசம் பெற்றார். மாசிலாமணி தேசிகரின் அறிவுரைப்படி சிதம்பரம் சென்றார் குமரகுருபரர். இடையில் அவர் ஸ்ரீ வைத்தீஸ்வரன்கோவில் தலத்தில் தங்கியிருந்தார். அந்தத் திருக் கோயிலில் அருள்புரியும் முருகப் பெருமானின் பெயர் முத்துக்குமார சுவாமி. அவர் மீது கொண்ட பக்தியால், `முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்' பாடினார்.

சிதம்பரம் சென்று நடராஜரை தரிசனம் செய்த வேளையில், நடராஜரின் அருளினால் தன்னிலை மறந்த பரவச நிலையில், `சிதம்பர மும்மணிக்கோவை'யை இயற்றினார். மேலும், `சிதம்பரச் செய்யுட் கோவை' என்ற நூலையும் இயற்றினார்.

நடராஜரின் தரிசனம் கிடைத்த பிறகு துறவறம் மேற்கொண்டு இறைவனின் பாதங்களைச் சரணடைய வேண்டுமே என்ற எண்ணம் தோன்றியது. தனது குரு மாசிலாமணி தேசிகரிடம் தீட்சை பெற்றார். அப்போது பாடப்பட்டதுதான், `பண்டார மும்மணிக் கோவை.' அதிலிருந்து `குமரகுருபர சுவாமிகள்' என அழைக்கப்பட்டார். பிறகு காசி நோக்கிப் பயணம் செய்தார். காசி சென்ற குமரகுருபர சுவாமிகள், சுல்தான் பாதுஷாவைச் சந்தித்தார். சுல்தானுக்குத் தெரிந்த மொழி ஹிந்துஸ்தானி மட்டுமே. சுல்தானுடன் பேசும் வல்லமையைப் பெற சரஸ்வதி தேவியை நோக்கி, `சகலகலாவல்லி மாலை' எனும் பாமாலையைப் பாடினார். அதைக் கேட்டு மகிழ்ந்த சரஸ்வதி தேவி குமரகுருபரருக்குச் சுல்தான் பேசிய ஹிந்துஸ்தானி மொழியைப் பேசும் வல்லமையை அளித்தாள்.

அமர்வதற்கு இருக்கைகூட கொடுக்காமல் அவமதித்திருந்தான் சுல்தான். பராசக்தியிடம் வேண்டிய குமரகுருபரர் அவளது சிம்மத்தை வாகனமாகப் பெற்று சிம்மத்தின் மீதேறி அவனிடத்துக்குச் சென்றார். சிங்கத்தின் மீதேறி வந்த குமரகுருபரரை வணங்கிய சுல்தான் பாதுஷா அவருடன் நட்பு கொண்டு பழகினான். பிறகு மடம் அமைக்க இடம் கேட்டார் குமரகுருபர சுவாமிகள். சுல்தான், `காசியில் கருடன் சுற்றுவதில்லை. கருடன் சுற்றினால் அவன் சுற்றும் இடத்தில் உமக்கு மடம் அமைக்க இடம் கொடுக்கிறேன்' எனத் தெரிவித்தான்.

குமரகுருபரர் இறைவனை நோக்கிப் பாடினார். அவர் பாடத் தொடங்கியதும் கருடன் காசியில் வட்டமடிக்கத் தொடங்கியது. குமரகுருபரர் கேட்ட இடத்தை அவருக்குக் கொடுத்து சிறப்புச் செய்தான். அந்த இடத்தில் அமைக்கப்பட்டதுதான் காசி குமாரசுவாமி மடம். அங்கு முகம்மதியரால் மறைக்கப்பெற்ற கேதாரலிங்கத்துக்குக் கோயில் கட்டி பூஜை செய்தார். அந்தக் காலத்தில், `காசித் துண்டி விநாயகர் பதிக'மும், `காசிக் கலம்பக'மும் இவரால் இயற்றப்பெற்ற நூல்கள்.

அதன் பிறகு தமிழகம் திரும்பிய குமரகுருபரர், தனது குரு மாசிலாமணி தேசிகரைத் தரிசித்து வணங்கிவிட்டு மீண்டும் காசிக்கே சென்றுவிட்டார். காசியில் தங்கி இறைவனுக்குச் சேவை செய்து வந்தவர், வைகாசி தேய்பிறை திரிதியைத் திதியில் (1.6.18) இறைவனடி சேர்ந்தார். இந்த நாளில்தான் அவருக்குக் குருபூஜையும் நடைபெறுகிறது

இந்த நாளில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அருளிய சரஸ்வதி ஸ்தோத்திரம் / சகலகலாவல்லி மாலை இங்கே படிக்க உள்ளோம்.

 1.வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்

தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,

உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!

2.நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்

கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்

காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!

3.அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்

குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?உளம்கொண்டு தெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழைசிந்தக்கண்டு

களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!

4.தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும்சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று

காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

5.பஞ்சுஅப்பு, இதம்தரும், செய்ய,பொற்பாதபங்கேருகம்என்

நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து

அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்

கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!

6.பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங்காலும்,அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

7.பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்

கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர்

தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம்

காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே!

8.சொற்விற்பன்னமும், அவதானமும், கல்விசொல்லவல்ல

நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!நளின ஆசனம்சேர்

செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்

கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!

9.சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை

நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம்நாணநடை

கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே!

10.மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்

பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே 

மீண்டும் ஒரு பதிவில் சகலகலாவல்லி மாலை எப்படி பிறந்தது என்பது போன்ற செய்திகளை அறிய தருகின்றோம். 

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஓம் ஸ்ரீ பேப்பர் சுவாமிகள் 66 ஆவது குரு பூஜை - 05.05.2022 - https://tut-temples.blogspot.com/2022/05/66-05052022.html

ஓம் அருள்மிகு வீரராகவர் சுவாமி - 60 ஆம் ஆண்டு குரு பூஜை விழா - 14.04.2022 - https://tut-temples.blogspot.com/2022/04/60-14042022.html

 சுவாமி சரவணானந்தா அவர்களின் 16ம் ஆண்டு மகா குருபூஜை விழா அழைப்பிதழ் - 10.04.2022 - https://tut-temples.blogspot.com/2022/04/16-10042022.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - அருள்மிகு ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் 104 ஆம் ஆண்டு குருபூஜை - 27.03.2022  - https://tut-temples.blogspot.com/2022/03/104-27032022.html

ஸ்ரீலஸ்ரீ குகைபெருமாள் சித்தர் திருவடி சரணம் - 68 ஆம் ஆண்டு குரு பூஜை - 27.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/68-27032022.html

ஓம் ஸ்ரீ குருவே சரணம்! - ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜை - https://tut-temples.blogspot.com/2022/03/99.html

குருவை நினைக்க கூடிடும் மெய்ஞானம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 8 ஆம் ஆண்டு குருபூஜை - 13.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/8-13032022.html

 குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html

 பேரானந்தத்தின் திருவுருவம் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 11.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/11032022.html

 மகான் பைரவ சித்தர் 134 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 09.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/03/134-09032022.html

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 188 ஆம் ஆண்டு குரு பூசை - 27.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/188-27022022.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

Wednesday, May 18, 2022

பாண்டிச்சேரி சித்தர் பீடங்கள் - தரிசன வழிகாட்டி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் இரண்டு ஆண்டுக்கு பின்னர் சென்ற வார விடுமுறையில் (14,15 மே 2022) மதுரையில் நம் தள ஆன்மிக யாத்திரை 15 அன்பர்களுடன் நடைபெற்றது. சிறப்பான அருள் தரிசனம், அன்னசேவை, மலை யாத்திரை என ஒவ்வொரு ஆலய தரிசனமும் முத்தாய்ப்பாக அமைந்தது. இங்கே அனைவரும் அறிய வேண்டி குறிப்பாக அவற்றை தொகுத்து தருகின்றோம்.

1. மதுரை பசுமலை குருநாதர் ஸ்ரீ அகத்தியர் தரிசனம் - முதலில் குருநாதர் வழிபாடு 

2. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு - முதல் படைவீடு தரிசனம் 

3. பகவான் சோமப்பர் தரிசனம் 

4. புஜண்டரிஷி மலை யாத்திரையாக ஸ்ரீ முருகப் பெருமான் தரிசனம் 

5. சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் தரிசனம்

6. அழகர்மலை நூபுரகங்கை தீர்த்தமாடல் 

7. அழகர்மலை ராக்காயி அம்மன் தரிசனம் 

8. பழமுதிர்ச்சோலை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு 

9. அழகர்கோயில் ஸ்ரீ கள்ளழகர் வழிபாடு 

10.ஸ்ரீமத் நடன கோபால நாயகி ஸ்வாமிகள் பிருந்தாவனத் திருக்கோயில் 

( அனைத்து கோயில்களிலும் பூ மாலை சாற்றி, தீபமேற்றி வழிபாடு செய்தோம். பழைய துணிகளை அங்கே இருந்த அன்பர்களுக்கு கொடுத்தோம். இனி நம் தளம் சார்பில் ஆடை தானம் செய்ய குருவிடம் வேண்டுகின்றோம். மேலும் சில கோயில்களில் அன்னசேவைக்கு நம் தளம் சார்பில் சிறு தொகை கொடுக்க குருவருளால் பணிக்கப்பட்டோம்.)

11. குட்லாடம்பட்டி ஸ்ரீ ரமணகிரி சுவாமிகள் கோயில் வழிபாடு 

12.  சித்தாலங்குடி ஸ்ரீ குழந்தையானந்தர் சுவாமிகள் தரிசனம் 

13. மதுரை இறையருள் மன்றம் அன்னசேவையாக புதுப்பட்டி காப்பகம் சென்றோம். என்றும் மதுரை பரமசிவன் ஐயாவின் தாள் பணிகின்றோம்.

14. கிண்ணிமங்கலம் குருகுலம் வழிபாடு 

15. ஆலவாய் அரசியின் தரிசனம் 

என்று மதுரை திருத்தல யாத்திரை அமைந்தது. இது நம்மால் நடந்த செயல் அன்று. குருநாதர் ஸ்ரீ அகத்தியப்பெருமான் அவர்கள் முன்னின்று நம்மை வழிநடத்தினார் என்பது கண்கூடு. விரைவில் தனிப்பதிவில் தரிசனம் காண்போம். இன்றைய பதிவில் புதுவை சித்தர் பீடங்கள் -  தரிசன வழிகாட்டியாக குருவருளால் தர உள்ளோம்.

பல சித்தர்கள்  தோன்றிய புண்ணிய தலம் இன்றைக்கு புதுச்சேரி, புதுவை, பாண்டிச்சேரி என்று அழைக்கப்படும் "வேதபுரி" என்ற தலமும் ஒன்று. ஐம்பதிற்கும் மேற்பட்ட சித்த புருஷர்கள் இந்த கடற்கரை தலமான வேதபுரியில் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை வரலாறு, செய்திட்ட அருட்திறங்கள், முக்தி பெற்ற முறை போன்ற செய்திகளை கேட்கும் பொழுதே நமது உடம்பெல்லாம் மயிர்க்கூச்செரிந்தது சிந்தையினை சிவத்தில் மூழ்கச்செய்கின்றது.

பதிவின் உள்ளே செல்லும் முன்னர் இந்தப் பதிவை நால்வரின் பாதையில் குழுவின் வலைத்தளத்திலிருந்து நாம் இங்கே தருகின்றோம்.  புதுவை சித்தர் பீடங்கள் - Pondicherry Sithargal  என்ற பதிவின் மூலம் தான் இங்கே நாம் இந்த பதிவை தருகின்றோம். இந்த பதிவின் ஆக்கத்தில் உதவிய நால்வரின் பாதையில் குழுவிற்கு என்றும் நன்றி கூறி தொடர்கின்றோம்.

படித்து, படங்களாய் பார்த்து மகிழ்வதை விட, சித்தர் பீடங்களுக்கு நேரிலேயே சென்று தரிசித்து அந்த பேரானந்த அனுபவத்தினை அனைவரும் பெற்று மகிழவே இந்த கட்டுரை.28 சித்தர்களின் ஜீவ சமாதிகளின் பட்டியலை இங்கே அளித்துள்ளோம். ஆதி சித்த குருவான முருகப்பெருமானை முதலாவதாகவும், திருவடி பேறு கிட்டியருளும் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனமர்  வேதபுரிஸ்வரர் திருக்கோயிலை முப்பதாவது தலமாகவும் வைத்து பட்டியல் சமைத்துள்ளோம்.

அனைத்து தலத்திற்கும் ஒரு புகைப்படமும், ஒருங்கிணைத்த பட்டியல் கொண்ட கூகிள் மேப் வழிகாட்டியும் இணைத்துள்ளோம்.அனைவரும் இச்செய்திகளை பயன்படுத்தி புதுவை சித்தர்களின் ஜீவ சமாதி திருத்தலங்களை தரிசித்து வழிபட்டு மகிழவும்.

பட்டியல் :::

1. ஆதி சித்தர் - முருகப்பெருமான்

2.ஸ்ரீ குண்டலினி  சித்தர்

3.ஸ்ரீ கடுவேளி சித்தர்  

4.ஸ்ரீ லட்சுமண சுவாமிகள்

5.ஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள்

6.ஸ்ரீ குரு சித்தாந்த சுவாமிகள்

7.ஸ்ரீ வேதாந்த சுவாமிகள்

8.ஸ்ரீ அக்கா சுவாமிகள்

9.ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள்

10.ஸ்ரீ தொள்ளை காது சுவாமிகள்

11.ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள்

12ஸ்ரீ கணபதி சுவாமிகள்

13ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகள் & 14.ஸ்ரீ பெரியவருக்கு பெரியவர்

15.ஸ்ரீ சடையப்பர் சாமிகள்

16.ஸ்ரீ  சுப்ரமணிய அபிரல சச்சிதானந்த சுவாமிகள்

17.ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள்

18.ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமிகள்

19.ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகள்

20.ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்

21.ஸ்ரீ ராம் பரதேசி சுவாமிகள்

22.ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகள்

23.ஸ்ரீ குருசாமி அம்மாள் சுவாமிகள்

24.ஸ்ரீ மகான் படே சாஹிப்  

25.ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்

26.ஸ்ரீ அம்பலத்தாடி அப்பர்  சுவாமிகள்

27.ஸ்ரீ  அழகப்பர் சுவாமிகள்

28.ஸ்ரீலலஸ்ரீ அருள்சக்தி அன்னை

29.ஸ்ரீ மொட்டை சுவாமிகள் 

30.அருள்மிகு திரிபுரசுந்தரி உடனமர் வேதபுரீஸ்வரர்

கூகிள் மேப் வழிகாட்டி கீழே உள்ள இணைப்பில் கொடுத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் தரிசனம் செய்ய இந்த பதிவு வழிகாட்டியாக அமையும் என்று நாம் விரும்புகின்றோம்.
 நாமும் விரைவில் இங்கே கொடுத்துள்ள தலங்களை தரிசிக்க குருவிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

 பாண்டிச்சேரி சித்தர்களின் பாதம் பற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_53.html

 அருட்குரு தேங்காய் சுவாமிகள் சித்தர் திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_52.html

 சித்தர்கள் அறிவோம்! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_13.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_27.html

ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை - 04/01/2018 - https://tut-temples.blogspot.com/2019/09/04012018.html

பொதிகை வேந்தே ! வருக !! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_96.html

Friday, May 13, 2022

தெய்வ பக்தி பெரியதா? குரு பக்தி பெரியதா?

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குரு என்ற சொல்லிற்கு தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள். குரு சொல்லே மந்திரம் என்பதிலிருந்து தொடங்கி, குரு சொல்லே வாழ்க்கையாக கைக்கொண்டு வருகின்றோம். குருவைப் பற்றி,போற்றி நமது வினைகளை களைய குருவிடம் வேண்டுவோம். இன்றைய நாளில் நாமும் குருவை போற்ற உள்ளோம்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல் 
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் 
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே

என்று திருமந்திரம் குருவின் மகிமையை சொல்கின்றது. மேம்போக்காக பார்த்தால் குருவின் திருமேனி காண்பது, குருவின் திருநாமம் சொல்வது, குருவின் வார்த்தை கேட்டல், குருவின் திரு உரு சிந்தித்தால் தெளிவு பிறக்கும் என்பது தெளிவாக நமக்கு புரிகின்றது. மீண்டும் முதல் வரியையும், நான்காம் வரியையும் பாருங்கள். குருவின் திருமேனி, குருவின் திரு உரு வேறு விதமாக பொருள் வருகின்றது அல்லவா? இங்கே குருவின் திருஉரு என்பது குருவின் உபதேசம் ஆகும். இது மிக மிக கடினம் ஆகும். ஆம். முதலில் குருவை காண்பது , அவர் நாமம் சொல்வது, அவரது திருவார்த்தை கேட்பது என அனைத்தும் எளிதாக பெறலாம். ஆனால் குருவின் திருஉரு கிடைப்பது அரிதினும் அரிதாம். அவ்வாறு கிடைத்த குருவின் திருஉருவை சிந்திப்பது அதனினும் அரிதாம்.

அடுத்து பதிவின் தலைப்பிற்குள் செல்வோம். இது மிக மிக முக்கியமானத செய்தியை நமக்கு உணர்த்துகின்றது. தெய்வ பக்தி பெரியதா? குரு பக்தி பெரியதா? என்று பட்டிமன்றம் கூட நடத்தலாம். ஆனால் முடிவில் வெல்வது எது என்பதை தொடர்ந்து படித்து புரிந்து கொள்ளுங்கள்.

திருப்பதியில் அடிவாரத்தில், சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது ‘மோரு… மோரு…’ என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. தலையில் மோர்ப்பானை சுமந்து, இடையர் குலப் பெண்மணி ஒருத்தி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால், குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர்க்காரியைக் கூப்பிட்டால், பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால், மோர் ஆசையைத் துறந்து, பாடத்தில் கருத்தாக இருந்தார்கள். ஆனாலும், அன்றைக்கு மோர் குடித்தே ஆக வேண்டும் என்பது எழுதப்பட்டிருந்த ஒன்று போலும்.

இவர்கள் அனைவரும் கூட்டமாக அமர்ந்து ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்த மோர்க்காரப் பெண்மணி, இந்த இடத்தில் பானையை இறக்கி வைத்தால் நல்ல வியாபாரம் ஆகிவிடும் என்று தீர்மானித்து, இவர்கள் பக்கம் நடந்து வந்தாள். ஐயா… சாமீ… நல்ல மோரு. ஆளுக்கு ஒரு குவளை குடிச்சீங்கன்னா, தெம்பா இருக்கும். உஷ்ணம் ஓடியே போயிடும் என்று சொன்னபடி, மோர் பானையைக் கீழே இறக்கி வைத்தாள்.

ஏற்கெனவே பசியிலும் அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர் பானையைப் பார்த்ததும் வயிறு கபகபவென்று இருந்தது. ஆளாளுக்கு, எனக்கு… எனக்கு என்று கேட்டு வாங்கிக் குடித்தனர். அவர்களில் ஒரு சில சீடர்கள் இன்னொரு குவளையும் வாங்கிச் சாப்பிட்டனர். மோரின் தரம் அப்படி. எல்லோருக்கும் மோர் கொடுத்து முடித்ததும், பானையின் உள்ளே சற்று எட்டிப் பார்த்தாள் பெண்மணி.

கிட்டத்தட்ட பானை காலியாக இருந்தது. நிறைந்த மனத்துடன் சீடர்களையும் ராமானுஜரையும் பார்த்தாள். அப்போது அவள் மனத்தில் திடீரென ஓர் ஏக்கம் வந்தது. அதாவது, தானும் இவர்களைப் போல் பக்தித் திறனில் தேர்ந்து விளங்க வேண்டும் என்று ஆசை கொண்டாள். திடீரென்று அப்படி ஒரு பக்தி எழுந்தது ஏன்? மகான்களின் பார்வை விசேஷம் அப்படிப்பட்டது. அதனால், பக்தியின் பிடியில் திடீரென அகப்பட்டுக் கொண்ட காரணத்தால், மோருக்கான காசை கேட்டுப்பெற வேண்டும் என்பதையும் மறந்து நின்றாள்.

அப்போது அந்தப் பெண்மணியைப் பார்த்து, “அம்மா… நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன?” என்று கேட்டார் ராமானுஜர். மோர் நன்றாக வியாபாரம் ஆகும். காசு கிடைக்கும் என்ற ஆசையில்தான் இங்கே வந்தாள். ஆனால், இப்போது இவளது மனநிலையே வேறாக இருக்கிறது. ராமானுஜரை மரியாதையுடன் பார்த்தாள். பிறகு, வேணாம் சாமீ. மோருக்குக் காசெல்லாம் வேணாம்… அதை வெச்சிட்டு நான் என்ன பண்ணப் போறேன்?! என்று இழுத்தாள். அப்படீன்னா காசுக்குப் பதிலா ஏதாவது பொருள் வேணுமா? என்று கேட்டார் சீடர் ஒருவர். ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண், “எனக்குக் காசும் வேணாம்… பொருளும் வேணாம் சாமீ. பெருமாள் இருக்கக்கூடிய பரமபதத்தை அடையணும்; மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க. சந்தோஷமா போயிடுவேன்” என்றாள்.

ராமானுஜர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஆசார நியமங்களோ, சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள், ‘மோக்ஷம் வேண்டும்’ என்கிற ஆசை தோன்றியது விந்தைதானே! தவிர, இப்படி ஒரு கோரிக்கையை அவள் வைப்பாள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, “கவலைப்படாதம்மா… உன்னோட நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம்தான் கிடைக்கும். சந்தோஷமா போயிட்டு வா” என்றார் அவர்.

ஆனால், அந்தப் பெண்மணி விடவில்லை. “ஒங்க வாக்கு அப்படியே பலிக்கட்டும் சாமீ. ஆனா, அந்த மோட்சம் எனக்குக் கிடைக்கறதுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. நான் போய்ச் சேர்றேன்” என்றாள். ராமானுஜர் சிரித்தார். “அம்மா… நீ நினைப்பதுபோல் மோட்சத்துக்கு ஒரு வழியைக் காட்டுவதோ, மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ, எனக்கோ இங்கு கூடி இருக்கின்ற சிஷ்யர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் இருக்கின்றானே ஒருவன்… ஏழுமலைக்குச் சொந்தக்காரன்… அவன்கிட்டப் போய்க் கேள்.

உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவனுக்குத் தான் உண்டு” என்றார். இதற்குப் பிறகும் அந்த மோர்க்காரப் பெண்மணி நகர்கிற வழியாக இல்லை. “சாமீ… மேலே இருக்கிற ஏழுமலையான் கிட்ட போய் எத்தனையோ தடவை ‘மோட்சம் வேணும் மோட்சம் வேணும்’னு கேட்டுப் பாத்துட்டேன். ஆனா, அங்கே இருக்கிற பெருமாள் வாயைத் தொறந்து பேசக்கூட மாட்டேங்கிறாரே…” என்றாள் பொருமலாக.

“அப்படி இல்லேம்மா… அவருக்கு எத்தனை வேலை இருக்கோ… அதை ஒரு குறையா சொல்லிட்டு இருக்காதே. உன் மனசுல படறதை – நீ கேக்கணும்னு நினைக்கறதை அவர்கிட்ட கேட்டுக்கிட்டே இரு. என்னிக்கானும் ஒருநாள் நிச்சயம் செவி சாய்ப்பார்” என்றார் ராமானுஜர். “இல்லீங்க சாமீ. ஒங்களைத்தான் நம்புறேன். ஒங்களைப் பாத்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு” என்றாள், குரலில் உற்சாகத்துடன். ‘இவள் ஏதோ ஒரு தீர்மானத்துடன்தான் இருக்கிறாள் போலிருக்கிறதே’ என்று யோசித்தார் ராமானுஜர். மீண்டும் அந்தப் பெண்மணியே, விநயமாகப் பேசினாள். “சாமீ… எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள்கிட்ட சிபாரிசு செஞ்சு நீங்கதான் ஒரு ஓலை எழுதித் தரணும். ஒங்களை மாதிரி பெரியவங்க ஓலை கொடுத்தா, இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு பெருமாள் எனக்குப் பதில் சொல்லுவாருன்னு தோணுது” என்றாள் தெளிவாக.

இதற்கு மேலும் மறுக்க இயலாது என்று உணர்ந்த ராமானுஜர், சிஷ்யனிடம் ஓர் ஓலை நறுக்கும், எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். அதைக் கேட்டதும், சீடர்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. என்றாலும், அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து தந்தனர். ‘நிஜமாகவே திருமலை பெருமாளுக்கு சிபாரிசு செய்து, குருநாதர் ஓலை எழுதப் போகிறாரா… இல்லை அந்தப் பெண்மணியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஏதேனும் செய்கிறாரா?’ என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகி, ராமானுஜரைச் சுற்றி அமர்ந்து, கவனிக்கலானார்கள். மேலே அண்ணாந்து திருமலையைப் பார்த்து இருகரம் கூப்பிவிட்டு, ஓலை நறுக்கில் பெறுநர் முகவரியை எழுதும் இடத்தில் ‘ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், திருமலை’ என்று குறிப்பிட்டுவிட்டு, பெண்மணியின் கோரிக்கையை எழுதத் தொடங்கினார் ராமானுஜர். எழுதி முடித்த பின் ஓலையின் கீழே தன் கையெழுத்தையும் போட்டார்.

பின்னே… ஒரு கடிதம் என்றால், அது எங்கிருந்து வருகிறது என்பதும் முக்கியம் ஆயிற்றே! அதை வைத்துதானே சிபாரிசு மதிப்பிடப்படும்?! அதை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். அப்போது ஓலை நறுக்கில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சீடர்களும் படித்துப் பார்த்தனர். ‘மோர்க்காரிக்கு மோட்சம் கிடைக்க அனுக்ரகம் செய்’ என்பதாக சிபாரிசு செய்து எழுதப்பட்டிருந்தது. ஓலையை வாங்கிய அடுத்த விநாடி அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி, பெருமாள் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் கொடுத்தாள். மோர்க்காரப் பெண்மணியை மேலும் கீழும் பார்த்து, இது என்ன ஓலை? என்று குழப்பத்துடன் கேட்டனர் அர்ச்சகர்கள். அவர்களிடம் முழு விவரத்தையும் சொன்னாள் அவள்.

ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலை என்று அறிந்ததும், மறுப்பு ஏதும் சொல்லாமல் அதைக்கொண்டு போய் பெருமாளின் முன்னால் நீட்டினர். எப்பேர்ப்பட்ட ஆச்சார்யர், ராமானுஜர் ! அவருக்கு உண்டான முக்கியத்துவத்தை பெருமாள் கொடுக்காமலா இருப்பார்?! தம் வலக் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார் பெருமாள். விஷயம் அறிந்தார். பிறகு, உனக்கு மோட்சம் தந்தேன் என்று மோர்க்காரியைப் பார்த்துப் பெருமாள் திருவாய் மலர்ந்தார்.

அடுத்த கணம் வானில் இருந்து பிரகாசமாக ஒரு புஷ்பக விமானம் வந்தது. அதில் இருந்து விஷ்ணு தூதர்கள் இறங்கினர். மோர்க்காரியைத் தங்களுடன் ஏற்றிக் கொண்டு வைகுந்தம் புறப்பட்டனர். ராமானுஜர் ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்தால், பெருமாளிடம் எப்பேர்ப்பட்ட கவனிப்பு, பார்த்தீர்களா?

உடையவர், உடையவர் என்று கொண்டாடுவதன் சூட்சுமத்தை உணர்த்துகிற சம்பவமல்லவா இது! தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன? 

குரு பக்தியின் மேன்மை புரிகின்றது அல்லவா? நாமும் இன்னும் குருபக்தி காட்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

குருவருள் பரிபூரணமாகுக! - https://tut-temples.blogspot.com/2022/05/blog-post_11.html

இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html